Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த இராசபக்சே கையும் களவுமாகப் பிடிபடும் நாள் வெகு தூரத்தில் இல்லை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த இராசபக்சே கையும் களவுமாகப் பிடிபடும் நாள்

வெகு தூரத்தில் இல்லை!

-நக்கீரன் (கனடா)-

கடந்த மூன்று மாதத்தில் (தை முதல் பங்குனி வரை) யாழ். குடாநாட்டில் மட்டும் 67 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். 68 பொதுமக்கள் காணாமல் போயுள்ளார்கள். 29 பேர் கடத்தப்பட்டுள்ளார்கள். இந்தத் தகவலை யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது.

படுகொலை, காணாமல் போதல், கடத்தல் போன்றவற்றை வெள்ளை வானில் செல்லும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளும் சிறிலங்கா படையினரும் படையினரோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களும் அரங்கேற்றுகின்றன.

சிறிலங்கா இராணுவத்தினாலும், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களினாலும் விடுத்த கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக 70-க்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் யாழ். மனித உரிமை ஆணையத்திடம் சரணடைந்திருக்கின்றனர். அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு பின்னர் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளோடு கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று (புதன்கிழமை) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையின் இரண்டு மிக் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

கண்ணிவெடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான செயற்கை உறுப்புக்களைத் தயாரித்து வழங்கும் 'வெண்புறா" நிறுவனத்தின் கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.

வழக்கம் போல ஸ்ரீலங்கா விமானங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வி. புலிகளின் இலக்குகளை அழித்துள்ளதாகவும் அழிக்கப்பட்ட கட்டிடம் கடற்புலிகளின் தலைமையகம் என ஸ்ரீலங்கா அரசு பொய் சொல்லியுள்ளது.

இன்று (புதன்கிழமை) சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணி வவுனியா வடக்கு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடத்திய தாக்குதலில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

வவுனியா மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர்களிடம் கோடிக்கணக்கில் கப்பம் கேட்டு கருணா குழு தொலைபேசியில் விடுத்த மிரட்டலை அடுத்து மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சில கிழமைகளுக்கு முன்னர் இதே குழுவினால் வவுனியா வழக்கறிஞர்கள் மிரட்டப்பட்ட போது அவர்கள் நீதிமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தார்கள்.

ஒரே நாளில் நடைபெற்ற மனிதவுரிமை மீறல்கள் பற்றி செய்தித்தாள்களில் வெளிவந்த செய்திகள் இவை. வெளிவராத செய்திகளும் இருக்கக் கூடும்.

இவ்வாறு நாள்தோறும் நடக்கும் கொலை, கடத்தல், காணமல் போதல், கப்பம் கேட்டல் போன்றவை பற்றி மகிந்த இராசபக்சவோ அவரது அமைச்சர்களோ ஒரு துளி வெட்கப்படுவதாகவோ துக்கப்படுவதாகவோ தெரியவில்லை. மாறாக இந்த மனிதவுரிமை மீறல்களை நியாயப்படுத்தி இராசபக்சவும் அவரது அமைச்சர் பட்டாளமும் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

மகிந்த இராசாபக்சே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் எனப் பேசி வருகிறார். அதனை ஒழிப்பதே தனது அரசின் தலையாய கொள்கை என வெளிப்படையாக ஒளிவு மறைவின்றிச் சொல்லி வருகிறார்.

மகிந்த சிந்தனையின் படி இனச் சிக்கலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு இல்லை. இராணுவ பலத்தின் மூலமே தீர்வு. இது மட்டுமல்ல -

போர் நிறுத்த ஒப்பந்தம் செல்லுபடியாகாத - சட்டத்துக்கு முரணான ஒரு ஆவணம்.

தமிழர்கள் தனி தேசிய இனம் இல்லை.

வட - கிழக்கு இணைப்பில்லை.

தமிழ்மக்களது தாயகம் வட- கிழக்கு என்பதை ஏற்பதில்லை.

நோர்வேயின் அனுசரணை தேவையில்லை.

கண்காணிப்புக் குழுவினர் ஸ்ரீலங்காவில் இருந்து துரத்தப்பட வேண்டும்.

என்பவை மகிந்த சிந்தனையாகும். இவற்றுக்கு செயல் வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

தென் தமிழீழம் மீது தொடர்ச்சியாக மேற்கொண்ட வலிந்த இராணுவ படையெடுப்பினால் பேரளவு நிலப்பரப்பு இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ச்சியான விமான குண்டு வீச்சினாலும் செல் தாக்குதலினாலும் உயிர் இழப்புக்களும் பொதுச் சொத்துக்களும் நாசமாகியுள்ளன.

