Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டை மீளக்கட்டியெழுப்ப முக்கியமான பொருளாதார மறுசீரமைப்புகள் தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை மீளக்கட்டியெழுப்ப முக்கியமான பொருளாதார மறுசீரமைப்புகள் தேவை

 

Rehana-Thowfeek-1024x608-1-300x225.jpg
பொருளாதார நிபுணர் ரெஹானா தௌபீக்

*தொலைநோக்க ற்ற தீர்மானங்கள் , கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகள் இலங்கையை கடுமையான நெருக்கடிக்குள் தள்ளின

*அதிகாரிகள் இறுதிக் கட்டத்தை கடந்திருந்தும் கூட சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதில் அதிகாரிகள் தாமதம் செய்தனர்

*இலங்கைப் பிரஜைகள் மத்தியில் உணவுப் பாதுகாப்பில் விரைவான வீழ்ச்சி

*41% குடும்பங்கள் 75% க்கும் அதிகமான பணத்தை உணவுக்காக செலவிடுகின்றன

*மக்கள் உணவுக்காக மருத்துவம் மற்றும் கல்விக்கான செலவை குறைக்கின்றனர்

*பொருளாதார நெருக்கடிகளின் போது மனித மூலதனம் வெளியேற்றம் பொதுவானது

*இடைக்கால வரவுசெலவு திட்டத்தில் அனைத்து ‘அத்தியாவசிய’ செலவுகளையும் குறைக்க வேண்டும்

*அரசு மக்களின் கோரிக்கைகளுக்கு விரோதமாகவும், பதிலளிக்காமலும் இருக்கக் கூடாது

*வலுவானதொரு சமூக பாதுகாப்பு வலைத் திட்டத்தை நிறுவுவது முக்கியம்
__________________________________________________________________________

இலங்கையின் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளுடன் குறுகிய பார்வையுடன் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நாட்டை ஆழமான நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன என்று பொருளாதார நிபுணர் ரெஹானா தௌபீக் தெரிவித்துள்ளார்.

“பொருளாதாரத்துக்கு ஆபத்துகள் இருந்த போதிலும், அரசாங்கம், அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்கள் இறுதிக் கட்டத்தை கடக்கும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் தலையீட்டை நாடுவதில்லையென முடிவு செய்தனர். இந்த குறுகியதும் தொலைநோக்கற்றதுமான தீர்மானங்கள் , எமது கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளுடன் சேர்ந்து, எங்களை கடும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன – மேலும் மோசமான விடயம் என்னவெனில் , இதில் பெரும்பாலானவை தவிர்க்கப் பட்டிருக்கலாம்,” என்று அவர் தி சண்டே மோர்னிங்கிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது, இலங்கை ஓர் இடுக்கில் அமர்ந்திருப்பதைக் காணும் நிலையில், நாட்டின் செல்வழியை மீட்டெடுப்பதற்கான முக்கியமான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்காக நாம் காத்திருக்க வேண்டியதில்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார் . நெருக்கடிகள் தொடர்வதின் விளைவாக இலங்கையில் உணவுப் பணவீக்கம் வரலாறு காணாதளவு உச்சத்தை எட்டியுள்ளது. இது பொது மக்கள் மத்தியில் உணவுப் பாதுகாப்பில் விரைவான சீர்குலைவுக்கு வழிவகுத்தது என்றும் தௌபீக் குறிப்பிட்டார்.

இந்த நெருக்கடியிலிருந்து வெளியேறும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமானது, இலங்கையின் பொருளாதாரத் திட்டத்தைக் கோடிட்டுக் காட்டினாலும், மறுசீரமைப்புத் திட்டம் மிகவும் முக்கியமானது என்று தௌபீக் கூறினார். எவ்வாறாயினும், அரசின் எதிர்ப்பை ஒடுக்கும் நடவடிக்கையின் பின்னணியில், அரசாங்கம் விரோதமாகவும், மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்காததாகவும் காணப்பட்டால்,மறுசீரமைப்புத் திட்டத்தை மக்கள் உள்வாங்கிக் கொள்வது கடினம் என்று அவர் எச்சரித்தார்.

