Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்வியே தமிழர்களுக்கு ஒரேயொரு திடமான பாதுகாப்பு: சி.வி விக்னேஸ்வரன்!

Featured Replies

கல்வியே தமிழர்களுக்கு ஒரேயொரு திடமான பாதுகாப்பு: சி.வி விக்னேஸ்வரன்!

 

 

கல்வியே தமிழர்களுக்கு ஒரேயொரு திடமான பாதுகாப்பு என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு 194 புதிய ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கல்வி பயிற்றலில் எமக்கென ஒரு பாரம்பரியம் இருந்து வந்தது. போர்க்காலமும் போர்ப் பாதிப்பும் அதனைக் குழப்பி விட்டிருந்தாலும் மீண்டும் அந்தப் பாரம்பரியக் கோலைக் கையேற்று ஓட்டத்தைத் தொடர சித்தமாய் இருக்க வேண்டும். கல்வி தான் எமது ஒரேயொரு திடமான பாதுகாப்பு.

ஆசிரியத் தொழில் என்பது இறைபணிக்கு ஒப்பானதாகும். உங்களிடம் கையளிக்கப்படுகின்ற மாணவர்கள் புதிய புதிய விடயங்களை தேடிக்கற்பதற்கு ஆவலாக உள்ளார்கள் என்பதை மனத்தில் இருத்தி புதிய புதிய விடயங்களை மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் உறுதியாகவும் அவர்களின் மனங்களில் பதியக்கூடிய வகையில் கற்பித்தல்களை நீங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

நீண்டகால யுத்தத்தின் விளைவாக பல கோணங்களிலும் மிகவும் பின்தங்கியிருக்கும் வடபகுதியில் உள்ள 12 கல்வி வலயங்களிலும் அமைந்துள்ள பாடசாலைகளில், கல்வி கற்பிக்கப் போகின்றீர்கள்.

இந்த மாணவ மாணவியருக்கு கல்வி அறிவை விரைவாகவும் திறமாகவும் புகட்டி அவர்களையும் ஏனைய பகுதிகளில் உள்ள மாணவ மாணவியரின் தரத்திற்கு உயரச் செய்வதற்குப் பாடுபடுங்கள்.

நீங்கள் காட்டுகின்ற அக்கறையும், ஆர்வமும், அன்பும் உங்களிடம் கல்வி கற்கவிருக்கின்ற மாணவ மாணவியரின் உளம்சார், உடல்சார், அறிவுசார் வளர்ச்சிக்குப் பேருதவியாக இருப்பன’ என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/கல்வியே-தமிழர்களுக்கு-ஒர/

  • தொடங்கியவர்

பொழுதுபோக்காக மாறிவிட்டது -ஆசிரியத் தொழில்- வடக்கு முதல்வர்!!

 

CM-1-600x450-600x430.jpe

 
 
 

மாணவ மாண­வி­ய­ருக்­குக் கல்வி போதிப்­பது ஒரு பொழுது போக்­குப் போல் மாறி­விட்­டது. பொழுது போக்­கு­களே கட­ மை­க­ளாக மாறி வரு­கின்­றன என்று சுட்­டிக்­காட்­டிய வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், இன்று அரச சேவை­க­ளில் பல­ரும் தமக்­குக் கிடைக்­கக்­கூ­டிய அனு­கூ­லங்­க­ளைப் பற்­றியே சதா­கா­ல­மும் சிந்­தித்­த­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றார்­கள். எவ்­வ­ளவு விடு­முறை கிடைக்­கும், எவ்­வ­ளவு சம்­பள ஏற்­றம் கிடைக்­கும், எந்­த­வகை அண்­மை­யி­டப் பாட­சாலை கிடைக்­கும் என்று அனைத்­தும் தமக்­குச் சாத­க­மாக கிடைக்க வேண்­டும் என்­ப­தில் குறி­யாக இருக்­கின்­றார்­கள். இந்த நிலை மாற்­றப்­ப­டல் வேண்­டும் என்­றும் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண தமிழ் மொழி மூலப் பாட­சா­லை­க­ளில் நில­வும் ஆசி­ரி­யர் வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்­குத் தெரிவு செய்­யப்­பட்ட 194 பட்­ட­தா­ரி­க­ளுக்­கான ஆசி­ரி­யர் நிய­ம­னங்­கள் நேற்று வழங்­கப்­பட்­டது. மாகாண கல்வி அமைச்­சின் ஏற்­பாட்­டில் யாழ்ப்­பா­ணம் பொது நூல­கக் கேட்­போர் கூடத்­தில் பிற்­ப­கல் 3 மணிக்கு நிய­ம­னம் வழங்­கும் நிகழ்­வு­கள் நடை­பெற்­றது. முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொண்டு உரை­யாற்­றிய வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் மேலும் தெரி­வித்­த­தா­வது,

அந்­தக் காலங்­க­ளில் அரச சேவை­கள் குறிப்­பாக ஆசி­ரிய சேவை­கள் சிறப்­பா­கக் காணப்­பட்­டன. ஆசி­ரி­யர் தமது வேலைத்­த­ளத்­துக்­குச் சென்­று­விட்­டால் அவ­ருக்கு கற்­பித்­தல் கட­மை­யைத் தவிர வேறு எந்த வேலை­யும் இருக்­காது. அதற்­கான நேர­மும் கிடைக்­காது. ஆனால் இன்று அனை­வ­ருக்­கும் வீட்­டுக்கு அண்­மை­யில் பாட­சா­லை­கள் கிடைக்­கப் பெறு­கின்­றன. அத­னால் சுற்­றுச் சமூ­கத்­தில் நடை­பெ­று­கின்ற விழாக்­கள், கொண்­டாட்­டங்­கள் அனைத்­தி­லும் கடமை நேரத்­தில் கலந்­து­கொள்ள ஆசி­ரிய ஆசி­ரி­யை­கள் தம்­மைத் தயார்ப்­ப­டுத்­திக் கொள்­கின்­றார்­கள். மாணவ மாண­வி­ய­ருக்­குக் கல்வி போதிப்­பது ஒரு பொழுது போக்­குப் போல் மாறி­விட்­டது. பொழுது போக்­கு­களே கட­மை­க­ளாக மாறி வரு­கின்­றன.

