Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழந்தமிழரிடையே இருந்த பல்வேறு விதமான உறவுப்பெயர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

பழந்தமிழரிடையே இருந்த பல்வேறு விதமான உறவுகளுக்கான இலக்கியப் பெயர்கள் :

main-qimg-f0574ea7808dd56cf10d341e0b572af5-mzj

  • காண்க -

தாய் & தந்தை:- அம்மா, அப்பாவை குறிக்கும் வேறு சொற்கள் எவை? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில்

கணவன் :- கணவன் என்னும் சொல்லுக்கு தமிழில் வழங்கப்படும் வேறு பெயர்கள் எவை? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில்

மனைவி :- மனைவி என்னும் சொல்லுக்கு தமிழில் வழங்கப்படும் வேறு பெயர்கள் எவை? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில்

  • தம்பதி- மணவினையர், சோடி, இரட்டை.
    • கணவன் மனைவியினை அழைக்கும் விதம் - பெண்டில் , என்னவள் , இஞ்சாருமப்பா, பெயர்கூறி அழைத்தல் (தமிழ்நாட்டு வழக்கு)
    • மனைவி கணவனை அழைக்கும் விதம் - என்னவன், இஞ்சாருங்கோ/ இஞ்சாருங்கோப்பா, இஞ்சையப்பா , இஞ்சையுங்கோ , என்னங்கம்.
    • ஈற்று, பேற்று - ஈன்ற மகளும் அவர்களின் பிள்ளைகளும்
  • காதலர் : →
    • காதலன் - அன்பன், கண்ணாளன், வயவன் ,நயவன், காந்தன்
    • காதலி - அன்பள், கண்ணாட்டி, காந்தை, வயவள், நயவள்.
    • கள்ளக்காதலன் - வராசனன்
    • கள்ளக்காதலி - வராசனி
  • நட்பாளர்நண்பர் என்னும் சொல்லுக்கான ஒத்த தமிழ்ச் சொற்கள் யாவை? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில்
  • பெற்றோர்- அம்மையப்பர், இருமுதுகுரவர், ஈன்றவர்.
  • வம்சம்(skt.) - கால்வழி, பரவனி, தலைமுறை, பிறங்கடை, சந்ததி.
  • சரவடி - தலைமுறை கடந்து நீண்ட தொடர்பினைக் கொண்டது அல்லது வழிவழியாக வந்த குழு அ இனம்.
  • தாயாதிகள் - ஒருதாயின் வழித்தோன்றல்கள்

 


Credit: பாவாணர்

  • தலைக்கட்டு - கணவனும் மனைவியும் மட்டுமே உள்ள குடும்பம்
  • குடும்பம்- அம்மா, அப்பா, பிள்ளைகள்
  • குடும்பு- பல குடும்பங்கள் சேர்ந்த கூட்டம்
  • இல் அ குடி - பல தலைமுறையாய்த் தொடர்ந்து வரும் பெருங் குடி
  • மரபு - தொடர்ந்துவரும் குடிவழி
  • குலம் - பலகுடிகள் சேர்ந்த குடி ( பள்ளியர்,கவுண்டர்,அகம்படியர் முதலான பல குடிகள் சேர்ந்த 'வேளாண் குலம்' போன்றவை)
  • இனம் - ஒரே வகையான மொழி பேசும் பல குலத் தொகுதி(nation)
  • வரணம் - நிறங்காட்டாத மாபெருங் குலம்

 


→ தம்முன் - தனக்கு முன் பிறந்தவர்

→ எம்முன் - எமக்கு முன்பிறந்தவர்

  • தம்பி:
    • தம் + பின் → தம்பி
  1. இளையவன்
  2. இளையோன்
  3. பின்னனோன்
  4. பின்னன்
  5. பிற்பிறந்தான்
  6. இளவல்
  7. இளவன்

குஞ்சித்தம்பி, சின்னக்குஞ்சு - உடன்பிறப்புகளிடையே இளையவரை, அதாவது வயதில் சிறிய தம்பி அழைக்கும் வழக்கம்.

