Jump to content

FIFA உலகக் கிண்ண வரலாறு - தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

FIFA உலகக் கிண்ண வரலாறும் நடந்துமுடிந்த அத்தியாயங்களும் -1

By DIGITAL DESK 2

18 NOV, 2022 | 03:41 PM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியுடன் வேறொன்றையும் ஒப்பிடமுடியாது.

ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டி உலகக் கிண்ணப் போட்டிகளின் தரத்தை ஒத்ததாக இருக்கின்ற போதிலும் உலகக் கிண்ணத்துக்கு உள்ள மவுசை அது பெற்றுவிட முடியாது.

கத்தாரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ள 32 நாடுகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றின்போது கால்பந்தாட்டம் எந்தளவு பிரபல்யம் பெற்றிருக்கிறது என்பதை காணக்கூடியதாக இருக்கும்.

வேறு எந்த விளையாட்டுப் போட்டிகளையும் விட உலகக் கிண்ண கால்பந்தாட்டத்திற்கு உலகில் பெரு வரவேற்பு இருந்துவந்துள்ளதை அவதானிக்கலாம்.

ரஷ்யாவில் 2018இல் கடைசியாக நடைபெற்ற பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை உலகம் முழுவதிலுமிருந்து 300 கோடி இரசிகர்கள் தொலைக்காட்சி வாயிலாக கண்டுகளித்தனர். பிரான்ஸுக்கும் குரோஏஷியாவுக்கும் இடையிலான இறுதிப் போட்டியை சுமார் 81,000 இரசிகர்கள் நேரடியாகவும் 100 கோடி இரசிகர்கள் தொலைக்காட்சி வாயிலாகவும் கண்டுகளித்தனர்.

 

சிறுவர் முதல் முதியோர்வரை விரும்பிப் பார்க்கும் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் 92 வருட வரலாற்றைக் கொண்டது.

அங்குரார்ப்பண உலகக் கிண்ண கால்பந்தாட்டத்திற்கு முன்னர் கோடைக்கால ஒலிம்பிக்கில் ஓர் அங்கமாக கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்பட்டுவந்தது. எவ்வாறாயினும் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஏதென்ஸில் அங்குரார்ப்பண நவீன ஒலிம்பிக் விளையாட்டு விழா 1896இல் நடைபெற்றபோது கால்பந்தாட்டம் இடம்பெறவில்லை.

ஒலிம்பிக் ஆர்வத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றுவந்த கால்பந்தாட்டம் 1920களில் தொழில்முறையாக மாற்றம் அடையத் தொடங்கியதும் உலகக் கிண்ணப் போட்டியை நடத்தவேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. இந் நிலையில் சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளனம் (FIFA) அதற்கான திட்டத்தை வகுத்தது. அதனைத் தொடர்ந்து அங்கரார்ப்பண உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கான உத்தியோகபூர்வ தீர்மானம் 1928 மே 28ஆம் திகதி பீபாவினால் நிறைவேற்றப்பட்டது.

அதற்கு அமைய அங்குரார்ப்பண உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி உருகுவேயில் 1930இல் அரங்கேற்றப்பட்டது.

பாரிஸ் 1924 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் ஆர்ம்ஸ்டர்டாம் 1928 ஓலிம்பிக் விளையாட்டு விழாவிலும் தொடர்ச்சியாக உருகுவே தங்கப் பதக்கத்தை சுவீகரித்ததால் அங்குரார்ப்பண உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை நடத்தும் உரிமை உருகுவேக்கு வழங்கப்பட்டது.
அன்றிலிருந்து நான்கு வருடங்களுக்கு ஒரு முறை உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்பட்டுவருகிறது. எவ்வாறாயினும் 2ஆவது உலகப் போர் காரணமாக 1942இலும் 1946இலும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்படவில்லை.

1. அங்குரார்ப்பண உலகக் கிண்ண கால்பந்தாட்டம் (1930)

உருகுவே முதலாவது உலக சம்பியன்

1_uruguay_1930.png

உருகுவேயின் தலைநகரான மொன்டேவிடியோவில்  அங்குரார்ப்பண உலகக் கிண்ண கால்பந்தாட்டம் 1930 ஜுலை 13ஆம் திகதியிலிருந்து 30ஆம் திகதிவரை நடத்தப்பட்டது. முன்னோடி சுற்றுகளோ தகுதிகாண் சுற்றுகளோ நடத்தப்படவில்லை. மாறாக அப் போட்டியில் 13 அழைப்பு நாடுகள் 4 குழுக்களில் மோதின. ஒரு குழுவில் 4 நாடுகளும் மற்றைய 3 குழுக்களில் தலா 3 நாடுகளும் லீக் அடிப்படையில் பங்குபற்றின.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதலிடங்களைப் பெற்ற 4 அணிகள் குறுக்கு அரை இறுதியில் விளையாடின.

ஓர் அரை இறுதியில் ஐக்கிய அமெரிக்காவை ஆர்ஜன்டீனாவும் மற்றைய அரை இறுதியில் யூகோஸ்லாவியாவை  உருகுவேயும் 6 - 1 என்ற ஒரே கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.

இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனாவை 4 - 2 என்ற கோல்கள் கணக்கில் உருகுவே வெற்றிகொண்டு முதலாவது உலக சம்பியன் பட்டத்தை சூடிக்கொண்டது.