நேர்காணலின் சில பகுதிகள் வருமாறு:

கேள்வி: இலங்கை பொருளாதாரத்தில் சகல முனைகளிலிருந்தும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது . பொருளாதாரத்தை இத்தகைய இக்கட்டான நிலைக்கு இட்டுச் சென்ற முக்கிய கொள்கைரீதியான முடிவுகள் என்ன?

பதில் ;என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள இரண்டு வழிகள் உள்ளன. முதலாவதாக, இலங்கையின் பொருளாதாரத்தில் நீண்டகால கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகள் உள்ளன. அவை சீர் செய்யப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதன் விளைவாக, பல தசாப்தங்களாக நாம் இரட்டைப் பற்றாக்குறையில் – வரவுசெவுத்திட்ட பற்றாக்குறை மற்றும் நடைமுறைக்கணக்கு கணக்குப் பற்றாக்குறையுடன் உள்ளது – இந்தப் பற்றாக்குறையை நிரப்ப கடனை எடுத்துக் கொண்டோம். எனவே அடிப்படையில், நாங்கள் ஓர் இடுக்குக்குள் அமர்ந்திருந்தோம்.

Eco-2.jpg
இரண்டாவதாக, இலங்கை தனது வங்குரோத்து நிலையை அறிவிப்பதற்கு முன்னர் கடந்த இரண்டு வருடங்களுக்குள் எடுக்கப்பட்ட கொள்கை ரீதியான முடிவுகள் உண்மையில் அந்த நிலைக்கு எம்மை கொண்டுசென்று வைத்தன. 2019 இன் வரிக் குறைப்புகள் 600 பில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு இழப்பை
ஏற்படுத்தியது. 2016 இல் சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் போது நாங்கள் மேற்கொண்ட நிதி ஒருங்கிணைப்பு வழிமுறையை நாங்கள் கைவிடுகிறோம் என்று சர்வதேச பார்வையாளர்களுக்கு சமிக்ஞை செய்தது. இதன் விளைவாக 2016 இல் நாங்கள் மேற்கொண்ட நாணய நிதியத் திட்டத்தை முடித்து வைப்பதற்கு தவறிவிட்டோம்,அத்துடன் நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய சில நிதிகளையும் இழந்தோம்.

சர்வதேச நிதிச் சந்தைகளில் இலங்கை தரமிறக்கப்பட்டதுடன் சர்வதேச அளவில் மேலும் கடன் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. பாரிய நிதிப்பற்றாக்குறைக்கு (2020 இல் 1.6 டிரில்லியன் ரூபா மற்றும் 2021 இல் [2 டிரில்லியன் ரூபா ) நிதியளிக்க, மத்திய வங்கி முன்வந்தது. புழக்கத்தில் உள்ள பணத்தின் அளவை அளவிடும் பரந்தளவிலான பண விநியோகம் கோவிட் காரணமாக உற்பத்தியில் மந்தநிலை இருந்தபோதிலும்., இந்த 2 ஆண்டுகளில் சுமார் 40% விரிவடைந்துள்ளது.

மேலும், வெளிநாட்டு நாணயக் கையிருப்பு குறைவடைந்தாலும், சுற்றுலா வருமானம் குறைந்தாலும், இலங்கை இன்னும் கொவிட் நோயிலிருந்து மீண்டு வந்தாலும், வெளிநாட்டுக் கடனைத் தொடர அரசாங்கம் முடிவு செய்தது. இது பரிவர்த்தனை வீதத்தையும் நிர்ணயித்தது. நாங்கள் வெளிநாடுகளிலிருந்து அங்கு பணி புரியும் பணியாளர்கள் அனுப்பும் சுமார் 1.6 பில்லியன் டொலர் வரவுகளை இழந்தோம். பண விநியோகம் விரிவடைந்த போதிலும் குறைந்த வட்டி வீதங்கள் அமுல்படுத்தப்பட்டன, இது ரூபாவின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியது.

