Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நேர மேலாண்மை - பத்து பரிந்துரைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேர மேலாண்மை - பத்து பரிந்துரைகள்

ஆர். அபிலாஷ்

dream+1.jpg

 

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார்; எப்போது பார்த்தாலும்“ஐயோ ரொம்ப வேலைகள் இருக்குதுங்க” என களைப்பாகசொல்வார். ஆனாலும் ஒரு உதவி கேட்டால் முடியாதென்றுசொல்ல மாட்டார் - “சரிங்க,  உடனே பண்ணுவோம். நாளைக்கு வாங்க” என்பார். இவ்வளவு பிஸியானவர் எப்படிநமக்கு உதவுவார் என நாம் குழம்பாதபடி அவர்பரிபூரணமான அன்புடன் அதைச் சொல்வார். அடுத்தடுத்தநாட்களில் அவரை வைத்து வேலை சுலபத்தில் முடியாதுஎன புரிந்து கொள்வீர்கள். ஏனென்றால் உங்களைப்போன்றே வேறு பலருக்கும் அவர் பல உதவிகளைஒத்துக்கொண்டிருப்பார். இது போக அவரை சந்திக்கவோசும்மா பேசவோ யாராவது வந்தாலும் தன் அத்தனை வேலைசுமைகளுக்கு நடுவிலும் அவர்களிடம் சிரித்தபடிஉரையாடுவார். ஒருநாளில் முடிக்க வேண்டிய வேலையைஅவர் நான்கைந்து நாட்களாய் எடுத்துக் கொள்வார் - அந்தநான்கைந்து நாட்களில் அவர் பத்து பதினைந்துவேலைகளை செய்து முடிக்க முயல்வார். சதா தத்தளித்தபடிஇருக்கும் ஒரு நல்ல மனிதர். ஆனால் எனக்கு அவரைப்பார்த்தால் சற்று வருத்தமாக இருக்கும். 

 

இன்று நேர மேலாண்மை இவ்வளவு பெரிய விவாதமாகஇருப்பது, அது குறித்து புத்தகங்கள் எழுதப்படுவது, கார்ப்பரேட் அலுவலகங்களில் கருத்தரங்குகள், பயிற்சிகள்நடத்தப்படுவது, அனுதினமும் மக்கள் “ஐயோ டைம்இல்லையே, என்ன செய்ய?” என வினா எழுப்புவதுஅடிப்படையில் இதனாலே - நாம் ஒரே நாளில் பத்துநாட்களின் வேலைகளை செய்து முடிக்க முயல்கிறோம். ஒவ்வொரு நாள் முடியும் போது அன்றைக்கான முக்கியவேலை எதையோ செய்து முடிக்கவில்லையே எனகவலைப்படுகிறோம். ஒருவித வெறுமை நம்மீது கவிகிறது. இவ்வளவு வேலைகள் நமது முதுகில் அமர்ந்திருக்கும் இதேகாலத்தில் தான், வேறெப்போதையும் விட, நாம் அதிகநேரத்தை பொழுதுபோக்கில் (சினிமா, யுடியூப்காணொளிகள், வாட்ஸ் ஆப் சேதிகள், பேஸ்புக்அரட்டைகள், பயணம், மொபைல் விளையாட்டு, எளியபுத்தக வாசிப்பு) செலசழிக்கிறோம். 

இது ஒரு விநோதம் இல்லையா?

 

 

