Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்.

 

கடற்கரும்புலி

மேஜர் காந்தரூபன்

யோகராசா கோணேஸ்வரன்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரப்பிறப்பு:10.09.1971

வீரச்சாவு:10.07.1990

நிகழ்வு:யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடலில் வைத்து சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித்தாக்குதலின்போது வீரச்சாவு


காந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்.

kaantha-roopan.jpg1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறியபோது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில், எதிரியின் கையில் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடிய சூழ்நிலை உருவாகியபொழுது, காந்தரூபன் குப்பியைக் கடித்துவிட்டான். ஆனால், அதிஸ்ரவசமாக சக தோழர்களால் மீட்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டான்.

இருந்தபோதும், சயனைட் விஷம் காந்தரூபனின் உடலில் ஒரு உட்பாதிப்பை உண்டாக்கியிருந்தது. இந்த உட்பாதிப்பிற்க்கான பராமரிப்பு முறைகளில் அத்தியாவசியமானதாக நிறை உணவு அருந்த வேண்டுமென, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

1988, 1989ம் ஆண்டு காலம். இப்போது காந்தரூபன் தலைவர் அவர்களுக்குப் பக்கத்தில் மணலாற்றுக் காட்டில் நின்றான்.

காந்தரூபனிற்கு இப்போதும் நிறை உணவு தேவைப்பட்டது. ஒரு பசுமாடு இருந்தால் காந்தரூபனிற்கும், சுகவீனம் அடைகின்ற போராளிகளுக்கும் பால் கொடுக்க முடியும் எனக் கருதிய தலைவர், வெளியிலிருந்து பால்தரக்கூடிய நல்ல இனப் பசு ஒன்றை, காட்டுக்குள் இருந்த தளத்திற்கு கொண்டு வருமாறு சொன்னார். பசு வந்து சேர்ந்தது.

தலைவரின் துணைவியார் (மதிவதனி அண்ணி) ஒரு தாயைப்போல இருந்து பால் காய்ச்சிக் கொடுத்தார்.

அந்தப் பொழுதுகளிலெல்லாம் காந்தரூபன் நெஞ்சு நெகிழ்ந்து நிர்ப்பான். தான் ஒரு கதியற்றவன் என்ற கவலையே அற்றுப்போகும்.

ஒரு நாள் அன்பு கலந்த மரியாதையோடு, காந்தரூபன் தலைவருக்குப் பக்கத்தில் வந்தான். பாசத்தோடு அவனை அழைத்து அருகில் இருத்திக் கதைத்தார் தலைவர்.

அண்ணை…. என்னை கரும்புலிகளில் சேர்த்துக் கொள்ளுங்கோ…” என்றான். அதோடு தனது உள்ளத்துக்குள் உறைந்து கிடந்த இன்னொரு விருப்பத்தையும் அவன் தலைவரிடம் சொன்னான். தயவு செய்து நீங்கள் அதைச் செய்ய வேணும் …. “அவனுக்கருகில் இருந்து அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் தலைவர்.” என்னைப் போல எத்தனையோ பெடியள் இந்த நாட்டில அநாதைகளாக வாழுறாங்கள் … அப்பா, அம்மா இல்லாம, சொந்தக்காரரின் ஆதரவில்லாம அலைஞ்சு திரியிறாங்கள். வாழ இடமில்லாம, படிக்க வசதி இல்லாமல், எவ்வளவோ ஏக்கங்களோடையும், துன்பங்களோடையும் அவங்கள் இருப்பாங்கள் எண்டிறதை, நான் அனுபவித்ததில கண்டனான் அண்ணை….” “நீங்கள் என்னை அன்போட கவனிச்சுப் பார்த்ததைப் போல அவங்களையும் கவனிக்க வேணும். அவங்கள் எந்தக் குறையுமில்லாமல் வளரவும் நன்றாகப் படிக்கவும் வசதி செய்து கொடுங்கோ. அவர்களுக்கென்று ஒரு இடத்தை அமைத்து, அங்குவைத்து அவர்களையெல்லாம் வளர்த்தெடுத்து, அவர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுத்து விடுங்கள் அண்ணை …. ” தலைவரின் இதயத்தை இது தொட்டது. அப்படியான ஒன்றின் தேவை பற்றி எண்ணியிருந்த தலைவருக்கு காந்தரூபனின் வேண்டுகோள் மகிழ்ட்சியைக் கொடுத்தது.

