Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அச்சத்தில் சிக்கியுள்ள ஆட்சியாளர்கள்; எவரது கண்டனமும் பொருட்டல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அச்சத்தில் சிக்கியுள்ள ஆட்சியாளர்கள்;

எவரது கண்டனமும் பொருட்டல்ல-வேலவன்-

கொழும்பிலுள்ள தங்ககங்களில் தங்கியிருந்த 500 இற்கும் மேலான தமிழ்மக்களை ஒரேயிரவில் வெளியேற்றி அவர்களை அவல நிலைக்குள் தள்ளிவிட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதனால் ஏற்பட்ட எதிர்ப்பு அலைகளைத் தற்காலிகமாகத் தணிப்பதற்காக நாடகமாடி வருகின்றது.

இந்த விடயம் சனாதிபதி உட்பட உயர்மட்டத்திற்குத் தெரியாது நடைபெற்ற ஓர் தவறு என்பது போலவும், சிறிலங்காவின் காவல்துறையின் உயர் பொறுப்பிலுள்ள காவல்துறை மா அதிபர் உட்பட சில அதிகாரிகளின் செயற்பாடு இது என்பது போலவும் காட்டிக்கொள்ள மகிந்த ராஜபக்ச அரசு முயல்கிறது.

இது அதிகாரிகளின் தவறாக இருந்தாலும் அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்வது போல நாடகமாடி நிலைமையைச் சமாளிக்க மகிந்த அரசு முற்பட்டுநிற்கிறது.

ஆனால் மகிந்த அரசின் இந்த நடவடிக்கைகள் எல்லாம் அதன் போலித்தனத்தை மேலும் மேலும் அம்பலப்படுத்த உதவுமே தவிர அந்த அரசு மீது படிந்துள்ள கறையைப் போக்க எதுவிதத்திலும் பயன்படப்போவதில்லை.

கொழும்பிலுள்ள தமிழ் மக்களைக் குறிப்பாக தங்ககங்களில் தங்கியுள்ள தமிழ் மக்கள் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என்றும் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் மகிந்த அரசு முடிவு செய்து அதனைக் கடந்த மாதம் 31 ஆம் திகதி வெளிப்படுத்தியது.

அதனை அரசாங்கம் வெளிப்படையான ஒரு பிரகடனமாக வெளியிடாது சிறிலங்காவின் காவல்துறையினூடாக நடைமுறைப்படுத்த முடிவுசெய்தது.

இதனடிப்படையில் கடந்த 31 ஆம் திகதி கொழும்பிலுள்ள சிறிய தங்ககங்களுக்குச் சென்ற சிறிலங்காக் காவல்துறை அதிகாரிகள் அங்குள்ள தமிழர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்றி விடவேண்டுமென அவற்றின் உரிமையாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

இதற்குப் பலத்த எதிர்ப்புக்கிளம்பியதும் அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்த சிலர் எடுக்கின்ற முயற்சி இது எனவும் அவ்வாறான உத்தரவு எதனையும் தாம் பிறப்பிக்கவில்லையெனவும் மறுதினம் அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதேதினம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை சிறிலங்காவின் உயர் காவல்துறை அதிகாரி விக்டர் பெரேரா நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கொழும்பிலுள்ள தங்ககங்களிலுள்ள தமிழ்மக்கள் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என்றும் அவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்ப வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார்.

சிங்கள மக்களின் பாதுகாப்பை முன்னிட்டே தாம் இதனை மேற்கொள்வதாகவும் ஆனால் ஊடகங்கள் கூறுவது போல் 56 தங்ககங்களிலுமுள்ள எல்லா மக்களையும் வெளியேறுமாறு கேட்கவில்லை, சந்தேகத்துக்கு இடமானவர்களையும் தமது அடையாளத்தை நிரூபிக்கத் தவறியவர்களையுமே வெளியேற்றுமாறு தங்கக உரிமையாளர்களைக் கேட்டுள்ளோம் என அவர் கூறினார்.

