Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் மீள்­கு­டி­யேற்றம் எந்த மட்­டத்தில் உள்­ளது? : மாவட்ட செய­லா­ளர்­க­ளிடம் பிர­தமர் கேள்வி

Featured Replies

வடக்கின் மீள்­கு­டி­யேற்றம் எந்த மட்­டத்தில் உள்­ளது? : மாவட்ட செய­லா­ளர்­க­ளிடம் பிர­தமர் கேள்வி

Ranil-471eb2c1382561310cd25a12b404b6d34a9e0cc4.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ்)

வடக்கில் யுத்­தத்­தினால் இடம்­பெ­யர்ந்­த­வர்­களை மீள்­கு­டி­யேற்றும் வேலைத்­திட்­டங்­களில் முன்­னேற்றம் எந்த மட்­டத்தில் உள்­ளது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று வடக்கை மையப்­ப­டுத்­திய மாவட்­டங்­களில் மாவட்ட செய­லா­ள­ர­க­ளிடம் வின­வினார். இதன்­போது தற்­போது இடம்­பெ­யர்ந்தோர் பெரும்­பா­லனோர் 

 மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் கண்ணி வெடி அகற்றும் பணிகள் இடம்­பெற்று வரு­கின்­றன என்றும் அதன்­பின்னர் மீள்­கு­டி­யேற்றம் துரி­த­மாக நிறைவு செய்­யப்­படும் எனவும் மாவட்ட செய­லா­ளர்கள் பதி­ல­ளித்­தனர்.

அத்­துடன் கண்டி வன்­மு­றையின் தற்­போ­தைய நிலைமை குறித்து வின­விய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கிராம அலு­வ­லகர் மட்­டத்­தி­லான தேசிய நல்­லி­ணக்க குழு அமைப்­ப­தனை துரி­தப்­ப­டுத்­து­மாறும் கோரினார்.

நாட்டின் 25 மாவட்­டங்­களின் மாவட்ட செய­லா­ளர்­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று கொழும்பு அபி­வி­ருத்தி மற்றும் நிர்­வாக நிறு­வன கேட்போர் கூடத்தில் சந்­தித்து மாவட்­டங்­களின் பிரச்­சி­னை­களை கேட்­ட­றிந்தார். இதன்­போது இயற்கை அனர்த்­தங்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் குறித்தும் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்ட விவ­சா­யத்தை முன்­னேற்­று­வது குறித்தும் வெளி­நாட்டு முத­லீ­டு­க­ளுக்கு துரித அனு­மதி வழங்­கு­வது குறித்தும் ஆரா­யப்­பட்­டன. 

இதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மாவட்ட செய­லா­ளர்கள் முன்­னி­லையில் உரை­யாற்­று­கையில்

நாம் பல காணி­க­ளைய அபி­வி­ருத்­திக்­காக சுவீ­க­ரிக்க வேண்டும். இதற்­காக கால­தா­ம­தங்கள் ஏற்­ப­டு­கின்­றன. ஆகவே இதனை துரி­தப்­ப­டுத்த வேண்டும். அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­களை ஆரம்­பித்­துள்ளோம். பொரு­ளா­தார ஸ்திர­மான நிலை­மையை ஏற்­ப­டுத்தி நாட்டின் கடன்­சு­மைக்கு வெற்­றி­க­ர­மாக முகங்­கொ­டுக்க வேண்டும். கடன்­செ­லுத்­து­வ­தற்கு போதி­ய­ளவு வரு­மானம் எம்­மிடம் கிடை­யாது. பொரு­ளா­தா­ரத்தை ஸ்திரப்­ப­டுத்­தி­யதன் பின்­னரே கடனை செலுத்த வேண்டும். நாட்டில் பல அபி­வி­ருத்தி திட்­டங்­களை ஆரம்­பித்­துள்ளோம்.

கண்டி முதல் அம்­பாந்­தோட்டை வரை பாரிய அபி­வி­ருத்தி திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வுள்ளோம். இதற்­கான அடிப்­படை வேலைத்­திட்­டங்­களை ஆரம்­பித்­துள்ளோம். எனினும் எமது அபி­வி­ருத்தி அங்கு மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. வடமேல், கிழக்கு, நுவ­ரெ­லிய, ஊவா போன்ற அனைத்து பகு­தி­க­ளிலும் துரித அபி­வி­ருத்­தியை நாம் முன்­னெ­டுக்­க­வுள்ளோம். யுத்­ததின் பின்­ன­ரான மறு­சீ­ர­மைப்பை வடக்கில் செய்ய வேண்­டி­யுள்­ளது. இதற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் நாம் ஆரம்­பித்­துள்ளோம்.

