Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு – தமிழில்: ஜெயந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு – தமிழில்: ஜெயந்திரன்

இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு

 

நியூசிலாந்து நாட்டில் வீடுகளில் குடிவரவு அதிகாரிகளால் திடீர் அதிகாலைச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 50 ஆண்டுகள் தற்போது நிறைவடைகின்றன. பசிபிக் (Pacific) மக்களின் தந்தையாகவும் அமைச்சராகவும் திகழ்கின்ற ஓப்பிற்றோ வில்லியம் சியோவினால் (Aupito William Sio) இன்றும் இவ்விடயம் பற்றிப் பேசுவது  சிரமமாகவே உள்ளது.

இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு Aupito William Sio

“உங்களைப் பராமரிக்க வேண்டியவர்கள், நீங்கள் சேவை செய்யும் உங்கள் அதிகாரிகள், இவர்களே உங்களை, உங்கள் சொந்த வீட்டில் வைத்து உங்களால் எதுவுமே செய்ய முடியாத ஒரு நிலைக்கு உங்களை இட்டுச் செல்லும் போது, இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை எப்படி ஒருவரால் பேசமுடியும்?” என்று சியோ கூறினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலப் பகுதியில் தொழில் செய்வதற்காகப் பசிபிக் தீவுகளிலிருந்து நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்த மக்கள் மீது இந்த அதிகாலைச் சோதனைகள் 1970 களில் மேற்கொள்ளப் பட்டன.


 
குளிர் காலத்தில் ஒரு நாள் காலை, 1974ஆம் ஆண்டு, நாய்களால் சூழப்பட்டவாறு,  காவல் துறையினர் ஓக்லாண்டில் (Auckland) ஒட்டாறா (Otara) என்னும் இடத்தில் அமைந்திருந்த சியோவின் தந்தையின் காணியின் முன்கதவுக்கு வந்தார்கள். நியூசிலாந்தில் அவர்கள் எல்லோரும் சட்ட பூர்வமாகத் தங்கியிருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் பொருட்டு ஒவ்வொருவரும் தத்தமது கடவுச்சீட்டைக் காண்பிக்க வேண்டும் என்று அவர்கள் பணிக்கப்பட்டார்கள்.

அந்த நேரம் நாய்கள் பலமாகக் குரைத்துக் கொண்டிருந்தன. அங்கிருந்தவர்கள் பயத்தினால் கூக்குரலிட்டார்கள். அதே வேளையில் மகிழுந்து தரிப்பிடத்தில் தங்கியிருந்த சியோவின் ஒன்றுவிட்ட சகோதரர்களை காவல்துறையினர் துரத்திச் சென்றார்கள். தமது உடைமைகளை எடுததுச் செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவர்கள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் சமோவாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள்.


 
இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசுபோரின் காரணமாக பலவீனமடைந்திருந்த நியூசிலாந்தின் தொழிலாளரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பசிபிக் தீவுகளைச் சேர்ந்த பலர் நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்தார்கள். 1976ஆம் ஆண்டளவில் நாட்டின் சனத்தொகையில் 2 வீதமானோர் பசிபிக் தீவுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின் படி 65,700 பசிபிக் தீவினர் நியூசிலாந்தில் இருந்தார்கள்.

1970 களில் நாட்டில் ஏற்பட்ட பொருண்மிய நெருக்கடிகளின் காரணமாக, அப்போதைய தொழிற்கட்சி அரசு, குடிவரவாளர்களைக் கடுமையாக நடத்தத் தொடங்கியது. 1974க்கும் 1976ஆம் ஆண்டுக்கும் இடையில் பசிபிக் குடும்பங்கள் மீது மிக அதிக அளவில் இந்த சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இச்சோதனைகள் பெருமளவில் அதிகாலையில் அல்லது இரவு நேரங்களில் மேற்கொள்ளப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் இச்சோதனைகளின் போது கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்கள்.

பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு
இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு
ஜசிந்தா ஆடண்
7366 பேர் ஒப்பமிட்டு, ஆனி மாதம் நாடாளுமன்றித்தில் சமர்ப்பித்த ஒரு மனு உட்பட, இச்சமூகம் ஒன்றிணைந்து தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக மேற்கொண்ட கடும் முயற்சிகளின் பயனாக, நியூசிலாந்தில் வாழ்கின்ற பசிபிக் மக்கள் நடுவில் ஆழமான காயங்களைத் தோற்றுவித்திருக்கும் ஒரு கொள்கைக்காக அரசு முறைப்படி அந்த மக்களிடம் மன்னிப்புக் கோரும் என்று தலைமை அமைச்சர் ஜசிந்தா ஆடண் (Jacinda Ardern) அறிவித்தார்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி அன்று மன்னிப்பு கோருவதாக அரசு அறிவித்திருக்கிறது.


 
ஒரு குறிப்பிட்ட இனம் குறிவைக்கப்படும் நிகழ்வு நியூசிலாந்தின் வரலாற்றில் நடை பெற்றிருக்கிறது என்பதை நியூசிலாந்து அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சியோ சுட்டிக் காட்டினார். எமது மக்கள் வெட்கித் தலைகுனியும் வகையில் எமது மக்கள் மேல் திணிக்கப்பட்ட விலங்குகளை அகற்றும் செயற்பாட்டில் இது முதற்படி ஆகும்.

கோவிட் பெருந்தொற்று நெருக்கடிகள் மத்தியில் மாணவர்களின் கல்வி கருகிச் செல்கின்றதோ…? – பி.மாணிக்கவாசகம்
ஏற்கனவே நடந்து முடிந்த இப்படிப்பட்ட விடயங்களை சரியாக ஆய்வு செய்து அவற்றைப் புரிந்து அவற்றுக்காக நாம் வருந்தத் தவறுவோமாக இருந்தால், இதே விதமான செயற்பாடுகள் மீண்டும் ஒரு தடவை நடந்தேறலாம். நடந்த விடயங்கள் முற்றிலும் தவறானவை என்பதையும் இன்றும் அவை தவறானவை தான் என்பதையும் நாம் ஏற்றாக வேண்டும்.

குடிவரவுச் சட்டங்கள் அமுல் நடத்தப்பட்ட போது, இனப்பாகுபாடு காட்டப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை 1986 இல் விசாரித்த இன உறவுகளுக்கான ஒப்புரவாளர், இக்குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் இருப்பதைக் கண்டறிந்தார். முக்கியமாக 1985, 1986 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உரிய வதிவிட அனுமதியின்றி நாட்டில் தங்கியிருந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பசிபிக் தீவுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


 
ஆனால் உரிய அனுமதியின்றித் தங்கியிருந்தவர்கள் மேல் முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அவற்றில் 86 வீதமான சட்டநடவடிக்கைகள் பசிபிக் குடிமக்களை இலக்கு வைத்தது கண்டறிப்பட்டது. உரிய அனுமதியின்றி நாட்டில் தங்கியிருந்தவர்களில் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் மூன்றில் ஒரு பகுதியாக இருந்தார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் வெறும் 5 வீதமான சட்ட நடவடிக்கைகளே இவர்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டன.

பசிபிக் மக்களுக்கான அமைச்சின் தகவல்களின் படி 1974க்கும் 1976க்கும் இடையில் 5000க்கும் 12,000க்கும் இடைப்பட்டோர் இந்த இரு நாடுகளையும் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

ஏன், இப்போது?

