Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யானையை எதிர்த்த கோழி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புகார் நகரை விட்டு தன் காதல் மலையாளான கண்ணகியோடு நீண்ட நடை பயணமாக கோவலன் புறப்பட்டதை மான யாத்திரை என்று குறிப்பிடுவார் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.

தன்னுடைய பொருளே ஆனாலும் வறுமையிலிருந்து விடுபட ஒரு பொருளை விற்பது என்பது கௌரவமான செயல் அல்ல. அதுவும் சீரும் சிறப்போடும் தான் வாழ்ந்த புகார் நகரத்திலேயே அந்த கண்ணகியின் சிலம்லை விற்பது சாத்தியமே இல்லை என்பதால் மதுரைக்க போனான். இது தன்மானத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் செயலாகும்.

ஒரு நாளில் ஒரு காதத் தொலைவு தான் அந்த மண்மைகள் அறியா மென்பாதங்களால் நடக்க முடிந்த தொலைவு மதுரை மூதூருக்கும் புகாருக்கும் இடையில் முப்பது காதம். முதல் காதம் நடப்பதற்கு முன்பே கண்ணகி கேட்டது மதுரை எவ்வளவு தொலைவு என்று தான்.

உண்மையையும் மறைக்காமல் பொய்யையும் சொல்லாமல் அறைங்காதம் என்பாதன் கோவலன். ஐந,“தாறு காதம் என்று கண்ணகி எடுத்து கொண்டிருப்பள். ஆறைந்து முப்பது என்றா கணக்கிட்டிருப்பாள்? நல்லவேளையாக முதல் காதத் தொலைவுக் குள்ளேயே கவுந்தி ஐயையை சந்தித்து விடுகிறார்கள். பல்ல துணை என்று ஐயையை அழைத்துக்கொண்டு நடக்கிறான் கோவலன்.குகனொடும் ஐவரானோம் என்பது போஙல், இருவர் ஐயையொடு மூவராயினர். இராமபிரானுக்கும் சீதாதேவிக்கும் இளவல் இலக்குமணன் வழித்துணையாக நடந்தது போல் கவுநப்தி ஐயை இவர்களுக்கு அருமையான வழித்துணையாக வாய்த்தார்.

கதிரவன் மறையும் வரை ஓய்வெடுத்து இரவில் நடைபயணம். திருஅரங்கத்து மூங்கில் சோலை சாரணர்களை தரிசித்து விட்டு காவிரியை கடந்து தென்கரைக்கு வரவேண்டும்.

தென்கரை நகரம் தான் உறையூர். இன்றைக்கு ஒரு நகராட்சி தொகுதி அளவுக்கு குறுகிவிட்ட உறையூர். மிகவும் பரந்து விரிந்து சோழ நாட்டின் தலைநகரம்.

ஊர் எனப்படுவது உறையூர் என்று புலவர் பெருமக்கள் இனை சிறப்பித்திருக்கிறார்கள்.

திருத்தொண்டர் புராணத்தில் இப்படி அதன் பெருமை பேசப்படுகிறது.

.... தமிழ்ச் சோழர்
வளநாட்டு மாமூதூர்
உலகில் வளர் அணிக்கெல்லாம்
உள்ளுரை ஊராம் உறையூர்

இத்தலத்துக்கு கோழியூர் என்றும் பெயருண்டு. கலிங்கத்துப்பரணியில் செயங்கொண்டார் கோழிப்பெருமை பாடுவார். போர் இல்லாத அமைதியான காலங்களில் இந்த சோழன் தலைநகரில் மல்லர்களில் மற்போர் நிகழும். புலவர்கள் சொற்போர் புரிவார்கள். யானைகள் கடும்போர் புரியும். கோழிச்சண்டையும் நடக்குமாம். இந்த காட்சிகளில் மகிழந்திருந்த சோழ மன்னர் கண்ணெதிரே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. மத வாரணம் ஆகிய யானையை சிறை வாரணம் ஆன கோழி எதிர்த்து வென்றது. இதனால் உறையூர் கோழியூர் எனப்பட்டது.

இந்த கோழியகத்தில் சோழன் பெருங்கிள்ளி, எத்திறத்தானும் வரம் தரும் இவள் ஒரு பத்தினி கடவுளாகும். எனப் பத்தினிக்கோட்டம் ஒன்றையும் அமைத்து நாள்தோறும் விழா எடுத்தான் என்று சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

சங்க காலத்தில் சோழ நாட்டின் தலைநகரமாக உறையூர் விளங்கியது. வரலாற்று காலத்தில் கூற்றம் என்னும் ஆட்சி வட்டாரத்தின் தலைமையிடமாக விளங்கியது. இந்த ஆட்சி வட்டத்துக்குள் நாவலூர் கொடியாலத்தூர் பராய்த்துரை, திருவடக்குடி, குளித்தலை என்று இன்று வழங்கப்படுகிற குளிர்தண்தலை உட்பட அடங்கியிருந்திருக்கின்றன. உறையூரின் எல்லை என்பதாக தமிழறிஞர் சீ.கோவிந்தராசனார் குறிப்பிடுவது வடக்கே காவிரி, தெற்கே உய்யக்கொண்டான். கிழக்கே சிராப்பள்ளிக்குன்றம், மேற்கே குளிர் தண்தலை.

