Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தலும் – வதையும் – கொலையும் – வசந்த கரனாகொடவின் தொடர்பும்….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தலும் – வதையும் – கொலையும் – வசந்த கரனாகொடவின் தொடர்பும்….

October 7, 2018

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

Navy-Commander-Wasantha-Karannagoda.jpg?

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் முக்கிய சந்தேக நபராக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொடவும் காணப்படுகின்றார் என இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து முன்னாள் கடற்படை தளபதிக்கு நன்கு தெரிந்திருந்தும் அவர் ஆதாரங்களை மறைக்கின்றார் எனவும் முக்கிய சாட்சியை கூட மௌனமாக்கியுள்ளார் எனவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் கடத்தப்பட்ட  இளைஞர்கள் திருகோணமலையில் உள்ள கடற்படை தளத்தின் இரகசிய சித்திரவதை முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தமை குறித்து முன்னாள் கடற்படை தளபதிக்கு நன்கு தெரிந்திருந்த போதும் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை எனவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடத்தப்பட்ட குறித்த 11  இளைஞர்களிற்கும் விடுதலைப்புலிகளிற்கும் எந்த தொடர்புமில்லை என தெரிவித்துள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கடற்படை பேச்சாளராக இருந்த டீகேபி தசநாயக்க மற்றும் சுமித் ரணசிங்க ஆகிய முக்கிய அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த முகாம்களிலேயே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா விடுத்த வேண்டுகோளியைடுத்து வசந்த கரணாகொடவின் செயலாளர் சேர்மல் பெர்ணாண்டோ இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தார் எனவும் சேர்மல் இது குறித்து கடற்படை தளபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்த போதும் அந்த  இளைஞர்களை விடுவிப்பதற்கோ அல்லது அவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கோ கரணாகொட எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு வாக்கு மூலங்களை வழங்கியுள்ள கடற்படையிரை முன்னாள் தளபதி உன்னிப்பாக கண்காணித்து வருகின்றார் எனவும் இதனை தொடர்ந்து 11 தமிழ் இளைஞர்கள் விவகாரத்தில் முன்னாள் கடற்படை தளபதியும் முக்கிய சந்தேகநபராக மாறியுள்ளார் எனவும் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

http://globaltamilnews.net/2018/98607/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.