Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகச் செல்வமும் ஏழ்மையும்

Featured Replies

உலகச் செல்வமும் ஏழ்மையும்

உலகமயமாதல். திறந்துவிடப்பட்ட உலக சந்தை என்று வந்த பிறகு உலகப் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகின் செல்வ வளமும் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக உலகமயமாதல் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்று எங்கும் பேசப்படுகிறது. அதேநேரத்தில், உலகமயமாதலால் பெருஞ்செல்வந்தர்கள் உருவாகுகிறார்கள். ஏழ்மை குறையவில்லை என்றும் பல அறிஞர்களால் கவலையுடன் பேசப்படுகின்றது.

"உலகமயமாதலால் ஏழை, பணக்காரர்கள் வித்தியாசம் அதிகரித்து வருகிறது. ஆகவே, உலகமயமாதலே முடிவுக்கு வரக்கூடும்" என்று சமீபத்தில் சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் உலக வங்கித் தலைவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

வருடாவருடம் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் (பில்லியனர்கள்) பட்டியலை "போர்ப்ஸ்" எனும் பிரபல பத்திரிகை வெளியிட்டு வருகிறது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி.) தற்போதைய உலக பில்லியனர்கள் பட்டியல் 2007 பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி வரை தயாரானது. இதன்படி உலகில் 946 பில்லியனர்கள் உள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 178 புதியவர்கள் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.

அமெரிக்க `மைக்ரோசொப்ட்' நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் உலகின் முதல் பணக்காரர் அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 56 பில்லியன் டொலர் (ரூ. 2.52 இலட்சம் கோடிகள்) அமெரிக்காவின் வாரன் பஃபெட் 52 பில்லியன் டொலர் சொத்துடன் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் லட்சுமி மிட்டல் 32 பில்லியன் (சுமார் ரூ. 1.44 இலட்சம் கோடி) சொத்துகளுடன் உலகின் 5 ஆவது பெரிய பணக்காரராக விளங்குகிறார்.

ஆசியக் கண்டத்திலேயே இந்தியாவில்தான் அதிக பில்லியனர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 22 என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது 36 பில்லியனர்கள் என்று இந்தியா சிறப்புப் பெற்று முதல் நிலையிலிருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஜப்பானில் 24 பில்லியனர்கள் இருக்கின்றனர்.

இந்த பில்லியனர்கள் யார் யார் உலக அளவில் அவர்கள் நிலை என்ன என்று பார்ப்போம்.

லட்சுமி மிட்டால் 5 ஆவது இடம், 32 பில்லியன். முகேஷ் அம்பானி 14 ஆவது இடம், 20.1 பில்லியன். அனில் அம்பானி 18 ஆவது இடம், 18.2 பில்லியன். அஸிம் பிரேம்ஜி 21 ஆவது இடம், 17.1 பில்லியன். குஷல்பால் சிங் 62 ஆவது இடம், 10 பில்லியன். சுனில் மிட்டல் மற்றும் அவரது குடும்பம் 69 ஆவது இடம், 9.5 பில்லியன். குமார் பிர்லா 86 ஆவது இடம், 8 பில்லியன். சசிரூயா, ரவி ரூயா 86 ஆவது இடம் 8 பில்லியன். ரமேஷ் சந்திரா 114 ஆவது இடம், 6.4 பில்லியன். பலோன்ஜி மிஸ்த்ரி 137 ஆவது இடம், 5.6 பில்லியன். ஆதி கோத்ரஜ் குடும்பம் 210 ஆவது இடம், 4.1 பில்லியன், சிவநாடார் 214 ஆவது இடம், 4 பில்லியன். திலிப்சாங்வீ 279 ஆவது இடம் 3.1 பில்லியன். சைரஸ்பூனாவாலா 287 ஆவது இடம், 3 பில்லியன். இந்து ஜெயின் 287 ஆவது இடம் 3 பில்லியன்.

