Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்பு வயிறுகளும், வெள்ளை உணவுகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு வயிறுகளும், வெள்ளை உணவுகளும்

   “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற உயரிய இடத்தில் உணவு நம்மிடையே வழங்கப்பெற்று வந்துள்ளது. கடந்த இருபது வருடங்களில் நம் நாட்டு மக்களிடையே தோன்றியிருக்கும் பல்வேறு வாழ்வியல்முறை நோய்களை (டுகைநளவலடந னுளைநயளநள) பட்டியலிட்டால் நம் உணவு மாற்றத்தில் உலகமயத்தின் பங்கு தெரியவரும். பின் காலனிய அடிப்படையில் உலகமயம் நஞ்சாக்கிய உணவுப்பழக்கங்களை பண்பாட்டு ரீதியில் அணுகினால்  நாம் நம் மரபார்ந்த பழைய முறைக்கு திரும்ப வேண்;டியதன் அவசியத்தை உணரலாம்.
    தொல்காப்பியம் தொடங்கி, சங்க இலக்கியங்கள், சித்தர் பாடல்கள் என நம் மரபார்ந்த உணவு வகைகள் பல பல குறிப்புகளாக நம்முன்னே கிடைக்கப்பெறுகின்றன.  அவற்றை மீண்டும் நம் மீளக்கொள்தல் ஒன்றே நம் பண்பாட்டையும், உடல்நலனையும் மீட்டுருவாக்க உதவி செய்யும்..காலத்துக்கு முந்தைய சங்க கால வாழ்வியலில் நம் உணவு பண்பாடு, விருந்தோம்பல், நோயறி முறைமையாவும் மிகத்தெளிவாகவே வரையறுக்கப்பட்டிருந்தன.
    வெள்ளை செறிவூட்டப்பட்ட அரிசி, வெள்ளை சர்க்கரை, வெள்ளை உப்பு ஆகியவற்றின் ஊடுருவலால் நம் சமூகம் நோய் சமூகமாய் மாறிவிட்டது.
    சாமை, கேழ்வரகு, தினையரிசி, வரகரிசி, மூங்கிலரிசி, குதிரைவாலி, சிவப்பரிசி போன்ற தானியங்களை திட்டமிட்டு தவிர்த்து உலகமயத்தின் அடிமைகளாய் கட்டுண்டு போனோம்.
    பின்காலனிய அணுகுமுறையின் ஒரு கூறான பழமைக்கு திரும்புதல்  என்ற நியதிப்படி நாம் நம் மரபான பாரம்பரிய தமிழ் உணவுப் பழக்கங்களுக்கு திரும்பவேண்டும்.  அவித்தல், சுடல், வறட்டல் என்ற நம் பாரம்பரிய முறைமைகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்.
    நம் கறுப்பு வயிறுகளுக்கு ஒவ்வாத வெள்ளை உணவை நிராகரிப்போம்.  இயற்கை விவசாயமும், நம்முடைய விருப்புறுதியும் நிச்சயம் உலகமயத்திற்கு பெரும் சாவலாக அமையும்.
    இவை எதுவும் நடைபெறவில்லையென்றால் பசியோடு காத்திருக்கும் வல்லூறுகளுக்கு செத்து மடியும் தருவாயில் இருக்கும் நாம் ஒரு புகைப்படமாக மாறிப்போக சாத்தியமிருக்கிறது.

திறவுச் சொற்கள்
பொருளாதார அடியாட்கள்இஒற்றைப் பரிமாண மனிதனஇ; வாழ்வியல்முறை நோய்கள் இகுப்பை உணவுகள் இ இளம் சர்க்கரை நோயாளிகள்  இபின்காலனியம்

