Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவேந்தலும் அரசின் நிலைப்பாடும்

Featured Replies

நினைவேந்தலும் அரசின் நிலைப்பாடும்

 

யுத்­தத்தில் கொல்­லப்­பட்ட பொது­மக்­களை நினை­வு­கூர்­வ­தற்குத் தடை இல்லை என்று அர­சாங்கம் அறி­வித்­தி­ருப்­பது ஆச்­ச­ரி­யத்­தையே ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது. இருப்­பினும் இது வர­வேற்­புக்­கு­ரிய நிலைப்­பா­டா­கவே கருத வேண்டும். 

யுத்­தத்தில் பொது­மக்கள் எவ­ரையும் இரா­ணு­வத்­தினர் கொல்­ல­வில்லை. பயங்­க­ர­வா­தி­க­ளாக அர­சாங்கத் தரப்­பினால் சித்­தி­ரிக்­கப்­ப­டு­கின்ற விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரா­கவே அவர்கள் யுத்தம் புரிந்­தார்கள். நடந்து முடிந்த யுத்தம் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­ப­ட­வில்லை என்றே அரச தரப்பில் கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்டு வந்­தன. இந்த நிலையில் கொல்­லப்­பட்ட பொது­மக்­களை நினை­வு­கூர முடியும். தடை கிடை­யாது என அமைச்­ச­ரவைப் பேச்­சா­ள­ரா­கிய அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தி­ருக்­கின்றார். 

அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கின்ற செய்­தி­யா­ளர்கள் சந்­திப்­பி­லேயே இந்தக் கருத்தை அவர் வெளி­யிட்­டி­ருக்­கின்றார். அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் என்ற ரீதியில் அவர் கூறி­யி­ருப்­பதை அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாக எடுத்துக் கொள்­வதில் தவறு இருக்க முடி­யாது. யுத்­தத்தில் பொது­மக்­களும் கொல்­லப்­பட்­டி­ருக்­கலாம் என்று ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்­திற்கு ஒப்­பான கருத்­தையும் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தி­ருப்­ப­தையும் கவ­னிக்க முடி­கின்­றது. 

அதே­வேளை, வடக்­கிலும் கிழக்­கிலும் இடம்­பெ­று­கின்ற முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்­வா­னது, புலி­களை நினை­வு­கூர்­வ­தற்­கான செயற்­பாடே என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ள ஜாதிக ஹெல உறு­மய கட்சி அந்தச் செயற்­பா­டுகள் அனைத்­தையும் அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று குரல் எழுப்பி இருக்­கின்­றது. 

ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து உரு­வாக்­கி­யுள்ள நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ஜன­நா­யக வெளியைப் பயன்­ப­டுத்தி வடக்­கிலும் தெற்­கிலும் மே 18 ஆம் திக­தி­யை­யொட்­டிய நிகழ்­வு­க­ளுடன் புலி­களை நினை­வு­கூர்ந்து, மீண்டும் பயங்­க­ர­வாத நிலை­மையை உரு­வாக்­கு­வ­தற்கு அல்­லது ஈழ­வா­தத்­திற்­கான நகர்­வுகள் பல­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன என்று ஹெல உறு­மய கட்சி குற்றம் சுமத்தி இருக்­கின்­றது. இந்த நிலை­மையைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு அர­சாங்கம் உட­ன­டி­யாக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என்று கோரி இருப்­ப­தையும் காண முடி­கின்­றது.

இந்த இரண்டு விட­யங்­களும் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­த­லுக்­கான ஏற்­பா­டுகள் யாவும் பூர்த்தி அடைந்­துள்ள நிலை­யி­லேயே வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

யுத்தத்தில் எண்­ணற்ற பொது­மக்கள் கொல்­லப்­பட்­டார்கள். குறிப்­பாக இறுதி யுத்­தத்­தின்­போது விசு­வ­மடு, உடை­யார்­கட்டு, சுதந்­தி­ர­புரம், புதுக்­கு­டி­யி­ருப்பு, மாத்­தளன், பொக்­கணை, இர­ணைப்­பாலை, வலை­ஞர்­மடம், இரட்­டை­வாய்க்கால், முள்­ளி­வாய்க்கால் உள்­ளிட்ட பிர­தே­சங்­களில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான மக்கள் கொல்­லப்­பட்­டார்கள்.