இங்கு முக்கியமான விடயம் என்னவெனில் சந்தேகத்துக்கு இடமானவர்கள் அடையாளத்தை நிரூபிக்கத் தவறுபவர்கள் கொழும்பில் தங்கியிருக்க முடியுமா? என்பதாகும். ஏனெனில் அவ்வாறான எவரையும் பற்றிய தகவல்களை வழங்க தங்கக உரிமையாளர்கள், முச்சக்கர வண்டிச் சாரதிகள் உட்பட சாதாரண சிங்கள மக்கள் அனைவருக்குமே சிறிலங்காக் காவல்துறை பணிப்புரைகளை வழங்கியுள்ளது. அது மட்டுமல்லாது அவர்களைப் பிடித்துக்கொண்டு சென்று காவல்துறையிடம் ஒப்படைக்கக் கூட அவர்களுக்கு அதிகாரம் உண்டு.

அது மட்டுமல்ல அடிக்கடி கொழும்பில் இடம்பெறும் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல்களில் இவ்வாறு கூறித்தான் தமிழ் மக்களை அள்ளிச் சென்று சிறிலங்காக் காவல்துறை தடுத்து வைக்கின்றது.

எனவே இவ்வாறு காவல்துறை மா அதிபர் கூறியதன் மூலம் உடனடிச் சமாதானம் கூறிய அதேவேளை தமது முடிவில் அவர்கள் உறுதியாக இருப்பது வெளிப்படுத்தப்படது.

இந்த விடயம் நான்காம் திகதி திங்கட்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் கடந்த ஆறாம் திகதி புதன்கிழமை சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச தலைமையில் கூடிய உயர்மட்ட பாதுகாப்புக்குழு தங்ககங்களிலிருந்து தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கான திட்டமிடலை மேற்கொண்டது.

மறுதினம் அதிகாலையே நடவடிக்கை தொடங்கப்பட்டு 500 வரையான தமிழ் மக்கள் கொழும்பை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

வடக்கு - கிழக்குப் பிரதேசங்களிலிருந்து வந்தவர்களில் ஏற்றுக்கொள்ளக் கூடியவலுவான காரணம் எதுவும் இல்லாமல் கொழும்பிலுள்ள தங்ககங்களில் தங்கியுள்ளவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வடக்கு - கிழக்குப் பிரதேசங்களுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் எனச் சிறிலங்காக் காவல்துறையால் விளக்கம் கூறப்பட்டபோதும் வெளியேற்றப்பட்டவர்களின் கூற்றுக்கள் அதனைப் பொய் என வெளிப்படுத்தின.

அதேவேளை சிறிலங்கா இராணுவ விவகாரங்களுக்கான பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தமிழர்கள் அவர்களது விருப்பப்படியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தனது வழமையான பொய்யைக் கூறினார். ஆனால் முதல்நாள் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த வெளியேற்றம் தேவையானது எனக்கூறியிருந்தார்.

தாங்கள் வலுவான காரணத்துடன்தான் தங்கியிருக்கிறார்கள் என்பதைப் பாதிக்கப்பட்டோர் விளக்கக்கூட கால அவகாசம் வழங்கப்படவில்லை. உண்மையில் அவர்களைப் பேசக்கூட விடவில்லை. காவல்துறையினர் விசாரிக்கவும் இல்லை. விடிய முன்னர் குறித்த தொகை தமிழரை கொழும்பிலிருந்து வெளியேற்றி விடவேண்டும் என்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தனர்.

அத்துடன் அவர்களை மீன் ஏற்றும் ஊர்தி உட்பட கிடைத்தவற்றிலெல்லாம் ஏற்றி அனுப்பியதிலிருந்தே காவல்துறையினரின் அவசரம் புரியக்கூடியதாக இருந்தது.

இந்த நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரணானது, அரசியல் மடமைத்தனம், வெட்கக்கேடானது, என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. சந்தடி சாக்கில் இப்பொழுது ஜே.வி.பி.யும் உயர்நீதிமன்றமும் நல்ல பெயரைத் தட்டிக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இதன் காரணமாக மகிந்த அரசாங்கம் தனிமைப்பட்டு விட பழியை அதிகாரிகள் மீது தள்ளிவிட்டு தப்பிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவுக்குத் தெரியாமலே இடம்பெற்ற சம்பவம் எனக் காட்டிக் கொள்ளவும் முயல்கின்றது.

இப்பொழுது தமிழ் மக்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் ஜே.வி.பி, தமிழ்மக்களின் துன்ப துயரங்களுக்கெல்லாம் தூண்டுகோலாக இருந்ததை இதன் மூலம் மறைத்துவிடப் பார்க்கிறது. 'அப்பாவித் தமிழரை இப்படிக் கொடுமைப்படுத்துவது முட்டாள்தனம், சிங்களவர் வெட்கித்தலை குனிய வேண்டிய பெரும் கொடூரம்" என்று ஜே.வி.பி சீறியுள்ளது.

