Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் நலச் சிந்தனையில் அயர்ச்சியற்ற உணர்திறன் அவசியம்

Featured Replies

  •  
  • மக்கள் நலச் சிந்தனையில் அயர்ச்சியற்ற உணர்திறன் அவசியம்
 
 

மக்கள் நலச் சிந்தனையில் அயர்ச்சியற்ற உணர்திறன் அவசியம்

 

ஆளுகை தொடர்­பான எண்­ணக்­க­ரு­வாக, பொருண்­மை­யு­டைய கரு­வி­யாகப் பேசப்­ப­டு­கின்ற ‘நல்­லாட்சி’ எனும் பதம் மக்களுக்குப் புதி­தா­ன­தொன் றல்ல.அது நாக­ரி­கம் என்ற பொது­மைக்கு உட்­பட்ட பழ­மைச் சிறப்­பு­டை­யது என்று சொல்­லப்­ப­டு­கி­றது.

இதற்­கென தனித்­து­வ­மான வரை­யறை எது­வும் குறிப்­பி­டப்­ப­டாத போதி­லும்,உல­க­ளா­விய ரீதி­யில் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க, பொருத்­த­முறு குறி­யி­லக்கு வழக்­கில் இருந்து வரு­கி­றது.இதனை, சூழ்­நி­லைக்கு ஏற்ப, நெகிழ்ச்­சித் தன்­மை­யின் ஊடு­க­டத்­தி­யாக பல­ரும் பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

நல்­லாட்சி’ எனும் தொனிப்பு

அந்­த­வ­கை­யிலே, இலங்­கை­யின் பொது நிர்­வாக சொற்­றொ­கு­தி­யில், கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்­பெற்ற அரச தலை ­வர் தேர்­த­லைத் தொடர்ந்து பேசு பொரு­ளா­கிப்­போன புதிய அவ­தா­ர­மாக, தீராத நிர்ப்­பந்­த­ மாக ‘நல்­லாட்சி’ எனும் தொனிப்பு, ஒழுங்­க­மை­வின்றி இழை­யோ­டிப் போயுள்­ளது.

இது அபி­வி­ருத்­தி­யி­ன­தும்,சமத்­து­வத்­தி­ன­தும் இலக்கை அடை­வ­தற்கு அவ­சி­யப்­பா­டு­டைய அர­சி­யல் மற்­றும் நிறு­வன ரீதி­யான நடை­மு­றை­கள்,அது சார்ந்து வெளிப்­பா­டு­க­ளு­டன் தொடர்­பு­று­கி­றது என்ற வெளிப்­ப­டுத்­தல் முன்­னி­லைப்­ப­டுத்­தப் பட்டு வரு­கி­றது.

தமிழ் மக்­க­ளின் எதிர்­கா­லச் சிந்­தனை நயம்

இந்­தச் சந்­தர்ப்­பத்­திலே,தமிழ் மக்­கள் தங்­க­ளு­டைய எதிர்­கா­லம் குறித்து சிந்­த­னை­வ­யப்­பட வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கின்­ற­னர்.அன்­றாட வாழ்­வி­ய­லில் எதிர்­வி­னை­க­ளி­டம் இருந்து தப்­பிப் பிழைத்து தம்மை நிலை நிறுத்­திக் கொள்­ளப் பாடு­பட வேண்­டி­ய­வர்­க­ளாக அசை­வு­று­கின்­ற­னர்.

குறிப்­பாக அர­சி­யல், பொரு­ளா­தார சித்­தாந் தங்­களை அறி­வு­டமை கொண்டு சீர்ப்­ப­டுத்தி, தமக்­கு­ரித்­தான அதி­ கா­ரப் பொறி­மு­றை­யாக அதனை வடி­வ­மைத்து, இயங்­கு­நிலை பெறச் செய்ய வேண்­டிய தேவையை உணர்ந்து கொள்ள வேண்­டும்.

அத­னைச் செயல்­வ­டி­வம் பெறச் செய்ய முயற்­சிக்க வேண்­டி­ய­வர்­க­ளாக இயங்­கு­நிலை பெற வேண்­டும்.

