Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதநேயப் பணியாளர்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த பணிக்குமாறு மகிந்தவிடம் த.பு.க வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதநேயப் பணியாளர்களுக்கு எதிரான தாக்குதலை உடன் நிறுத்தப் பணிக்குமாறு தமிழர் புனர்வாழ்வுக்கழகம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பிலான கடிதத்தை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் சிவனடியார் அனுப்பியுள்ளார்.

மனிதநேயப் பணியாளர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற மாபெரும் கண்டனப் பேரணியின் நிறைவின் போதே மகிந்த ராஜபக்சவுக்கான கடிதம் கையளிக்கப்பட்டது.

அக்கடிதத்தின் முழு விவரம்:

29.03.2007.

திரு.தி.இராசநாயகம் அவர்கள்,

அரச அதிபர்,

கிளிநொச்சி ஊடாக,

மாண்புமிகு சனாதிபதி திரு. மகிந்த ராஜபக்ச,

சனாதிபதி செயலகம், கொழும்பு.

ஜயா!

மனித நேயப் பணியாளர்களுக்கு எதிரான தாக்குதலை உடன் நிறுத்தப் பணிக்குமாறு வேண்டுகை

கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இந்நாட்டில் மனிதநேயப் பணி முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருவதை தாங்கள் உட்பட முழு உலகமே அறியும். காலத்திற்குக் காலம் அனர்த்தங்கள் இடம்பெறும் பொழுதெல்லாம், மனிதநேயப்பணி ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு பாதிப்புற்ற மனித உயிர்களின் அவலங்களை, இழப்புக்ளை, முற்றாக ஈடுசெய்ய முடியாவிட்டாலும் கூட, ஒத்தடம் கொடுக்கின்ற, கைதூக்கி விடுகின்ற, முன்னேற்றத்திற்கான வழிகளைக் காட்டி நிற்கின்ற சேவையினை மனித நேய அமைப்புகள் வழங்கி வந்தன வருகின்றன.

இப்பணியினைக் கடமையாகவும் தொண்டாகவும் ஏற்று இந்த மனித சேவையின் சுட்டிகளாய் பாதிக்கப்பட்டோரின் உள்ளத்தில் உருவாகும் ஆறுதலையும் நம்பிக்கையையும் மகிழ்சியையும் அறுவடையாகப் பெறுவதில் திருப்தி காண்கின்ற மனிதநேய அமைப்புக்களின் சுயாதீனமான, வகை சொல்லக்கூடிய, வெளிப்படையான செயற்பாடுகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து வந்த இந்தத் தேசம் இப்போது இப்பணியில் உள்ளவர்கள் பல புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது.

இது தொடர்பில் மனிதநேயப் பணி செய்பவர்களுக்கு எதிராக கடந்த சனி (24.03.2007) மன்னார்ப் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதல் எம்மைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சர்வதேசம் எங்கும் பல்வேறுபட்ட மனிதநேய அமைப்புக்கள் உருவாக்கம் பெற்று, மாறுபட்ட சூழல்களில் சேவை செய்து கொண்டிருந்தாலும் ஓப்பீட்டு ரீதியாக மிகக் குறைந்த அழுத்தங்கள், அச்சுறுத்தல்களையே கடந்த காலங்களில் இலங்கையில் அவர்கள் எதிர்கொண்டார்கள். ஆனால் தற்போது சொல்லொணா இன்னல்களையும் இடர்களையும் இவர்கள் எதிர்கொள்கிறார்கள்.

பொதுவாக உதவி செய்யும் மனப்பாங்கு என்பது தட்டிக் கொடுக்கப்பட வேண்டிய ஒன்றேயன்றி தடுத்து நிறுத்தப்படுவதற்கல்ல என்பதைத் தாங்களும் ஏற்றுக் கொள்வீர்கள். சிறிய ஒரு அபிவிருத்திக்குக்கூட பிற நாட்டு உதவிகளையே எதிர்பார்த்து நிற்கும் இலங்கைத்தீவு அங்ஙனம் பெறப்படும் நிதியின் அதி உச்சப்பயனைப் பெற வேண்டிய, பெறக்கூடிய வகையில் தனது சூழலை வைத்திருக்க வேண்டியதே யதார்த்த உண்மையாகும்.