இந்தக் கொலைச்­சம்­ப­வங்­களில் சிக்கி படு­கா­ய­ம­டைந்­த­வர்­களும், தெய்­வா­தீ­ன­மாக உயிர் தப்­பி­ய­வர்­களும் அந்த சம்­ப­வங்­களின் கண்­கண்ட சாட்­சி­க­ளாக இருக்­கின்­றார்கள். இறுதி யுத்தம் தொடர்­பாக ஐ.நா. செய­லாளர் நாய­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட உண்­மையைக் கண்­ட­றி­வ­தற்­கான குழு நடத்­திய விசா­ர­ணைகள், உள்­ளூரில் அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­க­ப்பட்ட கற்­ற­றிந்த பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்­கத்­துக்­கான விசா­ர­ணைக்­குழு, காணாமல் போனோ­ருக்­கான ஜனா­தி­பதி ஆணைக்­குழு போன்ற குழுக்­களின் விசா­ர­ணை­க­ளிலும் யுத்­தத்­தின்­போது எவ்­வாறு பொது­மக்கள் கொல்­லப்­பட்­டார்கள் என்ற வாக்­கு­மூலத் தக­வல்கள் வெளி­யாகி இருக்­கின்­றன. 

இதை­யும்­விட, சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களின் அறிக்­கைகள், தக­வல்கள் என்­ப­வற்­றிலும் வகை­தொ­கை­யற்ற நிலையில் பொது­மக்கள் கொல்­லப்பட்ட சம்­ப­வங்கள் பற்­றிய விப­ரங்­களும் தக­வல்­களும் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

இறுதி யுத்­தத்­தின்­போது மனித உரி­மைகள் மீறப்­பட்­டி­ருக்­கின்­றன. இரா­ணு­வத்தின் எல்­லை­மீ­றிய செயற்­பா­டு­க­ளினால் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்­களை மீறிய செயற்­பா­டுகள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன என்­பதைச் சுட்­டிக்­காட்டி, ஐ.நா. மனித உரி­மைப்­பே­ர­வையும், சர்­வ­தேச நாடு­களும், உரி­மைகள் மீறப்­பட்­ட­மைக்கு அர­சாங்­கத்தைப் பொறுப்பு கூறு­மாறு வலி­யு­றுத்தி வரு­கின்­றன. 

இந்த பொறுப்பு கூறல் நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் அமெ­ரிக்­காவின் முன்­னெ­டுப்பில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­க­ளுக்கு இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்கி உள்­ளது. பொறுப்பு கூறு­வ­தற்­கான விசா­ர­ணை­களை உரிய முறையில் நடத்­து­வ­தற்­கான பொறி­மு­றை­களை உரு­வாக்கிச் செயற்­ப­டுத்­து­வ­தா­கவும் ஒப்­புதல் தெரி­வித்­தி­ருக்­கின்­றது. 

யுத்­தத்தில் பொது­மக்கள் கொல்­லப்­பட்­டமை, யுத்தச் சூழலில் சிக்­கி­யி­ருந்த பொது­மக்­க­ளுக்கு அவ­சி­ய­மான அடிப்­படைத் தேவை­க­ளான உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் என்­பன மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் இறை­மை­யுள்ள மக்கள் அர­சாங்கம் என்ற அந்­தஸ்தில்  விநி­யோ­கிக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால் அந்தப் பொறுப்பில் இருந்து அர­சாங்கம் தவ­றி­யி­ருந்­தது என்­ப­தையும் உரி­மைகள் மீறப்­பட்­ட­மைக்­கான பொறுப்பு கூறும் விட­யத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. 

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யி­லேயே அமைச்சர் ராஜித சேனா­ரத்ன இறுதி யுத்­தத்­தின்­போது பொது­மக்­களும் கொல்­லப்­பட்­டி­ருக்­கலாம் என்று மேலோட்­ட­மாகக் கூறி­யி­ருக்­கின்றார். இந்தக் கூற்றின் மூலம் அர­சாங்கம் போனால் போகட்டும் இறுதி யுத்­தத்தில் கொல்­லப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­ப­வர்­களை நினை­வு­கூ­ரலாம், அந்தச் செயற்­பாட்டை அவர்கள் செய்து கொண்டு போகட்டும் என்­பது போன்ற தொனியில் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். 

