Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிமூச்சுவரை எதிரியோடு சண்டைபிடித்துக் காட்டிய வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்!

Last updated May 14, 2020

பன்னாட்டு சதிகளும் – சிறிலங்கா இராணுவமும் இணைந்து மேற்கொண்ட தமிழின அழிப்பிற்கு எதிராக களமாடி நின்றவேளை…., சிறிலங்க இரானுவத்தின் எறிகணைத் தாக்குதலில் விழுப்புண்ணடைந்தும், முறியடிப்புத் தாக்குதல் சம்பவத்திலும் 15.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களும், முதுநிலைத் நிலை கட்டளைத் தளபதிகளுமான பிரிகேடியர் சொர்ணம்,   ஆகிய மாவீரரின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.


திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது. இந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது.
மானிப்பாயில் பிறந்த பொழுதும் திருமலை அரசடி வாழைத் தோட்டம் என்னும் ஊர்தான் இவரை சிறு பராயத்தில் இருந்து மாபெரும் வீரனாக வீரத்தை ஊட்டி வளர்த்த மண். தந்தை ஜோசப்புக்கும் தாய் திரேசம்மா (பரிபூரணம்) அவர்களுக்கும் மகனாக பிறந்தவன் தான் பிரிகேடியர் சொர்ணம். இவனது இயற்பெயர் அன்ரனிதாஸ். இவன் இளைமைக் காலத்திலேயே குறும்புத்தனம் மிக்கவனாகவும் உயர்ந்த கம்பீரமிக்க தோற்றமுடைய ஆற்றல் மிக்க சிறுவனாக வளர்ந்து வந்தான்.

sornam-anna-1.jpg

பாடசாலையிலும் திறமையுடன் படித்து உயர் தரம் வரை சென்றான். உடற் பயிச்சியிலும், தற்காப்புக் கலையிலும் சிறப்புறச் செயற்பட்டு சிறந்த மாணவனாக திகழ்ந்தான். மாணவப் பருவத்தில் பொதுப் பணிகள், வேலைகள் என்றால் இவன் தான் முன்னிப்பான். இக்கால கட்டத்தில்தான் தமிழர்கள் வாழ்ந்த மண்ணை சிங்களவர் சிங்கள பூமியாக்க மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் தமிழர்களுக்கு எங்கும் எதிலும் அநீதி, படுகொலைகள், பாலியல் வல்லுறவுக்கள் இதைக் கண்டு சிறுவயதிலே கொதித்தெழுந்தான்.

திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் உயர்தரம் பயின்றுகொண்டிருந்த வேளையில் சிங்கள இராணுவத்தினரும் இனவாதிகளினதும் கொடூரங்களைக் கண்டு இவ் அநீதியை தட்டிக்க கேட்க வேண்டும் என்றால் போராடித்தான் ஆகா வேண்டும் என்று தன்னை போராட்டத்தில் இணைத்துக் கொள்ள விரும்பினான் அக்காலகட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு வழிகளில் போராடிக் கொண்டிருந்தன. அதில் சரியான பாதையை தேர்தெடுப்பது என்பது அக்கால கட்டத்தில் மிகவும் சிக்கலான விடயம்.

ஆனால் தனது இலட்சிய போராட்டத்திற்கு சரியானது விடுதலைப் புலிகள் இயக்கம் தான் என்று 12.09.1983ல் தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்கிறான். எமது தேசியத் தலைவரின் செயற்பாட்டிற்கு ஊடாகச் சரியானதோர் முடிவெடுத்து எமது போராட்டத்தின் அத்திவாரக்கற்களாக திகழ்ந்த மூத்த தளபதிகளில் இவனும் ஒருவனாக நின்று போராட்டத்தை வளர்த்தெடுத்தான்.

சொர்ணம் என்ற பெயருடன் சமர்ப்புலி வளரத் தொடங்கியது. பயிற்சிக்காலங்களில் திறம்படச் செயற்பட்ட இவன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, மணலாறு மாவட்டங்களிலும் அதன் காடுகளிலும் எதிரியை திணறடித்தவன் இவ் மாவட்டங்களில் பெரும் காடுகளுக் கூடாக நீண்ட நடை பயணத்தை சோர்வின்றி மேற்கொண்டு போராட்ட பணிகளை திறம்படச் செயற்படுத்தினான். வேவு அணி, பதுங்கித்தாக்கும் அணி, விநியோக அணி, வழிகாட்டிகள் என காட்டிற்குள் பல அணிகளை உருவாக்கி கிழக்கு மாகாணத்தில் எதிரியின் தடைகளை எல்லாம் சவாலாக ஏற்று எதிர்த்து

நின்று போராடி சாதனைகள் படைத்தவன்.
இவனது போரிடும் ஆற்றலையும் முடிவெடுக்கும் தன்மையையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இனங்கண்டு இதற்கமைவாக தலைவர் அவர்களால் கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்துக்காட்டிய கட்டளைத் தளபதியாகத் திகழ்ந்தான். “சொர்ணம் கதைக்கிறான் என்றாலே சிங்கள இராணுவத்திற்கு கதிகலங்கும்” அந்த அளவுக்கு தனது போரிடும் ஆற்றலை வளர்த்துக்கொண்டவன்.