முன்னுரை
சமீபத்தில் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி அதிர்ச்சியுறச்; செய்தது.  தமிழகத்தில் மென்பொருள் துறை நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்களில் பெரும்பாலானோர் நீர் அருந்துவதில்லையாம்.  பதிலாக கோக் - கும், பெப்ஸியும் குடிக்கிறார்களாம்.  இந்த விழுக்காடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அடுத்து வரும் வருடங்களில் நாம் தண்ணீர் குடிக்காத ஒரு தலைமுறையை கண்ணுறப் போகிறோம்.
    அந்த மென்பொருள் இளைஞர்களுக்கு தாகம் எடுக்காமல் இல்லை.  தண்ணீர் அருந்த ஆசையும் இல்லாமல் இல்லை.  ஆனால் கோக் குடிப்பது அந்தஸ்து சார்ந்த விஷயம்.  தண்ணீர் குடிப்பது பழைய பாமரத்தனம்.  மேலும் அவர்கள் வேலைபார்ப்பது மேலை நாட்டு நிறுவனம்.  இதைத்தான் பிரான்ஸ் ஃபனான் (குசயவெண குயழெn) தன்னுடைய “கறுப்பு தோல்களும் வெள்ளை முகமூடிகளும்” (டீடுயுஊமு ளுமுஐNளுஇ றுர்ஐவுநு ஆயுளுமுளு) என்ற புத்தகத்தில் சொல்லியிருப்பார்.  நாம் ஒவ்வொருவரும் இந்த மேலை நாட்டு மோகத்திற்கு விதிவலக்கல்ல.  சதவிகிதத்தில் வேறுபாடு இருக்குமே தவிர மற்றபடி அனைவருமே காலனியத்தின் எச்சங்கள்தான்.
    வெள்ளை முகமூடிகளை அணிந்து கொண்டு நாம் மேலைநாட்டு மனிதர்களை போலச் செய்வதற்கு, நம்முடைய அடிமை எண்ணம் மட்டுமே காரணமல்ல.  தொண்ணூறுகளில்  தொடங்கிய உலகமயம், ஊடக வளர்ச்சி, பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பர யுக்தி எல்லாமாக நம் வாழ்வியல்; , நம் மரபார்ந்த உணவு, உடை, உறையுள் எல்லாவற்றையும் ஒற்றைத் தன்மையை நோக்கி நகர்த்திவிட்டது.  இதன் அரசியல், பொருளாதார காரணங்கள் சிக்கலானவை.  அரசியல், பொருளாதார அடியாட்களால் (Pழடவைiஉயடஃநுஉழழெஅiஉயட ர்வைஅயn) நகர்த்தப்படுபவை.  இவற்றிலிருந்து நம் வாழ்வை, பண்பாடை, மரபைப் பணுவது என்பது பெரும் சவாலான போராட்டமே.
உலகமயமும், பஞ்சமும்
    சோமாலியாவின் பஞ்சம் உலகறிந்தது.  ஆனால் எந்த தரப்பினரும் பஞ்சத்திற்கான காரணத்தைப் பற்றி பதிவுச் செய்யவில்லை: உண்மையில் சோமாலியாவில் நடந்தது என்ன? பாரம்பரிய முறையில் கோதுமை விவசாயம் செய்த நாடு சோமாலியா. கொக்கோ பயிரிட்டால் அதிக விலைக்கு தாங்களே வாங்கிக் கொள்வதாக கொக்கோ கோலா நிறுவனம் சோமாலிய விவசாயிகளை மூளைச்சலவை செய்தது.  விவசாயிகள்  பயிரிட்ட முதல் மூன்று ஆண்டு விளைச்சலை நல்ல விலை நிர்ணயித்து பெற்றுக்கொண்டது கோலா நிறுவனம். பிறகு கூடவே அந்த விவசாயிகளுக்கு தங்களைப் போன்ற நிறுவனங்களின் வீட்டு உபயோகப் பொருட்களை கடைவிரித்து கொடுத்தக் காசை பிடுங்கிக் கொண்டது.  வெறும் நுகர்வோராய் மாற்றப்பட்டனர் சோமாலிய விவசாயிகள்.  அடுத்த வருடம் சோமாலியா நிலத்தில் விளையும் கொக்கோ தாங்கள் எதிர்பார்க்கும் தரத்தில் இல்லை என்று வியாபாரத்தை நிறுத்திக் கொண்டுது கொக்கோ கோலா.  சோமாலிய விவசாயிகள் பழைய பாரம்பரிய விவசாயத்திற்கு திரும்ப முடியவில்லை.  காரணம் அவர்கள் நிலமெங்கும் பயிரிடப்பட்டிருந்த மரங்களை வெட்டியெறியவே அவர்களுக்கு ஏக்கருக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் தேவைப்பட்டது.  விளைவு பஞ்சம்.
    “மெலிந்து சாவிற்கு காத்திருக்கும் குழந்தையை சாப்பிட தயாராக இருக்கும் வல்லூறு” - இந்த புகைப்படம் ஏற்படுத்திய பாதிப்பில் சோமாலியப் பஞ்சத்தைப் புரிந்த எவருக்கும், பஞ்சம் எதனால் ஏற்ப்பட்டது என்ற காரணம் தெரிவதில்லை.  உலகமயத்தையும், பன்னாட்டு முதலாளித்துவத்தையும் இந்த சோமாலிய கதை நமக்கு புரிய வைக்கிறது.
    nயுர்பட் மார்க்யூஸ் என்ற சமூக அறிஞர் காலனியம் உருவாக்கும் ஒற்றைப் பரிமாண மனிதனை (ழநெ னiஅநளெழையெட அயn) பற்றி தன்னுடைய புத்தகத்தில் கூறுவது இந்த உலகமயச் சூழலில் நமது நாட்டிற்கு பொருந்தும்.  முன்பெல்லாம் ஒவ்வொரு மனிதரும் அவரவர் தேவைக்கேற்ப அவரவர் அளவிற்கேற்ப உடைகளை தைத்து அணிவர்.  தற்போது ஆயத்த ஆடைகள்.  எல்லாருக்கும் ஒரே அளவுகள். ஆக செருப்புக்கேற்ப காலை வெட்டிக்கொண்ட அறிவாளிகளாக நம் மக்களும் மாறிவிட்டார்கள்.  இவை எல்லாமே ஒற்றைப் பரிமாண மனிதனை நோக்கிய நகர்வுகள்.  ஒரே விதமான கல்வி; ஒரே விதமான சிந்தனை;  ஒரே விதமான பண்பாடு; மொழி என உலகமயத்தின் ஒற்றைமயம் உலகளாவியது.

