Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வந்திறங்கிய மோடி..! #wewantcmb #liveupdate

Featured Replies

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வந்திறங்கிய மோடி..! #wewantcmb #liveupdate

 

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, சென்னை விமானநிலையம் வந்திறங்கினார்.

DajfIQcXcAAwn8V_09547.jpg

மோடி, விமான நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில், அந்தப் பகுதியைச் சுற்றி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. 

dfd32e39-431c-40f8-a4a0-2bfa5fde132e_1_0

அவருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

DajfKmIX0AAH1Ao_09230.jpg

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

8d501dab-5803-4101-9002-054cb8ca51a9_093

கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர்  உள்ளிட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். 

b957b41a-c5b4-48e3-ba2e-f79a156766cd_094

பிரதமர் மோடி, 10 மணிக்கு முன்னதாக விமானநிலையம் வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், விமானநிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

2b50cb8e-0ced-4e9d-b65a-2cf9c7e9dfd2_092

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மணியரசன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் கைது.

இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன்,ராம் உள்ளிட்டவர்கள் விமானநிலைய வளாகத்துக்கு முன் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம், காவல்துறை அதிகாரிகள் சமாதனம் பேசிவருகின்றனர். 

காஞ்சிபுரம், திருவிடைந்தைப் பகுதியில் நடைபெற்றுவரும் ராணுவக் கண்காட்சியில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். அவரது வருகையையொட்டி, சென்னை முழுவதும் சுமார் 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 'பிரதமர் வருகையின்போது, கறுப்புக்கொடி காட்டப்படும்' என்று தி.மு.க, நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்திருந்தனர்.

ccac4770-9a36-4511-96a7-fbc851da5677_095

மோடி, 9.30 மணி அளவில் விமான நிலையம் வரவுள்ள நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பரங்கிமலைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர், விமானம் நிலையம் அருகிலுள்ள உயரமான பேனர் தட்டியின்மீது ஏறி கறுப்புக்கொடி காட்டிவருகின்றனர். அதனால், விமான நிலையம் அருகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

https://www.vikatan.com/news/tamilnadu/121945-black-flag-agitation-going-in-around-airport-surrounding-against-pm-modi-arraival.html

  • தொடங்கியவர்

கறுப்புச் சட்டையுடன் கருணாநிதி! எம்.எல்.ஏ வீட்டு மாடியில் பறந்த ராட்சத கறுப்புப் பலூன்!

 
 

ராட்சத கறுப்பு பலூன்

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு. தி.மு.க எம்.எல்.ஏ., மா.சுப்பிரமணியின் வீட்டு மாடியில் கறுப்பு ராட்சத பலூன் கட்டி பறக்கவிடப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகத்தில் தொடர் போராட்டம் நடந்துவருகிறது. தி.மு.க மற்றும் எதிர்க்கட்சியினர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று போராட்டங்களில் ஈடுபட்டுவருவதோடு, தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியுள்ளனர். தி.மு.க தலைவர் கருணாநிதியின் வீடு, செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் வீடு, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கறுப்புக்கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மற்றும் தமிழ் அமைப்பினர் கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை தி.மு.க எம்.எல்.ஏ., மா.சுப்பிரமணியன், பிரதமர் வருகைக்கு வித்தியாசமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது வீட்டு மாடியில் கறுப்பு ராட்சத பலூன் ஒன்றை பறக்கவிட்டுள்ளார். அந்தப் பலூனில் "தமிழ்நாட்டை வஞ்சிக்கும் Modi Go BACK" என்று எழுதப்பட்டுள்ளது. இந்த ராட்சத பலூனை தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வாகை சந்திரசேகர், சேகர்பாபு மற்றும் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் பறக்கவிட்டு முழக்கமிட்டனர்.

கறுப்பு சட்டையுடன் கருணாநிதி

 

பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க தலைவர் கருணாநிதி கறுப்புச் சட்டை அணிந்துள்ளார். மேலும், கழுத்தில் மஞ்சள் துண்டும் போட்டுள்ளார். இந்தப் படம், சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

https://www.vikatan.com/news/tamilnadu/121966-karunanidhi-appears-in-black-shirt-black-balloon-in-mla-house.html

  • தொடங்கியவர்
 
 

