Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையாள சினிமாவில் தமிழின சித்தரிப்புகள்

Featured Replies

கேரளாவில் தமிழகத்தின் தாக்கம் அதிகம். குறிப்பாக தமிழ் சினிமா மற்றும் தமிழ் திரையிசை மலையாளிகள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு ஆழமானது. இளையராஜாவும், ஏ.ஆர். ரஹ்மானுமே இன்றும் அவர்களின் மனதுக்குகந்த இசையமைப்பாளர்கள்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவும் மலையாளிகள் மத்தியில் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது. உண்மையில் இந்த ஆதிக்கம் சிவாஜி, எம்.ஜி.ஆர். காலகட்டத்திலிருந்தே தொடங்கிவிட்டது. அன்றிலிருந்தே தொடர்ச்சியாக பல சாதனைகளை கேரள மண்ணில் நிகழ்த்தி வருகிறது தமிழி சினிமா. கே. பாக்யராஜின் 'முந்தானை முடிச்சு', கமல்ஹாசனின் 'அபூர்வ சகோதரர்கள்', சரத்குமாரின் 'சூரியன்', ஷங்கரின் 'ஜென்டில்மேன்', 'காதலன்', மணிரத்னத்தின் 'தளபதி', 'ரோஜா', 'மும்பை' என தொடர்ச்சியாக தமிழ் சினிமா கேரளாவில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டி வந்திருக்கிறது. சமகால மலையாள சினிமாக்களைவிட இவை வியாபார ரீதியாக முன்னிலை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மலையாள சினிமா விருது வழங்கும் விழா முதல் கல்லூரி கல்சுரல் புரோகிராம் வரை அனைத்து விழாக்களிலும் எண்பது சதவீதம் தமிழ் திரையிசைப் பாடல்களே பாடப்படுகின்றன. இப்பாடல்களுக்கே நடனமாடுகிறார்கள். நயன்தாரா, அசின், கோபிகா, மீரா ஜாஸ்மின் என முன்னணி மலையாள நடிகைகள் புகழுக்கும் பணத்துக்கும் தமிழ் சினிமாவையே நம்புகின்றனர்.

ஒருபுற யதார்த்தம் இப்படியிருக்க மறுபுறம் இதற்கு நேர் எதிராக நம்ப இயலாதபடி இருப்பது ஒரு நகை முரண். மலையாளிகளும் மலையாள சினிமா நட்சத்திரங்களும் தமிழின் ஆதிக்கத்தை ஜீரணிக்க முடியாதவர்களாய் உள்ளனர். தமிழில் சம்பாதித்துக் கொண்டே, மலையாள சினிமாதான் மகத்தானது என பேட்டியளிக்க இவர்கள் தவறுவதில்லை. 'பதினாறு வயதினிலே' ஹீரோவையே கோவணத்துடன் பார்த்து வளர்ந்தவர்கள் தமிழர்கள். அதே நேரம், "சாதாரண சப்பல் போட்டு நடித்த என்னை ஷுட்டிங் பார்க்க வந்தவர்கள் ஹீரோ என்றே ஒப்புக்கொள்ளவில்லை. தமிழர்களுக்கு ஜிகினா ட்ரெஸ் போட்டவர்கள்தான் ஹீரோக்கள்" என தனது 'சித்திரம் பேசுதடி' 'அனுபவத்தை' மலையாள டி.வி சேனலில் ஜல்லியடித்தார் நரேன். தமிழர்கள் என்றால் கண்ணை அடிக்கும் கலரில் ட்ரெஸ் போடுகிறவர்கள், சுத்தமில்லாதவர்கள், மந்தபுத்தி உடையவர்கள் என்ற ரீதியிலேயே மலையாள அறிவிஜீவிகளின் மனப்பதிவு உள்ளது. இந்த மனோபாவம் அவர்கள் சினிமாவில் பலவிதங்களில் பிரதிபலிப்பதை காணலாம்.

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், ஸ்ரீனிவாசன், பார்வதி நடித்த படம் 'அக்கரை அக்கரை அக்கரை'. அமெரிக்காவில் நடைபெறும் கதையிது. அங்குள்ள பிரமாண்ட கட்டிடங்களை பார்க்கும் மோகன்லால் ஸ்ரீனிவாசனிடம், "எல்.ஐ.சி. பில்டிங்கின் முன்னால் நின்று வாய் பிளந்து பார்க்கும் தமிழர்கள் இதை பார்த்தால் நெஞ்சு வெடிச்சு செத்துடுவாங்களே" என்பார். தமிழர்களை மட்டம் தட்டும் இந்த வசனங்களை மிக உற்சாகமாக பேசியிருப்பார் மோகன்லால்.

இந்தப் படம் வெளியான காலகட்டத்தில் தென்னிந்தியாவின் மிக உயரமான கட்டிடமாக எல்.ஐ.சி. விளங்கியது. தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்ல கேரளாவிலிருந்து சென்னை வருகிறவர்களும் தவறாமல் ஆச்சரியத்துடன் பார்க்கும் அதிசயமாக அன்று எல்.ஐ.சி. இருந்தது.

