Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா மறைக்க முயன்ற கொரோனா பரவல் ரகசியத்தை அம்பலப்படுத்திய இணையக் குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனா மறைக்க முயன்ற கொரோனா பரவல் ரகசியத்தை அம்பலப்படுத்திய இணையக் குழு... அதிர்ச்சி உண்மைகள்!

China

China

கோவிட்-19 குறித்து சிறு தகவலையும் விடாமல் சேகரித்து, வரிசைப்படுத்தி, பொதுவெளியில் கிடைக்கும் ஆதாரங்களை தொகுத்து, வூஹான் பரிசோதனை கூடத்திற்கு எதிரான சூழ்நிலை ஆதாரங்களாக (Circumstantial Evidence) ஒன்றிணைத்து ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்கள்.

உலகம் தட்டை என்றுதான் நீண்ட நாள்களாக நம்பிக் கொண்டிருந்தது உலகம். வௌவால்களுக்கு கண் தெரியாது, ஒரே இடத்தில இருமுறை மின்னல் தாக்காது என சமகாலத்தின் அறிவியல் அறிஞர்கள் உண்மை என நம்பிக் கொண்டிருந்த பல விஷயங்கள் எதிர்கால கண்டுபிடிப்புகளால் தவிடு பொடியாகி இருக்கின்றன. அப்படித்தான் இன்று உலகின் மிக முக்கிய அறிவியலாளர்களின் நம்பிக்கை ஒன்றும் மிக சூடான விவாதப்பொருளாகி இருக்கிறது. உலகையே புரட்டிக் கொண்டிருக்கும் கோவிட்-19 கொரோனா வைரஸின் பிறப்பிடம் எது என்பது தான் அந்த கேள்வி?

சீனாவில் இருக்கும் வைரஸ் ஆராய்ச்சி நிறுவனமான 'வூஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி'யில் தான் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியானபோது, இதை ஒரு கட்டுக்கதை என பிரபல ஊடகங்களும், பல அறிவியலாளர்களும் மறுத்தனர்.

வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி
 
வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி asahi.com

ஆனால், சமீபத்தில் இந்த காட்சி மாறியது. வூஹான் பரிசோதனை கூடத்தில் நடந்த ஆய்வுகளை பற்றிய தகவல்கள் தெளிவாக சில பத்திரிகையாளர்கள், ஆராய்ச்சியாளர்களால் முன் வைக்கப்பட்டது. சீன ராணுவம், ஒரு உயிரியல் போரை தொடங்க திட்டமிட்டதாக சில ஆவணங்களும் வெளியாகின. கோவிட்-19 வைரஸ் இயற்கையாக உருவானது என நிரூபிக்க ஒரு சிறு சான்று கூட கடந்த ஒன்றரை ஆண்டில் மருத்துவ உலகிற்கு கிடைக்கவில்லை.

சார்ஸ், மெர்ஸ் போன்ற இதேமாதிரியான வைரஸ்களின் பரவலை பற்றி சில மாதங்களில் கண்டறியப்பட்டது. ஆனால், அதே வகை கோவிட் 19 வைரஸ் பற்றி எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி அதை கட்டுப்படுத்தவும் வழி தென்படவில்லை. உலகம் முழுக்க பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். ஒவ்வொரு உருமாற்றத்திலும் மேலும் வலுப்பெற்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பிடென் இது குறித்து உளவுத்துறையின் முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இப்படி, மீண்டும் உலக ஊடகங்கள், அறிவியலாளர்கள், பன்னாட்டு தேசியங்கள், மக்கள் என எல்லோரும் கோவிட் 19 கொரோனா வைரஸ் பரிசோதனை கூடத்தில் உருவாகியிருக்கலாம் என்ற கோணத்தில் யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதை உலகளவில் சாத்தியப்படுத்தியிருக்கிறது ஒரு குழு. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் இருந்து சில தனிநபர்கள் ஒன்றிணைந்து DRASTIC (Decentralized Radical Autonomous Search Team Investigating COVID-19) என்ற ஒரு குழுவை அமைத்திருக்கிறார்கள். இவர்கள் பத்திரிகையாளர்களோ, மருத்துவர்களோ, உளவாளிகளோ அல்ல.