மோடியின் வருகைக்கு எதிர்ப்பு- தீக்குளித்த இளைஞன்!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தலைமை அமைச்சர்   நரேந்திர மோடியின் தமிழகம் வருகைக்கு அனைத்து கட்சியினரும் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு அருகே உள்ள சித்தோடு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரே உயிரிழந்தார். தனது வீட்டு சுவரில் “மத்திய அரசே கர்நாடக அரசே காவிரி நீர் தமிழ்நாட்டின் உயிர்நீர், எடப்பாடி திரு.பழனிசாமி நீங்கள் தமிழனா? இல்லையா? தமிழக மக்களிடம் துணிந்து சொல்லுங்கள் பார்க்கலாம், தமிழகம் வருகிற நரேந்திர மோடிக்கு என்னுடைய எதிர்ப்பு இது – என்று எழுதி வைத்து விட்டு இன்று அதிகாலை 2.45 மணிக்கு தீக்குளித்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இளைஞன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வானூர்தி
நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பலர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை திருவிடந்தை நடைபெறவுள்ள இராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைப்பதற்கு மோடி இன்று சென்னைக்கு வருகிறார். இதற்கிடையே, மோடியின் வருகைக்கு கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்பதுடன்,
கறுப்பு பலூன்களையும் பறக்க விட்டும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, தலைமை அமைச்சர் மோடி டில்லியில் இன்று காலை 6.40 மணி அளவில் தனி வானூர ்தியில் புறப்பட்டு காலை 9.36மணிக்கு சென்னை பழைய வானூர்தி நிலையம் வந்தடைந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

nn-1.jpglarge_black-47763-300x225.jpgindex-1.jpg201804121019022008_1_erode._L_styvpf-300pic-1-300x200.jpg

index-2.jpg

http://newuthayan.com/story/84149.html

  • தொடங்கியவர்

போராட்டக்காரர்கள் கருப்பு பலூன்களை பறக்கவிட : பொலிஸார் ஊசியால் உடைக்க : பாடு பொருளான தமிழகம்

சென்னையில் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட கொண்டு வந்த கருப்பு பலூன்களை பொலிஸார்  ஊசி வைத்து உடைத்தனர்.

New_Layout__3_.jpg

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த  முதலாம் திகதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இச் சூழலில் சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்போவதாக தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன.

மேலும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் கருப்புச் சட்டை அல்லது கருப்பு இலட்சணை அணிந்தும் எதிர்ப்பு தெரிவிக்குமாறு பொது மக்களுக்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் சென்னையில் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர். பொலிஸாருக்கு தெரியாமல் மறைத்து வைத்த கருப்பு பலூன்களை அவர்கள் பறக்கவிடத் தொடங்கியதும் பொலிஸார்  ஊசி வைத்து உடைத்தனர்.

http://www.virakesari.lk/article/32458

  • தொடங்கியவர்

உலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹேஷ்டெக்....

 

 
 

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்று உருவாக்கப்பட்ட ஹேஷ்டெக்  உலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

New_Layout__3_.jpg

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி சென்னை விமானநிலையம்  வந்திறங்கிய போது விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னை விமான நிலையம் அருகே போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/32462

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: மோடியின் சென்னை வருகை - விண்ணிலும் எதிர்ப்பு... மண்ணிலும் எதிர்ப்பு

 

vfgpng
Untitledpngnjpng
vfgpng
Untitledpngnjpng

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் கருப்புச் சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்தும் அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

             

இந்நிலையில், தமிழகத்தில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் உலகளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து  நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன்  நோட்ஸில்....

ஜெஜெயலலிதா எனும்நான்

‏ஒரு நாட்டின் பிரதமரையே பின்புற சுவரை உடைத்து குறுக்கு வழி ஏற்படுத்தி காப்பாற்றி கொண்டுபோக வேண்டிய நிலைமையில் தமிழக ஆட்சியாளர்கள்   

இதெல்லாம் நாளைக்கு எஸ்டிடி ல வரும்ல

Pa.Periyasamy

‏வரலாற்றில் இன்று.....12/04/2018

பாஜக கடைசி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்து அசிங்கப்பட்ட நாள்

hnbpng
 

நாசர்

‏காலா ன்னா கருப்பு...

காலன்..கரிகாலன்..

சண்ட போட்டு காக்குறவன்..

கருப்பு Rebellionனுடைய வண்ணம்.

எங்க சால்ல வந்து பாரு....

அத்தனையும் கருப்பா தெரியும்....

udhay kumar

‏கருப்பு.. பெரியாரோட வண்ணம். இன்னைக்கு எங்க ஊருக்கு வந்து பார். எல்லா வண்ணமும் கருப்பா தான் தெரியும். #GoBackModi

hnjpng
 

Arunkumar

‏#GoBackModi தமிழர்கள் போராட்டம் நடத்துவதை தெரிஞ்சும் தெரியாமல் செல்லும் @narendramodi நீங்கள் இந்தியாவை ஒற்றுமையாக இருக்க செய்யும் செயல்கள் இது தானா. தமிழ்நாட்டை தனி நாடு போல் நடத்துவதை நிறுத்தி கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்று கனவிலும் நினைக்கவேண்டாம்.