கலாநிதிமாறன் 349 ஆவது இடம், 2.6 பில்லியன். கிராந்தி ராவ் 349 ஆவது இடம், 2.6 பில்லியன், சாவித்திரி ஜிண்டால் மற்றும் அவர் குடும்பம் 390 ஆவது இடம், 2.4 பில்லியன். துளசி தந்தி 390 ஆவது இடம் 2.4 பில்லியன். சுபாஷ் சந்திரா 407 ஆவது இடம், 2.3 பில்லியன். உதய் கோடக் 432 ஆவது இடம், 2.2 பில்லியன். பாப கல்யாணி 458 ஆவது இடம், 2.1 பில்லியன். மல்வீந்தர் சிங், ஷிவிந்தர் சிங் 488 ஆவது இடம் 2 பில்லியன், நாராணமூர்த்தி 557 ஆவது இடம் 1.8 பில்லியன். அனுராக் தீக்ஷித் 618 ஆவது இடம், 1.6 பில்லியன், வேணுகோபால் தூத் 618 ஆவது இடம், 1.6 பில்லியன்.

விஜய் மல்லையா 664 ஆவது இடம், 1.5 பில்லியன். ஜெயப்பிரகாஷ் கவுர் 664 ஆவது இடம், 1.5 பில்லியன், விகாஸ் ஓபராய் 717 ஆவது இடம், 1.4 பில்லியன். நந்தன் நிலகனி 754 ஆவது இடம், 1.3 பில்லியன். எஸ். கோபாலகிருஷ்ணன் 799 ஆவது இடம், 1.2 பில்லியன். பிரதீப் ஜெயின் 840 ஆவது இடம் 1.1 பில்லியன். கேசுப் மகிந்தரா 840 ஆவது இடம் 1.1 பில்லியன். ராகுல் பஜாஜ் 840 ஆவது இடம் 1.1 பில்லியன்.

இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய சில விடயங்கள்;

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பெரிய செல்வங்கள் வணிகக் குடும்பங்களில் குமார் பிர்லா மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ரத்தன் டாடா கூட இப்பட்டியலில் இடம்பெறவில்லை.

பரம ஏழையாக இருந்த லட்சுமி மிட்டல் மிகப்பெரிய செல்வந்தராக வந்துள்ளது இவருடைய கடுமையான உழைப்புக்குக் கிடைத்த பரிசு.

உலகத்தின் சொத்துகள் மதிப்பு சுமார் 125 டிரில்லியன் டொலர் (சுமார் ரூ. 5,625 இலட்சம் கோடிகள்). (1 டிரில்லியன் என்பது சுமார் ரூ. 45 இலட்சம் கோடிகள் ஆகும்) அமெரிக்காவின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 31 டிரில்லியன் டொலர் (சுமார் ரூ. 1,400 இலட்சம் கோடிகள்).

இந்தியாவின் தற்போதைய 857 பில்லியன் டொலர் மொத்த உற்பத்தி 2050 ஆம் ஆண்டு சுமார் 30 டிரில்லியன் டொலர் என உயர்ந்து உலகில் இரண்டாவது பொருளாதார வல்லரசாக மாறும் என உலகின் பிரபல நிதி நிறுவனம் `கோல்ட்மேன் சாச்' கணித்துள்ளது.

இப்படி பல நல்ல பல விடயங்கள் இருப்பினும் உலகின் ஏழ்மை மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது.

உலகில் ஆறில் ஒருவர் பரம ஏழையாக உள்ளார். சுமார் 110 கோடி மக்கள். உலகின் மிகப்பெரும் பணக்கார நாடான அமெரிக்காவில் கூட 13 சதவீத மக்கள் ஏழைகள், ஜப்பானில் 15.3 சதவீதம், இங்கிலாந்து 15 சதவீதம், பிரான்ஸ் 6 சதவீதம் என்று ஏழை மக்கள் உள்ளனர்.

