Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சினிமா விமர்சனம் - தமிழ்படம்-2

Featured Replies

சினிமா விமர்சனம் - தமிழ்படம்-2

சினிமா விமர்சனம் - தமிழ்படம்-2படத்தின் காப்புரிமைY NOT STUDIOS

2010ஆம் ஆண்டில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற 'தமிழ் படம்'-ன் இரண்டாம் பாகம். முதல் படத்தைப் போலவே, கதைக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல் சினிமா காட்சிகளை கேலிசெய்வதையே பிரதானமாகக் கொண்ட படம்தான் இதுவும்.

   
திரைப்படம் தமிழ் படம் -2
   
நடிகர்கள் சிவா, சதீஷ், கலைராணி, ஐஸ்வர்யா மேனன், திஷா பாண்டே, சந்தான பாரதி, ஆர். சுந்தரராஜன், மனோபாலா, சேத்தன், நிழல்கள் ரவி
   
இசை கண்ணன்
   
ஒளிப்பதிவு கோபி அமர்நாத்
   
இயக்கம் சி.எஸ். அமுதன்
   
   

அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே இரண்டு கிராமங்களுக்கு இடையில் நடக்கவிருக்கும் பெரிய கலவரத்தை, மொக்கையாக வசனம் பேசியே நிறுத்துகிறார் சிவா (சிவா). இதற்குப் பிறகு அவர் காவல்துறையில் துணை ஆணையராக வேலைக்குச் சேர்கிறார். அப்போது அவருடைய மனைவி ப்ரியா (திஷா பாண்டே), 'பி' (சதீஷ்) என்பவன் அனுப்பிவைத்த மொபைல் போன் வெடித்து இறக்கிறார்.

மிகப்பெரிய தாதாவான 'பி'யைப் பிடிப்பதற்காக, பணியிலிருந்து நீக்கப்பட்டதைப்போல நடிக்கிறார். முடிவில் 'பி'ஐக் கொல்கிறார். ஆனால், 'பி' சாகாவரம் பெற்றவன் என்பதால் திரும்ப வருகிறான். அதனால் ஒரு கடிகாரத்தின் உதவியால் பி சாகாவரம் பெற்ற காலத்திற்கே போய், அவனுக்கு சாகாவரம் கிடைக்காமல் செய்கிறார். பிறகு அவனை முறியடிக்கிறார். இதற்கு நடுவில் ரம்யா (ஐஸ்வர்யா மேனன்) என்ற பெண்ணுடன் காதல். முடிவில் துணை ஆணையராக பதவி உயர்வு பெறுகிறார் சிவா.

மேலே சொன்ன கதை என்பது படத்தின் காட்சிகளை இணைப்பதற்கான ஒரு கண்ணி மட்டுமே. மற்றபடி தமிழில் இதுவரை வெளிவந்த, வெளிவராத, ஹாலிவுட்டில் வெளிவந்த படங்களின் காட்சிகளை சகட்டு மேனிக்கு கலாய்த்திருக்கிறார் அமுதன். ஹாலிவுட்டில் இம்மாதிரியான Spoof வகைத் திரைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்தாலும் தமிழில், இவை ஒரு அரிய ரகம்.

கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களின் காட்சிகளை கேலி செய்கிறது இந்தப் படம். இன்னும் வெளியாகாத ரஜினிகாந்தின் 2.0 படம் வரை கேலிசெய்திருக்கிறார்கள். சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப், காட் ஃபாதர் போன்ற ஹாலிவுட் படங்களைக்கூட விட்டுவைக்கவில்லை.

அதேபோல ரஜினிகாந்தில் துவங்கி, அஜீத், விஜய், எம்.ஜி.ஆர்., டி. ராஜேந்தர் வரை யாரும் தப்பவில்லை. ஏன், நரேந்திர மோதியே 'மித்ரோன்' என்றபடி ஒரு காட்சியில் கலாய்க்கப்படுகிறார். டிவி சேனல்களைக்கூட விட்டுவைக்கவில்லை.

