Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்­லிம்­களை அர­வ­ணைப்பது போன்ற பாசாங்கு எதற்கு..?: இன­வா­த சிந்தனைகளின் உச்சகட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்­லிம்­களை அர­வ­ணைப்பது போன்ற பாசாங்கு எதற்கு..?: இன­வா­த சிந்தனைகளின் உச்சகட்டம்!

 

முஸ்­லிம்கள் குறித்து பௌத்த கடும்­போக்­கு­வா­திகள் சிங்­கள மக்­க­ளி­டையே பல்­வேறு பீதி­களை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். சிங்­கள மக்­க­ளி­டையே இன­வா­தத்தைத் தூண்டி அத­னூ­டாக ஆட்சி அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வதே இவர்­களின் நோக்­க­மாகும். யுத்த காலத்தில் தமி­ழர்­களின் தாயகக் கோட்­பாடு, ஆயுதப் போராட்டம் போன்­ற­வற்றை தமது இன­வாத பிர­சா­ரத்­திற்கு பயன்­ப­டுத்திக் கொண்­டார்கள். 

இதன் போது முஸ்­லிம்­களை பகைத்துக் கொள்ளக் கூடா­தென்­ப­தற்­காக முஸ்­லிம்­களை அர­வ­ணைத்துக் கொள்­வது போன்று பாசாங்கு காட்டிக் கொண்­டார்கள். முஸ்­லிம்­களும் பௌத்த இன­வா­தத்தின் கோர முகத்தை புரிந்து கொள்­ளாது செயற்­பட்­டார்கள்.


virakesari.jpgதற்­போது தமி­ழர்­களை அடக்­கி­விட்­ட­தா­கவும், அவர்­களின் தாயகக் கோட்­பாட்டை தோல்வி அடையச் செய்து விட்­ட­தா­கவும் கருதி அகங்­கா­ரத்தில் திளைத்­துள்ள பௌத்த கடும்­போக்­கா­ளர்­களும், பௌத்த பேரி­ன­வா­தி­களும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வாதம் பேசிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்­நி­லையில் தமி­ழர்­களை பகைத்துக் கொள்ளக் கூடா­தென்­ப­தற்­காக தமி­ழர்­க­ளுக்கு முஸ்­லிம்கள் அநி­யாயம் செய்­துள்­ளார்கள். நாங்கள் நியா­யத்தைப் பெற்றுத் தரு­கின்றோம் என்று தமி­ழர்­களை அர­வ­ணைப்­பது போன்று பாசாங்­காகச் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாதக் கருத்­துக்கள் இலங்கை சுதந்­திரம் பெறு­வ­தற்கு முன்­ன­தா­கவே ஆரம்­பிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. இன்று முஸ்­லிம்­களைப் பற்றி என்­னதான் குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைத்­தாலும் அக்­குற்­றச்­சாட்­டுக்கள் யாவும் அந­கா­ரிக்க தர்­ம­பா­லவின் சிந்­த­னை­க­ளி­லி­ருந்து ஊற்றுப் பெற்­ற­தாகும். இந்த சிந்­த­னை­களை தற்­கால சூழ­லுக்கு ஏற்ப வடி­வ­மைத்­த­வ­ராக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், அமைச்­ச­ரு­மான பாட்­டாலி சம்­பிக்க ரண­வக்க உள்ளார். இவர்கள் இரு­வ­ரி­னதும் சிந்­த­னை­களின் ஊடாக முஸ்­லிம்கள் தொடர்­பாக விதைக்­கப்­பட்ட பீதியும், அச்­ச­மும்தான் சிங்­கள மக்கள் முஸ்­லிம்­களை எதி­ரி­யாகப் பார்ப்­ப­தற்கு கார­ண­மாகும். 