உரிமை என்ற உயர் படி­நி­லையை தம்­வ­யப்­ப­டுத்­திக்­கொள்ள முயற்­சிக்­க­ வும்,அதி­கார வர்க்­கத்­தோடு நியா­யங்­க­ளைத் தர்க்­கிக்­க­வும்,முரண்டு பிடித்­தால் உறை வாளாய் உண்­மை­களை இடித்­து­ரைத்து, தீர்வு பெற‘­அறை’ கொடுக்­க­வும் தயங்­கக்­கூ­டாது.

2009 ஆம் ஆண்­டு­க­ளின் முன்­பான பய­ண­வெளி

உண்­மை­யில் இவை சாத்­தி­யமா என்ற கேள்வி நிலை­கள் 2009 ஆம் ஆண்­டுக் காலப்­ப­கு­திக்கு முன்­பான பய­ண­வெ­ளி­யில் தமி­ழர்­க­ளி­டத்­தில் இருந்­த­தில்லை. அகிம்சை,ஆயு­தம் என்ற தோற்­று­வாய்­கள் தந்த ஆத்­ம­ப­லம் என்­பது, விடு­த­லை­யை­யும் அதன்­பால் முன் ந­கர்ந்த உரிமை வேட்­கை­யை­யும் ஒழுங்­கு­றக் கட்­ட­மைத்து வழி­ந­டத்­தின.

ஆனால், பன்­னா­டு­க­ளின் அனு­ச­ர­ணை­யோடு திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட மன்­னிக்க முடி­யாத ‘தமி­ ழர் தாயக இனப்­ப­டு­கொலை’ மீள முடி­யாத சோக இடு­கு­றி­யின் முற்­று­கை­யாக, அத்­தனை விட­யங்­க­ளை­யும்
கேள்­வி­நி­லைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதில் வாக்­கு­ரி­மை­யின் பலம் எம்­முன்­னாய் ஒப்­பு­விக்­கின்ற ‘ஜன­நா­ய­கம்’ என்ற உய்­வற்ற அயர்­நி­லைத் தாற்­ப­ரி­யம், பொருத்­த­மற்ற பிர­ச­வ­மாக மீள் சுழற்சி பெறு­கி­றது.பிர­தி­நி­தித்­து ­வங்­க­ளாக அந்­த­ரிக்­கி­றது.

ஜன­நா­ய­கத்­தின் கோலம்

கட்சி,கொள்கை,கொள்­கைப் பரப்­புரை,தேர்­தல் விஞ்­ஞா­ப­ னம்,உறுப்­பு­ரிமை,உறுப்­பி­னர் தெரிவு,அதி­கா­ரப் பரம்­பல்,நிதிப்­ப­ரம்­பல்,மக்­கள் பணத்­தில் கொழுத்த சம்­ப­ளம்,பொது நிகழ்­வு­க­ளில் வர­வேற்­புக் கம்­ப­ளம் எனக் காட்சி பெறும் இவர்­கள் வாழ்வு செந்­த­ளிக்­கி­றது.

வரை­ய­றுக்­கப்­பட்ட நிய­திச் சட்­டங்­க­ளின்­பின், ஜன­நா­யக செயல்­வெ­ளி­யாக அங்­கத்­து­வம் பெற்று நாடா­ளு­மன்­றம் செல்­கின்ற போதும்,அங்கு பேச்­சு­ரிமை என்­பது ஆக்­க­வு­ரி­மை­யாக மாற்­றம் பெறு­வ­தில்லை.

ஓர் பொது நிகழ்­வின் ஒன்­று­கூ­டல் போன்று, ஒரு­வ­ரு­டன் ஒரு­வர் அள­வ­ளா­வு­வ­தும், சந்­தர்ப்­பங்­க­ளில் முரண்­நிலை பெறு­வ­தும், கட­மைக்­காக விட­ய­தா­னங்­க­ளைப் பேசி அவற்­றைப் பதி­வாக்­கி­விட்டு உறங்­கு­நிலை பெறு­வ­தும், கால அவ­கா­சம் முடி­வ­ டைந்­த­த­தும் மீண்­டும் மக்­களை நாடி மண்­டி­யி­டு­வ­தும் என்ற, பற்­றற்ற அலங்­கார உற்­சவ மூர்த்­தி­க­ளின் எழுந்­த­ருள்­கை­ யாக இவர்­க­ளின் புரி­த­லற்ற ஆளுமை, அர­சி­யல் சம்­பி­ர­தா­ய­மாக பரம்­ப­ல­டை­கி­றது.