பங்குபற்றிய நாடுகள் 13: ஆர்ஜன்டீனா, பெல்ஜியம், பொலிவியா, பிரேஸில், சிலி, பிரான்ஸ், மெக்சிகோ, பரகுவே, பெரு, ருமேனியா,  ஐக்கிய  அமெரிக்கா, உருகுவே, யூகோஸ்லாவியா.

2. இரண்டாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம்

இத்தாலி சம்பியனானது

2_italy_team_1934.jpg

இத்தாலியில் 1934 மே 27ஆம் திகதியிலிருந்து ஜுன் 10ஆம் திகதிவரை 2ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்பட்டது. முதல் தடவையாக தகுதிகாண் சுற்று நடத்தப்பட்டதுடன் அதில் 32 நாடுகள் பங்குபற்றின. தகுதிகான் சுற்று நிறைவில் 16 நாடுகள் இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றன. இரண்டாவது உலகக் கிண்ண அத்தியாயம் நொக் அவுட் முறையில் நடத்தப்பட்டது.
முதலாவது அரை இறுதிப் போட்டியில் ஒஸ்திரியாவை 1 - 0 என்ற கோல் அடிப்படையில் இத்தாலியும் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் ஜேர்மனியை 3 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் செக்கோஸ்லோவாக்கியாவும் வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் மேலதிக நேரத்தில் 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் செக்கோஸ்லோவாக்கியாவை வெற்றிகொண்டு இத்தாலி சம்பியனானது.
பங்குபற்றிய நாடுகள் 16: ஆர்ஜன்டீனா, ஒஸ்திரியா. பெல்ஜியம், பிரேஸில், செக்கோஸ்லோவாக்கியா, எகிப்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஹங்கேரி, இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா, ஸ்பெய்ன், சுவீடன், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா.

3. மூன்றாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம்

சம்பியன் பட்டத்தை இத்தாலி தக்கவைத்தது

3_italy_1938.png

உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் மூன்றாவது அத்தியாயம் பிரான்ஸ் தேசத்தின் 9 நகரங்களில் 1938 ஜுன் 4ஆம் திகதியிலிருந்து ஜூன் 19ஆம் திகதிவரை  நடைபெற்றது. வரவேற்பு நாடான பிரான்ஸும் அப்போதைய நடப்பு சம்பியன் இத்தாலியும் நேரடியாக இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றன. மற்றைய 14 நாடுகள் தகுதிகாண் சுற்றின் மூலம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தன.

இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக ஐரோப்பிய கண்டத்திற்கு உலகக் கிண்ணப் போட்டியை நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென் அமெரிக்க நாடுகளான உருகுவேயும் ஆர்ஜன்டீனாவும் உலகக் கிண்ணப் போட்டியை பகிஷ்கரித்தன. உள்ளூர் யுத்தம் காரணமாக ஸ்பெய்ன் பங்குபற்றவில்லை. ஜேர்மனியுடன் ஒஸ்திரியா இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைசி நேரத்தில் ஒஸ்திரியா வாபஸ் பெற்றுக்கொண்டது.

இதன் காரணமாக 15 நாடுகளே 3ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றின. இதன் காரணமாக நொக் அவுட் சுற்றில் சுவீடனுக்கு விடுகை மூலம் நேரடியாக கால் இறுதியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

ஒரு அரை இறுதிப் போட்டியில் பிரேஸிலை 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் இத்தாலியும் மற்றைய அரை இறுதிப் போட்டியில் சுவீடனை 5 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் ஹங்கேரியும் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.

இறுதிப் போட்டியில் ஹங்கேரியை 5 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட அப்போதைய நடப்பு சம்பியன் இத்தாலி இரண்டாவது நேரடித் தடவையாக உலக சம்பியனானது.
பங்குபற்றிய நாடுகள் 15: பெல்ஜியம், பிரேஸில், கியூபா, செக்கோஸ்லோவாக்கியா, டச் ஈஸ்ட் இண்டீஸ், பிரான்ஸ், ஜேர்மனி, ஹங்கேரி, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, போலந்து, ருமேனியா, சுவீடன், சுவிட்சர்லாந்து.

4. நான்காவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம்

இறுதிப் போட்டி இல்லாமல் சம்பியனான உருகுவே

1934-italy-world_cup.jpg

இரண்டாவது உலகப் போர் காரணமாக 1942, 1946களில் உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவில்லை. நான்காவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி பிரேஸில் தேசத்தில் 6 நகரங்களில் நடத்தப்பட்டது.
தகுதிகாண் சுற்றின்போது ஆர்ஜன்டீனா, ஈக்வடோர், பெரு வாபஸ் பெற்றதால் சிலி, பொலிவியா, பரகுவே, உருகுவே ஆகியன தகுதிபெற்றன. ஆசிய நாடுகளில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பர்மா ஆகிய நாடுகள் வாபஸ் பெற்றதால் இந்தியா தகுதிபெற்றது.

ஒஸ்திரியாவும் பெல்ஜியமும் வாபஸ் பெற்றதால் சுவிட்சர்லாந்து, துருக்கி ஆகியன கடைசிச் சுற்றுகளில் விளையாடமலே இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. எனினும் தகுதிபெற்ற பின்னர் இந்தியா, ஸ்கொட்லாந்து, துருக்கி ஆகிய நாடுகள் வாபஸ் பெற்றதால் 13 நாடுகள் மாத்திரமே இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றன.

