Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது மெளனம் காத்து வரும் மலையக பிரதிநிதிகள்

Featured Replies

ஜே.வி.பியின் தலைவர் அநுர குமாரவிற்கு உருவாகியிருக்கும் மக்கள் ஆதரவு அலையில் சற்று தடுமாறி போயிருப்பது ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமல்ல, பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவும் தான்.

ஜே.வி.பியினரால் ஜனாதிபதி பதவியை கைப்பற்ற முடியாது என்றாலும் ஏனைய கட்சிகள் பெறும் வாக்கு வீதத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கட்சியாக அது உருவெடுத்துள்ளது.    தற்போதைய சூழ்நிலையில் மூன்று பிரதான கட்சிகளுக்குள் அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு கட்சியாக ஜே.வி.பி உள்ளது. இதன் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலில் ஐம்பது சதவீத வாக்குகளை எவரும் பெற முடியாது போகுமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதியை தெரிவு செய்வதில் தாக்கம் செலுத்தும் மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ள ஜே.வி.பிக்கு ஆதரவை பெற்றுக்கொள்ளலாமா என்று கூட இந்த மூன்று தேசியக் கட்சிகளும் தற்போது சிந்திக்க ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் வேட்பாளரை அறிவித்து விட்டாலும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவை இன்னும் நிச்சயித்துக்கொள்ளாத நிலையில் பொதுஜன பெரமுனவும் யாரை அறிவித்தால் சிறுபான்மையினரின் வாக்குகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என ஐக்கிய தேசிய கட்சியும் தடுமாற்றத்துக்குள்ளாகியுள்ளன.

இதே போன்றதொரு  தடுமாற்றத்தில்  மலையக தமிழ் கட்சிகளும் சிக்கியுள்ளன என்பது நன்றாகவே தெரியவருகிறது.

 

 

வெளிப்படையாக அறிவிக்காத இ.தொ.கா

ஜனாதிபதி மைத்திரி பக்கமே இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டாலும்  மஹிந்த தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வரும் போக்கையே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொண்டுள்ளது. இது கடந்த முறை இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல்கள் முடிவுகளின் பின்னர் எதிரொலித்தது. ஆனால் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷவை அறிவித்தமை தொடர்பில் இ.தொ.கா  தனது ஆதரவை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதாவது மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் கோத்தாபாயவிற்கு ஆதரவு அளிக்கும்படி இன்னும் அது பிரசாரத்தை ஆரம்பிக்கவில்லை.  மாறாக வடமாகாணத்தில் இருக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களின் ஆதரவை பெற்றுக்கொடுப்பதிலேயே தற்போது இ.தொ.கா ஈடுபட்டுள்ளது. இ.தொ.காவுடன் இணைந்து கொண்டுள்ள முன்னாள் போராளிகள் கட்சி இதற்கு வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

இதேவேளை மலையக பெருந்தோட்ட மக்களின் மனதில் கோத்தாபய ராஜபக்சவின் விம்பம் குறித்த தடுமாற்றங்கள் இருக்கின்றன. மஹிந்தவோடு அவர்கள் கோத்தாபயவை ஒப்பீடு செய்வதில் குழப்ப நிலையில் உள்ளதாகவே தெரிகின்றது. மட்டுமன்றி  யுத்த காலகட்டத்தில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு உணர்வு பூர்வமான ஆதரவை மலையக மக்கள் கொடுத்து வந்தனர் என்பதும் மலையக பகுதிகளிலிருந்து புலச்சிதறலை மேற்கொண்டு வவுனியா ,முல்லைத்தீவு ,கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் குடியேறிய பலர் இயக்கத்துடன் இணைந்து யுத்தத்தில் உயிர்த் தியாகம் செய்திருக்கின்றனர் என்பதும் பலர் அறிந்த விடயம்.   இந்நிலையில் போர்க்குற்றச்சாட்டு விவகாரங்களுடன் தொடர்பட்டு விமர்சிக்கப்பட்டு வரும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தார்மீக ரீதியான ஆதரவை அவர்கள் வழங்குவார்களா என்பது சிந்தித்துப்பார்க்க வேண்டியதொன்று.

 

தமிழ் முற்போக்குக்கூட்டணியின் மௌனம்

தமிழ் முற்போக்குக்கூட்டணியைப் பொறுத்தவரை ஜனநாயக தேசிய முன்னணியின் வேட்பாளருக்கே ஆதரவு தரும் நிலைப்பாட்டில் உள்ளது. அதேவேளை வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்தே தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே கூட்டணி தலைமையின் வேண்டுகோளாக இருக்கின்றது. தற்போதைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக கரு ஜெயசூரிய ,சஜித் பிரேமதாச அல்லது பிரதமர் ரணிலின் பெயர் அடிபட்டாலும் கூட கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிரந்தரமாக உள்ள வாக்குகள்  இதில் எவர் வந்தாலும் கிடைக்கும் என்பதை மறுக்க முடியாது. இது கூட்டணியில் உள்ள ஜனநாயக மக்கள் முன்னணிக்கு சாதகமாக இருக்கும். ஆனால் முற்போக்குக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிலை சற்று மாறுபட்டது. இவர்களின் வாக்கு வங்கிகள் இருக்கும் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் எவர் வந்தால் ஆதரவு தரலாம் என்ற முடிவு மக்கள் மத்தியில் உள்ளது.