நல்­லி­ணக்கம் ஏற்­ப­ட­வில்லை

ஆட்சி மாற்­றத்­திற்கு முக்­கி­ய­மாகச் செயற்­பட்­ட­வர்­களில் அமைச்சர் ராஜித சேனா­ரத்­னவும் ஒருவர். தமிழ் மக்­க­ளுக்குப் பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. அவர்­க­ளு­டைய உரி­மைகள் மறுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்ற நிலைப்­பாட்­டிற்கு ஆத­ர­வான ஒரு தளத்தில் இருந்து அப்­போது அவர் செயற்­பட்­டி­ருந்தார். அப்­போ­தைய அவ­ரு­டைய கருத்­துக்கள் அர­சாங்­கங்­க­ளினால் தொடர்ச்­சி­யாக மறுக்­கப்­பட்டு வரு­கின்ற அர­சியல் உரி­மை­க­ளுக்காக இடம்­பெற்ற ஆயுதப் போராட்டம் கார­ண­மாக மூண்ட யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் மனங்­களை இத­மாக வருடி இருந்­தன. 

நியா­ய­மான, நீதி­யான ஒரு போக்கில் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன ஆட்சி மாற்­றத்­திற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்றார் என்ற தோற்­றப்­பாடு அந்த மக்­களின் மனங்­களில் ஏற்­பட்­டி­ருந்­தன. ஆட்சி மாற்­றத்­திற்­காக ஏற்­க­னவே ஏங்கிக் கொண்­டி­ருந்த தமிழ் மக்­க­ளுக்கு அமைச்சர் ராஜித சேனா­ரத்­னவின் கருத்­துக்­களும் ஆட்சி மாற்­றத்­திற்­கான முயற்­சி­களும்  அர­சி­யலில் ஒரு மாற்­றத்தைக் கொண்டு வரு­வ­தற்கு உந்து சக்­தி­யாக அமைந்­தி­ருந்­தன என்­று­கூட கூறலாம். 

இந்த வகையில் நாட்டில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தின் பின்னர், தமிழ் மக்கள் மீதான அடக்­கு­முறைச் செயற்­பா­டு­க­ளிலும், இரா­ணுவ மேலா­திக்கப் போக்­கிலும் கணி­ச­மான அளவில் மாற்­றங்கள் நிகழ்ந்­தி­ருக்­கின்­றன என்­பதை மறுத்­து­ரைக்க முடி­யாது. ஆயினும், அரச தரப்­பி­லான மேலா­திக்க சிந்­த­னை­யிலும், தமிழ் மக்கள் மீதான மேலா­திக்கப் போக்­கிலும், ஒரு நீண்­ட­கால யுத்­தத்தின் முடிவில் ஏற்­பட்­டி­ருக்க வேண்­டிய அளவில் மாற்­றங்கள் நிக­ழ­வில்லை என்­ப­தையும் மறுக்க முடி­யாது.

யுத்­தத்தில் அர­சாங்கம் இரா­ணுவ ரீதி­யாக வெற்­றி­ய­டைந்­தி­ருக்­கின்­றதே தவிர, அர­சு­க­ளுக்கும் தமிழ் மக்­க­ளுக்கும் இடை­யி­லான அர­சியல் உரி­மைகள் தொடர்­பான முரண்­பா­டுகள் களை­யப்­ப­ட­வில்லை. பௌதீக ரீதியில் யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டி­ருந்­தாலும் உள­வியல் ரீதி­யி­லான நிழல் யுத்தம் தொடர்ந்து கொண்­டுதான் இருக்­கின்­றது. உரி­மைகள் மறுக்­கப்­பட்டு யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள தமிழ் மக்­களின் மனங்­களை அர­சாங்கம் வெற்றி கொள்ளத் தவ­றி­யி­ருக்­கின்­றது என்­பதும் வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது. 

