Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் காந்தியின் நினைவேந்தலுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு

Featured Replies

image_cb1f04e511.jpg

முல்லைத்தீவில், காந்திக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கரைதுறைப்பற்று பிரதேசசபையின் அமர்வு, நேற்று நடைபெற்றது.

இதன்போதே,  உறுப்பினர்களான சின்னராசா - லோகேஸ்வரன் மற்றும் தவராசா - அமலன் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

எனினும், ஏனைய உறுப்பினர்கள் இந்த நினைவேந்தலுக்கு ஆதரவளித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் 2ஆம் திகதியன்று, மகாத்மா காந்திக்கு முல்லைத்தீவில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இரு உறுப்பினர்களான லோகேஸ்வரன் மற்றும்  அமலன் ஆகியோர் கடும் எதிர்பை வெளியிட்டுள்ளனர்.

அதாவது, உயிர் தியாகங்கள் பல நிகழ்ந்த இந்த மண்ணில் காந்திக்கு நினைவேந்தல் நடாத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. என அவர்கள் தமது கடும் எதிர்புகளை வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஏனைய உறுப்பினர்கள் இந்நிகழ்வுக்கு பூரண ஆதரவு வழங்குவதால், நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுமென தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

  • தொடங்கியவர்

இந்திய திணிப்பிற்கு துணைபோகின்றதா கரைதுறைப்பற்று பிரதேச சபை?

hg-696x365.jpg

இந்திய அரசின் திணிப்பிற்கு முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச சபை துணை போகின்றதா என கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

22.09.18 அன்று கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்கள் சி.லோகேஸ்வரன் மற்றும் த.அமலன் ஆகியோர் இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டம் தமிழர்களின் வரலாற்று தொன்மையான மாவட்டம் அதில் கரைதுறைப்பற்று பிரதேச சபை மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தை 02.10.18 அன்று இந்திய தூதரகத்தின் உதவியுடன் முல்லைத்தீவில் பாரியளவில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்தறிய கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆறாவது கூட்டத்தொடரில் இந்திய தூதரக பிரதிநிதிகளின் முன்னிலையில் கேட்டறியப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தினை முல்லைத்தீவு  நகர்பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவு தூபியில் கொண்டாடுவதற்கு தவிசாளர் உள்ளிட்ட 21 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தமிழரசு கட்சி உறுப்பினர் சி.லோகேஸ்வரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர் த.அமலன் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

குறித்த நிகழ்வு கொண்டாடுவதற்கு பிரதேச சபை முன்வந்துள்ள நிலையில் இரண்டு உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு தங்கள் கருத்தினை வெளியிட்டுள்ளார்கள்.

இந்திய திணிப்பினை முல்லைத்தீவில் மேற்கொள்வதாற்கான முன்னாயத்தை இந்திய தூதரகம் மேற்கொண்டுள்ளது. முல்லைத்தீவு நகரில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலை பிரதேச சபையின் அனுமதி இன்றியே அமைக்கப்பட்டுள்ளது. இந்த மகாத்மா காந்தி சிலையில் விழா எடுப்பது என்பது முல்லைத்தீவு மண்ணில் நிகழ்ந்த தியாகங்களையும் மண்ணுக்காக போராடி உயிர்நீர்த்தவர்களின் அர்ப்பணிப்புக்களையும் கொச்சைபடுத்தும் செயலாக நாங்கள் இதனை பாக்கின்றோம் என்றும் தெரிவித்த அவர்கள்.

திட்டமிட்டவகையில் முல்லைத்தீவில் குறித்த காந்திசிலை கடந்தவருடமே அமைக்கபட்டதோடு இதுவரைகாலமும் முல்லைத்தீவில் காந்திக்கு விழாவும் எடுக்கபடவில்லை இருந்தபோதிலும் இந்த விழாவை இந்திய துணை தூதரகம் நடாத்துவதற்கு இந்த வருடம் முன்வந்துள்ளது. இது இந்திய திணிப்பை எம் மத்தியில் வலிந்து மேற்கொள்வதற்கான முயற்சியாகும் .இதற்க்கு நாம் துணைபோக முடியாது .

மக்களின் வலிகளை அறிந்தவர்கள் நாங்கள் வாக்குறுதிகளை கொடுத்த மக்களுக்கு நேர்மையாக சேவை செய்யவேண்டிய பொறுப்பு எங்களிடம் உண்டு மக்களின் குரலாக நாங்கள் மக்கள் பிரதிநிதிகளாக மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நிகழ்வினை மேற்கொள்ளும் இந்திய தூதரகத்தின் சதி முயற்சிக்கு எதிர்ப்பினை வெளியிடுகின்றோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

https://www.quicknewstamil.com/2018/09/22/இந்திய-திணிப்பிற்கு-துணை/

21 hours ago, Athavan CH said:

image_cb1f04e511.jpg

முல்லைத்தீவில், காந்திக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கரைதுறைப்பற்று பிரதேசசபையின் அமர்வு, நேற்று நடைபெற்றது.

இதன்போதே,  உறுப்பினர்களான சின்னராசா - லோகேஸ்வரன் மற்றும் தவராசா - அமலன் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

எனினும், ஏனைய உறுப்பினர்கள் இந்த நினைவேந்தலுக்கு ஆதரவளித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் 2ஆம் திகதியன்று, மகாத்மா காந்திக்கு முல்லைத்தீவில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இரு உறுப்பினர்களான லோகேஸ்வரன் மற்றும்  அமலன் ஆகியோர் கடும் எதிர்பை வெளியிட்டுள்ளனர்.

அதாவது, உயிர் தியாகங்கள் பல நிகழ்ந்த இந்த மண்ணில் காந்திக்கு நினைவேந்தல் நடாத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. என அவர்கள் தமது கடும் எதிர்புகளை வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஏனைய உறுப்பினர்கள் இந்நிகழ்வுக்கு பூரண ஆதரவு வழங்குவதால், நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுமென தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

முதலாவது செய்திக்குரிய மூலம் 

http://www.tamilmirror.lk/வன்னி/காந்தியின்-நினைவேந்தலுக்கு-உறுப்பினர்கள்-எதிர்ப்பு/72-222381

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.