Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேட்டிங் தடுமாற்றங்கள் பற்றிய கேள்விகளுக்குப் பதில் அளிக்காவிட்டால் அயல்நாடுகளில் நாம் தொடரை ஒரு போதும் வெல்ல முடியாது: ரவிசாஸ்திரியை விளாசிய கங்குலி

Featured Replies

பேட்டிங் தடுமாற்றங்கள் பற்றிய கேள்விகளுக்குப் பதில் அளிக்காவிட்டால் அயல்நாடுகளில் நாம் தொடரை ஒரு போதும் வெல்ல முடியாது: ரவிசாஸ்திரியை விளாசிய கங்குலி

 

shastri-gjpg
Shastri-Ganguly

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி : கோப்புப்படம்

இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்து தோல்வி அடைந்ததற்கு தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்று இங்கிலாந்திடம் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. கடந்த 4 டெஸ்ட் போட்டிகளிலும் பந்துவீச்சில் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டபோதிலும், பேட்டிங்கில் மிகமோசமாக செயல்படுகிறது.

 

அணியில் விராட் கோலி, ரஹானே, புஜாரா தவிர மற்ற வீரர்கள் ஒருவரும் குறிப்பிடத்தகுந்த ரன்கள் ஏதும் எடுக்கவில்லை. இந்திய அணியின் பேட்டிங் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக் ஆகியோர் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்திய அணியின் பேட்டிங் சீர்குலைவுக்கு பயிற்சியாளர்கள் ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரும் காரணம் என்று சவுரவ் கங்குலி குற்றம்சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சவுரவ் கங்குலி இந்திய அணியின் தோல்வி குறித்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் திறமைக்குறைவாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் செயல்பட்டு இருக்கிறார்கள். இதற்கு அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரும் பொறுப்பேற்க வேண்டும். இந்திய அணியின் பேட்டிங் குறித்து சில முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் பதில் அளிக்காவிட்டால், வெளிநாடுகளில் சென்று தொடரை வெல்ல முடியாது.

shastri-gjpg
 

இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் விராட் கோலி என்ற ஒற்றை பேட்ஸ்மேன் மட்டுமே விளையாடினார், மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் விளையாடுவதற்கும், சிறப்பாகச் செயல்படுவதில் இருந்தும் ஏன் பின்வாங்கினார்கள். இந்த டெஸ்ட் தொடரின் முடிவுக்குப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பொறுப்பு ஏற்க வேண்டும்.

இதற்கு முன் இந்திய அணி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்தோடு இந்தப் பயணத்தை ஒப்பிட்டால் பேட்டிங் திறமை, தைரியம் என்பது மிகவும் மோசமாகிவிட்டது.

இந்த மாதிரியான பேட்டிங் வரிசையை வைத்துக்கொண்டு இந்திய அணி நீண்டநாட்கள் சர்வதேச அளவில் பயணிக்க முடியாது. கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து இப்போதுவரை இந்திய அணியின் வெளிநாட்டுப் பயணத்தின் சாதனைகளைப் பார்த்தால், ஏராளமான மிகப்பெரிய தொடர்களை இழந்து, தோல்வி அடைந்தே திரும்பி இருக்கிறது.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் விராட் கோலியிடமும், மற்ற பேட்ஸ்மேன்களிடமும் நல்ல வித்தியாசத்தைப் பார்த்துத்தான் பந்துவீசினார்கள். விராட் கோலியைவிட மற்ற பேட்ஸ்மேன்களைத்தான் அச்சுறுத்தும்வகையில் பந்துவீசினார்கள்.

விராட் கோலி களத்தில் இருந்தால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அணுகுமுறை வேறுமாதிரி இருக்கிறது. அதேசமயம், மற்ற இந்திய வீரர்களுக்கு எதிராக இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அணுகும்முறை விராட் கோலிக்கு பந்துவீசுவதைக் காட்டிலும் வேறுபட்டு இருந்தது.

தற்போது அணியில் இருக்கும் இந்திய வீரர்களின் திறமை, பேட்டிங் திறன் தரம்தாழ்ந்துவிட்டது என்றே நம்புகிறேன். இதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.

