Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகில் உள்ள ஊர்திகளுக்கான தமிழ்ப்பெயர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

உலகில் உள்ள வாகனங்களுக்கான தமிழ்ப்பெயர்கள்:

 


● Driver- சாரோட்டி, ஓட்டுநர், பாகன், சூதன் , சாரகன், தேரகன், தாரகன், கோலாள், எந்திரு, துரத்தநர் ,பாகு, கொற்றன் .

    • Hand cart-கைவண்டி, சகடிகை

 

Automobile - தானுந்து

●TWO WHEELERS- ஈருருளிகள்

  1. Motor bike- உந்துருளி
  2. Scooter-குதியுருளி
  3. Scooty- பாவையுருளி : நன்றி: வை. வேதரத்தினம் - த.ப.ம.
  4. Cycle- மிதிவண்டி/சமட்டு வண்டி
  5. Mophed- பேடுருளி : நன்றி: வை. வேதரத்தினம் - த.ப.ம.

 


●THREE WHEELERS- மூவுருளிகள்

  1. Auto rickshaw- தானியிழுவண்டி
  2. Cycle rikshaw- மிதியிழுவண்டி / சமட்டு வண்டி

 


●4/ more WHEELERS -- 4/ அதற்கு மேற்பட்ட உருளிகள்

  1. Cable car- தொங்கூர்தி
    1. --> பொருள் உள்ள வழக்கில் உள்ள சொல்
  2. Convertibles- மொட்டைவண்டி
    1. --> இந்த வகை சகடத்தை மொட்டையாகவும் மாற்ற முடியும் என்பதாலும் ஏற்கனவே எம்மிடம் மொட்டைவண்டி என்னும் சொல்லும் இருப்பதாகும் இதற்கு நான் 'மொட்டைவண்டி' என்னும் சொல்லை முன்மொழிகிறேன்.
  3. Luxury cars- ஆடம்பர மகிழுந்து/சகடம்
  4. Car- மகிழுந்து/ சகடம்
    1. --> சகடம் என்னும் சொல்லானது ஏற்கனவே எம்மிடத்தில் உள்ள சொல். இதையே மகிழுந்திற்கும் வழங்கலாம். அப்படி வழங்கினால் கீழுள்ள மகிழுந்து வகைகளிற்கான தமிழ்ச்சொற்களை இலகுவாக உருவாக்கிவிடலாம்.
  5. coupe - சகடி
    1. --> எழுந்தமானமாகத் தான் வழங்கினேன். (சகடு(ஊர்தி) என்னும் சொல்லிலிருந்து கிளைத்த சொல்லாகும்)
  6. Sedan - சாடு
    1. --> எழுந்தமானமாகத் தான் வழங்கினேன். (சகடு(ஊர்தி) என்னும் சொல்லிலிருந்து கிளைத்த சொல்லாகும்)
  7. Hatchback- சகடை
    1. -->எழுந்தமானமாகத் தான் வழங்கினேன். (சகடு(ஊர்தி) என்னும் சொல்லிலிருந்து கிளைத்த சொல்லாகும்)
  8. Pickup- சாகாடு
    1. --> ஆரைச்சாகாடு என்பது கொழும்பில் இருந்த ஒரு பழைய பாரவூர்தி வகையின் பெயர் ஆகும். அதில் உள்ள சாகாடு என்பதையே இங்கு நான் கொடுத்துள்ளேன். ஆரை என்பது ஆரைச்சாகாடுவின் கூரையைக் குறித்த சொல்லகும்.
  9. Canter - காடு/காடி
    1. --> இவ்வூர்தியானது சாகாட்டை விட அதிகளவு பொதியைனைக் காவிச் செல்லக் கூடியது(பின்னால் நீள்மான பெட்டி உண்டு) என்பதால், சாக்காட்டின் நீளம்/சுருக்காமான காடு/காடி(கொ.வழ.) இதற்கு வழங்கலாம். பொருள் பிடிப்பது இலகு.
  10. Crossover/ CUV - சகடு பயனுடைமை ஊர்தி(சபூ)
    1. --> எழுந்தமானமாகத் தான் வழங்கினேன்.
  11. Sports utility vehicle(SUV)- கடுவழி பயனுடைமை ஊர்தி (கபூ)
  12. Multipurpose vehicle(MPV)- பன்னோக்கு ஊர்தி (பநோஊ)
  13. wagon - வையகம்
    1. --> வையகம் என்பதும் ஊர்தியின் மறு பெயர்தான்
  14. Van- வையம் | கிட்டிப்பு: திருத்தம் பொன் சரவணன் (Thiruththam Pon Saravanan)
    1. panelvan - பலகைவையம்/குருட்டுவையம்
    2. minivan - சிறுவையம்