யுத்தம் முடி­வ­டைந்து ஒன்­பது வரு­டங்கள் கழிந்த நிலை­யிலும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கும் அர­சு­க­ளுக்கும் இடையில் நல்­லி­ணக்கம் ஏற்­ப­ட­வில்லை. சம­ரசம் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை  என்­பதை யுத்­தத்தில் இறந்த தமிழ் மக்­களை நினை­வு­கூ­ரலாம் அதற்குத் தடை இல்லை என்ற அமைச்சர் ராஜி­தவின் மேலோட்­ட­மான கூற்று வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

யுத்­தத்தில் தமிழ் மக்கள் மனி­தா­பி­மா­ன­மற்ற முறையில் நடத்­தப்­பட்­டார்கள். ஆயு­த­மேந்­தி­யி­ருந்த விடு­த­லைப்­பு­லி­களின் செயற்­பா­டு­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே அர­சாங்­கத்­தினால் தீவி­ர­மான இரா­ணுவ நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. இதுவே, அர­சுக்கும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் இடை­யி­லான பெரும் யுத்­த­மாகப் பரி­ண­மித்­தி­ருந்­தது. 

விடு­த­லைப்­பு­லி­களை ஒரு வெளித்­த­ரப்பு எதி­ரியைப் போன்ற கருத்­தி­யலின் அடிப்­ப­டையில் அவர்­களை முற்­றாகக் கொன்­றொ­ழிப்­ப­தற்­கான யுத்தச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து விடு­த­லைப்­பு­லி­களை மோச­மான எதி­ரி­க­ளாகக் கருதி தாக்­கு­தல்­களை பல்­வேறு வடி­வங்­களில் நடத்­தி­யி­ருந்­தது. அதே­நேரம் விடு­த­லைப்­பு­லி­களின் நிழலில் இருந்த தமிழ் மக்­க­ளையும் அரச தரப்­பினர் எதி­ரி­க­ளா­கவே நோக்­கி­யி­ருந்­தனர். அதன் கார­ண­மா­கவே அந்த மக்­க­ளுக்­கான மனி­தா­பி­மான உத­விகள் மறுக்­கப்­பட்டு, உணவும் மருந்­தும்­கூட போரா­யு­த­மாகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.  

இரா­ணுவ வெற்றிக் கொண்­டாட்­டமும் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலும்

யுத்­தத்தில் கொல்­லப்­பட்ட பொது­மக்­களை நினை­வு­கூ­ரலாம். அதற்குத் தடை இல்லை என்ற அர­சாங்­கத்தின் அறி­விப்­பா­னது, இயல்­பா­னதோர் அறி­விப்­பாக வெளி­யி­டப்­ப­ட­வில்லை. மே 18 ஆம் திக­தி­யை­யொட்டி, வடக்கு கிழக்கில் யுத்­தத்தில் ஏற்­பட்ட பாதிப்­புகள் தொடர்பில் ஏற்­பட்­டுள்ள மக்­க­ளு­டைய மன எழுச்சி நிலை­மையை உணர்ந்து, அதனை அனு­ச­ரித்து, அர­சாங்­கமே முன்­வந்து இந்த அறி­விப்பைச் செய்­ய­வில்லை. 

வாரந்­தோறும் நடை­பெ­று­கின்ற அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விப்­ப­தற்­கான செய்­தி­யா­ளர்கள் சந்­திப்பில் வடக்கு கிழக்கு பிர­தே­சங்­களில் மே 18 ஆம் திக­தியை முன்­னிட்டு ஏற்­பட்­டி­ருக்­கின்ற எழுச்­சியைக் குறிப்­பிட்டு செய்­தி­யா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளித்­த­போதே அமைச்சர் ராஜித சேனா­ரத்ன யுத்­தத்தில் தமிழ் மக்கள் கொல்­லப்­பட்­டி­ருக்­கலாம். அவர்­களை நினை­வு­கூர்­வ­தற்குத் தடை இல்லை என கூறி­யி­ருக்­கின்றார் என்­பதைக் கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யது அவ­சியம். 