நும்பி / உம்பி- உன் தம்பி

எம்பி- என் தம்பி

  • தங்கை:
    • தங்கை என்னும் சொல் அக்கை என்னும் சொல்லின் எதிர்வடிவமாகப் பிறந்திருக்க வேண்டும்.
  1. தங்கச்சி
  2. இளங்கிளை
  3. இளையவள்
  4. இளையோள்
  5. இளவள்
  6. கை
  7. பின்னை
  8. பின்னவள்
  9. பிற்பிறந்தாள்

நுங்கை / உங்கை - உன் தங்கை

எங்கை- என் தங்கை

 


  • தமையன்:
    • தமையன் → தம் + ஐயன்
  1. அண்ணன்
  2. அண்ணல்
  3. அண்ணாச்சி
  4. அண்ணை
  5. அப்பன்
  6. அத்தன்
  7. ஆதி பூதன்
  8. இறை
  9. சேட்டன்
  10. தன்னை
  11. மூத்தோன்
  12. முன்னவன்
  13. முன்னை
  14. முன்பிறந்தான்

நங்கன் - நம் அண்ணன்

கொண்ணா- பிறர் ஒருவரின் அண்ணா

மூத்தண்ணன்/ பெரியண்ணன் - முதலாவது அண்ணன்

  • தமக்கை:
    • தமக்கை → தம் + அக்கை
  1. அக்கச்சி
  2. அக்கா
  3. அக்காத்தை
  4. அக்கன்
  5. அப்பி
  6. அப்பாத்தை
  7. ஆச்சி
  8. முற்பிறந்தாள்
  9. சேட்டி
  10. மூத்தாள்
  11. தன்னை
  12. தௌவை
  13. முன்னவள்
  14. முன்னை
  15. தத்தை

மூத்தக்கா/ பெரியக்கா- மூத்த தமக்கை

கொக்கா- பிறர் ஒருவரின் அக்கா

அக்காள்- அரத்த உறவுமுறையுள்ள அக்கா(ஆள்வி)

அக்காள்- மணக்கலப்பால் ஏற்பட்ட அக்கை முறையினள்!

 


  • மகன்:
  1. புதல்வன்
  2. குமரன்
  3. இளவன்
  4. தன்னன்
  5. நந்தனன்
  6. உம்பல்
  7. உரதன்
  8. கால்
  9. கொள்ளி
  10. மைந்தன்
  11. சுதன்
  12. குட்டல்
  13. செம்மல்
  14. மதலை
  15. மருமான்
  16. மோன்
  17. பிள்ளையன்
  18. பொருள்
  19. வழி
  20. மெய்யன்
  21. தோன்றல்
  22. பூதன்
    • குலசன் - குலம் வழுவாத தாய் தந்தையரிடத்தில் பிறந்தவன்.
    • எந்தையான் - என் தந்தையின் பெயர் தாங்கிய என் மகன்.
    • எம்மான்- எம் மகன்
    • கரீதன் - விலைக்கு வாங்கப்பட்ட மகன்.
    • உரயன் - ஒரே குலத்தில் பிறந்த மகன் .
    • செம்மல் - பெருமையுள்ள மகன்
    • தலைமகன் - மூத்தமகன்
    • இறைமகன் - அரசனின் மகன்

.

  • மகள்:
  1. புதல்வி
  2. குமரி
  3. நந்தினி
  4. துகி
  5. ஐயை
  6. பந்தனை
  7. சுதை
  8. இளவன்
  9. மோள்
  10. பிள்ளை
    • எந்தையாள்- என் தந்தையின் பெயர் தாங்கிய என் மகள்.
    • எம்மாள்- எம் மகள்
    • கரீதை- விலைக்கு வாங்கப்பட்ட மகள்.
    • குலசை - குலம் வழுவாத தாய் தந்தையரிடத்தில் பிறந்தவள்.
    • உரயள்- ஒரே குலத்தில் பிறந்த மகள் .
    • தலைமகள் - மூத்த மகள்
    • இறைமகள் - அரசனின் மகள்
  • எச்சம் - மகள், மகன் என்னும் இருபாற்கும் பொதுப்பெயர்
  • மகார், சிறார், குறுமாக்கள் - பிள்ளைப் பன்மையின் பெயர்.