கேரளாவில் அன்று இப்படியொரு உயரமான கட்டிடம் இல்லை. இந்த சூழலில் வெளியான 'அக்கரை அக்கரை அக்கரை' படத்தில் சொல்லப்பட்ட அந்த வசனத்தை மலையாள மனதின் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளிப்பட்ட ஒன்றாகவே கருத வேண்டியிருக்கிறது.

தமிழர்களை ஜோசியக்காரர்களாகவும் சுயபுத்தி இல்லாதவர்களாகவும் சித்தரிக்கும் மலையாள திரைப்படங்கள் நிறைய. ஒரு படத்தில் நடிகர் ராஜுவை பார்த்து தமிழர் ஒருவர் "நீ குப்புசாமி இல்லையா?" என்று கேட்பார். அதற்கு அவர் இகழ்ச்சியான குரலில், "குப்புசாமியா? நான் நல்ல நாயர் குடும்பத்தில் பிறந்தவனாக்கும்" என்பார்.

சாதிகளின் ஆதிக்கம் உச்சத்திலிருந்த நேரம் தலித்துகள் முருகன், செல்வம் என்பது போன்ற நாகரிக பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்ட அனுமதிக்கப்பட்டதில்லை. மாடன், குப்புசாமி என்பன போன்ற பெயர்கள் மட்டுமே அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. பெயர்களில் புழங்கிய இந்த சாதி ஆதிக்கமானது தமிழர்கள் மீது மலையாளிகளுக்கு இருப்பதன் வெளிப்பாடே ராஜுவின் பதில்.

மோகன்லால், கிரண் நடித்த படமொன்றில் லாலின் அண்ணனாக வரும் நெடுமுடிவேணு கோக், பெப்சி மற்றும் அயல்நாட்டு பொருட்களை தனது கிராமத்தில் அனுமதிக்காமல் உள்ளூர் தயாரிப்புகளின் உற்பத்தியை பாதுகாத்து வருவார். அதை குலைக்கும் வில்லன் ஒரு தமிழர். அயல்நாட்டு தயாரிப்புகளை கேரள கிராமத்தில் இறக்குமதி செய்து, உள்ளூர் விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களை சீர்குலைக்கும் வேலைகளை தமிழர்கள் செய்வதாக அப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும்.

'நரன்' திரைப்படத்தில் தமிழில் பெயர் பலகை வைப்பதை எதிர்ப்பவராக வருவார் மோகன்லால். தமிழர்களை கடைகளில் அனுமதித்தால் அவர்களால் பிரச்சனைகள் ஏற்படும் என்பது அவர் வாதம். அதேபோல் தமிழர்களை கடைகளுக்குள் அனுமதிக்கும்போது மோகன்லால் சொன்னதைப் போன்று பல்வேறு பிரச்சனைகளை மலையாளிகள் எதிர்கொள்ள வேண்டிவருவதாக அப்படத்தில் சித்தரிக்கப் பட்டிருக்கும்.

மேலே பார்த்த இரு திரைப்பட சித்தரிப்புகளும் கேரளாவில் தமிழர்களை அனுமதிப்பது பெரும் பாதிப்பை உருவாக்கும் என்பதாக உள்ளதை கவனிக்கலாம். நடைமுறை வாழ்க்கையிலும், பிழைப்புக்காக கேரளா செல்லும் தமிழர்களை தொழிலாளர் யூனியனில் சேர்த்துக் கொள்ளாமல் வேண்டுமென்றே அவர்கள் தொழில் செய்ய அனுமதிக்காமல் பரிதவிக்கவிடும் போக்கு கேரள மாநிலம் முழுக்க காணப்படுகிறது. தங்களை அரசியலறிவின் உச்சத்தில் இருப்பவர்களாக கருதிக் கொள்கிறவர்களின் குறுகிய அரசியல் நிலைப்பாடு இது.

நடிகர்களுக்கு நாட்டை தாரை வார்த்து கொடுப்பவர்கள் என்று மலையாளிகளால் கிண்டலடிக்கப்படும் தமிழர்கள், அவர்களை போல் 'அரசியல் முதிர்ச்சி' அடைந்தால் என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள். தமிழ்நாட்டு எல்லைக்குள் எந்த நாயர் டீ கடையும் இருக்காது. தமிழர்கள் மலையாளிகள் அளவுக்கு 'அரசியல் அறிவு' இல்லாமல் இருப்பது மலையாளிகளுக்கே நன்மை!

கடவுளின் சொந்த நாடு என்று கேரளாவை அழைக்கும் மலையாளிகளுக்கு தங்களது இயற்கை வளம் குறித்து மிகுந்த கர்வம் உண்டு. அவர்களைப் பொறுத்தவரை தமிழகம் ஒரு தண்ணீர் இல்லாத புழுதிக்காடு. 'உடையோன்' திரைப்படத்தில் இது அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கும்.

