Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்­வ­தேச நியா­யா­திக்கம் தொடர்­பான ஐ.நா. மனித உரிமை பேர­வையின் கோரிக்கை

Featured Replies

சர்­வ­தேச நியா­யா­திக்கம் தொடர்­பான ஐ.நா. மனித உரிமை பேர­வையின் கோரிக்கை

 

இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் என்­பன தொடர்­பாக விசா­ரணை நடத்­தப்­பட்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­ப­ட­ வேண்­டு­மென்ற பாதிக்­கப்­பட்ட மக்­க­ளி­னதும் சர்­வ­தேச சமூ­கத்­தி­னதும் ஐக்­கி­ய­நா­டுகள் சபை­யி­னதும் கோரிக்கை உரி­ய­மு­றையில் இலங்­கை­யினால் செவி­ம­டுக்­கப்­ப­டா­மையின் கார­ண­மாக இன்று சர்­வ­தேச ரீதி­யான மாற்­று­வழி குறித்து ஆராயும் நிலைக்கு தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது.

ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமை பேர­வையில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற இலங்கை மனித உரிமை நிலைமை தொடர்­பான விசேட விவா­தத்தின் போது வெளி­யி­டப்­பட்ட அறிக்­கைகள் மற்றும் அறி­விப்­புகள் என்­பன இந்த நிலையை எடுத்­துக்­காட்­டு­வ­தாக அமைந்­தி­ருந்­தன.

அதா­வது யுத்தம் முடி­வ­டை­வ­தி­லி­ருந்து சர்­வ­தேச சமூகம் பொறுப்­புக்­கூ­றலை முன்­னெ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­ட­வேண்டும் என வலி­யு­றுத்தி வரு­கி­றது. ஆனால் முன்­னைய அர­சாங்­கமோ, தற்­போ­தைய அர­சாங்­கமோ அது­தொ­டர்பில் கவனம் செலுத்­தி­ய­தாக தெரி­ய­வில்லை. இந்த சூழ­லி­லேயே தற்­போது சர்­வ­தேச சமூகம் அடுத்த கட்­டத்தை நோக்கி நகர்­வ­தற்கு ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது. அந்த வகையில் நேற்று முன்­தினம் இலங்கை குறித்த விசேட அறிக்­கையை வெளி­யிட்ட மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பில் கடும் அதி­ருப்­தியை வெளி­யிட்­டி­ருக்­கின்றார்.

ஐக்­கிய நாடுகள் சபை­யுடன் ஈடு­பாட்­டுடன் செயற்­படும் இலங்­கையின் செயற்­பாட்டை வர­வேற்­கின்றோம். எனினும் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுப்­பதில் இலங்கை தாம­தத்தை கடைப்­பி­டிக்­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும். எதிர்­வரும் 2019 ஆம் ஆண்­டுக்குள் ஜெனிவா பிரே­ர­ணையை இலங்கை முழு­மை­யாக அமுல்­ப­டுத்தும் என்­பது சந்­தே­கத்­துக்கு உரி­ய­தாக மாறி­யுள்­ளது. அத்­துடன் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்டு 20 மாதங்கள் கடந்தே காணாமல் போனோர் அலு­வ­லகம் அமைக்­கப்­பட்­டுள்­ளமை குறித்தும் அதி­ருப்­தி­ய­டை­கின்றோம் என்று செயிட் அல் ஹுசைனின் அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் காணி­களை மீள் வழங்­கு­வதில் தாமதம் நீடிக்­கின்­றது. காணி­களை தொடர்ந்து அப­க­ரித்தால் நம்­பிக்கையை கட்­டி­யெ­ழுப்­பு­வது கடி­ன­மாகும். மேலும் காணி­க­ளுக்­கான நட்ட ஈடுகள் சுயா­தீன பொறி­மு­றைகள் ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். இவ்­வா­றி­ருக்க சர்­வ­தேச மனித உரிமை மீறல்கள் அத்­துடன் சர்­வ­தேச மனி­தா­பி­மான மீறல்கள் போன்­ற­வற்­றுக்­கெ­தி­ராக தண்­டனை வழங்­காமல் இருக்கும் கலா­சாரம் நிறுத்­தப்­பட வேண்டும். அத்­துடன் சர்­வதேச பங்­க­ளிப்­புடன் விசேட நீதி­மன்றம் ஒன்றை நிறுவி இவ்­வி­ட­யங்­களை ஆராய வேண்டும். இந்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­டா­விடின் சர்­வ­தேச நியா­யா­திக்கம் என்ற மாற்­று­வ­ழியை ஆரா­யு­மாறு உறுப்­பு­நா­டு­களை கோருவோம். அத்­துடன் அண்­மையில் இலங்­கையில் இடம்­பெற்ற சிறு­பான்மை மக்கள் மீதான இன ரீதி­யான தாக்­குதல் குறித்து நாம் கவலை அடை­கிறோம் என்றும் ஹுசைனின் அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