 


→ மச்சான் - என் தாய் /தந்தை -இன் உடன்பிறப்புகளின் ஆண் பிள்ளை

→ மச்சாள்- என் தாய் /தந்தை -இன் உடன்பிறப்புகளின் பெண் பிள்ளை

  • ஆள்வி- மச்சான் / மச்சாள் (cousin) என்பது போல பொதுச் சொல்.
    • மூத்தாள்வி- வயதில் பெரிய ஆள்வி.
    • இளச்சனாள்வி- வயதில் சிறிய ஆள்வி.
  • மருஆள்வி / மராள்வி - மச்சான் / மச்சாள் இன் துணைவர் (கணவன் அல்லது மனைவி ).
    • மூத்த மராள்வி - ஆள்வியின் கணவன்
    • மருக்கையாள்வி - ஆள்வியின் மனைவி

மூத்த மராள்வி , இளைய மராள்வி -கணவனின் ஆள்வி.

மரு தங்கையாள்வி, மருதங்காள்வி - மனைவியின் ஆள்வி.

மருஅண்ணாள்வி -கணவனின் ஆள்வியின் கணவன்.

மரு இளையாள்வி.- மனைவியின் ஆள்வியின் கணவன்.

மரு அக்காள்வி அ மரு தங்காள்வி - கணவனின் ஆள்வியின் மனைவி.

மரு அண்ணாள்வி அல்லது மரு பின்னாள்வி - மனைவியின் ஆள்வியின் மனைவி.

 


ஓரி - கணவனுடன் பிறந்தான் மனைவி.

மைத்துனி- சகோதரியின் கணவனின் சகோதரி

நாத்தூண், நாத்துணாள், வசை - கணவனுடைய அக்கை

அத்தான், மூத்தார் ,நாத்தனான் ,மச்சாண்டார்,மைத்துனன் - கணவனின் அண்ணன்

கொழுந்தன்,மைத்துனன், தேவன்- கணவனின் தம்பி

கொழுந்தி, அத்தாச்சி - கணவனுடைய தங்கை

கொழுந்தி - தம்பியின் மனைவி

மச்சினன், மச்சம்பி, மைத்துனன் - தங்கை கணவன்

ஆயந்தி, அண்ணி, மைத்துனி , நங்கையாள், அத்தாச்சி - தமையன் மனைவி

மனைவியின் அக்கா - கொழுந்தி , மைத்துனி, மூத்தளியாள், நங்கையாள்

மனைவியின் தங்கை - மச்சினி,மைத்துனி

மனைவியின் அண்ணன் - மூத்த அளியன், அத்தான்

மனைவியின் தம்பி- இளையளியன்

மனைவியின் தங்கை - இளையளியாள், கொழுந்தி

மனைவியின் தங்கை கணவர்- சட்டகர்

 


நல்லம்மாள்- தாயுடன் பிறந்தவள்

நல்லம்மான் - தாயுடன் பிறந்தவன்

நல்லப்பன் - தந்தையுடன் பிறந்தவன்

நல்லப்பாள்- தந்தையுடன் பிறந்தவள்

 


முறைப்பெண் - முறைப்பையன் - அக்கா மகள், மாமன் மகள், அத்தை மகள் அனைவரும் முறைப்பெண்கள்தான். இந்த உறவுமுறையில் வயதில் மூத்த பெண்ணை அத்தாச்சி என்றும் விளிப்பார்கள் (மூலம் தஞ்சாவூர் வழக்கு ).

 


மைத்துனி, அத்தங்கார் - தாய்மாமன்/ அத்தை ஆகியோரின் மகள்.

மைத்துனன் ,அளியன், அம்மாஞ்சி - தாய்மாமன்/ அத்தை ஆகியோரின் மகன்.

அத்திம்பேர்/ அத்தையன்பர்/ மாமன் - அத்தை கணவன்

 


அம்மான் / மாமகன் /மாமா / மாமடி/ மாதுலன் /மாமன் - தாயுடன் உடன் பிறந்தான்.

அம்மாமி / மாமி/ தந்துவாய்- மாமன் மனைவி

மானி,மாமா / மாமி , அத்தை/மாமனார் - கணவன் அ மனைவியின் பெற்றோர்

மருமகன் / மருமாள் - ஒருவரின் மகளின் கணவன்.

மருமகள் / மணாட்டுப் பெண்- ஒருவரின் மகனின் மனைவி.

மாப்பிள்ளை - திருமணமாகப் போகும் ஒருவன்.