இந்த காரணங்களால் பிற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது கடினம். தயாரிப்பாளர்கள் 'சிவாஜி' ரிலீஸை எதிர்பார்த்து தங்கள் படங்களை முடக்கி வைத்திருக்க இதுவே பிரதான காரணம் என கூறப்படுகிறது.

மொத்த தமிழ் சினிமாவையும் 'சிவாஜி' பயமுறுத்திக் கொண்டிருக்க 'சிவாஜி'யையே பயமுறுத்தும் சாதனமாக உருவெடுத்துள்ளது இணையதளம். படத்தின் புகைப்படங்களையே ரகசியமாக பாதுகாக்கிறது 'சிவாஜி' யூனிட். அதேநேரம் படத்தின் பாடல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன் சில இணையதளங்களில் பாடல்கள் வெளியாகி உலகம் முழுக்க லட்சக்கணக்கானவர்களின் செவிகளை எட்டியுள்ளது. மேலும், ஏப்ரல் 4-ம் தேதி பாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன், ஆடியோ பைரஸி ஆடியோ மார்க்கெட்டை ஆக்ரமிக்கும் வாய்ப்பும் பிரகாசமடைந்துள்ளது.

'உடையோன்' வில்லன் வழக்கம் போல ஒரு தமிழன். நாயகனிடம், தமிழ்நாட்ல மழை பெய்ஞ்சா உங்க கிணத்துல தண்ணி என்பார். அதற்கு நாயகன், அதுக்கு உங்க ஊர்ல மழை பெய்ஞ்சாதானே என்பார்.

இதே படத்தில், தமிழ்நாடு வரும் நாயகனிடம், கரும்பு சாப்பிடுங்க தமிழ்நாட்டு கரும்பு தேன் மாதிரி தித்திக்கும் என்பார் வில்லன். அதற்கு நாயகன், உங்க ஊர் கரும்புதான் தித்திக்கும். எங்க ஊர் தண்ணியே கரும்பு மாதிரிதான் என்பார்.

இதேபோன்று கேரள, தமிழக தண்ணீர் பிரச்சனையை மையமாக வைத்து எழுதப்பட்ட வசனங்களும், காட்சிகளும் மலையாள சினிமாவில் அதிகம். விதிவிலக்காக சில படங்கள் உண்டு. முக்கியமாக இயக்குனர் சத்தியன் அந்திக்காடின் இயக்கத்தில் குஞ்சாகா போபன், சம்யுக்த வர்மா மற்றும் நம்மூர் பார்த்திபன் நடித்த படம் 'நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா'. இதில் பஞ்சாயத்து அளவிலேயே வெடிகுண்டு வீசும் மலையாளிகளின் கலாசாரத்தை சத்தியன் அந்திக்காடு கிண்டலடித்திருப்பார். இதில் தமிழராக நடித்திருக்கும் பார்த்திபன், கேரளா வரும்போது அவரை அங்கிருந்து விரட்டும் முயற்சிகள் நடக்கும். கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரை பயமுறுத்த வெடிகுண்டு வீசுவர். பார்த்திபனோ, எங்க ஊர்ல தீபாவளிக்கு வெடிக்கிற பட்டாசுதான் உங்களுக்கு வெடிகுண்டா என அவர்களை புரட்டி எடுப்பார். அவர்கள் தலைவனை தோப்புகரணம் போட வைத்து, தமிழனும் மலையாளியும் ஒன்றுதான் என சொல்ல வைப்பார்.

தமிழர்களுக்கு எதிராக மலையாளப் படங்களில் காணப்படும் சித்தரிப்புகளுக்கு மாற்றாகவே இந்த காட்சியை எடுத்திருப்பார் சத்தியன் அந்திக்காடு. என்றாலும், மாராப்பு போடாத முண்டு கட்டிய பெண்களையே மலையாளிகளாக தமிழ் படத்தில் சித்தரிப்பது போலவே, ஒரு குறுகிய வட்டத்தில் கீழ்த்தரமாக தமிழர்களை மலையாளப் படங்களில் சித்தரிக்கின்றனர். மலையாள படங்களை உயர்வாகவும் தமிழ் படங்களை ஒருமாற்று குறைந்ததாகவும் கேரள திரைநட்சத்திரங்கள் மதிப்பிடுவதும் இந்த மனோநிலையின் தொடர்ச்சியே.

மாறாக, மலையாளப் படங்களை விட விஜய்யின் 'போக்கிரி'யும் சிம்புவின் 'வல்லவனும்' தான் பெருவாரியான மலையாளிகளின் மனம் கவர்ந்தவையாக மாறிக்கொண்டிருக்கின்றன. இந்த யதார்த்தம் புரியாமல் தொடர்ந்து தமிழர்களை மட்டம் தட்டுவது மலையாள சினிமாவை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்!

:o:rolleyes::o

தமிழ் நாட்டு தமிழர்களுக்கு எங்கு சென்றாலும் அவமானமும் அலட்சியமும் காட்டபடுவது வெகு இயல்பாகிவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.