ஒரு­போ­தும் மக்­க­ளின் பொது­ந­லன் கரு­திய சேவை என்­பது முழுமை பெறு­வ­தில்லை; நிரம்­ப­ல் அடை­வ­தில்லை.

மக்­கள் நலச் சிந்­த­னை­யில்  அயர்ச்சி நிலை நில­வு­கி­றது

இலங்­கை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் மக்­கள் நலச் சிந்­த­னை­யில் அயர்ச்சி நிலையே ஆழ வேரூன்­றி­யுள்­ளது.குறிப்­பாக ‘நல்­லாட்சி’ என்ற சொல்­லாட்­சி­யின் அதி­கார வரன்­மு­றை­கள், தமிழ்­மக்­கள் சார்ந்த உணர்­தி­றன் தொடர்­பில் கரி­சனை கொள்­வ­தா­கத் தெரி­ய­வில்லை.

அதன் இயங்­கு­நி­லை­யும், செயல் வீரி­ய­மும் ஒழுங்­கு­மு­றைக்­குட்­ப­ட­வில்லை.இன­வாத முலாம் பூசிய,துருப்­பி­டித்த அழி­வின் கூர்­மு­னை­யாக, தமி­ழர்­களை அவர்­க­ளின் உரி­மை­யின்பால் உய்­ய­வி­டாது துன்ப வினை­யாக நச்­ச­ரித்­துக்­கொண்­டுள்­ளன.

திட்­ட­ மிட்ட போர் வல­யங்­க­ளின் உரு­வாக்­கம்,நில அப­க­ரிப்பு, அதி­க­ரித்த இரா­ணு­வப் பிர­சன்­னம், சுற்­றி­வ­ளைப்பு, தமிழ் இளை­ஞர்­கள் மீதான பல­வந்­த­மான கைது நட­வ­டிக்கை, காணா­மல் போகச் செய்­தல், தமிழ் பெண்­க­ளுக்­கெ­தி­ரான பாலி­யல் வன்­கொ­டுமை,தமி­ழர் பொருண்­மி­யத்­தின் கட்­ட­மி­டப்­பட்ட, திட்­ட­மிட்ட சுரண்­டல், மிக நீண்ட போர்,இனப் படு­கொலை என அவை ஆத­ர­வற்ற ,அநா­த­ர­வான துன்­பி­யல் அடை­மொ­ழி­யாக விடி­யலை வேண்டி நிற்­கின்­றன. இதுவே யதார்த்­தம்..!

தமி­ழர்­கள் குறித்­தான மனித உரிமை

இந்த நிலை­யிலே, மனித உரி­மை­கள் கூட்­டத்­தொ­ட­ரின் 37 ஆவது அமர்வு ஜெனீ­வா­வில் இடம்­பெற்று முடிந்திருக்கிறது. அந்தக் கூட்­டத் தொடர் ஆரம்­ப­மா­வ­தற்கு முன்­பா­கவே இலங்­கை­யின் மனித உரிமை மீறல்­கள் தொடர்­பில் வெளிப்­ப­டுத்­தல்­கள் பல முன்­வைக்­கப் பட்­டன.

குறிப்­பாக, “ஒன்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் தமி­ழர் தாய­கத்­தில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்­க­ளுக்கு நீதி வழங்­கு­வ­தில் இலங்கை அரசு கொண்­டுள்ள செய­லற்ற தன்மை கவ­னிக்­கத்­தக்­கது.

இந்­தக் குற்­றங்­க­ளுக்கு எதி­ராக பன்­னாட்­ட­ள­வி­லான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்­டும்.” என ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சைட் அல் குசைன் தெரி­வித்­தமை கவ­னிப்­புக்கு உரி­யது.