ஆனால் அண்மைக்காலங்களில் மனிதநேய அலுவலகங்கள் தாக்கப்படுவதில் இருந்து ஆரம்பித்து, சுயாதீனமாகச் செய்யவிடாது தடுத்தல், உள்ளீடுகளை உரிய காலத்தில் பெறுவதைத் தாமதித்தல் போன்ற செயற்பாடுகளைப் "பாதுகாப்பு நடவடிக்கை" என்ற பதத்தின் கீழ் தொடர்ச்சியாகப் பாதுகாப்புப் படைகளும் அவர்கள் ஆதரவில் இயங்கும் குழுக்களும் மேற்படி மனிதநேயப் பணி அமைப்புக்களுக்கு எதிராகப் புரிந்து வருகின்றன. அத்தகு சில நிகழ்வுகள் கீழே தரப்படுகின்றன.

24 மார்ச் - 2007 பெரியமடு, மன்னாரில் இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்தோருக்கான நிவாரண வேலைகளைச் செய்த த.பு.க பணியாளர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர்த் தாக்குதலுக்கு அனர்த்த முகாமைத்துவப் பிரிவைச் வாகனச் சாரதி கொல்லப்பட்டதோடு 4 நடுவப் பணியக, பிரதேசப் பணிப்பாளர்கள் கடும் காயங்களுக்கு உள்ளாகினர்.

8 நவம்பர் 2006 கதிரவெளி, மட்டக்களப்பு த.பு.கழகம் பராமரித்த இடம்பெயர்ந்தோர் முகாமும் சொனபோ சிறுவர் இல்லமும் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியது. 47 பொதுமக்கள் கொல்லப்பட்டு 136 பேர் காயப்பட்டனர். 17 இல்லச் சிறுவர்கள் காயமடைந்தனர்.

23 ஓகஸ்ட் 2006. த.பு.க யாழ்ப்பாணப் பணிமனை ஆயுதப்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டது.

15 ஓகஸ்ட் 2006. அம்பாறை நகரம் - த.பு.கவின் நெக்கோட் பணிமனை சுடப்பட்டு, கிரனேட் வீசப்பட்டுத் தாக்கப்பட்டது.

4 ஓகஸ்ட் 2006. "அக்சன் எகேன்ஸ்ற் கங்கர்" (Action Against Hunger) என்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் 17 பணியாளர்கள் மூதூரில் அரச படைகளால் கொல்லப்பட்டனர்.

15 யூலை 2006. ஆயுதப்படையினரின் சோதனைச் சாவடி 100 மீற்றர் தொலைவில் இருக்கும்போது த.பு.க யாழ்ப்பாணப் பணிமனை பகல்வேளை கிரனேட் வீசப்பட்டுத் தாக்கப்பட்டது.

25 மே 2006: சோஆ (ZOA) என்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் பணிமனை குண்டு எறிந்து தாக்கப்பட்டது. ஒரு பணியாளர் காயமடைந்தார். அதே நாள் யாழ்ப்பாணத்தில் கண்ணி வெடியகற்றும் நிறுவனமான "கலோ ட்ரஸ்ரின்" பணிமனை இராணுவத்தால் தாக்கப்பட்டது.

26 ஏப்ரல் 2006. திருகோணமலையில் மக்கள் குடியிருப்புக்கள் எறிகணைத் தாக்குதலுக்கும் வான் தாக்குதலுக்கும் உள்ளாகியது. த.பு.கழகம் பராமரித்த சந்தோசம் சிறுவர் இல்லமும் கட்டைப்பறிச்சான், ஈச்சிலம்பற்று த.பு.கழகப் பணிமனைகளும் சேதத்திற்குள்ளாயின.

