Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'விசில்' ஊதும் அதிகாரிகளும் உளவாளிகளும் அரசியலும்

Featured Replies

உலக நாடுகள் அனைத்துமே உளவுத்துறையை கொண்டிருக்கும். சனநாயக நாடுகள் தேர்ந்து எடுக்கும் அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றும் எண்ணம் நோக்கம் கொண்டவர்களாக அநேகமாக இருப்பார்கள். இன்றைய அமெரிக்க அதிபர் முன்னைய அமெரிக்க அதிபர்களில் இருந்து இந்த விடயத்தில் மாறுபட்டு உள்ளார். அவர், தன்னை ஒரு மன்னராக பார்ப்பதுடன் அவ்வாறான உலக  தலைவர்களை புழாரம் செய்து வருகிறார். 

அரச உத்தியோகத்தர்கள் ஒரு நிலையான வேலையை கொண்டவர்கள். இந்த நிலையற்ற வர்த்த உலகில் அது ஒரு முக்கிய பயனுள்ள பொறுப்பு. ஆனால், அதை விட அவர்கள் மக்களுக்கு சேவையாற்றும் விருப்பு உடையவர்காளாக மற்றும் கட்சி சார்பற்ற தேசப்பற்று உடையவர்களாக இருக்கவேண்டும். 

சிலவேளைகளில் இவ்வாறான அரச உத்தியோகத்தர்கள் சில நாட்டு இரகசியங்களை பரகசியங்களாக்குகின்றனர். சிலர் துரோகிகளாக வர்ணிக்கப்படுகின்றார்கள், சிலர் அதற்காக குற்றம் சாட்டப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். சில நாடுகளில் , கொல்லவும்பட்டுள்ளார்கள்.

சில அதிகாரிகள் அநேமதயமாக சில இரகசியங்களை உள்ளூர் ஊடகவியலார்களுக்கு தெரிவிக்கின்றனர்.  அவைகளை 'விசில்' ஊதுபவர்கள் என ஆங்கிலத்தில் கூறப்படுகின்றனர். இவர்களுக்கு சில நாடுகளில் சட்ட பாதுகாப்பும் உண்டு. இதன் மூலம் அவர்களை குற்றவாளிகள் என குற்றம் சாட்ட முடியாத வரையில் சட்டம் உள்ளது. 

கடந்த ஆடி மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உக்ரைன் அதிபரை முன்னைய உப அதிபரின் மகனின் விடயம் பற்றி விசாரணை ஆரம்பிக்கும் படி கேட்டுள்ளார். இதை ஒரு அரச அதிகாரி கடந்த வாரம் பத்திரிகைளுக்கு கூறி விட்டுள்ளார். இதை மறுத்த ட்ரம்ப், இன்று அதை மோடியுடனான கூட்டத்தின் பின்னர் ஒத்துக்கொண்டுள்ளார்.   

இதனால், மீண்டும் அமெரிக்க அதிபரை பதவியில் இருந்து அகற்ற சனநாயக கட்சியின் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது. 

மூலம் : சுயம்    

 

  • தொடங்கியவர்

ஒரு அரச உத்தியோக பெற்றோரின் மகனான எட் ஸ்னோடன் பற்றி அறிந்திருப்பீர்கள். இவருடன் விக்கி லீக்சின்  இணைக்கப்பட்டு செய்திகளும் வந்தன. இவர் தற்பொழுது உருசியாவில் வாழ்கிறார். அமெரிக்காவிற்கு வர முடியாத நிலை, காரணம் அமெரிக்காவின் மூன்றாம் தர உளவில் வேலைசெய்த இவரும் ஒரு 'விசில்' ஊதியவர். 

தான் வேலை செய்த என்.எஸ்.ஏ. அமைப்பானது சாதாரண அமெரிக்கர்களின் மீதும் உளவு பார்க்கின்றது என்பதை உறுதிப்படுத்தியமையே. இவர் இன்றும் கூறுவது, உங்கள் கணனியில் நீங்கள் உலகில் எங்கிருந்து அதை செய்தாலும் அதை இந்த அமெரிக்க அமைப்பும் செய்யும் வலிமை கொண்டது. 

அமெரிக்க அரசு இவருக்கு புகலிடம் அளிக்க எண்ணும் அரசுகளை மிரட்டி வருகின்றது. ஸ்னோடன் அண்மையில் பிரான்ஸ் நாட்டடையும் புகலிடம் அளிக்க கேட்டிருப்பதாக செய்திகள் வந்தன, 

 

  • தொடங்கியவர்

அமெரிக்க அரசு தனது நட்பு நாடுகளுக்கு அவ்வாறான 'கேட்க்கும்' சேவையை வழங்கி வருகின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்னராக அவ்வாறான ஒரு தகவல் அடைப்படையில் கனடா நாட்டின் தேசிய காவல்துறையின் ஒரு உயர் அதிகாரி நாட்டின் இரகசியங்களை வேறு ஒரு நாட்டிற்கு கொடுத்தார் என குற்றம் சாட்டப்பட்டு கைதாகியுள்ளார். இவர் எந்த நாட்டிற்கு உளவு பார்த்தார் என கூறப்படவில்லை.   

