Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியக் குடித்தொகை மதிப்பீட்டில் (Census இல் ) `தமிழ்` அடையாளத்தினைப் பேணுவதன் தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியக் குடித்தொகை மதிப்பீட்டில் (Census இல் ) `தமிழ்` அடையாளத்தினைப் பேணுவதன் தேவை :::: வி.இ.குகநாதன்

 

spacer.png

பிரித்தானியாவில் பத்து ஆண்டுகளுக்கொரு முறை நடாத்தப்படும் குடிமக்கள் கணக்கெடுப்பு (Census 2021 ) ஆனது வருகின்ற மார்ச் மாதக் காலப்பகுதி (21st March 2021 ) முதல் நடைபெறவுள்ளது. இந்தக் குடித்தொகை மதிப்பீடு மேற்கொள்ளப்படுவதன் தேவையினை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். இக் கணக்கெடுப்பில் பெறப்படும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே அடுத்து வரும் ஆண்டுகளில் பிரித்தானிய அரசும், உள்ளூராட்சி அமைப்புகளும், பிற நலத்துறை அமைப்புகளும் தமது வளங்களைப் பங்கீடு செய்யவுள்ளன. 1801 ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுப்பானது இறுதியாக 2011 ம் ஆண்டு இடம் பெற்றது. வழமை போல, பத்தாண்டுகள் கழித்து இந்த மார்ச் மாதம் இடம் பெறவுள்ளது. எனவே இந்தக் கணக்கெடுப்பில் கலந்து கொண்டு எமது உரிய செய்திகளைச் சரியாகக் கொடுப்பதன் மூலமே அரசின் பண ஒதுக்கீடு உட்பட்ட பிற செயல்கள் ஒழுங்காக நடைபெற நாம் உதவ முடியும். வேறு முறையில் பெற்றுக் கொள்ளப்பட்ட எந்தத் தரவுகளையும் விட, குடித்தொகை மதிப்பீட்டில் பெறப்படும் தரவுகளே முதன்மையானவை என்பதுடன் அரசின் முடிவுகளுக்கு இத் தரவுகளே அதிகம் பயன்படுத்தப்படும் என்பதனையும் கவனத்திற் கொள்க.

`தமிழ்` எனும் அடையாளத்துக்கான தேவை :-

இக் குடித்தொகை மதிப்பீட்டில் தமிழர்கள் எவ்வளவு பேர் இங்கிருக்கின்றோம் என்பதனை அதிகாரரீதியாக நிறுவும் போதே நாம் எமது மொழி வளர்ச்சிக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்குமான அரசின் வள ஒதுக்கீடுகளை உரிய முறையில் பெற்றுக் கொள்ள முடியும். வேறு வகையான கணக்கீடுகள் இருக்கின்றது தானே எனக் கேட்டால், அவை ஒப்பீட்டுரீதியில் நம்பகத்தன்மை குறைந்தவை என்பதுடன் அரசின் பொதுக் கொள்கையான வள ஒதுக்கீட்டுக்கு ஏற்றவையல்ல. இதனை நீங்கள் கீழுள்ள இணையத்தளத்துக்குச் சென்று சரி பார்த்துக் கொள்ள முடியும்.

https://www.ons.gov.uk/census/censustransformationprogramme/aboutthecensus

எனவே எமது மொழி-பண்பாடு சார்ந்த பெரும் செயல் திட்டங்களுக்கான வள ஒதுக்கீட்டுக்கு, தமிழர்கள் எவ்வளவு பேர் இங்கு வாழ்கின்றார்கள் என்ற தரவு குடித்தொகை மதிப்பீட்டில் இடம் பெறுவது இன்றியமையாதாகும். எடுத்துக் காட்டாக, தமிழை இங்குள்ள தேசியப் பள்ளிக்கூடங்களில் இரண்டாம் மொழியாக கற்பிக்க வைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியினை எடுத்துக்கொள்வோம். இதற்குத் தேவையான ஒரு அடிப்படைத் தரவு `தமிழர்களின் தொகை` பற்றிய அதிகார முறையிலான தரவேயாகும். அதே போன்று பண்பாட்டு வகையில் அமைந்த இன்னொரு எடுத்துக்காட்டாக, தைத் திங்களினை தமிழர் மரபு மாதமாக அரசோ/ உள்ளூராட்சி அமைப்புகளையோ ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கும் இத் தரவு இன்றியமையாதது. இவ்வாறு அடுக்கிக் கொண்டே செல்லலாம். அதே போன்று அரசியல்ரீதியான சில நன்மைகளுமுள்ளன, எனினும் இக் கட்டுரை இப்போது அதற்குள் போக விரும்பவில்லை.