உணவு அரசியல்
    உலகமயம் சாதாரண குடிமக்களை நுகர்வோர் என்ற அந்தஸ்துக்குள் நகர்த்திவிட்டது.  இன்று ஒரு மாதத்திற்கோ, ஒரு வாரத்திற்கோ தேவையான மளிகை, உணவுப்பொருட்களை அங்காடிக்குச் சென்று வாங்கிவந்தால் அதில் கால்வாசி பொருட்கள் அநாவசியமானதாகவே இருக்கும்.    தொலைக்காட்சி மற்றும் இதர ஊடகங்களின் தூண்டுதலினால் வாங்கி வரும் பொருட்களே அதிகம். அவை தேவையானவையா, தேவையற்றவையா என்று நினைப்பதை விட ஆரோக்கியமானவையா என்று கூட நினைப்பதில்லை.  வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதனப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், அழகு சாதனங்கள், மின்னியல் பொருட்கள் என்றிருந்த நுகர்வு கலாச்சாரம் இப்போது உணவுப்பொருட்களிலும் நுழைந்துவிட்டது. இது நம் நாட்டை நடமாடும் நோய்க்கூடமாக மாற்றிவிடும் ஆபத்தைக் கொண்டது.    உணவே மருந்து என்று கொண்டாடிய நம் மக்கள் விõமே உணவு என்று பெருமையோடு நோயாளிகள் ஆவது உள்ளபடியே அவமானமான விஷயம்.
    “உண்டி கொடுத்தோர் உயிர்; கொடுத்தோரே” என்ற உயரிய இடத்தில் உணவு நம்மிடையே வழங்கப்பெற்று வந்துள்ளது.  ஒவ்வொரு மண்ணுக்கும் உரியது ஒவ்வொரு உணவு.  இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சுவையும், ஒவ்வொரு சேர்மானமும் வெவ்வேறானது. உலகமயம் வேறுபாடுகளைப் புறக்கணிக்கிறது. எல்லாம் ஒற்றைத்தன்மையடைந்துவிட்டால் நிர்வாகம் எளிது; வியாபாரம் எளிது.  வணிகம் ஒன்றே நோக்கமாகக் கொண்ட உலகமயத்தின் பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டின் பாரம்பரிய  பானங்களை முதலில் காவு கொண்டன.  அடுத்ததாக திட உணவுகள்.
    இளநீரும், பானகமும், மோரும், பழரசமும் இன்று மெல்ல மெல்ல மறைந்து போய்க் கொண்டிருக்கிறது.  நிமிடத்திற்கு பத்து விளம்பரங்களால் சாதாரண மக்களெல்லாம் நுகர்வோராய் மாற்றப்பட்டு மிகப்பெரிய சந்தையின் அலகுகளாக மாற்றப்பட்டு விட்டனர்.  பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் குளிர்பானங்களுக்காக உறிஞ்சியெடுத்த நதிகளும், படுகைகளும் ஏராளம்.  லட்சகணக்கான கனஅடி நீரை உறிஞ்சியெடுத்து நிலத்தடிநீரை உப்புநீராக்கி தங்கள் இனிப்பு பானங்களை கடைவிரிக்கின்றன.  இரண்டு ரூபாயில் தயாரிக்கப்படும் குளிர்பானம் கடைகளில் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  லாபம் போக மற்றதில் ஐம்பது சதவீதம் அதை வாங்க வைக்கும் விளம்பரத்திற்கு செலவிடப்படுகிறது. ஒரு பொருளை வாங்கி அதை தான் வாங்க வைக்க ஆகும் செலவையும் அந்த நபரே செலுத்தும் விநோத வியாபாரம் பன்னாட்டு நிறுவனங்களுக்கே உரித்தானது.
    நம் இந்திய நாட்டில் வட இந்தியாவிற்கும் தென்னிந்தியாவிற்கும் கலாச்சாரம் மட்டுமல்லாது, காலநிலை, வெப்பநிலை சார்ந்தும் பல்வேறு மாறுபாடுகள் உண்டு.  தென்னிந்தியாவில் பெரும்பாலும் அரிசி உணவே பிரதானம். வட இந்தியாவில் கோதுமை. பல வடநாட்டு முதலாளிகளின் நலன் கருதி (விவசாயிகளின் நலன் அல்ல) நம் தென்னிந்தியாவிலும் கோதுமை கட்டாயமாக இறக்குமதி செய்யப்பட்டு வேறு கலாச்சாரத்தை சார்ந்த உணவுத் திணிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.  இந்த கோதுமை அரசியலின் வேர்கள் முதலாளியத்தின், உலகமயத்தின் ஊடே பரவி நிற்பவை.
    தென்னிந்திய உணவகங்கள் இன்று தோசை, இட்லி போன்றவற்றிற்கு தரும் முக்கியத்துவத்திற்கு மாற்றாக கோதுமையை ரசாயன முறையில் பதப்படுத்திய தீமையான புரதங்களால் ஆன மைதாமாவு புரோட்டா மற்றும் தின்பண்டங்களால் நிரம்பி வழிகிறது.      கடந்த இருபது வருடங்களில் நம் நாட்டு மக்களிடையே தோன்றியிருக்கும் பல்வேறு வாழ்வியல்முறை நோய்களை (டுகைநளவலடந னுளைநயளநள) பட்டியலிட்டால் நம் உணவு மாற்றத்தில் உலகமயத்தின் பங்கு தெரியவரும்.
    பீட்சா, பர்கர், சாண்ட்விச், ஐஸ்கீரீம், பாஸ்ட் புட் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த உணவுகள் நம் சீதோஷண நிலைக்கும், ஆரோக்கியத்திற்கும் சற்றும் தொடர்பில்லாதவை.  குழந்தைகளை கவாந்திருக்கும் குப்பை உணவுகளான (துரமெ குழழனள)  குர்குர்ரே, லேஸ், பிங்கோ போன்றவை உலக நாடுகள் புறந்தள்ளியவையே.
    பனைப் வெல்லமும், கரும்பு வெல்லமும், தேனும் இனிப்பு சுவைக்காய் பயன்படுத்தி வந்த நம் நாட்டில் வெள்ளை சர்க்கரை அறிமுகம் ஆனது முதல் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டது.  தற்போது குழந்தைகள் கூட இளம் சர்க்கரை நோயாளிகளாக (துரnழைச னுயைடிநவiஉள) மாறிக்கொண்டிருக்கின்றனர்.  மேஜை உப்பு என்ற அழைக்கப்படும் வெள்ளை உப்பு இன்று இரத்தக்கொதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கையை உயர்த்திவிட்டது.
    சர்க்கரை விவசாயத்தில் ஆலை முதலாளிகளின் வணிகநோக்கும், சாராய வியாபாரிகளின் அரசியலும் சேர்ந்து பனை வெல்லத்தை ஒழித்துவிட்டன. அதைப் போலவே வெள்ளை உப்பு வியாபாரம் பெரு முதலாளிகளின் கையில் இருப்பதைச் சொல்லத் தேவையில்லை.
    இவற்றோடு சோந்து மருந்து உற்பத்தி நிறுவனங்களின் அரசியலும் உற்றுநோக்கப்பட வேண்டியதே.  அதிக மக்கட்தொகை கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் நோயாளிகளாக இருப்பதில் சந்தோஷப்படுவது மருந்து நிறுவனங்களாகத்தான் இருக்க முடியும்.வணிகநோக்கம், பெரு முதலாளிகள், லாபம், மூலதனம் எல்லாம் மக்களின் அடிமடி வரை கைவைக்கும் சொற்களாகிவிட்டன.