சினிமா விமர்சனம் - தமிழ்படம்-2படத்தின் காப்புரிமைY NOT STUDIOS

படத்தின் நாயகன் சிவா, முதல் படத்தைப் போலவே இந்தப் படத்திலும் புகுந்து விளையாடியிருக்கிறார். சிவா இல்லாமல் இந்தப் படத்தைக் கற்பனைகூட செய்துபார்க்க முடியாது. அவர் வசனங்களைப் பேசும் விதமும், மற்ற நடிகர்களைப் போல நடிப்பதும் தற்போதைய நடிகர்களில் வேறு யாராலும் இவ்வளவு ரசிக்கும்படி செய்ய முடியாது.

திஷா பாண்டே ஒரு காட்சியில் வந்து இறந்துபோய்விடுகிறார். ஐஸ்வர்யா மேனனுக்கு இந்தப் படம் ஒரு நல்ல அறிமுகத்தை அளிக்கக்கூடும்.

வில்லனாக வரும் சதீஷ், படம் நெடுக வந்தாலும் பெரிய அளவில் சிரிப்பு மூட்டவில்லை.

 

 

முதல் படத்தைப் போலவே இரண்டாவது படத்திலும் கதை மிக பலவீனமாகவே இருக்கிறது. பல படங்களைக் கலாய்க்கும் காட்சிகளை ஒன்றாகச் சேர்ப்பதற்கான நூலாகவே கதை என்ற வஸ்துவைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தவிர, இந்தப் படத்தை முழுமையாக ரசிக்க வேண்டுமென்றால், இதில் கலாய்க்கப்படும் படங்களில் பாதிப் படங்களையாவது பார்த்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், இப்படி ஒரு காட்சி ஏன் வருகிறது என்பதே புரியாது.

படத்தின் இரண்டாவது பாதியில் வரும் ஃப்ளாஷ் பேக் காட்சிகளும் அவ்வளவு சுவாரஸ்யமில்லாதவை.

ஆனால், வாய்ப்புக்கிடைத்தால் யாரையும் கேலி செய்து ரசிக்கும் இந்த காலகட்டத்தின் ஒரு சிறந்த பதிவாக இந்தப் படம் விளங்கக்கூடும்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-44804482

  • தொடங்கியவர்

விஜய்-முருகதாஸ், அஜித்-சிவா, சூர்யா-கெளதம் காம்போ வரிசையில் சிவா-அமுதன்! `தமிழ்ப் படம் 2' விமர்சனம்

 
 

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ், அஜித் - சிறுத்தை சிவா, சூர்யா - கௌதம் மேனன் வரிசையில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கூட்டணி சிவா - சி.எஸ்.அமுதன் கூட்டணி! இந்த முறை ஜெயித்து இருக்கிறதா?

விஜய்-முருகதாஸ், அஜித்-சிவா, சூர்யா-கெளதம் காம்போ வரிசையில் சிவா-அமுதன்! `தமிழ்ப் படம் 2' விமர்சனம்
 

ரு கின்னம் கதையை எடுத்துகிட்டு ரொம்ப ஷார்ப்பாகவும் இல்லாம ரொம்ப மொக்கையாகவும் இல்லாம பொதுவா ஒரு திரைக்கதையை ரெடி பண்ணி, நாலு கௌதம் மேனன் படங்களை எடுத்துகிட்டு பொடிப்பொடியா நறுக்கி அப்படியே பரபரன்னு தூவிவிட்டு, விஜய்-அஜித் படங்களை எடுத்து அதை நீளம், நீளமா வெட்டி அப்படியே பரபரன்னு தூவிவிட்டு, 16 கரண்டி அரசியல் அலப்பறைகளை எடுத்து உள்பக்கம் ஆறு கரண்டி, வெளிப்பக்கம் 10 கரண்டி அப்படியே வெழாவிவிட்டு, இவ்வளவு ஹாலிவுட் படங்களை எடுத்து மழைச்சாரல் மாதிரி மேலாப்ல பெய்யவிட்டு, பொத்துனாப்புல அப்படி ஒரு பிரட்டு இப்படி ஒரு பிரட்டு பிரட்டி கலகலன்னு ஒரு ஊத்தாப்பம் படைச்சிருக்கு `தமிழ்ப் படம் 2' டீம். ஏன் இப்படி சம்பந்தமேயில்லாம எழுதியிருக்கோம்னு நேரம் வரும்போது சொல்றோம். 