  15. Jeep- பொநோவகம்
    1. --> "பொது நோக்க வகம்(ஊர்தி)- General purpose vehicle" என்பதன் சுருக்கம்
  16. Recreational Vehicle - பொழுதுபோக்கு ஊர்தி
    1. Caravan- செலவிழுவை | செலவு - travelling
    2. Motorhome - கூடாரவண்டி
      1. ---> இங்குள்ள கூடாரம் என்பது ஒரு 'கூடாரத்தை' குறிக்கும் சொல்லாக எடுக்கவும். அப்படி எடுக்கும் போது கூடராத்தினுள் எல்லாமே இருக்கும் என்பது போல (உருவகம்) மோட்டர்கோமினுள்ளும் எல்லாம் இருப்பதால் இச்சொல்லை அதற்கு நிகரான தமிழ்ச்சொல்லாக வழங்கலாம். சிக்கலும் வராது. மேலும் கூடாரவண்டி எனப்து பண்டைய கூடாரம் கொண்ட வண்டியினைக் குறித்த தமிழ்ச்சொல்லாகும்.
    3. Campervan - பள்ளிவையம்(பழந்தமிழ் சொல்)
      1. --> மோட்டர்கோமோடு ஒப்பிடுகையில் இதன் சொகுசுகள் குறைவு என்பதால் பள்ளிவையம் என்று ஏற்கனவே எம்மிடம் உள்ள சொல்லை இதற்கு வழங்கினேன். (பள்ளி- நித்திரை; வையம்-வான்). அதாவது "நித்திரைக்கு மட்டும் தான் லாயக்கு என்ட மாதிரி". ஆனால் உண்மையில் உது அதைவிட பயனுள்ளது.
  17. Rover - தோரணம்
    1. ---> தோரணம்: வண்டியைக் குறித்த பண்டைய தமிழ்ச் சொல்லாகும்.(யாழ்.அக.) . || துருவு → தூர் → தோர் → தோரணம் = எங்கும் புகுந்து துருவும் வண்டி. || தூர்தல் = புகுதல், துருவுதல், குறுக்காகச் செல்லுதல்.
  18. Cruiser - கலத்தூரம்
    1. --> இங்குள்ள கலத்தூர் என்னும் சொல்லானது 'இராமகி' அவர்களால் முன்மொழியப்பட்ட சொல்லாகும். இச்சொல்லோடு 'அம்' என்னும் விகுதி சேர்த்து என்னும் ஒரு வகை நிலம் & கடல் கலங்களுக்கன சொல்லாக நான் முன்மொழிகிறேன். (அம் விகுதியாக கொண்ட ஊர்திகள் : - வகம்(ஊர்தி), கூவிரம்(தேர்) )
  19. Coach - குலாரி/குலால்வண்டி
    1. --> இங்குள்ள இரு சொற்களும் பண்டைய இந்தியாவில் வகை வண்டிகளைக் குறித்த சொல்லென்று செ.சொ.பே.மு. உள்ளது. அதையே இங்கு கொடுத்துள்ளேன்.
    2. Bus- பேருந்து
  20. Small bus- சிற்றுந்து
  21. Call taxi/ cab- அழைப்பூர்தி
  22. Train- தொடர்வண்டி
  23. Metro train- பெருநகர் தொடர்வண்டி
  24. Tram- கம்பிப்பேருந்து
  25. passenger train - பாந்தர் தொடர்வண்டி (பாந்தர் என்றால் பயணிப்பவர்கள் என்னும் பொருளாகும்)
  26. express train - விரைவு தொடர்வண்டி
  27. super fast express- கதி தொடர்வண்டி
  28. Ambulance- நோயாளர் காவுவண்டி
  29. Emergency vehicle - கெதியூர்தி
  30. Lorry/ truck- பாரவூர்தி
  31. Garbage truck- குப்பை பாரவூர்தி
  32. Refrigeration truck- குளிர்பதனப் பாரவூர்தி
  33. Ballast tractor- ஞாலப் பாரவூர்தி
  34. Tow truck- இழுவூர்தி
  35. Oil/milk tanker- எண்ணை/பால் தாங்கியுருள்
  36. Water tanker/ water carrier - நீருருள் (பண்டைய தமிழ்ச்சொல். அக்காலத்திலும் இதே பொருளே)
  37. Car/ bike carrier- மகிழுந்து/ உந்துருளி பட்டடை
  38. Skating board/ shoe- சறுக்குப் பலகை/காலணி
  39. Snow mobile- சிந்தூர்தி | சிந்து -snow
  40. sled- இசிவூர்தி | credit: செ. இரா. செல்வக்குமார்
  41. Fish vehicle - மீன்பாடி வண்டி

