Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகத்தில் வாழும் எமது உறவுகளின் புனர்வாழ்விற்கு புலத்திலிருந்து நிதிசேகரிப்பதற்குரிய வழிமுறைகள்!

Featured Replies

தமிழர்புனர்வாழ்வு ஆய்வுப்போட்டி!

போட்டி பற்றிய விரிவான தகவல்களை அறிய இங்கே சொடுக்கவும்!

கருத்துக்கணிப்பில் பங்குபற்றும் கள உறவுகளின் கவனத்திற்கு:

1. நீங்கள் உங்கள் தெரிவை (விறுப்பு வாக்கை) இடமுன் முதலில் சகல போட்டியாளர்களினதும் விடைகளை ஆற அமர்ந்து வாசிக்கவும்.

2. தமிழ் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது, எத்தனை வசனங்கள் உள்ளது போன்றவற்றின் அடிப்படையில் இல்லாமல், சிறந்த நடைமுறை சிந்தனையின் அடிப்படையில் பகுதி 02 இன் வெற்றியாளரை தெரிவு செய்யவும்.

3. பகுதி 02 நீல எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது.

4. இந்த போட்டியின் வெற்றியாளரைத் தெரிவு செய்யும் முழுப் பொறுப்பும் கருத்துக்கள உறவுகளாகிய உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. நீங்கள்தான் இந்தப்போட்டியின் நடுவர்கள். எனவே, தயவுசெய்து பொறுப்புணர்வுடன் செயற்பட்டு போட்டிக்கு உங்கள் ஆதரவை தரவும். நன்றி! :)

போட்டியாளர் இல 01:

1. முதலில் எமது மக்களிடமிருந்து பெரிய தொகையைக் கேட்காது மாதாந்தம் ஒழுங்காக வங்கியால் பெறப்படுமாறு ஒரு சிறிய தொகைக்கான ஒப்பந்தம் செய்து கொள்ளல் (உதாரணமாக செஞ்சிலுவைச் சங்கத்துக்கு நான் கடந்த 10 வருடங்களாகக் கொடுத்து வருகிறேன்).

2. மேற்குலக நாடுகளிலுள்ள ஆலய நிருவாகங்களை அணுகி (கிறிஸ்தவ, இந்து, இஸ்லாம்) வருடாந்தம் ஒருமுறை கொடிதினம் போன்று ஒரே நாளில் ஐரோப்பா மற்றும் ஏனைய நாடுகள் அனைத்திலும் தாயகத்தில் துன்பப்படும் மக்களுக்காக நிதி சேகரித்தல்.

3. தமிழ் வானொலிகளில் வருடம் ஒருமுறை ஒரே நாளில் நேயர்களிடமிருந்து நிதி சேகரித்தல்.

4. வருடம் ஒருமுறை அந்தந்த நாட்டின் பிரபலமான விளையாட்டுக் கழகங்களை நட்புறவு உதவிப் போட்டிகளை ஒழுங்கு செய்து அதன்மூலம் உதவிகளை அனுப்புவது.

5. தாயகத்திலுள்ள பிள்ளைகளை இங்குள்ள பிள்ளைகள் நண்பர்களாக்கி தமது சேமிப்புகளை அவர்களுக்கு அனுப்பிவைக்கத் தொடர்பை ஏற்படுத்துதல்.

6. மேற்குலக நாடுகளின் சர்வகலாசாலைகளில் பயிலும் தமிழ் மாணவர்களை ஊக்குவித்து அவர்களின் மொழியறிவைப் பயன்படுத்தி உதவி சேகரித்தல்.

7. வருடம் ஒருமுறையாவது அதிஸ்டலாபச் சீட்டிழுப்பு பெரிய அளவில் மேற்கொண்டு பெறுமதியான பரிசில்கள் கொடுக்கும் வகையில் நிதி சேகரித்தல்.

8. விளம்பரம் இல்லாமல் வியாபாரம் இல்லை. எனவே இயலுமானவரை ஐரோப்பிய, மற்றும் அமெரிக்க மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பற்றி விளம்பரம் செய்ய வேண்டும். பிரபல பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வருடம் ஒருமுறையாவது விளம்பரம் செய்வதுடன் நிதி அனுப்பிவைக்கும் விபரங்களும் வெளியிடப்பட வேண்டும்.

9. வருடம் ஒருமுறையாவது ஒரு நபருக்கு 01 யூரோ அல்லது 01 டொலர் என்ற ரீதியில் சிறுவர்களைக் கொண்டு நிதி சேகரிப்பு செய்யலாம்.

10. தமிழ் வியாபார நிலையங்களை ஊக்குவித்து அங்கு வரும் மக்களிடம் உதவிபெறும் உண்டியல் மூலம் நிதி சேகரித்தல்.

போட்டியாளர் இல 02:

1. தற்போது கோடைகாலம் நோர்வேயைப் பொறுத்தவரையில் அனைத்து மக்களும் அதை அனுபவிக்க கடற்கரை, மற்றும் வேறு வேறு சுற்றுலாத்தளங்களிற்கு செல்வார்கள். அந்த இடங்களில் நாம் எமது கைவினைப்பொருட்கள் மற்றும் கோடைகாலத்தில் பயனளிக்கும் பொருட்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்து குறிப்பிட் ஒரு இலாபம் வைத்து விற்பனை செய்யலாம். அதில் வரும் இலாபத்தை புனர்வாழ்வு நிதிக்கு வழங்கலாம்.

2. கோடைகாலம் என்பதால் அனைவரும் களிப்பாக இருக்கத்தான் விரும்புவார்கள். ஆகவே எம்மால் முடிந்தளவு இசை நிகழ்ச்சிகளை, நாடகங்களை நாமே நிகழ்த்தி அதன் மூலம் பெரும் வருவாயை அதற்கான செலவுகள் கழிந்தவை போக மிகுதியை வழங்கலாம்.

3. ஆலய வாயில்களில் இது சம்பந்தமான விழிப்புணர்வு பதாகைகள் வைத்து அங்கு வரும் பக்தர்களிடம் அவர்கள் விரும்பும் பட்சத்தில் நிதியுதவியை பெற்றுக்கொள்ளலாம்.

4. எமது தாயகம் சம்பந்தமாக, அங்கு வாழும் மக்களின் கஸ்டங்களை அவர்களின் வேதனைகளை அந்தந்த நாட்டு மொழிகளிலும் ஆங்கிலத்திலும் தெளிவாகவும் எளிமையாகவும் எழுதி அவற்றுடன் புகைப்படங்களையும் இணைத்து சிறிய புத்தகங்கள் வெளியிடலாம். புத்தகத்தின் உள்முகப்பில் ஒரு சிறு விண்ணப்பம் இட்டுக்கொள்ளலாம். "விரும்பியவர்கள் இந்த ஈழத்து உறவுகளின் துயர் துடைக்க உங்களால் முடிந்த நிதி உதவியை கீழ்க்கண்ட முகவரியில் நேராகவோ அல்லது அவர்களின் வங்கி இலக்கத்திற்கோ வழங்கிக்கொள்ளலாம்! "என்று குறிப்பிட்டு அந்தந்த நாடுகளில் இருக்கும் தமிழர் புனர்வாழ்வுக்கழகங்களின் விலாசங்களையும் அவர்களின் வங்கி இலக்கங்களையும் குறிப்பிட்டு வைக்கலாம். புத்தகம் அச்சிடும் செலவை கணக்கிட்டு அதனை குறைந்த விலைக்கோ அல்லது இலவசமாகவோ வழங்கலாம்.

5. இங்குள்ள சட்டம் ஒத்துழைக்கும் என்று நம்புகின்றேன்.அவர்களின் ஓத்துழைப்புடன் கடைகளில் உண்டியல் வசதியை உருவாக்கலாம்.(இது பிரித்தானியாவில் நடைமுறையில் உள்ளது என நினைக்கின்றேன்). தமிழர் புனர்வாழ்வு நிதி என்று குறிப்பிட்டு கடைகளில் வைத்துக்கொள்ளலாம்.

6. மாதத்தில் ஓரு தடவை தமிழர்கள் அதிகமாக கூடும் இடங்களில் அல்லது ஒரு இயலுமானவரை அவர்களின் வீடுகளிற்கு சென்று சிறியளவிலான நிதியை பெற்றுக்கொள்ளலாம். நேரம் பற்றாவிடின் ஒவ்வொரு பகுதியாக பிரித்து செயற்படலாம்.

7. வருடத்தில் ஒரு தடவை கொடிவாரம் என்று நடாத்தலாம். இதன் மூலம் அதிகளவான நிதியை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி இருக்கின்றது.

8. தற்போதுதானே சினிமா பைத்தியம் புலம்பெயர் தேசமெங்கும் வியாபித்து இருக்கின்றது. ஒரு கொடிய நோய் போல... அதன் மூலமே நிதியை திரட்டலாம். திரைப்படங்கள் திரையிடப்படும்போது அதன் வாயிலில் அதற்கான நுழைவுச்சீட்டுடன் புனர்வாழ்வு நிதி என்று கேட்டு வாங்கிக்கொள்ளலாம். விரும்பியவர்கள் செலுத்துவார்கள்.

9. ஒன்றுகூடல் நிகழ்வுகளை நடாத்தலாம். இங்கு கலைநிகழ்சசிகள் மட்டுமே அமையவேண்டும். இங்கு சிறிய விளையாட்டுக்கள் உணவகங்கள் போன்றவற்றை நிறுவி வருவாயை பெற்றுக்கொள்ளலாம்.

10. எங்கெல்லாம் மக்கள் அதிகளவில் கூடுகின்றார்களோ அங்கு சென்று உண்டியல் குலுக்கல் முறையை பயன்படுத்தலாம் (அடி வாங்கினால் நான் பொறுப்பு இல்லை).

போட்டியாளர் இல 03:

1. நாங்கள் ஒரு நிறுவன கட்டமைப்பு அதாவது வங்கி மாதிரி ஒரு நிதி நிறுவனமாக ஒரு அமைப்பை - குறிப்பிட்ட ஒரு நாட்டில் -உதாரணமாக கனடா வாழ் மக்கள் - குறிப்பிட்ட ஒரு பெயரில் நிறுவனத்தை அமைத்து, கனேடிய தமிழர்களுக்கு ஒரு நிதிகட்டமைப்பு என்ற வகையில் ஆரம்பித்தல்.

2. மாணவர்கள் அதாவது ஒவ்வொரு பல்கலைக்கழக தமிழ் மாணவர்களும் ஒன்றினைந்து ஒரு அமைப்பை உருவாக்கி, கலை நிகழ்ச்சிகள், கேளிக்கை நிகழ்ச்சிகளில் வரும் பணத்தை உபயோகித்தல் (இதில் பிற இனத்தவரையும் இணைத்து செயற்படுத்தலாம்).

3. சமூக நிறுவனங்கள்,தொண்டர் நிறுவனங்கள் முன்வந்து கண்காட்சிகளும் மற்றும் விற்பனை அங்காடிகள் வைப்பதன் மூலம் நிதி சேகரிக்கலாம் இவ்வாறான நிறுவனங்களுக்கு வரி விலக்கு உள்ளது.

4. மிகவும் முக்கியமாக கோயில்களில் இரு உண்டியல்கள் இருக்க வேண்டும் ஒன்று தெய்வத்திற்கு, மற்றையது தமீழிழதிற்கென்று! இதனால், பலதரப்பட்ட நிதியை சேகரிக்கலாம் (இதற்கு வரி விலக்கும் உண்டு).

5. தமிழ் பாடசாலைகள் என்று நடைபெறுகிறது. இதற்கு கட்டணம் மாணவர்களிடம் இருந்து பெறபட்டால் அதுவும் மிகவும் உபயோகமாக இருக்கலாம்.

6. தமிழீழத்தில் ஒரு அநாதை இல்லம், முதியோர் இல்லம் ஒவ்வொரு குழுவாக மக்கள் தேர்தெடுத்து வாழும் நாட்டு அரச அங்கீகாரத்துடன் எல்லா மக்களிடமும் நிதியை சேகரிக்க முடியும் (இதற்கு அரச மானியம் மற்றும் வரி விலக்கு வரி சலுகை அதிகம்).

7. கடைகளுக்கு உண்டியல் வழங்கி நம்மவர் துயரங்களை அழகாக அச்சிட்டு வைப்பதன் மூலம் கடைகளுக்கு வருபவர்கள் எமது பிரச்சனைகளை அறியக்கூடியதாகவும் நிதி சேகரிக்க வசதியாகவும் இருக்கும்.

8. இளைஞர்கள் சுற்றுலாக்கள், முகாம் அமைத்தல் என்பவற்றில் உற்சாகமாக ஈடுபட்டு அதில் எம்மவர் அவலங்களை எடுத்து காட்டுவதன் மூலம் நிதி சேகரிக்கலாம்.

9. தமிழ் மக்கள் ஒன்றினைந்து ஒரு ஊர்வலம் நடத்தி எம்மவர் பிரச்சினைகளை விளங்கபடுத்தக்கூடிய புகைப்படங்கள்,வீடியோக்கள் மக்களுக்கு காட்டி உண்டியல் மூலம் எல்லா வித மக்களிடமும் இருந்து நிதி சேகரிக்கலாம்.

10. ஒவ்வொரு மாதமும் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு தடவை அந்தந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் ஒன்று கூடி விளையாட்டு போட்டிகளை நடாத்தி மகிழ்ந்து, குறிபிட்ட தொகை பணத்தை வழங்குவதன் மூலமும் நிதியை சேகரிக்கலாம்.

1. மாணவர்கள் அதாவது ஒவ்வொரு பல்கலைக்கழக தமிழ் மாணவர்களும் ஒன்றினைந்து ஒரு அமைப்பை உருவாக்கி, கலை நிகழ்ச்சிகள், கேளிக்கை நிகழ்ச்சிகளில் வரும் பணத்தை உபயோகித்தல் (இதில் பிற இனத்தவரையும் இணைத்து செயற்படுத்தலாம்)

இந்த வழிமுறையை நான் மிகவும் முக்கியமாக தெரிவு செய்ததன் காரணம் நம்மவர் படும் அவலங்களை தமிழ் இளைஞர்களுக்கு தெரிய வேண்டும் குறிப்பாக புலத்தில் பிறந்த சிறுவர்களிற்கு எமது இன்னல்கள் தெரிய வேண்டும் என்பதே.

ஏற்கனவே பல்கலைகழங்களிள் தமிழ் அமைப்பு யூனியன் என்று இருக்கிறது. எமது நாட்டை பொறுத்தவரை அவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து கேளிக்கை நிகழ்ச்சிகளை நடாத்துவதோடு, அந்த கேளிக்கை நிகழ்ச்சிகளில் நம்மவர்படும் அவலங்களை ஒரு சிறிய அளவில் பிரச்சாரம் செய்தால் அதில் எமக்கு வெற்றி உள்ளது என்பது எனது கருத்து.