தாய்ப்பாலும், பெருநிறுவனங்களும்
    பால் சார்ந்த உற்பத்திப் பொருள்களில் கவனம் செலுத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் கள்ளத்தனங்களும், ஊழலும், குற்றச்செயல்களும் முறையற்றவை, பால்பொடி விற்கும் நிறுவனங்கள் உண்மையில் தாய்பாலுக்கு மாற்றாக தங்கள் தயாரிப்பை விளம்பரங்கள் மூலம் காட்டிக்கொள்வது சர்வதேச சட்டங்களின்படி குற்றமாகும்.  எனினும் வணிக லாபம் கருதி யாரும் இதைக் கண்டு கொள்வதில்லை.
    உலகிலேயே வறுமையான நாடான எத்தியோப்பியாவில் காபி பயிரிடுதலே பிரதான தொழில். காபி தயாரிப்பு மற்றும் பால்பொடி விற்பனைச் செய்துவரும் நெஸ்லே (நேளவடந) நிறுவனம் எத்தியோப்பிய அரசிடம் தங்கள் நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக பல லட்சம் கோடி டாலர்களை நஷ்ட ஈடாக கேட்டு வழக்கு தொடர்ந்தது.  கடைசியில், ஊடகங்களில் செய்தி வந்தவுடன், விற்பனைச் சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து வழக்கை முடித்து நஷ்ட ஈட்டு பணத்தை எத்தியோப்பியாவிலேயே முதலீடு செய்தது.  வெறும் வணிக நோக்கம் கொண்ட இந்த நிறுவனங்கள்தான் போஷாக்கு என்ற பெயரில் மூன்றாம் உலக நாடுகளில் தாய்ப்பாலுக்கு மாற்று என்ற பெயரில், தங்கள் வியாபாரத்தைப் பெருக்குகின்றனர்.  ‘தாய்ப்பால் கொடுத்தால் பெண்களின் அழகு போய்விடும்’ என்பதும் இந்த பெருநிறுவனங்களில் திட்டமிட்ட விளம்பர யுக்தியே.  ‘கறந்த பாலின் ஆயுள் மூன்று மணிநேரம’; தான் என்பதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்த நம் மக்கள் பதப்படுத்தப்பட்ட பாலை, பால்பொடியை எந்த கேள்வியுமல்லாமல் நுகர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