உண்மையை தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள, அதற்காக உழைப்பை செலுத்தத் தயாராக இருந்த பொதுமக்களில் சிலர், கோவிட்-19 குறித்து சிறு தகவலையும் விடாமல் சேகரித்து, வரிசைப்படுத்தி, பொதுவெளியில் கிடைக்கும் ஆதாரங்களை தொகுத்து, வூஹான் பரிசோதனை கூடத்திற்கு எதிரான சூழ்நிலை ஆதாரங்களாக (Circumstantial Evidence) ஒன்றிணைத்து ட்விட்டரில் பொதுவெளியில் தங்களின் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களின் இந்த முயற்சியே ஒட்டுமொத்த உலகத்தையும் இப்போது வூஹான் பரிசோதனை கூடத்தை நோக்கி திருப்பியிருக்கிறது.

The Seeker
 
The Seeker

இவர்களின் கண்டுபிடிப்புகள் வூஹான் லேப் தான் கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் என உறுதிபட தெரிவிக்கவில்லை. ஆனால் வூஹான் பரிசோதனை கூடத்தின் மேல் சந்தேகம் எழுப்பி, விசரணையை தொடங்குவதற்கான எல்லா ஆதாரங்களையும் அடுக்குகிறது.

இந்த குழுவில் நாம் கவனிக்க வேண்டிய முதல் நபர், The Seeker எனப் புனைபெயர் கொண்ட ஒரு இளைஞர். மேற்கு வங்காளத்தில் வசிக்கும் இந்த இளைஞர், ஓர் அறிவியல் ஆசிரியர். இந்த இளைஞரின் ட்விட்டர் பக்கத்தில் தன் கண்டுபிடிப்புகளை பட்டியலிடுகிறார். இந்த பெருந்தொற்றின் ஆரம்பத்தில் இவரின் பதிவுகள் ஊடகம் சொன்னதை நம்பி எழுதப்பட்டிருக்கிறது. விலங்கிலிருந்து தான் மனிதனுக்கு கோவிட் 19 பரவி இருக்கிறது என்பதை இவரும் நம்பியிருக்கிறார். ஆனால் அடுத்தடுத்த தகவல்கள் அவரது நம்பிக்கையை குலைக்க தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறார். இணையத்தில் கூகிளின் வெளிச்சம் பரவாத ஆழத்தில் டீப் வெப் தேடல்களில் கைதேர்ந்தவர் இந்த இளைஞர். அதை பயன்படுத்தி இந்த வைரஸ் பரவலின் மர்மத்தை பற்றி இவர் ஆராய்ந்திருக்கிறார்.

இந்த வைரஸ் பரவல் வூஹான் பரிசோதனை கூடத்தில் இருந்து பரவவில்லை என உறுதிபட ஒரு அறிவியலாளர் குழு பெருந்தொற்று காலத்தில் நீண்ட ஒரு கடிதம் எழுதி பத்திரிகையில் வெளியிட்டது. அந்தக் குழுவின் தலைமையில் இருந்து அந்தக் கடிதத்தை எழுதியவர் வூஹான் பரிசோதனைக் கூடத்துக்கு பெரும் நிதி வழங்கி கொண்டிருந்த பீட்டர் தசக். இவர் வைத்திருக்கும் நிறுவனத்தின் மூலம் அமெரிக்க அரசின் நிதி சீனாவுக்குப் போய்க் கொண்டிருந்தது. இந்தத் தகவல்கள் பின்னர் வெளியாகி அதிர்ச்சியளித்தன. இங்குதான் நமது இந்திய இளைஞர் The Seeker தன் தேடுதலை தொடங்கி இருக்கிறார்.

Novel Coronavirus SARS-CoV-2
 
Novel Coronavirus SARS-CoV-2 Photo: AP

கோவிட் 19 வைரஸிற்கு ஒத்த ஒரு வைரஸாக பார்க்கப்பட்ட SARS COV -2 வைரஸ் மற்றும் கோவிட் 19 உடன் நெருக்கமான ஒற்றுமைகள் உள்ள RaTG13 வைரஸ் பற்றி கொரோனா பரவுவதற்கு முன்னர் வூஹான் பரிசோதனை கூடத்தின் ஆராய்ச்சி ஆவணத்தில் வெளியிட்டிருந்தார், இந்த பரிசோதனை கூடத்தின் மூத்த விஞ்ஞானி ஷி. இந்த வைரஸ்களோடு வேறு வைரஸ்களை இணைத்து செய்த ஆராய்ச்சியின் முடிவாக தான் கோவிட் 19 வைரஸ் உருவாகியிருக்கும் என அப்போதே சந்தேகித்த கனடா நாட்டு ஆராய்ச்சியாளர் யூரி டேய்ஜின் தன் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இந்த கருத்துக்களை the Seeker தன்னுடைய ரெட்டிட் பக்கத்தில் வெளியிட, அடுத்த சில மணி நேரத்தில் அவருடைய ரெட்டிட் பக்கம் முற்றிலும் செயலிழக்கப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து தன் தேடுதலில் தீவிரம் காட்டியிருக்கிறார் . தன்னுடைய ஒத்த மனநிலை கொண்ட ஒரு குழுவை கண்டறிந்திருக்கிறார்.