சிலப்பதிக்காரம் நிகழ்ந்திருக்கக்கூடிய இரண்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் விநாயகர் வழிபாடு நடைமுறைக்கு வந்திருக்க வில்லை. சங்க இலக்கியம் செழித்த காலம் இது. சேயோனாகிய முருகன், மாயோனாகிய திருமால், இந்திரன், மழைக்கடவுளான வருணன், கொற்றவை என்னும் காளி, முக்கண்ணாகிய சிவன் இவர்களே வழிபடப்பட்டார்கள். கி.பி. எட்டாம் நூற்றாண்டு தொடைக்க பகுதியிலேயே கோயில்களில் பிள்ளையார் திருமேனிகள் இடம்பெற்றுள்ளன என்றும், சம்பந்தர், அப்பர் காலத்துக்கு பிறகு நூறு ஆண்டுகள் கடந்த பிறகே வட தமிழக கோவில்களில் இடம் பெறத் தொடங்கின என்றும் மு.நளினி, இரா.கலைக்கோவன் நூலில் காணப்படுகிறது. தென் தமிழ்நாட்டு பிள்ளையார்பட்டி குடை வரையில் உள்ள நிநாயகரே காலத்தால் முற்பட்டவர் என்றும், இது ஆறு , ஏழாம் நூற்றாண்டு படைப்பாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். ஆக உறையூருக்கு கிழக்கில் இருந்த நெடும் பெரும் குன்றம் ஓர் அடையாள எல்லையாகத்தான் இருந்திருக்கிறது. கண்ணகி, கோவலன் நடந்த நாட்களில் அது வெறும் குன்றம் தான்.

ஆக, இன்றைய திருச்சிராப்பள்ளி நகரத்தின் அடையாளமாக விளங்கும் மலைக்கோட்டையும், தாயுமானவர் ஆலயம், உச்சிப்பிள்ளையார் கோயில், பல்லவர் காலத்து மகிஷாசுரமர்த்தனி சிற்பக்கூடம் எல்லாம் நூற்றாண்டுக்கு பிறக ஏற்பட்டவை. சமணர் படுக்கைகள் மட்டும் சிலப்பதிகார காலத்தில் ஏற்பட்டிருக்கலாம். சிரா என்னும் பெயர் கொண்ட ச5மணத்துறவி நிறுவிய தவச்சாலை இக்குன்றில் அமைந்திருந்த காரணத்தால் இது சிராப்பள்ளி என்றே பெயர் பெற்றது.

திருஞான சம்பந்தப்பெருமான் திருஉடையானை சிராப்பள்ளி குன்னுடையானை... என்று பாடி பரவினார்.

புராணக் கதைகளின் அடிப்படையில் இதற்கு திரிசிபுரம் என்று பெயர் வழங்கியிருக்கிறது. டாக்டர் உ.வே.சா.குருநாதர் திரிசிபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்றே அறியப்பட்டார். (அமரர் கல்கி தம்முடைய முதலாம் சிறைவாச அனுபவங்களை பற்றி ஆனந்த விகடனில் எழுதினார். அப்போது தாம் சிறை இருந்த திருச்சிராப்பள்ளி சிறைச்சாலையை பற்றி குறிப்பிடுகையில் முத்தலைப்புரம் என்று எழுதுவார். (பார்க்க கண்ணீரால் காத்த பயிர் நூல் - வானதி பதிப்பகம்) அதே போல் கடலூர் சிறைச்சாலையையும் சமுத்திரபுரி என்று பெயர் மாற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய மகாத்மா மேற்கொண்ட 1930 ஆம் ஆண்டின் தண்டி யாத்திரையை மறு காட்சிப்படுத்தி சபர்மதி முதல் தண்டி கடற்கரை வரை நடந்தார்கள். அதில் இந்த கட்டுரையாளனும் கலந்து கொண்டு 385 கி.மீ. தொலைவு நடக்கும் வாய்ப்பு பெற்றேன். பாபுஜி போன பாதையையே நாங்களும் பின்பற்றினோம். வழியில் ஒரு சிறிய ஆறு குறுக்கிட்டது. அதை கடக்க சுமார் முப்பது படகுகளை வரிசையாக பக்கம் பக்கமாக நிறுத்தி அதன் மீது பலகைகளை போட்டு பாலம் அமைத்து தந்தார்கள். இப்போது அதை நினைத்து பார்க்கும்போது, சிலப்பதிகார காலத்தின் நீரணி மாடம் என்பதை கற்பனை செய்து காண முடிகிறது.

இந்த பள்ளி ஓடத்தின் வழியே பயணியர் மூவரும் தீது தீர் நியமத் தென்கரை எய்தினார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அங்கே ஒரு சோலையில் தங்கியிருக்கிறார்கள். மூவரும் கரையேறிய இடத்தில் ஒரு கோயில் இருந்திருக்கிறது. தீது தீர் நியமம் என்று அந்த வழிபாட்டிடம் சொல்லப்படுகிறது. இன்றைய வழக்கில் பரிகாரத்தலம் என்றும் கொள்ளலாம். வினை வழி நடந்த கண்ணகி - கோவலனுக்கு தீமைகளை தீர்த்து வைக்காத அந்த வழிபாட்டிடம் எது என அறிய முடியவில்லை. அவர்கள் அங்கு வழிபட்டதாகவும் குறிப்பில்லை.

சுப்ர.பாலன்
https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14562&cat=19

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.