தமிழ்ப்படம் 2

`அகில உலக சூப்பர் ஸ்டார்' என டைட்டில் கார்டு போடுவதில் ஆரம்பித்து எண்ட் கார்டில் `யார்றா அவன்' என வசனம் பேசியதுவரை, ஒட்டுமொத்த படத்தையும் பாகுபலியைப்போல் தோளில் தூக்கி சுமந்திருக்கிறார் சிவா. படத்தின் ஓப்பனிங்கில் `தேவர்மகன்' ஃபன்க் கமல் கெட்டப்பில் வந்து லந்து கொடுப்பவர், இடையில் வேறு கெட்டப்புக்கு மாறி பின் மீண்டும் க்ளைமாக்ஸில் `கடைசியில என்னையும் நடிக்க வெச்சுட்டீங்களே' என அதே `தேவர்மகன்' மீசை கமல் கெட்டப்பில் வந்து கண் கலங்குகிறார். இதன் மூலம் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறார் சிவா. இந்தப் படத்தில் `தசாவதாரம்' கமலைவிட அதிக கெட்டப் போட்டிருக்கிறார் சதீஷ். அவர்தான் இந்தப் படத்தின் வில்லன், `மிஸ்டர் P'. `அந்நியன்' விக்ரம், `எந்திரன்' ரஜினியில் ஆரம்பித்து `நூறாவது நாள்' சத்யராஜ் வரை அவரும் தன் பங்குக்கு பலரை ஊறப்போட்டு கலாய்த்திருக்கிறார். உங்க கேரியர்ல இது முக்கியமான படம் ப்ரோ. ஏன்னா, நீங்க பண்ற காமெடிக்கு சிரிப்பு வருது. சிவாவின் பாட்டியாகக் கலைராணி, காவல்துறை அதிகாரியாக சேத்தன், நிழல்கள் ரவி எல்லோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். `இளம் நடிகர்கள்’ மனோபாலா, சந்தானபாரதி மற்றும் ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரின் நடிப்பும் நச். ஐஸ்வர்யா மேனனுக்கு தமிழ் ரசிகர்களின் சார்பாக நல்வரவு. நடிப்பில் நவரசத்தையும் புளிப்பு, காரம் குறைவின்றி முகத்தில் கொண்டுவருகிறார். 

 

 

முதல் பாகத்தில் போலீஸாக இருந்த சிவா, இந்தப் பாகத்தில் காவல்துறை அவர் காலில் விழுந்து மண்றாடியும் `நான் போலீஸ் வேலைக்கு வர மாட்டேன்' என அடம்பிடிக்கிறார். பின்னர், தன் மனைவியை வில்லன் ‘P' டெட்மி மொபைலைக் கூரியரில் அனுப்பி கொல்ல, வில்லனை பழிவாங்கும் வெறியோடு மீண்டும் காவல்துறையில் இணைகிறார். வில்லனை ஹீரோ பழிவாங்கினாரா என்பதே மீதிக்கதை. கதையின் இடையில் ஒரு குழப்பம் வருகிறது, அதை சிவாவே மக்களுக்கு எடுத்துச் சொல்லி குழப்பத்திலிருந்து தெளிவடையச் செய்கிறார்.

 

 

தமிழ்ப்படம் - 2

கமிஷனர் பேர் ஏழுச்சாமி, பேட்டியெடுப்பவை HBO, டிஸ்கவரி, ஸ்டார் சேனல்கள், டீக்கடையில் croissant வகையறா பலகாரங்கள், ‘ஏழாமலே’ பாடல் என்று கிடைத்த இடத்தில் எல்லாம் பொளேர் என உடைத்தும் அதேநேரம் பொத்திப் பொத்தி வைத்தும் காமெடி செய்திருக்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். சிவாவைத் தவிர வேறு யாரையும் இந்த ரோலில் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. உண்மையில், அவர் அகில உலக சூப்பர் ஸ்டார்தான். ஹாலிவுட் பட வில்லனில் தொடங்கி தேவர்மகன் பட வில்லன் வரை ஒவ்வொரு சீனுக்கும் ஒவ்வொரு வில்லன் கெட்டப்பில் வந்து அப்ளாஸ் அல்லுகிறார் சதீஷ். சிவாவுக்கு ஏற்ற ஜோடியாக சதீஷ் நிறைவு. என்ன சதீஷுக்கு நடிக்கத் தெரியவில்லை, சிவாவுக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியவில்லை. பரவாயில்லை சமாளிச்சுக்கலாம்.