1. இதில் முதலாவது நடைமுறையாக கேளிக்கை நிகழ்ச்சிகள் செய்து அதில் கட்டணம் அறவிடுவதன் மூலம் கணிசமான அளவு தொகையை நம் இனத்தவர்களிடம் இருந்தும், ஏனைய இனத்தவர்களிடம் இருந்தும் பெற்று கொள்ளாம்.

2. இரண்டாவது நடைமுறையாக சமூக நிறுவனங்களோடு இணைந்து பல்கலைகழக மாணவர்கள் கண்காட்சிகள் மற்றும் உணவு பட்டறைகள் என்பனவற்றை பல்கலைக்கழகங்களில் வைப்பதன் மூலம் குறிபிட்ட தொகை பணத்தை சேகரிக்கமுடியும்.

3. மூன்றாவது நடைமுறையாக நம்மவர்படும் அவலங்களை ஒரு சிறிய புத்தகவடிவில் அழகாக அச்சிட்டு அதை ஏனைய மாணவர்களுக்கு கொடுத்து எம்மவர் படும் துயரங்களை சொல்லி அத்தோடு அவர்களால் இயலுமானால் குறிப்பிட்ட சிறுவர்களை ஸ்பொன்சர் செய்யும்படி அணுகுதல், அத்தோடு மட்டும் இல்லாமல் உதவுகிறார்களோ இல்லையோ தமிழர் புனர்வாழ்வு கழகம் என்று அச்சடித்த பேனாவையோ அல்லது ஏதேனும் ஒன்றை கொடுப்பதன் மூலமும் இந்த நடைமுறையை ஊக்குவிக்கலாம் (அத்தோடு இதில் பல வெள்ளையர்களும் மிகவும் ஆவலாக இணைவார்கள்)

4. நான்காவது நடைமுறையாக பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் ஒன்றிணைந்து தென்னிந்திய திரைப்படத்தையோ அல்லது தென்னிந்திய பாடகர்களை அழைத்து நிகழ்ச்சி செய்து அதில் வரும் கட்டண தொகையை தமிழர்புனர்வாழ்வு கழகத்திற்கு கொடுக்கலாம். இதில் பாரியளவு நிதி சேகரிக்கப்படும்.(ஆனால் இந்த நிகழ்ச்சிகளின் போது நம்மவர்படும் இன்னல்களையும், நம்மவர் பாடல்கள் சிலவற்றையும் கட்டாயம் இணைக்க வேண்டும். ஏனெனில், பலதரப்பட்ட மாணவர்களும் வருவார்கள். ஆகவே, இதில் நம்மவர்படும் அல்லல்களையும் எடுத்து சொல்வது சாலவும் சிறந்தது)

5. ஜந்தாவது நடைமுறையாக மாணவர்கள் ஒன்றிணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு சிற்றுண்டிச்சாலை அல்லது வேறு ஏதாவது ஒன்றை அமைத்தல். மானவர்கள் அங்கே பகுதி நேரமாக வேலை பார்த்துக்கொண்டு, குறிப்பிட்ட இலாபத்தில் ஒரு பங்கை தமிழர்புனர்வாழ்வு கழகத்திற்கு கொடுக்கலாம். இந்த சிற்றுண்டிச்சாலை அமைக்கும் முதலை புலத்தில் உள்ளவர்கள் வங்கி கடன்கள் மூலம் பெற்று கொள்ள முடியும். அதனால் எந்தவித பிரச்சினையும் இல்லை.

அத்தோடு இதில் கிடைக்கும் நிதியை ஒழுங்காக பயன்படுத்த ஒரு நிறுவன கட்டமைப்பை சட்டத்தின் கீழ் பதிவு செய்து அதில் இந்த தொகையை இட்டு ஆண்டு அறிக்கைகள் சமர்பித்தல் என்பவற்றின் மூலம் மக்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தலாம்(நம்பிக்கை இருக்கும். ஆனால், இவ்வாறு செய்தால் இன்னும் நல்லது). அத்துடன் இந்த நிறுவனத்தில் இருக்கும் பணத்தில் வேறு நிறுவனங்களின் பங்குகளை வாங்குதல், வட்டிக்கு கொடுத்தல் என்பன மூலம் தளம்பல் அடையாத ஒரு நிதியை தமிழர் புனர்வாழ்வு கழகம் பேணும்படி செய்யலாம்.

2. மிகவும் முக்கியமாக கோயில்களில் இரு உண்டியல்கள் இருக்க வேண்டும். ஒன்று தெய்வத்திற்கு, மற்றையது தமிழீழத்திற்கென்று! இதனால், பலதரப்பட்ட நிதியை சேகரிக்கலாம் (இதற்கு வரி விலக்கும் உண்டு).

கோயில்கள் தமிழ் மக்கள் குழுமும் இடம். இந்த இடத்தில் நாம் செய்யும் சில செயற்பாடுகள் மூலம் தமிழர் புனர்வாழ்வு கழகத்திற்கு நிதியை சேகரிக்கமுடியும். இதை கோயில்களில் மட்டுமல்ல கிறிஸ்தவ தேவாலயங்களிளும் இந்த நிதியை திரட்ட முடியும். இதற்கு கோயில் நிர்வாகமும் தாம் மக்களிற்காக செய்கிறோம் என்ற உணர்வில் தங்கள் கட்டுபாடுகளை தளர்த்த வேண்டும்.

1. முதலாவது நடைமுறையாக கோயில்களில் வழங்கப்படுகின்ற அன்னதானம். அந்த வரிசையில் தமிழர் புனர்வாழ்வு கழகம் என்று பெயரிடபட்ட உண்டியலை வைத்து விருப்பமானவர்கள் போடலாம் என்ற நடைமுறையை கொண்டு வரலாம். ஏனெனில், இங்கு உள்ளவர்களுக்கு அன்னதானம் என்பது பெரிய விடயமல்ல. ஆகவே இயன்றளவு இந்த உண்டியலில் விருப்பமானவர்கள் போடுவதன் மூலம் நிதியை சேகரிக்க முடியும்.

2. அடுத்து கோயில்களில் அபிசேகம் மற்றும் வேறு பலவிடயங்கள் நடைபெறும் அதன் போது குறிபிட்ட ஒரு தொகை புனர்வாழ்வு கழகத்திற்கு என்று கோயில் நிர்வாகத்திடம் மக்கள் ஒன்றினைந்து சொல்வதன் மூலம் இயன்றளவு நிதியை பெறமுடியும்.

3. கோயில்களில் வைக்கும் உண்டியலில் இரு உண்டியல்களை வைத்தல். ஒரு உண்டியலில் மனிதாபிமான நிதி சேகரிப்பு என்று எழுதுவதன் மூலம் கோயில்களிற்கு வரும் எம்மவர் தவிர்ந்த பிற இனத்தவர்கள் உதாரணமாக இந்தியர்கள் மற்றும் வேற்று இனத்தவர்களிடம் இருந்து நிதியை வசூலிக்கமுடியும்.

4. கிறிஸ்தவ தேவாலயங்களை எடுத்து கொண்டால் ஞாயிற்று கிழமை நடைபெறும் கூட்டத்தின் போது உண்டியலை வைத்து மனிதாபிமான நிதி சேகரிப்பு என்று எழுதி எம்மவர் படும் இன்னல்களை அழகாக எழுதுவதன் மூலம் எம்மவர்களிடம் இருந்தும் பிற இனத்தவர்களிடமும் இருந்தும் குறிபிட்ட தொகையை பெறலாம். அதேபோல் ஒரு நாள் கூட்டத்தை நம்மவர்களுக்காக பிரார்த்தித்து அதன் மூலமும் நிதியை சேகரிக்கலாம்.

5. கோயில்களில் உணவு விற்கும் அங்காடியை உருவாக்கி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் ஒவ்வொரு கிழமையும் உணவு செய்து கொண்டு வந்து விற்பனை செய்வதன் மூலம் வரும் நிதியை தமிழர் புனர்வாழ்வு கழகத்திற்கு கொடுக்கலாம்.

இவ்வாறு நாம் சேர்க்கும் ஒவ்வொரு சிறிய அளவிலான நிதியும் எல்லா கோயில்களும் ஒன்றிணைந்து கொடுப்பதன் மூலம் பாரியளவு நிதியாக போய் சேரும்.

3. இளைஞர்கள் சுற்றுலாக்கள், முகாம் அமைத்தல் என்பவற்றில் உற்சாகமாக ஈடுபட்டு அதில் எம்மவர் அவலங்களை எடுத்து காட்டுவதன் மூலம் நிதி சேகரிக்கலாம்.

இதை நான் மூன்றாவது வழிமுறையாக தெரிவு செய்கிறேன். இந்த இளைஞர்கள் என்று குறிப்பிட்ட வட்டத்தில் பள்ளி மாணவர்கள், பல்கலைகழக மாணவர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் என்று அனைத்து பிரிவினர்களும் உள்ளடக்கபடுவதுடன், இவ்வாறு பங்களிப்பு செய்வதற்கு பலரும் மகிழ்ச்சியுடன் முன்வருவார்கள். இவ்வாறு நாம் சுற்றுலா மட்டும் செல்லாது ஒரு கனரக வாகனத்தில் பெரிய திரையில் நம்மவர்களின் அவலங்களை வீடியோ காட்சி மூலம் ஒவ்வொரு இடத்திலும் குறிபிட்ட சிலநேரம் காட்டி விட்டு செல்வதன் மூலம் எம்மவர்கள் படும் அவலங்களை மற்றைய இன மக்களுக்கு காட்டக்கூடியதாக அமையும். மற்றவர்களின் மனங்களிற்கும் இலகுவாக சென்று அடைய ஒரு வாய்ப்பாக இது இருக்கும். அத்தோடு இவ்வாறு சுற்றுலா செல்வது என்றால் பிற இன இளைஞர், யுவதிகளும் எம்முடன் இணைவார்கள். இதனை அவர்களிற்கு அறியத்தந்து அவர்கள் மூலம் நம்மவர்கள் அவலங்களை அவர்களின் சமூகத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

1. இதில் முதலாவது செயல்முறையாக பயணத்திற்கு பணத்தை பெறும் போது ஒரளவு நிதி தமிழர் புனர்வாழ்வு கழகத்திற்கு செல்வது மாதிரி எம்மவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். மற்றைய இனத்தவர்களிடம் எங்கள் மக்களின் துயரை அறியத்தந்து அவர்கள் விரும்பினால் அந்த பணத்தொகையை தரலாம் அல்லது பயண செலவிற்கான பணத்தை அறவிடலாம்.

2. சுற்றுலா செல்லும்போது கனரக வாகனங்களில் ஆங்கில புலமை பெற்றவர்கள் எம்மவர் படும் அவலங்களை விளங்கப்படுத்தி அந்தந்த பிரதேச மக்களிடம் உண்டியல்கள் மூலமும் மற்றும் சிறுவர்களை ஸ்பொன்சர் செய்யும் படியும் கேட்பதன் மூலமும் நிதியை பெறலாம்.

3. சுற்றுலா முகாமிற்கு வந்திருக்கும் இளைஞர், யுவதிகளிற்கு தெளிவுபடுத்தி அவர்களால் இயன்றளவு முடிந்த தொகையை மாதம் மாதம் தரும்படி கேட்டல். இதன் மூலம் மற்றைய இனத்தவர்களிடம் இருந்தும் நிதியை சேகரிக்கலாம்.

4. சுற்றுலா முகாம்களின் போதும் இயன்றளவு கண்காட்சிகள், கலைநிகழ்ச்சிகளை நடாத்தி அதில் கணிசமான தொகையை அங்கு வாழும் மக்களிடம் இருந்து மனநிறைவோடு பெறுதல்.

5. சுற்றுலா செல்லும்போது குறிப்பிட்ட உடை அணிய வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டு, தமிழர் புனர்வாழ்வு கழகம் என்று அடிக்கப்பட்ட உடை மற்றும் தொப்பிகளை கணிசமான அளவு இலாபத்தில் விற்றல் மூலம் புனர்வாழ்வு கழகத்திற்கு ஒரு நல்ல விளம்பரமாகவும் வரும், நிதியும் சேகரிக்கப்படும். இந்த உடை மற்றும் தொப்பிகளை போகும் இடத்தில் மற்றைய மக்களிற்கும் விற்பனை செய்யலாம்.

போட்டியாளர் இல 04:

1. வீட்டுக்கு வீடு உண்டியல் வைத்தல்.

2. விளையாட்டுப் போட்டிகள் வைத்தல்.

3. முதியோர்களுக்கான சுற்றுலா.

4. இளையோருக்கான சுற்றுலா.

5. தமிழ் பாடசாலை அமைத்தல்.

6. மக்கள் வர்த்தக் நிலையங்கள் அமைத்தல்.

7. மகிழுர்ந்து வாடகைக்கு விடுதல்.

8. தரமான் சினிமா படங்கள் எடுத்து ஓடுதல்.

9. கணனி சம்பந்தப்பட்ட உலகளாவிய வியாபாரம் செய்தல்.

10. செயின் ஸ்ரோர்ஸ் எடுத்து நடத்துதல்.

1. வீட்டுக்கு வீடு உண்டியல் வைத்தல்

தமிழர் பனர்வாழ்வுகழகம் என்று அடையாளமிட்டு ஒரு உண்டியல் செய்து அதை ஒவ்வொரு தமிழர்கள் வீடுகளிலும் முன் விருந்தினர் அறையில் வைக்க வேண்டும். யாராவது விருந்தினர்களோ, எவராவது நம்மவர்கள் வீட்டுக்கு வரும் போது குறைந்தது இலங்கை பணம் 100 ரூபா பொறுமதியான பணத்தை போடலாம். 06 மாதங்களிற்கு ஒருதடைவை பணத்தை எடுத்து தமிழர் விழா ஏதாவது நடக்கும் நேரம் கூடிய தொகை சேர்த்தவர்கள் 10 பேரை கௌரவிக்கலாம்.

2. விளையாட்டுப் போட்டிகள் வைத்தல்

விளையாட்டுப் போட்டிகள் இப்பவும் தான் வைக்கின்றார்கள். அதையே எல்லா தமிழர்களும் பங்கு பற்ற கூடியவாறு விரிவுபடுத்த வேண்டும்.

3. முதியோரகளுக்கான சுற்றுலா

முதியோர்களை அவர்கள் இருக்கும் நாடுகளில் 06 மாதங்களிற்கு ஒரு தடவையும், இந்தியா போன்ற இடங்களுக்கு வருடத்திற்கு வருடத்திற்கு ஒரு தடவையும் கூட்டிக் கொண்டு போகலாம்.