A senior RCMP official arrested in a case that sent shockwaves through Canada’s national security community on Friday was uncovered by U.S. authorities who tipped off Ottawa, a source told Global News.

Cameron Ortis faces seven counts dating as far back as 2015, including breach of trust, communicating “special operational information,” and obtaining information in order to pass it to a “foreign entity.”

The charges did not specify which foreign entity or what type of information, but a source said he had amassed “terabytes of information,” including a list of undercover operatives, when he was arrested in Ottawa on Thursday.

https://globalnews.ca/news/5899146/senior-rcmp-arrested-charged/

  • தொடங்கியவர்
On 9/22/2019 at 8:03 PM, ampanai said:

கடந்த ஆடி மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உக்ரைன் அதிபரை முன்னைய உப அதிபரின் மகனின் விடயம் பற்றி விசாரணை ஆரம்பிக்கும் படி கேட்டுள்ளார். இதை ஒரு அரச அதிகாரி கடந்த வாரம் பத்திரிகைளுக்கு கூறி விட்டுள்ளார். இதை மறுத்த ட்ரம்ப், இன்று அதை மோடியுடனான கூட்டத்தின் பின்னர் ஒத்துக்கொண்டுள்ளார்.   

இதனால், மீண்டும் அமெரிக்க அதிபரை பதவியில் இருந்து அகற்ற சனநாயக கட்சியின் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது. 

 

ட்ரம்பின் மீது எதிர்க்கட்சி அவரை பதவியில் இருந்து நீக்கும் செயல்முறையை ஆரம்பித்தது. 


சில அமெரிக்க சனாதிபதிகளே இவ்வாறான சிக்கலுக்குள் வரலாற்றில் மாட்டியவர்கள். வரும் கார்த்திகை மாதம் தேர்தல் வர உள்ள நிலையில் எதிர்க்கட்சி இது மக்களுக்கு புரியும் ஒரு சர்ச்சையாக பார்க்கின்றது.    

Trump impeachment: Pelosi launches formal inquiry into Ukraine claims

https://www.bbc.com/news/world-us-canada-49814927

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

முதலாவது "விசில் ஊதியவருடன்", அவரின் சட்டத்தரணி  ஊடாக இரண்டாவது உளவுத்துறை அதிகாரியும் இணைந்துள்ளார். 

முதலாதவர் ஏற்கனவே அமெரிக்க சட்டப்படி நாட்டின் தலைமை காவல்துறை செயலாளர் நாயகத்திடம் தெரிவித்துள்ளார். அவரும் அதன் உண்மைத்தன்மைகளை ஆராய்ந்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையை கொண்டிருக்கும் எதிர்க்கட்சியான சனநாயக கட்சி விசாரணைகளை நடாத்தி வருகின்றது. 

அவர்களின் ஆசையான ட்ரம்பை பதவியில் இருந்து விலக்க எடுக்கும் முனைப்பிற்கு ட்ரம்பின் கட்சியான  குடியரசு, செனட் சபையில் பெரும்பான்மையை கொண்டுள்ளது. அங்கு, ட்ரம்பிற்கு தொடர்ந்தும் ஆதரவு தொடர்ந்தும்  இருந்து வருகின்றது.  

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அதிபர் ட்ரம்பின் அடிமட்ட ஆதரவாளர்கள் இன்னும் அவருக்கு ஆதரவு தனத வண்ணம் உள்ளனர். அவருடன் நெருக்கமாக இருந்த பல அரசியல் பிரமுகர்கள் அவருக்கு எதிராக திரும்புகிறார்கள். ஆனால், எவ்வளவு தூரம் பதவியில் இருந்து இறக்க ஆதரவு தருவார்கள் என  தெரியவில்லை.

தொடரும் வாக்குமூலம் பெறும் நிகழ்வில், பல முன்னை நாள் அதிகாரிகள் ட்ரம்பின் அச்சுறுத்தலையும் மீறி  வாக்களிக்கின்றனர்.

ட்ரம்பின் சட்ட ஆலோசகரும் முன்னை நாள் நியூயார்க் மாநகர முதல்வருமான ஜுலியானி மீது சட்டம் பாயலாம் என நம்மப்படுகின்றது. இவர், பல கோடி பணத்தை உக்ரைன் ஊடாக பெற்றுள்ளதாயும் அதற்காக அமெரிக்க இராணுவ உதவிப்பணத்தை பயன்படுத்தினார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டு, விசாரணைகள் நடக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.