மணப்பெண் - திருமணமாகப் போகும் ஒருத்தி,

மணவறைத் தோழன் - மாப்பிள்ளைத் தோழன்

மணவறைத் தோழி - மணப்பெண்ணின் தோழி

 


சின்னம்மா

  • தாயின்/ தகப்பனின் தங்கை முறை வரும் உறவினர்
  • தந்தையின் இரண்டாந்தாரத்து மனைவி

சின்னப்பா

  • தாயின்/ தகப்பனின் தங்கை முறை வரும் உறவினர்
  • தாயின் இரண்டாந்தாரத்து கணவன்

 


  • சக்களத்தி, ஒக்களத்தி, வைப்பாட்டி, ஆசைக்கிழத்தி, தொடர்புடையவள்- சக நிலையில் களம் புகுந்தவள்.
  • சக்களத்தன், ஒக்களத்தன், வைப்பாட்டன், ஆசைக்கிழவன், தொடர்புடையவன் - சக நிலையில் களம் புகுந்தவன்.
    • ஓரகத்தான் - ஓர் குடி மணாளன், ஓர் குடியோன் .
    • ஓரகத்தி - ஓர்ப்படி, ஓர்ப்படைச்சி (ஒரே வீட்டில் புகுந்தவர்கள்).

கன்னி - கன்னி கழியாத பெண்

கானீனன் - திருமாணம் ஆகாத பெண் பெற்றெடுத்த மகன்.

கானீனி - திருமாணம் ஆகாத பெண் பெற்றெடுத்த மகள்.


 

ஏதி - தொலையுறவினர்

வழித்தோன்றல் - கோத்திரம், பிள்ளடி, பிறங்கடை.

எம்மோர்- எம்முடையவர்

எம்மையோர்- எம்மவர்

நம்மளவன்(ஒருமை) - நம்மையொத்தோர்/ நம்மனோர்(பன்மை)

நம்முள்ளவன் - நம்முடையவன்

தமரவர், தமர் - தம்மவர்

தாயாதி - ஒரேகொடி வழியில்‌: பிறந்த உரிமைப்பங்கானி -agnate

 


உடன்பிறந்தார்- ஒரு வயிற்றோர்

    • உடன் பிறந்தான்
    • உடன் பிறந்தாள்

மருகன் - என் உடன்பிறந்தாரின் மகன்

மருகி - என் உடன் பிறந்தாரின் மகள்

    • இளைஞன் - இளைஞை, இளைஞி / குமரன்-குமரி / உவன் - உவதி / பொடிச்சி-பொடியன் / பெட்டை- பெடியன் / தருணன் - தருணி / திக்கரன் - திக்கரி, தீதை / மள்ளன்-மள்ளி = இளைஞர்/ பொடியள்/ இளந்தாரி / தருணர்/ திக்கரர்
    • சிறுவன் - சிறுமி / எடன் -எடி = சிறுவர், இளவல் , எடர்,சிறார்
    • பையல், பையன் / பையை = பைதல்
    • மூத்தோன் - மூத்தோள் = மூத்தோர் (வயதில் மூத்தவர்கள் அனைவரையும் குறிக்கும் சொல்)

 


தலைமூத்த - முதலாவதாய்ப் பிறந்த

தலைச்சன், தலைச்சி - மூத்த பிள்ளை

குழந்தை - குழலி, சேய், மதலை, அப்பி, குழவி, மழவு

  • வாட்டி - சிறு பெண்குழந்தை
  • வாட்டன் - சிறு ஆண்குழந்தை

பஞ்சான் - கைக்குழந்தை

மகவு/ பாலன்- பிள்ளை ; பாலகர் - பிள்ளைகள்

முன்னணை/ தலை மகவு- முதற்பிள்ளை

  • பிள்ளையன் - ஆண் பிள்ளை
  • பிள்ளையள்- பெண் பிள்ளை

நண்டு நசுக்கு - சின்னஞ் சிறு குழந்தைகள்

தருமக்கட்டை - அநாதைப் பிள்ளை

  • சூனன் / தௌகித்திரன் - மகளின் மகன்
  • சூனை / தௌகித்திரை- மகளின் மகள்
  • குறுமாக்கள்- பிள்ளைகள் பெற்ற புதல்வர்
    • மகனின் மகன், மகளின் மகன் - பெயரன், பேரன்
    • மகனின் மகள், மகளின் மகள் - பெயர்த்தி, பேத்தி
    • பேரனின் மகன் - கொள்ளுப் பேரன், கொட்பேரன்
    • பேரனின் மகள் - கொள்ளுப் பேர்த்தி, கொட்பேர்த்தி

பச்சைப் பிள்ளைத் தாச்சி- கைக்குழந்தையைக் கொண்ட தாய்.

