Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மைக்கு திரையிட முயலும் குழப்பகரமான சக்திகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைக்கு திரையிட முயலும் குழப்பகரமான சக்திகள்!

 

BB9D254E-7260-45B0-B14F-F19B606D41F4.jpe

தயாளன்

2009 க்குப் பின்னர் (மைத்திரியின் ஆட்சிக்காலம் உட்பட) சிங்களத்துக்கெதிராக எந்த ஆணியையுமே புடுங்கமுடியாது என்ற உணர்வு அநேகரிடமும் ஏற்பட்டிருந்தது. ஆனாலும் தமிழரின் இறுதித் தேசியத்தலைவர் கஜேந்திரகுமாரே எனப் பிரகடனப்படுத்திய சட்டத்தரணி சுகாஸ் “எங்களது சடலங்களைக் கடந்தே யாழ் கோட்டைக்குள் இராணுவம் புகமுடியும்” எனக் குட்டி யுத்தப் பிரகடனம் செய்தார். இதனை படைகளோ அரசோ,தமிழர்களோ சீரியஸ்யாக எடுக்கவில்லை. முன்னர் குடா நாட்டிலுள்ள 40 ஆயிரம் படையினரையும் சவப்பெட்டியில் அனுப்புவோம் என்றார் இக் கட்சியைச் சேர்ந்த கஜேந்திரன். இறுதி யுத்தத்தின் போது நாட்டிலேயே இவர் இருக்கவில்லை. முன்னாள் போராளிகள் நலன்,வட கிழக்கு இணைப்பு பற்றியெல்லாம் முழக்கமிடும் இவர்கள் தமக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியை தமது கட்சியிலுள்ள முன்னாள் போராளிகளில் யாருக்காவதோ கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எவருக்குமோ வழங்கத் தயாரில்லை. கிழக்கு மாகாண வாக்குகள் இல்லையேல் தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்திருக்காது.
சோளன் பயிர் செய்கை, தொல்பொருள் ஆராய்வு முதலான பல்வேறு சாட்டுகளைச் சொல்லி தமிழர் தாயகத்தில் கணிசமான காணிகளை கையகப்படுத்துகிறது சிங்களம். கால்நடை வளர்ப்பாளர்கள் தாக்கப்படல்,கைது செய்யப்படல் கால்நடைகள் கொல்லப்படல் ,இழுப்பட்டுச் செல்லும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை,காணாமற்போனோர் விவகாரம், உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்த்தடை,முதலான விடயங்கள் மட்டுமல்லாது தோட்டத்தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள விவகாரம் என்பதோடு முஸ்லீம் மக்களின் ஜனாஸாக்களை புதைக்கத் தடை என்ற உணர்வுபூர்வமான விடயத்துக்காகவும் தமிழ் பேசும் மக்கள் தமது ஒன்று பட்ட எதிர்ப்பை சிங்களத்துக்கு வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

 

இந்த நிலையில் பல்வேறு பட்ட தரப்பினரின் ஆலோசனைக் கிணங்க உருவானதே “பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை” எனும் பேரணி. இது சாத்தியமா? எனும் கேள்வி அரசியலோடு நீண்டகாலம் இழுபட்ட பலரின் மனதில் இருந்தது. சாத்தியமே எனத் தனது மனதில் 100 % நம்பிக்கையுடன் புறப்பட்டார் சாணக்கியன். அவர் வைத்த முதலடி தயங்கித் தயங்கி நின்ற ஏனையோரையும் பின்னால் தொடரவைத்தது. எந்தத் தடையையும் பொருட்படுத்தப் போவதில்லை என்ற சாணக்கியனின் பின்னால் போகமுடியும் முடிவுக்கு வர முடிந்தது.சொன்ன மாதிரியே பொலிகண்டி என்ற இலக்கை அடைய முடிந்தது.
இது ஏற்பாட்டின் குழுவின் வெற்றிதான். ஆனால் ஓர் இளம் அரசியல் வாதியின் துணிச்சலை சகிப்பது பலருக்கு சிரமமாக இருக்கிறது. இதில் பரிதாபத்துக்குரியவர் திருமதி சசிகலா ரவிராஜ். இந்தியாவோ இலங்கையோ சசிகலா என்ற பெயரே வில்லங்கமானது போல இருக்கிறது.ஒரு மாமனிதரின் துணைவி என்ற மதிப்பு தமிழ் மக்களிடையே இருந்தது.கடந்த பொதுத்தேர்தலின் போது நடந்த ஏதேதோ குழப்பங்கள் அவர் மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது. எனினும் சில கூற்றுக்கள் அவரது அறியாமையை வெளிப்படுத்துகின்றன.