இதன் காரணமாக 2 குழுக்களில் 4 அணிகளும்  ஒரு  குழுவில் 3 அணிகளும் ஒரு குழுவில் 2 அணிகளும் லீக் சுற்றில் பங்குபற்றின. லீக் சுற்று முடிவில் 4 குழுக்களிலும் முதல் இடங்களைப் பெற்ற அணிகள் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிச் சுற்றில் மிண்டும் லீக் அடிப்படையில் விளையாடின. இறுதிச் சுற்றில் தீரமானம் மிக்க கடைசி போட்டியில் 4 புள்ளிகளுடன் பிரேஸிலும் 3 புள்ளிகளுடன் உருகுவேயும் விளையாடின. அப் போட்டியில் 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்ற உருகுவே இரண்டாவது தடவையாக உலக சம்பியனானது. உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் இறுதிப் போட்டி நடத்தப்படாமல் புள்ளிகள் அடிப்படையில்  சம்பியன் தீர்மானிக்கப்பட்டமை அதுவே முதலும் கடைசியும் ஆகும்.

பங்குபற்றிய நாடுகள் 13: பொலிவியா, பிரேஸில், சிலி, இங்கிலாந்து, இத்தாலி, மெக்சிகோ, பரகுவே, ஸ்பெய்ன், சுவீடன், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, உருகுவே, யூகோஸ்லாவியா.

5. ஐந்தாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம்

மேற்கு ஜேர்மனிக்கு முதலாவது சம்பியன் பட்டம்

5_1954_west_germany_with_jules_rimet_wor

ஐந்தாவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட அத்தியாயம் சுவிட்சர்லாந்தில் 1954 ஜூன் 16ஆம் திகதியிலிருந்து ஜூலை 4ஆம் திகதிவரைஅரங்கேற்றப்பட்டது. 6 நகரங்களில் நடத்தப்பட்ட உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் 16 நாடுகள் பங்குபற்றின. ஸ்கொட்லாந்து, துருக்கி, தென் கொரியா ஆகிய நாடுகள் உலகக் கிண்ணத்தில் அறிமுகமாகின.

நான்கு குழுக்களில் தலா 4 நாடுகள் வீதம் லீக் சுற்று நடத்தப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் நொக் அவுட் சுற்றில் விளையாட தகுதிபெற்றன.

முதலாவது அரை இறுதிப் போட்டியில் ஒஸ்திரியாவை 6 - 1 என்ற கோல்கள் கணக்கில் மேற்கு ஜேர்மனி துவம்சம் செய்தது. இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மேலதிக நேரத்தில் உருகுவேயை 4 - 2 என்ற கோல்கள் கணக்கில் ஹங்கேரி வெற்றிகொண்ட து.

இறுதிப் போட்டியில் ஹங்கேரியை 3 - 2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட மேற்கு ஜேர்மனி முதல் தடவையாக உலக சம்பியன் பட்டத்தை சூடியது. (இன்னும் வரும்)

https://www.virakesari.lk/article/140447

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாறும் நடந்துமுடிந்த அத்தியாயங்களும் - 2

19 NOV, 2022 | 06:39 AM
image

(நெவில் அன்தனி)

 

6. ஆறாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - பிரேஸில் முதல் தடவையாக சம்பியனானது

1958_sweden_world_cup.jpg

உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் 6ஆவது அத்தியாயம் சுவீடனின் 12 நகரங்களில் 1958 ஜூன் 8ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை நடத்தப்பட்டது.

16 நாடுகள் 4 குழுக்களில் லீக் சுற்றில் விளையாடின. அப் போட்டியில் ஐக்கிய இராச்சியத்தின் 4 நாடுகளும் (இங்கிலாந்து, வட அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ்) முதல் தடவையாக உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றிருந்தன.

சோவியத் யூனியன் முதல் தடவையாக பங்குபற்றியதுடன் 1934க்குப் பின்னர் ஆர்ஜன்டீனா மீண்டும் உலகக் கிண்ணப் போட்டிக்கு திரும்பியது. முன்னாள் சம்பியன்களான இத்தாலி, உருகுவே ஆகிய நாடுகள் 6ஆவது அத்தியாயத்தில் விளையாட தகுதி பெறவில்லை.

உலகக் கால்பந்தாட்டத்தில் பிரேஸிலின் ஆதிக்கம் 1958 உலகக் கிண்ணப் போட்டியின்போதே வெளிப்பட ஆரம்பித்தது. அத்துடன் உலகப் பிரசித்திபெற்ற கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலே, தனது 18ஆவது வயதில் உலகக் கிண்ணப் போட்டியில் அறிமுகமானார். அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் 16 வயது வீரராக அவர் பிரேஸில் தேசிய அணியில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

லீக் சுற்று முடிவில் 4 குழுக்களிலும் முதலிரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் நொக் அவுட் சுற்றில் விளையாட தகுதி பெற்றன.