மகவாட்டி- குழந்தைப் பிள்ளைக்காரி.

குருத்துகள் - இளம் பிள்ளைகள்

 


  • பெரியப்பா , பெப்பா, பெரியப்பு ,வலியந்தை, மூத்தப்பன், தந்தையண்ணன், மூத்தப்பா, பெரியையா - என் தாய் / தந்தையின் அண்ணன்; என் தாய் / தந்தையின் அக்கா கணவர்.
  • பெரியம்மா, பெம்மா, பெரியம்மை, பெரிய தாய், பெரியாத்தாள், பெரியாத்தை, பெரியாச்சி, பெரியாயி- என் தாய் /தந்தையின் அண்ணன் மனைவி; என் தாய் / தந்தையின் அக்கா.
  • சித்தி , பின்னி, சிற்றம்மா, சின்னம்மா, தொத்தா, குஞ்சம்மா, குஞ்சியாச்சி, சிறியதாய், தொத்தா, சிரத்தியார் - தகப்பன், அல்லது தாய் வழித் தந்தையின் உடன்பிறந்தோரில் இளைய உடன்பிறந்தாள்.
  • சித்தப்பா , பின்னன், சிற்றப்பன், சின்னப்பன், சிறிய தகப்பன், குட்டப்பன், சின்னையா, குஞ்சையா, குஞ்சியப்பு, குஞ்சையர், சிறியதகப்பன் - தகப்பன், அல்லது தாய் வழித் தந்தையின் உடன்பிறந்தோரில் இளைய உடன்பிறந்தான்.
  • சீனியப்பு - தகப்பன், அல்லது தாய் வழித் தந்தையின் உடன்பிறந்தோரில் கடைசி உடன்பிறந்தான். அதாவது தாத்தா/பாட்டாவின் இளைய உடன்பிறந்தான்.
  • சீனியம்மா - தகப்பன், அல்லது தாய் வழித் தாயின் உடன்பிறந்தோரில் கடைசி உடன்பிறந்தாள். அதாவது தாத்தா/பாட்டாவின் இளைய உடன்பிறந்தாள்.
  • மாமா/ மாமடி- தாயுடன் பிற்பிறந்தவன்
  • அத்தை- தந்தையுடன் பிறந்தாள்
    • தந்தையின் பெரிய தங்கை- பெரியத்தை
    • தந்தையின் சிறிய தங்கை - சின்னத்தை

 


  • அப்பப்பா , மூத்தப்பன் ,பாட்டையா, பாட்டனார், அப்பச்சன், அப்பார் ,அப்பாச்சி, அப்பாரு, அச்சச்சன்- அப்பாவின் அப்பா
  • அப்பம்மா , மூத்தம்மை, ஐயாம்மா, அப்பத்தா, அப்பாயி, அச்சம்மா - அப்பாவின் அம்மா
  • அம்மப்பா, அம்மச்சன், பெத்தப்பு, சிய்யான், அப்பச்சி, அம்மச்சன் - அம்மாவின் அப்பா
  • அம்மம்மா, அம்மாயி, அமிஞை, அம்மத்தா, பெத்தாச்சி, அம்மச்சி- அம்மாவின் அம்மா
  • பாட்டன், பீட்டன், போற்றி> போத்தி, முன்றாதை, தாதா, தாதை, தாத்தா - பெற்றோர் தந்தை
  • பாட்டி, பீட்டி, போற்றன், முன்றாய், ஆத்தாள்- பெற்றோர் தாய்
  • பூட்டன் - முப்பாட்டன், மூதாதை, கொள்ளுப்பாட்டன், கொள்ளுத்தாத்தா
  • பூட்டி - முப்பாட்டி, மூதாய், கொள்ளுப்பாட்டி
  • ஓட்டன் - எள்ளுப்பாட்டன், கொப்பாட்டன்
  • ஓட்டி - எள்ளுப்பாட்டி, கொப்பாட்டி

அத்தைப் பாட்டி - பாட்டனுடன் பிறந்தாள்.