முஸ்­லிம்கள் பற்றி பொய்­யான தக­வல்­களை மீண்டும் மீண்டும் மக்கள் மத்­தியில் திணிக்கும் போதெல்லாம் முஸ்லிம் தலை­வர்கள் அது குறித்து மறுப்­புக்­களை வெளி­யி­ட­வில்லை. சிங்­கள மக்­க­ளி­டையே அது பற்றி உண்­மையை தெளி­வு­ப­டுத்­த­வு­மில்லை. முஸ்­லிம்­க­ளி­டையே சிங்­கள மொழியில் சர­ள­மாக பேசக்கூடிய அர­சியல் தலை­வர்­களும், உல­மாக்­களும், புத்­தி­ஜீ­வி­களும் இருக்­கின்ற போதிலும் தமது சமூ­கத்தைப் பற்றி போலி­யான குற்­றச்­சாட்­டுக்­களை கலை­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை.

 ஒரு விடயம் பொய்­யாக இருந்­தாலும் அடிக்­கடி அது பற்றி பேசும் போது அதுவே உண்மை என்­றா­கி­விடும் என்ற உலக யதார்த்­தத்தைப் புரிந்து கொள்­வதில் இலங்கை முஸ்­லிம்கள் தவ­றி­யுள்­ளார்கள். முஸ்லிம் தலை­வர்­களின் இத்­த­கைய மனப்­போக்­கிற்கு அவர்­க­ளி­டையே காணப்­படும் சுய­ந­லமே கார­ண­மாகும். இன்று தலைக்கு மேல் வெள்ளம் போய்க் கொண்­டி­ருக்­கின்ற நிலை­யில்தான் சிங்­கள மக்­க­ளி­டையே தெளிவை ஏற்­ப­டுத்த முஸ்லிம் தலை­வர்கள் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

சம்­பிக்க ரண­வக்க ஆரம்­பத்தில் இட­து­சாரிக் கொள்­கையைக் கொண்­ட­வ­ரா­கவே இருந்தார். ஆயினும், அவர் அந­கா­ரிக்க தர்­ம­பா­லவின் கொள்­கை­களின் மீது அதிக ஆர்வம் கொண்­ட­வ­ரா­கவும் இருந்தார். இந்­நாடு பௌத்த நாடு. 2020ஆம் ஆண்டில் இலங்­கையை தூய பௌத்த நாடாக மாற்ற வேண்­டு­மென்று செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­பவர். தமது இந்த நோக்­கத்தை அடைவதற்­கா­கவே சிங்­கள வீர விதான, ஜாதிக ஹெல உறு­மய ஆகிய பௌத்த கடும்­போக்கு அமைப்­புக்­களை தோற்­று­வித்தார். அது மட்­டு­மல்­லாது இன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வாதக் கருத்­துக்­களை 

முன் வைத்துக் கொண்­டி­ருக்கும் அத்­து­ர­லிய தேரர், கல­கொட ஞான­சார தேரர் போன்ற கடும்­போக்கு பௌத்த தேரர்­க­ளுடன் அதிக நெருக்­கத்தைக் கொண்­ட­வ­ரா­கவும் சம்­பிக்க ரண­வக்க உள்ளார். பௌத்த கடும்­போக்­கு­வாத அமைப்­புக்­க­ளுக்கு ஆத­ரவும், ஒத்­தா­சையும் வழங்கி 2020ஆம் ஆண்டில் தூய பௌத்த நாடாக இலங்­கையை மாற்­று­வது மட்­டு­மன்றி, அதன் ஆட்சி அதி­கா­ரத்தின் உச்ச த்தில்  தாம் அமர வேண்­டு­மென்று செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் இவர் பற்றி தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.