விவசாயமும் கொள்கைகளும்
    உலகப் போர்களில் மிச்சமான ரசாயன குண்டுகள் உரங்களாக மாற்றப்பட்டு மூன்றாம் உலக நாடுகளில் புதிய விவசாய முறையை அறிமுகப்படுத்தியது.  நம் நாட்டில் பசுமைப் புரட்சி என்று அழைக்கப்பட்டது உண்மையில் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று இன்று மெல்ல மெல்ல புரிந்து வருகிறது.ராசாயன உரங்கள் நம் மண்ணின் வளங்களை அழித்துவிட்டது.ஒரே மாதிரியான பணப்பயிர் விவசாயம் ; மரபணு மாற்ற விதைகள் என விவசாயம் தன் பாரம்பரியத்தை இழந்து இன்று தத்தளிக்கறது.
   மண்ணைப் பற்றி அறியாத, விவசாயத்தை மேலை நாட்டு தன்மையோடு கற்றுக்கொண்டவர்களை நம் நாட்டின் விவசாயக் கொள்கைகளை நிர்ணயிப்பவர்களாக தேர்ந்தெடுத்தது இந்த தவறுகளுக்கு முக்கிய காரணம். அமெரிக்க கோதுமை ஆய்வு நிறுவனத்திலும் இந்திய விவசாயக் கொள்கை திட்ட தலைவராகவும்  ஓரே நேரத்தில் செயல்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் இ நம் பாரம்பரிய விதைகள் இருபதாயிரத்தை வாழ்நாள் முழுவதும் சேகரித்த வங்காள இயற்கை விஞ்ஞானி குப்தா-விடமிருந்து பிடுங்கி அமெரிக்காவிற்கு கொண்டு சென்றது யாருக்கும் தெரியாத துர்பாக்கியம். பாரம்பரிய விதைகள் வீர்யமிக்கவை ; நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை ; நம் மண்ணின் ஆழம் பார்த்தவை ; நம் மக்களின் சத்திற்கு ஊட்டம் அளிப்பவை. அதை அமெரிக்காவிடம் கொடுத்துவிட்டு மரபணு மாற்ற விதைகளையும் ஆட்கொல்லி விதைகளையும் இறக்குமதி செய்து விவசாயிகளை விதைக்கு கையேந்தச் செய்யும் நடவடிக்கை. இயற்கை விஞ்ஞானிகள் பலரை கொண்டிருந்தும் நம் நாட்டில் பன்னாட்டு நிறுவன கைக்கூலிகளோ அல்லது மேலைநாட்டு அடிமை மோகம் கொண்டவரோ தான் கொள்கை முடிவு எடுப்பவர்களாக வர முடிகிறது.இந்நிலை தொடர்ந்தால் சேனிகல், கேமரூன், கென்யா, எகிப்து போன்ற நாடுகளில் நடந்துவரும் உணவுக் கலவரங்கள் நம் நாட்டிலும் ஏற்பட வெகுநாட்கள் ஆகாது.
    சந்தையில் உணவுப்பொருட்கள் விலை உயர்வது விவசாயிகளுக்கு இலாபகரமான கொள்முதல் விலை வழங்கியதால் அல்ல.  சில்லரை வணிகர்களாலும் அல்ல.  தாராளமய பொருளாதார சீர்த்திருத்தங்கள் அறிமுகமான இணைய தள வர்த்தகமே ஆகும்.  இந்த வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகப் பெரும் உள்நாட்டு, பன்னாட்டு வணிக நிறுவனங்கள் ஆகும்.  உற்பத்தி செய்த விவசாயிக்கும் லாபமில்லை.  கடைசியில் நுகர்வோர் தலையில் இந்த விலைச்சுமை ஏற்றப்படுகிறது.    விவசாயப் பொருட்களை பதுக்கி வைத்து செயற்கையான உணவு பஞ்சத்தையும் அதன் மூலம் விலைவாசி உயர்வையும் உருவாக்குவது இன்று சில்லரை வணிகத்தில் கூட ஊடுருவி விட்ட பன்னாட்டுப் பெரு நிறுவனங்களே.
    அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகியவை தவறான கொள்கைகளால் சிதைக்கப்பட்டு இன்று நம் நாடு உலகமயத்தின், தாராளமயத்தின் , தனியார்மயத்தின் இரும்பு கரங்களில் சிறு பூவாக நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
    ஏற்றுமதிக்காக உணவுப்பயிரிலிருந்து, பணப்பயிர் உற்பத்தியை ஊக்குவித்து ஏற்பட்ட கொள்கை முடிவால் இன்று உணவு பஞ்சம் கண்முன்னே நிழலாடுகிறது.  அன்னிய செலவாணி கையிருப்பால் எந்த வயிறும் நிரம்பி விட போவதில்லை என்பது எந்த அரசுக்கும் புரிவதில்லை. எரிபொருள் தேவைக்காக உணவு தானியங்கள் எத்தனால் (நுவுர்யுNழுடு-டீஐழு குருநுடு) உற்பத்திக்கு திருப்பி விடப்படுகிறது.  இதன் மூலம் உலக சந்தையில் உணவுதானிய விலை நூறு விழுக்காடு அதிகரித்துள்ளது.
    இதனை சாக்காக பயன்படுத்தி பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் உணவுப்பொருட்களை நம் நாட்டில் கடைவிரித்து ஊடுருவ செய்கிறார்கள்.  நம் பண்பாட்டில் ஊடுருவும் இந்த மாற்றங்களால் அவர்களுக்கு இரட்டை லாபம்.
    “யானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன்” என்பதுபோல் உணவு வியாபாரத்திலும் லாபம்.  அதை தின்று நோய் வந்தால் மருந்து வியாபாரத்திலும் லாபம்.
மாற்று உணவும், மரபார்ந்த உணவும்
    பின் காலனிய அடிப்படையில் உலகமயம் நஞ்சாக்கிய உணவுப்பழக்கங்களை பண்பாட்டு ரீதியில் அணுகினால் நாம் நம் மரபார்ந்த பழைய முறைக்கு திரும்ப வேண்;டியதன் அவசியத்தை உணரலாம்.
    தொல்காப்பியம் தொடங்கி, சங்க இலக்கியங்கள், சித்தர் பாடல்கள் என நம் மரபார்ந்த உணவு வகைகள் பல பல குறிப்புகளாக நம்முன்னே கிடைக்கப்பெறுகின்றன.  அவற்றை மீண்டும் நம் மீளக்கொள்தல் ஒன்றே நம் பண்பாட்டையும், உடல்நலனையும் மீட்டுருவாக்க உதவி செய்யும்.
            “நீரின்றமையா யாக்கைக்கு எல்லாம்
            உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே
            உண்டி முதற்றே உணவின் பிண்டம் 
            உணவெனப்படுவது நிலத்தோடு நீரே
            நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
            உடம்பும் உயிரும் படைத்திசினோரே”
                    (புறம் - 18. 18-23)
    இயற்கையோடு இயைந்து வாழ்ந்த நம் தமிழ் பாரம்பரியத்தின் உணவு நெறி இப்படியாக இருந்துள்ளது.  உணவு குறித்த ஒரு கொள்கையை வரையறுத்து வாழ்ந்த சமூகம் நம் தமிழ்ச்சமூகம்.
    ஐவகை நிலங்களுக்கும் அவற்றிற்குரிய உணவும், நீரும் பிரித்து வைத்தது தொல்காப்பியம்.
    நிலம்                  உணவு                   நீர்
1)    முல்லை          -     வரகு, சாமை                  கான்யாறு        
2)    குறிஞ்சி        -     நெல், தேன் திணை,              அருவி,
 மூங்கில் அரசி              சுனை நீர்

