Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவுக்கு எதிரான பிரச்சாரத்தில் சந்திரிக்கா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கு எதிரான பிரச்சாரத்தில் சந்திரிக்கா.

Written by Pandaravanniyan - Aug 13, 2007 at 08:35 AM

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கொழும்பு திரும்பியுள்ள நிலையில், மங்கள - ரணில் அணியுடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அவர் தீவிரப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நேற்று கொழும்பு திரும்பிய உடனடியாகவே மங்கள சமரவீரவுடன் தொலைபேசியில் பேசிய சந்திரிகா இன்று திங்கட்கிழமை அவரை நேரில்சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார். ரணில் - மங்கள அணியினரின் அடுத்த கட்ட 'மக்கள் அலை' ஆர்ப்பாடட்டப் பேரணி அத்தனகலையில் நடைபெறும் எனவும், அதில் சந்திரிகா குமாரதுங்க கலந்துகொள்ளலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெதிவித்தன.

தன்னுடைய மகளான யசோதாவின் திருமணத்துக்காக லண்டன் சென்றிருந்த சந்திரிகா குமாரதுங்க நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேற்று நாடு திரும்பினார். விமான நிலையத்திலிருந்து நாடு திரும்பிய உடனடியாகவே சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) தலைவர் மங்கள சமரவீரவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சந்திரிகா, தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் நீண்ட நேரம் உரையாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் தொடர்ச்சியாக மங்கள சமரவீர இன்று சந்திரிகா குமாரதுங்கவை நேரில் சென்று சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பின்போது தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும், அடுத்ததாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இருவரும் விரிவாக ஆராய்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக அரசாங்கத்துக்கு எதிராக ஐ.தே.க. வுடன் இணைந்து நடத்தப்படும் பேரணிகள் தொடர்பாகவும், அதில் சந்திரிகா பங்குகொள்வது பற்றியும் ஆராயப்படும்.

இது தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள மங்கள சமரவீர, தற்போது ஐ.தே.க.வுடன் இணைந்து தான் உருவாக்கியுள்ள தேசிய சபைக்கு, முன்னாள் ஜனாதிபதி பூரண ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். சந்திரிகாவின் ஆதரவுடனேயே தமது நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திரிகா சந்தித்துப் பேசலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சந்திரிகாவின் வருகையுடன் அரசியலில் பல மாற்றங்கள் இடம்பெறப்போகின்றது என எதிர்வு கூறியுள்ள அவர், சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் பலரை சந்திரிகா சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். எதிர்வரும் செப்டம்பர் 26 ஆம் திகதி அத்தனகலையில் நடைபெறவுள்ள பண்டாரநாயக்க நினைவு தின வைபவத்தில் சந்திரிகா முக்கிய உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளையில் பண்டாரநாயக்க குடும்பத்தின் அடுத்த அரசியல் வாரிசாக விமுக்தி அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளையில், அரசுக்கு எதிராக தேசிய சபை நடத்திவரும் "மக்கள் அலை' போராட்டத்தின் மூன்றாவது கட்டம் இம்மாதம் 24 ஆம் திகதி அத்தனகலையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் சந்திரிகா குமாரதுங்கவை மேடையேற்றுவதற்கான முயற்சிகளில் மங்கள சமரவீர இறங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி - சங்கதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மங்களவுக்கு ஆதரவளித்தால் அரசியலிலிருந்து சந்திரிகா புறந்தள்ளப்படுவார்: அமைச்சர் சந்திரசேன

[திங்கட்கிழமை, 13 ஓகஸ்ட் 2007, 18:07 ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரான மங்கள சமரவீரவை ஆதரித்தால் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவை அரசியலிருந்து மக்கள் புறந்தள்ளி விடுவர் என்று சிறிலங்கா அமைச்சர் சந்திரசேன கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களிடம் பேசிய சந்திரசேன, மகிந்தவுக்கே சந்திரிகா ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மங்களவுக்கும் ரணிலுக்கும் அவர் ஆதரவு வழங்கினால் மக்கள் அவரை அரசியலில் இருந்து புறந்தள்ளிவிடுவர் என்றார்.

லண்டனிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சந்திரிகா சிறிலங்கா திரும்பினார்.

மங்கள சமரவீரவுக்கு ஏற்கெனவே வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த சந்திரிகா, இன்று இரவு மங்களவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மங்கள சமரவீர, சந்திரிகாவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. முக்கிய அரசியல் விடயங்களைப் பரிமாற உள்ளோம். இந்தியா சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவும் லண்டன் சென்றுள்ள சிறீபதி சூரியராச்சியும் சிறிலங்கா திரும்பியதும் எதிர்கால அரசியல் நடவடிக்கைககள் குறித்து தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்வோம் என்றார்.

மேலும் சந்திரிகாவை ரணில் விரைவில் சந்திக்க உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, ரணில் நாடு திரும்பியதும் கட்சியினருடன் கலந்துரையாடிவிட்டு சந்திரிகாவை சந்திப்பார். எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில், இந்த சந்திப்பு மாற்றங்களை உருவாக்கலாம் என்று கூறினார்.

இதனிடையே தனது மகனை அரசியல் களத்தில் இறக்குவதற்கான நடவடிக்கைகளில் சந்திரிகா ஈடுபட்டிருப்பதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 26 ஆம் நாள் ஹொஹொல்லையில் இடம்பெறவுள்ள பண்டாரநாயக்காவின் நினைவு நாள் நிகழ்வில் உரையாற்றும்போது தனது அரசியல் நிலைப்பாட்டினை சந்திரிகா அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

அந்நிகழ்வில் சந்திரிகாவின் ஹொஹொல்லை காணியின் உரிமத்தை தனது மகனுக்கு மாற்றி மகனது அரசியல் பிரவேசம் குறித்தும் சந்திரிகா அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

அதற்கு முன்னதாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பிரமுகர்கள் மற்றும் ஜே.வி.பியினருடன் அவர் பேச்சு நடத்தும் சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரிகிறது.

புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மங்கள சுகவீனம்; சந்திரிகாவை சந்திக்கவில்லை இருவரும் நீண்டநேரம் தொலைபேசியில் உரையாடல்

[14 - August - 2007]

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை நாடு திரும்பிய சந்திரிகா குமாரதுங்க நேற்று மங்கள சமரவீரவை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலை குறித்து உரையாடுவாரென எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் மங்கள சமரவீர சுகவீனமுற்றிருப்பதால் நேற்று இந்தச் சந்திப்பு நடைபெறவில்லை. மாறாக இருவரும் மிக நீண்ட நேரம் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர்.

நாட்டின் தற்போதைய நிலைமை, தெற்கில் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றம், சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தோற்றம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள், எதிரணிகளின் கூட்டமைப்பு குறித்தெல்லாம் இருவரும் விரிவாக உரையாடியுள்ளனர்.

தற்போது வெளிநாட்டிலிருக்கும் சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் முக்கியஸ்தரான ஷ்ரீபதி சூரியாராச்சி ஓரிரு தினங்களில் நாடு திரும்பியதும் மங்கள சமரவீரவும் ஷ்ரீபதியும் சென்று சந்திரிகா குமாரதுங்கவைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி - தினக்குரல்

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.