 

1. கண்டியில் சிங்களத் தாய்க்கு பிறந்து சிங்களவரை வாழ்க்கைத் துணைவராக கொண்ட ….

2.பொத்துவில் போராட்டத்தில் சாணக்கியன் தடை உடைத்ததாக சிலர் வீராப்பு கதைக்கின்றனர்.அவர் இல்லாவிட்டாலும் அங்கு தடை உடைந்திருக்கும்.

என்றெல்லாம் சாணக்கியனை கொச்சைப்படுத்துகிறார் சசிகலா .சிலர் மௌனமாக இருந்ததாலேயே இவர்களில் ஏதோ விஷயம் இருக்கிறது என மற்றவர்கள் நினைப்பார்கள். வாயைத் திறந்து தங்களது பொது அறிவின் போதாத்தனத்தை வெளிப்படுத்துவதுடன் தங்கள் மனதில் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி உள்ளது என்பதையும் புலப்படுத்துகிறார்கள்.
திரு.ரவிராஜ் மாமனிதராக அறிவிக்கப்பட்ட காலம் வரை சசிகலா இந்த போராட்டத்தின் அரிச்சுவடியே தெரியாதவராக இருந்திருக்கிறார் என்பது புலனாகிறது. கொக்குளாய் இராணுவமுகம் தாக்குதலில் லெப்டினட் பழசு (முதுங்கொடுவ உடுகமகே ஹேமசிறி – 13.02.1985) அன்று வீரச்சாவெய்தினார். வந்தாறுமூலையில் வீரவேங்கை காமினி (காமினி பேபியன் ஆனஸ்ட்டின் 04.05.1987) வீரச்சாவெய்தினார்.
இந்த காமினி ஏற்கெனவே தடுப்பில் இருந்தவர். கைதிகள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுக்களில் இவர் கட்டாயம் விடுவிக்கப்பட வேண்டும் என திரும்பத் திரும்ப வலியுறுத்தினார் யாழ்.மாவட்ட தளபதியாக விளங்கிய கிட்டு.
இறுதி யுத்தத்தின் பின் நால்வர் புலிகளுக்குதவினர் என்ற குற்றச்சாட்டில் 07.08.2009 அன்று கைதாகினர். எதிரி சிங்க, வீரமுத்து சரோஜா, பந்துல, கஜவீர ஆகியோரே இவர்கள் ஆவர் . HC/3736/2012 என்பது இவர்களது வழக்கிலக்கம் இவர்கள் யாராக இருக்கக்கூடும் என்பதற்கு மரபணு பரிசோதனை தேவையில்லை. இவர்களில் ஒருவர் சிறையிலேயே மரணமானார்.
சசிகலா நாளை அரசியற் பொறுப்பாளராக விளங்கிய நடேசன் ஒரு சிங்களத்தியை திருமணம் செய்தது மகாதவறு என எதிர்வரும் மாகாண சபைக்கான தேர்தல் மேடையில் குற்றஞ்சாட்டக்கூடும்.
அடேல் எந்தக் கண்டத்தைச் சேர்ந்தவர்? அவருக்கும் தமிழர் போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம் என முழக்கமிடக்கூடும். என்ன செய்வது தமிழரின் தலைவிதி.
இவரது அடுத்த கூற்று சாணக்கியன் தடை உடைத்ததை சிலர் வீராப்பு கதைக்கின்றனர்.அவர் இல்லாவிட்டாலும் அங்கு தடை உடைந்திருக்கும் என்பதாகும்.தமிழில் ஒரு கூற்று உண்டு கூந்தல் உள்ள சீமாட்டி கொண்டை போடுகிறாள் என்று. இதற்கு மொட்டைச்சிகள் தலையில் அடித்து என்ன பயன்? யார் உடைத்திருப்பார்கள் என இவர் கூற முனைகின்றார்? தனது சம்பந்தி மாவையையா? கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்னர் தந்தை செல்வாவின் நினைவிடத்துக்குச் சென்றார் மாவை.