இன்ஜினியர்கள், தொழில்முனைவோர், மைக்ரோ பயாலாஜிஸ்ட்டுகள், மருத்துவர்கள் அடங்கிய அந்த குழு Covid 19 வைரஸிற்கும் வூஹான் லேப் -ல் ஆராயப்பட்ட RaTG13 வைரஸிற்கும் நிச்சயம் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் வூஹான் பரிசோதனை கூடத்தில் இருந்து வெளியிடப்பட்ட ஆராய்ச்சி ஆவணங்களையும், இணையத்தில் இருக்கும் பிற சாட்சியங்களையும் ஒன்று சேர்த்து ஆராய தொடங்கியிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்னர் யுனான் மாகாணத்தில் ஒரு சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிலர் மர்மமான காய்ச்சலால் இறந்து போயினர். அவர்களுக்கு அங்கிருக்கும் வௌவால்களால் தொற்று பரவியிருக்கும் என ஆராய்ச்சி மேற்கொண்டவர் வூஹான் பரிசோதனை கூடத்தில் தலைமை விஞ்ஞானி ஷி. அவர் அங்கு கண்டறிந்த வைரஸ் பற்றிய தகவல்களில் இருந்த ஜெனெடிக் கோட், அதாவது மரபணு வடிவத்தின் சிறு பகுதி RaTG13 வைரஸின் மரபணுவை அச்சு அசல் ஒத்திருப்பதை இந்த குழு கண்டறிந்தது.

ஆனால், வூஹான் நிறுவனம் அந்த தொழிலாளர்கள் வேறு காரணங்களால் உயிரிழந்ததாக சொல்லி ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. RaTG13 வைரஸிற்கும் அந்த யுனான் சுரங்கத்தில் இருந்த வைரஸிற்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் சொல்லவே இல்லை. ஆனால், இந்த குழு அதை விடுவதாக இல்லை. அந்த தொழிலாளர்களின் தகவல்களை அறிய தேடுதலை தொடங்கினர். சீனாவின் ஆராய்ச்சி வெளியீடுகள் அடங்கிய பெரும் ஆவணங்களை (CNKI) இணையம் மூலம் கண்டறிந்து அதில் ஏதேனும் துப்பு கிடைக்குமா என அலச தொடங்கியிருக்கிறார்கள். இதில் முன்னிலை வகித்தது The Seeker. நீண்ட தேடுதல்களுக்கு பிறகு அவர் சில முக்கிய தடையங்களை கண்டறிந்திருக்கிறார்.

bats
 
bats

சீனாவின் குன்மிங் மெடிக்கல் யூனிவர்சிட்டி-யின் முதுகலை மாணவர் ஒருவர் சமர்ப்பித்த ஒரு ஆராய்ச்சி ஆவணம்தான் அது. 2013-ம் ஆண்டு வெளியான அந்த ஆராய்ச்சி ஆவணம், "The Analysis of 6 Patients with Severe Pneumonia Caused by Unknown Viruses" என்ற பெயரில், 2012-ல் யுனான் சுரங்கத்தில் திடீர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் நோய்த்தன்மை, அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஆகியவற்றை பற்றி விலாவாரியாக விளக்கியிருந்தது. அதில் அந்த தொழிலாளர்களுக்கு சார்ஸ் போன்றதொரு வைரஸ் தொற்று ஏற்பட்டதாக சொல்லப்பட்டிருந்தது. இந்த முடிவுகளை ஒத்து மற்றொரு மாணவரின் ஆராய்ச்சி கட்டுரையும் கண்டறியப்பட்டுள்ளது. அதில் வூஹான் பரிசோதனை கூடம் இந்த வைரஸ் குறித்து ஆராய்ச்சியில் இறங்கியிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தரவுகளை DRASTIC குழு வெளியிட்டதும் சீனா CNKI ஆவணங்களை பொதுமக்கள் பார்வையில் இருந்து மறைத்து பாதுகாத்திருக்கிறது. 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் அந்த சுரங்கத்தின் இடம் கண்டறியப்பட்டது. அங்கு செல்ல முற்பட்ட பல பத்திரிகையாளர்கள் சீன அரசால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த கண்டுபிடிப்புகள் இன்னும் பல ஆர்வமுள்ளவர்களை DRASTIC குழுவோடு இணைந்திருக்கிறது. ரிபேரா எனும் டேட்டா சயின்டிஸ்ட் அதில் ஒருவர். இந்தியாவின் seeker ஆவணங்களை இணையத்திலிருந்து அள்ளித்தர, ரிபேரா அதை முறைப்படுத்தி இருக்கிறார். இந்த குழு அடுத்து கண்டறிந்த உண்மை வூஹான் பரிசோதனை கூடத்தில் 2017 -2018ம் ஆண்டுகளில் RaTG13 வைரஸ் பற்றி முழு ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது. பீட்டர் தசக் வூஹானில் RaTG13 வைரஸ் பற்றி எந்த ஆராய்ச்சியும் நடைபெறவில்லை என பேட்டியளித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