கலை இயக்குநர் செந்தில் ராகவன் சின்னச் சின்ன விஷயங்களில்கூட கவனிக்க வைக்கிறார். இசை, ஏதோ ஒரு பாடலின் சாயலிலும் இருக்க வேண்டும், அதே சமயம் ஒரிஜினலாக ரசிகரைக் கவரவும் வேண்டும் என்ற சவாலை ஜஸ்ட் லைக் தட் கையாண்டு கைதட்டல் பெறுகிறார் இசையமைப்பாளர் கண்ணன். அதுவும் அந்தக் க்ளைமாக்ஸ் சாங்கில், இரு ஆண்கள் பரதமாடும் -  பாடலும் இசையும் லயிக்கச் செய்கிறது. பாடலின் வரிகளும் காட்சியமைக்கபட்ட விதமும் குபீர் ரகம்.

தமிழ்ப்படம் - 2

லாஜிக் தேவை இல்லாத படம் என்றாலும், பார்வையாளர்களுக்குக் கேள்விகள் உண்டாகிற இடங்களை ஹைலைட் செய்து அதையும் ஒரு காமெடியாக மாற்றிய விதம் அருமை. மனோபாலா உயிரோடு அடுத்த காட்சியில் வருவது, டைம் டிராவலில் 14-ம் நூற்றாண்டுக்குப் போகும்போது தாடியில்லாத கெட்-அப்பில் போவது எனப் பல இடங்களைக் குறிப்பிடலாம்.

கதை போல ஏதோ ஒன்று இருக்கிறது; ஆனால் என்ன கதை என்பதுதான் புரியவில்லை என்பது படத்தின் குறை. ஆனால், அதையும் தமிழ்ப் படங்களின் ஸ்பூஃப் என்பார்கள்போல. கலாய்க்கப்படும் படங்களின் மூட்-ஐ இன்னும்கூட நெருக்கமாகக் கொண்டுவந்திருக்கலாம். முந்தைய பார்ட்டில் எவர்கிரீன் ஸ்பூஃபாக பல காட்சிகள் இருந்தன. இதில் பலவும் டிரெண்டிங்கான, அரசியல் ஸ்பூஃபாக இருக்கின்றன. அதனால், பார்த்ததும் சட்டென சிரித்துவிடுவீர்கள். சட்டென மறந்தும் விடுவீர்கள்.

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ், அஜித் - சிறுத்தை சிவா, சூர்யா - கௌதம் மேனன் வரிசையில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கூட்டணியான சிவா - சி.எஸ்.அமுதன் கூட்டணி, சிரிப்புக்கு நாங்க கேரண்டி என மீண்டும் சொல்லியடித்திருக்கிறது.

https://cinema.vikatan.com/movie-review/130649-thamizh-padam-2-movie-review.html

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: தமிழ்ப்படம் 2 - சிரிப்புக்குப் பஞ்சம் இல்லை!

 

 
maxresdefaultjpg

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, சதீஷ், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடிப்பில் 'தமிழ்ப்படம் 2' இந்த வாரம் வெளிவந்துள்ளது.  இப்படத்தை பற்றிய கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில் .....

Hasan Kalifa

 

‏தமிழக அளவிலான காலாவின் வசூலை, இந்தப் படம் முறியடிக்க வாய்ப்பு அதிகமிருக்கிறது.

Jhona

‏உனக்கு நடிக்கத் தெரியாது!!!

எனக்கு நடிப்புன்னாலே என்னன்னு தெரியாது!!!!

Prem PRO

‏இது படம் இல்ல வருங்கால படங்களுக்கு ஒரு பாடம்  

Happyness for all     

‏வேதாளம், விவேகம் படம் மட்டும் இல்லன்னா தமிழ்ப்படம்2 படு மொக்கையா இருந்திருக்கும். #Tamilpadam2 சுமார்.