கடந்த பத்து மாதங்­க­ளில் மனித உரி­மை­கள் தொடர்­பில் இலங்கை அரசு கண்­டு­கொண்­டுள்ள முன்­னேற்­றம் தொடர்­பில் சிறப்பு அறிக்­கையை வெளி­யிட்ட அவர், போர்க் காலத்­தில் இடம்­பெற்ற மீறல்­கள் தொடர்­பான பொறுப்­புக்­கூ­ற­லில் அரசு தோல்வி கண்­டுள்­ள­தை­யும், வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

ஐக்­கிய நாடு­க­ளின் உயர் ஆணை­யர், மனித உரி­மை­கள் ஆணை­யம், இந்­த­வி­ட­யங்­க­ளில் உல­க­ளா­விய அதி­கார வரம்­பின் பயன்­பாடு குறித்­துச் சிந்­திக்க வேண்­டும் என்­றும் சுட்­டிக்­காட்­டி ­யுள்­ளார்.

இத­னூடே மனித உரிமை மீறல்­கள் மற்­றும் தவ­றான மீறல்­க­ளுக்கு தண்­ட­னையை வழங்­கு­வ­தற்­கான திறனை அல்­லது விருப்­பத்தை இலங்கை அர­சும்,அதில் அங்­கம் வகிக்­கின்ற அதி­கா­ரி­க­ளும் இன்­ன­மும் நிரூ­பிக்­க­வில்லை என்­ப­தனையும் இடித்­து­ரைத்­துள்­ளார்.

தவிர, இலங்­கை­யில் நீதி முறைமை ஒன்றை அரசு அல்­லது இரா­ணுவ அதி­கா­ரி­க­ளு­டன் கையா­ளும் போது, பிர­தா­ன­மாக நீதித் துறை­யின் ஒட்­டு­மொத்த குணாம்­ச­மா­னது, அரச அதி­கா­ரி­கள் அல்­லது குற்­ற­வி­யல் நட­வ­டிக்­கை­க­ளில் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட பாது­காப்பு அதி­கா­ரி­கள் தொடர்­பாக நீதித்­துறை நிர்­வா­கத்­தில் ‘இரட்டை நிலைப்­பாடு’ தலை­தூக்­கும் என­வும் அந்த அறிக்கை சுட்­டிக்­காட்­டு­கி­றது.

பய­னு­று­தி­யற்ற செவி­வ­ழிச் செய்­தி­கள்

இத­னி­டையே ஐ.நா மனித உரி­மை­கள் சபை­யின் 37 ஆவது கூட்­டத் தொட­ரில் உரை­யாற்­றிய ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சைட் அல் ஹூசைன், இலங்கை அர­சின் செயற்­போக்கு தொடர்­பில் வெளிப்­ப­டுத்­தி­யுள்ள, குறிப்­பாக உல­க­ளா­விய சட்ட நடை­மு­றை­களை போர்க்­குற்­றம் தொடர்­பில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும்.

நிலை­மா­று­கால நீதி மற்­றும் பொறுப்­புக்­கூ­றல் செயன்­மு­றை­கள் பின்­பற்­றப்­பட வேண்­டும் என்ற கருத்­துக்­க­ளும், அண்­மை­யில் காணா­மல் ஆக்­கப்­பட்ட உற­வு­க­ளின் சொந்­தங்­களை சந்­தித்த சுவிஸ் தூது­வ­ரின், ‘அர­சுக்கு அழுத்­தம் கொடுப்­போம்’ என்ற ஆறு­தல் வார்த்­தை­க­ளும் செவி வழிச் செய்­தி­யா­கவே நகர்­கின்­றன.

செய­லற்ற அதன் பய­னு­றுதி என்­பது பூச்­சி­ய­மா­கவே இருக்­கும். ஏனெ­னில் போர் மற்­றும் அதன் பின்­வி­ளை­வு­ க­ளின் இறு­திக் கட்­டங்­க­ளில், பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­கள் காணா­மல் போயுள்­ளமை தொடர்­பில் ஐ.நாவும், மற்­றும் பல மனித உரி­மை­கள் அமைப்­புக்­க­ளும் நம்­ப­க­மான ஆதா­ரங்­களை பதிவு செய்­துள்­ளன.