பிரேஸிலில் 23 சதவீதம், ரஷ்யாவில் 20 சதவீதம், இந்தியாவில் 22 சதவீதம், சீனாவில் 8 சதவீதம் என்று ஏழ்மை நிலை உள்ளது. மாத வருமானம் ரூ. 1,350 கூட இல்லாதவர்கள் ஏழைகள் எனக் கருதப்படுகின்றனர். அதாவது ஒரு நாளைக்கு ஒரு டொலர் (சுமார் ரூ. 45) கூட வருமானம் இல்லாதவர்கள்.

உலகின் 1 சதவீதம் மிகப்பெரிய பணக்காரர்கள் உலகின் 40 சதவீத சொத்துகளுக்கு அதிபதிகள். உலகின் 10 சதவீத மக்கள் உலகின் 85 சதவீத சொத்துகளுக்கு உடமையாளர்கள்.

உலகில் ஆண்டிற்கு 80 இலட்சம் மக்கள் உண்ண உணவின்றி இறந்து போகின்றார்கள் என்று பிரபல டைம் பத்திரிகை தெரிவிக்கின்றது. உலகில் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் குழந்தைகள் பசிக் கொடுமையால் இறக்கின்றனர் என ஐ.நா. சபை அறிக்கை ஒன்று கூறுகின்றது. உலகில் 50 சதவீத மக்கள் மாதத்திற்கு ரூ. 2,700 வருமானம் கூட இல்லாதவர்கள். உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து, ஏழ்மையான 48 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் மேலாக உள்ளது.

21 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் 100 கோடி பேருக்கு மேல் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். உலகில் 50 சதவீதம் இளைஞர்களுக்கு வேலை இல்லை அல்லது பெயருக்குத்தான் வேலை என்று சொல்லும் நிலை.

25 கோடி மக்கள் மாதத்திற்கு ரூ. 1.350 கூட வருமானமில்லாத ஏழைகளைக் கணக்கிட்டு உலகில் அதிக ஏழைகள் உள்ள நாடு இந்தியா என்ற அவப்பெயரைப் பெற்றுள்ளது. 81 சதவீத இந்தியர்களின் மாத வருமானம் ரூ. 2,700 இற்கும் குறைவே. 36 இந்திய பில்லியனர்கள் இந்தியாவின் 25 சதவீதம் பொருளாதாரத்தைக் கைக்குள் வைத்துள்ளனர்.

பணக்கார நாடுகள் வருடா வருடம் கூடி தங்கள் பொருளாதாரத்தில் 0.7 சதவீதம் ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானம் போடுவதோடு சரி. செயலாக்கம் தான் இல்லை.

அதேசமயம், நல்ல காரியங்களுக்காக பெருந்தொகையை நன்கொடையாக வழங்கும் பல செல்வந்தர்களும் இருக்கின்றனர். உலகின் இரண்டாவது பெரும் பணக்கார அமெரிக்கர் வாரன் பட்ஜெட் சமீபத்தில் 43 பில்லியன் டொலரை (சுமார் ரூ. 1.94 இலட்சம் கோடியை) தனது குடும்பத்திற்குத் தராமல் பொது நற்காரியங்களுக்காக நன்கொடையாகக் தந்தது உலகத்தையே அதிசயப்பட வைத்தது. உலகமயமாதலால் ஏழை- பணக்காரர் இடைவெளி அதிகரித்து வருகிறதோ என்ற ஐயப்பாடு வலுத்து வருகிறது.

"ஏழ்மையே மிகக் கொடுமையான வன்முறையின் வடிவம்" என்ற மகாத்மா காந்தியின் கூற்று மிகவும் பொருத்தமானதே! தற்போதைய உலகில் இதைச் சரி செய்ய உலகம் என்ன செய்யப் போகிறது?

(கட்டுரையாளர்: கௌரவத் தலைவர் மற்றும் தாளாளர், ஷ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, சென்னை). -தினமணி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.