முதலில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருக்கிறது. சட்டீஸ்வர் புஜாரா, ரஹானே இதில் யாரை எடுத்துக்கொண்டாலும் நீங்கள் கண்டுபிடிக்கலாம், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது அடித்த ஷாட்கள் இப்போது இங்கிலாந்தில் அடிக்கவில்லை. இதில் இருந்தே வீரர்களிடம் தனம்பிக்கை குறைவாக இருப்பதை அறியலாம்.

இவ்வாறு சவுரவ் கங்குலி தெரிவித்தார்

https://tamil.thehindu.com/sports/article24864545.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

‘பேச்சைக் குறையுங்கள்; செயலில் காட்டுங்கள்’- பயிற்சியாளர் ரவிசாஸ்திரியை விளாசிய சேவாக்

 

 
RaviShastriandVirender

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் : கோப்புப்படம்

சவுத்தாம்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு பின், முன்னாள் வீரர்கள் பலரும் அணியின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை முன்னாள் வீரர் சேவாக் கடுமையாகச் சாடியுள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் முடிவில் இந்திய அணி ஒரு போட்டியிலும், இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும் வென்று 2-1 என்றகணக்கில் இருந்தன. இந்நிலையில், 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்டன் நகரில் நடந்தது.

 

இதில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 245 ரன்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 60 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. இதையடுத்து 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இங்கிலாந்துஅணி 3-வது முறையாகக் கைப்பற்றியுள்ளது.

கடந்த 2011, 2014ம் ஆண்டுகளில் இங்கிலாந்து வந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்திருந்த நிலையில், இந்த முறை கோலி தலைமையில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,தொடரை இழந்துள்ளது.

viratjpg
 

இந்த தொடரில் விராட் கோலி, சட்டீஸ்வர் புஜாரா, ரஹானே ஆகிய 3 வீரர்களைத் தவிர எந்த இந்திய பேட்ஸ்மேன்களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பேட் செய்யவில்லை. பந்துவீச்சாளர்கள் மட்டும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்திய அணியின் செயல்பாடு குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் தற்போது முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை சாடியுள்ளார்.

இந்திய அணி, இங்கிலாந்து தொடருக்கு புறப்படும் முன் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, உலகிலேயே எந்த நாட்டுக்குச் சென்றாலும் சிறப்பாக கிரிக்கெட் விளையாடக் கூடிய அணியாக இந்திய அணி திகழ்கிறது என்று தெரிவித்திருந்தார்.

இதைக் குறிப்பிட்டு வீரேந்திர சேவாக் சாடியுள்ளார். அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

‘‘உலக அளவில் வெளிநாடுகளில் சென்று சிறப்பாக விளையாடக்கூடிய அணி இந்திய அணி என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேச்சில் மட்டும்தான் கூறுகிறார். ஆனால், பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பில்லை.

வெளிநாடுகளில் சிறப்பாகச் செயல்படும் அணிகளின் திறமை களத்தில்தான் வெளிப்படுகின்றன. ஓய்வறையில் அமர்ந்து கொண்டு பேசுவதால் உருவாக்கப்படுவதில்லை, வீண் பெருமையடிப்பதாலும் வருவதில்லை.

ஒருவர் என்ன வேண்டுமானாலும், தனக்கு விருப்பமானவற்றையெல்லாம் பேசலாம், ஆனால், வீரர்களின் பந்துவீச்சும், பேட்டிங்கும் பேச வேண்டும் இல்லாவிட்டால், ஒருபோதும் வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடும் அணி என்று பெயர் எடுக்க முடியாது. ஆதலால், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேச்சைக் குறைத்து, செயலில் காட்ட வேண்டும்.