இந்தச் சோதனைகள் மற்றும் கைதுகளின் காரணமாக பல பரம்பரைகளாகப் பசிபிக் மக்கள் அனுபவித்து வருகின்ற பாதிப்புகளை எந்தவொரு அதிகாரியும் கண்டு கொள்ளாததனாலும் பாடசாலைகளில் இவ்விடயம் பேசப்படாததன் காரணத்தாலும் விரக்தியுற்ற பெஞ்சி ரீமுவும் (Benji Timu) ஜோசியா துயாலாமாலியும் (Josiah Tualamali’i) குறிப்பிட்ட கோரிக்கையை வடிவமைத்து நாடாளுமன்றத்தில் யூன் மாதம் சமர்ப்பித்ததாக ரீமு அல்ஜசீராவுக்குத் தெரிவித்தார். தற்போது 27 வயதுடைய ரீமு கடந்த ஐந்து வருடங்களாகத் தனது அடையாளம் என்ன என்ற தேடலில் ஈடுபட்டு வருகிறார்.

இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசுசமோவாவின் (Samoa) குக் தீவை (Cook Island) பிறப்பிடமாகக் கொண்ட, நியோ (Niuean descent) வம்சத்தைச் சார்ந்த ரீமு தனது கலாச்சாரம் சந்தித்த போராட்டங்கள் பற்றி ஆய்வு செய்து வருகிறார். நியூசிலாந்தில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்காக தாம் தொடர்ந்து அனுபவிக்கும் வெட்கம் மற்றும் குற்றவுணர்வுகள் தொடர்பாகப் பலர் என்னோடு உரையாடியிருக்கிறார்கள். “புலம் பெயர்ந்து வாழும் பசிபிக் மக்களைப் பொறுத்த வரையில் பாக்கியம் பெற்றவனாக என்னை நான் பார்க்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.


 
இவ்விடயங்கள் பற்றிப் பாடசாலையில் எமக்கு எதுவுமே சொல்லித்தரப்படவில்லை என்பது விநோதமாகத் தான் இருக்கிறது. இனவாதத்தை எப்படி எதிர்ப்பது என்பது தொடர்பாக எந்தவிதமான அறிவூட்டலும் எனக்குத் தரப்படவில்லை. பாதிப்பு எப்பவோ ஏற்படுத்தப்பட்டது. அதன் வலி பல பரம்பரைகளாகக் கடத்தப்பட்டு வருகிறது. காவல் துறை மீதும் அரசு மீதும் காட்டப்படும் அவநம்பிக்கையாக அது வெளிப்படுகிறது. இன்னும் எத்தனையோ விடயங்கள் எமது மக்களை இன்னும் சமூகத்தின் அடிமட்டத்தில் வைத்திருக்கிறது. அது சமூகப் பொருண்மியமாக இருக்கலாம்,  கல்விநிலையாக இருக்கலாம். அல்லது நீதி பரிபாலனமாக இருக்கலாம். இழைக்கப்பட்ட தவறுகளைத் திருத்துவதற்கு மன்னிப்புக் கோருதல் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.

 

தொடரும்….

 

 

https://www.ilakku.org/new-zealand-apologizes-to-pacific-people/

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு – மொழியாக்கம்: ஜெயந்திரன்

(சென்ற வாரத் தொடர்ச்சி)

பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து பகுதி II

பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து பகுதி II

இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு – மொழியாக்கம்: ஜெயந்திரன்

ஏன், இப்போது?

இந்தச் சோதனைகளின் காரணமாக பல பரம்பரைகளாகப் பசிபிக் மக்கள் அனுபவித்து வருகின்ற பாதிப்புகளை எந்தவொரு அதிகாரியும் கண்டு கொள்ளாததனாலும், பாடசாலைகளில் இவ்விடயம் பேசப்படாததன் காரணத்தாலும் விரக்தியுற்ற பெஞ்சி ரீமுவும் (Benji Timu) ஜோசியா துயாலாமாலியும் (Josiah Tualamali’i) குறிப்பிட்ட மனுவைத் தயார்செய்து நாடாளுமன்றத்தில் யூன் மாதம் சமர்ப்பித்ததாக ரீமு அல்ஜசீராவுக்குத் தெரிவித்தார்.