4. இளையோருக்கான சுற்றுலா

இளையோருக்கான சுற்றுலாக்களை நிறையவே செய்யலாம். தாய் தந்தையரையும் அழைத்துக் கொண்டு போகலாம்.

5. தமிழ் பாடசாலை அமைத்தல்

இப்போதும் செய்கிறார்கள். இன்னமும் நிறையவே செய்யலாம், செய்ய வேண்டும்.

6. மக்கள் வர்த்தக நிலையங்கள் அமைத்தல்

7. மகிழூர்ந்து வாடகைக்கு விடுதல்

இது எம்மவர்கள் யாரும் செய்வதாக தெரியவில்லை. ஆனால் நிறையவே உழைக்கலாம்.

8. தரமான சினிமா படங்கள் எடுத்து ஓடுதல்

சில இடங்களில் செய்கிறார்கள் . இன்னும் கூட முயற்சி வேண்டும்.

9. கணனி சம்பந்தப்பட்ட உலகளாவிய வியாபாரம்

இது எல்லா நாட்டிலும் செய்யலாம்.

10. செயின் ஸ்ரோர்ஸ் எடுத்து நடத்துதல்

இந்த முறையான கடைகள் எடுத்து நடத்தினால் வேலைக்கும் எமது ஆட்களைப் போடலாம். வருமானமும் வந்து கொண்டிருக்கும்.

போட்டியாளர் இல 05:

1. கோயில் அமைத்தல் - கோயில் செலவு போக மீதி வருமானம் முழுவதும் தமிழர் புனர் வாழ்வுக்கழகத்துக்கு செல்ல வேண்டும்.

2. பிரபலமான நடிகர்களின் திரைப்படத்தினை வாங்கி, செலவினைத் தவிர, வருமானம் முழுவதும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு அனுப்ப வேண்டும்.

3. தென்னிந்திய நடிகர்களின்/பாடகர்களின் நிகழ்ச்சி - சில ஈழத்தமிழர்கள் தாயகத்துக்கு உதவ மாட்டார்கள். ஆனால், தென்னிந்திய நடிகர்கள் என்றால் ஆதரவு கொடுப்பார்கள். இதனால் இத்தமிழர்களிடமிருந்தும், இந்தியர்களிடமிருந்தும் பணமீட்டலாம்.

4. இந்தி பாடகர்கள்/ நடிகர்களின் நிகழ்ச்சி - இதனால் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், ஆப்கானிஸ்தான், பிஜீ நாட்டினைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள். ஈழத்தமிழர்களை விட அதிகளவில் இந்தியர்கள் அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றார்கள்.

5. உணவகம் ஒன்றினை அமைத்தல் - இந்தியர்கள், ஈழத்தமிழர்கள் வசிக்கும் இடத்தில் (வேறு ஈழ, இந்திய உணவகங்கள் குறைவாக உள்ள இடத்தில்) இதில் கிடைக்கும் வருமானம்.

6. தாயகத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று சொல்லி தாயகப்பாடல்கள், நாட்டிய, நாடக நிகழ்ச்சியினை ஒழுங்குபடுத்தல் - தாயக உணர்வு உள்ளவர்கள் இதில் கட்டாயம் கலந்து கொள்வார்கள்.

7. வழி - வணிக நிறுவனமொன்றை நடாத்துவது - கனடாவில் செய்து இருந்தார்கள். அதில் கிடைக்கும் வருமானம் மூலம் தாயகத்துக்கே உதவுவது.

8. இது பற்றி விழிப்புணர்வினை மக்களுக்கு ஊட்டுவது- தொலைக்காட்சி, வானொலிகள் மூலமாக சேகரிக்கலாம். அவுஸ்திரேலியா வானொலிகளினூடாக டிசம்பர் 25ம் திகதிகளில் நிதி சேகரிப்பு நடைபெற்று வருவது வழக்கம்.

9. மாதம் மாதம் குறிப்பிட்ட பணத்தை மக்களின் வங்கியில் இருந்து பெறும் முறை - தாயகத்தில் இருக்கும் பெற்றோர் அற்ற அநாதைப் பிள்ளைகளைப் பாதுகாக்க - ஒரு பிள்ளையை பொறுப்பேற்க - மாதாமாதம் பணத்தினைப் பெறலாம். இதனை தனிப்பட்டவர்கள் மூலமாகவும், வேறு அமைப்புக்கள் மூலமும் பெறலாம்.

10. அமைப்புக்கள் - உதாரணம் பல பழைய மாணவர்கள் சங்கம் , கிராமங்களின் சங்கங்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கிறது. இவற்றின் மூலம் ஒரு குறிப்பிட்ட பணத்தினை வருடாவருடம் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்துக்கு கொடுக்க அறிவுறுத்தல் செய்யலாம். அமைப்புக்களில் வணிக நிறுவனங்களையும் சேர்க்கலாம்.

4. இந்தி பாடகர்கள்/ நடிகர்களின் நிகழ்ச்சி - இதனால் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், ஆப்கானிஸ்தான், பிஜீ நாட்டினைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள். ஈழத்தமிழர்களை விட அதிகளவில் இந்தியர்கள் அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றார்கள்.

தற்பொழுது கணனித்துறையின் வளர்ச்சியினால் புலம்பெயர்ந்த நாடுகளில் அதிகளவு இந்தியர்கள் படையெடுக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கிந்திப்பாடல்கள், திரைப்படங்கள் கேட்பவர்களாகவும் ,பார்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள். கிந்திப்பாடல்கள், நடிகர்களுக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பிஜீ, மொரீசியஸ் நாட்டைச்சேர்ந்தவர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவர்களைக் கவர ஒரு நிகழ்ச்சியினை ஒழுங்கு படுத்தலாம்.

1. இந்நிகழ்ச்சியில் கிடைக்கும் பணம் தாயகப் புனர்வாழ்வுக்கு உபயோக்கிக்கப்பட வேண்டும்.

2. இந்நிகழ்வின் போது தாயகமக்களின் பிரச்சனைகளை ஒளி, ஒலி வடிவில் காண்பிப்பதன் மூலம் ஈழத்தில் நடப்பதுபற்றிய சிறு விளக்கத்தை பார்வையாளர்கள் அறிவார்கள். அத்துடன் இந்நிகழ்வின் போது அதிஸ்டலாபச்சீட்டு இழுப்பினை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி நிகழ்ச்சியின் போது பரிசுகளை வழங்கலாம். இதன் மூலமும் பணத்தினைப் பெறலாம்.

3. இந்நிகழ்வுக்கு விளம்பரம் செய்பவர்கள் மூலமும் பணத்தைப் பெறலாம்.

4. இந்நிகழ்வில் சிற்றுண்டிகளை விற்று அதன் மூலமும் பணத்தினைப் பெறலாம்.

5. இந்நிகழ்ச்சியின் பதிவை ஒளி, ஒலி வடிவில் விற்பனைக்கு விடலாம். சில தொலைக்காட்சிகளுக்கும் விற்கலாம். தென்னிந்தியாவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளை வாங்க சன், ஜெயா, விஜய், ராஜ், கலைஞர் போன்ற தொலைக்காட்சிகள் போட்டி போடுவது தெரிந்ததே. இது போல வட இந்திய தொலைக்காட்சிகளுக்கும், புலம் பெயர்ந்த நாடுகளில் இந்தியர்களினால் நடாத்தப்படும் தொலைக்காட்சிகளுக்கும் விற்பனை செய்யலாம்.

7. வணிக நிறுவனமொன்றை நடாத்துவது - கனடாவில் செய்து இருந்தார்கள். அதில் கிடைக்கும் வருமானம் தாயகத்துக்கே உதவுவது.

1. வணிக நிறுவனமொன்றை நிறுவி அதில் கிடைக்கும் வருமானங்களை தயாகத்துக்கு செலவிடச் செய்யலாம்.

2. சிங்கள அரசின் பொருட்களுக்கு ஈடாக மாற்றுப் பொருட்களை விற்பனை செய்வதனால் வாடிக்கையாளர்களுக்கு மாற்றுப் பொருட்களை நுகரும் பழக்கத்தை அதிகமாக்கலாம்.

3. தாயகத்தின் மீது பற்றுள்ள ஊடகங்களின் மூலம் இவ்வணிக நிறுவனத்தை பிரபல்யமாக்கி, வாடிக்கையாளர்களை அதிகமாக்கலாம்.

4. செலவினைக் குறைக்க தாயகப்பற்றுள்ளவர்கள் ஒய்வு நேரத்தில் இவ்வணிக நிறுவனத்தில் இலவசமாக தொண்டாற்றலாம்.

5. (சில இடங்களில் சில ஈழத்தமிழர்களின் கடைகள், உணவகங்களில் சூரியத் தொலைக்காட்சியினை வைத்திருக்கின்றார்கள். அதன் மூலம் எமது மக்களின் மூளையினை வேலை செய்யாது நாடகம் பார்க்கும் அடிமைகளாக மாற்றுகிறார்கள். இந்தச்சூரிய தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு ஈழத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாது). சிங்கள அரசின் கொடுமைகளினால் எம்மவர்கள் பதிக்கப்படுவதை இவ்வணிக நிறுவனத்தில் வரும் வாடிக்கையாளர்கள் பார்ப்பதற்கு, தொலைக்காட்சியினூடாக இவ்வணிக நிறுவனத்தில் காண்பிக்கலாம்.

8. இது பற்றி விழிப்புணர்வினை மக்களுக்கு ஊட்டுவது- தொலைக்காட்சி, வானொலிகள் சங்கங்கள் மூலமாக சேகரிக்கலாம்.

1. வானொலிகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக நத்தார், ஈஸ்டர் தினங்களில் நிதி சேகரிப்பது வழக்கம். இது வருடாவருடம் சேகரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் வானொலியினூடாக நிதியினை அளிப்பது வழக்கம். பலர் தொலைபேசியில் வந்து தாங்கள் இந்தளவு பணத்தைக் கொடுக்க விரும்புவதாகச் சொல்வார்கள். இதனை மற்றைய நாடுகளில் உள்ளவர்களும் பின்பற்றலாம்.

2. தொலைக்காட்சியினூடாகவும் இப்படியான நிகழ்ச்சிகளை வழங்கி பணம் சேர்க்கலாம். முன்பு ஒரு தொலைக்காட்சியில் இது வெல்லும் நேரம் என்ற நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்கள் தங்களுக்கு கிடைக்கும் பணத்தினை எந்தெந்த புனர்வாழ்வு அமைப்புக்கு கொடுக்கலாம் என்று அறிவிப்பது வழக்கம். இது போன்று நிகழ்ச்சிகள் புலம் பெயர் தொலைக்காட்சியில் வரவேண்டும்.

3. தொலைக்காட்சி, வானொலிகளில் மாதத்துக்கு ஒருமுறை இப்படியான அமைப்புக்கள் பற்றிய தகவலை மக்களுக்கு வழங்க வேண்டும். அண்மையில் ஒரு தொலைக்காட்சியில் காலைக்கதிர் நிகழ்ச்சியில் வெண்புறா அமைப்பினைச் சேர்ந்தவரின் பேட்டி காண்பிக்கப்பட்டது.

4. புலம் பெயர்ந்த நாடுகளில் பல்வேறான அமைப்புக்கள் இருக்கின்றன(பாடசாலை பழைய மாணவர்கள் சங்கம், ஊர்களின் சங்கம்....). அவ்வமைப்புகள் வருடாவருடம் தமது பாடசாலை, ஊர் என்பவற்றுக்கு நிதி சேகரித்து வருவது வழக்கம். அவ்வமைப்புக்களின் பிரதிநிதிகளை அழைத்து தாயகப் புனர்வாழ்வு அமைப்புக்களுக்கும் வருடத்தில் ஒரு முறையாவது உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கலாம்.

5. புலம் பெயர்ந்த மாணவர்கள் தமிழை தமிழ்ப் பாடசாலைகளில் கற்பது உண்டு. இப்படியான பாடசாலைகளில் மாணவர்களுக்கு தாயகத்தில் அல்லல் படும் சிறார்கள், மாணவர்கள் பற்றிய விபரணத்தைக் காண்பிக்கலாம். இதனால் அவர்களுக்கும் தாயகத்தின் மீது பற்றுக்கள் அதிகமாகும்.

போட்டியாளர் இல 06:

1. ஓவ்வொரு மாநிலங்களில் வாழும் தமிழர்கள் ஒரு குழுவை அமைத்து அம்மாநிலங்களில் வாழும் தமிழ் மக்களிடம் நிதி சேர்க்கலாம்.

2. பாடசாலைகள், பல்கலைகழகங்களில் படிக்கும் மாணவர்(கள்) (கல்வி நிலையங்களின் அனுமதியோடு) தனியாகவோ இல்லை இணைந்தோ அங்கு தாயக நிலமையை எடுத்துரைத்து நிதி சேகரிக்கலாம்.

3. வேலைத் தளங்களில் ( அனுமதியோடு) நிலமையை விளக்கி நிதி சேகரிக்கலாம்.

4. (அறிமுகமான) கடைகளில், உணவு விடுதிகளில் (தமிழர்/ வெளிநாட்டவர்) கையேடு ஒன்றில் சுருக்கமாக நிலமையை விபரித்து நிதி உண்டியல்கள் வைத்து சேமிக்கலாம்.

5. எமது நாட்டில் பல இடங்களில் மார்க்கற் போடுவார்கள். கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடாத்தப்படும். அப்படியான சமயங்களில் அவ்விடத்துக்கான காரியாலத்தின் அனுமதி பெற்று அங்கும் கையேடு மூலம் நிலமையை விவரித்து நிதி சேகரிக்கலாம்.

6. இணையத்தளங்கள் மூலம் (தமிழிலும், நெதர்லாந்து மொழியிலும்) இணைய உலகத்திற்கு நிலமைகளை சுலபமாக எடுத்துரைக்கலாம். இதற்கென்று ஒரு வங்கி இலக்கத்தை எடுத்து அதன் மூலம் நிதியை சேமிக்கலாம்.

7. மின்னஞ்சல்கள் மூலம் சுருக்கமாக நிலமையை விளக்கி நண்பர்களுக்கு அனுப்பி அவர்கள் மூலமாக அவர்களின் நண்பர்களிற்கு அனுப்புவதன் மூலம் நிதி சேகரிக்கலாம்.

8. எமது நாட்டு கிறிஸ்தவ கோயில்களில் தவக்கால நாட்களில்(40நாட்கள்) வறுமைப்பட்ட நாடுகளுக்கென்றும், கஷ்டப்படும் மக்களுக்கென்றும் திருப்பலிகள் ஒப்புக்கொடுத்து அந்த 40 நாட்களும் நிதி சேகரிக்கப்படும். அச் சந்தர்ப்பத்தில் நிதி சேகரிக்கலாம்.

