Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தாண்டில் இலங்கைக்கு மனமாற்றம் தேவை - ஜெஹான் பெரேரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்தாண்டில் இலங்கைக்கு மனமாற்றம் தேவை

மக்கள் இன்று மௌனமாக இருக்கலாம் ஆனால் அவர்கள் அறியாதவர்கள் அல்ல மேலும் பல பேரரசுகளும் (மற்றும் அரசாங்கங்களும்) தண்டனைவிலக்கீடும்  ஊழலும் எல்லை மீறிச்செல்லும்போது   வீழ்ச்சியடைந்துள்ளன.

எரிவாயு  சிலிண்டர்கள் வெடித்துச் சிதறும் விவகாரத்தை சாதாரணமாக பார்ப்பது தண்டனைவிலக்கீட்டிற்கு மற்றொரு உதாரணம். கடந்த சில மாதங்களில் மக்கள் தங்கள் சமையல் தேவைக்காக பயன்படுத்திய 800 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியுள்ளன. மூன்று சிறு பிள்ளைகளின் தாய் உட்பட குறைந்தது ஏழு பேர் பலியாகியுள்ளனர்

000000000000000000

ஜெஹான் பெரேரா

 நாட்டை  சீரமைப்பதற்கு சில வருடங்கள் இலங்கை இராணுவத்தினர்  தேசத்தை   ஆள வேண்டுமென ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான  ஜனாதிபதி செயலணிக்  குழுவின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர்,கருத்து தெரிவித்துள்ளார்.

gnasara1-1-300x174.jpg

அவர்தனது  பேட்டியை வழங்கி இருந்த  தமிழ் மொழிமூல  ஊடகத்தால் சரியான முறையில்  தெரிவிக்கப்பட்டிருந்தால் , அவரது வலியுறுத்தலில் மறைமுகமாக இருப்பது ஜனநாயகத்தின் மீது அவருக்கு உள்ள நம்பிக்கையின்மையாகும் ..

மேலும் மறைமுகமாக, மேலிருந்து -கீழாக  முடிவெடுப்பதில் விருப்பம் உள்ளமை  இராணுவத்தில் இயல்பாக மற்றும் எதிர்ப்பை அடக்குவதற்கு பலத்தைப் பயன்படுத்துகிறது.

இதுவரை அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு மக்களின் மனங்களுக்குள் மவுனமாக இருந்தது, ஆனால் அது காலப்போக்கில் பொருளாதாரத்தில்  செங்குத்தான சரிவு  ஊழல் மற்றும் தண்டனைவிலக்கீடு  அதிகரிப்புடன் வெளியே கசிந்து விடுவதாக உள்ளது .. மக்களின் விரக்திபொது வடிவம் பெறுவதற்கு முன் கடினமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

இன்று நாட்டின் நிலைமை குறைந்த அல்லது நிலையான வருமானம் உள்ளவர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. சமீப காலம் வரை அவர்களால் முடிந்ததைபோன்று   தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க அவர்கள் சிரமப்படுகிறார்கள்.

அவர்களின் சம்பளம் கடந்த ஆறு மாதங்களாக மாறவில்லை, ஆனால் அரிசி, இறைச்சி மற்றும் காய்கறிகள் போன்ற முக்கிய உணவுகளின் விலைகள் கூட உயர்ந்துள்ளன. அரசாங்கம் தனது கடன்களை திருப்பிச் செலுத்தத் தவறினால் மற்றும் அவர்கள் மீதான கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், மக்கள் இன்னும் மோசமான அளவில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சம் உள்ளது.

ஏப்ரல் மாதத்திற்குள் நாடு கடுமையான உணவுப் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என வாட்ஸ்அப் செய்தி மூலம் பணி நீக்கம் செய்யப்பட்ட விவசாயத்துறை  செயலாளர்  எச்சரித்திருந்தார். ஏற்கனவே துறைமுகங்களில் கப்பல்களும்,கொள்கலன்களும் உள்ளன, அவற்றுக்கு செலுத்தவேண்டிய  அந்நியச் செலாவணிஇல்லாததால், அவற்றை விடுவிக்க  முடியவில்லை.

food1-300x200.jpg

இந்த நெருக்கடிக்கு மத்தியில் செல்வச் செழிப்புடன் வாழும் மக்கள் குழுக்களும் உள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்கள் குடும்பத்துடன் நத்தார்  விடுமுறையை அனுபவிக்க ஓய்வு கொடுப்பது  பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணங்களில் ஒன்றாகும். அவர்களில் 60 பேர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ளதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை  வெளியிட்டுள்ளன. நாடு எதிர்கொள்ளும் டொலர் பற்றாக்குறையை அவர்கள் எதிர்நோக்கவில்லை . பெருந்தொகையான மக்கள் இவ்வளவு மோசமான  நிலையில் இருக்கும்போது  போது அவர்கள் எப்படி நன்றாக இருக்கிறார்கள் என்பது கேள்வி. ஆட்சியாளர்ககளினதும்  ஆளப்படுபவர்களினதும்  வாழ்க்கை முறைவெகு தொலைதூரத்தில்  உள்ளது என்ற எண்ணப்பாடு அரசாங்கத் தலைவர்கள் கலந்து கொள்ளும் உணவகங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் வெளிப்படும் கேலியும் கூச்சலும் விளக்ககூடும் . ‘அவர்கள் கேக் சாப்பிடட்டும்’ என்பது பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னர்  பிரான்சின் ராணியான மேரி-அ ன்டனெட் கூறியிருந்த  மேற்கோள்காட்டப்படும் வார்த்தையாகும்.

