Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவற்குழியில் உள்ள 107 குடும்பங்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை?

Featured Replies

நாவற்குழியில் உள்ள 107 குடும்பங்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை?

 

 
 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் குடியிருக்கும் 107 குடும்பங்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் எடுத்துரைத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம்  டகள்ஸ் தேவானந்தா 27- 2 இன் கீழ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சஜித் பிரேமதாஸ பதிலளித்த பின்னரே சுமந்திரன் இந்த விடயத்தை விடயத்தை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 

sum.jpg

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் 107 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வசித்து வருகின்றனர் என்பதை நான் அறிவேன்.  இந்த குடும்பங்களை அக்காணியில் இருந்து வெளியேற்றிவிட்டு அக்காணியை கையகப்படுத்த  அரசாங்கம் வழங்கு தொடுத்துள்ளது.  

ஆகவே இந்த விவகாரத்தை  உடனடியாக அமைச்சர் கவனத்தில் கொண்டு அம்மக்களுக்கு அவர்கள் குடியிருக்கும் காணியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அரசாங்கத்தின்  காணிக்கொள்கையில் மக்களை காணிகளிலிருந்து வெளியேற்றும் கொள்கை உள்ளடக்கப்படவில்லை. இப்பிரச்சினை தொடர்பில் உடனடியாக கவனத்தில் கொண்டு இந்த விவகாரம் குறித்து  உங்களுக்கு ஆக்கபூர்வமான பதிலொன்றை விரைவில் வழங்குவேன் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ சுமந்திரனிடம் வாக்குறுதியளித்தார்.

http://www.virakesari.lk/article/38171

  • தொடங்கியவர்

அரச காணியில் இருந்து மக்களை வெளியேற்றும் வழக்கு சாவகச்சேரி நீதிமன்றில்….

Sumanthiran-at-court.png?resize=639%2C42
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் குடியிருக்கின்ற மக்களை அரச காணியில் இருந்து வெளியேற்றுவதற்காக தேசிய வீடமைப்பு அதிகார சபையால் தொடரப்பட்ட வழக்கு இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சுமார் 62 குடும்பங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 34 குடும்பங்களுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ் வழக்கில் குடியிருப்பாளர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் ஆஜராகினர்.

குறித்த விடயம் தொடர்பாக வீடமைப்பு அமைச்சரோடு பேசி சுமூகமான முறையில் நடவடிக்கை எடுப்பதற்காக ஒரு நீண்ட தவணை ஒன்றை வழங்குமாறு சட்டத்தரணிகளால் விண்ணப்பம் செய்யப்பட்டது. இதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதிக்கு குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Chavakacheri-court.png?resize=636%2C375

http://globaltamilnews.net/2018/91101/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.