மானிட உரிமைக்கான கண்காணிப்பகம், செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் கத்தோலிக்க நிவாரண குழுக்கள் கடந்த சில கிழமைகளில் மட்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தொகை 150,000 உயர்ந்துள்ளது என்றும் இடப்பெயர்வுக்கு ஆளான மொத்த மக்கள் தொகை 350,000 ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கின்றன.

வாகரையில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் அவர்களது விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி மீள்குடியமர்த்தப் பட்டுள்ளனர். அதே நேரம் சம்பூரில் இருந்து விரட்டப்பட்ட 8,000 தமிழ்மக்கள் தொடர்ந்து ஏதிலிகளாக கூடாரங்களில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது மீள் குடியேற்றம் கேள்விக்குறியாகியுள்ளது.

மீள் குடியேற்றப்படும் மக்கள் கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவிலும் நெடுஞ்சாலைகளின் இரு பக்கத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவிலும் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.

தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்திவரும் ஒட்டுமொத்தமான மனிதவுரிமை மீறல்களையும் இனவொழிப்பையும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என ஸ்ரீலங்கா அரசு சொல்கிறது.

மனிதவுரிமை அமைப்புகளும் பன்னாட்டு சமூகமும் ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக வைக்கும் குற்றச்சாட்டுக்கள் இரண்டு ஆகும்.

ஒன்று மனிதவுரிமை மீறல்கள். இரண்டு இனச் சிக்கலுக்குத் தீர்வாக ஸ்ரீலங்கா அரசு முன்வைக்காத அரசியல் திட்டம். இந்த இரண்டும் தொடர்பாக ஸ்ரீலங்கா அரசு ஒளித்து விளையாடுவதாகவே மனித உரிமை அமைப்புக்களும் பன்னாட்டு சமூகமும் எண்ணுகின்றன.

ஆளும் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனச் சிக்கலுக்கு தீர்வு யோசனைகளை வைப்பதாகச் சொல்லியது. ஆனால் இதுவரை அது எந்தத் தீர்வையும் முன்வைக்காது காலத்தை கடத்திக் கொண்டு போகிறது.

நிபுணர்கள் குழு சமர்ப்பித்த ஏ அறிக்கையையும் பி அறிக்கையையும் பேராசிரியர் விதாரண இணைத்து ஒரு கலப்பு அறிக்கை தயாரி;த்ததாகத் தெரிகிறது. ஆனால் அதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. இதோ வருகிறது அதோ வருகிறது என்று ஸ்ரீலங்கா அரசு சொல்லிக் கொண்டு வருகிறது.

மகிந்த இராசபக்சவின் அரசுக்கு இணைத்தலைமை நாடுகள் உள்பட பல நாடுகள் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவிக்காவிட்டாலும் மறைமுகமாக அதனை வெளிப்படுத்தி வருகின்றன.

வி.புலிகள் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது குண்டு வீசியதை வைத்துக் கொண்டு ஸ்ரீலங்கா அரசு புலிகள் மீது கரி பூச எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. வி.புலிகளது வான்படை தென்னாசியாவுக்கு மட்டுமல்ல முழு உலகத்துக்குமே பாரிய அச்சுறுத்தல் என்ற ஸ்ரீலங்காவின் பல்லவிக்கு அனுபல்லவி பாட எந்த நாடும் முன்வரவில்லை.

இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் வி.புலிகள் கட்டுநாயக்க விமான தளம் மீது நடத்திய தாக்குதல் பற்றிக் கேள்வி கேட்கப்பட்டபோது 'அந்தத் தாக்குதலையும் நாம் தனித்துப் பார்க்கக் கூடாது. அங்கு நடைபெறும் ஒட்டுமொத்த வன்முறை நிகழ்வுகளையும் நாம் பார்க்க வேண்டும்" என்று பதில் அளித்திருக்கிறார். இது மகிந்த இராசபக்சேயுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் அய்யமில்லை. இந்தியா மட்டுமல்ல கனடா, அமெரிக்கா, யப்பான் உட்பட வேறெந்த நாடும் புலிகளின் வான் தாக்குதலைக் கண்டிக்கவில்லை!