 

ஒரு ஆசி­ரி­யர் தனது கடமை நேரத்­தில் ஒரு மணித்­தி­யா­லம் வெளி­யில் ஏதா­வ­தொரு வேலைக்­கா­கத் தனது நேரத்­தைச் செல­வி­டு­வா­ரே­யா­யின் இரண்டு பாட வேளை­க­ளில் அவ­ரி­டம் கல்வி கற்­க­வி­ருக்­கின்ற ஏறத்­தாழ 80 மாண­வர்­க­ளின் கல்வி நட­வ­டிக்­கை­கள் ஒரு மணித்­தி­யா­லத்­தி­னால் வீண­டிக்­கப்­ப­டு­கின்­றது. இதை நீங்­கள் புரிந்து கொள்ள வேண்­டும்.

பாட­சா­லை­க­ளில் கல்வி கற்­பிக்­கத் தயங்­கு­கின்ற ஆசி­ரி­யர்­கள் பிரத்­தி­யே­கக் கல்வி நிறு­வ­னங்­க­ளில் விடி­யற்­காலை மற்­றும் மாலை நேர வகுப்­புக்­க­ளில் சிறப்­பாக செயற்­ப­டு­வது விந்­தைக்­கு­ரி­யது. இவை யாவும் எமது ஆசி­ரிய ஆசி­ரி­யை­கள் பணத்­துக்­கும் சொகுசு வாழ்க்­கைக்­குந் தம்மை அடி­ப­ணிய வைத்­தி­ருப்­ப­தையே எடுத்­துக்­காட்­டு­கின்­றது. ஆசி­ரி­யத் தொழில் என்­பது அறி­வு­சார் இளம்­நெஞ்­சங்­க­ளு­டன் சம்­பந்­தப்­பட்­டது. அது நல்­ல­தொரு உற­வாக அமைந்­தால் அத­னால் ஏற்­ப­டும் மகிழ்­வுக்கு எல்­லை­யில்லை.

மாணவ மாண­வி­ய­ரின் வருங்­கா­லம் பற்­றிய உங்­கள் சிந்­தனை கரி­ச­னை­யு­டை­ய­தாக மாறி­னால் ஆசி­ரி­யத் தொழில் உங்­க­ளுக்கு நிறைந்த மன மகிழ்­வைத் தரும் என்­ப­தில் சந்­தே­கம் கொள்­ளத் தேவை­யில்லை – என்­றார்.
‘நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்ட ஆசி­யர்­கள் நாளை (இன்று) கட­மை­க­ளைப் பொறுப்­பேற்க வேண்­டும். இது விடு­மு­றைக் காலம் என்­ப­தால் வல­யங்­க­ளின் ஊடா­கப் பாட­சாலை அதி­ப­ரைத் தொடர்பு கொண்டு கட­மை­க­ளைப் பொறுப்­பேற்க வேண்­டும். பாட­சா­லை­க­ளில் கடமை ஏற்­பது தொடர்­பில் இடர்­பா­டு­கள் காணப்­பட்­டால் வல­யக் கல்­விப் பணி­ம­னை­யி­லா­வது கட­மை­க­ளைப் பொறுப்­பேற்க வேண்­டும்’ என்று மாகா­ணக் கல்­விப் பணிப்­பா­ளர் சி.உத­ய­கு­மார் தெரி­வித்­தார்.

‘ஆசி­யர் நிய­ம­னங்­க­ளைப் பெற்­ற­வர்­க­ளுக்­கான முன் சேவை பயிற்சி நாளை மறு­தி­னம் புதன் கிழமை வட்­டுக்­கோட்டை தொழில் பயிற்சி நிலை­யத்­தில் ஆரம்­ப­மா­கும். 21 நாள்­களை கொண்ட வதி­விட பயிற்­சி­யாக இது அமை­யும். காலை 6 மணிக்கு உடற் பயிற்­சி­யு­டன் ஆரம்­ப­மாகி மாலை கலை அம்­சங்­க­ளு­டன் கூடிய பயிற்சி நெறி­கள் நடை­பெ­றும். இந்த பயிற்சி நெறி­யில் அனை­வ­ரும் கட்­டா­யம் பங்­கு­பற்ற வேண்­டும். கற்­பித்­த­லுக்­காக உங்­க­ளைத் தயார் செய்­யும் பயிற்­சி­யாக இது அமை­யும். பயிற்­சி­யின் முதல் நாளும் நிறைவு நாளும் இரண்டு பரீட்­சை­கள் உங்­கள் தயார்­ப­டுத்­தல் நிலை­களை அறிந்து கொள்­வ­தற்கு நடத்­தப்­ப­டும்’ என்று மாகா­ணக் கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது.

http://newuthayan.com/story/09/பொழுதுபோக்காக-மாறிவிட்டது-ஆசிரியத்-தொழில்-வடக்கு-முதல்வர்.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.