அந்துவான்

‏சான்றோருக்கு சென்ற

இடமெல்லாம் சிறப்பு..

மோடிக்கு திரும்பும்

இடமெல்லாம் கருப்பு

jknlpng
 

HBD டீச்சர்

‏பாருங்க நான் வரேன்னதும் புது ரோடுலாம் போட்ருக்கானுங்க

அது ரோடு இல்ல கருப்பு கொடி

Jassimshams

‏தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்ற நினைக்கும் மத்திய அரசே.... நூறு ஆண்டுகள் அல்ல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சரி எமது மண்ணில் உனது தாமரை என்றுமே மலராது #GoBackModi

gbvfpng
kjnhpng
 

கொம்பன்  

‏மோடி மைNட் வாய்ஸ்:

ரோடு மட்டும் கருப்பா இருந்தா போகலாம்

ஊரே கருப்பா இருந்தா எப்படி போகுறது

சண்டியர்

‏நாட்ல பெரிய பெரிய ரோடு போட்டா மட்டும் தலைவன் இல்ல..

அந்த ரோட்ல தைரியமா போற அளவு மக்கள் அன்பை வாங்கியிருப்பவனே தலைவன்..

கார்க்கிபவா

‏மறைஞ்சு மறைஞ்சு போறார் மோடி. உண்மையில் இது defence expo தான்

கரிசற் காட்டான்

‏நீ தரை வழி இல்லாமல் ஆகாய வழி வந்தாலும் சரி தண்ணிக்குள்ள வந்தாலும் அங்கயும் எதிர்ப்பு இருந்திருக்கும். ஏன்னா இது தமிழ்நாடு...

DakceA3U0AAwBLtjpg
 

பிரபு

‏மோடிக்கு ஒரு விஷயம் புரிஞ்சி இருக்கும்..  தமிழ்நாட்டில் தாமரை மட்டும் அல்ல நாம விதைக்கிற புல் பூண்டு கூட முளைக்காது என்று !!!

தனி காட்டு ராஜா

‏ஒரு பிரதமர் வருகையை எதிர்த்து போராடிய முதல் மாநிலம், அதையும் உலகங்கள் அறிய செய்த பெருமை, தமிழுக்கும், தமிழனுக்கும் மட்டுமே சாரும்....

Untitledpngnjpng
 

CH.Sekar, Ex.MLA.

‏ஒரு மாநிலத்தில் நுழைய அந்நாட்டின் பிரதமருக்கு இத்தனை எதிர்ப்பென்றால்

எத்தனை மோசமான ஆட்சி நாட்டில் நடக்கிறது!?

kaviyarasan

‏Ipl இடம் மாறி விட்டால் ! கருப்பு கொடி காட்டி விட்டால் ! தண்ணீர் கிடைத்து விடுமா? என்று கேட்கும் அறிவாளிகள் எல்லாம் மிஸ்டு கால் கொடுத்து நதிகளை இணைக்க முயற்சி செய்தவர்கள் தானே ....!!! #GoBackModi

ஜோன் தாஸ்  

‏#GoBackModi எதிரிகளை கூட வரவேற்போம் ஆனாlல்,  துரோகிகளை...

Vivek Gananathan

நிறமே ஆயுதம்; உடையே கேடயம்.

இது கறுப்பர்நாடு!

DakdIStUQAAJe8jpg
 

Karthik Meka

இந்திய திருடர்களின் சிறந்த பொம்மையான #மோடியேதிரும்பிப்போ

stupid Common Man

‏கறுப்பு கொடியை கூட எதிர் கொள்ள மனமில்லாத அளவுக்கு ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் உள்ளார்..!

prem kanth

வெள்ளம் வந்தபோ காப்பாற்ற வரல. மீனவன சுட்டு கொன்ற போதும் வரல. குரங்கனி தீ பிடிச்சு எரிந்தபோதும் வரல. ஒகி புயலில் சிக்கியவன் பிணத்தை கூட கொண்டு வரல...

இளைய ராஜா

பிரதமர் வருகை. மீண்டும் தமிழர்களின் ஒற்றுமை, உணர்வை உலகறியச் செய்த மோடிக்கு நன்றி.

சிற்பன்

விண்ணிலும் எதிர்ப்பு மண்ணிலும் எதிர்ப்பு..

Riaz

‏என் விவசாயியை உங்கள பாக்க உங்க ஊருக்கு வந்தப்ப மதிக்காத பிரதமருக்கு தமிழ்நாட்ல என்னடா மரியாதை வேண்டி கிடக்குது!  #GoBackModi

http://tamil.thehindu.com/opinion/blogs/article23512023.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.