Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சபையில் களேபரம் : தீவிரபொறுப்பு முகாமை சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் சபை நடுவில் ஆர்ப்பாட்டம் செய்த கூட்டு எதிரணி வெளிநடப்பு

Featured Replies

சபையில் களேபரம் : தீவிரபொறுப்பு முகாமை சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில்

 

சபை நடுவில் ஆர்ப்பாட்டம் செய்த கூட்டு எதிரணி வெளிநடப்பு

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

தீவிர பொறுப்பு முகாமை சட்டமூலத்தை நிறைவேற்று வதற்கு இலத்திரனியல் வாக்கெடுப்பு பெறப்பட்ட போது சபாபீடத்திற்கு வருகை தராத அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க ஆதரவாக வாக்களித்ததாக திரையில் காண்பிக்கப்பட்டமையினால் நேற்று சபையில் கடுமை யான களேபரம் ஏற்பட்டதுடன் கூட்டு எதிர்க்கட்சியினர் சபை நடுவே வந்து கோஷம் எழுப்பினர். இதனை யடுத்து சபை நடவடிக்கைகள் 10 நிமிடத்திற்கு ஒத்தி  வைக்கப்பட்டதுடன் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வேளை கூட்டு எதிரணி எம்.பி.க்கள் சபையி லிருந்து வெளிநடப்பு செய்தனர்.   

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தீவிர பொறுப்பு முகாமை சட்டமூலம் விவாதத் திற்கு எடுக்கப்பட்டது. அதன்பின்னர் குறித்த சட்டமூலத்திற்கான இரண்டாம் வாசிப்பின் மீது  வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போதே சர்ச்சை யான நிலைமை ஏற்பட்டது. 

தீவிர பொறுப்பு முகாமை சட்டமூலம் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு இரண்டாம் வாசிப்பிற்கு வாக்கெடுப்பு கோரப்பட்டது. இதன்போது ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் தமது வாக்குகளை அளித்தனர். இலத்திரனியல் முறைமையின் பிரகாரம் கைரேகை பதிவின் ஊடாக வாக்கெடுப்பே தற்போது பாராளுமன்றத்தில் நடைமுறையில் உள்ள நிலையில் அந்த முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. . 

இதன்பிரகாரம் வாக்கெடுப்புக்கான காலம் நிறைவடைந்த பின்னர் வாக்கெடுப்பின் முடிவினை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். அத்துடன் பாராளுமன்ற திரையிலும் வாக்கெடுப்பு முடிவு காட்சிப்படுத்தப்பட்டது. இதன்படி சட்டமூலத்திற்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 33 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதனையடுத்து வாக்களித்தோர் விபரம் பாராளுமன்ற சபாபீடத்திற்குள் உள்ள திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. 

இதன்பின்னர் மூன்றாம் வாசிப்பிற்காக குழுநிலையில் திருத்தங்கள் செய்யப்பட்டு கொண்டிருந்த போது கூட்டு எதிர்க்கட்சியின் பந்துல குணவர்தன ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பினார். 

பந்துல குணவர்தன எம்.பி கூறும் போது,

வாக்கெடுப்பு நேரத்தின் போது சபாபீடத்திற்கு வருகை தராத அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க ஆதரவாக வாக்களித்ததாக திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. இது எப்படி நியாயம்?என்று கேள்வியெழுப்பினார். 

இதனையடுத்து ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக கூறும் போது,

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் வாக்கு பதிவாகவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். 

இதனையடுத்து கூட்டு எதிர்க்கட்சியினர் வாக்கெடுப்பில் மோசடி நடந்துள்ளதாக கூறி பெரும் எதிர்ப்பினை வெளியிட்டு சபாபீடத்தின் நடுவே வந்து கோஷமிட்டனர். இதனால் பரபரப்பான நிலை ஏற்பட்டது. 

 வாக்கெடுப்பின் போது நடந்த தவறு வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும் என சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற பிரதி செயலாளருக்கு கூறியது ஒலிவாங்கியின் ஊடாக கேட்டது. இதன்பிரகாரம் கூட்டு எதிர்க்கட்சியினர் யாருடைய கைவிரல் எஸ்.பி. யின் கைவிரல் என்றவாறு கோஷங்கள‍ எழுப்பிய வண்ணம் கூட்டு காணப்பட்டனர். 

இதனையடுத்து ஆரம்பத்தில் இருந்து வரிசையாக வாக்கெடுப்பு நடத்துவோம் என சபாநாயகர் கரு ஜயசூரிய கூறிய போதும் கூட்டு எதிர்க்கட்சியினர் தமது ஆசனங்களில் சென்று அமரவில்லை. இதனையடுத்து சபாநாயகர் கரு ஜயசூரிய கட்சி தலைவர் கூட்டத்தை நடத்துவதாக கூறி மாலை 6.24 மணிக்கு சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். 

அதன்பின்னர் 6.34 மணிக்கு மீண்டும் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின. இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரிய கூறுகையில்,

தொழில்நுட்ப கோளாறின் காரணமாக பிழை நடந்துள்ளது. இதற்காக நான் மன்னிப்பு கோருகின்றேன். ஆகவே ஆரம்பித்தில் வெளியிடப்பட்ட முடிவினை நான் இரத்து செய்கின்றேன். ஆகவே முன்பை போன்று வாக்கெடுப்பு நடத்துவோம் என்று கோரினார். 

 

இதனையடுத்து தீவிர பொறுப்பு முகாமை சட்டமூலத்திற்கு இரண்டாம் வாசிப்பின் மீது மீண்டும் வாக்கெடுப்பு நடத்துவோம் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல யோசனை முன்வைத்தார். இதனையடுத்து மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் போது சபாபீடத்தின் வரிசை ரீதியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் கூட்டு எதிர்க்கட்சியினர் வாக்கெடுப்பில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதன்படி ஆதரவாக 53 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் கிடைக்க பெற்றது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-24#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.