இது பொருளாதாரத்துக்கு ஆபத்துகள் இருந்தபோதிலும், அரசாங்கம், அதன் அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்கள் இறுதிக் கட்டத்தை கடக்கும் வரை நாணய நிதியத்தை நாட வேண்டாம் என்று முடிவு செய்தனர். இந்தக் குறுகியதும் தொலைநோக்கற்றதுமான முடிவுகளும், எமது கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளும் சேர்ந்து, ஓர் ஆழமான நெருக்கடிக்குள் தள்ளி விட்டன. மேலும் மோசமான விடயம் என்னவென்றால், இதில் பெரும் பகுதி தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

கேள்வி: உடனடியாக மேற்கொள்ளக்கூடிய திருத்த நடவடிக்கைகள் எவை? ஒரு சிறந்த பொருளாதார சீர்திருத்த பொதி எவ்வாறானதாக இருக்கும்?

பதில்:இலங்கையின் பாதையை மீட்டமைக்க தேவையான சில பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் வரும் வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. புதிதாக பதவியேற்றுள்ள அரசாங்கம் விரைவில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளது. அது உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளுக்குத் தீர்வு காணும் என நான் நம்புகிறேன்.யாவற்றுக்கும் ஒரே தீர்வு பொருந்தாது .

முதலாவதாக, அரசாங்கச் செலவினங்களைச் சமாளிக்க கடன் வாங்குதல் மற்றும் அச்சிடுதல் ஆகியவற்றின் தேவையின் அழுத்தத்தைக் குறைக்க வரி வருவாய் பற்றிய விடயத்தைக் கவனிக்க வேண்டும். இலங்கையின் வரி வருமானம் மிகவும் மோசமாக உள்ளது நாம் இந்தக் குழப்பத்தில் இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில், உலகின் மிகக் குறைந்த வரி-நிகர தேசிய உற்பத்தி வீதங்களில் ஒன்றாக நாங்கள் இருந்தோம். மிகவும் சமமான மற்றும் முற்போக்கான வரி முறைக்கு பாரிய வரி சீர்திருத்தங்கள் தேவை.

இரண்டாவதாக, நாம் அரசாங்க செலவினங்களைப் பார்க்க வேண்டும் . அதன் முக்கிய அம்சம் எமது அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பதாகும். இந்த அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் மதிப்பீடு, அவற்றின் பொருளாதாரப் பங்கு, அவற்றின் இருப்புக்கான காரணம் மற்றும் செலவு-செயல்திறன் போன்ற முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது வெவ்வேறு வழிகளில் வரலாம்: சந்தை தாராளமயமாக்கல் மற்றும் போட்டித்தன்மையை அறிமுகப்படுத்துதல், பிரித்தெடுத்தல், தனியார்மயமாக்கல் அல்லது சாத்தியமில்லாதவற்றை முடக்கி வைத்தல் என்பனவாகும். யாவற்றுக்கும் ஒரே தீர்வு பொருந்தாது .

நெருக்கடியை எதிர்கொள்வதற்கு வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரஜைகளுக்கு உதவ, மட்டுப்பாடானவையாக வளங்கள் இருந்தாலும், அரசாங்கம் எப்படியாவது நிதி ரீதியான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.

Economics-300x216.png
பின்னர் வர்த்தக தாராளமயமாக்கல் பற்றி தீவிரமாக சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும். இலங்கை ஓர் உயர் பாதுகாப்பு நாடு; இது பாதுகாக்கப்பட்ட தொழில்களுக்கு வளங்களை தவறாக ஒதுக்குவதற்கு வழிவகுத்தது மற்றும் சக்திவாய்ந்த கந்து வட்டி வணிகக் குழுக்களை உருவாக்கியது. எவ்வாறாயினும், உண்மையான ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக வருவதற்கு நாம் மிகையான சென்மதி நிலுவையை கொண்டிருப்பதை வென்றெடுக்க வேண்டும்.சர்வதேச போட்டிக்கு நாம் பயப்பட முடியாது. உள்கட்டமைப்பு மற்றும் மக்களில் முதலீடுகள் செய்யப்பட வேண்டும், அதே நேரத்தில் ஏற்றுமதிப் பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியை அதிகரிக்க கல்வி மற்றும் தொழிலாளர் சந்தை மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, ஒரு சிறந்த மறுசீரமைப்புப் பொதியானது, இலங்கையின் இரண்டு அடிப்படைக் கட்டமைப்புப் பிரச்சினைகளைச் சீர் செய்வதற்கான உடனடியானது மற்றும் நீண்ட காலஉபாயங்களைக் கையாள வேண்டும்.