அப்படியானால் மகிந்த ராஜபக்ச அரசை யுத்தத்துக்கு கொம்பு சீவியது மட்டுமல்லாது எத்தகையை கொடூரங்களைப் புரிந்தாவது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்து விடவேண்டும் எனப் படைமுகாம் படை முகாமாகச் சென்று பிரசாரம் செய்ததற்கு ஜே.வி.பி தலையை எங்கே வைக்கப்போகிறது?

சம்பூரிலும், மூதூரிலும், வாகரையிலும் தமிழ்மக்கள் பல்குழல் எறிகணைத் தாக்குதலிலும், எறிகணை வீச்சுகளிலும் விமானக் குண்டுத் தாக்குதலிலும் கொல்லப்பட்டபோது தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்தாதீர்கள் பிரச்சினையைப் புலிகளுடன் வைத்துக்கொள்ளுங்கள் என ஜே.வி.பி. கூறாதது ஏன்?

அங்கிருந்த மக்களைப் பட்டினி போட்டு பல்லாயிரக்கணக்கில் இடம்பெயரச் செய்து அவலத்திற்கு உள்ளாக்கிய போது ஜே.வி.பி அதனை உற்சாகப்படுத்தி வரவேற்றது ஏன்?

இன்னமும் கூட இடம்பெயர்ந்த மக்களை அவலத்திற்குள்ளாக்கி அவர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அலைக்கழிக்கும் அரசாங்கத்திற்கு எதிராக இவர்கள் குரல் கொடுக்காதது ஏன்? ஏனெனில் இவை எல்லாம் படையினரின் மனநிலையைப் பாதித்துவிடுமென இவர்கள் கருதுவதே காரணமாகும். அத்துடன் அவர்களின் மனவிருப்பமும் அதுவேயாகும்.

இப்போதைய இந்த நடவடிக்கையில் கூட புலிகளைப் பலப்படுத்தி விடும் என்ற இவர்களின் அச்ச உணர்வையே இவர்களின் கண்டனம் வெளிப்படுத்துகிறது.

இன்று தென்பகுதியில் வாழும் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்படும் பல நடவடிக்கைகள் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் சிறிலங்காவின் அரசியல் யாப்பையும் மீறுபவையாகவே உள்ளன.

உதாரணமாக தென்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் காவல்துறைப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். தென்பகுதி செல்லும் வடக்கு கிழக்கு மக்கள் அங்குள்ள காவல்துறையில் பதிவை மேற்கொள்ளவேண்டும் என்பதெல்லாம் அவர்களின் அடிப்படை மனித உரிமை மீறல்கள்.

இவற்றையெல்லாம் சிறிலங்காவின் உயர் நீதிமன்றமோ, ஏனைய அமைப்புக்களோ கண்டு கொள்வதில்லை. அவையெல்லாம் இப்போது இயல்பான நடைமுறைகளாகிப் போயுள்ளன. அவ்வாறான பதிவுகள் இல்லாமை குற்றம் என்பது போலாகி அவ்வாறில்லாதவர்கள் கைது செய்யப்படலாம் என்பதும் நியாயமாகிவிட்டது.

இவ்வாறே இப்பொழுது அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை அதாவது அரசாங்கமே தவறு என்று ஏற்றுக்கொண்டு மன்னிப்புக்;கோரிய தமிழர்களை வெளியேற்றிய நடவடிக்கை காலப்போக்கில் இயல்பானதாக மாறிவிடவே வாய்ப்புக்கள் உண்டு.

சடுதியாக மேற்கொண்ட இந்த வெளியேற்ற நடவடிக்கையிலிருந்து அரசாங்கம் பின் வாங்கியதாகக் காட்டிக்கொண்டாலும் வேறு வழிமுறைகளில் அது தனது முடிவை செயற்படுத்தும் என்பதைக் கடந்த காலச் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

கடந்த இரு தினங்களாகக் கூட கொழும்பு நகரசோதனைச் சாவடிகளில் விசாரணைகளில் ஈடுபடும் சிறிலங்காக் காவல்துறையினர் வடக்கு கிழக்கு மாகாண மக்களை விசாரணை செய்கையில் அவர்கள் வடக்கு கிழக்கிற்குத் தாமாகவே செல்லாவிட்டால் பல பிரச்சினை களை எதிர்கொள்ளவேண்டிவரும் என எச்சரிக்கை செய்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

எதுவித பாதுகாப்புமற்றுள்ள நிலையில் உள்ள தமிழ் மக்கள் இந்த எச்சரிக்கையைத் தட்டிக்கழித்துவிட முடியாது.