Benji Timuநியூசிலாந்தின் ஐந்து மில்லியன் சனத்தொகையில் 8.1 வீதத்தினர் பசிபிக் தீவுகளைச் சேர்ந்த மக்கள் ஆவார். 2013ஆம் ஆண்டுக்கான தேசிய புள்ளிவிபரங்கள் இந்த மக்களின் சராசரி வருடாந்த வருமானம் 8800 நியூசிலாந்து டொலர்கள் எனக்கணிப்பிடுகின்றன. இது நாட்டின் சராசரி வருமானத்தை விடக் குறைவானதாகும். 2012-2014 ஆண்டுகளில் பெறப்பட்ட புள்ளிவிபரத் தகவல்களின் படி 28 வீதமான பசிபிக் பிள்ளைகள் வறுமை தாண்டவமாடும் வீட்டுச் சூழல்களில் வாழ்ந்தார்கள். அதேவேளையில் 16 வீதமான ஐரோப்பிய பூர்வீகத்தைக் கொண்ட பிள்ளைகளே வறுமைச் சூழலில் வாழ்ந்திருக் கிறார்கள்.

குறிப்பிட்ட காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளால் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு மரியாதை செய்யவும், அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஏற்றுக்கொள்ளவும், அவர்களுக்குப் பண உதவியை வழங்குவதற்காகவும், நிதி ஒதுக்கப்படவேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்ட மனு வேண்டு கோள் விடுத்தது.

பசிபிக் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனைகளாலும், பசிபிக் மக்களை இழிவு படுத்துவதற்கென்றே அரசினால் அங்கீகரிக்கப்பட்ட இனவாதப் பிரச்சாரங்களின் காரணமாகவும் இழைக்கப்பட்ட தவறுகளுக்கு மன்னிப்பு கோருதல் அரசைப் பொறுத்த வரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த போதிலும், மன்னிப்புக் கோருவது மட்டும் போதாது என்று ஓக்லான்ட் பல்கலைக்கழக சட்ட விரிவுரை யாளரான டிலான் ஏசபோ அல்ஜசீராவுக்குத் தெரிவித்தார்

மாற்றம் அவசியமானது

Dylan Asafo

Dylan Asafoநியூசிலாந்தைப் பொறுத்தவரையில் இனவாதமே அதன் குடிவரவுக் கொள்கைகளை மறைமுகமாக நெறிப் படுத்துகின்றது என்று ஓக்லான்ட் பல்கலைக் கழக சட்ட விரிவுரை யாளரான டிலான் ஏசபோ (Dylan Asafo) அல்ஜசீ ராவுக்குத் தெரிவித்தார்.

பசிபிக் மக்களுக்கும் வெள்ளை யினத்தவர் அல்லாத ஏனைய இனத்தவர்களுக்கும் நியூசிலாந்தில் நிரந்தர வதிவிட உரிமையைப் பெறுவதற்கான எந்தவிதமான தெளிவான வழிவகைகளும் முன்வைக்கப் படவில்லை. நியூசிலாந்தின் பொருண்மியத்தை வளப்படுத்தக் கூடியவர்கள் என்று நம்பப்படுகின்ற விருத்தியடைந்த, வெள்ளையினத்தவர் வாழ்கின்ற நாடுகளைச் சேர்ந்தவர் களுக்காகவே குடிவரவுக் கட்டமைப்பு வடிவமைக்கப் பட்டிருக்கின்றது. அதே நேரம் வெள்ளை யினத்தவர்கள் அல்லாதவர்கள் அனைவரும் பொருண்மியத்தைப் பொறுத்த வரையில் சாதகமற்ற முறையிலேயே நோக்கப்படுவது மட்டுமன்றி, குறிப்பிட்ட காலத்தில் காலாவதியாகும் தற்காலிக வதிவிட அனுமதிகளே அவர்களுக்கு வழங்கப் படுவதோடு அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஏனைய உரிமைகளும் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன.

பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து பகுதி II‘அங்கீகரிக்கப்பட்ட பருவகால தொழில் வழங்குநர் திட்டம்’ 2007 இல் அறிமுகப் படுத்தப் பட்டு, குறிப்பிட்ட பருவ காலங்களில் விவசாய வேலைகளுக்காக தொழிலா ளர்களை உள்வாங்கு வதற்காக வடிவமை க்கப்பட்டது. இதன் பொருள் என்னவென்றால், பசிபிக் தீவுகளைச் சேர்ந்தவர்கள் இத்திட்ட த்துக்கு விண்ணப் பிக்கலாம். ஆனால் அவர்களுக்கு மிகவும் குறைவான ஊதியங்கள் வழங்கப்படுவது மட்டு மன்றி, நியூசிலாந்து நாட்டுக்கு மிகவும் பெறுமதியான விதத்தில் பங்களிக்கும் இம்மக்களுக்கு இந்நாட்டில் நிரந்தரமாக வாழ்கின்ற உரிமை மறுக்கப்படுவது மட்டுமன்றி, தமது சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் செல்லுமாறும் அவர்கள் வற்புறுத்தப் படுகிறார்கள் என்று ஏசபோ மேலும் கூறினார்.

பாதுகாப்பில்லாத சூழ்நிலைகளில் பணியாற்ற பசிபிக் மக்கள் கட்டாயப்படுத் தப்படுகிறார்கள். தொழில்களுக்குப் பொருத்தமான கருவிகளாக மட்டும் அவர்கள் பார்க்கப்படுகிறார்கள். வேலை முடிந்ததும் அவர்கள் தூக்கியெறியப் படுகிறார்கள். அந்த மக்களின் மாண்பை இந்தக் கட்டமைப்பு குழிதோண்டிப் புதைக்கின்றது என்று அவர் கவலையுடன் தெரிவித்தார்.

இனவாதத்தோடு கூடிய ஒரு முரண்நிலை இங்கே காணப்படுகிறது. பன்னாட்டு ரீதியாக நாங்கள் பசிபிக்கின் ஒரு பகுதியாகவும் அதே வேளை நியூசிலாந்தின் அயலவர்களாகவும் பார்க்கப்படுகிறோம். அதே நேரம் குடிவரவுக் கொள்கைகளைப் பார்க்கும் போது, தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காகச் சுரண்டலுக்கு ள்ளாகின்ற இரண்டாந்தரக் குடிமக்களாகவே பசிபிக் மக்கள் கணிக்கப்படுகிறார்கள்.

யூன் மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் 7000 பேர் ஒப்ப மிட்டிருந்தார்கள். இவ்விடயம் தொடர்பாக அரசு தனது அக்கறையை வெளிப்படுத்தி யிருக்கின்றது. இத்தவறுகளுக்காக அரசு கவலையையோ வருத்தத்தையோ வெளிப் படுத்தி யிருந்தாலும், கட்டமைக்கப்பட்ட ரீதியாக இழிவுபடுத்தப்படும் ஒரு மக்கள் இனத்தின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். பாதிப்புகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 2000 மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் இம்மக்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது என்றும் மீண்டும் ஒரு தடவை மன்னிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்று தலைமை அமைச்சர் ஆடேண் கூறியதாக குடிவரவு அமைச்சரான கிறிஸ் பாபோய் தெரிவித்தார்.

பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து பகுதி IIஅங்கீகரிக் கப்பட்ட பருவகால தொழில் வழங்குநர் திட்டத்தை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக அரசு உறுதியாக இருக்கிறது என்பதோடு, அதிலே திருத்த ங்களை மேற்கொள்ளவும் நாங்கள் முடிவெடுத் திருக்கிறோம்.