கேள்வி: உணவுப் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது சராசரி இலங்கைப் பிரஜைக்கு ஏற்படுத்திய தாக்கம் என்ன? உணவு மற்றும் நல்வாழ்வின் அடிப்படையில் இது அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது ?

பதில்: உணவுப் பணவீக்கம் தேசிய அளவில் 58% ஆகவும் கொழும்பு மாவட்டத்தில் 80% ஆகவும் உயர்ந்த நிலையில் உள்ளது. இலங்கையில் உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஆய்வில், இலங்கையில் 61% குடும்பங்கள் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கையாள்வதற்காக உணவைச் சமாளிக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றன. அதாவது, அவர்கள் உண்ணும் அளவை பகுதி அளவிலோ அல்லது உணவின் எண்ணிக்கையிலோ குறைத்து, மலிவான, குறைவான சத்துள்ள மாற்றுகளை உட்கொள்கிறார்கள். சில சமயங்களில் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே மக்கள் உட்கொள்வதாக அறிக்கைகள் உள்ளன.
நெருக்கடிக்கு முன்னர் நாட்டில் ஊட்டச் சத்துக் குறைபாடு ஒரு பரவலான பிரச்சினையாக இருந்தது. இனப்பெருக்க வயதுடைய பெண்களில் சுமார் 35% பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாகப் பிறந்த குழந்தைகளில் சுமார் 16% பேர் குறைந்த எடையுடன் உள்ளனர், மேலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 21% பேர் எடை குறைவாக உள்ளனர். எனவே அடிப்படை உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், இந்த ஆரோக்கிய விளைவுகளில் ஏற்படும் தாக்கத்தை நீங்கள் கற்பனை செய்யலாம்.

இந்த ஆய்வில் இலங்கையில் வெறும் 10% குடும்பங்கள் ‘உணவு பாதுகாப்பை ’ கொண்டுள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது ; 2009 ஆம் ஆண்டில் இதே போன்ற மதிப்பீட்டில் 88% குடும்பங்கள் உணவுப் பாதுகாப்புடன் இருப்பதைக் கண்டறிந்தது. இலங்கைப் பிரஜைகள் மத்தியில் உணவுப் பாதுகாப்பில் விரைவான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு மக்களை அவர்களின் பிற்கால வாழ்க்கையிலும், பிள்ளைகளின் கல்விப் பெறுபேறுகளையும் கூட பாதிக்கிறது. இது ஒரு சுழற்சி மற்றும் துரதிர்ஷ்டவசமாக இப்போது மிகவும் மோசமாக இருக்கும். குறைந்த பட்சம், ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் வருமானத்துக்கும் வாழ்க்கைச் செலவுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க அவர்களுக்கு உடனடி மற்றும் போதுமான பணப் பரிமாற்றத் திட்டம் தேவை.

Sri-Lanka-300x212.jpg

கேள்வி: கொள்வனவு சக்தி குறைவதால் மக்கள் செலவு செய்வதில் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள், எந்தெந்தத் துறைகளில் தியாகம் செய்கிறார்கள், இது சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

பதில்: மக்கள் தங்கள் வீட்டு வருமானத்தில் 30-50% உணவுக்காகவும், மீதியை கல்வி, போக்குவரத்து, பொழுதுபோக்கு போன்றவற்றிற்காகவும் செலவிடுவார்கள் என்பது முன்னைய புரிதல். ஆனால் உலக உணவுத்திட்டத்தின் மதிப்பீட்டின்படி 41% குடும்பங்கள் அவர்களின் பணத்தில் இப்போது 75 %க்கு மேல் உணவுக்காக மட்டுமே செலவு செய்கின்றனர். இது தோட்டத் துறையில் (60% குடும்பங்கள்) அதிகமாகும். உணவுக்காக மட்டுமே. மருத்துவம், கல்வி போன்ற ஏனைய செலவுகளை மக்கள் குறைத்துக் கொள்கின்றனர்.