ஆக வேலைகள் அதிகமாக ஆக நாம் நேரத்தைவீணடிப்பதும் கூடுகிறது. நேரத்தை வீணடிப்பது கூட நமதுகுடும்பம் அல்லது நெருங்கிய நண்பர்களுடன்அந்தரங்கமான அணுக்கமான அனுபவங்களை பகிர்வதுகுறைகிறது. நிறைய வீடுகளில் ஒன்று அல்லது இரண்டுவயது குழந்தைகளைக் கூட யுடியூப் காணொளி / மொபைல்விளையாட்டு மூலம் பிஸியாக இருக்கப் பண்ணி விட்டு நாம்நமது சின்ன சின்ன வேலைகளில் பிஸியாக மூழ்குகிறோம். வேறெந்த நூற்றாண்டையும் விட இப்போது தான் நாம்நமது குழந்தைகளுடன் பேசுவது குறைந்திருக்கிறது. ஏனென்றால் நமக்கு உண்மையில் நேரமில்லை, வீட்டிலிருக்கும் போது கூட. இது மெல்ல மெல்ல நம்அந்தரங்க உலகை சல்லடையிடுகிறது. ஒவ்வொருவரையாய் இழந்து அவர்களை சமூக உறவுகளால்ஈடு செய்ய முயல்கிறோம். இது முடியாத போது கொஞ்சம்கொஞ்சமாய் பைத்தியம் பிடிக்கிறது. உளவியலாளர்களின்நேரத்தைக் கோரி அதற்கு கட்டணம் செலுத்துகிறோம். நம்மிடம் உரையாடி போராடி அவர்களுக்கு கொஞ்சம்கொஞ்சமாய் பைத்தியம் பிடிக்கிறது. இப்படியே போனால், கடைசி வரையில் ஆழ்ந்த அதிருப்தி கொண்டவர்களாகவாழ்ந்து முடிப்போம். 

இந்த துன்பியல் முடிவுக்கு வந்து சேராதிருக்க நாம் முதலில்நேரத்தை தாலிகட்டி கூடவே வைத்துக் கொள்ள வேண்டும்; அடிக்கடி அது நம்மை சபித்து வீட்டை விட்டுவெளியேறாதபடி அதனோடு இணக்கம் பாராட்ட தெரியவேண்டும். இந்த வாழ்க்கை என்பது நேரத்துடனான ஒருதாம்பத்யம். 

 

 நேரத்தை நமக்கு ஏற்றபடி பயன் தரும் வகையில் எப்படிசெலவிடுவது?

கீழ்வரும் பத்து பரிந்துரைகளைப் படியுங்கள்.

 

 1) ஒரு நாளைக்கு ஒரே ஒரு மிக முக்கியமான வேலையைசெய்யுங்கள். அவசியமில்லாத வேலைகளை முடிந்தளவுக்குகுறையுங்கள். 

அவசியமில்லாத வேலைகள் எவை? 

எந்த வேலைகளை நாளைக்குத் தள்ளிப் போட்டால் பெரியபாதிப்புகள் இருக்காதோ அவையெல்லாம் ஓரளவுக்குஅவசியமற்ற, ஆனால் முக்கியமான வேலைகள் (மின்சாரக்கட்டணத்தை நாளைக்கு செலுத்தலாம் என்றால் அதைஇன்று செய்ய வேண்டியதில்லை; ஒரு உறவுக்காரரைநாளைக்கோ அடுத்த வாரமோ சென்று பார்க்கலாம்என்றால் அந்த சந்திப்பை தள்ளிப் போடலாம்.)

இந்த முக்கியத்துவத்தை எப்படி தீர்மானிப்பது?

ஸ்டீவன் கோவி தனது First Things First நூலில் சிலபரிந்துரைகளை செய்கிறார்:

அன்றன்றைக்கு நமக்கு செய்வதற்கு ஏகப்பட்ட வேலைகள்உண்டு - அவற்றில் நாம் உடனடியாக நிச்சயமாக செய்யவேண்டிய ஒன்றை - ஒன்றே ஒன்றை - எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த வேலையை வேறெந்த வேலையுடனும்ஒப்பிடக் கூடாது (அது கடவுளைப் போன்றது). அடுத்துபடிநிலையில் முக்கியமாகத் தோன்றும் வேலைகளை 1, 2, 3 என வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தவேலைகளை ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டு ரத்துசெய்யலாம். அப்படி ரத்து செய்யவே முடியாத, அப்படிசெய்தால் வேலையே போய் விடும், மனைவி பிரிந்து போய்விடுவாள், ஊரே உங்களை பொங்கல் வைக்கும், கடன்காரன் வீட்டை ஜப்தி பண்ணி விடுவான் எனத்தோன்றுகிறவற்றை மட்டும் (வேலை 1 அல்லது 2) செய்யலாம்.