இந்தத் தொடரில் இந்திய அணி முத்திரை பதிக்க ஏராளமான தங்க வாய்ப்புகள் கிடைத்தன. முதல் டெஸ்டில் வெற்றி பெறும் தருவாயில் 31 ரன்களில் தோல்வி அடைந்தோம், 4-வது டெஸ்ட் போட்டியில் 60 ரன்களில் வெற்றியை இழந்தோம’’ என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி லண்டனில் தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்வதன் மூலம் இந்தத் தொடரில் ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது என்ற வார்த்தையில் இருந்து தப்பிக்க முடியும்

https://tamil.thehindu.com/sports/article24862654.ece

  • தொடங்கியவர்

இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நீடிக்க வேண்டுமா?- ட்விட்டரில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

 

 
Ravi%20Shastri%20Anil%20Kumble

அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி : கோப்புப்படம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் இழந்துள்ள நிலையில், அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரையை மாற்றுக்கோரி நெட்டிஸன்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. பர்மிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்திலும், லாட்ர்ஸ் மைதானத்தில் மோசமான தோல்வியையும் சந்தித்த இந்திய அணி 3-வது டெஸ்டில் இங்கிலாந்துக்குப் பதிலடி கொடுத்தது. இதனால், 2-1 என்ற நிலையில் டெஸ்ட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டி இருந்தது.

     
 

இதனால் சவுத்தாம்டனில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், 245 ரன்கள் இலக்கை அடையமுடியாமல் இந்திய அணி 60 ரன்களில் தோல்வி அடைந்து டெஸ்ட் தொடரை இழந்தது. இந்த 4 டெஸ்ட் போட்டிகளிலும் கேப்டன் விராட் கோலி, ரஹானே, புஜாரா ஆகிய 3 வீரர்களைத் தவிர எந்த ஒருவீரரும் சிறப்பான பங்களிப்பை அளிக்கவில்லை.

இந்திய அணி வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் மோசமாகச் செயல்படுவது தொடர்ந்து வருகிறது. இந்தத் தோல்விகளுக்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும், ரவி சாஸ்திரியை நீக்க வேண்டும் என்றும், அனில் கும்ப்ளேயை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்றும் நெட்டிஸன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நெட்டிஸன் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதில், "விராட் கோலி போன்று குளோன் முறையில் 11 கோலியை உருவாக்குங்கள் அப்போதுதான் வெற்றி பெறுவீர்கள். ரவி சாஸ்திரியை ஏதாவது குளிர்பானம் குடிக்கச் சொல்லுங்கள். இந்தியாவுக்கு விரைவாக வந்து அடுத்த ஐபிஎல் தொடருக்குப் பயிற்சி எடுங்கள்" என்று கடுமையாக தெரிவித்துள்ளார்.

ஆசாத் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "இந்திய அணிக்கு ரவி சாஸ்திரியின் பங்களிப்பு என்ன என்பதை யாரேனும் கேட்டுப் பதிவிடுங்கள். ஊடகங்களிடம் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்துவதைக் காட்டிலும் ரவி ஒன்றும் செய்யவில்லை. இந்திய அணி மிகப்பெரிய தவறுகளைச் செய்துவருகிறது அதைக் கவனிக்கவில்லை. அஸ்வினைக் காட்டிலும் சிறந்த பந்துவீச்சாளர் மொயின் அலி இல்லை. ஆனால், அவரிடம் இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்" என்று தெரிவித்துள்ளார்.

CaptureJPG
 

ரமேஷ் மணி என்பவர் பதிவிடுகையில், "5-வது டெஸ்ட் போட்டிக்கு 4 மாற்றங்கள் செய்ய வேண்டும். ராகுலுக்கு பதிலாக பிரித்வி ஷா, அஸ்வினுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக உமேஷ் யாதவ், தவணுக்கு பதிலாக கருண் நாயர் களமிறக்க வேண்டும். தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, புஜாரா களமிறங்க வேண்டும். குறிப்பாகப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவி சாஸ்திரியை நீக்கிவிட்டு, கிறிஸ்டன் அல்லது கும்ப்ளேயை அழைக்க வேண்டும். விராட் நம்பிக்கையுள்ள கேப்டனாக திகழ்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

Capture1JPG
 

மார்ள் ஜி என்பவர் ட்விட்டரில் கூறுகையில், "கிரிக்கெட்டில் மிகவும் புகழ்பெற்ற பொய்யை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா. ரவி சாஸ்திரி இங்கிலாந்து புறப்படும்போது கூறியதுதான். எங்களுக்கு ஆடுகளத்தைப் பற்றியும், அங்குள்ள காலச்சூழல் குறித்தும் எந்தவிதமான கவலையும் இல்லை என்று கூறியதுதான் சிறந்த பொய்" எனத் தெரிவித்துள்ளார்.

