Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சக்களின் விளையாட்டு வினையில் முடிந்தது! விடாது துறத்தும் சாபம்.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை பற்றியே நான் நோக்குகிறேன். என்ன சாபம் பிடித்துக்கொண்டதோ எனக்கு தெரியவில்லை. 1977 ஆம் ஆண்டில் இருந்து வடக்கில் கொலை செய்கின்றனர். இளைஞர்கள் மரணிக்கின்றனர்.

சனி பிடித்து கொண்டதோ தெரியவில்லை?. இந்த சாபம் என்ன? உங்களது பாவப்பட்ட அரசாங்கத்தின் மீதான சாபம் என்றே நாங்கள் கூறவேண்டியேற்பட்டுள்ளது. இந்த சாபத்தில் இருந்து மீள, 12 ஆண்டு கால சாபத்தில் இருந்து விமோசனம் பெற தயவு செய்து விலகிச் செல்லுங்கள் என்றே நாட்டு மக்கள் கூறுகின்றனர். நாங்களும் அதனையே கோருகிறோம்” - மகிந்த ராஜபக்ச (1990-07-19 நாடாளுமன்ற அவசரகாலச் சட்டம் மீதான விவாதம்)

அரசாங்கத்தின் மீதான சாபம் நாட்டுக்கு சனி கிரக தோஷத்தை ஏற்படுத்தும் என்பதே மகிந்த ராஜபக்சவின் இந்த பேச்சின் அர்த்தம். அரசாங்கத்தின் மீதான சாபம் நாட்டுக்கு சாபமாக அமையும்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் மீதான சாபம் காரணமாகவே 1983 ஆம் ஆண்டு வடக்கில் போர் ஆரம்பமாகியதாக மகிந்த அன்று கூறினார். அப்படியானால், எவர் மீதான சாபத்தினால் தற்போது சமையல் எரிவாயு கொள்கலன்கள் வெடிக்கின்றன?

2009 ஆம் ஆண்டு ராஜபக்சவினர் பிரபாகரனின் குண்டு அச்சத்தை போக்கிய பின்னர், மைத்திரி - ரணில் அரசாங்கம் மீண்டும் சஹ்ரானின் குண்டு அச்சத்தை உருவாக்கிக்கொடுத்துள்ளதாக 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் பொதுஜன பெரமுனவினர் கூறினர். தாம் ஆட்சிக்கு வந்த உடன் இந்த குண்டு அச்சத்தை போக்குவதாக குறிப்பிட்டனர்.

எனினும் தற்போது மீண்டும் அனைத்து வீடுகளிலும் சமையல் எரிவாயு கொள்கலன்கள் எப்போது வெடிக்கும் என்ற குண்டு அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது உலகில் உள்ள பிரதான ஊடகங்கள் கூட இலங்கையில் மர்மமான முறையில் எரிவாயு கொள்கலன்கள் வெடிப்பது பற்றி பேசுகின்றன.

இலங்கையில் மர்மமான முறையில் எரிவாயு கொள்கலன்கள் வெடிப்பது பற்றி விசாரணை நடத்தவுள்ளது - அல் - ஜெசீரா (2021-1201)

மர்மமான முறையில் எரிவாயு கொள்கலன்கள் வெடிப்பது குறித்து விசாரிக்க இலங்கை நாடாளுமன்றம் குழுவை நியமித்துள்ளது - ரொய்டர் (2021-12-01)

ஒரே நாளில் 12 எரிவாயு கொள்கலன்கள் வெடித்ததை அடுத்து, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குழுவை நியமித்துள்ளார் -யு.எஸ்.நியூஸ் (2021-12-01)

உலகில் எந்த நாட்டில் இவ்வாறு தொடர்ச்சியாக எரிவாயு கொள்கலன்கள் வெடித்ததை கேட்டிருக்கவில்லை என்பதாலேயே எரிவாயு வெடிப்பு சர்வதேச ஊடகங்களுக்கு புதிய செய்தியாக இருந்திருக்கலாம்.

இது கடவுளின் சாபம்.. கிராமங்களில் மாத்திரமல்ல நகரில், கடைகளில், ஹொட்டல்களில் கூடும் மக்கள் இப்படியே கூறுகின்றனர்.