9. குடும்ப உறவுகளிடமும், நண்பர்கள், அறிந்தவர்களிடமும் (நெதர்லாந்து நாட்டவர்) சுலபமாக நிலமையை எடுத்துச்சொல்லி நிதி சேகரிக்கலாம்.

10. வருடத்தில் இரண்டு மூன்று தடவைகள் பழைய பொருட்கள் விற்கும் மார்க்கற் ஒவ்வொரு கிராமங்களிலும், நகரங்களிலும் இடம்பெறும். அவ் வேளையில் இளையோர்கள் இணைந்து தமிழர்களிடம் இருக்கும் பாவனைக்கு தேவைப்படாத பழைய பொருட்களை சேகரித்து, விற்று நிதி சேகரிக்கலாம்.

5. எமது நாட்டில் பல இடங்களில் மார்க்கற் போடுவார்கள். கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடாத்தப்படும். அப்படியான சமயங்களில் அவ் இடத்துக்கான காரியாலத்தின் அனுமதி பெற்று அங்கும் கைஏடு மூலம் நிலமையை விவரித்து நிதி சேகரிக்கலாம்.

1. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் இப்படியான மார்க்கெற் இடம்பெறும். கூட 3,4 ஊர்களுக்குஒன்றாக ஒரு காரியாலயம் இருக்கும். அதில் சென்று நிலமையை கூறி நிதி சேர்க்க அனுமதி பெற்று நிதி சேர்க்கலாம். கூடுதலாக இதற்கு நாம் நிதி சேர்ப்பது உண்மையான காரணங்களுக்கா என்று அவர்கள் பரிசோதனை செய்வார்கள். அதற்கு புனர்வாழ்வு கழக உறுப்பினரை அழைத்து பேச வைக்கலாம் இல்லை என்றால் ஆவணங்கள் (அட்டைகள்) காட்டலாம்.

2. விசேட நாட்களில் அல்லது அதை அண்டிய நாட்களில் கேளிக்கை நிகழ்ச்சிகள் அல்லது சேர்க்கஸ் இடம்பெறுவதுண்டு. அதுவும் ஒவ்வொரு ஊர்களில் ஒரு வார காலமாக இடம் பெறும். அதற்கு ஊரின் காரியாலயத்திலும் கூடவே கேளிக்கை நிகழ்ச்சி நடாத்துபவரின் அனுமதியும் பெற வேண்டும். நிலைமைகளை எடுத்து சொல்லி அச் சயமத்தில் 2, 3 பேர் குழுமங்களாக சென்று நிதி சேர்க்கலாம்.

3. இப்படியான நிகழ்ச்சிகள் இடம்பெறுமுன் ஆங்காங்கே போஸ்டர்ஸ் தொங்க விடுவார்கள் விளம்பரத்திற்கு. அப்பொழுதே ஒழுங்கு செய்ய தொடங்க வேண்டும். கூடவே வெவ்வேறு இடங்களில் இப்படியான விளம்பர பலகைகள் தொங்குவதை கண்டால் அங்கு சென்றும் ஒழுங்க செய்யலாம் இல்லையெனில் அங்கு நம்மவர் வாழ்ந்தவர் அவர்களை ஊக்குவிக்கலாம்.

4. இங்கு கர்னவால் என்று ஒரு கலச்சார நிகழ்வு இடம்பெறும். அச் சமயம் இசைக்கருவிகள் இசைத்துக்கொண்டு ஊரெல்லாம் ஒரு குழு வலம் வருவார்கள். அந் நேரம் அவர்களோடு பேசி நாம் மேலே சொன்னது போல நிலமைகளை ஆதாரத்தோடு எடுத்து சொல்லி நாமும் ஊரெல்லாம் வலம் வந்து நிதி சேர்க்கலாம். இதற்கு நன்றாக மொழி கதைக்க தெரிந்தவர்கள் வேண்டும். கேள்விகள் வரும் பட்சத்தில் நல்ல பதில்கள் நல்ல மொழியில் சொல்லப்பட வேண்டும்.

5. பத்திரிகை போடும் வேலை செய்யும் எல்லோருக்கும் பண்டிகை நாளில் அவர்கள் வேலை இடத்தால் வாழ்த்து அட்டைகள் கொடுக்கப்படும். அதை அவர்கள் தாம் தினமும் பத்திரிகை போடும் வீடுகளிற்கு சென்று கொடுத்து அவர்களி வாழ்த்தினால் அவர்கள் தங்களுக்கு விரும்பிய தொகையை கொடுப்பார்கள். பத்திரிகை போடும் தொழில் கூடிய தமிழர்கள் செய்வது. அவர்கள் கிறிஸ்துமஸ் நாளில் சிரமம் பாராமல் வீடுகளிற்கு சென்று வாழ்த்து அட்டைகளை கொடுத்து நிதி சேர்க்கலாம்.

8. எமது நாட்டு கிறிஸ்தவ கோயில்களில் தவக்கால நாட்களில்(40நாட்கள்) வறுமைப்பட்ட நாடுகளுக்கென்றும் கஷ்டப்படும் மக்களுக்கென்றும் திருப்பலிகள் ஒப்புக்கொடுத்து அந்த 40 நாட்களும் நிதி சேகரிக்கப்படும். அச் சந்தர்ப்பத்தில் நிதி சேகரிக்கலாம்.

1. ஒரு வருடம் தவக்காலம் தொடங்கும் முன்னே கோயில் பங்கு அத்தோடு பாதிரியாரோடு கதைத்து நம் நாட்டிலும் பிரச்சனை, கஷ்டங்கள் இருப்பதை எடுத்துக் கூறலாம். நிலைமைகளை எடுத்துக்காட்ட இணையத்தில் வரும் செய்திகளை, கை ஏடுகளை ஆவணமாக பயன்படுத்தலாம்.

2. புனர்வாழ்வு அமைப்பின் உறுப்பினர் ஒருவரோடு (மூத்த உறுப்பினர்) கோயில் பங்கிற்கு சென்று நம் அமைப்பினர் ஊரில் உதவி செய்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தி (வீடியோக்கள் மூலம்) இதில் சேர்க்கப்படும் நிதியும் உறவுகளிற்கே சென்றடையும் என்றும் அதற்காக அங்கு ஒரு சின்ன ஒழுங்கை செய்து, அதாவது இங்கு பெறப்படும் நிதியை அங்கு யாரிடம் கொடுக்கப்போகிறோம் அது எப்படி பயன்பட போகிறது என்று தகவல்களை கொடுத்து பின்னால் அதைப்பற்றிய ஒரு றிப்போர்ட் வழங்குவதாகவும் சொல்ல வேண்டும். ஏனெனில் கடைசி நாள்(40வது) கோயிலில் நிதி எப்படி பயன் பட்டது என எல்லோர் முன்னிலும் கூறப்பட வேண்டும்.

3. நாம் வாழும் ஊரில் மட்டுமில்லாமல் நம் உறவுகள் வாழும் ஊரில் உள்ள தேவாலயங்களிலும் இப்படியான நிதிசேர்ப்பு நடைபெறுகிறதா என அறிந்து அங்கு வாழும் உறவுகளையும் ஊக்கப்படுத்தலாம்.

4. எப்போதுமே திடீரென்று சென்று நிதி சேர்க்க வேண்டும் என்றால் அது நடைமுறைக்கு வராது.

ஆனால் நாமும் அடிக்கடி தேவாலயம் செல்வது, அங்குள்ளவரோடு பழகுவது, தேவாலயத்திற்கு மாலையில் ஏதும் உதவிகள் ( பூக்கள் சேகரித்தல், ஒழுங்கு பண்ணுதல்) செய்து வரலாம். இதனால் நம்பிக்கை அதிகரிக்கும்.

5. எல்லாவற்றையும் விட நம்மவர்களும் நாம் வாழும் நாட்டில் தேவாலயங்கள் உருவாக்கி இருக்கின்றனர். நானறிய அங்கு இப்படியான ஒரு வழி செய்யப்படுவதில்லை. (வேறு வழிகள் செய்வார்கள்) ஆனால் இது ஒரு நல்ல வழி. பக்தியோடு நாம் நம்மவர்களுக்கு இறைவனை வேண்டி செய்வது. இதை நம்மவர் தேவாலயத்தில் ஒழுங்கு செய்யலாம். எந்த ஆவணங்களும் காட்ட தேவையில்லை.

10. வருடத்தில் இரண்டு மூன்று தடவைகள் பழைய பொருட்கள் விற்கும் மார்க்கற் ஒவ்வொரு கிராமங்களிலும், நகரங்களிலும் இடம்பெறும். அவ் வேளையில் இளையோர்கள் இணைந்து தமிழர்களிடம் இருக்கும் பாவனைக்கு தேவைப்படாத பழைய பொருட்கள் சேகரித்து, விற்று நிதி சேகரிக்கலாம்.

1. நம்மிடம் இருக்கும் பழைய பொருட்களை எடுத்து, முயன்றவரை திருத்தி (உ+ம்: கொஞ்சம் பாவிக்க கூடிய கதிரை ஆனாலும் ஏதும் சிதைவு என்றால் அதை திருத்தி) விற்று நிதி சேர்க்கலாம்.

2. குழுமங்களாக பிரிந்து நம்மவர்களிடம் இருக்கும் பழைய பொருட்களை சேகரிக்க வேண்டும். சேகரித்து அவற்றில் விற்க கூடிய பொருட்களை தெரிவு செய்து (இல்லாதவற்றை முடிந்த வரை திருத்தி) ஒழுங்காக்க வேண்டும். ஒழுங்காக்கி விற்று நிதி அனுப்பலாம்.

3. சில வெளிநாட்டவர் தேவையற்ற பொருட்களை வீட்டுக்கு வெளியில் வைத்து விடுவார்கள். அதை கண்டால் எடுத்து சேமித்து வைத்தால் (அல்லது திருத்தி வைத்தால்) பழைய பொருட்கள் விற்கும் நாளில் விற்கலாம்.

4. பலரிடம் பழைய பொருட்கள் இருந்தும் அதை விற்க பஞ்சியில் இருப்பார்கள். நாம் 2,3 பெர் இணைந்து தெரிந்த வீடுகளிற்கு அவர்களுக்கு தெரிந்த வீடுகளிற்கு சென்று சேகரித்து விற்கலாம்.

5. விற்பதற்கு ஒழுங்கு செய்ய முதல் மார்க்கற் போடப்படும் கோயில் குழுவிடம், அல்லது அதற்கான பொறுப்பாளரிடம் கதைத்து நமக்கென ஒரு இடத்தை ஒழுங்கு செய்ய வேண்டும். செய்து விட்டால் மார்க்கற் போடும் அன்றைக்கு 3, 4 பேர் சேர்ந்து நின்று (நன்றாக மொழி கதைக்க தெரிந்தவர்கள்) விற்கலாம். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் விலையை பொருளுக்கிற்கேப்ப மதிக்க வேண்டும். கூட மதித்து விற்கப்படாமல் இருப்பதை விட அளவாக விலையை மதித்து விற்று சிறிய தொகையாவது பெறலாம். கூடவே நம் ஊர் நிலமைகள் சொல்லும் கை ஏடுகள், போஸ்டர்ஸ் தொங்க விடலாம். எதற்காக இதை செய்கின்றோம் என்று.

போட்டியாளர் இல 07:

1.துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து உண்டியல் மூலம் பணம் சேகரித்தல்.

1. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பிரசுரங்களை விநியோகித்து உண்டியல் மூலம் பணம் சேகரிக்கலாம்.

2. விளம்பரங்கள் இருக்கும் இடங்களில் உதாரணமாக வங்கிகளில், வியாபார ஸ்தாபனங்களில், புகையிரத நிலையங்களில் இப்படிப்பட்ட இடங்களில் அவர்களின் உதவியுடன் பிரசுரங்களை வைப்பதன் மூலமும், தொங்கவிடுவதன் மூலமும் நிதி சேகரிக்கலாம்.

3. துண்டுப்பிரசுரங்களை வீடு வீடாக சென்று கடித பெட்டிகளில் போட்டு சேகரிக்கலாம்.

2. சிறுவர்களின் கைவினைப் பொருட்களை விற்பனை செய்து நிதி சேகரித்தல்

3. மரதன் ஓட்டப்பந்தயத்தினை நடத்துவதன் மூலம் கிடைக்கும் பணத்தை சேகரித்தல்.

1. மரதன் ஒட்டப்பந்தயத்தை ஸ்பொன்சர் பண்ணுதன் மூலம் பணத்தை பெற முடியும்.

2. பங்குபற்றுவர்களுக்கான சேட் உடைகளை விற்பனை மூலம பணம் பெற முடியும்.

3. பார்வையாளர்க்கு தொப்பி போன்றவற்றை விற்பனை செய்தும் பெறலாம்.

4. கலைநிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் நிதி சேகரித்தல்.

5. சிறுவர்களிடம் அச்சடித்த மட்டை மூலம் புள்ளியிட்டு நிதி சேகரித்தல்.

1. 20 அல்லது 30 சதுரங்களை உள்ளடக்கி அச்சடித்த மட்டையில் புள்ளடி இடுதல்.

2. வங்கிகளில், மக்கள் பிரதான கூடுமிடங்களில் பயன் படுத்தலாம்.

3. வீடு வீடாக சென்று உண்டியல் வைத்து இந்த அச்சடித்த மட்டை மூலம் பணம் சேகரிக்கலாம்.

இந்தவகை சேகரிப்பு சிறுவர் சிறுமியர்களுக்கு ஏற்றது. அவர்களையும் எம் தாயக செயற்பாட்டில் இளம் வயதிலேயே ஈடுபட வைக்கும் முயற்சியாகவும் அமைகின்றது.

6. அதிர்ஷ்ட லாப சீட்டு மூலம் கிடைக்கும் பணத்தை சேகரித்தல்.

1. தமிழர்களிடம் அதிர்ஷ்ட லாப சீட்டு நடத்துவது.

2. வெளிநாட்டவர்களிடமும் இந்த முறையில் நடத்துவது.

3. பாடசாலைகளில் நடைபெறும் விளையாட்டுப்போட்டி, கலைவிழாக்களின் போது இந்த செயற்பாட்டை ஆரம்பிக்கலாம்.

7. திட்டமிடல் - பாடசாலை, குடிமனை என்பதற்கு கட்டுவதற்கான வழிமுறைகளைக் காட்டி அந்தந்த நகரங்களின் நகராட்சி மன்ற தலைவரிகளின் உதவியுடம் பணம் பெற்றுக் கொள்ளுதல்.