 

முதலாவது அரை இறுதியில் பிரான்ஸை 5 - 2 என்ற கோல்கள் கணக்கில் பிரேஸிலும் இரண்டாவது அரை இறுதியில் பிரான்ஸை 3 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் சுவீடனும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இறுதிப் போட்டியில் சுவீடனை 5 - 2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி கொண்டு பிரேஸில் முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை வென்றெடுத்தது.

அத்துடன் வேற்றுக் கண்டத்தில் சம்பியனான முதலாவது நாடு என்ற பெருமையை பிரேஸில் தனதாக்கிக்கொண்டது. அதற்கு முன்னர் உலகக் கிண்ணப் போட்டி நடைபெற்ற கண்டத்தைச் சேர்ந்த நாடொன்றே சம்பியனாகியிருந்தது.

பங்குபற்றிய நாடுகள் 16: ஆர்ஜன்டீனா, ஒஸ்திரியா, பிரேஸில், செக்கோஸ்லோவாக்கியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சமஷ்டி குடியரசு ஜேர்மனி, ஹங்கேரி, மெக்சிகோ, வட அயர்லாந்து, பரகுவே, ஸ்கொட்லாந்து, சோவியத் யூனியன், சுவீடன், வேல்ஸ், யூகோஸ்லாவியா.

 

7. ஏழாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது பிரேஸில்

 

1962_chile_world_cup.jpg

உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் ஏழாவது அத்தியாயம் சிலியில் 4 நகரங்களில் 1962 மே 30ஆம் திகதியிலிருந்து ஜூன் 17ஆம் திகதிவரை நடைபெற்றது. வழமைபோல் 1962 உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றிலும் 16 நாடுகள் பங்குபற்றின.

கொலம்பியாவும் பல்கேரியாவும் முதல் தடவையாக உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றன.

1958இல் இரண்டாம் இடத்தைப் பெற்ற சுவீடனும் 3ஆம் இடத்தைப் பெற்ற பிரான்ஸும் 1962 உலகக் கிண்ண இறுதிச் சுற்றுக்கு தகுதிபெறாதது வியப்பை ஏற்படுத்தியது.

வழமைபோல் 4 குழுக்களில் லீக் சுற்று நடத்தப்பட்டு லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் நொக் அவுட் சுற்றில் விளையாட தகுதிபெற்றன.

7_1962_brazil_defend_world_cup.jpg

ஒரு அரை இறுதிப் போட்டியில் அப்போதைய நடப்பு சம்பியன் பிரேஸில் 4 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வரவேற்பு நாடான சிலியை வெற்றிகொண்டது. மற்றைய அரை இறுதியில் யூகோஸ்லாவியாவை 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் செக்கோஸ்லோவாக்கியா வெற்றிகொண்டது.

இறுதிப் போட்டியில் செக்கோஸ்லோவாக்கியா 15ஆவது நிமிடத்தில் முதலில் கோல் போட்டு பிரேஸிலை அதிரச் செய்தது. ஆனால் 2 நிமிடங்களில் கோல் நிலையை சமப்படுத்திய பிரேஸில் இறுதியில் 3 - 1 என்ற கொல்கள் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது.

அதன் மூலம் இத்தாலிக்கு (1934, 1938) அடுத்ததாக சம்பியன் பட்டத்தை தக்கவைத்த இரண்டாவது நாடு என்ற பெருமையை பிரேஸில் பெற்றுக்கொண்டது.

பங்குபற்றிய நாடுகள் 16: ஆர்ஜன்டீனா, பிரேஸில், பல்கேரியா, சிலி, கொலம்பியா, செக்கோஸ்லோவாக்கியா, இங்கிலாந்து, சமஷ்டி குடியரசு ஜேர்மனி, ஹங்கேரி, இத்தாலி, மெக்சிகோ, சோவியத் யூனியன், ஸ்பெய்ன், சுவிட்சர்லாந்து, உருகுவே, யூகோஸ்லாவியா.

 

8. எட்டாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - சொந்த மண்ணில் சாதித்தது இங்கிலாந்து

 

1966_england_world_cup.jpg

எட்டாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி இங்கிலாந்தின் 7 நகரங்களில் 1966 ஜூலை 11ஆம் திகதியிலிருந்து ஜூலை 30ஆம் திகதிவரை நடைபெற்றது.

உருகுவே (1930), இத்தாலி (1934) ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக சொந்த மண்ணில் சம்பியனான மூன்றாவது நாடு இங்கிலாந்து ஆகும்.

இரண்டு தடவைகள் அடுத்தடுத்து சம்பியான நாடு என்ற அந்தஸ்துடன் 8ஆவது உலகக் கிண்ணப் போட்டியில் மிகுந்து எதிர்பார்ப்புடன் பங்குபற்றிய பிரேஸில், முதல் சுற்றுடன் வெளியேறியது.

அறிமுக அணிகளான வட கொரியா கால் இறுதிவரையும் போர்த்துக்கல் அரை இறுதிவரையும் முன்னேறி பாராட்டைப் பெற்றன.

8a_1966_england_world_champions.png

லீக் சுற்றில் இத்தாலியை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வட கொரியா வெற்றிகொண்டமை உலகக் கிண்ண வரலாற்றில் மிகப் பெரிய தலைகீழ் முடிவாக அப்போது இருந்தது.