ஒரு கட்சித் தலைவர் என்ற ரீதியில் இவருக்கு பொலிஸ் பாதுகாப்பு உண்டு. ஒரு பொலிஸ் காரன் இவரை அதட்டி வகுப்பெடுத்துக்கொண்டேயிருந்தான். அங்கே நில்; இங்கே நில்; அப்படிச் செய் என்று சொல்லிக்கொண்டு இருந்தான். என்ன சொல்வதாக இருந்தாலும் எனது பாது காவலர்களிடம் சொல்;அவர்கள் எனக்கு சொல்வார்கள் என்று சொல்லக்கூட மாவையால் முடியவில்லை. முன் பள்ளி வகுப்பு பிள்ளைபோல அவனது அதட்டல்களுக்கு பணிந்து கொண்டிருந்தார். இந்தக் காணொளி தமிழர்களைத் கொதிக்கவைத்தது.
அந்தச் சிங்களப் பொலிஸ்காரனைப் பொறுத்தவரை தமிழர்களில் எந்தத் தலைவனாக இருந்தாலும் எங்களது ஆணைக்கு கீழ்தான் என்று சிங்களவர் மத்தியில் பெருமையடித்துக்கொள்வதே அவனது நோக்கம். ஏன் எதிர்க்கட்சித் தலைவராக அமிர்தலிங்கம் விளங்கிய காலத்தில் கூட யாழ்.நகர மத்தியில் பண்டார என்ற பொலிஸ் காரன் அவருக்கு அடித்திருக்கிறான்.
சரி.இப்போது மாவைக்கு வயது போய்விட்டது. இளைஞராக இருந்தபோது எவ்வாறு நடந்து கொண்டார்? சிறிமாவின் ஆட்சிக்காலத்தில் கொழும்பு – காலி வீதியில் ஜே. ஆர் சட்டமறுப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தினார். பொலீசாரால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. சில காலத்தின் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியும் தாமும் சட்ட மறுப்பு ஊர்வலத்தை நடத்தப் போவதாக அறிவித்தது. பிரதான வீதியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் பணிமனையிலிருந்து இந்த ஊர்வலம் புறப்பட்டது. டாக்டர் பிலிப் மருத்துவ மனைக்கு முன்னால் பொலிசார் வீதித் தடைகளை போட்டனர். பல இளைஞர்கள் இத் தடையை உடைக்க வேண்டுமென துடித்தனர்.குறிப்பாக தலையில் மட்டுமல்லாது இமையில் கூட முடியில்லாத பரந்தன் .குமரபுரத்தைச் சேர்ந்த இளைஞர் மிகத் தீவிரமாக இருந்தார். (இவர் பின்னர்பரந்தன் இரசாயனக் கூட்டுத் தாபனத்தில் பணியாற்றினார். இறுதி யுத்தத்தின் பின்னர் இவரது மகனும் ஏதோ ஒரு குற்றச்சாட்டில் கைதாகி பூஸாவில் அடைக்கப்பட்டிருந்தார்.