அதாவது பிரேமதாச ஆட்சிக் காலத்தில் இந்த மக்களுக்கு இலங்கை பிரஜைகள் என்ற அந்தஸ்து பெற்றுக்கொடுக்கப்பட்ட காலத்திலிருந்தே அவர்கள் யானைக்கு வாக்களித்து வருவதை பழக்கமாகக்கொண்டிருந்தனர். இந்நிலையில் சஜித் வேட்பாளராக வருமிடத்தே அவர்களிடமிருந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவை பெறக் கூடியதாக இருக்கும். ஏனென்றால் ரணில் அல்லது கரு இருவருமே வேட்பாளராக வருமிடத்து மலையக பிரதேச மக்கள் மத்தியில் சென்று ஆதரவு கேட்பதில் மேற்படி கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளுக்கும் சவால்கள் இருக்கும்.

நல்லாட்சியின் பிரதமர் மூலம் வீடமைப்புத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் தொழிலாளர் ஊதிய விவகாரத்தில் பிரதமர் ரணில் ஆக்கபூர்வமான எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 50 ரூபா விவகாரமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  அதேவேளை கரு ஜெயசூரியவிற்கு ஆதரவு தேடுவதிலும் பலத்த சவால்கள் உள்ளன.

மக்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்ற பிரமுகராக இருந்தாலும் இவர் அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் மாமனார் என்ற ரீதியிலேயே தொழிலாளர் சமூகத்தின் மத்தியில் அறியப்படுகிறார். தொழிலாளர்களின் 50 ரூபா சம்பள  மற்றும் காணி உரித்து  பற்றி அண்மையில் அமைச்சர் நவீன் வெளிப்படுத்தியிருந்த எரிச்சலூட்டும் கருத்துக்களால் தொழிலாளர் சமூகம் கொதிநிலையை அடைந்துள்ளது.  இதன் காரணமாக கரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டால்  கணிசமான தொழிலாளர்களைக்கொண்டிருக்கும் நுவரெலியா மாவட்டத்தில் வாக்குகளைப்பெற்றுக்கொள்வதில்  தடைகள் ஏற்படும் அதேவேளை தனது மாமனாருக்காக பிரசாரம் செய்ய முடியாத நிலை நவீனுக்கும் ஏற்படக்கூடும்.

மட்டுமன்றி  யானை சின்னத்தில் போட்டியிட்டு தொழிலாளர் வாக்குகளில் வெற்றி பெற்ற தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இது பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும். எனவே ஐக்கிய தேசிய கட்சி சார்பில் யார் போட்டியிட்டாலும் அது கொழும்பில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தாது என்றாலும் கொழும்புக்கு வெளியே மலையக சமூகம் வாழ்ந்து வரக்கூடிய பிரதேசங்களில் தாக்கம் இருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்திலும் தமிழ் முற்போக்குக்கூட்டணி ஒரு பாராளுமன்ற ஆசனத்தை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பெற்றிருக்கின்றது. பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகவும் செல்வாக்குள்ள ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சராக  ஹரீன் பெர்னாண்டோ  விளங்குகிறார்.   வேட்பாளராக அறிவிக்கப்படாவிட்டாலும் கூட சஜித்தை அழைத்து பிரமாண்ட கூட்டத்தை பதுளையில் இரு வாரங்களுக்கு முன்னர் நடத்தி விட்டார். ஊவா மாகாணத்தில் சஜித்திற்குள்ள ஆதரவானது அவரது தந்தை பிரேமதாசவின் அபிவிருத்தித்திட்டங்களால் ஈர்க்கப்பட்டவர்களினதாகும்.

தனது ஆட்சி காலத்தில் கம்உதாவ திட்டத்தை முன்னெடுத்து புத்தள, மஹியங்கனை ,மொனராகலை ஆகிய பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுத்தவர் அமரர் ரணசிங்க பிரேமதாச. மஹியங்கனை பகுதியில் மேற்கொண்ட அபிவிருத்தித்திட்டங்களின் பின்னரே நாட்டின் ஆதிக்குடிகளான வேடுவர்கள் மக்கள் மத்தியில் நடமாடும் சுதந்திரத்தைப்பெற்றனர் என்று கூறுவர்.  இவை பெரும்பான்மை மக்களை அதிகமாகக்கொண்ட பிரதேசங்களாகும். அதே போன்று பதுளை மாவட்டத்தில் இரண்டு தமிழ்ப்பிரதிநிதிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் எம்.பியாகியிருக்கின்றனர். இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்கள் பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழ்ந்து வரும் இடங்களாகும்.   நுவரெலியா மாவட்ட மக்களின் மனநிலையையே இவர்களும் கொண்டிருப்பதால் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமது பிரதிநிதிகள் சொல்லாமலேயே இந்த மாவட்ட மக்களும் முடிவு செய்திருப்பர்.

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக்கினால் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் அதிக ஆதரவு அலை ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆகவே மஹிந்த அணிக்கு ஆதரவாக இருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட அடுத்து வரும் பாராளுமன்றத்தேர்தலில் தனது முடிவை மாற்றிக்கொள்ள நேரிடும். இவ்வாறான காரணங்களினாலேயே மலையக பிரதிநிதிகள் மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது எந்தவித பிரதிபலிப்புகளையும் வெளிக்காட்டாது மௌனம் காத்து வருகின்றனர். 

 

தேசியன்

https://www.virakesari.lk/article/63552

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.