 


●construction vehicles- கட்டுமான ஊர்திகள்

  1. Fire engine- தீயணைப்பூர்தி
  2. Trolley- தள்ளுவண்டி
  3. Tractor- இழுபொறி ('இழுவைப் பொறி' என்பதன் சுருக்கமே 'இழுபொறி' ஆகும்)
  4. Trailer- இழுவை
  5. Concrete mixer- திண்கரை கலவை இயந்திரம்
  6. Crane- பாரந்தூக்கி
  7. Dump truck- கட்டுமான பாரவூர்தி
  8. Haul truck- பெருங்கட்டுமான பாரவூர்தி
  9. Forklift- முட்பாரந்தூக்கி
  10. Excavator- இடங்கவூர்தி | இடங்கம் - பிளக்கும் அல்லது தோண்டுங் கருவி
  11. Bulldozer- இடிவாருவகம்
  12. Loader- ஏற்றுவகம்
  13. Grader- கட்டனைவகம்
  14. Trencher- அகழியகம்
  15. Road roller- நெரியுருளை
  16. Snow blower- சிந்து ஊதுவகம்
  17. Auger- துளைவகம்
  18. Reclaimer- கனமீட்பு இயந்திரம்
  19. Stacker- கனங்குவிப்பு இயந்திரம்
  20. Suction excavator- வெற்றிட உறிஞ்சுவகம்
  21. Backhoe- கொடுங்கைவகம் | கொடுங்கை - வளைந்த கை
  22. Feller bunched- அரிவகம்
  23. Harvester- வெட்டுவகம்
  24. Street sweeper- வீதி துடைவகம்
  25. Ballast tamper- தண்டவாள கெட்டிவகம்
  26. Scraper- மண்வாருவகம்
  27. Straddle carrier- கொள்கலம் காவி
  28. Reach stacker- கொள்கலம் தூக்கி
  29. Pavement milling machine- தார் அரைக்கும் இயந்திரம்
  30. Paver- தாரிடுவகம்
  • மேலே ஈற்றில் உள்ள வகம் என்னும் சொல்லின் பொருள் ஊர்தி யாகும்.. இங்கு வகம் என்று ஏன் கொடுத்துள்ளேன் என்றால் இச்சொல்லானது பேச்சுவழக்கில் உச்சரிக்கும் போது மிகவும் எளிமையாக இருக்கும் என்பதால்!

 


குறிப்பு:

அருள் கூர்ந்து அனைவரும் இந்த உந்து என்னும் சொல்லை ஊர்திகளுக்கு பயன்படுத்துவதை விட்டு விடுங்கள்.. உந்து என்றால் 'முன்னே செல்வது' என்று பொருள். அவ்வளவே!.. ஊர்திகள் முன்னும் செல்லும்; பின்னும் செல்லும்; பக்க வாட்டிலும் செல்லும். ஆதாலால் இந்த 'உந்து' என்னும் சொல்லை விட்டு விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

கீழ்க்கண்ட 3 சொற்களில் மட்டும் இதன் பயன் அதிகமாகி விட்டதால் அவைகளைத் தவிர்த்து இதன் பயன் பாட்டினை நிறுத்திக் கொள்வோமாக…

  1. மகிழுந்து - car
  2. சிற்றுந்து - small bus
  3. பேருந்து - bus

 

உசாத்துணை:

  • கழகத்தமிழ் அகராதி
  • Wikipedia

ஆக்கம் & வெளியீடு :

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.