அன்று கணிசமான இளைஞர்கள் தடையை உடைக்கத் துடித்த போது மாவை தலையில் சிவப்பு ரிபனைக் கட்டியபடி சுற்றிச் சுற்றி வந்துகொண்டு இருந்தார். அன்று தந்தை செல்வா தலைவராக இருந்தார். அப்படியே உட்காருங்கள் என்று தலைமை சொன்னதை மாவையால் மீறமுடியாது என்று சொல்வதை ஏற்கலாம். இங்கு சுட்டிக்காட்ட வருவது தடையை உடைக்க அன்று சம்பந்தி மாவையும் முயலவில்லை. இன்று மருமகன் கலையமுதனும் முயலவில்லை என்பதையே. (இதற்காக மாவையின் சிறைவாழ்வு போன்ற பங்களிப்பை நிராகரிக்கிறோம் என்று அர்த்தமல்ல. அன்று மட்டு.சிறையில் மாவையை சிலர் தாக்க முனைந்தபோது பிரபல எழுத்தாளர் எஸ். பொவின் மகனும் பின்னாளில் மாவீரரான அர்ச்சுனாவின் (மித்திரா) சகோதரருமான டாக்டர் அநுர தான் எதிர்த்து நின்று மாவையைக் காப்பாற்றினார்.)
எனவே முதலில் சசிகலா விடுதலைப் போராட்டத்தின் அரிச்சுவடியைக் கற்றுக்கொள்ள முயலவேண்டும் .மாமனிதரின் துணைவியார் என்பதற்காக இவர் சொல்லும் எல்லாவற்றையும் தமிழர்கள் ஏற்பார்கள் என்றல்ல.
சில கோடிகளைக் கொடுத்தே வேட்பாளர் நியமனம் பெற்றார் சாணக்கியன் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டியவர் மாவையே எதுவுமே தெரியதென்றால் மாவையின் தலைமைத்துவம் பற்றிய கேள்வியும் எழும் . ஊர்வம்பு கதைக்கப் போய் வீணாகச் சம்பந்திக்கும் சிக்கலை ஏற்படுத்தி விட்டார் சசிகலா.
அடுத்தது தமிழ்த் தேசிய முன்னணியினர் இவர்களும் கிட்டத்தட்ட அதே நிலைதான். இவர்களுக்கு பொத்துவிலின் வரலாறும் தெரியாது. பொலிகண்டியின் சரியான இருப்பிடமும் தெரியாது.
பொத்துவில் எனும் போது லெப் . சைமனை (ரஞ்சன் கனகரத்தினம்) விட்டு வரலாறு எழுத முடியாது. மிகப் பெரிய நில உடமையாளரான கனகரத்தினத்தின் மகன் இவர்.மைலன் திரையரங்கு இவரது பெயரிலேயே இருந்ததாக ஞாபகம் .இந்திய படையினரின் ஏற்பாட்டில் பயிற்சிக்காக அனுப்பப்பட்ட போராளிகளில் ஒருவராக சைமனும் இருந்தார். பெங்களூரின் தொடரூந்து நிலையத்தில் தனது அணியினருடன் இவர் நின்றபோது “வானுர்தி ஓட்டியாக பயிற்சி பெறுவதற்காக இங்குள்ள நிறுவனத்தில் அனுமதி பெற்றிருந்தேன். ஆனால் வரவில்லை. இன்று இங்கிருந்த போது மகிழ்ச்சியாக உள்ளது.ஏனெனில் எங்களது மக்களது விடுதலைக்கான பயணத்தில் நானும் இணைத்துக்கொண்டேன்“ என்று குறிப்பிட்டார்.
இவரது தந்தை அரசியலில் தடம் புரண்டபோதும் இவர் தனது பாதை இதுதான் என்பதில் தெளிவாக இருந்தார். சிறைவாழ்வு ,அதிலிருந்து விடுதலை மட்டுநகர் சிறையுடைப்பு என்பனவற்றை தொடர்ந்து பரமதேவாவும் இவரும் பிரபாகரன் தலைமையிலான புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டனர். இவ்வளவு பொருளாதார வசதிகள் இருந்தும் போராட்டம் என்பதே அவரது இலட்சியமாக இருந்தது இதை விளங்காமல் “வறுமை காரணமாகவே இளைஞர்கள் போராடப் புறப்பட்டனர்” (அதாவது சோற்றுக்கு