Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிலை திறப்பின் உணர்வலைகள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிலை திறப்பின் உணர்வலைகள் !

_17175_1540358932_ghyt.jpg

(ஸ்ரீ கிருஷ்ணர் ) 2000ம் காலப்பகுதியில் மட்டக்களப்பில் வாழ்ந்த புத்திஜீவிகள் எனப்படும் சிலருக்கு உயர்பதவிகளைப் பிடிக்க பிரதேசவாதம் தேவைப்பட்டது. இதே வேளை அன்றைய  ஆயுதப்போராளியான கருணா எனப்படும் (விநாயகமூர்த்தி முரளிதரன்) புலிகள்  இயக்கத்திலிருந்து பல்வேறு தவறுகளையும், மோசடிகளையும் செய்தபின்னர் தன்னைச் சுற்றவாளியாக வெளியுலகத்துக்கு காட்ட அவருக்கு தேவைப்பட்ட ஆயுதம் பிரதேசவாதமாகும். ஒருசில  பிரதேச கல்விமான்கள் தமது இலக்கை அடைவதற்காகக்  காலத்துக்கு காலம் மெதுவாகச்  சில மூத்த போராளிகளின் மூளையில்பிரதேசவாத நஞ்சை ஏற்றினர்.மட்டக்களப்புப்  பிரதேச அதீத   பற்றுக்   சில  கொண்ட மூத்த போராளிகள்  இந்த கல்விமான்கள்  எனப்படும்   கபடர்களின் வலைக்குள் வீழ்ந்தது யாவருமறிந்ததே. "காகம் இருக்க பனம்பழம் வீழ்ந்த“  கதைபோல் இது கருணாவுக்கு வாய்ப்பாய் போனது அப்போது .
இந்த பிரதேசவாதச் சூறாவளி மட்டக்களப்பில் சுழன்று அடித்ததன் காரணமாகப் பல அப்பாவிகள் புத்திஜீவிகள் பத்திரிகையாளர்கள் எனப்படுவோர் கருணாவின் ஆசீர் வாதத்துடன்  பிள்ளையான் குழுவால்  ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர். கலாநிதி ரவீந்திரநாத் , விரிவுரையாளர் தம்பையா போன்றோருடன் மூத்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன், ஜோசெப் பரராஜசிங்கம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.இது மட்டுமின்றி யாழ் வியாபாரிகள் தமது வியாபார நிலையங்களையும் குடியிருப்புக்களை விட்டு வெளியேறும் நிலைக்கு உள்ளானார்கள்.இதன் காரணமாக மட்டக்களப்பு நகரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் இருந்த  வியாபாரத் தளங்கள் இன்று முஸ்லிம்கள் வசமாகியுள்ளது. நிலைமை மோசமாகி ப்போனதால் இதன்   பின்புலத்தில் நின்ற மட்டக்களப்புப் புத்திஜீவிகள் எனப்படும் பலர் புலிகளுக்குப் பயந்து நாட்டை விட்டு ஓடி இன்றுவரை இன்னும் புலம்பெயர்ந்து வாழுகின்றனர்.இதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் அழிவு தொடக்கம் தமிழ் இனத்துக்கு ஏற்பட்ட சகல துன்பம் யாவரும் அறிவர். இது பழைய கதை .
தற்போதைய சூழலில் இலங்கையில் சகல தமிழரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து தமது உரிமைகளைப் பெறவேண்டும் .  ஆனால் கற்றவர்கள்  எனப்படும் ஒரு தரப்பினர் மீண்டும் பிரதேச வாதத்தை முன்னெடுத்துச்  செல்ல முயற்சிப்பதன்   மூலம் திரும்பவும் மட்டக்களப்பை  ஒருகொலைக்களமாக மாற்ற எண்ணுகிறார்களா? என்ற வினா எழும்புகின்றது.
 கிழக்கின் முன்னாள்   முதலமைச்சர் ஒருவரைக் கதாநாயகனாகக்காட்டி தமிழரசுக் கட்சியின் மீதும் அதன் ஸ்தாபகர் தந்தை செல்வா மீதும் சேறு பூசும் நடவடிக்கை மிக விந்தையானது வினோதமானதுமாகும்.
இலங்கைத் தமிழ்மக்களின் ஒரு கட்சியாக இருந்த தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆனது 1948 ல் மக்களின் உரிமைகளை மறந்து அபிவிருத்தியைக்  காரணம்  காட்டி தலைவர் ஜி ,ஜி .பொன்னம்பலம் அவர்கள் அமைச்சுப்பதவியினைப் பெற்றார். இதன் காரணமாக  இலங்கைத் தமிழர் மட்டுமின்றி இந்தியத் தமிழர்களும் பாதிப்புக்குள்ளாக ஜி. ஜி பொன்னம்பலம் அவர்கள் துணைபோனார். அபிவிருத்திக்கு அப்பால் தமிழ் மக்களின் உரிமையே பிரதானமானது  என தந்தை செல்வா தமிழ் காங்கிரசிலிருந்து விலகி தமிழரசுக் கட்சியை உருவாக்கினார் இது வரலாறு .
பிறப்பால் கிறிஸ்தவரான தந்தை செல்வா அவர்கள் தமிழ் பேசும் சகல மக்களையும் ஒன்றிணைத்து  அவர்களின் உரிமைக்காக இறுதிவரை போராடினார். இதனால் தான் கிறிஸ்தவரான அவரின் இறுதி அடக்கம் சைவ முறைப்படி நடந்தது யாவரும் அறிந்ததே.
