Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தனிமைப்படுத்தப்பட்டு விட்ட யாழ்ப்பாணக் குடாநாடு...

Featured Replies

[12 - August - 2007]

* ஏ-9 மூடப்பட்டு 1 வருட நிறைவால் அதிகரித்துள்ள அவலங்கள் !

குடாநாட்டை வன்னிப் பெருநிலப் பரப்புடனும் நாட்டின் ஏனைய பகுதிகளுடனும் இணைக்கும் பிரதான வீதியான ஏ-9 நெடுஞ்சாலைக்கு மூடு விழா நடந்து நேற்று 11 ஆம் திகதியுடன் ஓராண்டு ஓடி முடிகின்றது.

கடந்த வருடம் (11.08.2006) ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் முகமாலை முன்னரங்கப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் திடீரென்று கடும் சமர் வெடித்தது.

இப்பெருஞ் சமர் மூண்டதையடுத்து அன்று மாலை 5 மணிக்கு பலாலி இராணுவப் பாதுகாப்பு நடவடிக்கைத் தலைமையகம் மறு அறிவித்தல் வரும் வரை யாழ்.குடாநாடு பூராகவும் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்தது.

இத் திடீர்ச் சமரால் வன்னி உட்பட தென்பகுதியிலிருந்து யாழ்.குடாநாட்டிற்குள் பிரவேசித்த மக்கள் மற்றும் வாகனங்கள் ஆகியனவும் அதுபோன்று யாழ்.குடாநாட்டிலிருந்து வன்னி மாவட்டத்திற்குச் சென்ற மக்கள் மற்றும் வாகனங்கள் என்பனவும் தத்தம் இடங்களுக்குத் திரும்ப முடியாது அந்தந்த இடங்களிளே தஞ்சமென்று தரித்து நிற்கவேண்டியதாயிற்று.

முகமாலையின் முன்னரங்க காவல் வேலிகளை ஊடறுத்துக்கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புயலெனப் புகுந்த புலிகள் அணிகள் கடும் தாக்குதலைத் தொடுத்தவாறு இரு நாட்களுக்குள் சுமார் ஒன்றரைக் கிலோமீற்றர் தூரத்திற்கு முன்னேறி வந்தனர். கடற்புலிகளின் பலமான அணியொன்று குடாநாட்டின் தென்கிழக்குக் கடற்பிராந்தியத்திற்கூடாக குடாக்கடலை ஊடறுத்துக்கொண்டு மண்டைதீவு வரை முன்னேறிவந்து தரையிறக்கம் ஒன்றை மேற்கொண்டது.

தரையிறங்கிய புலிகள் அல்லைப்பிட்டி வரை முன்னேறிவந்து கடற்படையினருடன் கடும் சமர் புரிந்தனர். இவ்வேளை, பாதுகாப்புத் தேடி அல்லைப்பிட்டி தேவாலயம் ஒன்றுக்குள் புகுந்த மக்கள் மீது நடத்தப்பட்ட பல்குழல் ரொக்கட் தாக்குதல் காரணமாக 15 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் சுமார் 50 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்த மக்கள் உடனடியாக வைத்திய வசதிகளின்றி அல்லற்பட்ட கதைகள் எழுத்தில் வடிக்க முடியாதவை. தென்மராட்சி மற்றும் யாழ்.நகரின் கரையோர பிரதேச மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களிலும் தங்கவேண்டியதாயிற்று.

இவ்வாறு சமர் வெடித்த நேரம் முகமாலை முன்னரங்கப் பகுதியில் தரித்து நின்ற பெருமளவான பாரவூர்திகளும் அவற்றில் ஏற்றப்பட்டிருந்த பொருட்களும் கடுஞ் சேதத்திற்குள்ளாகின. இதனால், கோடிக்கணக்கான ரூபா நஷ்டம் ஏற்பட்டதென்று மதிப்பிடப்பட்டிருந்தது.

இச் சமர் சில தினங்களில் தணிவிற்கு வந்தபோதும் அதற்கப்பால் குடாநாட்டில் ஏற்பட்ட மனிதப் பேரவலங்களை எழுத்தில் வடிப்பதென்றால் இன்று வெளியாகும் இத் தினசரியின் முழுப் பக்கங்கள் கூட போதாதென்றே கூறவேண்டும்.