29, 30 சனவரி 2006: வெலிகந்த பொலனறுவ - 7 த.பு.கழகப் பணியாளர்கள் அரச படையாலும் அதன் ஆதரவுக் குழுவாலும் கடத்தப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

7 ஓகஸ்ட் 2003, 13 யூன் 2005, 27 செப்டம்பர் 2005: த.பு.கழகம் 3 தடவைகள் இயந்திரத் துப்பாக்கிகளாலும் கிரனேட்டுகளாலும் தாக்குதலுக்குள்ளாகியது. 5 வாகனங்கள் சேதமாகின. 2 பணியாளர்கள் காயமடைந்து ஒரு காவலாளி கொல்லபட்டார்.

மேலே பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க நிகழ்வுகளோடு, இதில் குறிப்பிடாத சிறு சிறு நிகழ்வுகள் பலவும் ஒன்று சேர்ந்து "எதிர்காலத்தில் மனிதநேயப்பணி சாத்தியமானதா?" என்கின்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

ஆதரவு கொடுக்க வேண்டியவர்களே ஆபத்தை விளைவிக்கின்ற செயற்பாட்டினைச் செய்கின்றார்கள் என்பதை இங்கு மனிதநேயப் பணியில் ஈடுபட்டுள்ள ஓவ்வொருவரும் உணரத்தலைப்பட்டுள்ளார்கள். இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டுமென்பதே மனிதநேய அமைப்புக்களின் பொதுவான விருப்பமாகும். இவ்விருப்பினை நிறைவேற்றும் அதிகாரமும் கடமையும் இலங்கை சனாதிபதி என்ற ரீதியில் உங்களுக்கே உரித்தானதாகும்.

ஆன காரணத்தினால் மனித நேயப்பணியில் எவர் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுக்கான பூரண பாதுகாப்பு உட்பட சாத்தியமான ஒத்துழைப்பைத் தொடர்ச்சியாக வழங்குவதற்குரிய அறிவுறுத்தல்களையும் பணிப்புக்களையும் எல்லா மட்டத்திலான பாதுகாப்பு படையினருக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் வழங்கிப் பழைய சுமூகமான சூழலை மனிதநேயப்பணிக் களத்திற்கு உருவாக்கித் தருவதன் மூலம், தொடர்கின்ற மனித நேயப்பணிக்கு எதிரான செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வர உதவுமாறு மனித நேயப்பணி செய்கின்ற அமைப்புக்கள் சார்பில் தங்களை வேண்டி நிற்கின்றோம்.

நன்றி,

இங்ஙனம்,

வே.சிவனடியார்,

தலைவர், த.பு.கழகம்

பிரதிகள்:

1. ஐ.நா. செயலாளர் நாயகம், மாண்புமிகு, திருவாளர் பான் கீ முன்

2. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, ஜெனீவா, சுவிற்சலாந்து

3. சர்வதேச மன்னிப்புச் சபை, ஐக்கிய இராட்சியம்

4. மனித உரிமைகள் அவதான மையம் ஆசியா (Human Rights Watch Asia)

5. மனித உரிமைகள் ஆணையகம் - கொழும்பு

6. இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் - திருவாளர் றணில் விக்ரமசிங்க

7. தமிழீழ விடுதலைப் புலிகள் - சமாதானச் செயலகம், கிளிநொச்சி

8. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஜெனீவா, சுவிற்சலாந்து

9. ஐ.நா. அகதிகள் உயர் ஸ்தானிகராலயம், ஜெனீவா, சுவிற்சலாந்து

10. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு - தலைமைப் பணிமனை, கொழும்பு

11. வடக்குகிழக்கு மாகாண மனித உரிமைச் செயலகம் - கிளிநொச்சி

12. இந்திய, யப்பான், அமெரிக்க, ஐக்கிய இராட்சிய, யேர்மன், பிரான்ஸ், நோர்வே, இத்தாலி தூதுவராலயங்கள் - கொழும்பு

http://www.eelampage.com/?cn=31278

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.