கிழவன், அப்பு, பாட்டன், பெரியவர்- வயது முதிர்ந்தவன்

கிழவி, ஆச்சி, ஆயா, பாட்டி, பெரியவள்- வயது முதிர்ந்தவள்

கொப்பாட்டன், கொப்பாட்டி -  Great-great-grand... Father & Mother


மூதாளர்:-

  • முதியை, முதியன், முதியர்
  • முதியவள், முதியவன், முதியவர்
  • முதியோள், முதியோன், முதியோர்
  • முதிர்ந்தவன், முதிர்ந்தவள், முதிர்ந்தவர் - (இவ்விடத்தில் இவை வயதின் பொருளில் வருகிறது)
  • முதிர்ந்தோன், முதிர்ந்தோள், முதிர்ந்தோர் - (இவ்விடத்தில் இவை வயதின் பொருளில் வருகிறது. )

 


  • ஈரேழு தலைமுறை (பரம்பரை )

நாம் — முதல் தலைமுறை.

அப்பன் + அம்மை — இரண்டாம் தலைமுறை.

பாட்டன் + பாட்டி — மூன்றாம் தலைமுறை.

பூட்டன் + பூட்டி — நான்காம் தலைமுறை

ஓட்டன் + ஓட்டி — ஐந்தாம் தலைமுறை

சேயோன் + சேயோள் — ஆறாம் தலைமுறை

பரன் + பரை = பரம்பரை

    • ஒரு தலைமுறை — சராசரியாக 60 ஆண்டுகள் என்று கொண்டால் , ஏழு தலைமுறை, 480 ஆண்டுகளுக்கு பிறகு வரும்………… ஈரெழு தலைமுறை என்றால் 960 = (2 x 480) ஆண்டுகளுக்கு பிறகு வரும் . (இதைத்தான் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த குடும்பம் என்பார்கள்).
  • பெண்:-

பேதை — பெண் 5-8 வயது.

முத்தை — பெண் 5–7 வயது

பெதுமை — பெண் 9-10 வயது

மங்கை — பெண் 11-14 வயது

மடந்தை — பெண் 15-19 வயது

அரிவை — பெண் 20-24 வயது.

தெரிவை — பெண் 25-29 வயது.

பேரிளம் — பெண் 30-36 வயது.

  • ஆண்:-

பாலன் — ஆண் 7 வயதுக்கும் கீழ்.

மீளி — ஆண் 8-10 வயது.

மறவோன் — ஆண் 11-14 வயது.

திறலோன் — ஆண் 15 வயது.

காளை — ஆண் 16 வயது.

விடலை — ஆண் 17-30 வயது.

முதுமகன் — ஆண் 30 வயதுக்கு மேல்.

  • மேலும் பருவங்களைப் பின்வருமாறும் கூறலாம்.

மகவு / பிள்ளை— குழந்தைப் பருவம்.

சிறுவன் ,சிறுமி— பாலப் பருவம்.

பையன் ,பையை— பள்ளிப் பருவம்.

காளை ,கன்னி— காதற் பருவம்.

தலைவன் ,தலைவி— குடும்பப் பருவம்.

முதியோன் ,முதியோள்— தளர்ச்சிப் பருவம்.

கிழவன் ,கிழவி— மூப்புப் பருவம்.

 


main-qimg-b64f4bc4ed5ccfe88df4a5db9d622651


  • கூடுதல் செய்திகள்:

 

~{ உலகில் வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இருந்தது இல்லை. }~


 

உசாத்துணை:

  • கழகத்தமிழ் அகராதி
  • செல்வன் -Google Groups
  • மொழிஞாயிறு பாவாணர்
  • போப் அடிகளார்
  • ஔ - 4
  • செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி
  • சூடாமணி நிகண்டு - (புதல்வர்களுக்கான ஒரு சில சொற்கள் மட்டும் இங்கிருந்து கொண்டவை )
  • சங்க இலக்கியத்தில் மூதாளர், முனைவர் பா யெய்கணேசு

விம்பகம் - கூகிள்

தொகுப்பு & வெளியீடு :

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

எங்கட ஊர்வழிய பயன்படுத்துற சொற்கள் ஏதேனும் விடுபட்டிருந்தால் தெரிவித்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.