“ ஐயா இது புத்தர் வந்து சென்ற நாடு. இந்த நாட்டுக்கு என்றுமே தவறாது..” கடந்த காலங்களில் அனைவரும் இந்த வசனத்தையே கூறினர். இலங்கையின் களனிக்கு புத்தர் விஜயம் செய்தார் என்பது பிரபலமான விடயம். களனி கங்கையில் தோன்றிய நாகராஜனின் நாடகம், புத்தர் விஜயம் செய்த களனியை அவமதிப்புக்கு உள்ளாகிய சம்பவம். நாகராஜனின் அழைப்பில் புத்தர் நீராடிய களனி கங்கையில் புனித தாது தோன்றியதாகவும் இதன் மூலம் நாட்டுக்கு புதிய தலைவர் தோன்றுவார் எனவும் அது நாட்டுக்கு நன்மையாக அமையும் எனவும் களனி விகாரையின் தலைமை பிக்கு கூறினார்.

அப்படியானால், ஏற்பட்டிருப்பது அந்த பிக்கு கூறிய நன்மையான காலமா?. இதனை கூறிய களனி விகாரையின் விகாராதிபதி தற்போது களனி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர். அப்படியானால், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்பட்டுள்ளதா?

ஜோதிடர் பொய்யான எதிர்வுகூறல்களை கூறுவதுண்டு. அவை பொய்த்துப் போனால் மக்கள் அந்த ஜோதிடரை வெறுப்பார்கள். எனினும் புத்தர் விஜயம் செய்த மண் என பௌத்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ள விகாரை ஒன்றை அரசியலுக்கு பயன்படுத்தி, இப்படியான எதிர்வுகூறல்களை கூறும் போது அழிவது அந்த விகாரையோ, புனித மண்ணோ அல்ல. விகாரையும் அதனை அரசியலுக்கு பயன்படுத்தி அரசியல்வாதிகளுமே அழிந்து போவார்கள்.

எனினும் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருப்பது ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சாபம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் குமார வெல்கம ஆகியோர் கூறியிருந்தனர்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்காக மூன்று மதங்களை பயன்படுத்தியது. முதலில் கத்தோலிக்க தேவாலயம். ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னரே கத்தோலிக்க தேவாலயத்தை பிரயோசனப்படுத்தியது. ஈஸ்டர் தாக்குதல் 2019 ஆம் ஆண்டு நடந்தது. அதற்கு பல காலத்திற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கம் பௌத்த மரபுரிமைகளை அழிப்பதாக நிலைப்பாட்டை உருவாக்கி, கோட்டாபய ராஜபக்சவின் தலையீட்டில் கொழும்பு ஸ்ரீ சம்போதி விகாரையில் பகிரங்க மாநாடு நடத்தப்பட்டது.

இந்த மாநாட்டில் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கலந்துகொண்டமை அனைவரும் ஆச்சரியப்பட காரணமாக அமைந்தது. இந்த மாநாட்டை சம்போதி விகாரையின் விகாராதிபதி காலஞ்சென்ற குசலதம்ம தேரர் ஏற்பாடு செய்திருந்தார். சரத் என் சில்வா பிரதம நீதியரசராக இருந்த காலத்திலேயே ஸ்ரீ சம்போதி விகாரை குசலதம்ம தேரர் மற்றும் சம்போதி விகாரை என்பன அரசியல் கிசு கிசுக்களுக்கு பிரபலமான இடமாக இருந்தன.

சரத் என் சில்வா, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு இடையிலான அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு சம்போதி விகாரை பிரலமாக இடமாக விளங்கியது. அவற்றில் பல பேச்சுவார்த்தைகளுக்கு குசலதம்ம தேரரே ஏற்பாட்டளராக இருந்தார்.

கதிர்காமர் கொலை செய்யப்பட்ட பின்னர் பாதுகாப்புச் செயலாளராக பதவிக்கு வந்த கோட்டாபய இந்த விகாரைக்கு நெருக்கமானார். மகிந்த தோல்வியடைந்து, மைத்திரி - ரணில் அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், கோட்டாபயவின் ஆலோசகர்கள் பல பேச்சுவார்த்தைகளை இந்த விகாரையிலேயே நடத்தினர். அன்று குசலதம்ம தேரர் ஏற்பாடு செய்த மாநாட்டில் கலந்துகொண்ட கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, மைத்திரி - ரணில் அரசாங்கம் பௌத்த மரபுரிமைகளை அழித்து ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக செயற்படுகிறது என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குசலதம்ம தேரர், அபயராம விகாரையின் முருத்தெட்டுவே ஆனந்த தேரர், எல்லே குணவங்ச தேரர், அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர், மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர் மற்றும் கர்தினால் ஆகியோர் இந்த விகாரையிலேயே ஒன்றாக இணைந்தனர். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கர்தினாலின் பாத்திரம் ஏனைய பௌத்த பிக்குகளின் பாத்திரத்தை விட முக்கிய பிரபலமான பாத்திரமாக உருவாகியது.