பாதிப்புகளை நாம் ஏற்கனவே பார்த்து வருகிறோம்; உதாரணமாக, இலங்கையில் தங்களுக்கும் தங்கள் பிள்ளை களுக்கும் எதிர்காலம் இல்லை என்று பலர் இலங்கையிலிருந்து புலம்பெயர்கின்றனர். பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் போதிய ஊட்டச்சத்தின்மையின் தாக்கங்களையும் நாம் காண்கிறோம், இது நோய்களுக்கான பாதிப்பை அதிகரிக்கச் செய்யும்.

கேள்வி: ஜனாதிபதியின் கருத்துகள் இருந்தபோதிலும், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் நடைமுறைக்கு வர இன்னும் பல மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது. அதுவரை, உயிர்வாழ்வதை உறுதி செய்வதற்காக, தற்போது நிலவும் நெருக்கடியை இலங்கை எவ்வாறு வழிநடத்த வேண்டும்?

பதில்: இறுதி செய்யப்பட்ட நாணய நிதியத் திட்டத்துக்கு காலம் எடுக்கும் போது, நாம் முதலில் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை எங்கள் கடனாளிகளுடன் நிறைவு செய்ய வேண்டும், நாணய நிதியத்துடன் பணியாளர் அளவிலான ஒப்பந்தம் விரைவில் வரும்.

பணியாளர்கள் அளவிலான ஒப்பந்தம் என்பது, சர்வதேச நாணய நிதியத்தின் நுட்ப ஊழியர்களும் இலங்கை அதிகாரிகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பெரிய பொருளாதாரத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதையே அர்த்தப்படுத்துகிறது. இந்த உடன்பாடு எட்டப்பட்டவுடன், இலங்கையிடம் தற்போது ஏற்றுக்கொள்ளக்கூடிய பொருளாதாரத் திட்டம் உள்ளது என்பதை இது ஏனைய நாடுகளுக்கு உணர்த்தும். இது இலங்கைக்கு பாதுகாப்பான இடையீட்டு நிதியுதவிக்கு உதவும் – அதாவது, நட்பு நாடுகளிடமிருந்து எதிர்வரும் காலங்களில் நாட்டை நிர்வகிப் பதற்குகான நிதியை வழங்க உதவும். இந்த உடன்படிக்கையை நிறைவு செய்வதற்கும் இலங்கை மீதான சர்வதேச நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் செயற்படுவது அவசியமாகும்.

கேள்வி: இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் அளவைக் கருத்தில் கொள்ளும்போது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் மட்டும் போதுமானதாக இருக்குமா?

பதில்: சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் முக்கியமானது, ஏனெனில் அது இலங்கை பின்பற்ற வேண்டிய பாரிய பொருளாதாரத் திட்டத்தை கோடிட்டுக் காட்டும்; நாணய நிதியத் தில் இருந்து வரும் நேரடி நிதி உதவியை விட சீர்திருத்த திட்டம் மிகவும் முக்கியமானது. மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் இலங்கை மீதான சர்வதேச நம்பிக்கையையும் அதிகரிக்கும்; இது எங்களுக்கு இடையீட்டு நிதியுதவிக்கான அணுகலைப் பெறவும், சர்வதேச மூலதனச் சந்தைகளை மீண்டும் அணுகவும் உதவும்.

இருப்பினும், சீர்திருத்த திட்டம் ஒப்பந்தத்தின் மிக முக்கியமான பகுதியாகும். எமது பொருளாதாரத்தை மீளமைக்க ஆழமான, கட்டமைப்பு மற்றும் சில சமயங்களில் தீவிரமான சீர்திருத்தங்களை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும். நாங்கள் இதற்கு முன்பு 16 முறைநாணய நிதியத்துக்கு சென்றுள்ளோம், மேலும் 17வது முறையாக செல்கிறோம். நாம் இந்தச் சீர்திருத்தங்களைச் சரியாகச் செய்யாமல், அதற்குப் பதிலாக ஒரு தரக்குறைவான வேலையைச் செய்தால், அல்லது அதைவிட மோசமாக, விட யங்கள் கொஞ்சம் சீரடைந்தவுடன் (இதுதான் நாம் வழக்கமாகச் செய்வோம்) மறுபக்கமாகச் செய்தால், சந்தேகத்திற்கு இடமின்றி, நாங்கள் மீண்டும் ஒரு முறை பழையநிலைக்க திரும்புவோம் என்று நான் பயப்படுகிறேன்.