சமர் வெடித்த (வெள்ளி மாலை) நாள் முதல் தொடர்ந்து (ஞாயிறு வரை) மூன்று தினங்கள் குடாநாட்டு மக்கள் அனைவரும் அவசர மருத்துவத் தேவைக்குக் கூட வீதியில் இறங்க முடியாத அளவிற்கு வீடுகளுக்குள் முடங்க நேரிட்டது. அடுத்த நாள் திங்கட்கிழமையே முதற்தடவையாக மூன்று மணித்தியாலம் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் வெளியில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின் ஐந்து, எட்டு என்றவாறு ஊரடங்கு தளர்வு நேரம் அதிகரிக்கப்பட்டது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட மக்கள் நேரம் அவசர அவசர அவசரமாக வர்த்தக நிலையங்களுக்குப் பொருட்களைக் கொள்வனவு செய்யச் சென்றபோது அங்கு பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்த அதேநேரம் பெரும்பாலான பொருட்களுக்குச் செயற்கைத் தட்டுப்பாடும் ஏற்படுத்தப்பட்டன. திடீர் மோதல் வெடிப்பதற்கு முதல்நாள் வரையும் என்னென்ன பொருட்கள் தேவையோ அந்தந்த பொருட்கள் எல்லாம் எடுத்துவரப்பட்டு வர்த்தக நிலையங்கள் பொருட்களால் நிரம்பி வழிந்தன.

ஆனால், யுத்தமொன்று எப்போது வெடிக்கும் என்று காத்திருந்தவர்கள் போன்று குடாநாட்டு வர்த்தகர்கள் அத்தனை பொருட்களையும் பதுக்கல் செய்த விதம் தான் மகா கெட்டித்தனம்.

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த' கதையாக சிக்குன்குனியா என்னும் கொடிய வைரஸ் காய்ச்சல் வந்து வதைத்தவிதம் அதற்கு ஏற்ற மருந்து, போஷாக்கு உணவு என்பன எடுக்க முடியாது தவிர்த்தோர் கதை அப்பப்பா வார்த்தைகளில் வடிக்க முடியாத மனிதப் பேரவலம். இவையெல்லாம் இறைவன் தந்த தண்டனையா? என எண்ணிய மக்கள் இனியொரு பிறவி வேண்டாம் அப்படி பிறந்திட்டாலும்-இப்படியொரு அவலம் வரக்கூடாதென எண்ணி சுடரேற்றி இறைவழிபாடு செய்ய முற்பட்ட மக்களுக்கு எண்ணெய் இல்லாது ஏற்பட்ட சோதனை எல்லாம் எளிதில் மறக்கப்பட முடியாத வடுக்கள். எங்கு சென்றாலும் கியூ, எதற்கெடுத்தாலும் கியூ என்ற நிலையே தலைதூக்கியிருந்தது.

பதுக்கல்காரர்களின் கையிருப்புக்களும் மெல்ல மெல்ல காலியாக வரவே பல சிக்கல்கள் பலசுற்றுப் பேச்சுக்களுக்குப் பின்னர் அரச அதிபர் தலைமையில் குடாநாட்டுக்கான அத்தியாவசியப் பொருட்கள் கப்பல் மூலம் எடுத்துவரப்பட்டு ப.நோ.கூ சங்கங்கள் மூலம் பங்கீட்டடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம் பாராட்டத்தக்கது. ஆனாலும் ப.நோ. கூ. சங்கங்களுக்குள்ளும் எத்தனை எலிகள்? அத்தனைக்கு மத்தியிலும் மேய்ப்பர் ஒருவர் இருந்து அன்றைய நெருக்கடி நிலையை ஒருவாறாக இழுத்து வந்து இன்று தொடர்கின்றார் என்றே சொல்ல வேண்டும்.