நத்தார்  சமாந்தரங்கள்

அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நத்தார்  கொண்டாடுவது குறித்து கத்தோலிக்க பாதிரியாரும் இறையியலாளருமான அருட்தந்தை அலோசியஸ் பீரிஸ்  கட்டுரையொன்றை  எழுதியுள்ளார். அவர் இயேசு கிறிஸ்து பிறந்த காலத்தைப் பார்த்து, தனது அவதானிப்புகளை மேற்கொண்டு , வாசகர்களை அவர்களின் தீர்மானங்களுக்கு வரவைக்கிறார். மத்திய கிழக்கில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைமை, இன்று இலங்கைக்கும், ஏனைய நாடுகளுக்கும் அவற்றின் பரிணாம வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில்பலதரப்பட்ட  ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. கடந்த இரண்டாயிரமாம் ஆண்டுகளில் , உன்னதமான தனிநபர்கள்  மற்றும் மக்கள் குழுக்களின் போராட்டங்கள், இத்தகைய முறைகேடுகளைத் தடுக்கும் நிறுவனரீதியான  வழிமுறைகளை உருவாக்க வழிவகுத்துள்ளன என்பது நம்பிக்கையின் செய்தி. அதை செயற்படுத்தும் சவாலை ஏற்க தலைமைத்துவம் வழங்குவதற்கு  தயாராக உள்ள தலைவர்கள் தேவை.

அருட்தந்தை பீரிஸ்  அவர்களின் நத்தார் பதிவிலிருந்து   நாம் வரையக்கூடிய ஐந்துசமாந்தரங்கள்  உள்ளன. முதலாவதாக, இயேசு வாழ்ந்த அக்கால ஆட்சியாளரான கலிலேயாவின் ஏரோது அந்நிய சக்தியை (ரோம்) சார்ந்து இருந்த ஆட்சியாளர் என்று வர்ணிக்கிறார். அவர் மற்றொரு நாட்டினால் பயன்படுத்தப்பட்டார், அது அவர் மூலம் தனது சொந்த மக்களை அடிமைப்படுத்தியது. இரண்டாவதாக, ஏரோது தனது தந்தையால் தொடங்கப்பட்ட துறைமுகம் மற்றும் ஜெருசலேம் கோவிலைக் கட்டுதல் போன்ற முக்கிய வளர்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டார். அதனால் மத குருமார்களின் ஆதரவைப் பெற முடிந்தது. மூன்றாவதாக, உயிருக்குப் பயந்து வாழ்ந்ததால், ஏராளமான மெய்க்காவலர்களுடன் வாழ்ந்தார்.

நான்காவது சமாந்தரம் , அரசர் அரசியல் ரீதியில் பாதுகாப்பற்றதாக உணர்ந்தார், இது அவரை வன்முறையில் ஈடுபட வைத்தது. வேறொரு ராஜா பிறக்கப் போகிறார் என்று கேள்விப்பட்டபோது (இயேசு, தன்னைப் போன்ற ஒரு உலக ராஜா என்று தவறாகக் கருதினார்) புதிதாகப் பிறந்த அனைத்து ஆண் குழந்தைகளையும் கொல்ல உத்தரவிட்டார்.

இதன் விளைவாக, உயிர்த்த ஞாயிறு   குண்டுவெடிப்பு மற்றும் அப்பாவிகள் கொல்லப்பட்டதற்குப் பிறகுஇடம்பெற்ற  தேர்தல்களைப் போலவே, நாடு தழுவிய இரத்தக்களரி மற்றும் அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் முதல் நத்தார்  நடந்தது.

ஐந்தாவது, ரோமானிய பேரரசர், அகஸ்டஸ், தன்னை ஒரு கடவுள் என்று நம்பினார், மேலும் தனது வளர்ப்பு மகனை தனது வாரிசாக வளர்த்தார். அருட்த ந்தை தனது கட்டுரையை ஊக்கத்துடன் முடிக்கிறார், ‘வன்முறை மற்றும் அடக்குமுறைகளில் இருந்து நம்மை விடுவிப்பதான  வாக்குறுதியுடன் நம் மத்தியில் இருக்கும் சமாதானத்தின் இளவரசர், போர் ஆயுதங்களால் அல்ல, நிராயுதபாணியாக  , தனியாக அல்ல, நல்லெண்ணம் உள்ள அனைத்து மக்களுடனும்,அவர்கள் மத்தியில் இருக்க வேண்டுமென  வெளிப்படையாக நம்மை எதிர்பார்க்கிறார்.