1. தாயகத்தில் இருக்கும் பகுதியில் படிப்பதற்கு பாடசாலை இல்லை அல்லது பாடசாலை யின் வசதியீனத்தை சுட்டி காட்டி அதற்குறிய ஆவணங்களை சமர்பித்து அதற்குரிய பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

2. இதே வழிமுறையோடு குடிமனைகளுக்கான நிதியுதவியையும் பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கின்றது.இந்த முறையில் அடிப்படை வசதிகள் கூட அற்று பாதிக்கப்பட்ட பாடசாலை யின் ஆவணங்களை சமர்பித்து நிதியினை பெற்றிருக்கிறார்கள்.

3. நகராட்சி மன்றங்களின் விளம்பரப் பலகைகளிலும் இதனை தொங்கவிட்டு முயற்சிக்கலாம்.

8. மாதாந்த வைப்பகம் மூலமாக நிதி சேகரித்தல்.

1. தமிழர்கள் என்ற அடிப்படையில் புலம்பெயர்ந்தவர்கள் அனைவரும் இதனை மேற்கொள்ள அறிவுத்த செய்வது.

2. ஒருநாள் சம்பளத்தை இதற்காக அர்ப்பணிக்கும் படி வலியுறுத்தல்.

3. பெற்றோர் மட்டும் இல்லை. குடும்பத்தில் வேலை பார்க்கும் இளையோரையும் இந்த வைப்பகம் மூலம் பணம் அளிக்கும் முறையை வளர்த்தல்.

9. அகதி இல்லங்களுக்காக ரசீது மூலம் நிதி சேகரித்தல்.

1. அகதிகளுக்காக உடை, சுகாதாரம் என்பவற்றுக்காக ரசிது மூலம் பெறுதல்.

2.அகதிகளுக்கான இல்லங்களை புனரமைத்து வசதிகள் கேட்டு ரசிது மூலம் பெறுதல்.

3.அகதிகளுக்கான கல்வி, விளையாட்டு வளர்ச்சிக்காக ரசிது மூலம் வழிமுறை.

10. இங்குள்ள தன்னார்வ நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு நிதி சேகரித்தல்.

2. சிறுவர்களின் கைவினைப் பொருட்களை விற்பனை செய்து நிதி சேகரித்தல்

பாடசாலைகளில் செய்த கைவினைப் பொருட்களை விற்பனை செய்யலாம். எமது தாயக மூலப் பொருட்கள் கொண்டும் அவற்றை தயாரிப்பதில் ஈடுபடலாம். தாயக மூலப்பொருட்கள் பெறமுடியாத நிலையில் அதையொத்த பொருட்களை வாங்கி, அல்லது அதன் நுட்பத்தைக் கொண்டு இங்கிருக்கும் பொருள்களைக் கொண்டு கைவினைப்பொருள்களை தயாரித்தல். பெற்றோர், உற்றார் ஊக்குவித்து இதனை மேலும் வளப்படுத்தலாம். தாயக மூலப்பொருட்களை அச்சில் கொண்ட பொருட்கள் சில வியட்நாம் மற்றும் சில கடைகளில் காணப்படுகிறது. அவற்றைக் கொண்டு முயற்சிக்கலாம். கைவினைப் பொருட்களை விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு விடலாம். வெளிநாட்டவர்கள் கைவினைப்பொருட்கள் வாங்குவதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். கைவினைப்பொருட்களை வீட்டில் அலங்கார பொருட்களாகவும், அன்பளிப்புகள் செய்வதற்காகவும் பயன்படுத்துகிறார்கள். பிறந்தநாள் , தந்தையர் தினம், அன்னையர் தினம், நத்தார் தினம் ஆகியவற்றுக்கான வாழ்த்து மடல்களை செய்யலாம். இவை போன்றவை பாடசாலைகளிலும் விற்பனைக்கு விடலாம் . பாடசாலை ஆசிரியர்கள் பலர் இதை ஆர்வத்துடன் வாங்குவார்கள். கைவினைப்பொருட்களை வீட்டில் அலங்கார பொருட்களாகவும், அன்பளிப்புகள் செய்வதற்காகவும் பயன்படுத்துவார்கள். அனேக தொலைக்காட்சிகளில் கைவினைப்பொருட்கள் செய்யும் விதம் பற்றி கிரமமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இந்த கைவினைப்பொருட்களை மாதாந்தம் அல்லது கிழமைக்கு ஒருதரம் கூடும் சந்தைகளிலும் விற்பனை செய்யலாம். எம்நாட்டு நிலைமைகளை விளக்கிக் கூறி அவற்றை கழிவு இல்லாமல் விற்கக்கூடிய வழிமுறைகளைக் கேட்கலாம். இணையதளங்களில் விளம்பரம் செய்தும் விற்பனை செய்யலாம். சிறுவர்கள் கைவினை பொருட்களின் மூலம் வருவாயை பெறக் கூடியதாயும், தாயகத்திற்காக புனர்வாழ்வுக் கழகத்திற்காக பணத்தினை ஈட்டும் வழியையும் சிறுவர்களுக்கு ஊக்குவிப்பதாயும் அமையும். அனேக தொலைக்காட்சிகளில் கைவினைப்பொருட்கள் செய்யும் விதம் பற்றி கிரமமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அவற்றைக்கொண்டு எம்மவர்களின் கைத்திறமைகளையும் இணைத்து வித்தியாசமான பொருட்களை செய்ய முயற்சிகள் செய்யலாம். இதற்காக எம்மவர் மாதம் ஒருமுறையெனும் இணைந்து இந்த செயற்பாட்டில் தங்கள் ஒத்துழைப்பை வழங்கலாம்.

4. கலைநிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் நிதி சேகரித்தல்.

இம்முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த முறையை மேலும் வளப்படுத்தி சிறந்தமுறையில் வழிநடத்திச் செல்வதன் மூலம் அதிக நிதியை பெற முடியும் என்பது என் எண்ணம். கலைநிகழ்ச்சிகள் பெறும்பாலும் எம் இளைய தலைமுறையினரின் பங்களிப்பு உள்ளதாக அமைய வேண்டும். சிறுவர், சிறுமிகளின் ஆற்றல் வெளிப்படும் நிகழ்ச்சிகளை தருவதோடு எண்ணிக்கையில் அதிகம் சிறுவர்களை இணைத்துக் கொள்வது மிக மிக சிறப்பு. நகரின் பிரதான நகர மன்ற உறுப்பினர் வரவழைக்கப்படவேண்டும். வெளிநாட்டவர்களையும் அழைத்து எம் கலை கலாச்சார நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்குமாறு அழைப்பை விடுக்கலாம். நிகழ்சிகளை ஒருங்கிணைக்கும் பணி எம் இளைய தலைமுறையினரின் கைகளில் ஒப்படைக்கப்பட வேண்டும். அத்தோடு எம் இளம் சமுதாயத்தை பல கலைகளையும் வழிநடத்திச் செல்லக்கூடிய திறமையையும் பெற்றக் கொள்ளக்கூடியதாய் இருக்கின்றது. எதிர்காலத்தில் இளம் சந்ததியினர் இவ்வித விழாக்களில் கிடைக்கும் பணத்தை புனர் வாழ்வுக்கழகத்துக்கு அர்பணிக்கும் தன்மையையும் வளர்த்துக்கொள்ள வழி வகுக்கின்றது. வருங்கால்தில் இவ்வகையான நிகழ்வுகள் மூலம் பணம் பெற்று எம் தாயகத்தில் துன்புறும் மக்களுக்கு அர்ப்பணிக்கும் செயலினை தங்களுக்குள் வளர்க்கும் பணியும் ஊட்டப்படுகின்றது. ஒவ்வொரு நகரங்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தபடவேண்டும். கலைநிகழ்சிகள் ஆகக்குறைந்தது வருடத்துக்கு மூன்று முறையேனும் நடத்தப்பட வேண்டும். நுழைவுக்கட்டணம் அறவிடப்பட வேண்டும். அதிர்ஷ்ட லாப சீட்டு மூலம் பரிசுகள் கொடுத்து ஊக்குவிக்கலாம். ஏலம் மூலம் ஒரு பொருளை கூவி அழைத்து விற்கும் முறையால் நிதி சேகரிக்கலாம். வழமையாக விற்கும் உணவுப்பொருள்களாலும் நிதி சேகரிக்கிலாம்.

10. இங்குள்ள தன்னார்வ நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு நிதி சேகரித்தல்

அகதிகளுக்காக உதவி வழங்கும் ஸ்தாபனங்கள். சில தேவாலயங்களில் முக்கியமாக நத்தார் பண்டிகையை முன்னிட்டு உண்டியல் வைத்து பணம் சேகரிக்கும் முறை உள்ளது. அத்தோடு அதன் சார்பாக கடதாசியில் வடிவமைக்கப்பட்ட உண்டியல் பாடசாலைகளுக்கும் விநியோகிக்கப்பட்டு அவை பாடசாலை பிள்ளைகள் மூலம் பணம் சேகரிக்கப்படுகிறது. இந்த முறை ரஷ்யா வில் கஷ்டப்படும் பிள்ளைகளுக்காக நத்தாருக்காக பணம் சேகரிக்கப்படுகிறது என்றும் அறிந்துள்ளேன். பிரபல்யமான வியாபார நிறுவனங்களில் புனர்வாழ்வுக்கான உதவிகள் செய்வதற்காகவே ஒரு சிறு உதவியை வழங்குவது சாதாரணமாய் உள்ளது. இவர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். தாயகத்தில் இருக்கும் பகுதியில் படிப்பதற்கு பாடசாலை இல்லை அல்லது பாடசாலை யின் வசதியீனத்தை சுட்டிக் காட்டி அதற்குறிய ஆவணங்களை சமர்பித்து அதற்குரிய பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அப்படியும் நண்பி ஒருத்தி வாழும் இடத்தில் பணம் பெறப்பட்டிருக்கின்றது. இதே வழிமுறையோடு குடிமனைகளுக்கான நிதியுதவியையும் பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கின்றது. நகராட்சி மன்றங்களின் விளம்பரப் பலகைகளிலும் எமது பிரசுரங்களை முன் வைத்து முயற்சிக்கலாம்.

போட்டியாளர் இல 08:

1. கோயில்களில் நல்ல வருமானம் உண்டு. ஒவ்வொரு வருடமும் ஒரு தொகையை தரும்படி கேட்கலாம்.

2. பழைய மாணவ சங்கங்களில் இருந்து நிதி சேகரிக்கலாம்.

3. தமிழ் வர்த்தக ஸ்தாபனங்கள், கோயில்கள், சர்ச்சுகள் போன்றவற்றில் (அமைப்பின் பெயரை இட்டு) உண்டியல்களை வைக்கலாம் (மக்டொனால்ஸ் பாணியில்).

4. தென்னிந்திய படங்கள் புலத்தில் திரையிடும்போது ஒரு காட்சியின் வருமானத்தை அமைப்புக்கு கேட்கலாம்.

5. தென்னிந்திய பிரபலங்கள், கர்நாடக இசை மேதைகளின் நிகழ்ச்சி நடக்கும் போது நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் இருந்து நன்கொடையாக பணம் கேட்கலாம்.

6. தொலைபேசி அட்டைகள் அமைப்பின் பெயரை இட்டு வியாபாரம் செய்தல்.

7. வியாபார ஸ்தாபனங்கள் நிறுவலாம்.

8. தமிழ் வானொலிகளில் குறிப்பிட்ட விசேட தினங்களில் நிதி திரட்டல்.

9. வார இதழ்கள் வெளியிடல்,பிறந்த நாள் வைபவங்களின் மற்றும் திருமண வைபவங்களின் போது பரிசுகளை இந்த அமைப்புக்கு நன்கொடையாக தருமாறு கேட்டல்.

10. தமிழர் ஒன்றுகூடலின் போது உணவு அங்காடிகளை நிறுவி அதன் மூலம் பணம் சேர்த்தல்.

கோயில்களிள் நிதி சேகரித்தல்

1. கோயிலில் உள்ள நிருவாக சபைகளில் தமிழர்புனர்வாழ்வுகழக அங்கத்தவர்கள் அங்கத்துவம் வகித்தால் இலகுவாக நிதி சேகரிக்கலாம்.

2. கோயில்களிள் நடைபெறும் திருவிழா மற்றும் அன்னதானம் என்பவற்றில் தமிழர் புனர்வாழ்வு கழக உண்டியல்களை வைப்பதன் மூலம் நிதியை சேகரிக்கலாம்.

3. கோயில் வருட வருமானத்தில் ஒரு தொகையை தமிழர்புனர்வாழ்வு கழகதிற்கு கொடுக்கலாம் இதற்கு வரி விலக்கு உண்டு.

4. ஆத்மீக வெளியிடுகளான பக்திபாடல்கள், சைவபுத்தகங்களை தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் பெயரில் அடித்து வெளியிடுதல்.

5. தேவாலயங்களில்(சர்ச்சுகளில்) தமிழர்புனர்வாழ்வு கழகத்தின் உண்டியல்களை வைப்பதன் மூலம் நிதியை சேகரிக்கலாம்.

பழைய மாணவர் சங்கங்கள், வானொலி, கலை நிகழ்ச்சிகள்

1. தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் உள்ள பழைய மாணவர் சங்க கிளைகளிற்கு மடல்கள் போட்டு தொடர்பு கொள்வதன் மூலம் நிதியை கேட்கலாம், அவ்வாறாயின் பழையமாணவர் சங்க உறுப்பினர்கள் அங்கு வருபவர்களிற்கு அந்த மடலை காட்டுவதன் மூலம் நிதியை சேகரிக்கலாம்.

2. பழைய மாணவர் சங்கத்தில் உள்ள பிரதிநிதிகளில் ஒருவரை தமிழர்புனர்வாழு கழகத்தின் அங்கத்துவராக சேர்க்கலாம்.

3. திரைப்பட காட்சிகளை திரையிட்டு இதில் வரும் ஒரு வருமானத்தை நிதியை கொடுத்தல்.

4. வானொலிகள் மூலம் குறிபிட்ட ஒரு நாளில் நிதி சேகரித்தல், இதற்கு வானொலி நிர்வாகிகளை தமிழர் புனர்வாழ்வு கழகம் தொடர்பு கொள்ள வேண்டும்.

5. தென்னிந்திய கலைஞர்களை அழைத்து இரண்டு வருடத்திற்கு ஒருதடவை ஒரு இசை நிகழ்ச்சியை புனர்வாழ்வு கழகத்திற்கு என்று நடத்தினால் ஒரளவு நிதியை சேகரிக்கலாம், சில கலைஞர்கள் இலவசமாகவும் செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன்.