ஆபிரிக்க நாடுகள் தகுதிகாண் சுற்றில் பங்குபற்றிய போதிலும் இடைநடுவில் 15 நாடுகளும் போட்டியிலிருந்து விலகிக்கொண்டன. ஆபிரிக்க அணிக்கு நேரடி தகுதி கிடைக்காது என பீபா எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் நடைமுறை சிக்கல்களை காரணம் காட்டியும் தகுதிகாண் சுற்றிலிருந்து ஆபிரிக்க நாடுகள் விலகிக்கொண்டன.

வரவேற்பு நாடான இங்கிலாந்தும் நடப்பு சம்பியன் பிரேஸிலும் உலகக் கிண்ணப் போட்டியில் நேரடியாக விளையாட தகுதிபெற்ற அதேவேளை மேலும் 14 நாடுகள் தகுதிகாண் சுற்றுமுலும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

நான்கு குழுக்களில் லீக் முறையில் நட்டத்தப்பட்ட முதல் சுற்று முடிவில் நான்கு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் நொக் அவுட் சுற்றில் விளையாட தகுதிபெற்றன.

கால் இறுதிகள் முடிவில் நான்கு ஐரோப்பிய நாடுகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றன. முதலாவது அரை இறுதிப் போட்டியில் சோவியத் யூனியனை 2 - 1 என்ற கோல்கள் கணக்கில் ஜேர்மனி வெற்றிகொண்டது. இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் போர்த்துக்கலை 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றிகொண்டது  .

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இங்கிலாந்துக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான இறுதிப் போட்டி 90 நிமிட நிறைவின்போது 2 - 2 என்ற கோல்கள் அடிப்படையில் சமநிலையில் இருந்தது. இதனை அடுத்து வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில் மேலும் 2 கோல்களைப் போட்ட இங்கிலாந்து 4 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் தடவையாக உலக சம்பியனானது.

அப் போட்டியில் ஜெவ் ஹேர்ஸ்ட் 3 கோல்களைப் போட்டு ஹெட் - ட்ரிக்கைப் பதிவு செய்தார். உலகக் கிண்ண இறுதி ஆட்ட வரலாற்றில் இதுவரை போடப்பட்ட ஒரே ஒரு ஹெட் - ட்ரிக் அதுவாகும்.

 

களவாடப்பட்ட உலகக் கிண்ணத்தை பிக்ள்ஸ் என்ற நாய் கண்டுபிடித்தது

 

எட்டாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் ஆரம்பமாவதற்கு 4 மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் காட்சிப்படுத்தபட்டிருந்த ஜூல்ஸ் ரிமெட் கிண்ணம் (உலகக் கிண்ணம்) களவாடப்பட்டிருந்தது. எனினும் பிக்ள்ஸ் என்ற பெயரைக் கொண்ட நாயினால் அந்த கிண்ணம் கண்டுபிடிக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க, ஏனைய கண்டங்களிலுள்ள நாடுகளுக்கு செயற்கைகோள் மூலம் தெரிவு செய்யப்பட்ட உலகக் கிண்ண போட்டிகள் முதல் தடவையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அத்துடன் பிபிசி தொலைக்காட்சியில் உலகக் கிண்ண இறுதிப் போட்டி முழு அளவில் கறுப்பு வெள்ளையில் ஒளிபரப்பட்டது அதுவே கடைசி தடவையாகும்.  

பங்குபற்றிய நாடுகள் 16: ஆர்ஜன்டீனா, பிரேஸில், பல்கேரியா, சிலி, இங்கிலாந்து, பிரான்ஸ், சமஷ்டி குடியரசு ஜேர்மனி, ஹங்கேரி, இத்தாலி, வட கொரியா, மெக்சிகோ, போர்த்துக்கல், சோவியத் யூனியன், ஸ்பெய்ன், சுவிட்சர்லாந்து, உருகுவே.

 

9. ஒன்பதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் -பிரேஸில் 3ஆவது முறையாக சம்பியன்

1970_mexico_world_cup.png

ஒன்பதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி மெக்சிகோவில் 5 நகரங்களில் 1970 மே 31ஆம் திகதியிலிருந்து ஜூன் 21ஆம் திகதிவரை நடத்தப்பட்டது. அதுவரை ஐரோப்பாவிலும் தென் அமெரிக்காவிலும்  மாத்திரம் நடத்தப்பட்டுவந்த உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்று முதல் தடவையாக வட அமெரிக்காவில் நடத்தப்பட்டது.

உலகக் கிண்ண இறுதிச் சுற்றுக்கு முன்னோடியாக சகல   கண்டங்களிலும் நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் 75 நாடுகள் பங்குபற்றின. பீபா விதிகளின் பிரகாரம் நடப்பு சம்பியன் இங்கிலாந்தும், வரவேற்பு நாடான மெக்சிகோவும் நேரடியாக இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றன. மற்றைய 14 நாடுகள் தகுதிகாண் சுற்றில் வெற்றிபெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

எல் செல்வடோர், இஸ்ரேல், மொரோக்கோ ஆகிய நாடுகள் முதல் தடவையாக உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் பங்குபற்றின.

9_1970_brazil_world_champions.jpeg

கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்திலும் கடும் உஷ்ணத்திற்கு மத்தியிலும் போட்டிகள் நடத்தப்பட்ட போதிலும் சகல போட்டிகளும் உயரிய வகையில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணமாக இருந்தன.