வர்த்தகம், புத்தாக்கம், தொழில் வழங்குதல், போன்றவற்றுக்குப் பொறுப்பான அமைச்சினால் இத்திட்டம் தொடர்பான ஒரு மீளாய்வு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தொழில்களால் பெறப்படுகின்ற வருமானத்தில் கிடைக்க வேண்டிய பங்கு அவர்களுக்குக் கிடைக்கச் செய்யவும், நியூசிலாந்தின் தொழிலாளர்கள் இடப்பெயர்வுகளைச் சந்திக்கின்ற போது, அப்படிப்பட்ட பிரச்சினைகளை செயற்றிறன்மிக்க விதத்தில் கையாளக்கூடிய வகையில் நீதியான, வெளிப்படையான வகையில் தொழிலாளருக்கான நிதி ஒதுக்கப்படவும் தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் அவர்களது சிறப்பான செயற்பாட்டை உறுதிப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீர்திருத்தங்கள் உரிய முறையில் அமுல்நடத்தப்படுவதை உறுதிப்படுத்தவும், தொழிலாளர்கள் சுரண்டப்படுவதைக் கணிசமான அளவு குறைப்பதற்கும் இம்மீளாய்வில் கவனம் செலுத்தப்படுகிறது. தம்மிடம் தொழில் புரியும் தொழிலா ளர்களுக்கு உரிய தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, தொழிலாளர்களைத் தொழில் வழங்குநர்கள் நல்ல முறையில் பராமரிப்பதை உறுதி செய்யவும் சீர்திருத் தங்கள் மேற்கொள்ளப் படுகின்றன என்று பாபோய் தெரிவிக்கிறார்.

அமைச்சர் சீயோ பின்வருமாறு கூறுகிறார்.  இக்குறிப்பிட்ட திட்டத்தை நாங்கள் தொடர்ச்சியாக மீளாய்வு செய்துகொண்டே இருக்கிறோம். அத்துடன் உள்நாட்டில் வாழும் சமூகத்திடமிருந்து புலனாய்வுத் தகவல்களை நாங்கள் திரட்டிக்கொண்டே இருக்கிறோம். இத்திட்டம் தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி நான் அறிந்திருக்கிறேன். உண்மையில் இங்கே இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒன்று வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சுரண்டப்படும் விடயம்.

அதே நேரம் தொழில் வழங்குநர்களுடன் உரையாடும் போது அவர்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையையே சொல்கிறார்கள். அதே நேரம் உள்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கும் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்பதையும் நாங்கள் மறந்துவிட முடியாது. நியூசிலாந்தின் ஒரு முக்கிய சமூகத்தினருக்கு விடியற்காலைச் சோதனைகள் ஏற்படுத்திய தீங்கையும் உளவியல் ரீதியான பாதிப்பையும் நாம் ஏற்றுக்கொள்வது முக்கியமானது.

நல்ல குடிமக்களாக வாழும் நோக்கத்தோடு தான் அந்த மக்கள் இங்கே வந்தார்கள். ஆனால் அவர்களைப் பாதுகாக்க வேண்டியவர்களாலேயே அவர்கள் அநீதியாக நடத்தப்ப ட்டார்கள். தமக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதைத் துணிவோடு எடுத்துச் சொல்ல அந்த மக்கள் முன்வர வேண்டும். ஏனென்றால் அப்படிச் சொல்வது அந்த மக்களுக்கு ஏற்பட்ட காயங்களைக் குணமாக்குகின்ற ஒன்றாக அமையும். உண்மையாக நடந்தது என்ன என்பதை நியூசிலாந்தில் வாழ்கின்ற ஏனையோருக்கும் தெரியப்படுத்த வேண்டும். விசேடமாக அரசியல்வாதிகள், காவல் துறையினர், குடிவரவு அதிகாரிகள் ஆகியோர் மூடிய கதவுகளுக்குள் எதனைப் பேசினார்கள் என்பது வெளிக்கொணரப்பட வேண்டும். அப்போது தான் இப்படிப்பட்ட விடயங்கள் மீண்டும் ஒரு தடவை நிகழாமல் தடுக்க முடியும்.

நன்றி: அல்ஜசீரா

https://www.ilakku.org/new-zealand-apologizes-to-pacific-people-ii/

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.