திருமண மற்றும் பிறந்தநாள் பரிசுகள்

திருமண அழைப்பிதழ்களில் பரிசு பொதிகள் வேண்டாம், உங்கள் அன்பளிப்பை தமிழர்புனர்வாழ்வு கழகத்திற்கு கொடுக்குமாறு அழைப்பிதழில் ஒரு கார்டை வைத்து கொடுத்தல். இங்கு நடந்த திருமண வைபவத்தின் போது ஒரு உண்டியல் வைத்திருந்தார்கள். அதற்குரிய அன்பளிப்பு இலங்கையில் உள்ள தொண்டர் ஸ்தாபனத்திற்கு என்று எழுது வைத்து இருந்தார்கள். அதை போல் ஏனையவர்களும் செய்யலாம்.

இறந்தோர் நினைவு நாளாக நாம் கோயிலில் செய்வதை தமிழர்புனர்வாழ்வு கழகத்தில் ஒரு பிள்ளைக்கு பணத்தை கொடுக்கலாம். தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் அதிக எண்ணிக்கையான அங்கத்தவர்களை சேர்த்து அங்கத்துவ பணமாக குறைந்தளவு தொகையை வருட சந்தாவாக கேட்டால் அதிலும் ஒரளவு நிதியை சேகரிக்கலாம்.

போட்டியாளர் இல 09:

1. TRO வை விளம்பரப் படுத்துதல். இது நேரடியாக நிதிவரவை ஏற்படுத்தாதபோதும் TRO வை பிரபலப் படுத்தும். தினமும் தமிழர் வர்த்தக நிறுவனங்களிலிருந்து ஆயிரக் கணக்கான பிளாஸ்டிக் பைகளில் விற்பனைப் பொருட்களுடன் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவற்றில் TRO வின் சின்னத்தையும் இணைய முகவரியையும் அச்சிடுதல்.

2. ஏனைய சர்வதேச சேவை நிறுவனங்களுடன் இணைப்பை ஏற்படுத்துதல். அவர்களின் செயற்பாடுகளில் TRO பங்குகொள்ளலாம். அதேபோல இலங்கையில் சிக்கலான வேலைத்திட்டங்களை இந்த நிறுவனங்கள் மூலமாக நிறைவேற்றலாம்.

3. தாயக மக்களின் முயற்சியில் உருவாக்கப்படும் கைவினை அழகுப் பொருட்களை வெளிநாட்டில் தமிழ் வர்த்தகர்கள் மூலமாக விற்பனை செய்து இலாபத்தில் ஒரு பகுதியை TRO பெற்றுக் கொள்ளலாம்.

4. தாயகத்திலுள்ள கலைஞர்கள் மூலமாக உருவாக்கப்பட்ட தீபாவளி, தைப்பொங்கல், புதுவருட, நத்தார் வாழ்த்து மடல்களை கடைகளில் விற்பனை செய்து வரும் இலாபத்தைப் பெற்றுக் கொள்ளுதல்.

5. சமுதாய அறிவியல் சம்பந்தமான புத்தகங்கள் சிடிக்கள் போன்றவற்றை TRO ஒன்லைன் மூலமாக நன்கொடை தருபவர்களுக்கு அனுப்பி வைப்பதன் மூலம், இத்தளத்தின் மூலமாக நன்கொடை தருபவர்களை ஊக்குவிக்கலாம்.

6. பலர் தமது வீடுகளில் 1, 2, 5 சத சில்லறைக் காசுகளைச் சேர்த்து வைதிருப்பார்கள். சிலர் இதை கோயில்களுக்கு வழங்குவதுண்டு. பிரான்ஸில் சில வேளைகளில் இந்த 'மஞ்சள் காசு' சேகரிக்கும் திட்டத்தில் பல இலட்சம் யூரோக்கள் சேர்க்கப்படுவதுண்டு.

7. இந்திய பரதநாட்டிய இசைக் கலை நிகழ்ச்சிகளை மேலை நாட்டவர்கள் விரும்பிப் பார்ப்பதுண்டு. சினிமாக் கலைஞர்களை அழைத்து கலை நிகழ்ச்சி செய்வதைவிட, இப்படியானவை மேலை நாட்டவரிடம் அதிக வரவேற்பைப் பெறும்.

8. பெரிய நகரங்களில் TRO பணிமனைகள் அமைத்து, மக்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தி செயற்திட்டங்களை பொதுமக்களைக் கொண்டுசெயற்படுத்துதல்.

9. மாதாந்த சஞ்சிகை ஒன்றை நடத்துவதன் மூலம் TRO சம்பந்தமான வேலைத்திட்டங்களை மக்களுக்கு அறியத் தருவதுடன், மாத சந்தாவும் அறவிடலாம்.

10. விசேட பண்டிகைகளை ஒட்டி ஒவ்வொரு நாட்டிலும் லொத்தர் (பரிசுச் சீட்டு) ஒன்றை அறிமுகப்படுத்துதல்.

போட்டியாளர் இல 10:

1. இணையத்தளம்: இணையத்தளத்தில் தாயக நினைவு பொருட்கள், சஞ்சிகைகள், ஒலி,ஒளி தட்டுக்களை விற்பதோடு தாயக மக்களிற்காய் அவர்களின் மறுவாழ்விற்காய் அன்பளிப்பு கேட்கலாம்.

2. நடைபாதை பயணம்: நடை பாதை பயணமொன்றை ஒழுங்கு படுத்தி தாயக மக்களின் கஷ்டங்களை வெளிப்படுத்தி எல்லா நாட்டவரிடமும் நிதி சேகரித்தல்.

3. தொண்டு: ஒவ்வொரு ஊரிலும் தாயகபற்று கொண்டவர்கள் குழுக்களாக சேர்ந்து பகுதி நேர வேலைகளை செய்து (உம்: ரெஸ்டோரண்ட், விமானநிலையம்) அதில் வரும் பணத்தை தாயகத்திற்கு அனுப்பலாம்.

4. தொலைபேசி: தொலைபேசி மூலம் வேறு நாட்டவரோடு தொடர்பு கொண்டு தாயக வறுமை நிலையை கூறி அன்பளிப்பு கேட்கலாம். தொட்ர்பு கொள்ள முன் உதவிக்கரம் நீட்டில் அஞ்சல் அனுப்ப வேண்டும்.

5.விளம்பரம்: தமிழ் கடைகள், அல்லது வேற்று நாட்டவரின் கடைகளில் தாயக நிலமைகள் சொல்லும் விளம்பர பலகைகள் தொங்க விட்டு நிதி சேகரிக்கலாம்.

6. சல்லிமுட்டி: தமிழ்கடைகளில், அத்தோடு வேற்று நாட்டவரின் கடைகளில் தாயக கஷ்டங்களை சொல்லி சல்லிமுட்டிகளை வைத்தல். நிரம்பியதும் தாயகத்துக்கு அனுப்புதல்.

7.மின்னஞ்சல்: வருடத்திற்க்கு 2, 3 தடவைகள் மின்னஞ்சல் மூலம் தாயக நிலமைகளை எடுத்து கூறி அன்பளிப்பு கேட்டல். மின் அஞ்சல்களை போர்வோர்ட் செய்யும்படியும் கூறல். இதை பள்ளியில், பல்கலைக்கழகங்களில் கூடுதலாக செய்யலாம்.

8.இந்துக்கோயில்: சிறு இந்துக் கோயில்களை உருவாக்கி அதன் மூலம் நிதி சேர்த்து அனுப்புதல்.

9.கோயில்கள், தேவாலயங்களில் திருவிழாக்கள் நடை பெறும் சமயம் கொட்டகை ஒன்றை உருவாக்கி அங்கிருந்து உதவி கேட்டல்.

10. பண்டிகை காலங்களில் (கிறிஸ்மஸ், அன்னையர் தினம்) உறவுகளின் அன்புப்பரிசாக வறுமையில் வாடும் மக்களுக்கு நிதி உதவி கோரி சனத்திரளான இடங்களில் உண்டியல் குலுக்குதல். உண்டியல் குலுக்கும் போது அடையாளத்திற்கு இலச்சனை போட்ட ரி சேர்ட், பச் அணியலாம்.வேறு இலச்சனையாக தாயக நிலைகளை தெரிவிக்கும் விபரங்களை பொறிக்கலாம்.

கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய அனைத்து கள உறவுகளிற்கும் மீண்டும் ஒருமுறை மிக்க நன்றிகள்! :)

போட்டியில் கூறப்பட்டுள்ள சிந்தனைகள் பற்றி நீங்கள் இங்கே கருத்தாடல் செய்ய முடியும். உங்கள் கருத்துக்கள் போட்டியாளர்கள் பகுதி 02 ஐ சிறப்பாகச் செய்வதற்கு உதவிபுரியக்கூடும்.

நீங்கள் இந்த ஆய்வு போட்டி பற்றி விமர்சனம் செய்ய விரும்பினால் அல்லது போட்டி சம்மந்தமாக ஏதாவது சந்தேகங்களை கேட்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்!

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

கள உறவொருவர் கீழ்வரும் வழிமுறைகளை எழுதி அனுப்பியுள்ளார். அவருக்கு நன்றி! நீங்களும் உங்களுக்கு தெரிந்த வழிமுறைகளை இங்கு எழுதமுடியும் என்பதோடு, போட்டியாளர்களினால் ஏற்கனவே கூறப்பட்டுள்ள வழிமுறைகளை இங்கு விமர்சிக்கவும், அவை பற்றி ஆராயவும் முடியும். நன்றி! :)

நிதி சேர்க்கும்வழிமுறைகள்

1) கடைகளில் அவர்களின் ஒப்புதலுடன் ஒரு சிறு பெட்டியை சிறு தகவலுடன் வைக்கலாம். பொருட்கள் வாங்குபவர்கள் சில்லறயாக வருவதை அதில் போட்டு செல்வார்கள். இது சிறு துளி பெரு வெள்ளம் பேன்றது. எல்ல இடத்திலும் எல்ல இனங்களுக்கும் வில்லங்கமில்லதது.

2) பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படத்துடன் கூடிய சிறு தகவல்களை எழுதி ஆலயங்களில் ( தேவாலயங்களில்) விளம்பரப்பலகையில் போடலாம் இதனால் நிதி சேர்ப்பதோடு எமது நாட்டு பிரச்சனையும் சற்று வெளியே இதமான வழி முறையில் உலகத்துக்கு புரிய வைக்கலாம்.

3) வழி முறை இரண்டு போன்று பாதிக்கப்பட்ட மக்களின் கதைகளை ஒரு பக்கத்தில் எழுதி மனித நேயத்தில் ஆர்வமுள்ளவருக்கு நேரில் கொடுத்தும் கடிதமுலம் அனுப்பியும் செய்யலாம்.

4) புலம் பெயர் தேசத்தில் வாழும் மக்களின் பிள்ளைகள் இந்த நிலையை பள்ளிகளில் எடுத்து சொல்லி சிறு சிறு அளவில் நிதி சேகரிக்கலாம்.

  • தொடங்கியவர்

கள உறவு ஒருவர் இந்த போட்டி பற்றி முன்வைத்த காத்திரமான கருத்து ஒன்றை இங்கே அனைவரும் மீண்டும் வாசிப்பதற்காக இணைக்கின்றேன்.

உலகின் அனைத்துத் தேவைகளையும் போல, தமிழீழத்திற்கும் குறுகிய கால தேவகைள் நீண்டகால தேவைகள் என உள்ளன. குறுகிய காலத் தேவைகள் தான் தற்போது பூதாகரமாய்த் தோன்றுவதாலும் எமது குறுகியகாலத் தேவையானது, எமது தாயகத்தின் விடுதலையை எமது எதிரியிடம் இருந்து வென்றெடுத்தல் என்ற உடனடிப் பிரச்சினையில் குவிகின்றது என்பதனாலும் இது பற்றி மட்டுமே இங்கு கருத்திடுகின்றேன்.

இன்று உலகின் பலம் பொருந்திய சக்திகள் எல்லாம் கூட்டுச் சேர்ந்து சிங்களத்திற்கு முண்டு கொடுக்கின்ற நிலையில், எமது பூதாகரமான எதிரிக்கு எதிரான எமது நடவடிக்கைகளிற்கு உலகளாவிய அளவில் முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. எமது பணத்தை எமது போராட்டத்திற்கு நாங்கள் வழங்குவதே குற்றம் என்று ஆகியுள்ளது. இந்நிலை மாறும் வரை எமது போராட்டத்திற்கான நிதியை தமிழரல்லாதோரிடம் இருந்து நேரடியாகப் பெறுதல் நடைமுறைச் சாத்தியமற்றது. அதற்காக வேற்றுச் சமூகத்திடம் இருந்து எமது போராட்டத்திற்குப் பங்களிப்புப் பெற முடியாது என்பது இல்லை. எனினும் வேற்றுச் சமூகம் தொடர்பில் எனது கருத்துக்களைக்; கூறுவதற்கு முன்னர், எமது சமூகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சில கருத்துக்களை முன் வைக்கின்றேன்.

முதலாவதாக, எமது சமூகத்தில் இன்னமும் ஒரு சிலரே வீடுவீடாகச் சென்று மக்களிடம் இருந்து வளங்களை ஒருங்கமைக்க வேண்டிய தேவை நிலவுகிறது. இதிலும், ஒரு வீட்டிற்கு ஒரு முறை சென்றால் மட்டும் போதாது என்ற நிலை. முற்கூட்டியே சந்திப்பிற்கான நேரத்தை நிச்சயித்தல் என்பது, இந்த விடயத்தைப் பொறுத்தவரை, பல்வேறு காரணங்களால் நடைமுறைச் சாத்தியமற்று உள்ளதால் கதவில் சென்று தட்டித் தான் வீட்டில் ஆட்கள் உள்ளார்களா எனத் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது. பல சமயங்களில் ஆட்கள் வீட்டில் இல்லாததால் பிறிதொரு முறை அதே வீட்டிற்குச் செல்ல வேண்டி ஏற்படுகின்றது. மேலும், ஆட்கள் வீட்டில் நிற்பினும் கூட ||எழுதுவதற்கு|| ஒரு நாள் ||கொடுப்பதற்கு|| ஒரு நாள் என்று அலைச்சல்கள். இந்நிலையில் திறக்கக் கூடிய பல கதவுகளும் கூட ஆளணி பற்றாக் குறையினால் தட்டப்படாது உள்ளன.