முஸ்­லிம்கள் கிராமச் சிங்­க­ள­வர்­களை சுரண்­டு­கின்­றார்கள். நாட்­டுப்­பற்று இல்­லா­த­வர்கள். பௌத்­தர்­களை மதம் மாற்றம் செய்­கின்­றார்கள். முஸ்­லிம்கள் தேசிய இன­மல்ல என்று இன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களில் பெரும்­பா­லா­னவை 1915ஆம் ஆண்­டு­களில் அந­கா­ரிக்க தர்­ம­பா­ல­வினால் முன் வைக்­கப்­பட்­ட­வை­யாகும். இன்று பௌத்த கடும்­போக்­கு­வா­தி­களின் வன்­முறை முதல் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளுக்கும் துணை­யாக பேரி­ன­வாத அர­சி­யல்­வா­திகள் இருப்­ப­தனைப் போன்று அந­கா­ரிக்க தர்­ம­பா­ல­வுக்கும் பேரி­ன­வாத அர­சி­யல்­வா­திகள் துணை­யாக இருந்­தார்கள். 1915ஆம் ஆண்டு நடை­பெற்ற சிங்­கள – முஸ்லிம் இன­மோ­தல்­களை திட்­ட­மிட்டு செயற்­ப­டுத்­தி­ய­வர்கள் பேரி­ன­வாத அர­சி­யல்­வா­திகள். நாட்டின் அமை­திக்கு குந்­தகம் விளை­வித்­த­துடன், கொலை, கொள்ளை நடை­பெ­று­வ­தற்கும் கார­ண­மாக இருந்­த­வர்கள் என்று ஒரு சில முக்­கிய பேரி­ன­வாத அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு பிரித்­தா­னிய அர­சாங்கம் மரண தண்­டனை விதித்­தது. பொன்.இரா­ம­நாதன் பிரித்­தா­னிய அர­சாங்­கத்­திடம் வாதிட்டு அவர்­களை காப்­பாற்­றினார்.

அந­கா­ரிக்க தர்­ம­பா­லவின் கொள்­கை­களின் மீது அதீத பற்றுக் கொண்ட 

சம்­பிக்க ரண­வக்க 2003ஆம் ஆண்டு அல்-­ஜிஹாத் அல்­ஹைதா எனும் புத்­த­கத்தை எழுதி வெளி­யிட்டார். அது மட்­டு­மன்றி இந்­நூலில்  2013ஆம் ஆண்டு மேலும் பல விட­யங்­களை உள்­ள­டக்கி மீண்டும் வெளி­யிட்டார். இவ­ரது இந்நூல் சிங்­கள மக்­க­ளி­டையே பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. இந்­நூலில் உள்ள கருத்­துக்­கள்தான் இன்று முஸ்லிம் மக்­களை பௌத்த கடும்­போக்கு இன­வாதம் துரத்­து­வ­தற்கு கார­ண­மாகும். இந்­நூலில் அந­க­ாரிக்க தர்­ம­பா­லவின் கருத்­துக்கள் யாவும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தோடு, தற்­போ­தைய நிலை­மைக்கு ஏற்ற கருத்­துக்­களை சம்­பிக்க ரண­விக்க உரு­வாக்­கி­யுள்ளார்.

இந்­நூலில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள மற்று­மொரு கருத்­துத்தான்  2090ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம் நாடாக மாறி­விடும் என்­ப­தாகும். இப்­படி ஒரு கற்­பனைக் கதையை அதில்  சொல்­லி­யுள்ளார். இலங்­கையில் இன்று  சிங்­க­ள­வர்கள் பெரும்­பான்­மை­யாக இருந்­தாலும் 2090ஆம் ஆண்டில் முஸ்­லிம்­கள்தான் பெரும்­பான்­மை­யாக இருப்­பார்கள். அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை முஸ்­லிம்கள் மேற்­கொண்டு வரு­கின்­றார்கள் என்றும் தெரி­வித்­துள்ளார்.

இத்­த­கைய பிர­சா­ரங்­களை செய்­கின்­ற­வர்கள் பெரும்­பாலும் பௌத்த கடும்­போக்கு அமைப்­புக்­களைச் சேர்ந்­த­வர்­க­ளா­கவும், சம்­பிக்க ரண­வக்­க­வுடன் நெருக்­க­மான உற­வு­களைக் கொண்­ட­வர்­க­ளா­கவும் உள்­ளார்கள்.