 

சில வேலைகளைத் தள்ளிப் போட்டால் பெரிய பாதிப்புகள்வரும் என கற்பனை பண்ணுவோம். டெட்லைன்கள்அப்படியானவை. நான் கவனித்தவரை நமது டெட்லைன்கள்அடிக்கடி தள்ளிப்போடத் தக்கவையே. டெட்லைனைசந்திக்க முடியாவிட்டால் மறுவாய்ப்பு எப்படியும் அமையும். ஆகையால் அதிக  முக்கியமற்ற ஒரு வேலையின்டெட்லைனுக்காக ஒரு மிக முக்கிய வேலையை தள்ளிப்போடாதீர்கள்.

 

இங்கு நான் பரிந்துரைக்கும் உத்தியானது ஒரு மதிப்பீட்டின்படி பெரும்பாலான வேலைகளை ரத்து பண்ணுவதே. இதன்மூலம் நாம் அன்றாடம் பண்ணுகிற வேலைகளில் நமதுதலையான வேலையை மையத்தில் வைத்துக் கொள்வது; அதை செய்வதில் வேறுவேலைகள் குறுக்கிடாமல் பார்த்துக்கொள்வது.

 

சில உதாரணங்கள் தருகிறேன். நான் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன். அதுவே எனக்கு இன்றைக்கானதலையாய வேலை. இப்போது என்னை ஒரு நண்பர் பார்க்கவருகிறார். அவருடனான சந்திப்பு முக்கியமே, ஆனால்எழுத்தளவுக்கு முக்கியமல்ல. நான் அவரிடம் சொல்வேன், “ஒரு முக்கியமான வேலை வந்து விட்டது. ஐந்தேநிமிடங்கள். முடித்து விட்டு வந்து விடுகிறேன்.” இனிமையாக இதை சொன்னால் என் நண்பர் புரிந்துகொண்டு காத்திருப்பார். ஒரு நண்பர் உங்களுக்கு போன்பண்ணுகிறார் - அவர் மிக மிக முக்கியமானவர்அல்லவெனில் போனை எடுக்க வேண்டியதில்லை. சரிரொம்ப ரொம்ப முக்கியமானவர். அவர் உங்களிடம் ஒருவேலையை பண்ணித் தர சொல்கிறார். நீங்கள் அப்போதுயோசிக்க வேண்டியது அது மிக மிக முக்கியமானவேலையா என்பதே, அதனால் உங்களுக்கு பலனிருக்குமாஎன்றல்ல. பல வேலைகள் பயனுள்ளவை, ஆனால்அவசியமானவை அல்ல. இரண்டுக்குமான வித்தியாசம்இங்கு முக்கியம். அந்த வேலை நீங்கள் தற்போது மிக மிகமுக்கியமாய் நம்பி செய்கிற ஒன்றுடன் சம்மந்தமுள்ளதுஎனில் அதுவும் முக்கியமானதே; அல்லாவிடில் அது வெறும்பயனுள்ள வேலை. இப்போது நீங்கள் அந்த மிக மிகமுக்கியமானவரிடம் “வேலைப்பளு மிக அதிகம், என்னால்இப்போதைக்கு பண்ண முடியாதுங்க.” என சொல்லிவிடலாம்.

 

2) எப்போதுமே உங்களுக்கு வேலைகள் அதிகம் என ஒருசித்திரத்தை அடுத்தவர்களிடத்து ஏற்படுத்துங்கள். அப்படியும் யாராவது உதவி / வேலை செய்து தரக்கேட்டால் நிர்தாட்சண்ணியமாக “முடியாது” என சொல்லிவிடுங்கள். இதற்கு நீங்கள் குற்றவுணர்வு அடையத்தேவையே இல்லை. அவர் உங்கள் வேலைக்காககவலைப்பட மாட்டார். அவரும் தன் வேலையைப் பற்றிமட்டுமே அக்கறையாக இருக்கிறார் - நீங்கள் மட்டும் ஏன்உங்கள் வேலையைப் பற்றி அக்கறையுடன் இருக்கக்கூடாது? இது தன்னலமல்ல. இது சுயக்கட்டுப்பாடு.