வழமைபோல் 4 குழுக்களில் தலா 4 அணிகள் வீதம் முதல் சுற்றில் மோதின. முதல் சுற்று முடிவில் 4 குழுக்களிலும் முதல் 2 இடங்களைப் பெற்ற அணிகள் கால் இறுதிகளில் விளையாடி 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.

அரை இறுதிகளில் விளையாட 2 தென் அமெரிக்க நாடுகளும் 2 ஐரோப்பிய நாடுகளும் தகுதிபெற்றன.

தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது அரை இறுதியில் உருகுவேயை 3 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் பிரேஸிலும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற அரை இறுதியில் ஜேர்மனியை 4 - 3 என்ற கோல்கள் அடிப்படையில் இத்தாலியும் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.

தலா 2 தடவைகள் உலக சம்பியனாகியிருந்த இத்தாலியும் பிரேஸிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்ததால், முதலாவது அணியாக 3 தடவைகள் சம்பியனான அணி என்ற பெருமையைப் பெறுவதற்கு இரண்டு அணிகளும் துடித்தன.

இறுதிப் போட்டியில் முழுமையான ஆதிக்கம் செலுத்திய பிரேஸில் 4 - 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று 3ஆவது தடவையாக உலகக் கிண்ணத்தை வென்ற முதலாவது அணி என்ற வரலாற்றைப் படைத்தது.

அத்துடன் 1958, 1962, 1966, 1970 ஆகிய நான்கு உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய பேலே, 3 தடவைகள் உலக சம்பியனான பிரேஸில் அணிகளில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

ஜூல் ரிமெட் கிண்ணத்தை 3 தடவைகள் பிரேஸில் சுவீகரித்ததால் அக் கிண்ணம் பிரேஸிலுக்கே சொந்தமானது. அதன் பின்னர் 1974இல் இருந்து பீபா உலகக் கிண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பங்குபற்றிய நாடுகள் 16: பெல்ஜியம், பிரேஸில், பல்கேரியா, செக்கோஸ்லோவாக்கியா, எல் செல்வடோர், இங்கிலாந்து, மேற்கு ஜேர்மனி, இஸ்ரேல், இத்தாலி, மெக்சிகோ, மோரோக்கோ, பெரு, ருமேனியா, சோவியத் யூனியன், சுவீடன், உருகுவே, 

 

10. பத்தாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - புதிய உலகக் கிண்ணத்தை வென்ற முதலாவது நாடு மேற்கு ஜேர்மனி

1974_west_germany_world_cup.jpg

பத்தாவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்று மேற்கு ஜேர்மனியில் 9 நகரங்களில் 1974 ஜூன் 13ஆம் திகதியிலிருந்து ஜூலை 7ஆம் திகதிவரை நடத்தப்பட்டது. ஐந்து கண்டங்களிலிருந்தும் 16 நாடுகள் பங்குபற்றின.

நடப்பு உலக சம்பியன் பிரேஸில், வரவேற்பு நாடான மேற்கு ஜேர்மனி ஆகியன இறுதிச் சுற்றில் நேரடியாக பங்குபற்றியதுடன் மற்றைய 14 நாடுகள் தகுதிகாண் சுற்றின் மூலம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

அவுஸ்திரேலியா, கிழக்கு ஜேர்மனி, ஹெய்ட்டி, ஸய்ரே ஆகிய நான்கு நாடுகள் உலகக் கிண்ணப் போட்டியில் அறிமுகமாகின.

10_1974_west_germany_champions....jpg

16 நாடுகள் பங்குபற்றிய இறுதிச் சுற்று 4 குழுக்களில் நடத்தப்பட்டது. 4 குழுக்களிலும் லீக் சுற்று முடிவடைந்ததும் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இரண்டாம் சுற்றில் தலா 4 அணிகள் வீதம் மீண்டும் லீக் முறையில் விளையாடின.

இரண்டாம் சுற்று லீக் முடிவில் இரண்டு குழுக்களிலும் முதலாம் இடங்களைப் பெற்ற நெதர்லாந்தும் மேற்கு ஜேர்மனியும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.

இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட மேற்கு ஜேர்மனி 20 வருடங்களின் பின்னர் 2ஆவது தடவையாக உலக சம்பியனானது. அத்துடன் புதிய கிண்ணத்தை வென்ற முதலாவது நாடு என்ற பெருமையையும் மேற்கு ஜேர்மனி பெற்றுக்கொண்டது.

பங்குபற்றிய நாடுகள் 16: ஆர்ஜன்டீனா, அவுஸ்திரேலியா, பிரேஸில், பல்கேரியா, சிலி, கிழக்கு ஜேர்மனி, மேற்கு ஜேர்மனி (சமஷ்டி குடியரசு), ஹெய்ட்டி, இத்தாலி, நெதர்லாந்து, போலந்து, ஸ்கொட்லாந்து, சுவீடன், உருகுவே, யூகோஸ்லாவியா, ஸய்ரே.