ஆகவே, எய்­தவன் இருக்க அம்பை நொந்து கொள்ளும் நிலை­யி­லேயே முஸ்­லிம்கள் உள்­ளார்கள். குறிப்­பாக முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் உள்­ளார்கள். அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க மஹிந்­த­ரா­ஜ­பக் ஷவின் அர­சாங்­கத்­திலும் அமைச்­ச­ராக இருந்­துள்ளார். இதன்­போது அவர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல கருத்­துக்­களை முன் வைத்­துள்ளார். முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் பற்­றியும் குறிப்­பாக ரவூப் ஹக்கீம் பற்றி மிக மோச­மான கருத்­துக்­களை முன்வைத்­துள்ளார். வடக்­கி­லிருந்து துரத்­தப்­பட்ட முஸ்­லிம்கள் புத்­தளம் கற்­பிட்­டியில் சிங்­க­ள­வர்­களின் சொத்­துக்­களை பறித்­துள்­ளார்கள் என்று தெரி­வித்­துள்ளார். அளுத்­கம தாக்­கப்­பட்ட போது அதனைக் கூட நியா­யப்­ப­டுத்தும் வகை­யி­லேயே கருத்­துக்­களை முன் வைத்தார். பொது­பல சேனாவின் நட­வ­டிக்­கை­களில் நியா­யத்தை காண்­கின்ற ஒரு­வ­ராக இருக்­கின்ற சம்­பிக்க ரண­வக்க தற்­போ­தைய அர­சாங்­கத்­திலும் அமைச்­ச­ராக இருக்­கின்றார். ஆயினும், அவர் தமது கொள்­கையில் இருந்து மாற­வில்லை. இத்­த­கைய கொள்­கை­களைக் கொண்ட ஒரு­வ­ரு­டன்தான் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் அமைச்­ச­ர­வையில் இருந்­துள்­ளார்கள். 

முஸ்­லிம்கள் தொடர்­பான பல விட­யங்­களில் சம்­பிக்க ரண­வக்­க­வுக்கும் முஸ்லிம் அமைச்­சர்­க­ளுக்கும் இடையே பலத்த கருத்து மோதல்கள் ஏற்­பட்­டுள்­ளன. பல தட­வைகள் ரவூப் ஹக்கீம் இவரை திக்­கு­முக்­காட வைத்­துள்ளார் என்­பது வெளி­வ­ராத சங்­க­தி­க­ளாகும். ஆயினும், ரவூப் ஹக்கீம் போன்ற சிங்­கள மொழியில் தேர்ச்சி பெற்ற முஸ்லிம் அர­சியல் மற்றும் மதத் தலை­வர்கள் சம்­பிக்க ரண­வக்க எழு­திய அல்­ஜிஹாத் அல்­ஹைதா எனும் நூலில் உள்ள கருத்­துக்கள் பொய்­யா­னது. அர­சியல் நோக்­கத்தைக் கொண்­டது. இன­வா­தத்தை தூண்டி அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளார்கள் என்ற தெளிவை 

ஏற்­ப­டுத்­து­வ­தற்கும், அதி­லுள்ள கருத்­துக்­களை மறுத்து மறுப்பு நூல் ஒன்­றினை வெளி­யி­டு­வ­தற்கும் நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. இத­னால்தான் இன்று முஸ்­லிம்கள் பற்றி தவ­றான கருத்­துக்கள் சிங்­கள மக்கள் மத்­தியில் வேரூன்றி இருப்­ப­தற்கு கார­ண­மாகும்.

தமி­ழீழ விடு­தலைப் புலிகள் தோற்­க­டிக்­கப்­பட்­டாலும், தமி­ழர்கள் தங்­களின் தாயக் கோட்­பாட்டை இன்னும் கைவி­ட­வில்லை. அதனை அடைந்து கொள்­வ­தற்­கு­ரிய அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்­றார்கள். இதற்­காக தமிழ் அர­சியல் தலை­வர்கள் முஸ்­லிம்­க­ளையும் அர­வ­ணைத்துக் கொண்டு செல்லும் நிலைப்­பாட்டை எடுத்­துள்­ளார்கள். முஸ்­லிம்கள் மத்­தி­யிலும் இடை­யி­டையே தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் இணைந்து செயற்­பட்டால் என்ன என்ற சிந்­தனை மேலோங்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. ஆதலால், முஸ்­லிம்­க­ளையும், தமி­ழர்­க­ளையும் இணைய வைக்கும் நட­வ­டிக்­கை­களை எடுக்கக் கூடா­தென்று பொது­பல சேனவின் முக்­கிய கலந்­து­ரை­யாடல் ஒன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

