Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலை போன்று ரவீந்திர வாக்குமூலம் வழங்குவார்

Featured Replies

ரணிலை போன்று ரவீந்திர வாக்குமூலம் வழங்குவார்

1-1bec742e56bfdcc9faca56053bb2ef78d10d940b.jpg

 

கைது செய்ய அவசியம் இல்லை என்கிறார் சட்டம் ஒழுங்கு அமைச்சர்

(எம்.எப்.எம்.பஸீர்)

 ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப் பட்ட விவகாரத்தில் சந்தேகநபர் தப்பிக்க உதவிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத் னவை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார். 

எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சாட்சியம் வழங்கியதைப் போன்று, அட்மிரல் ரவீந்திர சி.ஐ.டி.க்கு வாக்குமூலம் வழங்குவார் என வும் அவர் மேலும் கூறினார். 

ஐ.தே.க.வின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடத்திய விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அட்மிரல் ரவீந்திரவைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. அவரிடம் வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்யப்படவுள்ளது. பிரதமர் ரணில் எவ்வாறு பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி விசாரணைக் குழுவில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தாரோ அதனை ஒத்த நடைமுறையில் வாக்குமூலம் மட்டுமே அவரிடம் பெறப்படவுள்ளது. நாம் கைது செய்ய முயற்சிக்கவில்லை என்றார்.

 இதன்போது, அப்படியானால் ரவீந்திரவை கைது செய்யப் போவதாக சி.ஐ.டி. கோட்டை நீதிவானுக்கு அறிவித்துள்ளதே? அவருக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் 109ஆவது அத்தியாயத்தின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதே என மீளவும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

எனினும் அந்தக் கேள்விக்கும் பதிலளித்த அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார, அட்மிரல் ரவீந்திரவை சி.ஐ.டி. கைது செய்யப் போவதாக யாருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் அறிவிக்கப்படவில்லை. அவர் கைது செய்யப்பட மாட்டார். வாக்கு மூலமே பெறப்படவுள்ளது என்றார்.

கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி 5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசார ணைக்கு வந்திருந்தது.

பிரதான சந்தேக நபர் இந்த வழக்கில் இருந்து தலைமறைவாக இருக்க, முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலகப் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பங்களிப்பை செய்துள்ளார். அதற்கான சான்றுகளைப் பெற்றுள்ளோம். ரவீந்திர விஜேகுணரத்ன, பிரதான சந்தேக நபரை சி.ஐ.டி.யின் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளுக்கு ஆளாவதில் இருந்து சட்ட விரோதமாக தடுத்திருக்கின்றார்' என சி.ஐ.டி. அறிவித்தது.

இதன்போது நீதிவான் லங்கா ஜயரத்ன, அவ்வாறெனில் அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளீர்கள் என சி.ஐ.டி.யிடம் வினவியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த சி.ஐ.டி.யின் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, நாம் அவரைக் கைது செய்யப் போகின்றோம் என்றார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-22#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.