முன்னாள் வெளியுறவு அமைச்சர் கதிர்காமர் உட்பட தெரிந்தெடுக்கப்பட்ட 15 கொலைகள் தொடர்பாக விசாரித்து வரும் ஆணையத்தில் (ஊழஅஅளைளழைn ழக ஐஙெரசைல (ஊழுஐ) இருந்து இரண்டு உறுப்பினர்கள் விலகி விட்டார்கள். மகிந்த இராசபக்சே சமுதாய மதிப்புக்குரிய மனிதர்களைக் கொண்ட அனைத்துலக சுதந்திர குழுவொன்றையும் (ஐனெநிநனெநவெ ஐவெநசயெவழையெட புசழரி ழக நுஅiநெவெ Pநசளழளெ (ஐஐபுநுP) நியமித்துள்ளார். இந்த முயற்சிகள் பன்னாட்டு மனிதவுரிமை அமைப்புக்களால் வீசப்படும் மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டில் இருந்து தப்ப ஸ்ரீலங்கா அரசு எடுத்திருக்கும் தற்காப்பு நடவடிக்கைகள் ஆகும்.

'இராணுவ தீர்ப்பு இறுதியில் எந்த முடிவுகளையும் பெற்றுத்தராது. ஸ்ரீலங்காவும் வி.புலிகளும் தொடர்ந்து பேசி இலங்கைத் தீவில் அமைதியை ஏற்படுத்து வேண்டும்" என இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தியிருக்கிறார். சார்க் மாநாடு முடிந்த கையோடு நடந்த செய்தியாளர்களின் மாநாட்டிலேயே வெளியுறவு அமைச்சர் இவ்வாறு பேசியுள்ளார்.

சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்புப் படையெடுப்புக்களை பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எனச் சொல்லி மகிந்த இராசபக்சே அதனை நியாயப்படுத்தப் பார்க்கிறார்.

பயஙகரவாதத்துக்கு எதிரான போரில் மனிதவுரிமைகள் மீறப்படலாம் என்ற கோட்பாட்டை அவர் முன்வைத்துள்ளார்!

இதன் ஒரு அம்சமாகவே தில்லியில் நடந்த பிரதேச ஒத்துழைப்புக்கான தெற்காசிய அவையின் (ளுயுயுசுஊ) மாநாட்டில் மகிந்த இராசபக்சே 'பயங்கரவாத ஒழிப்பு" வாளைக் கையில் எடுத்தார். ஆனால் அவரது முயற்சி வெற்றிபெறவில்லை.

அதி தீவிர பவுத்த - சிங்கள பேரினவாதத்துக்கு கொடிபிடிக்கும் வுhந ஐளடயனெ என்ற நாளேடு மகிந்த சிந்தனையை பிரதிபலிப்பது போல் ஆசிரிய உரை தீட்டியுள்ளது.

�றுயச ளை ய pயஉமயபந றாநசந உழவெநவெள யசந iளெநியசயடிடந யனெ னளையளவநச ளை iநெஎவையடிடந. ர்நnஉநஇ வாந நெநன வழ யஎழனை வை. டீரவஇ ரகெழசவரயெவநடலஇ வாநசந யசளைந உநசவயin ளவைரயவழைளெ றாநசந ளவயவநள யசந டநகவ றiவா ழெ யடவநசயெவiஎந வழ றயச in னநயடiபெ றiவா அழளெவநசள வாயவ டிநடநைஎந in வநசசழசளைஅ. ஐக வாந றழசடன hயன ழெவ கழரபாவ ர்வைடநச றiவா அiபாவ யனெ அயin றந றழரடன hயஎந டிநநn டiஎiபெ in hநடட வழனயல. ர்யன வாந துஏP டிநநn யடடழறநன வழ நளவயடிடiளா வைள Pழட Pழவ சநபiஅநஇ ளுசi டுயமெய றழரடன hயஎந டிநநn hநடட ழn நயசவா. வுhந ளயஅந பழநள வழ வாந டுவுவுநுஇ றாiஉh ளை உயரளiபெ hநடடiளா ளரககநசiபௌ வழ வாந pநழிடந ரனெநச வைள தயஉமடிழழவ யனெ நடளநறாநசந.� (வுhந ஐளடயனெ � யுpசடை 02இ 2007)

'போர் என்பது ஒரு சிப்பம் மாதிரி. அதனில் உள்ள பொருள்களைப் பிரிக்க முடியாது. போர் அழிவும் தவிர்க்க முடியாதது. எனவே அதனைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், துரதிட்டவசமாக சில சூழ்நிலைகளில் பயங்கரவாதத்தில் நம்பிக்கை கொண்டுள்ள வேதாளங்களோடு சம்பந்தப்படும் போது அரசுகளுக்குப் போர் தவிர வேறு வழியில்லை. இந்த உலகம் இட்லரோடு மூர்க்கத்தனமாகப் போர் புரியாது இருந்திருந்தால் நாங்கள் இன்று நரகத்தில் இருந்திருப்போம். பொல் பொட் அரசு போல் ஒன்றை நிறுவ ஜேவிபி அனுமதிக்கப்பட்டிருந்தால் இந்தப் புவியே நரகம் ஆக மாறியிருக்கும். வி.புலிகளும் அவ்வாறே. அவர்கள் தங்களது காலணிக்குள்ளும் வெளியிலும் உள்ள மக்களுக்கு சொல்லொணாத் துன்பத்தை இழைக்கிறார்கள்."

