Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பருத்தித்துறை நகர சபையின் தலைவராக ஜோசப் இருதயராஜா தெரிவு

Featured Replies

பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகர சபைகளில் இன்று பலப்பரீட்சை

 

 

power-struggle-300x200.jpgஎந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத- யாழ். மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகர சபைகளுக்கான முதல்வர்கள் தெரிவு இன்று நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலில், பருத்தித்துறை நகர சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 6 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களைக் கைப்பற்றியது.

ஈபிடிபி-2, சுயேட்சைக் குழு-1, தமிழர் விடுதலைக் கூட்டணி-1 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தன.

இந்த நிலையில் இன்று நடைபெறும் நகர முதல்வருக்கான தெரிவின் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வேட்பாளர்களை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்.மாநகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிட்டதால், அந்தக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய சாவகச்சேரி நகரசபைக்கான முதல்வர் தெரிவின் போது கூட்டமைப்பும் போட்டியிட்டது. அதில் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்தது.

அதுபோலவே, பருத்தித்துறை நகர சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களை பெற்றிருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல்வர் பதவிக்கு போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வல்வெட்டித்துறை நகரசபை

அதேவேளை, வல்வெட்டித்துறை நகரசபை முதல்வர் தெரிவும் இன்று நடைபெறவுள்ளது. இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 ஆசனங்களைக் கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு 4 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபி என்பன தலா 2 ஆசனங்களையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தலா 1 ஆசனத்தையும் கொண்டுள்ளன.

இங்கு அறுதிப் பெரும்பான்மை பெற கூட்டமைப்புக்கு 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

கூட்டமைப்புக்கு ஆதரவு அளிக்க சுயேட்சைக் குழு,  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன மறுத்துள்ளன.

எனினும், இந்த மூன்று தரப்புகளும் இணைந்தாலும் கூட, 7 ஆசனங்களைத் தான் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

இந்த நிலையில், முதல்வர் தெரிவில் ஈபிடிபி முக்கிய பங்கை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2018/03/27/news/30074

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பருத்தித்துறை நகர சபையின் தலைவராக ஜோசப் இருதயராஜா தெரிவு

 

 

பருத்தித்துறை நகர சபையின் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஜோசப் இருதயராஜா  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை நகர சபையின் முதலாவது அமர்வு இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றது.

பருத்தித்துறை நகர சபையின் தலைவராக ஜோசப் இருதயராஜா  தெரிவு

இதன்போது தலைவர் தெரிவிற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ஜோசப் இருதயராஜா  மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட க.பாலசுப்ரமணியம் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

இதனையடுத்து  வாக்கெடுப்பு நடத்தப்பட்ட  நிலையில் ஜோசப் இருதயராஜா 7 வாக்குகளையும், க.பாலசுப்ரமணியம்6 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் பருத்தித்துறை நகர சபையின் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஜோசப் இருதயராஜா   தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதி தலைவராக மதினி நெல்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை நகர சபையின் தலைவராக ஜோசப் இருதயராஜா  தெரிவு

பருத்தித்துறை நகர சபையின் தலைவராக ஜோசப் இருதயராஜா  தெரிவு

பருத்தித்துறை நகர சபையின் தலைவராக ஜோசப் இருதயராஜா  தெரிவு

https://news.ibctamil.com/ta/internal-affairs/Joseph-iruthayaraja-head--PointPedro-urban-Council

  • தொடங்கியவர்

EPDPயின் ஆதரவுடன் பருத்தித்துறை நகரசபையும் கூட்டமைப்பு வசமானது…

39614240_Unknown.jpg?resize=800%2C600

பருத்தித்துறை நகர சபையினையும் கூட்டமைப்பு கைப்பற்றியது. தவிசாளராக ஜோசப் இருதயராசா, பிரதித் தவிசாளராக மதினி நெல்சன் தேர்வாகினர். பருத்தித்துறை நகர சபை முதலாவது அமர்வு இன்றைய தினம் உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் கூடியது.

 

அதன் போது தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜோசப் இருதயராஜாவை பிரேரித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியத்தை பிரேரித்தனர்.

அதனை அடுத்து பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் 5 உறுப்பினர்களும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் ஜோசப் இருதயராஜாவுக்கு வாக்களித்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆறு உறுப்பினர்களும் கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியத்திற்கு வாக்களித்தனர். கேடய சின்னத்திலும், உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வென்ற உறுப்பினர்கள் தலா ஒருவரும் நடு நிலமை வகித்தனர்.

அதனை அடுத்து 7 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜோசப் இருதயராஜா தவிசாளாரக தெரிவானர். அதனை தொடர்ந்து உப தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு மதினி நெல்சனை பிரேரித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி சுப்பிரமணியம் கோகுலகுமாரை பிரேரித்தனர்.

அதனை தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது மதினி நெல்சன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஆதரவுடனும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவுடனும் உப தவிசாளராக தெரிவானார். அதனை அடுத்து பருத்தித்துறை நகர சபை தவிசாளர் ஜோசப் இருதயராஜா சபையை ஒத்திவைத்தார்.

39614176_Unknown.jpg?resize=800%2C600

39614496_Unknown.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2018/72500/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.