வழியில்லாமல்) எனக் குறிப்பிட்டார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இவரைத் தேசியத் தலைவர் என்று கொண்டாடும் சட்டத்தரணி சுகாசின் அளவை தமிழர்கள் கணிப்பிட்டிருக்க மாட்டார்களா? நாங்கள் ஏற்கெனவே தீர்மானித்த இடத்தில் நிறைவு செய்யாமல் வேறு இடத்தில் அதனை முடித்து வைத்ததாக குற்றஞ்சாட்டுகிறார். பொலிகண்டி என்றால்எந்த இடம் என்று அங்குள்ள மக்களுக்கு இவரைவிட நன்றாகவே தெரியும் . ஒரு வெற்றிகரமான போராட்டத்தின் பின் எவ்வாறு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிப்பது என்பதை யாழ் ஊடக மையத்தில் திரு. சிவயோகநாதன் , வேலன் சுவாமிகள் சொன்ன கருத்துக்களை கவனித்த பின்னராவது திருந்தமாட்டார்களா என்பது தமிழர்களின் ஏக்கம்.
தந்தை செல்வா குடும்பத்தின் திருஷ்டிப் பூசணிக்காயாக விளங்கும் இளங்கோவும் (சந்திரஹாசனின் மகன் – சந்திரஹாசன் மகள் வானம் வசப்படும் திரைப்படத்தின் கதாநாயகி) தமிழ்த் தேசிய முன்னணியை சேர்ந்த ஒருவருமே இறுதிப் குழப்பங்களுக்கு காரணம் என்பது வெள்ளிடை மலை. இந்த குழப்பங்களுக்கு சன்மானமாக எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் இளங்கோவுக்கு வேட்பாளர் நியமனம் கிடைக்கக்கூடும்.(நன்றி மறக்காதவர் மாவை)
எது எப்படி இருப்பினும் இந்தப் பேரணிமூலம் வட கிழக்குத் தமிழர்கள் மனதில் சாணக்கியன் பெற்ற அபிமானத்தை எவராலும் திசை திருப்ப முடியாது. சுகாசின் குழப்பகரமான கருத்துக்கள் வெறும் வாயை மென்று கொண்டிருக்கும் ஸ்டாலின் ஞானம், நவநீதன் குழந்தைவேல் , கௌரி மனோகரி போன்ற கிழக்கு தேசிய வாதிகளுக்கு அவல் கிடைத்தது போல அமைந்துவிட்டது.
இந்தப் பேரணி ஓட்டமாவடியை அடைந்த போது முதல் முஸ்லீம் மாவீரரான ஜுனைதீனின் தந்தையாரும் அங்கு காணப்பட்டதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. எப்படியோ இப் பேரணியில் முன் வைக்கப்பட்ட இரு கோரிக்கைகள் சாத்தியமாகியுள்ளன. முதலாவது மலையகத் தோட்ட த் தொழிலாளரின் 1000 ரூபா சம்பள விவகாரம்.
பாராளுமன்றத்தில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் இனி புதைக்கப் ஏற்பாடு செய்யப்படும் என்றார் பிரதமர் மகிந்தா .இது தொடர்பாக ஆளும்தரப்புக்களில் சலசலப்புகள். எனினும் இந்த விடயம் மகிந்தாவின் இத்தனை வருட அரசியல் வாழ்வுக்கும் அதிகாரத்துக்கும் வந்த சோதனை என்ற வகையில் இலேசில் அவர் விட்டு கொடுக்க மாட்டார் என நம்பலாம்.

 

 

https://www.meenagam.com/உண்மைக்கு-திரையிட-முயலும/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.