முதலில் இஙகுள்ள சில தமிழ் ஆர்வலர்கள் `தமிழ்` என்பதனை குடித்தொகை மதிப்பீட்டுக் கேள்விக்கான பதிலாக அமையும் (படத்தில் 15 வது கேள்வி) வகையிலான ஒரு முயற்சி இங்கு மேற்கொள்ளப்பட்ட போதும், அது இரு காரணங்களால் நிறைவேறவில்லை. முதலாவது காரணமாக நேரம் பிந்தியமை அமைந்தது, அதாவது 2018 ம் ஆண்டே இதற்கான வடிவமைப்புத் தொடங்கி 2020 இல் ஏற்கனவே வடிவமைப்பானது நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டமை. இரண்டாவது காரணமாக, குடித்தொகை மதிப்பீட்டினை மேற்கொள்ளவுள்ள நிறுவனமானது (ONS , The Office for National Statistics ) அதனை முடிந்தளவுக்குச் சுருக்கமாகவும், தெளிவாகவும் வடிவமைக்க விரும்பியமை. மேற்கூறிய இரு காரணங்களால் `தமிழ்` ஒரு தெரிவாக இடம் பெறவில்லை. அடுத்த முறை 2031 இற்கான குடித்தொகை மதிப்பீட்டில் ஒரு தெரிவாக அமைக்க மீண்டும் 2026/ 2027 இல் முயற்சிக்கலாம்.

இம் முறை செய்ய வேண்டியது என்ன? 

 

spacer.png

முதலில் நாம் எல்லோரும் குடித்தொகை மதிப்பீட்டில் கலந்து கொள்ள வேண்டும். அடுத்தாக அதில் கேட்கப்படும் 15 வது கேள்வியில் கவனம் செலுத்த வேண்டும். “How would you describe your national identity?” என்பதே கேள்வி. படம் காண்க. இதற்குப் பதிலாக முதலில் `other ` (வேறு ) என்பதனைத் தெரிவு செய்ய வேண்டும். அடுத்த படி(Step) தான் முதன்மையானது. கீழுள்ள பெட்டியில் `Tamil ` என எழுத வேண்டும். இது தொடர்பாக ONSஇனால் தரப்பட்டுள்ள பதிலினைப் படம் 2 இல் காண்க. அங்கு ONS இனால் கொடுக்கப்பட்ட பதிலில் தேசிய அடையாளம் என்பது எமது தெரிவு சார்ந்ததே தவிர சட்டரீதியானது அல்ல எனக் குறிப்பிடப்பட்டிருப்பதையும் கவனத்திற் கொள்க. அதே போன்று அடுத்த கேள்வியான இனக்குழு `What is your ethnic group?` தொடர்பான கேள்வியிலும் (16 வது கேள்வி) , முதலில் C இனை(Asian) தெரிவு செய்து, பின்பு `Any other Asian` இற்கு கீழுள்ள பெட்டியிலும் `Tamil ` என எழுத வேண்டும். இங்கு முதன்மையாக `Srilankan tamil` / `Indian ` என எழுதுவதைத் தவிர்த்து `தமிழ்` என்ற ஒரு குடையின் கீழ் இணைவது முதன்மையானது {இலங்கைத் தமிழ், இந்தியத் தமிழ் என எழுதும்போது அவற்றின் முன்னொட்டுகள் குறிப்பதாகக் கருதப்படும் சிங்களம், இந்தி என்பனவற்றுக்கே முதன்மை சென்று சேரலாம்}.

மேற்கூறிய வகையில் நாம் எல்லோரும் இணைந்து `தமிழ்` எனும் அடையாளத்தினை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கொண்டு வருவதன் மூலம் எமது மொழி-பண்பாடு சார்ந்த வள ஒதுக்கீடுகளை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள், விழிப்புணர்வுப் பரப்புரைகள் என்பன இடம் பெற வேண்டும். இம் முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது பெருமளவுக்கு இணையத்தினைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்படவுள்ளது {தேவையானோருக்கு பழைய காகித எழுத்து வடிவிலான முறை பின்பற்றப்படும்}. எனவே இருக்கின்ற ஒரு மாதத்தில் சரியான முறையில் இச் செய்தியினை எல்லோருக்கும் கிடைக்கச் செய்வோம்.

குறிப்பு – படத்திலுள்ளவை 2011 கணக்கெடுப்பு படிவங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. 2021 இல் குறித்த இரு கேள்விகளுக்குமான வடிவம் மாறாத போதும் பக்க எண் மாறலாம். படிவத்தினை மாதிரிக்காகத் தரவிறக்கம் செய்ய பின்வரும் இணைப்புக்குச் செல்க.

https://census.ukdataservice.ac.uk/media/50966/2011_england_household.pdf

வேண்டுகோள் – இந்தக் குடித்தொகை மதிப்பீடானது ( Census ) அரசு தனது வளங்களைப் பல்வேறு பிரிவகளுக்கும் உரிய முறையில் ஒதுக்குவதற்கு எடுக்கும் ஒரு முயற்சி. இது தனிப்பட்வர்களோதோ அல்லது குழுக்களினதோ முயற்சி அன்று. இதில் பங்கெடுத்து, தமிழ் அடையாளத்தினை உறுதி செய்து , எமது மொழி வளர்ச்சியினைப் பேணிக் காப்பது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுக் கடமையாகும்.

 

https://inioru.com/identity-in-census-return-2021-uk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.