வூஹான் பரிசோதனை கூடத்தின் ஆராய்ச்சி தரவுகள் எந்த ஆய்வு குழுவிடமும் பகிரப்படாமல் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், DRASTIC டீம் அதை வெளியுலகிற்கு காட்டியது. வூஹான் பரிசோதனை கூடத்தில் இருந்து அந்த யுனான் சுரங்கத்திற்கு எட்டு முறை ஆராய்ச்சியாளர்கள் சென்றதிலிருந்து, கோவிட்-19 வைரஸின் முன்னோடியான SARS-CoV-2 வைரஸ்-ன் ஒன்பது வகைகளை இங்கு கண்டறிந்தது வரை பல அதிர்ச்சி தகவல்கள் இந்த குழுவின் ஆராய்ச்சியின் மூலம் வெளிப்பட்டன.

Covid-19 Pandemic
 
Covid-19 Pandemic

மிகக் குறைவான பாதுகாப்பு அம்சங்களுடன், வூஹான் பரிசோதனை கூடம் செயல்பட்டதையும், சார்ஸ் போன்ற பிற வைரஸ்கள் மனிதனில் தொற்று ஏற்படுவதை கண்டறியும் ஆராய்ச்சிகள் அங்கே செய்யப்பட்டதையும் இவர்களின் தேடுதல்கள் உறுதி செய்தன. வூஹான் பரிசோதனை கூடம் மறைக்க முயன்ற நிறைய தகவல்களை அவர்களின் ஆராய்ச்சி ஆவணங்களைக் கொண்டே முறியடித்திருக்கிறது இந்த குழு. இவர்கள் கையகப்படுத்திய ஆவணங்களை எல்லாம் ஒரு இணையதளம் வாயிலாக ஒட்டுமொத்த உலகத்திற்கும் பகிர்ந்திருக்கிறார்கள். அந்த ஆவணங்களின் உதவியோடு, உலக ஊடகங்கள் பல உண்மைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கின்றன.

இந்த கோவிட் 19 கொரோனா வைரஸ் இயற்கையாக உருவாகவில்லை, ஒரு பரிசோதனை கூடத்தில் உருவானது என மேற்கண்ட கண்டுபிடிப்புகளின் தடையங்களை கொண்டு விளக்கப்பட்டிருக்கிறது. அந்த விளக்கக் கட்டுரையை படிக்க கீழ்கண்ட லிங்க்-ஐ பயன்படுத்தவும்.

எதற்கும் வளைந்து கொடுக்காமல் மௌனம் காக்கிறது சீனா. எக்காலத்திலும் சீனா அதன் ஆவணங்களையோ, அதன் ஆராய்ச்சியையோ வெளியுலகிற்கு சொல்லப்போவதில்லை. எந்தக் காலத்திலும் சீனா ஒரு நடுநிலையான விசாரணைக்கு சம்மதிக்க போவதில்லை. ஆனால் இணைய உலகம் எந்த ஒரு ரகசியத்தையும் விட்டு வைக்கப் போவதும் இல்லை. காலம் உண்மைகளைச் சொல்லும்!

 

 

https://www.vikatan.com/health/international/a-twitter-group-breaks-chinas-mask-and-unveils-truth-about-covid-19

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.