ஆரிய இனவெறி பிடித்த இட்லர் சிறுபான்மை யூத இனத்தை கொன்று குவித்தவன். ஜேவிபி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ஆயுதமேந்தி மக்களைச் சுட்டுக் கொன்ற அமைப்பு. இந்தக் கும்பலோடு தமிழ் மக்களது வாழ்வுரிமையைத் தட்டிப்பறித்த சிங்கள-பவுத்த வெறியர்களோடு தற்பாதுகாப்பு அடிப்படையில் போராடும் வி.புலிகளை வுhந ஐளடயனெ நாளேடு ஆசிரியர் ஒப்பிட்டு எழுதுவது முற்றிலும் முட்டாள்தனமானது! அதில் அறிவு நாணயம் இல்லை.

இது இவ்வாறிருக்க ஸ்ரீலங்கா அரசு அமெரிக்காவிடம் இருந்து ஆடைடநnnரைஅ ஊhயடடநபெந ஊழசி திட்டத்தின் கீழ் பொருளாதார உதவிநிதியாக 590 மில்லியன் (59 கோடி) அமெரிக்க டொலரைக் கேட்டிருக்கிறது. அமெரிக்கா சென்ற ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சர் ஸ்ரீலங்காவின் பொருளாதார மேம்பாட்டுக்கு அமெரிக்காவின் உதவி தேவைப்படுகிறது என்றும் ஸ்ரீலங்காவில் நடைபெறும் மனிதவுரிமை மீறல்கள் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

மனிதவுரிமை அமைப்புக்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தின் கண்மூடித்தனமான குண்டுத் தாக்குதல்களைக் கண்டித்து வருகின்றன. ஒட்டுக் குழுவான கருணா குழு சிறார்களைப் படையில் சேர்ப்பதற்கு அரசும் அரச படைகளும் ஒத்தாசையும் ஒத்துழைப்பும் வழங்குகின்றன என்று மானிட உரிமை கண்காணிப்பகம் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளது.

ஸ்ரீலங்கா அரசு மனிதவுரிமை அமைப்புக்களின் வாயை மூடப்பார்க்கிறது, ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுகிறார்கள், ஊடக சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளும் வீசப்படுகின்றன.

எதிர்வரும் யூன் மாதத்துக்கு முன்னர் ஸ்ரீலங்கா அரசு மில்லேனியம்; அமைப்பின் இயக்குநர் அவைக்கு தனது உட்கட்டுமானத் திட்டங்கள்பற்றிய விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். மில்லேனிய அமைப்பின் செலவினங்கள் அமெரிக்க காங்கிரசின் கண்காணிப்புக்கு அப்பாற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நீர்ப்பாசனத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மில்லேனியம் அமைப்பு சுற்றுச்சூழல் காரணங்களுக்காக புறந்தள்ளிவிட்டது. பெயரைத் தெரிவிக்க விரும்பாத இந்த அமைப்பின் பேச்சாளர் ஒருவர் 'ஸ்ரீலங்காவின் மனிதவுரிமை மீறல்கள் பற்றி உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

மானிட உரிமைக் கண்காணிப்பகம் மனிதவுரிமை மீறல்களைப் புரியும் நாடுகளுக்கு அமெரிக்கா நிதியுதவி செய்வதைக் கடுமையாக எதிர்த்து வருகிறது. 'அமெரிக்கா மனிதவுரிமைகள் பற்றி சில கோட்பாடுகளை வைத்திருக்கிறது. ஆனால் நடைமுறையில் அவற்றைக் கடைப்பிடிக்கத் தவறிவிடுகிறது. அப்படிச் செய்வதால்; மனிதவுரிமைகளை மீறலாம் என்ற செய்தி மற்ற நாடுகளுக்கும போய்விடுகிறது" என அந்த அமைப்புச் சுட்டிக் காட்டியுள்ளது.

பல நாள் கள்ளன் ஒரு நாள் பிடிபடுவார்ன். மனிதவுரிமைகளையும் ஊடக சுதந்திரத்தையும் காலில் போட்டு மிதிக்கும் மகிந்த இராசபக்சே கையும் களவுமாகப் பிடிபடும் நாள் வெகு தூரத்தி;ல் இல்லை!

தமிழ்நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.