Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் விமானத்தாக்குதல் பாரதூரமான அச்சுறுத்தல் அதனை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்திரிகை ஆசிரியர்கள் மத்தியில் ஜனாதிபதி

கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் கடந்த திங்கட்கிழமை அதிகாலை நடத்திய விமானத் தாக்குதல் பாரதூரமான அச்சுறுத்தலைத் தோற்றுவித்திருக்கிறது என்று தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, அந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராயிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

விமானப்படைத்தளம் மீதான தாக்குதலையடுத்து தோன்றியிருக்கும் பாதுகாப்பு நெருக்கடி நிலைவரம் குறித்து பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் தலைவர்களுக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு அலரிமாளிகையில் விளக்கமளித்த ஜனாதிபதி ராஜபக்‌ஷ, `அரசியல் வேறுபாடுகளை அரசியல் களத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும். தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சகலரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். முப்படைகளினதும் தைரியத்தை மலினப்படுத்தக்கூடிய முறையில் ஊடகங்கள் செயற்படக்கூடாது. தேசிய பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் ஊடகங்கள் செயற்படுமானால், அவை ஊடக சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகின்றன என்பதே அர்த்தம்' என்று சொன்னார்.

`விமானப்படைத்தளம் மீதான தாக்குதலையடுத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நான் நேற்றைய தினம் ஆராய்ந்தேன். 13 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அச் சந்திப்பில் பங்கேற்றனர். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை அழைக்கவில்லை என்று கூறப்படுவது தவறானது. ஐ.தே.க.வினருக்கும் நாம் அழைப்பு விடுத்திருந்தோம். அவர்களின் வருகைக்காக ஒரு மணி நேரம் நாம் காத்திருந்தோம். ஆனால், இறுதி நேரத்தில் ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன எனது செயலாளருடன் தொடர்பு கொண்டு முன்கூட்டியே திட்டமிட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் தங்களால் அலரிமாளிகைச் சந்திப்புக்கு வர முடியவில்லை என்று அறிவித்திருந்தார். அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு தேசிய பாதுகாப்புக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்' என்று ஜனாதிபதி கூறினார்.

`விடுதலைப் புலிகளிடம் விமானத்தாக்குதலை நடத்தக்கூடிய வசதிகள் இருப்பது குறித்து எமக்கு முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தன' என்று கூறிய ஜனாதிபதி ராஜபக்‌ஷ, "அதன் காரணத்தினால் தான் பதுங்குகுழிகளை நாம் அமைக்கின்றோம் என்று செய்திகள் வெளியாகி சர்ச்சைகளும் உருவாக்கப்பட்டன' என்று சிரித்துக் கொண்டே தெரிவித்தார்.

இச் சந்திப்பின் போது ஜனாதிபதியுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர், நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜெயசுந்தர, ஊடகத்துறை தகவல் அமைச்சர் அநுரா பிரியதர்ஷன யாப்பா, ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சந்தேகத்துக்கு இடமான வானூர்திகள் ஏதாவது தென்பட்டால் 116 என்ற இலக்கத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விமானப்படைக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதியும் கோதாபய ராஜபக்‌ஷவும் பத்திரிகை ஆசிரியர்களையும் இலத்திரனியல் ஊடகங்களின் தலைவர்களையும் கேட்டுக் கொண்டனர்.

சர்வகட்சி மகாநாட்டு செயற்பாடுகளுக்கு பாதிப்பில்லை

விடுதலைப்புலிகளை முற்றுமுழுதாக ஒழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சர்வகட்சி மகாநாட்டின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாதா என்று பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேட்டபோது, அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ராஜபக்‌ஷ பின்வருமாறு கூறினார்.

`சர்வகட்சி மகாநாட்டின் செயற்பாடுகளுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாது. எமது கட்சியின் செயலாளர் சுகவீனமுற்றிருக்கிறார். அவர் சுகமடைந்து கடமைகளுக்கு வந்ததும் கட்சியின் மத்தியகுழுவைக் கூட்டி எமது தீர்வு யோசனைகளை முன்வைக்கவிருக்கிறோம். அதன் பின்னர் சர்வகட்சி மாநாடு அந்த யோசனைகளை விவாதித்து தீர்வுத் திட்டமொன்றை வகுக்கும். சர்வகட்சி மகாநாட்டின் செயற்பாடுகளை தற்போதைய பாதுகாப்பு நிலைவரம் எந்தவகையிலும் பாதிக்காது'.

முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சியின் கைது விவகாரத்துக்கு பின்னணியில் நீங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறதே என்று கேட்கப்பட்டபோது, `ஆட்கள் அதிகாரத்தை இழக்கும் போது அவர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் கிளம்புகின்றன. பதவியில் இருந்த வேளையில் ஹெல்பிங் அம்பாந்தோட்டை விவகாரம் தொடர்பாக விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. பல வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அரசாங்க வாகனத்தை துஷ்பிரயோகம் செய்தமைக்காக சூரியாராச்சி கைது செய்யப்பட்டிருக்கிறார். என்னுடன் முரண்பட்டுக் கொள்வதற்கு முன்னர் இடம்பெற்ற துஷ்பிரயோகம் அது. கைது விவகாரத்தின் பின்னணியில் நான் இருப்பதாகக் கருதுவது தவறானது. அவர்கள் மீது எனக்கு எந்தக் குரோதமும் இல்லை. திங்கட்கிழமை கட்டுநாயக்க விமானப்படைத்தளம் தாக்குதலுக்குள்ளான போது, மங்கள சமரவீர விமான நிலையத்தில் இருந்தார். அவரது பயணம் தாமதமாகியது. அவருடன் தொடர்பு கொண்டு பாதுகாப்பு நிலைவரம் குறித்துத் தெரிவித்தேன். சிங்கப்பூருக்கு மங்களவுடன் செல்லவிருந்த தாயாரிடமும் நான் விசாரித்ததாகக் கூறும்படி தெரிவித்தேன்' என்று பதிலளித்தார்.

ஆட்கடத்தல் மற்றும் ஆட்கள் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்பாக விளக்கமளித்த ஜனாதிபதி, 2006 செப்டெம்பர் 14 தொடக்கம் 2007 பெப்ரவரி 26 வரை சில பொலிஸ் பிரிவுகளில் இருந்து ஆட்கள் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பான விபரங்களைத் தெரிவித்தார்.

www.thinakkural.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.