 

3) நாம் நேரத்தை குழாய்த்தண்ணீர் போலசெலவிடுகிறோம். குழாயின் பிரச்சனை அதில் தண்ணீர்எங்கிருந்து வருகிறது, தொட்டியில் எவ்வளவு தண்ணீர்இருக்கிறது என நமக்குத் “தெரியாது” என்பது. இதுவேஉங்களிடம் குழாய் இல்லை, ஒரு பக்கெட் தண்ணீர்மட்டுமே இருக்கிறதென்றால் அதை கவனமாககையாள்வீர்கள்.

 பணம் இந்த ஒரு பக்கெட் தண்ணீரைப் போல. பெரும்பாலனவர்களுக்கு பண விசயத்தில் ஓரளவுக்குகட்டுப்பாடு உள்ளதற்குக் காரணம் பணம் “தீர்ந்து” விடும்என மனக்கணக்கு உள்ளதாலே. அப்போதும் கூட நாம்மட்டுமீறி செலவு பண்ணி விடுகிறோமே, ஏன்? கடைக்குப்போனால் அங்கே குவிந்து கிடக்கும் பொருட்கள் நமக்குசந்தையில் கிடைக்கும் பண்டங்கள் எவ்வளவுவாங்கினாலும் தீராதவை எனும் தோற்றத்தைஅளிக்கின்றன. பண்டங்கள் தீராது என்றால் அவற்றைவாங்குவதற்கான பணம் மட்டும் எப்படி தீர்ந்து போகும் எனநாம் குழப்பிக் கொள்கிறோம். இதனால் தான் சுப்பர்மார்க்கெட்டில் ஷாப்பிங் பண்ணும் போது இருபதுரூபாய்க்கு சோப்பு வாங்க செல்கிறவர் இருநூறு ரூபாய்செலவு செய்து விடுகிறார். ஆன்லைன் ஷாப்பிங்கிலும் நமதுடிஜிட்டல் பணத்தை கணக்கற்றதாக, தீராததாககற்பிக்கிறோம். இந்த சூப்பர் மார்க்கெட் மனப்பான்மை‘தாராளமாக’ செயல்படுவது நேர விசயத்திலே. அதற்குக்காரணமென்ன?

நம் முன் (அங்காடிப் பொருட்களைப் போல) குவிந்துகிடக்கின்றன பல்வேறு பயனுள்ள வேலைகள் / சுவாரஸ்யமான பொழுபோக்குகள் / நம்மை மேம்படுத்தும்என நாம் நம்புகிற ஊடக விவாதங்கள், சமூகஉறவாடல்கள். கடந்த பத்தாண்டுகளை விட இப்போதேநாம் பரஸ்பரம் அதிகம் பேசுவது மிகவும் அதிகமாகிஉள்ளது. ஒருவர் காலையில் கண்ணைத் திறந்ததும் பேசஆரம்பிக்கிறார் (நேரில் பார்க்கிறவரிடம் அல்லதுஇணையத்தில்). அவர் வாயை மூடும் போதெல்லாம்மற்றொருவர் அவரிடம் பேசத் தொடங்குகிறார். இரவு கண்சொருக சொருக போனில் பேஸ்புக் நிலைத்தகவலைதட்டச்சி விட்டு / மீமை எட்டி செய்து கொண்டே பாதியில்அதன் மீதே விழுந்து தூங்கும் ஒரு நண்பரை எனக்குத்தெரியும். இந்த இடைவிடாத பேச்சானது ஒரு மலிவுவிலைஅங்காடிக்குள் நுழைவதைப் போல. தொடர்ந்து உரையாடமுடியும் எனும் சாத்தியமே காலம் முடிவற்றது எனும்பிரம்மையை உண்டு பண்ணுகிறது; தொடர்ந்து நிறுத்தாமல்உரையாட முடியும் என்பதே, முரணாக, நம்மை மிகவும்தனிமையாக உணர வைக்கிறது.