இலங்கை புத்தாண்டை நோக்கிச் செல்லும்போது தண்டனைவிலக்கீடு  மற்றும் ஊழல் போன்ற பிரச்சினைகள்பாரிய  அளவில் உருவாகின்றன.

மக்கள் செய்த   தவறுகளுக்கு பொறுப்புக்கூறுமாறு  கேட்பது அரசியல் ரீதியாக பலம் வாய்ந்தவர்கள் அல்லது அரசியல் ரீதியாக பலம் வாய்ந்தவர்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பாக  ஆதாரங்களில் இல்லை. சில மாதங்களுக்கு முன் உயர் பாதுகாப்பு சிறைச் சாலைக்குள்  நுழைந்து  அமைச்சர் ஒருவர் துப்பாக்கியால் கைதிகளை மிரட்டினார். இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டாலும் முடிவு தெரியவில்லை.உயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்பு, சீனி ஊழல், மத்திய வங்கி ஊழல் போன்றவற்றின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளைத் தேடும் பணி இன்னும் முடங்கிக் கிடக்கிறது. நியூ போர்ட்ரெஸ்  மின் நிலைய ஒப்பந்தம் நிலுவையில் உள்ளது. நேர்மையுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கையை நீதிமன்றத்தில் சவால் செய்யவோ அல்லது அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டவோ முடியாது என்று கூறும் அரசாங்க அதிகாரிகளுக்கான விலக்கீட்டு விதி நீக்கப்பட வேண்டும், அத்துடன்  அவர்கள் சட்டத்தின் நிர்வாகிகளாக பொறுப்பேற்க வேண்டும் மற்றும் தேவையான போது குற்றம்சாட்டப்படவேண்டும்

எரிவாயு  சிலிண்டர்கள் வெடித்துச் சிதறும் விவகாரத்தை சாதாரணமாக பார்ப்பது தண்டனைவிலக்கீட்டிற்கு மற்றொரு உதாரணம். கடந்த சில மாதங்களில் மக்கள் தங்கள் சமையல் தேவைக்காக பயன்படுத்திய 800 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியுள்ளன. மூன்று சிறு பிள்ளை களின் தாய் உட்பட குறைந்தது ஏழு பேர் பலியாகியுள்ளனர் . ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் கண்டுபிடிப்புகள் சிலிண்டர்களுக்குள் உள்ள வாயுக்களின் கலவை மாற்றப்பட்டது, இது சிலிண்டர்களுக்குள் அழுத்தம் அதிகரிக்க வழிவகுத்தது. ஆனால் பாதுகாப்பிழும் பார்க்க  இலாபத்தை  முன்னிறுத்துபவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு என்பது பாதுகாப்பானதாகத் தோன்றுகிறது. உயிரிழப்பின் சுமை, அல்லது வீடுகள் எரிந்து சாம்பலானமை போன்றவற்றால்  பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஏழைகளாகவும், சக்தியற்றவர்களாகவும் இருப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம், இது இன்று நம் நாட்டில் உள்ள உயிர்களின் ஒப்பீட்டு மதிப்பின் அவமானகரமான அறிகுறியாகும்.  வசதி கள் குறைவானோரை   கவனித்துக் கொள்ளும் பாரம்பரிய நெறிமுறைகளில் பெருமை கொள்ளும் ஒரு நாகரிகமான  நாட்டில் இது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

ஏரோது மன்னன் மற்றும் ஏகாதிபத்திய ரோமானியப் படையின் காலத்திலிருந்து, கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில்,சிந்தனைகளும் ஆட்சி முறைகளும் உருவாகியுள்ளன. அந்தப் பாதையில் நாம் செல்ல வேண்டியதில்லை. தனிநபர்களை குறிவைப்பதை விட, முறைமைகள்  மாற வேண்டும். அதிகாரத்தைச் சரிபார்த்து சமநிலைப்படுத்தும், பொறுப்புக்கூறலை உறுதிசெய்து, தண்டனையிலிருந்து விலக்கப்படுவதைத் தடுக்கும், நேர்மை மற்றும் ஊழலற்ற தரத்தில் அரசாங்கத் தலைவர்களை நிலைநிறுத்தும் நிறுவனங்கள், இந்த வாரம் மறைந்த பிஷப் டெஸ்மண்ட் டுட்டு போன்ற மகத்தான மற்றும் அர்ப்பணிப்புள்ள மக்களின் தியாகத்தால் கிடைக்கின்றன. . ஜனாதிபதி கோத்தாபய  ராஜபக்ச, அவரது ஆலோசகர்கள் மற்றும் அரசாங்கம் ஆகியோரின் மனப்பான்மை இலங்கையின் நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படுவதுடன்   நடைமுறைப்படுத்த வேண்டும். மக்கள் இன்று மௌனமாக இருக்கலாம் ஆனால் அவர்கள் அறியாதவர்கள் அல்ல மேலும் பல பேரரசுகளும் (மற்றும் அரசாங்கங்களும்) தண்டனைவிலக்கீடும்  ஊழலும் எல்லை மீறிச்செல்லும்போது   வீழ்ச்சியடைந்துள்ளன.

 

https://thinakkural.lk/article/158333

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.