யாழ்.குடாநாட்டில் உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களுக்கும் பலத்த தட்டுப்பாடு நிலவுகின்றது என அறிந்த தென்பகுதி உட்பட நாட்டின் அனைத்துப்பகுதிகளிமுள்ள அவர்களின் உறவுகள் துடித்தெழுந்து தம்முறவுகளுக்கு அஞ்சல் சேவையூடாக பொருட்களை அனுப்பி வைத்தனர். அப்பொருட்களும் எத்தனை நெருக்கடிகளுக்கும் தடங்கல்களுக்கும் மத்தியில் தரமாகவும் பழுதடைந்தவையாகவும் குடாநாட்டை வந்தடைந்தன.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க தொழில் தகவல் மற்றும் தொடர்பாடல் போன்ற புறநிலைக் காரணிகள் பற்றி நினைவு கூரப்போனால், வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த அரச பணியாளர்கள் இங்கு வந்து தொழிலுமின்றி முறையான தகவல் பரிமாற்றுத்துக்கு சீரான தொலைபேசிச் சேவைகளின்றி சீரான அஞ்சல் சேவையின்றி ஏன் தொழிலுக்குத் திரும்பாத வரை வேதனங்களைப் பெறமுடியாத நிலை என்றவாறு பல சிக்கல்களை அனுபவித்தனர்.

அதேபோன்று, கட்டடம், கடல், விவசாயம் மற்றும் கைத்தொழில்கள் மேற்கொள்வோர்கள். தத்தமக்கான மூலப்பொருட்களுக்கு ஏற்பட்ட பலத்த தட்டுப்பாடு காரணமாக காலவரையறையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சவால்களுக்கெல்லாம் முகங்கொடுத்துக் கொண்டு கடந்த வருடம் நெற்செய்கையில் ஈடுபட்ட குடாநாட்டு விவசாயிகளுக்கு தேவையான வளமாக்கிகள், கிருமிநாசினிகள் கிடைக்காமல் போனது மட்டுமல்லாமல் கொடுமையிலும் கொடுமையாக மாரி மழையும் பொய்த்துப்போனது தான் மர்மமான விடயம். விதைத்த பயிரை நீரிறைத்தாவது விளைவிப்போம் என்று முயற்சி செய்தவர்களுக்கு பன்மடங்கு விலைக்கே அதுவும் மட்டுப்பட்ட அளவிலேயே எரிபொருட்கள் கிடைத்தன.

இவ்வாறு எரிபொருள், வளமாக்கிகள், கிருமிநாசினிகளை அதிகப்படியான விலையில் பெற்று, பழச்செய்கைகள், வெங்காயம் மற்றும் மரக்கறி பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டோர் அவற்றை ஏற்றுமதி செய்ய உரிய ஒழுங்கின்றி செலவு செய்த முதலுமின்றி முடிவுமின்றி அல்லற்பட்டுவரும் கதை இன்றும் தொடர்கதையாகவே உள்ளது.

அரச மற்றும் தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட பல கட்டட மற்றும் வீதி அபிவிருத்திப் பணிகள் அதிதற்கேற்ப மூலப் பொருட்களுக்கு நிலவும் பலத்த தட்டுப்பாடு காரணமாக இன்றும் நிறைவு செய்யப்படாமல் அரையும் குறையுமாகவே இருந்து வருகின்றன.

சிலவேலைகள், மூலப்பொருட்கள் இல்லை என்ற காரணத்தினால் ஆரம்பிக்கப்படாமலும் அதற்கென ஒதுக்கப்பட்ட பலகோடி ரூபாக்கள் வேறிடம் திரும்பியுள்ளமையும் நினைவுகொள்ளத்தக்கவை. இதனால் பல்லாயிரக்கணக்கான கட்டடத் தொழிலாளர்கள் மரவேலைத் தொழிலாளர்கள் தொழிலின்றிப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடற்றொழிலாளர்களுக்கான கடல் வலயத் தடைச்சட்டம் நீக்கப்படாததால் ஆழ்கடல் மீன்பிடிக்குச் செல்லமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது போன்றே ஏனைய துறைசார்ந்த தொழிலாளர்களும் ஏற்ற மூலப் பொருட்கள் மற்றும் துணைவளங்களின்றி பலத்த பாதிப்புக்களுக்குள்ளாகியிர

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.