குறிப்­பாக, முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலை யார் தலைமை ஏற்றுச் செய்­வது, எப்­படி செய்­வது, அதில் யார் யார் எல்லாம் கலந்து கொள்­ளலாம் என்ற பிர­தி­வா­தங்­க­ளுக்கும் செயற்­பா­டு­க­ளுக்கும் மத்­தியில் ஓர் இணக்­கப்­பாடு ஏற்­பட்டு நினை­வேந்தல் நிகழ்வை நடத்­து­வ­தற்கு அனை­வரும் ஒன்­றி­ணைந்து இறுதி ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தி­ருந்த போதே அமைச்சர் ராஜித சேனா­ரத்­னவின் கருத்தும், ஜாதிக ஹெல உறு­ம­யவின் எதிர்ப்­புக்­கு­ரலும் வெளி­யாகி இருந்­தன.

யுத்தம் முடி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து, கடந்த ஒன்­பது வரு­டங்­க­ளாக அர­சாங்கம் யுத்­தத்தில் அடைந்த வெற்­றியை மே 18 ஆம் திகதி கோலா­க­ல­மாகக் கொண்­டாடி வரு­கின்­றது. இந்த நாள், ஒரு தேசிய கொண்­டாட்ட தின­மா­கவே அனு­ச­ரிக்­கப்­ப­டு­கின்­றது. யுத்த வெற்­றியைக் கொண்­டா­டு­கின்ற அரசும் இரா­ணு­வத்­தி­னரும் யுத்­தத்தில் கொல்­லப்­பட்ட இரா­ணு­வத்­தி­ன­ரு­டைய தியா­கத்­திற்கு அதி உன்­ன­த­மான இடத்தை வழங்கி அதற்­கான சம­ய­ச­டங்­குகள் உள்­ளிட்ட காரி­யங்­களைச் செய்­வ­தையும் காண முடி­கின்­றது. 

ஆனால், எதி­ரி­க­ளாக இருந்­தாலும், மனி­தர்கள் ஒரே நாட்டு குடி­மக்கள் என்ற ரீதியில்  யுத்­தத்தில் கொல்­லப்­பட்ட விடு­த­லைப்­பு­லி­களைக் கவ­னத்தில் கொள்­வ­தில்லை. உண்­மை­யான யுத்­த­வெற்­றியில், அந்த வெற்றிக் கொண்­டாட்­டத்­தின்­போது, யுத்­தத்தில் வெற்றி கொள்­ளப்­பட்­ட­வர்­களின் வீரத்­தையும் அவர்­களின் செயற்­பா­டு­களும் நினை­வு­கூ­ரப்­ப­டு­வ­துண்டு. அதுவே யுத்த தர்மச் செயற்­பா­டாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. 

எல்­லா­ளனைத் தோற்­க­டித்த மன்னன் துட்ட கைமுனு, அந்தத் தமிழ் மன்­னனின் வீரத்தைப் போற்­றி­யி­ருந்தான். எல்­லா­ள­னுக்­கென நினைவுச் சின்­னத்தை அமைத்து அந்த வழியில் செல்­ப­வர்கள் அந்த சின்­னத்­திற்கு மரி­யாதை செலுத்­தி­விட்டுச் செல்ல வேண்டும் என்று உத்­த­ர­விட்டு, அதனை நடை­மு­றைப்­ப­டுத்தி இருந்தான். இந்த யுத்தப் பண்பு இந்த நாட்டின் வர­லாற்றில் சிறப்­பான அம்­ச­மாகப் பதி­வி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. இத்­த­கைய உதா­ரணச் செயற்­பாட்டைக் கொண்­டுள்ள பின்­ன­ணி­யி­லேயே யுத்­தத்தில் வெற்­றி­பெற்ற பின்­னரும், எதி­ரி­களை அர­சியல் நோக்­கத்­திற்­காகத் தாழ்த்தி பிர­சாரம் செய்­கின்ற போக்கு கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