 

நேரம் போனாலும் வராது என அறிந்திருந்தாலும் நேரத்தின்சுழல் வடிவம் நமக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இன்றைய காலை பத்து மணி நாளைக்கும் வரும். அதனாலே உலகம் முடியுமட்டுள்ள மட்டுமான ‘காலை பத்துமணிகள்’ நமக்குத் தான் என எண்ணுகிறோம். ஆனால் அதுநிஜமல்ல. 

நேரத்தை கையிருப்பில் கொஞ்சமாக உள்ள பணத்தைப்போல சிக்கனமாக செலவழிக்க வேண்டும். இதை நான்சொல்லவில்லை, ரோம தத்துவஞானி செனக்கா தனது On the Shortness of Life எனும் நூலில் சொல்கிறார்.

 

4) முக்கியமான வேலைகளில் எதுவொன்றை செய்ததும்முடிவில் ஒரு பொருண்மையான விளைவு உள்ளதோ அதைசெய்யுங்கள். அல்லது பொருண்மையான பலனில் அதிககவனம் செலுத்துங்கள். நீங்கள் தேர்வுக்காக படிக்கிறீர்கள்என்றால் படித்தவற்றை ஒரு சிறிய தேர்வு எழுதிஉங்களுக்கே நிரூபியுங்கள். இப்போது நேரம் என்பதுஅரூபமாக அல்ல பார்க்கக் கூடிய ஒன்றாக (தேர்வுத்தாள்) உங்கள் முன்பு இருக்கிறீர்கள். இது உங்கள் மனத்தில்பதிந்து விடும். அடுத்தடுத்த நாட்களில் நேரத்தைப் பற்றியோசித்தாலே எதை கண்ணால் பலனாக காண முடியுமோ(தேர்வுத்தாள்) அதையே நேரமாக கருதுவீர்கள். ஒருநண்பருடன் போனில் தேர்வை நன்றாக எழுதுவது பற்றிபேசுகிறீர்கள் அல்லது தேர்வுக்கு தயாராவது எப்படி எனஇணையத்தில் படிக்கிறீர்கள் என்றால் அதற்கு எதிர்காலபயனிருக்கலாம். ஆனால் பொருண்மையான, பார்க்கத்தக்கபலன் இல்லை எனத் தோன்றினால் அத்தகையநேரசெலவை தவிர்த்திடுங்கள். நீங்கள் எழுத்தாளன்என்றால் நீங்கள் எழுதிய பக்கம், நீங்கள் இசைப்பயிற்சிபண்ணினால் நீங்கள் எழுப்பும் ஒலி, நீங்கள் ஒரு வணிகர்என்றால் விற்பனைக் கணக்கு, இப்படி புலனாகிற பலன்கள்மட்டுமே முக்கியம்.  

 

5) சிரமமான வேலையை முதலில் செய்யுங்கள். இந்தகருத்தை Eat That Frog நூல் வழியாக பிரையன் டிரேஸிபிரபலப்படுத்தினார் . உங்களுக்கு தினமும் எழுந்ததும் ஒருதவளையை விழுங்க வேண்டும், அதை நினைத்தால்அருவருப்பாக குமட்டிக்கொண்டு வருகிறது. நாள் முழுக்கஇதை நினைத்தே பண்ணாமல் இருக்கிறீர்கள், ஆனால்இதை பண்ணாமல் போனால் பெரிய இழப்பு ஏற்படும். நாளெல்லாம் தவளையை தின்ன வேண்டுமே எனும்அருவருப்புடனும் இன்னும் தின்னவில்லையே எனும்குற்றவுணர்வுடனும் மல்லுக்கட்டி களைத்துப் போவோம். இதற்கு சிறந்த தீர்வு அந்த பணியை உடனடியாக, காலைஎழுந்ததும் முதலில், செய்து முடிப்பது, இதன் மூலம்சிந்தனைக்கு வாய்ப்பே அளிக்காமல் இருப்பது. ஆனால்இது சுலபம் அல்ல என அனுபவம் மூலம்உணர்ந்திருக்கிறேன். மனித மனம் சுகமானகாரியங்களையே முதலில் செய்யத் தூண்டுவது.