3)    மருதம்            -     செந்நெல், வெண்நெல்         ஆற்றுநீர்,
        மனைக்கிணறு, பொய்கை

4)    நெய்தல்        -     உப்புக்கு விலைமாறிய பண்டம்    மணற்கிணறு
 மீனுக்கு விலைமாறிய பண்டம்     உவற்குரிநீர்

5)    பாலை            -     ஆறவைத்த பொருள்            அறுநீர் கூவல்
 சூறை கொண்ட பொருள்         சுனை நீர் 

    உணவு சமைக்கும் அடுப்பு, உணவு செய்யும் இடங்கள், உணவு வகை என்று பல்வேறு செய்திகள் நம் சங்கப் பாடல்களில் கவனிக்க முடிகிறது.    உணவு என்ற சொல்லுக்கே பல்வேறு பெயர்களை சூட்டியிருந்தது தமிழ்க்குடி. ஊணா, வல்சி, உண்டி, ஓதனம், அசனம், பதம், இரை, ஆகார், உறை, ஊட்டம்  இவையெல்லாம் உணவிற்கான பெயர்கள்.  அறுசுவை, அவற்றின் நன்மை, தீமைகள்.  சரியான உட்கொள்ளும் அளவு, குறிப்பிட்ட சுவை மிகுந்தால் ஏற்படும் நோய், சுகவீனம் எல்லாம் தனித்தனி குறிப்புகளாக கிடைக்கின்றன.    நெல்லின் பல்வேறு பெயர்களாக வரி, செஞ்சாலி, செந்நெல், சொல், இயவை, சூவனம் ஆகியவற்றையும்.  சோற்றை அதற்று, அடிசில், அமிழ்து, அயினி, அவி, உண், தோரி, பருக்கை, பிசி, மிசை போன்ற பெயர்களாலும் அழைத்துள்ளனர்.    புலாலும், கள்ளும் தமிழர் உணவில் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறது.அருகம்புல்லை மேய்ந்து கொழுத்திருக்கின்ற செம்மறி ஆட்டின் மாமிசத்தை வேக வைத்து சாப்பிடுவர்.  சுட்டு தின்பது என்பதும் நம் பண்பாட்டின் கூறே.    தினையரிசியை சோறாக்கி, நெய்யில் புலாவை வேக வைத்த செய்தியை மலைபடுகடாம் இவ்வாறு கூறுகிறது.
            “மானவிறல்வேள் வயிரியர் எனினே
            நும்மில் போல நில்லாது புக்குக்
            கிழவிர்போலக் கேளாது கெழிஇச்
            சேட்புலம்பு அகல இனிய கூறிப் 
            பருஉக்குறை பொழிந்த
            நெய்க்கண் வேவையோடு
            குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவீர”
                            (164 – 169)        
    அதைப்போல் அரிசியால் ஆக்கப்பட்ட சோறு விரல்போல் நிமிர்ந்து தனித்தனியாக சேர்ந்திருக்கின்ற சோறு அதை பால்விட்டுச் சமைத்த பொரிக்கறிகள், புளிக்கறிகளோடு மிகுதியாக தின்ன செய்தயை பொருநராற்றுப்படையில் முடத்தாமக்கண்ணியார் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
            “முரவை போகிய முரியா அரிசி
            விரல்என நிமிர்ந்த நிரல் அமைபுழுக்கல்
            பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப 
            அயின்ற காலை”
                        (113 – 116)
    அதைப்போல நெய்தல் மக்களின் பிரதான உணவாகிய மீன், கருவாடு பற்றி குறிப்பு சிறுபாணாற்றுப்படையில் காணப்பெறலாம்.  குழல் மீன் கருவாட்டை குறிக்க
            “வறல் குழல் வயின் வயின் பெறுகுவீர்”
                            (163)
என பாடியுள்ளார்.இதுபோலவே எயிற்றியர், எயினர் போன்ற வேட்டை சமூக மக்கள் உணவையும், உழவர் ஆயர், செல்வர்கள் உணவு பற்றியும் பல்வேறு குறிப்புகள் உள்ளன.