ஷாம் என்பவர் ட்விட்டரில் தெரிவிக்கையில், "4-வது டெஸ்ட் போட்டியின் போது, இன்னிங்ஸ் பிரேக்கின்போது ரவி சாஸ்திரி எங்களுக்கு 270 ரன்களுக்குள் இலக்கு இருந்தால், எளிதாக சேஸ் செய்துவிடுவோம் எனத் தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது 70 ரன்கள் அடிப்பதை இந்திய அணிக்குக் கடினமாகிவிட்டது. எங்கே நம்முடைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. சமீபகாலமாக ரவி சாஸ்திரி பேசும் வார்த்தைகள் போட்டியை வென்றுவிட்டது போன்ற தொனியில் இருக்கிறது "எனத் தெரிவித்துள்ளார்.

kumbeJPG
 

அஜித் தோவல் என்ற நெட்டிஸன் ட்விட்டரில் வித்தியாசமாகப் பதிவிட்டுள்ளார், அதில், "இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக ராகுல் டிராவிட்டை நியமிக்க வேண்டும் "என்று தெரிவித்துள்ளார்.

https://tamil.thehindu.com/sports/article24863748.ece

  • தொடங்கியவர்

கடந்த 20 ஆண்டுகளில் இப்போதுள்ள இந்திய அணி சிறப்பாகத்தான் வெளிநாடுகளில் விளையாடுகிறது: ரவிசாஸ்திரி

 

 
SHASTRI-KESAVAN

கேப்டன் விராட் கோலியுடன், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி   -  படம்: ராய்டர்ஸ்

கடந்த 20 ஆண்டுகளைக் காட்டிலும் இப்போதுள்ள இந்தியஅணிதான் சிறப்பாக வெளிநாடுகளில் விளையாடுகிறது என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சவுத்தாம்டனில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை பறிகொடுத்தது.

 

இந்தத் தோல்விக்கு பின் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மீது முன்னாள்வீரர்கள் சேவாக், கங்குலி, சுனில் கவாஸ்கர் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்குப் பதில் அளித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

நாங்கள் எங்களால் முடிந்த அளவு எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு முயற்சித்து விளையாடினோம். ஆனால், இங்கிலாந்து எங்களைக் காட்டிலும் ஒருபடி சிறப்பாகவே செயல்பட்டார்கள். ஆனால், எங்களிடம் இருந்து எந்தவிதமான திறமையை அவர்கள் எடுத்துச் செல்லவில்லை. இந்திய அணியின் வெளிநாட்டுப் பயணங்கள் சிறப்பாகவே அமைந்து வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் நாங்கள் வெளிநாடுகளில் நடந்த போட்டிகளில் 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

கடந்த 15 முதல் 20ஆண்டுகளில்கூட இந்த அளவுக்குச் சிறப்பான இந்திய அணியை நான் பார்க்கவில்லை. குறுகிய காலத்தில் அதிகமான ரன்களை அடித்திருக்கிறார்கள்.

இந்திய அணி பெறும் வெற்றி, அல்லது அடையும் தோல்வி என்பதைக் காட்டிலும், வீரர்கள் மனரீதியாகத் தயாராகிறார்களா, வலிமையாக இருக்கிறீர்களா என்பது அவசியம். அந்த மனவலிமையை இப்போது வீரர்கள் பெற்றிருக்கிறார்கள்.

சவுத்தாம்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஷாட்களை கையாண்டவிதம் வருத்தமளிக்கிறது. 180 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில்தான் இருந்தது. இன்னும் 75 ரன்களில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்த சூழலில் மோசமான ஷாட்களில் தோல்வி அடைந்துவிட்டோம்.

டெஸ்ட் தொடரை இழந்துவிட்டோம் என்பதற்காக நாங்கள் மனம்தளர்ந்துவிடப் போவதில்லை. 5-வது போட்டியில் சிறப்பாகச் செயல்படுவோம், அதிகமான ரன்களை அடிப்போம். இப்போது வீரர்களின் ஊக்கத்துக்கு வெற்றிதான் முக்கியம்.

இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/sports/article24874368.ece

  • தொடங்கியவர்

வெளிநாடுகளில் டிராவிட் செய்த சாதனைகளை ரவி சாஸ்திரிக்கு ஞாபகப்படுத்தட்டுமா? - கவாஸ்கர்

 
அ-அ+

கடந்த 15-20 ஆண்டுகளில் இருந்த அணியை விட தற்போதைய இந்திய அணி தான் சிறந்த அணி என கூறிய ரவி சாஸ்திரிக்கு வெளிநாடுகளில் டிராவிட் செய்த சாதனைகளை ஞாபகப்படுத்தட்டுமா என கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். #RaviShastri #SunilGavaskar #RahulDravid

 
 
 
 
வெளிநாடுகளில் டிராவிட் செய்த சாதனைகளை ரவி சாஸ்திரிக்கு ஞாபகப்படுத்தட்டுமா? - கவாஸ்கர்
 

புதுடெல்லி :

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் போராடி தோற்றாலும், இரண்டாவது போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது, ஆனால் மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற  நான்காவது போட்டியில் வெற்றிக்கு மிக அருகாமையில் சென்று பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் தோல்வியை பரிசாக பெற்றது.


இந்த தொடரில் கேப்டன்  விராட் கோலியை தவிற மற்றவர்கள் சிறப்பாக விளையாடவில்லை, புஜாரா மற்றும் ரகானே மட்டும் ஒரு சில இன்னிங்ஸ்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் மற்ற வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும், கோலியின் கேப்டன்ஷிப் மற்றும் ரவி சாஸ்திரி குறித்தும் சமூக வளைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஷேவாக், முன்னாள் கேப்டன் கங்குலி ஆகியோர் ரவிசாஸ்திரியை நேரிடையாகவே விமர்சனம் செய்தனர்.

இந்திய அணியின் பேட்டிங் சீர்குலைவுக்கு ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய்பாங்கர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என்று கங்குலி சாடி இருந்தார்.

இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக ரவிசாஸ்திரி கூறுகையில், ‘ நம் வீரர்கள் முடிந்த அளவிற்கு போராடியும் இங்கிலாந்து அணி ஒருபடி மேல் இருந்து வெற்றி பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 9 போட்டிகள் உள்பட 3  தொடர்களை வென்றுள்ளோம்.

குறிப்பாக சொல்லப்போனால் கடந்த 15-20 ஆண்டுகளில் இருந்த இந்திய அணியை விட இப்போது உள்ள அணி தான் சிறந்த அணி, முந்தைய அணிகளில் சிறந்த வீரர்கள் இருந்தும் குறுகிய காலத்தில் இதுபோன்று ரன்களை அடித்தது இல்லை’ என விமர்சனங்களுக்கு பதிலளித்தும் முன்னாள் வீரர்களை வெறுப்பேற்றும் விதமாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வெளிநாட்டு மண்ணில் ராகுல் டிராவிட் செய்த சாதனைகளை ஞாபகப்படுத்தட்டுமா? என ரவி சாஸ்திரிக்கு முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
 
201809070759127364_1_dravid._L_styvpf.jpg

இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

1993-ம் ஆண்டுக்கு பிறகு 2015-ம் ஆண்டு வரை பல ஆண்டுகளாக இலங்கையில் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றவில்லை, ஆனால் அந்த காலகட்டங்களில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தொடரை இந்தியா கைப்பற்றியது.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் 80-களின்  இந்திய அணி மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்தில் தொடரை வென்றுள்ளது. கடைசியாக இங்கிலாந்து தொடரை கடந்த 2007-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் இந்தியா கைப்பற்றியது. அதே டிராவிட் தலைமையில் 2005-ம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா, வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.

இந்த தொடர் வெற்றிகளுக்கு ஒரு கேப்டனாக டிராவிடின் பங்களிப்பு குறைவு என்றாலும், வெளிநாடுகளில் தொடரை வெல்லும் வலிமையுடைய வீரர்கள் அப்போதைய அணியில் இருந்தனர். இதை ரவி சாஸ்திரிக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/07072057/1189574/Gavaskar-reminds-Shastri-of-Indias-past-overseas-record.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.