 

6) மிக முக்கியமான வேலையை ‘தினமும்’ செய்யுங்கள். அப்போது அது ஒரு பழக்கமாகும். பழக்கத்தை ஒருநாள்உடைத்தால் கூட எரிச்சல் வரும். ஆக வேலையாக அன்றிபழகி விட்டதே என தினமும் செய்வீர்கள். உடற்பயிற்சிஇதற்கு நல்ல உதாரணம்.

 

7) வேலையை திட்டமிடுங்கள், ஆனால் அதிகமாக அதைப்பற்றி கற்பனை பண்ணாதீர்கள். நீங்கள் கற்பனாபூர்வமானஆள் என்றால் அதைப் பற்றி நினைக்க நினைக்ககளைத்துப் போவீர்கள். நீங்கள் எதையெல்லாம் செய்யஉத்தேசிக்கிறீர்களோ அதற்கு நேர்மாறாக செய்வீர்கள். இதற்குப் பதிலாக யோசிக்காமலே வேலையை ஆரம்பித்துவிடுங்கள். 

 

8) இந்தியாவில் நாம் சதா கூட்டத்தின் மத்தியிலேஇருக்கிறோம். இணையத்துக்கு வந்தால் கூட அங்கும்கூட்டமே நம்மை மொய்க்கிறது. தனிமையில் செய்யவேண்டிய வேலைகள் இருந்தால் தனிமையை அதற்காகஉருவாக்குவதற்குப் பதிலாக, தனிமையான இடம்கிடைக்கவில்லை என வேலையை தள்ளிப் போடுவதற்குப்பதில், மக்கள் அதிகமாக புழங்கும் இடங்களில் வைத்துஅவ்வேலைகளை செய்து பழகுங்கள். பழகப் பழக மக்கள்மத்தியிலே வேலை செய்வது கூடுதல் சுலபமாகும். 

 

9) வேலைக்கு தோதான இடங்களில் தொடர்ந்துஇருங்கள். என் நண்பர் ஒருவர் சொல்வார், “எனக்குவீட்டுக்குப் போனாலே ஜாலி மூடு வந்து விடும். என்னவேலை இருந்தாலும் பண்ணவே மாட்டேன்.” (ஜாலி மூடிக்என்ன பண்ணுவார் என நான் கேட்கவில்லை.) அதனால்இவர் இப்போது மிக முக்கிய வேலைகளை முடித்து விட்டேவீட்டுக்கு செல்கிறார். 

மற்றொரு நண்பர் மின்சார  யிலில் தான் கட்டாயம் வாசிக்கவேண்டிய நூல்களை வாசிப்பார். அவர் இதனாலேசிலநேரம் தேவையின்றி கூட ரயிலில் ஏறி நல்ல இடமாகபிடித்துக் கொண்டு வாசிப்பார். மற்றொரு நண்பர் தனதுசின்ன சின்ன பதிவுகளை மொபைலில் கழிப்பறையில்இருந்தே நன்றாக எழுதுவார். வேளியே வந்தால் அவரால்மனதை குவிக்க முடியாது. சிலருக்கு வீட்டுக்கு வந்தால்தான் வேலையே நடக்கும். அவர்கள், அலுவலகம்முடிந்ததும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்வீட்டுக்குத் திரும்பி விட வேண்டும். 

இதே போல உங்கள் வேலைக்குத் தோதானநண்பர்களுடன் மட்டும் இருங்கள். சிலர் தொடர்ந்துகுறுக்கிட்டு தொந்தரவு பண்ணுவார்கள், சிலரது இருப்பேநமக்கு எரிச்சலாக இருக்கும். இடமும் துணையும் நம் மனஅமைப்போடு இவ்வாறு மிக சிக்கலாக பொருந்திப்போனவை.

