Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே மஹிந்தவுடனான சந்திப்பு - த.தே.கூ.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே மஹிந்தவுடனான சந்திப்பு - த.தே.கூ.

ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வுகளைப் பிற்போட்டிருந்தாலும் அதையும் மீறி பாராளுமன்றத்தை கூட்டுகின்ற அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது. sumanthiran.jpgஆகையினால் ஜனாதிபதி இணங்கினாலும் இணங்காவிட்டாலும் பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை கூட்டப்பட வேண்டும் என கூட்டமைப்பு சார்பில் சபாநாயருக்கு தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும்தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் அவரது இல்லத்தில் அவரை சந்தித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு கேட்டிருந்தும் கூட அதை நிராகரித்து வீட்டில் மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற கோதாவில் மாத்திரம் தான் நான் அவரை சந்திப்பேன் என்று அவரை சந்தித்தார் எதிரக்கட்சித் தலைவர்.

இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் அடிப்படைக் காரணம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஜனாதிபதி பிரதம மந்திரியொருவரை நியமிப்பதாக செய்த அறிவிப்பு.

ஏனெனில் 19 ஆவது திருத்தத்திற்கு முன்னதாக ஜனாதிபதிக்கு அந்த அதிகாரம் இருந்தது அது விசேடமாக 19 ஆவது திருத்தத்தில் அது விலக்கப்பட்டது. 

ஆகையினால் அதிகாரம் இல்லாமல் ஜனாதிபதி செய்த இந்த செயற்பாட்டினால் தான் இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது. 

உடனடியாக பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அதற்கு மஹிந்த ராஜபக்ஷவும் உதவிசெய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார். 

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில நாங்கள் சந்தித்த போது, சபாநாயகர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

அதற்காக ஜனாதிபதியிடத்தில் பரிந்துரைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி அந்த பரிந்துரையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் மீளவும் நாங்கள் சந்தித்து அடுத்ததாக நாம் என்ன செய்யலாம் என்பதுபற்றி சிந்திக்கலாம் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு சந்தித்தது அரசியலமைப்புக்கு முரணான இந்த செயற்பாடுகள் குறித்து நாங்கள் ஆராய்ந்துள்ளோம்.

எவ்வாறு வாக்களிப்பது குறித்து நாங்கள் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை. ஆனால் ஜனநாயகத்திற்கு விரோதமாக, சட்டவிரோதமாக அரசியலமைப்புக்கு விரோதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நாங்கள் கருத்தில் கொண்டுதான் எங்களது தீர்மானங்களை எடுப்போம். நாங்கள் பேசி ஆராய்ந்து தான் முடிவெடுப்போம். 

மற்றவர்களுக்கு அவசரம் என்றதற்காக நாங்கள் எங்களுடைய முடிவை அவசரமாக அறிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது. 

எந்தப்பக்கம் வெல்லும் என்றதை அவதானித்து கட்சி தாவுகிறன்ற அவசியமும் கிடையாது. எங்களை அவசரப்படுத்துபவர்களின் பிரதான நோக்கம் யார் வெல்லப்போகின்றார்கள் என்பதை வைத்து தாங்கள் எந்தப் பக்கம் தாவவேண்டும் என்பதை தீர்மானிப்பதற்காக. அதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. 

நாங்கள் குறித்த கொள்கையின் அடிப்படையிலே தேவைப்படுகின்ற நேரத்திலே தான் நாங்கள் தீர்மானம் எடுப்போம். 

இறுதியான தீர்மானம் எட்டப்படவில்லை. ஆனால் நடந்த விடயங்கள் அரசியலமைப்புக்கு மாறாக நடத்தப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி தனக்கு அதிகாரமில்லாததொரு செயலை செய்துள்ளார் என்பதை நாங்கள் எல்லோரும் திட்டவட்டமாக ஏற்றுக்கொண்டுள்ளோம். 

கூட்டமைப்பு சார்பில் நாங்கள் சபாநாயருக்கு தெரிவித்துள்ள கருத்து, ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வுகளைப் பின்போட்டிருந்தாலும் அதையும் மீறி பாராளுமன்றத்தை கூட்டுகின்ற அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது. அது தான் சரியான சட்ட நிலைப்பாடு. 

ஆகையினால் ஜனாதிபதி இணங்கினாலும் இணங்காவிட்டாலும் பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை கூட்டப்பட வேண்டும் என்பதை நாங்கள் உறுதியாக தெரிவித்துள்ளளோம். 

டலஸ் அழகப்பெரும தெரிவித்த கூற்றை எதிர்க்காட்சித் தலைவர் தாமதமாகவே கேள்விப்பட்டார். கேள்விப்பட்ட உடன் அதனை மறுத்து ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றி எவ்விதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை. வேண்டுமென்றே வழங்கப்படும் பொய்யான தகவல் என எதிர்க்கட்சித் தலைவரும் மறுத்து ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/43627

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.