கேள்வி: வரவிருக்கும் பட்ஜெட்டில் எந்தெந்த பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

பதில்: நிச்சயமாக மிக முக்கியமான விட யம் வரியாகும்.. 2019 இல் இருந்த நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்வதுதான் திட்டம் என்று நினைக்கிறேன், இது ஒரு தொடக்கத்திற்கு நல்லது, ஆனால் அது நிறுத்தப்படக்கூடாது. 2019 ஆம் ஆண்டிலும், இப்போது இருப்பதைப் போன்ற கட்டமைப்பு சிக்கல்களை நாங்கள் எதிர்கொண்டோம், எனவே நீண்ட காலத்துக்கு நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது இன்றியமையாதது மற்றும் வரி அடிப்படையை விரிவுபடுத்துவதற்கும் வரி வருவாயை அதிகரிப்பதற்கும் வரிச் சீர்திருத்தங்களை செயற் படுத்துவதாகும்.
இது ஒரு ‘நெருக்கடிகால பட்ஜெட்’ என்பதால், அரசாங்க செலவினங்களைக் குறைப்பதும் முக்கியமானது. அரசாங்கம் நிறைய செலவு செய்வதில்லை என்று சிலர் வாதிடுகின்றனர்; இது ஒட்டுமொத்தமாக அதிகம் செலவழிக்காது என்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் அரசாங்கம் தனது பணத்தை எங்கு செலவழிக்கிறது என்று பார்த்தால், தற்போதைய நிலையைப் பேணுவதற்கும், மிகவும் திறமையற்ற அரசு நிறுவனங்கள் மற்றும்அரசுக்குசொந்தமான நிறுவனங்களை பராமரிப்பதற்கும் நிறைய செலவுகள் செய்யப்படுகின்றன. இடைக்கால பட்ஜெட் அனைத்து ‘அத்தியாவசியம் அல்லாத’ செலவினங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும், இதில் சில தொடர்ச்சியான செலவுகள் மற்றும் திட்டமிடப்பட்ட பெரும்பாலான மூலதனச் செலவுகள் அடங்கும்.

மக்களுக்கு, குறிப்பாக தற்போதைய நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு சமூக உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கத்திடம் உள்ள வரையறுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துவது முக்கியம். மேலதிகமாக , பட்ஜெட் அரசாங்கம் மேற்கொள்ள விரும்பும் எந்தவொரு சீர்திருத்தத்தையும் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

கேள்வி: போராட்டக்காரர்கள் மீதுஇடம்பெற்று வரும் அடக்குமுறை அச்சமான சூழலுக்கு வழிவகுத்தது, உடல்கள்கரையொதுங்குதல் , தன்னிச்சையான கைதுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற செய்திகளுக்கு மத்தியில் இது நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இது இலங்கையின் மீட்சியை எவ்வாறு பாதிக்கும்? இத்தகைய நிலைமைகளுக்கு மத்தியில் மக்கள் சிக்கன நடவடிக்கைகளை ஆதரிப்பார்களா?

பதில்: அரசாங்கம் விரோதமாகவும், மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்காததாகவும் காணப்பட்டால், சீர்திருத்தத் திட்டத்திற்கு மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்வது கடினம் என்று நான் நினைக்கிறேன். சீர்திருத்தங்கள் கடினமாக இருக்கும், ஏனெனில் இது நாட்டில் இருக்கும் அடிப்படை முறைமைகளை மாற்றுவதாகும், எனவே சிறந்த சூழ்நிலையில் கூட சில தள்ளுமுள்ளு ஏற்படலாம். சீர்திருத்தத் திட்டம் என்ன, இந்தச் சீர்திருத்தங்கள் ஏன் தேவை, அது அவர்களின் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கும் என்பதை மக்களுக்குத் தெரிவிப்பது அரசாங்கத்திற்கு முக்கியம்.