கண்டி மாவட்­டத்தில் முஸ்­லிம்களுக்கு எதி­ரான தாக்­கு­த­லினால் 12 நாட்களுக்கு அவ­ச­ர­கால நிலையை கொண்டு வர நேர்ந்­தது. சித்­தி­ரவ­தைகள் தொடர்­வ­தா­கவும் மனித உரிமை காப்­பா­ளர்­களை கண்­கா­ணிப்­பது தொடர்­பா­கவும் அறிக்­கை­யி­டப்­ப­டு­கி­றது.எப்­ப­டியும் இலங்­கையின் இந்த நிலைமை தொடர்­பிலும் நல்­லி­ணக்கம் பொறுப்­புக்­கூறல் குறித்தும் ஐ.நா. மனித உரிமை பேரவை அவ­தா­னத்­து­டன் இருக்க வேண்டும் என கோரு­கிறோம் என்றும் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைனின் அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அந்­த­வ­கையில் இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதியை நிலை­நாட்­டு­வதில் வெளிக்­காட்­டப்­படும் தாமதம் பாரிய விமர்­ச­னத்தை சர்­வ­தேச தரப்பில் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அது­மட்­டு­மன்றி இலங்கை அர­சாங்கம் இந்த செயற்­பா­டு­களை உரிய முறையில் 2019ஆம்­ ஆண்­டுக்குள் முன்­னெ­டுக்­கா­விடின் சர்­வ­தேச நியா­யா­திக்­கத்தை பிர­யோ­கிப்­பது தொடர்பில் அவ­தானம் செலுத்­தப்­படும் என சர்­வ­தேச சமூகம் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றது. எனவே ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வை­யி­னதும் சர்­வ­தேச சமூ­கத்­தி­னதும் இந்த அதி­ருப்தி மற்றும் புதிய நகர்­வுகள் தொடர்பில் அர­சாங்கம் கவ­னத்தில் கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இங்கு வர­லாற்றில் முக்­கி­ய­மான விட­யத்தை அர­சாங்கம் புரிந்­து­கொள்­ள­வேண்டும். அதா­வது யுத்தம் முடி­வ­டைந்­ததும் 2009ஆம் ஆண்டு உள்­ளக விசா­ரணைப் பொறி­முறையை முன்­னெ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­டு­மாறு சர்­வ­தே­சமும் ஐக்­கி­ய­நா­டுகள் சபையும் இலங்கை அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தின.

2009ஆம் ஆண்­டி­லி­ருந்து 2014 ஆம் ஆண்டு வரை இவ்­வாறு உள்­ளகப் பொறி­ முறை தொடர்பில் வலி­யு­றுத்­தப்­பட்­டது. ஆனால் அப்­போ­தைய அர­சாங்கம் அதனை கவ­னத்தில் கொள்­ளா­ததன் கார­ண­மாக இறு­தியில் சர்­வ­தேச பங்­க­ளிப்­புடன் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டு­மென ஐக்­கி­ய­நா­டுகள் சபையும் சர்­வ­தேச சமூ­கமும் வலி­யு­றுத்­தின. தற்­போது கடந்த மூன்று வரு­டங்­க­ளாக சர்­வ­தேசத்தின் இந்த கோரிக்­கையும் இலங்கை அர­சாங்­கத்­தினால் கவ­னத்தில் கொள்­ளப்­ப­டா­ததன் கார­ணத்­தினால் சர்­வ­தேச சமூகம் அடுத்த கட்­டத்­திற்கு நகர்­வது தொடர்பில் ஆராய்ந்து வரு­கி­றது.

சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களும் இலங்­கையின் தமிழ்­மக்­களின் பிர­தி­நி­தி­களும் இலங்­கையின் இந்த விவ­கா­ரத்தை சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­திற்கு கொண்­டு­செல்ல வேண்டும் என வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். ஆனால் சர்­வ­தேச நாடு­களும் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையும் இவ்­வாறு குற்­ற­வியல் நீதி­மன்றம் தொடர்பில் எந்­தக்­க­ருத்­தையும் வெளி­யி­டாமல் சர்­வ­தேச நியா­யா­திக்கம் குறித்­த­தான கருத்­துக்­க­ளையே முன்­வைக்­கின்­றன.

சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் தொடர்பில் தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­ற­போ­திலும் அது எந்­த­ளவு தூரத்­திற்கு சாத்­தி­ய­மா­னது என்­பது குறித்து கேள்வி எழுப்­பப்­ப­டு­கின்­றது. ஆனால் சர்­வ­தேச நியா­யா­திக்க செயற்­பாட்டை பிர­யோ­கிப்­ப­தா­னது தற்­போ­தைய நிலை­மையில் சாத்­தி­ய­மான ஒன்­றாக காணப்­ப­டு­கின்­றது. சில மாதங்­க­ளுக்கு முன்னர் இலங்­கைக்­கான பிரேஸில் தூது­வ­ராக இருந்த முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜெனரல் ஜகத் ஜய­சூ­ரிய மீது சர்­வ­தேச மனித உரிமை அமைப்­பொன்று யுத்­தக்­குற்ற வழக்­குத்­தாக்கல் செய்­தி­ருந்­தது. ஆனால் இரா­ஜ­தந்­திர வரப்­பி­ர­சா­தங்­களின் கீழ் ஜகத் ஜய­சூ­ரிய வழக்கு நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­ப­டாமல் நாடு ­தி­ரும்­பினார். இந்த செயற்­பா­டா­னது சர்­வ­தேச நியா­யா­திக்­கத்தின் ஒரு அங்­க­மாக காணப்­ப­டு­கின்­றது. எனவே தற்­போ­தைய நிலை­மையில் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் தொடர்ச்­சி­யாக இந்த சர்­வ­தேச நியா­யா­திக்க செயற்­பாட்­டையே வலி­யு­றுத்­தி­ வ­ரு­கின்றார்.

எனவே சர்­வ­தேச ரீதியில் ஏற்­பட்­டுள்ள இந்த நிலைமை தொடர்பில் அர­சாங்கம் கவ­னத்தில் கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இலங்­கைக்கு வழங்­கப்­பட்­டுள்ள கால அவ­காசம் நிறை­வ­டை­வ­தற்கு இன்னும் ஒரு­வ­ரு­ட­கா­லமே இருக்­கின்­றது. 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்­திற்குள் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்தே ஆக­வேண்டும். செயிட் அல் ஹுசைனின் அறிக்­கையின் பிர­காரம் 2019ஆம் ஆண்­டுக்குள் விசேட நீதி­மன்­றத்தை நிறுவி சர்­வ­தேச பங்­க­ளிப்­புடன் இந்த செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கா­விடின் சர்­வ­தேச நியா­யா­திக்க செயற்­பாட்­டு­முறை பிர­யோ­கிக்­கப்­படும் என்­பதை அர­சாங்கம் மனதில் கொள்­ள­வேண்டும்.

அதனால் இந்த நிலை­மையை கருத்­தில்­கொண்டு விரைந்து பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தற்கு முன்­வ­ர­வேண்டும். தற்­போது காணா­மல்­போனோர் அலு­வ­லகம் நிறுவப்பட்டுள்ளது. அதிலும் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையற்றவர்களாகவே காணப்படுகின்றார்கள். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை அடையும் வகையிலும் திருப்தி அடையும் வகையிலும் இந்த காணாமல்போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும். தொடர்ந்து இழுத்தடித்துக்கொண்டு செல்லும் போக்கை அரசாங்கம் கடைப் பிடிக்குமானால் அது சர்வதேச சமூகத்­­தின் கூடிய அதிருப்திக்கு காரணமாகிவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது.

பாதிக்கப்பட்ட மக்கள் விரக்தியில் இருக்கின்ற நிலையில் ஜெனிவா வரை சென்று தமக்கான நீதியை கோரும் நிலைமை உருவாகியுள்ளது. அதனை செவிமடுக்கும் நிலைக்கு ஐக்கிய நாடுகள் சபையும் வந்துவிட்டது. எனவே இனியும் அரசாங்கம் தென்னிலங்கையின் இனவாத சக்திகளுக்கு அஞ்சி பொறுப்புக்கூறும் பொறிமுறையை இழுத்தடிக்குமாயின் அது சர்வதேச ரீதியில் பாதகமான நிலைமைகளையே ஏற்படுத்தும் என்பதை மறந்து விடக்கூடாது.  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-23#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.