யுத்­தத்தை வெற்­றி­கொண்ட அரசும் இரா­ணு­வத்­தி­னரும் மோச­மான எதி­ரிக­ளாகக் கரு­திய விடு­த­லைப்­பு­லி­களை நினை­வு­ப­டுத்­தாத போதிலும், யுத்­தத்தில் கொல்­லப்­பட்ட அப்­பாவிப் பொது­மக்­களை நினை­வு­கூர்ந்­தி­ருக்க வேண்டும். பெண்­களும், குழந்­தை­களும், வயோ­தி­பர்­களும் வகை­தொ­கை­யற்ற விதத்தில் கொல்­லப்­பட்­ட­மைக்­காக ஒரு சம்­பி­ர­தா­ய­மா­க­வா­வது வருத்தம் தெரி­வித்­தி­ருக்க வேண்டும். அதனை அவர்கள் செய்­வதே இல்லை. யுத்­தத்தில் பயங்­க­ர­வா­தி­க­ளான விடு­த­லைப்­பு­லிகள் மட்­டுமே கொல்­லப்­பட்­டார்கள். பொது­மக்­க­ளா­கிய தமிழ் மக்கள் எவ­ருமே கொல்­லப்­ப­ட­வில்லை என்­பதே அர­சாங்­கத்­தி­னதும் இரா­ணு­வத்­தி­னதும் நிலைப்­பா­டாக இருந்து வரு­கின்­றது.

இந்த நிலையில், முதன் முறை­யாக அரச தரப்பில் அமைச்­ச­ரவை முடி­வு­களை வெளி­யி­டு­கின்ற அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ஒருவர் இப்­போ­துதான் யுத்­தத்தில் பொது­மக்கள் கொல்­லப்­பட்­டி­ருக்­கலாம் என கூறி­யி­ருக்­கின்றார். இதனை அரச தரப்பின் யுத்த வெற்றி தொடர்­பி­லான நிலைப்­பாட்டில் ஏற்­பட்­டுள்ள ஒரு சிறிய மாற்­ற­மாகக் கரு­தலாம். இருப்­பினும் முள்­ளி­வாய்க்­காலில் தமிழ் மக்கள் கொல்­லப்­பட்­டதை நினை­வு­கூர்­வ­தற்­காக முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு நடை­பெ­று­கின்ற அதே­தினம் தெற்கில் அர­சாங்க தரப்­பி­னரும் வடக்கு கிழக்குப் பிர­தே­சங்­களில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னரும் இரா­ணுவ வெற்றி தின­மாக மே 18 ஆம் நாளைக் கொண்­டா­டு­கின்­றனர்.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான யுத்தம் முடி­வ­டைந்­து­விட்ட போதிலும், வடக்கு கிழக்கும் நாட்டின் தென்­ப­குதி உட்­பட்ட பிர­தே­சங்­களும் ஒன்­றி­ணை­ய­வில்லை. இரு தரப்­புக்­களும் நேர் முர­ணான ஒரு போக்கில் சென்று கொண்­டி­ருக்­கின்­றன என்ற யதார்த்­தத்தின் அடை­யா­ள­மாகக் காணப்­ப­டு­கின்­றது. ஒரு பக்கம் வெற்­றிக்­கொண்­டாட்டம். மகிழ்ச்சி ஆர­வாரம். மறு­பக்­கத்தில் அதற்கு நேர்­மா­றாக யுத்தத்தில் கொல்­லப்­பட்ட அப்­பாவிப் பொது­மக்­களை நினை­வு­கூர்ந்து ஆற்ற முடி­யாத துய­ரத்தில் உற­வி­னர்கள் அழுது அரற்றி கண்ணீர் சிந்­து­கின்­றனர். ஒரு பக்கம் மட்­டற்ற மகிழ்ச்சியும் மறு­பக்­கத்தில் அள­வற்ற சோகமும் கோலோச்­சு­கின்­றன. சோகத்தின் மத்­தி­யிலும் தமது அர­சியல் உரி­மைக்­காக ஆயுதம் ஏந்திப் போராடி உயிர் நீத்த விடு­த­லைப்­பு­லி­களின் தியா­கத்­தையும் பாதிக்­கப்­பட்ட மக்கள் மதித்துப் போற்­று­கின்­றார்கள். 

நிலைமை முன்­னே­றுமா?