அந்த காலத்தில் முழு ராஜபக்ச குடும்பமும் நாள் கணக்கில் சென்று கர்தினாலை சந்தித்து, ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கைது செய்யும் நோக்கம் மைத்திரி- ரணில் அரசாங்கத்திற்கு இல்லை எனக் கூறி வந்தனர். தனக்கு 2005 ஆம் ஆண்டு கிடைத்த முஸ்லிம் மக்களின் வாக்குகள் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கிடைக்காது என அறிந்துகொண்ட மகிந்த, 50 சத வீத வாக்குகளை பெற சிங்கள பௌத்த வாக்குகள் போதாது எனபதால், கத்தோலிக்க மக்களின் வாக்குகளை பெற காய்களை நகர்த்தினார். கர்தினாலும் இவர்கள் வைத்த பொறியில் சிக்கினார்.

இந்த நிலையில் ராஜபக்ச அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை தேடிப்பிடிப்பதற்கு பதிலாக தேவாலத்தின் மத குருக்களை துரத்திச் செல்கிறது. ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் கர்தினால், மைத்திரி - ரணில் அரசாங்கம்தை விமர்சித்த போது, அரசாங்கம் பதிலுக்கு அவரை விமர்சிக்கவில்லை. ஆனால், தற்போது ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எங்கே என அரசங்கத்திடம் கேட்கும் கர்தினாலுக்கு எதிராக மிக மோசமான எதிர்த்தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

அன்று கர்தினாலை முன்னிறுத்தி மைத்திரி - ரணில் அரசாங்கத்திடம் இருந்து சிங்கள பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க போராட்டம் நடத்திய பௌத்த பிக்குமார் தற்போது கர்தினாலை தனிமையில் கைவிட்டுள்ளனர். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் பிணங்கள் மீது மேற்கொண்ட விளையாட்டு தற்போது அரசாங்கத்திற்கே வினையாக மாறியுள்ளது. இந்த வினை தானாக ஏற்படவில்லை.

ராஜபக்சவினர் தமது அரசியல் நோக்கத்திற்காக கத்தோலிக்க தேவாலயத்தை பயன்படுத்தியதால் விளையாட்டு வினையாக மாறியுள்ளது. ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்காக கத்தோலிக்க தேவாலயத்தை போலவே சம்போதி விகாரை, அபயராம விகாரை, களனி விகாரை என்பன மாத்திரமல்ல தலதா மாளிகை அமைந்துள்ள புனித பூமியை அத்துரலியே ரதன தேரரின் உண்ணாவிரதத்திற்காக பயன்படுத்தியமையானது மன்னிப்பு கிடைக்கக் கூடிய சாபம் அல்ல.

தேவாலயம், பௌத்த விகாரைகளை மாத்திரமல்ல அரசாங்கம் இஸ்லாமிய சமயத்தையும் அதிகாரத்திற்கு வருவதற்காக பயன்படுத்தியது. இஸ்லாமிய சமயத்திற்கு எதிராக சிங்கள பௌத்த மக்களை தூண்டியதன் மூலம் இஸ்லாம் சமயத்தை ஆட்சிக்கு வருவதற்காக தற்போதைய அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டது.

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்காக கொரோனா சடலங்களை அடக்கம் செய்வது சம்பந்தமாக முஸ்லிம்களின் சமய நம்பிக்கையுடன் அரசாங்கம் அரசியல் கூத்தாடியது.

பௌத்தம், கத்தோலிக்கம், இஸ்லாம் என எந்த சமயமாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற சமயங்களுடன் விளையாடுவது கடவுளுடன் விளையாடுவது போன்ற செயல். இதனால், கிடைக்கும் கடவுளின் தண்டனையானது நீதிமன்றத்தில் கிடைக்கும் தண்டனை அல்லது தேர்தலில் அடையும் தோல்வியை விட மிகப் பயங்கரமானது மட்டுமல்ல கொடூரமானது.

கட்டுரையாளர் - உபுல் ஜோசப் பெர்னாண்டோ

மொழியாக்கம் - ஸ்டீபன் மாணிக்கம்

https://tamilwin.com/article/srilanka-rajapaksa-politics-games-1638878731

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.