ஆனால் அவை காணா­மற்­போன நபர்­கள் பற்­றிய தக­வ­லைச் சேக­ரித்து, பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு நிவா­ர­ணம் வழங்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­தா­கத் தெரி­ய­வில்லை.

இதற்கு இணை­யான கட்­டி­யங்­கூ­ற­லாக, புதிய அர­ச­மைப்­பின் செயல் வேக­மும் ஆர்­வ­மற்ற வேண்டா வெறுப்­பான போக்­கி­லேயே பய­ணம் கொள்­கி­றது.இத­னைத் தமி­ழர் பிர­தி­நி­தித்­து­வங்­கள் கூட ஏற்­றுக்­கொண்­டுள்­ளன.இதனை ஐ.நா உத­விச் செய­ல­ரி­டம் பட்­ட­வர்த்­த­ன­மாக, காலத்­துக்­கேற்ற ‘திரு­வா­சக முற்­றோ­த­லாக’ எடுத்­தும் கூறித் தங்­கள் வேலை­க­ளில் ஒய்­யா­ரம் கொள்­கின்­ற­னர்.

இத்­த­னைக்­கும் மனித உரி­மை­கள் மீறல் தொடர்­பாக ஐ.நாவுக்கு தக­வல் வழங்­கி­ய­வர்­களை ‘தமிழ்ப் புலி ஆத­ர­வா­ளர்­கள்’ எனச் சுட்டி, நல்­லாட்­சி­யின் நாய­க­னாக அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கண்­ட­னம் தெரி­வித்­தி­ருந்­த­மை­யும் இங்கு நோக்­கு­தற்­கு­ரி­யது.

தமி­ழர்­க­ளுக்­கான தீர்வு தான் எப்­போது?

ஆக, நல்­லாட்சி என்ற தற்­கால நகர்­வின் செயல்­மு­றை­யில் பொது­வி­வ­கா­ரங்­கள்,வளங்­க­ளின் மீது கட்­டுப்­பாடு,குறிப்­பாக முறைகேடு மற்­றும் ஊழ­லற்ற தன்­மை­யில் மனித உரி­மை­க­ளின் உணர்­வுகளுக்கு உத்­த­ர­வா­த­ம­ளித்­தல், உரிய கவ­னத்­து­டன் கூடிய சட்ட ஆளுகை, பொறுப்­புக்­கூ­றல் மற்­றும் வெளிப்­ப­டைத் தன்மை போன்­ற­வற்­றுக்கு உரித்­தான தொடர்­பு­ற­லைக் கண்­டு­கொள்ள முடி­ய­வில்லை.

நல்­லாட்­சி­யின் உண்­மை­யான அள­வீடு என்­பது, நியா­ய­மான சட்ட உரிமை,தனிப்­பட்ட பாது­காப்பு,குடி­யி­யல்,கலா­சார,பொருண்­மிய மற்­றும் சமூக உரி­மை­கள் போன்ற ‘மனித உரி­மை­க­ளின்’ வாக்­கு­று­தி­கள் மீதான வெளிப்­ப­டுத்­தல்­க­ளின் அள­வாக இருக்க வேண்­டும்.

ஆனா­லும், இந்த விட­யங்­கள் இன்­ன­மும் தேடல் நிலை­யி­லேயே உள்­ள­தா­கவே தோன்­று­கி­றது.இதி­லி­ருந்து முயற்­சி­யின் விளிம்பை அடை­வது என்­பது கடி­னம்.எனவே தமி­ழர்­க­ளுக்­கான தீர்வு என்­பது, இன்­றைய நிலை­யில் கேள்­விக்­கு உரிய தொன்றே.

சுதந்­தி­ர­மான விடு­தலை என்­ப­தும் பகல் கனவை ஒத்­ததே. மொத்­தத்­தில், நல்­லாட்சி என்­பது வெறும் வெத்து வேட்டு நாட­கமே.

http://newuthayan.com/story/78181.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.