இவர்­களின் இத்­த­கைய முடிவின் கார­ண­மா­கவே புலி­களின் தலைவர் வே.பிர­ப­காரன் பற்­றியும், புலி­களின் போராட்டம் பற்­றியும் நல்ல கருத்­துக்­களை முன் வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். கல்­மு­னையில் நடை­பெற்ற உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் பௌத்த தேரர் ஒருவர் பங்கு கொண்­டது என்­பது கூட இதன் அடிப்­ப­டையில் என்­ப­தனை தமிழ், முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமி­ழர்­களின் உரி­மைகள் குறித்தும், சுய­நிர்­ணயம் குறித்தும் எதிர்க் கருத்­துக்­களை வெளி­யிட்­ட­வர்­கள்தான் அத்­து­ர­லிய ரத்ன தேரர், கல­கொட அத்­தே­ஞான சார தேரர் ஆகியோர்  தமி­ழர்­களின் சுய­நிர்­ணய உரி­மை­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் என்­ப­தனை சொல்ல வேண்­டி­ய­தில்லை. 

அதே வேளை மட்­டக்­க­ளப்பு விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சும­ண­ரத்ன தேரர் தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக பல நட­வ­டிக்­கை­களை பகி­ரங்­க­மாக தமி­ழர்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் மட்­டக்­க­ளப்பு மாவட்­ட­தி­லேயே மேற்­கொண்­டவர். தமிழர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான காணியில் விகாரை அமைக்க முயற்சி செய்­தமை, தமிழ் அரச அதி­கா­ரியை தாக்­கி­யமை, 2013ஆம் ஆண்டு மட்­டக்­க­ளப்பில் தேசிய சமா­தானப் பேரவை நடத்­திய கருத்­த­ரங்­கு­களில் இன­வாத ரீதி­யாக பேசி குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யவர்.

இவ்­வாறு செயற்­பட்­ட­வர்கள் இன்று தமி­ழர்­களின் உரி­மை­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு ஆத­ர­வாக செயற்­ப­டு­கின்­றார்கள் என்றால், தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஒற்­று­மைப்­பட்­டு­விடக் கூடாது என்­ப­தற்­கா­கவே என்­பது கவ­னத்திற் கொள்­ளப்­பட வேண்­டி­ய­தாகும். இவர்­களின் இந்த திட்­டத்­திற்கு அமை­வா­கவே கல்­முனை சுபத்­தி­ராம விகா­ரையின் அதிபர் ரன்­முத்து சங்­க­ரத்ன தேரரும் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்றார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஆகவே, இன்று பௌத்த கடும்போக்கு தேரர்கள், அரசியல்வாதிகள் சிங்கள மக்களை தமது கொள்கைக்கு ஏற்ப மூளைச் சலவை செய்து வெற்றி கண்டுள்ள நிலையில், எல்லா அமைப்புக்களிலும் உள்ள பௌத்த கடும்போக்குவாதிகள் ஒரு நேர் கோட்டில் பயணிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். இதற்குரிய நடவடிக்கைகளை அவர்கள் தற்போது இருக்கும் அரசியல் கட்சிகள், அமைப்புக்களின் ஊடாக மேற்கொண்டு வருகின்றார்கள்.

அந்த அடிப்படையில்தான் அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதம், அந்நிலையில் சம்பிக்க ரணவக்க அத்துரலிய ரத்ன தேரரை நேரில் சென்ற பார்த்தமை, கல்முனை உண்ணாவிரத்திற்கு இவர்களின் ஆதரவு, ஞானசார தேரரின் விடுதலை என்பன நகர்ந்து கொண்டிருக்கின்றது. இன்று மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தினை விடவும் இந்த தேரர்கள் அதிகாரம் பெற்றவர்கள் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகள், அமைச்சர்கள் நடத்த வேண்டிய பேச்சுவார்த்தைகளை இவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இது போன்று இன்னும் பல நிகழ்வுகள் நடைபெறும். பரபரப்புக்களும் ஏற்படும். இறுதியில் ஜனாதிபதி தேர்தலில் பௌத்த கடும் போக்குவாதிகள் ஒரு கூட்டாக இவரையே ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் அல்லது இவருக்கே பௌத்தர்கள் வாக்களிக்க வேண்டுமென்று அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சஹாப்தீன்

 

https://www.virakesari.lk/article/59428

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.