bal_sor_ts_tleap.jpg

இவ்வாறு இவன் வெற்றிவாகை சூடிய சமர்க்களங்களே அதிகம் ஆகாயக் கடல் வெளிச்சமர், மாங்குளம், தவளைப் பாய்ச்சல், மண்டைதீவு, மண்கிண்டி மலை, இதய பூமி, புலிப்பாய்ச்சல், சூரியக் கதிர், ஓயாத அலைகள் எனப் பல வெற்றிச் சமர்களை எல்லாம் வழிநடத்திய சமரக்களத் தளபதிகளில் இவனும் ஒருவனாகத் திகழ்ந்தான். இவன் படை ஒழுங்கு படுத்தும் சிறப்பை “புலிப்பாய்ச்சல்” நடவடிக்கையில் கண்டு வியப்படைந்தோம். ஜெயசீக்குறு படையினர் மீது திட்டமிட்ட தாக்குதல் மேற்கொள்ள பலமுறை தேசியத் தலைவரிடம் அனுமதி கேட்ட போதும் கிடைக்கவில்லை. ஜெயசிக்குறு படை ஒட்டிசுட்டான் வரை முன்னேறி நிலைகொண்டிருந்த வேளையில் தேசியத் தலைவர் அவர்களால் ஒட்டிசுட்டான், நெடுங்கேணி, கருப்பட்ட முறிப்பு போன்ற படைத்தளங்கள் மீது திட்ட மிட்ட தாக்குதல் மேற்கொள்வதற்கு தளபதி சொர்ணத்திற்கும், தளபதி ஜெயம் அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது. பல வருடங்களாக ஆமை வேகத்தில் நகர்ந்து வந்த ஜெசிக்குறு இராணுவ நடவடிக்கையை மூன்று நாட்களில் பழைய நிலைக்கு வீரட்டியடித்த பெருமை இந்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணத்தையும் சாரும்.

32484619_252806548625455_620931645127104

படையணியின் முதல் தளபதியாக விளங்கிய இவன் தலைவரை பாதுகாக்கும் பணியையும் பொறுப்பேற்றான். திறம்படச் செய்த வீரத்தளபதியுடன் தலைவர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சிலர் துரோகம் இழைத்த போது தலைவருக்கு அருகில் நின்று துரோகத்தை துடைத்தெறிந்தவன். தலைவர் அவர்களின் நம்பிக்கைக் குரியவர்களில் இவனும் ஒருவன்.

இக்காலகட்டத்தில்தான் திருமணம் செய்யுமாறு தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதன் படி ஜெனனி என்ற போராளியைத் திருமணம் செய்து 3 பிள்ளைகளை பெற்றெடுத்தான். தனது திருமணத்திற்கு தலைவர் அவர்கள் வருவார் என்பதால் தனது இடுப்பு வேட்டிக்குள் கைத்துப்பாக்கியை வைத்திருந்தபடி தாலி கட்டினான். அந்தளவுக்கு தலைவர் அவர்களின் பாதுகாப்பில் என்நேரமும் விழிப்பாக இருந்து தலைவர் அவர்களை ஆழமாக நேசித்தான். எமது விடுதலைப் போராட்ட விழுமியங்களில் இருந்து என்றுமே அவன் தவறியதில்லை. எமது விடுதலை மரபையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவன். அதே போல் தனது போராளிகளையும் வளர்த்தெடுத்தான்.

“நான் சொர்ணமண்ணையோட நின்ற நான் என்றால்” வேறு எந்தத் தளபதிகளும் எந்தக் கேள்விகளும் இன்றி அவனுக்கு கடமை வழங்குவார்கள். அந்தளவுக்குப் போராளிகளை புடம் போட்டு வளர்த்த ஆற்றல் மிக்க தளபதியாவான். இயக்கத்தில் இக்கட்டான காலங்களில் எல்லாம் திறம்படச் செயற்பட்டு தடைகளை உடைத்தெறிந்த தளபதிகளில் இவனும் ஒருவன்.

வீரத்தளபதி கேப்பாபுலவிலும், தேவிபுரத்திலும் ஊடறுப்பு தாக்குதல்களை வழிநடத்தி நூற்றுக்கணக்கான இராணுவத்தை கொண்று சிங்கள படையை திணறடித்தான். தேவிபுர ஊடறுப்பு தாக்குதலில் விழுப்புண் அடைந்து தனது கால் இயலாத நிலையிலும் முப்படைகளையும் பொறுப்பெடுத்து இறுதிமூச்சு உள்ளவரை எதிரியோடு சண்டைபிடித்துக் காட்டிய வீரத்தளபதி. இவன் தமிழீழ விடியலுக்காகவும் தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்விற்காகவும் 26 வருடங்கள் அயராது உழைத்த எமது கட்டளைத் தளபதி.

sornam-2.jpgஇவனது மூர்க்கமான சமரைக் கண்டு இராணுவம் கதிகலங்கியது. அதன் எதிர் தாக்குதலாக இராணுவம் பெருந்தொகையில் தமிழ் மக்களை கொண்றுகுவித்தது. மக்களுக்காகப் போரிடும் போது மக்களே இறக்கின்றார் என்ற போது இவனால் எதுவும் செய்ய முடியவில்லை.

எமது மண்ணினதும் மக்களினதும் விடிவிற்கான போராட்டத்தை நேசித்த இவனால் போராட்டத்தைக் கைவிட்டு சரணடைய முடியவில்லை. எனவே போராட்ட மரபுக்கேற்ப தனது இலட்சிய உறுதிப்பாட்டுடன் தன்னை தமிழீழ விடியலுக்காக 15. 05. 2009ம் நாள் தன்னை விதையாக்குகிறான்.

நினைவுப்பகிர்வு:- விதுரன்.

 

https://www.thaarakam.com/news/130434

 

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

spacer.png

spacer.png

 

spacer.png

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.