முடிவுரை
     காலத்துக்கு முந்தைய சங்க கால வாழ்வியலில் நம் உணவு பண்பாடு, விருந்தோம்பல், நோயறி முறைமையாவும் மிகத்தெளிவாகவே வரையறுக்கப்பட்டிருந்தன.வெள்ளை செறிவூட்டப்பட்ட அரிசி, வெள்ளை சர்க்கரை, வெள்ளை உப்பு ஆகியவற்றின் ஊடுருவலால் நம் சமூகம் நோய் சமூகமாய் மாறிவிட்டது.சாமை, கேழ்வரகு, தினையரிசி, வரகரிசி, மூங்கிலரிசி, குதிரைவாலி, சிவப்பரிசி போன்ற தானியங்களை திட்டமிட்டு தவிர்த்து உலகமயத்தின் அடிமைகளாய் கட்டுண்டு போனோம்.பின்காலனிய அணுகுமுறையின் ஒரு கூறான பழசுக்கு திரும்புதல்  என்ற நியதிப்படி நாம் நம் மரபான பாரம்பரிய தமிழ் உணவுப் பழக்கங்களுக்கு திரும்பவேண்டும்.  அவித்தல், சுடல், வறட்டல் என்ற நம் பாரம்பரிய முறைமைகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்.
    நம் கறுப்பு வயிறுகளுக்கு ஒவ்வாத வெள்ளை உணவை நிராகரிப்போம்.  இயற்கை விவசாயமும், நம்முடைய விருப்புறுதியும் நிச்சயம் உலகமயத்திற்கு பெரும் சாவலாக அமையும்.
     இவை எதுவும் நடைபெறவில்லையென்றால் பசியோடு காத்திருக்கும் வல்லூறுகளுக்கு செத்து மடியும் தருவாயில் இருக்கும்; ஒரு புகைப்படமாக நாம் மாறிப்போக சாத்தியமிருக்கிறது.


பார்வை நூல்கள் :

1.Post Colonisation by Robert J.C.Jung

2.One Dimensional Man by Herbert Marquez

3.Black Skin White Masks by Frantz Fanon
4.நீராதிபத்தியம் மாட் விக்டோரியா பார்லோ-தமிழில் : சா.சுரேஷ்
5.ஆனந்தவிகடன் “ஆறாம் திணை” மருத்துவர் கு.சிவராமன் (தொடர் கட்டுரைகள்)
6. www.tamilkoodal.com -“தொல்காப்பியம் காட்டும் உணவு”
7.  www.Muthukamalam.com-“ பண்டைய தமிழர் உணவுகள்”-முனைவர் சி.சேதுராமன்
8.  www.tamilenkalmoossu.com -“பண்டைய தமிழர் உணவுகள்”

https://www.aranejournal.com/article/5859

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.