சீர்திருத்தங்களை வேகப்படுத்துவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். உதாரணமாக, எரிபொருள் விலை சீர் செய்தல் மிகவும் திடீரென இருந்தது மற்றும் உணவுப் பொருட்களின் விலையில் ஏற்படும் தாக்கம் போன்ற தாக்கங்கள் கடுமையாக இருந்தன. மக்கள் அவ்வளவுக்கு விரைவாக அனுசரித்துப் போவது கடினம். சில சந்தர்ப்பங்களில், மாற்றத்தை மென்மையாக்க சீர்திருத்தங்கள் வேகப்படுத்தப்பட வேண்டும். ஆனால், எரிபொருள் விலை யை சரிசெய்தல் ஏன் தேவை என்பதை மக்கள் புரிந்துகொண்டார்கள் என்று நினைக்கிறேன். தனியார் துறை, தொழிற்சங்கங்கள், பொதுமக்கள் போன்றவற்றில் இருந்து மாறுபட்ட மற்றும் போட்டியிடும் கருத்துக்கள் மற்றும் ஆர்வங்கள் இருக்கும், ஆனால் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு சிறந்ததைச் செய்வதும் அதைவிட முக்கியமாக அனைவருக்கும் அதைத் தெரிவிப்பதும் முக்கியம்.

கேள்வி: வேலை இழப்புகள் , அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியி ல், அதிகளவில் மக்கள் இலங்கையை விட்டு வெளியேற விரும்புகின்றனர், இது பாரிய மூளைசாலிகள் வெளியேற்ற த்துக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய நிறுவனமான தகவல் தொழில்நுட்பத் துறையில் இதன் தாக்கத்தை காணக்கூடியதாக உள்ளது. இந்த வெளியேற்றம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Passport.jpg

பதில்: துரதிர்ஷ்டவசமாக, மூளை சாலிகள் வெளியேற்றம் இலங்கைக்கு புதிதல்ல. நாங்கள் பல இடப்பெயர்வு அலைகளைக் கொண்டிருந்தோம், இப்போது இன்னொன்றை அனுபவித்து வருகிறோம். தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் போன்ற பல திறமையான தொழிலாளர்கள் நாட்டின் நிலை குறித்து மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர். நிச்சயமற்ற மற்றும் நிலையற்ற பொருளாதார நிலையில் மக்கள் வாழ விரும்பவில்லை என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைத் தரத்தில் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறார்கள். எனவே பசுமையானஇடங்களைத் தேடுவார்கள்.

பொருளாதார நெருக்கடிகளின் போது இந்த வகையான மனித மூலதனம் வெளியேறுவது பொதுவானது. உதாரணமாக லெபனானில், பெய்ரூட் துறைமுக வெடிப்பு அதன் பொருளாதாரவீழ்ச்சியின் மத்தியில் 1,000 சுகாதார நிபுணர்களை வெளியேறியது. மனித மூலதனம் வெளியேறுதல் பொருளாதார மீட்சிக்கு தீங்கு விளைவிக்கும், குறிப்பாக இளம் மற்றும் திறமையான தொழிலாளர்கள் அல்லது வரிவிதிப்பு மூலம் பொருளாதாரத்திற்கு பங்களிக்கக்கூடியவர்கள் அல்லது புதிய ஏற்றுமதி வணிகங்களை அமைப்பதன் மூலம், எடுத்துக்காட்டாக, வெளியேறுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.

18-29 வயதுக்குட்பட்டவர்களில் 30% பேர் இடம்பெயரத் திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை ஒரு வயது முதிர்ந்த சமூகம், எனவே இளைஞர்கள் ஒட்டிக்கொள்ள வேண்டும், ஆனால் அவர்களின் பொருளாதார அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இதைச் செய்யும்படி அவர்களிடம் கேட்பது மிகவும் கடினமாக உள்ளது.

திறமைகுறைந்த தொழிலாளர்களுக்கு, இது கவலையளிக்கிறது, ஏனெனில் அவர்கள் வெளிநாட்டில் மிகவும் வேலை வாய்ப்புகளைத் தேடுவது அவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தலாம். அவர்கள் சிறு குழந்தைகளையோ அல்லது வயதான பெற்றோரையோ விட்டுச் செல்கிறார்கள். இது அதன் சொந்த எதிர்மறையான தாக்கங்களைக் கொண்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக அவர்கள் இலங்கையில் தங்குவதை விட இந்த ஆபத்தான வேலைகளை விரும்பலாம்.

https://thinakkural.lk/article/199331

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.