 

புதிய கிண்ணம் அறிமுகம்

 

1930இல் இருந்து 1970வரை 9 அத்தியாயங்களில் வழங்கப்பட்டு வந்த ஜூல்ஸ்  ரிமெட் உலகக் கிண்ணம் பிரேஸிலுக்கு முழுமையாக சொந்தமானதை அடுத்து 1974இல் புதிய உலகக் கிண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரேஸிலினால் சொந்தமாக்கப்பட்ட ஜூல்ஸ் ரிமெட் உலகக் கிண்ணம் 1983இல் களவாடப்பட்டது. அதன் பின்னர் அது கிடைக்கவே இல்லை. அந்தக் கிண்ணம் பெரும்பாலும் திருடர்களால் உருக்கப்பட்டிருக்கும் என கருதப்படுகிறது.

fifa_world_cup_18_carat_gold.jpg

1970க்குப் பின்னர் 6.175 கிலோ கிராம் எடையுடைய 18 கரட் தங்கத்தில் பீபா உலகக் கிண்ணம் வடிவமைக்கப்பட்டது. அந்தக் கிண்ணம் 36 சென்றி மீற்றர் உயரமானது. புதிய உலகக் கிண்ணத்தை வடிவமைத்தவர் இத்தாலியைச் சேர்ந்த சில்வியோ கஸாநிகா ஆவார்.இந்த கிண்ணம் எந்த அணிக்கும் வழங்கப்படமாட்டாது. சம்பியனாகும் அணிக்கு வழங்கப்படும் இந்தக் கிண்ணம் சில தினங்களில் மீளப்பெறப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்ட நகல் கிண்ணம் சம்பியன் அணியின் பெயரும் வருடமும் பொறிக்கப்பட்டு வழங்கப்படும்.  (இன்னும் வரும்)

https://www.virakesari.lk/article/140491

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாறும் நடந்து முடிந்த அத்தியாயங்களும் - 3

19 NOV, 2022 | 05:12 PM
image

(நெவில் அன்தனி)

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் நடப்பு ம்பியன் நேரடியாக இறுதிச் சுற்றில் முறைமை 1974 உலகக் கிண்ணப் போட்டியுடன் முடிவுக்கு வந்தது. 

இதற்கு அமைய 11ஆவது உலகக் கிண்ணத்தை முன்னின்று நடத்திய வரவேற்பு நாடான ஆர்ஜன்டீனாவுக்கு மாத்திரம் இறுதிச் சுற்றில் நேரடியாக பங்குபற்றும் தகுதி கிடைத்தது. மற்றைய 15 அணிகளும் 5 கண்டங்களிலும் நடத்தப்பட்ட தகுதிகாண் சுற்றின் மூலம் இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றன.

 

11. பதினொன்றாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - சொந்த மண்ணில் அசத்திய ஆர்ஜன்டீனா

 

ஆர்ஜன்டீனாவின் 5 நகரங்களில் 11ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்று 1978 ஜூன் 1ஆம் திகதியிலிருந்து 25ஆம் திகதிவரை நடைபெற்றது. இறுதிச் சுற்றுக்கு முன்னோடியாக ஐந்து கண்டங்களிலும் நடத்தப்பட்ட தகுதிகாண் சுற்றில் 107 நாடுகள் பங்குபற்றின.

poster_world_cup_1978.jpg

உலகக் கிண்ண வரலாற்றில் 1978 உலகக் கிண்ணப் போட்டியில் 16 அணிகள் பங்குபற்றியது கடைசி தடவையாகும். 1982இலிருந்து பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கையை 24ஆக அதிகரிக்க பீபா தீர்மானித்தது.

அரசியல் சூழ்நிலைகள் காரணமாக உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி ஓரளவு மழுங்கடிப்பு நிலையை எதிர்நோக்கியது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆர்ஜன்டீனாவில் ஆட்சி அதிகாரத்தை ஜுன்டா கைப்பற்றியிருந்தது. ஜுன்டா ஆட்சியாளர்கள் அந்த உலகக் கிண்ணத்தை தங்களது சொந்த நலன்களுக்கு பயன்படுத்தக்கூடும் என்ற அச்சமும் நிலவியது. நாட்டில் நிலவிய கொந்தளிப்பான சூழ்நிலைகள் உலகக் கிண்ணப் போட்டிக்கு உகந்ததாக அமையவில்லை. அத்துடன் ஒழுங்கமைத்தல் திட்டமிடல்களும் பின்தங்கிக் காணப்பட்டது. இதன் காரணமாக உலகக் கிண்ணப் போட்டியை ஸ்பெய்னுக்கு நகர்த்துவது குறித்து பீபா எண்ணியது.

13b_1986_argentina_world_champion.jpeg

எனினும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிக்கு முன்னுரிமை அளிக்க புதிய அரசாங்கம் முன்வந்ததன் பலனான திட்டமிட்டபடி ஆர்ஜன்டீனாவில் உலகக் கிண்ணப் போட்டி அரங்கேற்றப்பட்டது.

ஈரான், போலந்து, டியூனிசியா ஆகிய நாடுகள் உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் முதல் தடவையாக பங்குபற்றின.

1974இல் போன்றே இரண்டு கட்டங்களாக லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் சுற்றில் 16 அணிகள் 4 குழுக்களில் 4 அணிகள் வீதம் போட்டியிட்டன. முதல் சுற்று முடிவில் முதலிரண்டு இடங்ளைப் பெற்ற 8 அணிகள் 2 குழுக்களாக வகுக்கப்பட்டு இரண்டாம் கட்ட லீக் போட்டி நடத்தப்பட்டது.