கிங்மேக்கர் ..♔

‏பர்ஸ்ட் ஆஃப் ஓகே.. சில இடங்கள்ல போர்.. இருந்தாலும் அடுத்த சீன் சிரிக்க வச்சுட்றாய்ங்க.. ரெமோ சீன்தான் இருக்கறதுலே ரோபீல்.. இன்டர்வல் பிளாக் ஓவர் பில்டப் பண்ணாய்ங்க. அப்டிலாம் இல்ல.. #TamilPadam2

Aascar Amsath

‏பாரபட்சம் காட்டாமல் எல்லா படமும் வச்சி செய்யப்பட்டது.

ʝɛииι fer вℓɛssʏ

‏அமுதன்லாம் கொடூரமான ஹூமர் சென்ஸ் கொண்டவர்.. 

அதும் அந்த டிபன் பாக்ஸ பஸ்லருந்து தூக்கி அடிக்கிற சீன்லாம்      

சத்தியவர்மர்  

‏இந்த வருடத்தில் இதுவரை வந்த தமிழ்ப்படங்களில் தமிழ்ப்படம் 2 ஒரு சிறப்பான தமிழ் படம்

Komban

‏அளவிற்கு மீறினால் "அமுதனும்" நஞ்சு! #TamilPadam2

கப்பல் வியாபாரி

சிவா பேன்ஸுக்கு செம ட்ரீட்.. மைனூட்டான விஷயங்கள்ல கூட சிரிப்பு வருது. பார்ட் 1 குடுத்தத 70% இங்கயும் குடுத்துட்டாங்க. No complaints overall      #TamilPadam2

தமிழன் டா

‏தமிழ்ப்படம் 2..  #TamilPadam2

தாறுமாறு..

கதையும் இல்லை, அதனால் வரும் கடுப்புகளும் இல்லை..

ஆனால் சிரிப்புகளுக்கு பஞ்சம் இல்லை..

sugumar

‏தமிழ்ப்படம் 2  பார்த்திட்டு வெளிய வரும் போது படம் நல்லா இருக்கா , இல்லையாங்கிறத தாண்டி நல்ல வேளை நம்மள கலாய்கலங்கிற நிம்மதி கண்டிப்பா வரும் போல !

Madasamy Manoj

‏சிவாஜி கமலுக்கு அப்பறம் ஒரே படத்துல அதிக கெட்டப் போட்டது தமிழ் சினிமாவிலேயே நம்ம @actorsathish மட்டும் தான்.. வேற லெவல் காமெடி.. செம்ம டான்ஸ் bro..    

Kiruthikan Nadarajah

‏அது என்னவோ தெரியல "தல"க்கு மட்டும் zoom போயிருக்காங்க  zoom     

விவகாரமான வித்தகன்

‏என்னங்கடா சிவாக்கு நெறைய கெட்டப் இருக்கும்னு பாத்தா சதிஸ்க்கு இம்புட்டு கெட்டப் இருக்கு

Nesan Siva

‏#தமிழ்ப்படம்2 செம வசன வெடிகள்... நீங்க கொண்டாடித் தீர்த்த எல்லாத்தையும் கிண்டலடிச்சு தீர்த்துருக்காங்க.   . கிட்டத்தட்ட எல்லா சீன்லயும் ஒரு விசயத்தை கலாய்ச்சிருக்காங்க. க்ளைமாக்ஸ் வேற லெவல்.    பாடல்கள் - கொஞ்சம் சலிப்பு தட்டுது.

சுரேகா ரசிகன்     

‏அஜித் ரசிகர்களை மட்டும் வெகுவாக வெறுப்பேற்றும்

Thozhaa

‏Review :தல படத்த ரொம்ப troll பண்ணிருக்காங்களாம்...

சிறுத்தை சிவா பண்ணத விடவா பண்ணிட்டான்

ஓலக்கநாயகன் கமலகாசர்

‏சினிமால இருந்துகிட்டே சினிமாவை கிண்டல் பண்ணி படம் எடுக்குறவறனை விட #TamilRockers எவ்ளவோ மேல்.

ஹசன் கலிஃப்

ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு டீடெய்லிங் வச்சி அடிச்சிருக்கிறாரு.csamudhan வாழ்த்துகள்.

அன்புடன் கதிர்

‏தமிழ்ப்படம் போஸ்டரில் உள்ள

சீன்லாம் படத்துல இல்லைனா தான் அது தமிழ்ப்படம் 2

http://tamil.thehindu.com/opinion/blogs/article24411074.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.