Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போலியான முறையில் தமிழர்களின் விபரங்களை சேகரித்த மூவர் கொட்டாஞ்சேனை பொலிஸாரால் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போலியான முறையில் தமிழர்களின் விபரங்களை சேகரித்த மூவர் கொட்டாஞ்சேனை பொலிஸாரால் கைது

வீரகேசரி நாளேடு

கொழும்பு 13, ஜெம்பட்டா வீதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் போலியான முறையில் தமிழர்களின் விபரங்களை சேகரித்த சந்தேகநபர்கள் மூவர் நேற்று கொட்டாஞ்சேனை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஜெம்பட்டா வீதியில் உள்ள 145 ஆம் இலக்க குடியிருப்புப் பகுதிக்கு நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் சென்ற மூன்று நபர்கள், தம்மை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் எனக்கூறி தமிழர்களின் பெயர் மற்றும் ஏனைய விபரங்களை சேகரித்துள்ளனர். குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தொடர்பில் அவர்கள் அதிகமாகக் கேள்விகளைக் கேட்டு அவர்களின் விபரங்களை பதிவுசெய்துள்ளனர். இத்தகவல் சேகரிப்பில் சந்தேகம்

கொண்ட சிலர், மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். அவர் உடனடியாக கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கொட்டாஞ்சேனை பொலிஸார் தகவல் சேகரித்துக்கொண்டிருந்த சந்தேகநபர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், அவர்கள் இராணுவத்திலிருந்து தப்பிச்சென்றவர்கள் என்பதும் இவர்களின் வங்கிக் கணக்குகளில் பெருந்தொகையான பணம் இருப்பதும் தெரியவந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கொட்டாஞ்சேனை சங்கமித்தை மாவத்தையில் வசிக்கும் தமிழ் குடும்பஸ்தர் ஒருவரிடம் வீட்டுக்குச்சென்று 80 ஆயிரம் ரூபா பணமும் கையடக்கத் தொலைபேசிகள் இரண்டையும் கைதுசெய்யப்பட்டுள்ள மேற்படி சந்தேகநபர்களே கடந்த மாதம் 23 ஆம் தகதி அச்சுறுத்தி பெற்றுச்சென்றுள்ளனர் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னதாக கொட்டாஞ்சேனை தல்பொத்தை வீதியில் உள்ள தொலைத்தொடர்பு நிலையத்தில் கப்பம் பெற முயன்ற சந்தேகநபர்கள் மூவர் இவ்வாறு பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவர்களில் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒருவர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் அவதானத்துடன் இருக்கவும். யாருடனும் கப்பம் பெறப்பட்டிரந்தால் அவர்கள் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்து, சந்தேகநபர்களை அடையாளப்படுத்தவும் என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.