பேஸ்புக் உங்களுக்கு இடையூறு என்றால் போன் / இணையத்தொடர்பு இல்லாத இடத்தில் இருங்கள். பேஸ்புக்கையும் வைத்துக் கொண்டு அதை பயன்படுத்தாமல்இருப்பது சிரமம். அதை அகற்றி விடுவதே சாலச்சிறந்தது. என் நண்பர் ஒருவர் தன் முனைவர் பட்டத்துக்காகஆய்வேட்டை எழுதும் பொருட்டு கேரளாவுக்கு சென்றுமற்றொரு நண்பரின் அறையில் தங்கினார். அங்கும்அவரால் எழுதவே முடியவில்லை. தினமும் யாரிடமாவதுபோனில் எழுதுவது பற்றி பேசிக் கொண்டிருப்பார். ஆனால்போனை மட்டும் அவர் ஒரு வாரம் முழுக்க பயன்படுத்தாமல்இருந்திருந்தால் அவரால் சுலபத்தில் எழுதி இருக்கமுடியும்.

 

10) இறுதியாக: நிறைய நேரத்தை வைத்துக்கொள்ளாதீர்கள். 

இது உங்களுக்கு முரணாகத் தெரியும். ஒரு முக்கியமானவேலையை முடிக்க நேரம் தானே மிகவும் அவசியம். எவ்வளவு அதிக நேரம் கிடைக்கிறதோ அந்தளவுக்குஉதவுமே. ஆனால் உண்மை நேர்மாறானது.

 

 18 மணிநேரமும் ஓய்வாக இருக்கிறீர்கள். இதில் நீங்கள் 8 மணிநேரம் ஒரு வேலையைப் பண்ண வேண்டும் என்றால்சிரமம். மிச்ச 10 மணிநேரம் இருக்கிறதே அது உங்கள்தலைமீது இருந்து அழுத்தும். பல்வேறு வேலைகளில்ஈடுபட்டு கடைசியில் மிக அவசியமான வேலையை பண்ணமுடியாமல் போய் விடும்.

பரீட்சைக்கு படிக்கிறவர்கள் முந்தின நாள், அதுவும் இரவில்விழுந்து விழுந்து படித்து முடிப்பார்கள், ஆனால் ஒரு வாரம்விடுமுறை கொடுத்தால் படிக்க மாட்டார்கள். ஏனென்றால்மிதமிஞ்சிய நேரம் எந்த வேலையையும் பண்ணுவதற்குபெரிய தடை.

 இதற்கு ஒரு தீர்வு குறைவான நேரத்தை உங்களுக்கு எனவைத்துக் கொள்வது. உங்களுக்குத் தேவை 2 மணிநேரங்களே என்றால் அதற்கு மேல் நேரத்தைவைத்துக் கொள்ளாதீர்கள். மிச்ச நேரத்தில் ஓய்வாகஇருக்காதீர்கள். ஓரளவுக்கு தவிர்க்க கூடிய ஆனால்முக்கியமான வேலைகள் இருக்கிறதல்லவா அதைஅப்போது செய்ய திட்டமிடுங்கள். அல்லது ஏதாவது ஒருநிறுவனத்தில் குறைவான சம்பளத்தில் ஒரு பகுதிநேரவேலையில் சேர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கானகுறிப்பிட்ட மணிநேரங்களை மட்டும் தனியாக ஒதுக்கிவைத்து அந்த நேரத்தில் மட்டும் வேலையை செய்யுங்கள். 

 

இப்படி செய்தால் களைத்து விட மாட்டோமா? இல்லை. களைப்பு மனத்தில் இருந்து வருகிறது. மனம் ஓயாமல்அலைகழியும் போது தான் களைக்கிறது. அல்லதுபிடிக்காத வேலையை நீண்ட நேரம் செய்தால்களைக்கிறோம். மனதை நீங்கள் செய்யப் போகிறவேலையில் இருந்து அகற்றிட வேறு அதிகமுக்கியத்துவமற்ற வேலைகள் உதவும். சரியான நேரம் வரும்போது நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.

 

மிச்ச நேரத்தில் தூங்கலாமே? பகல் தூக்கம் நிஜத்தில்உங்களை அதிகமாக களைக்க வைத்து விடும். ஆகையால்ஓய்வு நேரத்தில் வேலை பண்ணாவிட்டாலும் தூங்கவேகூடாது.

 

சுருக்கமாக: நேரம் நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். நேரம் சொல்வதை நீங்கள் கேட்கக் கூடாது.

 

http://thiruttusavi.blogspot.com/2019/10/blog-post_25.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.