ஐம்பது அலகுகள் உள்ள பிரதேசத்தில் வெறும் பதினைந்து அலகுகளை மட்டுமே வைத்துத் திட்டமிடவேண்டிய துர்ப்பாக்கியம் இன்று உள்ளது. இதனால் தான் ஒரே கதவுகள் திருப்பத் திருப்பத் தட்டப் பட்டு களைப்புத் தோன்றுகின்றது. மாற்றுச் சமூகங்களை அணுகுவது பற்றிச் சிந்திப்பதற்கு முன்னர் நமது சமூகம் உச்சப்பயன் பாடு பெற்றுவிட்டதா என ஆராய்வது அவசியம். எனவே, நம்மவர்களாக உணர்ந்து தாமாக குறிப்பிட்ட இடங்களிற்குச் சென்று கொடுக்க வேண்டியதைக் கொடுக்க வைக்கும் வகை நம்மவரை மாற்றல் முடியுமா என்பது தொடர்பில் நாம் சிந்திப்பது தான் காலத்தின் முதல் தேவை. எடுத்த எடுப்பில் இது முடியாத காரியம் என்பது போல் தான் தெரியும். அப்படி இதுவே முடியாது எனின் மற்றைய சமூகங்களை இந்நிலையில் அணுகுவது என்பது நகைப்பிற்குரியது. மேலும் இந்த மாற்றம் நிகழுமேயாயின் நேர விரையங்கள், ஒரு சிலர் சட்ட ரீதியில் பாதிக்கப்படுத்ல் போன்ற துன்ப கரமான நிகழ்வுகளும் திருத்தப்படும்.

இரண்டாவதாக, பங்களிப்பாளர்கள் தாமாக உரிய இடங்களிற்கு நேரம் தப்பாது சென்று பங்களிப்பதனால் செயற்பாட்டாளர்களிற்கு மாற்றுத் திட்டங்களைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு நேரம் கிடைக்கும். உதாரணமாக, இன்று ஐம்பது அலகுகளில் வெறும் பதினைந்து தான் பங்களிக்கின்றது என்ற நிலையில், இந்தப் பதினைந்தும் தாமாக தமது பங்களிப்பை உரிய இடங்களில் சென்று செய்யுமேயாயின், செயற்பாட்டாளர்கள் எஞ்சியுள்ள முப்பத்தி ஐந்து அலகுகளையும் படிப்படியாக அணுகி, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை முதலீடாக்கி, எதிர்காலத்திற்கான முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

அதாவது, தற்போது பங்களிக்கும் பதினைந்து அலகில் ஏறத்தாள ஐந்து அதிதீவிர பங்காளர்கள். செயற்பாட்டளர்கள் இவர்களது வீட்டிற்கு வருவதற்குப்பதிலாக இவர்களை உரிய இடங்களிற்கு வரச்சொன்னால் உடனே இவர்கள் சம்மதிப்பர். எனவே உடனே எஞ்சிய முப்பத்தைந்தில் அஞ்சை அணுகுவதற்குச் செயற்பாட்டாளர்களிற்கு நேரம் மிஞ்சும். இப்படியே படிப்படியாக இப்போது பங்களிக்கும் பதினைந்தும் உரிய இடங்களிற்குத் தாமாகச் சென்று செய்தால், செயற்பாட்டாளர்கள் எஞ்சிய முப்பத்தைந்தில் பதினைந்தை (ஏறத் தாள ஐம்பது வீதம்) அணுக அவர்களிற்கு நேரம் கிடைக்கும்.

இந்த முப்பத்தி ஐந்தும் தற்போது கைவிடப்பட்டுள்ள நிலையில் இப்பிரிவில் இருந்து வரும் விடயங்கள் உடனடிப்பாவனைக்குப் போகாது எதிர்காலத்திற்கான முதலீடு ஆவதில் எந்தக் கெடுதலும் இல்லை. தற்போது முதலீடுகள் இல்லை என நான் கூற வரவில்லை, முதலீடுகள் விரிவாக்கப்படுவதற்கும் பன்முகப் படுத்தப்படுவதற்கும் இவ்வழி உதவும் என்பதே எனது கருத்து.

இனி மற்றைய சமூகங்கள் பற்றிப் பார்த்தால், தாயகத்தில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் ஈடுபடுவதற்கு, தற்போதைய சூழ்நிலையில் நம்மவர்களின் என்.ஜீ.ஓ களிற்கு மேற்கின் அரசுகள் உதவித்தொகை வழங்க மாட்டா. வருமான வரிவிலக்கு உடைய நிறுவனங்களாக நம்மவர் நிறுவனங்களை ஏற்படுத்துதல் கூடக் கனடா போன்ற நாடுகளில் சாத்தியமற்று உள்ளது. நிதிகள் புலிகளிற்கு மாற்றப்படுகின்றன என்ற சிங்களத்தின் ஓயாத புலம்பலே இதற்கான காரணம். ஏனினும், உள்ளுர இந்த நாடுகளிலோ அல்லது தாயகம் தவிர்ந்த பிற இடங்களிலோ செயற்படுவதற்கு நம்மவரின் அமைப்புக்களிற்கும், அவை உரிய வகையில் அமைக்கப்பட்டால், அரச உதவித் தொகை கிட்டும்.

எனினும் இன்றை சூழ்நிலையில் என்.ஜீ.ஓ க்கள் என்பது அரசிற்கு மாற்றீடான இயக்கம் என்ற அடிப்படையிலும் புத்திஜீவிகளின் சரணாலயம் என்ற ரீதியிலும் தான் செயற்படுவதனால், என்.ஜீ.ஓ க்களை உருவாக்கும் நம்மவர்கள் மற்றைய சமூகத்தினர் மதிக்கும், அங்கீகரிக்கும் வகையான தராதரத்தினை உடைய Resume உடையவர்களாக இருத்தல் வேண்டும். வெறும் பி.எச்.டி சான்றிதள் ஒருவரைத் தராதரமுடையவராக மாற்றி விடாது. மேற்கின் சமூகத்தில் வெறும் சான்றிதள் மட்டும் என்றுமே மதிக்கப்படுவதில்லை. ஓருவர் இச்சமூகத்தில் புத்தி ஜீவியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமாயின் அவர் தனது கருதுகோழ்கள், கருத்துக்கள், நிறுவல்கள், கண்டுபிடிப்புக்கள் முதலியவற்றை ஏற்றுக்கொள்ளப்படும் வடிவத்தில் பிரசுரித்த பிரசுரித்துக் கொண்டிருப்பவாராக இருத்தல் வேண்டும். Publish or Perish என்பது தான் புத்திஜீவிகளிற்கான பரிந்துரையாக இந்நாடுகளில் உள்ளது. அத்தோடு எந்தெந்த அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளோடு (பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், முதலியன) இணைந்து ஒருவர் தொழிற்பட்டிருக்கின்றார் என்பதும் அங்கு அவரது பங்கு எவ்வாறு இருந்திருக்கின்றது என்புது முதலியனவும் இங்கு கருத்தில் எடுக்கப்படும். இத்தகைய தராதரமுடையவர்கள் நம் மத்தியிலும் உள்ளனர் என்பதனால் இவர்களில் தாயகத்தின் பால் அக்கறை உடையவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் இந்த எ.ஜீ.ஓ பொறுப்பு வழங்கப்பட வேண்டும்.

உலகளாவிய ரீதியில், என்.ஜி.ஓ க்கள் அரசுகளிடமிருந்தும் மக்களிடமிருந்தும் பெறுகின்ற நிதியில் பெரும்பங்கு நடைமுறைச் செலவுகள் என்ற போர்வையில் என்.ஜி.ஓ க்களால் கையாடப்படுவது தான் உண்மை. சில நிறுவனங்கள் எண்பது வீதம் வரையான நிதியை நடைமுறைச் செலவு என்று காட்டிக் கையகப்படுத்திக் கொள்கின்றார்கள். இன்று இது இச்சமூகங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட, நாகரிகமான செயலாகக் கூட மாறிவிட்டது. இந்நிலையில் நமது என.ஜீ.ஓ க்களும் இத்தகைய பெருந்தொகை நிதிகளை சுயநலத்திற்காக அல்லாது பெர்துநலத்திற்காகக் கையகப்படுத்தி அவற்றை உரிய இடத்தில் சேர்ப்பிக்கலாம்.

இனி அரசியல் என்று வரும் போது, நம்மவர்கள் மாடாய் முறிந்து குறிப்பிட்ட ஒரு வேட்பாளரிற்கு எமது மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுத்து அவரின் ஆதரவைப் பெறுவதற்கே பொதுவாக முயல்கிறார்கள். இல்லாது போனால் நம்மவர் ஒருவரை வேட்பாளர் ஆக்க முயல்கிறார்கள். காலாதிகாலமாக நம்மவர்களின் செயற்பாடு இந்த வகையில் தான் அமைந்து வந்துள்ளதோடு இது வடலி வளர்த்துக் கள்ளுக் குடிப்பதற்கு ஒப்பானது, எனினும் துரதிஸ்ரமான வகையில் பட வடவலிகள் வளராதே போய்விடுகின்றன.. ஆனால், இந்தியப் படங்களில் வருவதைப் போல இங்குள்ள அரசியலிலும் பணம் சேர்க்க வழிகள் உள்ளன. இதை எமது பொதுநோக்குச் செயற்பாட்டாளர்கள் கருத்திலெடுப்பதில்லை.

உதாரணமாக, தற்சயமயம் கனடாவின் ஒன்ராறியோ மாநில அரசு தொடர்பில் ஒரு பரபரப்பான விடயம் பேசப்படுகின்றது. அதாவது, தற்போது ஒன்ராறியோ மாநிலத்தின் அரசாக விளங்கும் லிபரல் அரசானது ஏறத் தாள 30 மில்லியன் டொலர்கள் அரச நிதியை உதவிப் பணமாக சில சமூக அமைப்புக்களிற்கு கொடுத்தமை தொடர்பான ஒளுங்கீனங்கள் தொடர்பிலேயே இந்தப் பரபரப்பு ஏற்படுதப்பட்டுள்ளது. இந்த முப்பது மில்லியன் தொகையானது உதவிப்பணமாவதற்குத் தான் ஒதுக்கப்பட்டது அதில் ஒரு வில்லங்கமும் இல்லை, ஆனால் ஆரிற்கு அது வழங்கப்பட்டது எவ்வாறு வழங்கப்பட்டது என்பதில் தான் வில்லங்கம்.

எதிர்க்கட்சியினர் கூறுகின்றார்கள் வாக்கு வங்கியைக் குறிவைத்து, குறித்த ஒரு சீன இன சமூக அமைப்பிற்கு அரசு இந்தத் தொகையில் ஒரு பங்கை லஞ்சமாகக் கொடுத்து விட்டது என்று. மேலும், இந்த 30 மில்லியன் உதவித் தொகை இருந்தமை பற்றிப் பரவலாக அறிவிக்கப்படவுமில்லை அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு பரிசீலிக்கப்படவுமில்லை வெறுமனே சில ஆதரவு அமைப்புக்களிற்கு அரசு இத்தொகையைப் பகிர்நதளித்து விட்டது என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றார்கள். ஆனால் என்ன தான் எதிர்க்கட்சியினர் கத்தினாலும் இது இப்போ தான் முதன் முறையாக நடக்கின்றது என்றுமில்லை இனிமேல் நடக்கப் போவதில்லை என்றும் இல்லை. மேலும் குறித்த உதவித் தொகை பெற்ற சீன அமைப்பு எந்தக் காரணம் கொண்டும் அத்தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டி வரப்போவதும் இல்லை, ஏனெனில் அந்த நிதியைப் பெறக் கூடிய தகுதிகளை அந்தச் சீன அமைப்பு உடனடியாகத் தனக்கு ஏற்படுத்திக் கொள்ளும். நிலமை இப்படி இருக்க, நம்மவர்களோ அரசியல் வாதிக்கு லஞ்சம் கொடுக்கும் பாங்கில் தான் இன்னமும் சிந்திக்கின்றோம். அரசியல் வாதியிடம் இருந்து எடுப்பது எம்மில் அறவே இல்லை.

அடுத்து, உப்புச் சப்பில்லாத பல ஆராய்ச்சிகள் கூட மேற்குலகில் அவற்றிற்குரிய அரச உதவித் தொகையையும் இதர நிதியங்களின் உதவித் தொகையையும் பெற்ற வண்ணம் உள்ளன. அரசு அல்லாத நிதியங்கள் தாங்கள் விரும்புகின்ற கருத்தூட்டத்தை ஒரு ஆராய்ச்சி மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்றால் மட்டும் தான் நிதி வழங்குவார்கள். ஆனால் அரச நிதியானது நிதியங்களின் நிதியை விட இலகுவில் பெறக் கூடியது. எமது சமூகம் தொடர்பான ஆராய்ச்சிகள் கூட எண்ணற்று மேற்கொள்ளப்படலாம். கனடாவைப் பொறுத்த வரை, தற்போது எமது சமூகத்தினையும் சேர்த்து ஆராய்ச்சி செய்வாதாக பிற சமூக அமைப்புக்கள் இந்நிதிகளைப் பெறுகின்றமை தான் நடைமுறையில் உள்ளது. இதுவே தாயக பாசமுடைய நம்மவர்களால் செய்யப்படும் போது உரிய நிதி உரிய இடத்திற்குப் போய்ச் சேரும். ஆனால் மீண்டும் இங்கு அவசியம், ஆராய்ச்சி செய்பவரது தராதரமான Resume.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பல மேற்கத்தேய நாடுகளிற்குப் பொதுவானவை என்பதனால் மேற்படி நடவடிக்கை உலகளாவிய பங்களிப்பை எமது தேசத்திற்கு அதிகரிக்கும், முக்கியமாகத் தக்க வைக்கும் என்பது எனது கருத்து.

அதிகம்பேர் கருத்துக்களை முன்வைக்கவுள்ளதனால் எனது கருத்துக்களை இத்தோடு நிறுத்திக் கொள்கின்றேன்.

மூலம்: http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=299450 , நன்றி! :unsure:

  • தொடங்கியவர்

ஏழு பேர் இதுவரை கருத்துக்கணிப்பில் பங்குபற்றியுள்ளீர்கள்! உங்களுக்கு நன்றி! மற்றவர்களும் உங்கள் தெரிவுகளை விரைவில் தேர்வு செய்யவும். நன்றி! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் கள்ள வாக்கு போட ஏலுமோ அது தான் நம்மளுக்கு பழகி போச்சு குறைந்தது எத்தனி கள்ள வாக்கு போடலாம்,ஏனென்றா நான் ஒரு ஜனநாயகவாதி.

:P

போட்டியாளர்கள் அனைவரும் சொன்ன தெரிவுகளில் இருந்து,நாம் வாழும் நாடுகளில் நிதி சேகரிக்க சாதகமான வழிமுறைகள் என எனக்குத்தெரிந்தவரை,

1, ஒவ்வொரு ஊரிலும் தாயகபற்று கொண்டவர்கள் குழுக்களாக சேர்ந்து பகுதி நேர வேலைகளை செய்து அதில் வரும் பணத்தை தாயகத்திற்கு அனுப்பலாம்.

2கடைகளுக்கு உண்டியல் வழங்கி நம்மவர் துயரங்களை அழகாக அச்சிட்டு வைப்பதன் மூலம் கடைகளுக்கு வருபவர்கள் எமது பிரச்சனைகளை அறியக்கூடியதாகவும் நிதி சேகரிக்க வசதியாகவும் இருக்கும்.