அவ்வாறான இல்லமொன்றை ஆரம்பித்து காந்தரூபனின் நினைவாக அதனை  என்ற பெயரிலேயே இன்று செயற்ப்பட அவருடைய கண்கள் கலங்க்கிபோயிருந்தன. தனது சால்வையால் கண்களை ஒற்றிக் கொண்டார். அருகிலேயே நின்ற அம்மா சொன்னார். அன்றைக்கு முழுவதும் இவர் ஒரு மாதிரியா இருந்தார். நான் ஒன்றுமே கேட்கவில்லை. பின்னேரம், கடலில் பொடியள் கரும்புலியாய் போய் கப்பலடிக்கப் போறாங்களாம். எண்டு பாத்திட்டு வாறனெண்டு போனார். காந்தரூபனும் போகப் போறான் எண்டு இவர் சொல்லவில்லலை. இரவானதும் எனக்கு நித்திரை வரமறுக்குது. சத்தத்தையாவது கேப்பமென்று வீட்டு வாசலில் இருந்தன். கொஞ்ச நேரத்தில் கடலதிரச் சத்தங்கேட்டது. நான் வாசலிலேயே இருந்தன். சாமம் ஒரு மணியளவில் இவர் ஒரு மாதிரியாக சோர்ந்துபோய் வந்தார். வீட்டுக்குள்ள வந்தவர், எங்கட காந்தரூபனும் கரும்புலியாய்ப் போனவன் என்று சொல்லிப் போட்டு அழுதார்.

யோகராசா அண்ணரும், மனைவியும் பிற்காலத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றார்கள். அவர்கள் தங்களுக்கு நான்கு குழந்தைகள் என்று சொல்கின்றார்கள். தங்களுடைய முதல் மகன் கோணேஸ்வரன் (காந்தரூபன்) என்கிறார்கள். அவர்களுடைய மூத்த மகன் கரும்புலியாகிக் கடலிலே காவியமாகியபின், அவர்களுடைய நான்காவது மகன் பிறந்தான். இப்போது கைக்குழந்தையான அவனைத் தூக்கித் தோளில் சாய்த்தபடி அந்தத் தாய் சொல்கிறாள் ….

காந்தரூபனா நினைத்துத்தான் இவனை நான் வளர்க்கிறன். இந்தத் தாயுடன் கூடவே அவரது தமக்கையாரும் இருந்தார். அதே உணர்வு சின்ன வயது முதல் காந்தரூபன் மீது அன்பு செலுத்திய இந்த பெரியம்மாவும் சேர்ந்து கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். சின்ன வயதில காந்தரூபன் என்ர பிள்ளைகளோட சேர்ந்துதான் விளையாடித்திரிவான். படிக்கிரதென்றால் அவனுக்கு சரியான கள்ளம். என்ர மகள் அவனைக் கூட்டிக்கொண்டு வந்து இருத்தி எழுதக் கற்றுக் கொடுப்பாள். ‘அ’ எழுதி ‘ஆ’ எழுதி ‘இ’ எழுதும் போது….., “இதென்ன கனக்க சுழிபோட வேண்டியிருக்கு…. எழுதப்படுதில்லை” என்று சொல்லிக் கொப்பியைத் தூக்கி எறிஞ்சுபோட்டு ஓடிவிடுவான். அப்படிப்பட்டவன் பிறகு இயக்கத்திற்குப் போய் கொஞ்சக் காலத்தில திரும்பி வரேக்க பெரிய அறிவாளியாக இருந்தான். பெரிய அரசியல் மேதைகளைப் போல எங்களுக்கெல்லாம் விளக்கம் தருவான். அந்தளவுக்கு அவனை இயக்கம் தான் வளர்த்து விட்டது. பெரியம்மா தொடர்ந்து சொன்னார்.

கப்பலடிக்கிறதுக்குப் போறத்துக்கு இரண்டு நாளைக்கு முன்னர் சரியான வெயிலுக்கை வீட்டுக்கு வந்தான். ‘தலையிடியாக் கிடக்கு பனடோல் தாங்கோ’ என்றான். கொடுத்தேன். வாங்கிக் குடித்தான்.

நான் ஒரு முக்கியமான வேலையாக வேற ஒரு இடத்துக்குப் போறேன் பெரியம்மா என்றான். வருத்தம் என்று சொல்லுறாயேடா தம்பி ….. தலைவரிட்ட சொல்லிப் போட்டு நில்லன். இன்னொருதரம் போகலாம் தானே ?…. என்று ஆலோசனை சொன்னேன்.  “…. இல்லை பெரியம்மா. அந்த வேலைக்குப் போகப்போறன் என்று நானாத்தான் அவரிட்டைக் கேட்டனான்…. கட்டாயம் நான் தான் அந்த வேலைக்குப் போகோணும்…” என்றான்.

“சரி தம்பி ….. சுகமாய் போய் சுகமாய் திரும்பி வா” என்று நான் சொல்ல, அவன் திரும்பிச் சொன்னான்…..

“சுகமாய் போவேன் பெரியம்மா….. அதில பிரசினையில்ல….. ஆனா….. திரும்பி வாறதென்கிறது தான்….. சரிபார்ப்பம்…. என்றான்.

அதற்க்கு மேல் பெரியம்மாவால் பேசமுடியவில்லை. மறுபக்கம் திரும்பி கண்களை துடைத்துக் கொண்டார்.

 

 

https://www.thaarakam.com/news/141196

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

 

spacer.png

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.