தந்தை செல்வாவின் அரசியல் நேர்மை தனது மக்களின் பால் அவர் கொண்டபற்றுறுதி  மாற்று இனத்தவர்களும் தந்தை செல்வாவை அவ்வப்போது பாரட்டத் தவறவில்லை.
இத்தகைய பெருமையும் சிறப்பும் நல்லொழுக்கமும்  கொண்ட  தந்தை செல்வாவுக்கு மட்டக்களப்பு மக்கள் 15.10.2018. அன்று  மாநகர சபை முதல்வரின் துணையுடன் முழுச் சிலையொன்றை நிறுவி மட்டக்களப்புக்கு நகருக்குப்  பெருமை சேர்த்தனர் .மட்டக்களப்பில் கடந்த காலத்தில் நிலவிய அராஜக அரசியல் சூழ்நிலையால் அப்போது சிலை நிறுவாமல்ப்  போனதால் கவலை கொண்ட பலர் தற்போது களிப்பற்று உள்ளனர்.
.எது எப்படி இருப்பினும் .இவ்விடயம்தொடர்பாக சாதகமான கருத்துக்களையும் பாதகமான கருத்துக்களையும் சமூக வலைத் தளங்களில் பதிவேற்றி வருகின்றனர் .
பிள்ளையான் கட்டிய பஸ்நிலையத்தில் சிலை  நிறுவ  வெட்கமில்லையா ? மட்டக்களப்பானுக்கு யாழ்ப்பாணத்தில் சிலை   வைப்பார்களா? போன்ற விஷமத்தனமான கருத்துக்களும் உள்ளடக்கம்.  இவற்றை சாதாரண  மக்கள் வெளிப்படுத்தவில்லை.
மட்டக்களப்பு பிரதேசத்துக்கு தொழில் நிமிர்த்தம் வந்து நன்கு உழைத்து /ஊழல் செய்து வீடு, வாசல் என பல வசதிகளை அடைந்து  வாழ்வோரும் மட்டக்களப்பில் அரசியல் செய்ய வந்தோரும் இதில் மிக முக்கியமானவர்கள் ஆகும் . "ஆடு  நனைகின்றது என்று ஓநாய் அழுகின்ற“ கதைதான் இது .
எந்த இடத்தில் சிலை அமையப்போகிறது என்பதே தெரியாமல் செய்தி வெளியிடும் இந்த அவசரக்குடுக்கைகளின் நோக்கம் இவர்கள் யார் ? என்பதை  மக்கள் நன்கு அறிவர்.
மக்களுக்காக சேவைசெய்யாமல் சொந்த நலனுக்காக அரசியல் செய்யும் அரசியல் வாதிகள், ஊழல் அரச அதிகாரிகள் மலிந்த காலம் இது .சாதாரண  போராளியாக இருந்து தமிழ் இனத்தைக் காட்டிக்கொடுத்து அவ்வினத்தை அழித்து அவர்களின் சதையிலும் ,குருதியிலும் புரண்டு இன்று கோடீஸ்வரர்களாக  வாழும் கயவர்களின் ஊது குழல்கள் இவர்கள் .
தந்தை செல்வா வளர்த்த தமிழ் தேசிய ஒற்றுமை காரணமாக சொல்லின் செல்வர்` என அழைக்கப்பட்ட செல்லையா இராஜதுரை அவர்கள் தனது பேச்சு வன்மையால்  அன்று  யாழ் மக்கள் தமது கதாநாயகனாக ஏற்றனர் .   அதனை அடுத்து வந்த தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட தமிழ்த் தேசியம்,தமிழர் ஒற்றுமை காரணமாக மட்டக்களப்பு வாவிக்கரையில் பிறந்து வாழ்ந்த சிவநாதன் கிசோர் 2004ல் வன்னி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினராக முடிந்தது . மட்டக்களப்பில் பிறந்து வளராத மட்டக்களப்பின் வரலாறு தெரியாதவர்கள் இதை அறிய வாய்ப்பு இல்லைத்தான் .  
உரிமையில்லாத அபிவிருத்தி எந்த சமூகத்துக்கும் பாதுகாப்பற்றது என்பதை கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு பேரு வளையில் நடைபெற்ற சம்பவங்கள் தெளிவாகக் கோடிட்டு காட்டுகிறது.        
உரிமைக்கான  போராட்டத்தை விட்டு 1948 அபிவிருத்திக்கான பாதையில் பயணித்தால் ஏற்பட்ட பாதிப்பை கடந்த 70ஆண்டுகளில் கேட்டும் கண்டும் வருகிறோம் . இத்தகைய சூழ்நிலையில் தமிழரசுக்கட்சி உரிமைகளை விட்டு அபிவிருத்தி செய்ய அமைச்ச பதவிகளை ஏற்கவேண்டும் பலர் கோஷிக்கின்றனர்.தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை தூசிக்கின்றனர்.இது தொடர்பாக கடந்தகால வரலாறுகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் தேவை .அற்ப சலுகைகளுக்காக எமது உரிமைக்கான பயணத்தை மறவாது தந்தை காட்டிய வழியில் உறுதியுடன் பயணிப்போம் ,
தந்தை செல்வாவின் உருவச்சிலை நகரின் மையத்தில் தலைநிமிர்ந்து நிற்பது அவரின் தூய வாழ்க்கையை உலகிற்கு பறைசாற்றுகிறது . அதன் வழியில் பயணிப்போம் சுயவழியில் அரசியல் செய்து ஆதாயம் தேட முனைவோருக்கு இது இடஞ்சலாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை .         

 

http://www.battinaatham.net/description.php?art=17175

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.