யுத்­தத்தின் பின்னர் நல்­லி­ணக்­கத்தின் ஊடாக இன ஐக்­கி­யத்தை உரு­வாக்­கு­வ­தற்கும், நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­வ­தற்கும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சுகள் கூறி இருக்­கின்­றன. ஆனால் அடிப்­ப­டையில் யுத்தம் முடி­வ­டைந்த தினத்தை நினை­வு­கூர்­வ­தி­லேயே நேர் முர­ண­ான நிலைப்­பாடு நில­வு­கின்­றது. இந்த முரண்­பாட்டில் ஓர் இணக்கம்  எட்­டப்­ப­ட­வில்லை. 

அத்­த­கைய ஒரு நிலை­மையை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அதற்­கான ஒரு சிந்­த­னை­கூட அரச தரப்பில் - மித­வாத சிந்­த­னை­கொண்ட முக்­கி­யஸ்­தர்கள் மத்­தியில் கூட எழ­வில்லை. யுத்த வெற்­றியை வெறு­மனே அர­சியல் நலன்­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்­து­கின்ற மட்­ட­ர­க­மான சிந்­த­னையும், சுய­­நல அர­சியல் போக்­குமே அரச தரப்பில் இன்னும் மேலோங்கி இருக்­கின்­றது. 

இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்­க­ளுக்கும் மனி­தா­பி­மான சட்ட மீறல்­க­ளுக்கும் பொறுப்பு கூறு­வ­தற்­காக நிலை­மா­று­கா­லத்தில் நீதியை நிலைநாட்டி, என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான நிவாரணத்தை வழங்கவும், மோசமான நிலைமைகள் மீண்டும் உருவாகாமல் தடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அரச தரப்பில் கூறப்படுகின்றது. 

ஐ.நா.வினதும், சர்வதேச நாடுகளினதும் வற்புறுத்தல் காரணமாக அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் ஆமை வேகத் திலும் பார்க்க தாமதமாகவே நடை பெறு கின்றன என்ற குற்றச்சாட்டு அரசாங் கத் தின் மீது பல தரப்பினராலும் முன்வைக் கப்பட்டிருக்கின்றது. இத்தகைய ஒரு சூழ லில்தான் யுத்தம் முடிவடைந்த தினம் இருவேறு அடிப்படைகளில் முரண்பட்ட நிலையில் நாட்டில் நினைவுகூரப்படுகின்றது. இந்த நிலைமை ஒரு வகையில் நகைப்புக்கு இடமானது. மறு வகையில் கவலைக்கும் வருத்தத்திற்கும் உரியது. 

கருணையே வடிவான புத்தபெருமானின் வழிகாட்டல் போதனைகளைக் கொண்ட பௌத்த மதத்திற்கு உச்சமான அளவில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில் கருணையும் விட்டுக்கொடுப்பும் நிறைந்த செயற்பாடுகள் முன்னுரிமை பெற்றிருக்க வேண்டும். அதுவே புத்த பெருமானுக்கும் பௌத்த மதத்திற்கும் அளிக்கப்படக் கூடிய அதி முக்கிய கௌரவமாக இருக்க முடியும். ஆனால் நிலைமைகள் நேர்மாறானதாகவே காணப்படுகின்றன. 

யுத்தத்தில் விடுதலைப்புலிகளே கொல் லப்பட்டார்கள். அங்கு பொதுமக்கள் கொல் லப்படவில்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில் உண்மையை மறைக்கின்ற செயற்பாட்டில் ஒரு சிறிய மாற்றத்தைக் காட்டியுள்ள அரச தரப்பின் நிலைப்பாடு கடந்த வருடத்திலும் பார்க்க சிறு முன்னேற்றத்தைக் கண்டிருக்கின்றது என்றே கூற வேண்டும்.

யுத்தத்தின் பின்னர் ஒன்பதாவது ஆண்டில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் உண்மையிலேயே அரசாங்கத் தரப்பின் விசுவாசமாக மாற்றமடைய வேண்டும். அடுத்த வருடம் வரப்போகின்ற  பத்தாவது மே 18 ஆம் நாளில் இந்த மாற்றம் இன்னும் சிறப்பான மாற்றமாக முன்னேற்றம் அடைய வேண்டும்.  அது நடக்குமா என்பதைப் பார்ப்பதற்குப் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-05-19#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.