வர்த்­தக துறையில் பாரிய முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம். தற்­போது வெளி­நாட்டு முத­லீ­டு­களை அதி­க­ரிக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யுள்­ளது. எனினும் வெளி­நாட்டு முத­லீ­டு­க­ளுக்கு நாட்டில் அனு­மதி கிடைப்­ப­தற்கு நீண்ட காலம் தேவைப்­ப­டு­கின்­றது என குற்­றச்­சாட்டு முத­லீட்­டார்­க­ளினால் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. ஆகவே குறித்த கால தாம­தத்தை நீக்க வேண்டும். இதற்­காக மாவட்ட மட்­டத்தில் முத­லீ­டு­க­ளுக்கு அனு­மதி வழங்­கு­வ­தனை துரி­தப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.  

காலி சுற்­றுலா துறையை அபி­வி­ருத்தி செய்­ய­வேண்டும். குரு­நாகல் மாவட்­டத்தின் பிங்­கி­ரிய மற்றும் மாவத்­த­கம கைத்­தொழில் வலயம் உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. மேலும் கொழும்பு - கண்டி அதி­வேக வீதியின் மூன்றாம் கட்­ட­டத்­திற்­கான நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிக்க வேண்­டி­யுள்­ளது என்றார்.

இத­னை­ய­டுத்து கண்டி இன வன்­முறை தொடர்பில் தற்­போ­தைய நில­வரம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கண்டி மாவட்ட செய­லா­ள­ரிடம் வின­வினார். அத்­துடன் அபி­வி­ருத்தி நில­வரம் குறித்தும் வின­வினார். 
இதன்­போது அவர் பதி­ல­ளிக்கும் போது, 
கிரா­மிய அபி­வி­ருத்­தியை மையப்­ப­டுத்­திய நிதி ஒதுக்­கீ­டுகள் கண்டி மாவட்­டத்­திற்கு கிடைக்­க­பெற்­றன. அதற்கு ஏற்றால் போன்று அபி­வி­ருத்தி திட்­டங்­களை நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். 
கண்­டியில் இன வன்­முறை ஏற்­பட்­டதன் பின்னர் தற்­போது சுமூ­க­மான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இதன்­படி அந்த வன்­மு­றையின் பின்னர் பூஜா­பிட்டி பிர­தே­சத்தில் சிங்­கள மற்றும் முஸ்­லிம்கள் அனை­வரும் ஒன்று சேர்ந்து சிர­ம­தான பணி­யொன்றை முன்­னெ­டுத்­துள்­ளனர். அத்­துடன் மெல­ள­வி­மார்கள், பிக்­குகள் உட்­பட இரா­ணுவ படை­யி­னரின் பங்­கு­பற்­ற­லுடன் கூட்­ட­மொன்று நடந்­தது. இதன்­பின்னர் எதிர்­வரும் காலங்­களில் விகா­ரை­களை மையப்­ப­டுத்தி நல்­லி­ணக்க வேலைத்­திட்­ட­மொன்றை முன்­னெ­டுப்­ப­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. இதனை போன்று ஏனைய பிர­தேச செய­ல­கங்­க­ளிலும் இதே நிலைமை ஏற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது என்றார். 
இத­னை­ய­டுத்து வடக்கில் மீள்­கு­டி­யேற்ற வேலைத்­திட்­டத்தின் முன்­னேற்றம் எந்த மட்­டத்தில் உள்­ளது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வடக்கு மாகா­ணத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து மாவட்ட செய­லா­ளர்­க­ளிடம் வின­வினார்.  

இந்த கேள்­விக்கு கிளி­நொச்சி,முல்­லை­தீவு, யாழ்ப்­பாணம் ஆகிய மாவட்­டங்­களின் மாவட்ட செய­லா­ளர்கள் பதி­ல­ளித்­தனர்.

மாவட்ட செயலர் அரு­மை­நா­யகம் பதி­ல­ளிக்­கையில்   மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. கண்­ணி­வெடி அகற்றும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதன் 90 வீத­மான பணிகள் நிறைவு பெற்றுள்ளன.இதன் பணிகள் நிறைவு செய்த பின்னர் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்படும் . அத்துடன் சுகாதார, வாழ்வாதார வசதிகள் நிறைவு செய்ய வேண்டியுள்ளது என்றார். 

  முல்லைதீவு மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் கூறுகையில்,

வடக்கின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு பெற்று விட்டன. இராணுவம் விடுவித்த பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றார். 

இதனைபோன்று பெரும்பாலான மீள்குடியேற்ற பணிகள் வடக்கில் முடிவு பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கேள்விக்கு பதிலளித்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-28#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.