அண்மையில் சிறிலங்கா வந்திருந்த சீனத்தூதுக்குழுவொன்றின் பிரதிநிதிகளுக்கு 'தென்பகுதியில் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்குரிய சூழ்நிலை இல்லை என்பது பொய்யான கருத்து நீங்கள் இதனை நம்ப வேண்டாம்" என்று சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா கூறியிருந்தார். இவ்வாறான ஏமாற்றுக்கு மட்டுமே சிங்கள ஆட்சியாளரின் மன்னிப்புக் கோரல் பயன்படப் போகின்றது.

அதேவேளை கோத்தபாய ராஜபக்ச தலைமையில் கொழும்பின் பாதுகாப்பிற்கென மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எல்லாம் பயனற்றுப்போய்விட்டன என உணர்ந்து கொண்டதாலேயே இவ்வாறான நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டது. எனவே அச்சத்தில் சிக்கியுள்ள சிங்கள ஆட்சியாளர்கள் எவருடைய கருத்தையும் கண்டனத்தையும் ஏற்றுக்கொள்வர் என எதிர்பார்க்கமுடியாது.

இந்நிலையில் தமிழ் மக்களைப் பொறுத்து சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து எவ்வித பாதுகாப்பையோ அனுதாபத்தையோ கூட எங்கும் பெறமுடியாது. எனவே தமதுபாதுகாப் பைத் தாமே தேடிக்கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

ஆயுத தேவைகளுக்காக சீனா, பாகிஸ்தான் நாடுகள் பக்கம் கொழும்பு தனது கவனத்தை அதிகளவு திருப்பியுள்ள நிலையில் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் இராணுவத் தளவாடங்கள் அடங்கிய இராணுவ உதவிகளை அளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக புதுடில்லி இன்னமும் குழப்பமான நிலையிலேயே இருப்பதாகத் தெரிவிக்கப்படுவதானது இந்தியாவின் இராஜதந்திரத் திறனாற்றல் குறித்து கேள்வியையே எழ வைப்பதாகிறது.

ஏனெனில், இலங்கை தொடர்பான தெளிவானதொரு இராஜதந்திர அணுகுமுறையை இந்தியா கொண்டிருக்கவில்லை என்பதையே இது வெளிக்காட்டுகின்றது. இந்நிலையானது சிறிலங்கா அரசை இந்தியா தனது செல்வாக்கிற்கும், கட்டுப்பாட்டிற்கும் உள் ளாக்குவதற்கு மாறாக சிறிலங்கா ஆட்சியாளரின் மறைமுக மிரட்டலுக்கு இந்தியாவைப் பணிய வைப்பதாகி விடுகின்றது.

இந்தியா தாக்குதலுக்கான ஆயுதங்களைத் தராதுபோனால், சீனாவிடமோ, பாகிஸ்தானிடமோ சிறிலங்கா ஆயுதக் கொள்வனவில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என்ற விடயமானது ஒரு வகையில் இந்தியாவை தனது வழிக்குக் கொண்டுவரச் சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ள ஒருவகை அழுத்தமே ஆகும்.

அவ்வாறு இல்லாதுவிடில், சிறிலங்கா அரசு தனக்குத் தேவையான ஆயுதங்களை பாகிஸ்தானிடமோ அன்றி சீனாவிடமோ கோராது வேறு நாடுகளைக் கோரப்போவதாக தனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியிருக்கலாம். இன்று உலகில் ஆயுதங்களை விற்பனை செய்யப் போட்டிபோடாத நாடு எதுதான் உண்டு? மலிவு விலையில் கொள்வனவு செய்வதாயின் உக்ரேயினிடமோ அன்றி முன்னாள் சோவியத் குடியரசின் ஏனைய நாடுகளிடமோ கோரியிருக்கலாம்.

ஆனால், சிறிலங்கா அரசு அவ்வாறு கோராது சீனா, பாகிஸ்தானை முதன்மைப்படுத்தியிருப்பதான

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.