3,தொலைபேசி மூலம் வேறு நாட்டவரோடு தொடர்பு கொண்டு தாயக வறுமை நிலையை கூறி அன்பளிப்பு கேட்கலாம். தொட்ர்பு கொள்ள முன் உதவிக்கரம் நீட்டில் அஞ்சல் அனுப்ப வேண்டும்.

4,வருடத்திற்க்கு 2, 3 தடவைகள் மின்னஞ்சல் மூலம் தாயக நிலமைகளை எடுத்து கூறி அன்பளிப்பு கேட்டல். மின் அஞ்சல்களை போர்வோர்ட் செய்யும்படியும் கூறல். இதை பள்ளியில், பல்கலைக்கழகங்களில் கூடுதலாக செய்யலாம்.

5,பண்டிகை காலங்களில் (கிறிஸ்மஸ், அன்னையர் தினம்) உறவுகளின் அன்புப்பரிசாக வறுமையில் வாடும் மக்களுக்கு நிதி உதவி கோரி சனத்திரளான இடங்களில் உண்டியல் குலுக்குதல். உண்டியல் குலுக்கும் போது அடையாளத்திற்கு இலச்சனை போட்ட ரி சேர்ட், பச் அணியலாம்.வேறு இலச்சனையாக தாயக நிலைகளை தெரிவிக்கும் விபரங்களை பொறிக்கலாம்.

6,ஏனைய சர்வதேச சேவை நிறுவனங்களுடன் இணைப்பை ஏற்படுத்துதல். அவர்களின் செயற்பாடுகளில் TRO பங்குகொள்ளலாம். அதேபோல இலங்கையில் சிக்கலான வேலைத்திட்டங்களை இந்த நிறுவனங்கள் மூலமாக நிறைவேற்றலாம்.

7,வருடத்தில் இரண்டு மூன்று தடவைகள் பழைய பொருட்கள் விற்கும் மார்க்கற் ஒவ்வொரு கிராமங்களிலும், நகரங்களிலும் இடம்பெறும். அவ் வேளையில் இளையோர்கள் இணைந்து தமிழர்களிடம் இருக்கும் பாவனைக்கு தேவைப்படாத பழைய பொருட்களை சேகரித்து, விற்று நிதி சேகரிக்கலாம்.

8,எமது தாயகம் சம்பந்தமாக, அங்கு வாழும் மக்களின் கஸ்டங்களை அவர்களின் வேதனைகளை அந்தந்த நாட்டு மொழிகளிலும் ஆங்கிலத்திலும் தெளிவாகவும் எளிமையாகவும் எழுதி அவற்றுடன் புகைப்படங்களையும் இணைத்து சிறிய புத்தகங்கள் வெளியிடலாம். புத்தகத்தின் உள்முகப்பில் ஒரு சிறு விண்ணப்பம் இட்டுக்கொள்ளலாம். "விரும்பியவர்கள் இந்த ஈழத்து உறவுகளின் துயர் துடைக்க உங்களால் முடிந்த நிதி உதவியை கீழ்க்கண்ட முகவரியில் நேராகவோ அல்லது அவர்களின் வங்கி இலக்கத்திற்கோ வழங்கிக்கொள்ளலாம்! "என்று குறிப்பிட்டு அந்தந்த நாடுகளில் இருக்கும் தமிழர் புனர்வாழ்வுக்கழகங்களின் விலாசங்களையும் அவர்களின் வங்கி இலக்கங்களையும் குறிப்பிட்டு வைக்கலாம். புத்தகம் அச்சிடும் செலவை கணக்கிட்டு அதனை குறைந்த விலைக்கோ அல்லது இலவசமாகவோ வழங்கலாம்.

9,மாதம் மாதம் குறிப்பிட்ட பணத்தை மக்களின் வங்கியில் இருந்து பெறும் முறை - தாயகத்தில் இருக்கும் பெற்றோர் அற்ற அநாதைப் பிள்ளைகளைப் பாதுகாக்க - ஒரு பிள்ளையை பொறுப்பேற்க - மாதாமாதம் பணத்தினைப் பெறலாம். இதனை தனிப்பட்டவர்கள் மூலமாகவும், வேறு அமைப்புக்கள் மூலமும் பெறலாம்.

10,இது பற்றி விழிப்புணர்வினை மக்களுக்கு ஊட்டுவது- தொலைக்காட்சி, வானொலிகள் மூலமாக சேகரிக்கலாம்.

  • தொடங்கியவர்

கலைநேசன் நன்றி! ...

இந்தப் பகுதிக்குரிய கருத்துக்கணிப்பு ஜூலை 20, 2007 உடன் மூடப்படும். உங்கள் தெரிவை அதற்கு முன் விரைவில் இடுங்கள்.. நன்றி! :)

மேலே பலர் மிகவும் நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள். நான் சில விடயங்களை குறிப்பிடவிரும்புகிறேன். இது நேரடியாக தாயக மக்களுக்கான நிதி சேகரிப்பாக அல்லாமல் அதற்கான நியாயங்களை வெளிப்படுத்துவதற்கான அடிப்படை தளத்தை உருவாக்குவது பற்றியாகும்.

இன்று புலத்தில் தாயகத்துக்கு உதவி செய்யும் அனைவரும் தாயகம் தொடர்பான பிணைப்பை மட்டுமே பெரிதாக கருதி வேலை செய்கிறார்கள். அது ஒரு வகையில் பாராட்டபட வேண்டிய விடயமாக இருக்கின்ற போதும் இன்னொரு விதத்தில் நாங்கள் வேறுப்பட்டவர்கள் என்ற பிரமையை அந்நாட்டவருக்கு ஏற்படுத்தும். எனவே நாம் இருக்கின்ற நாடுகளில் அந்த நாடுகளில் சில பொதுப்பணிகளை முன்னெடுக்கவேண்டும். உதாரணமாக தாயகத்தில் சிறப்பான தினங்களில் மரம் நட்டு சமூக பணிகளை செய்வதை போல தொண்டர்களாக அவ்வாறான பணிகளை நினைவுதினங்களில் நாம் இருக்கின்ற நாடுகளில் செய்யலாம். அது எவ்வாறான பணிகள் என்பதை அந்தந்த நாட்டு தமிழர் அமைப்புக்ள் தெரிவு செய்யலாம்.

இதன்மூலம் அந்தந்த நாட்டவரின் மனதில் ஒரு மாற்றதை ஏற்படுத்தலாம். இவ்வாறு செய்த பணிகளை எடுத்துக்காட்டி எமது பிரச்சனைகளை சொல்வதன் மூலம் அவர்களும் எமக்கு உதவுவார்கள்.

  • தொடங்கியவர்

விசால், உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!

புத்தன் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி! உங்களுக்கு மல்டி பேர்சனாலிட்டி இருக்குமாய் இருந்தால் வேறு ஐடிகளில் வோட்டு போடுவதில் பிரச்சனை இல்லை..

விரைவில் அனைவரும் கருத்துக்கணிப்பில் உங்கள் தெரிவுகளை இடுங்கள்...

நன்றி! :o

  • தொடங்கியவர்

விரைவில் அனைவரும் கருத்துக்கணிப்பில் உங்கள் தெரிவுகளை இடுங்கள்...

இந்தப் பகுதிக்குரிய கருத்துக்கணிப்பு ஜூலை 20, 2007 உடன் மூடப்படும்.

நன்றி! :huh:

  • தொடங்கியவர்

எங்கே போட்டிக்கு நீங்கள் தரும் உற்சாகம் போதவில்லை? Come on Guys..

விரைவில் அனைவரும் கருத்துக்கணிப்பில் உங்கள் தெரிவுகளை இடுங்கள்...

இந்தப் பகுதிக்குரிய கருத்துக்கணிப்பு ஜூலை 20, 2007 உடன் மூடப்படும்.

நன்றி! :)

  • தொடங்கியவர்

மக்கள், விரைவில் அனைவரும் கருத்துக்கணிப்பில் உங்கள் தெரிவுகளை இடுங்கள்...

இந்தப் பகுதிக்குரிய கருத்துக்கணிப்பு இன்னும் நான்கு நாட்களில் - ஜூலை 20, 2007 உடன் மூடப்படும்.

நன்றி! :rolleyes:

  • தொடங்கியவர்

மக்கள்,

விரைவில் அனைவரும் கருத்துக்கணிப்பில் உங்கள் தெரிவுகளை இடுங்கள்...

இந்தப் பகுதிக்குரிய கருத்துக்கணிப்பு இன்னும் இரண்டு நாட்களில் - ஜூலை 20, 2007 உடன் மூடப்படும்.

நன்றி! :D

  • தொடங்கியவர்

மக்கள்,

விரைவில் அனைவரும் போட்டி பகுதி 01 கருத்துக்கணிப்பில் உங்கள் தெரிவுகளை இடுங்கள்...

இந்தப் பகுதிக்குரிய கருத்துக்கணிப்பு இன்றுடன் - ஜூலை 20, 2007 - இன்று மூடப்படும்.

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரே எந்த மக்களை விழித்து அழைத்துள்ளீர்கள் முஸ்லீம் மக்களிற்காக குரல் கொடுக்கும் தமிழ் மக்களையா,முஸ்லீம் தமிழ் மக்களிற்காக குரல் கொடுக்கும் சிங்கள மக்களையா,தமிழருக்காக குரல் கொடுக்கும் முஸ்லீம் மக்களையா அல்லது இந்தியனாக நடித்து கொண்டு இருக்கும் ஈழத்து தமிழனையா,யாரை ஜயா கூப்பிடுறீங்க...நிச்சயமா உங்கள் அழைப்பை தமிழன் ஏற்கவில்லை போல.

:unsure:

  • தொடங்கியவர்

சிறு மாற்றம்:

மக்கள்,

விரைவில் அனைவரும் போட்டி பகுதி 01 கருத்துக்கணிப்பில் உங்கள் தெரிவுகளை இடுங்கள்...

இந்தப் பகுதிக்குரிய கருத்துக்கணிப்பு நாளையுடன் - ஜூலை 21, 2007 - நாளை மூடப்படும்.

புத்தன், யாழ் கள உறவுகளைதான் மக்கள் என்று அழைத்தேன்.

நன்றி!

  • தொடங்கியவர்

மக்கள்,

அனைவரும் போட்டி பகுதி 01 கருத்துக்கணிப்பில் உங்கள் தெரிவுகளை இடுங்கள்...

இந்தப் பகுதிக்குரிய கருத்துக்கணிப்பு இன்றுடன் மூடப்படுகின்றது.

நன்றி!

  • தொடங்கியவர்

01xh6.png

போட்டி பகுதி 01 கருத்துக்கணிப்பு நிறைவடைந்துள்ளது. போட்டி பகுதி 01 கருத்துக்கணிப்பின் முடிவுகளை மேலுள்ள படத்தில் காணலாம். கருத்துகணிப்பில் பங்குபற்றி போட்டிக்கு உங்கள் ஆதரவை தந்த 21 கருத்துகள உறவுகளிற்கும் மிக்க நன்றி!

போட்டி பகுதி 02 இற்கான கருத்துக்கணிப்பு விரைவில் ஆரம்பமாகும்.

நன்றி! வணக்கம்!

இங்கு முன்மொழியப்படும் வழிமுறைகள் புலம்பெயர்ந்த நாடுகளில் நடைமுறைக்கு வருவது சாத்தியாமா?

அல்லது வெறும் கருத்துக்கணிப்பா? கலைஞன்..............

  • தொடங்கியவர்

இங்கு முன்மொழியப்படும் வழிமுறைகள் யாழ் கள உறவுகளின் சிந்தனைகள். இவை புலம்பெயர்ந்த நாடுகளில் நடைமுறைக்கு வருவது சாத்தியாமா அல்லது இல்லையா என்பது யாழ் கள வாசகர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

கருத்துக்கணிப்பை பொறுத்தவரையில் போட்டி என்ற அடிப்படையில் இது வைக்கப்படுகின்றது. அதாவது வெற்றியாளர் என ஒருவரை தேர்வு செய்யவேண்டி இருக்கும் காரணத்தினால். ஆனால், போட்டியாளர்கள் அனைவரது சிந்தனைகளிலும் பல பயனுள்ள ஏராளமான தகவல்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும்.

நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞன் ஒரு போட்டியாளரின் சில சிந்த்னைகள்னடைமுறைக்கு சாத்தியமானதாகவும் சில நடைமுறைக்கு சாத்தியமற்றதாக இருப்பின் எங்கு அவற்றை பற்றி விவாதிக்கலாம்???

  • தொடங்கியவர்

அவற்றை பற்றி இங்கே விவாதிக்கலாம்.. புனர்வாழ்வு நிதி சேகரிப்பு சம்மந்தமாக உங்கள் சிந்தனைகளையும் இங்கு கூறலாம். நன்றி!

போட்டியாளர்கள் தம்மால் முடியுமான அளவு முயற்சி செய்து உள்ளார்கள். ஆனால், அவர்களின் பதில்கள் perfect - துல்லியமானவை என்று கூறுவதற்கில்லை.

இங்கு participation - போட்டியில் கலந்து ஆதரவு தருவதே முக்கியவிடயம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் யாரையும் பிழை கூறவில்லை. எனக்கு சில ஆலோசனைகள் நடைமுறைக்கு சாத்தியமாக படவில்லை அது தான் மற்றவர்களுடன் கலந்தாலோசிக்கலாம் என்டு தான் கேட்டேன்.

யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை :rolleyes:

  • தொடங்கியவர்

தவிர்க்க முடிதாத சில காரணங்களினால் போட்டியை தொடர்ந்து கொண்டு நடாத்துவதில் சில சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. தடங்கலுக்கு வருந்துகின்றோம். போட்டி விரைவில் தொடரும்... நன்றி! :Dஇன்னிசை... பிரச்சனை இல்லை... ரொம்ப பீல் பண்ண வேணாம்... நன்றி! :D

  • தொடங்கியவர்

தமிழர் புனர்வாழ்வு நிதிசேகரிப்பு ஆய்வுப்போட்டி பகுதி 02 இற்கான கருத்துக்கணிப்பு ஆரம்பித்துள்ளது. போட்டியின் வெற்றியாளரை கருத்துக்கணிப்பில் தெரிவு செய்யுமாறு கள உறவுகளை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். பகுதி 02 இற்குரிய விடைகள் நீல வர்ணத்தில் எழுதப்பட்டுள்ளது. போட்டி பகுதி 01 இல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஆறு பேர் மாத்திரமே பகுதி 02 இல் கலந்துகொள்கின்றார்கள். போட்டியில் தொடர்ந்து ஆர்வத்துடன் கலந்துகொள்ளும் இவர்களிற்கு மிக்க நன்றி! :o

Edited by கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.