Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிடைத்த வரத்தை பாதுகாப்பதற்கு பதில், மக்களின் நம்பிக்கை, ஆணையை காட்டிக்கொடுப்பது கேவலமான செயல்…. ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிடைத்த வரத்தை பாதுகாப்பதற்கு பதில், மக்களின் நம்பிக்கை, ஆணையை காட்டிக்கொடுப்பது கேவலமான செயல்…. ரணில்

October 30, 2018

ranil-wicramsinghe-2.jpg?resize=650%2C43

மக்களின் நம்பிக்கை, மக்களின் ஆணையை காட்டிக்கொடுப்பது மிகவும் கேவலமான செயல் எனவும் அவ்வாறான செயலை செய்வதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை எனவும் அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (30.10.18) கொழும்பில் இடம்பெற்ற ´நீதியின் குரல்´ ஆர்ப்பாட்டத்தின் போது கருத்துரைத்த  அவர், ஜனநாயக சக்திகளுடன் ஐக்கிய தேசிய முன்னணியாக இன்று இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டது, நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்து நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தி நல்லிணக்கத்துடன் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதே என அவர் தெரிவித்துள்ளார்.

“கடந்த காலங்களில் ஜனநாயகத்தை பாதுகாக்க நாங்கள் சிறைக்கு சென்றதாகவும் உயிர் தியாகம் செய்ததாகவும் கண்ணீரினாலும் வியர்வையினாலும் யுத்தம் செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதுடன் நான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருந்தேன். நாங்கள் தனிநபர்களாக இதற்கு தெரிவு செய்யப்படவில்லை நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக எமக்கு வழங்கப்பட்ட வரமே இது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு கிடைத்த வரத்தை பாதுகாப்பதற்காக 19 அரசியலமைப்பு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டதாகவும் சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாகவும் கூறிய றணில் விக்கிரமசிங்க, இருப்பினும் துரதிஷ்டவசமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த வரத்தை மீறியதாகவும் மீண்டும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை கொண்டு வருவதற்கு ஜனாதிபதி முயற்சி செய்து வருவதாகவும்,  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை கொண்டு வருவது சட்ட விரோதமானது எனவும் அதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதிக்க போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/2018/101363/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.