அந்த இரண்டு குழுக்களிலும் முதல் இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. இதற்கு அமைய 2ஆம் சுற்றில் 2 குழுக்களிலும் முதல் இடங்களைப் பெற்ற ஆர்ஜன்டீனாவும் நெதர்லாந்தும் இறுதிப் போட்டியில் மோதின.

90 நிமிடங்கள் நிறைவின்போது இரண்டு அணிகளும் தலா 1 கோலைப் போட்டிருந்தன. இதனை அடுத்த சம்பியன் அணியைத் தீர்மானிப்பதற்கு மேலதிக நேரம் கொடுக்கப்பட்டது. மேலதிக நேரத்தில் மேலும் 2 கோல்களைப் போட்ட ஆர்ஜன்டீனா 3 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பயின் பட்டத்தை முதல் தடவையாக சுவீகரித்தது. அத்துடன் சொந்த நாட்டில் சம்பியனான ஐந்தாவது நாடானது. அதற்கு முன்னர் உருகுவே (1930), இத்தாலி (1938), இங்கிலாந்து (1966), மேற்கு ஜேர்மனி (1974) ஆகிய நாடுகள் வரவேற்பு நாடுகளாக போட்டியை முன்னின்று நடத்தி சம்பியனாகியிருந்தன.

பங்குபற்றிய நாடுகள் 16: ஆர்ஜன்டீனா, ஒஸ்திரியா, பிரேஸில், பிரான்ஸ், மேற்கு ஜேர்மனி (சமஷ்டி குடியரசு), ஹங்கேரி, ஈரான், இத்தாலி, மெக்சிகோ, நெதர்லாந்து, பெரு, போலந்து, ஸ்கொட்லாந்து, ஸ்பெய்ன், சுவீடன், டியூனிசியா.

 

12. பன்னிரெண்டாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - இத்தலிக்கு 3 ஆவது உலக சம்பியன் பட்டம்

 

பன்னிரெண்டாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி ஸ்பெய்னின் 14 நகரங்களில் 1982 இல் நடத்தப்பட்டது. அவ் வருட உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கை 24ஆக அதிகரிக்கப்பட்டு 6 குழுக்களில்  லீக் முறையில் போட்டிகள்நடத்தப்பட்டது.

அல்ஜீரியா, கெமறூன், ஹொண்டுராஸ், குவைத், நியூஸிலாந்து  ஆகிய நாடுகள் முதல் தடவையாக உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றன.

poster_world_cup_1982.jpg

குழு 1இல் போலந்து, இத்தாலி, பெரு ஆகிய நாடுகளுடன் போட்டியிட்ட கெமறூன் அந்த 3 அணிகளுடனான போட்டிகளை வேற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது. ஆனால், நொக் அவுட் சுற்றுக்கு கெமறூனினால் முன்னேற முடியாமல் போனது.

முதல் சுற்று லீக் போட்டியில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களைப் பெற்ற அணிகள் இரண்டாம் கட்ட லீக் சுற்றில் 4 குழுக்களில் போட்டியிட்டன.

ஏ குழுவில் முதலாம் இடத்தைப் பெற்ற போலந்தும் சி குழுவில் முதலாம் இடத்தைப் பெற்ற இத்தாலியும் ஒரு அரை இறுதியில் போட்டியிட்டன. அதில் இத்தாலி 2 - 0 என வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பி குழுவில் முதலாம் இடத்தைப் பெற்ற மேற்கு ஜேர்மனியும் டி குழுவில் முதலாம் இடத்தைப் பெற்ற பிரான்ஸும் மற்றைய அரை இறுதியில் மொதின. அப் போட்டி முழு நேரத்தின்போது 1 - 1 என்ற கோல் அடிப்படையிலும் மேலதிக நேர நிறைவில் 3 - 3 என்ற கோல்கள் அடிப்படையிலும் வெற்றிதோல்வி முடிவடைந்தது. இதனை அடுத்து வெற்றி அணியைத் தீர்மானிக்க சமநிலை முறிப்பு பெனல்டி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் 5 - 4 என்ற பெனல்டி அடிப்படையில் மேற்கு ஜேர்மனி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

12_1982_italy_world_champion.jpg

உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றில் பெனல்டி முறையில் வெற்றி அணி தீர்மானிக்கப்பட்டது அதுவே முதல் தடவையாகும்.

இறுதிப் போட்டியில் 3 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் மேற்கு ஜேர்மனியை வீழ்த்திய இத்தாலி 3ஆவது தடவையாக உலகக் கிண்ணத்தை வென்றெடுத்தது.

பங்குபற்றிய நாடுகள் 24: அல்ஜீரியா, ஆர்ஜன்டீனா, ஒஸ்திரியா, பெல்ஜியம், பிரேஸில், கெமறூன், சிலி, சேக்கோஸ்லோவாக்கியா, எல் செல்வடோர், இங்கிலாந்து, பிரான்ஸ், மேற்கு ஜேர்மனி, ஹொண்டுராஸ், ஹங்கேரி, இத்தாலி, குவைத், நியூஸிலாந்து, வட அயர்லாந்து, பெரு, போலந்து, ஸ்கொட்லாந்து, சோவியத் யூனியன், ஸ்பெய்ன், யூகோஸ்லாவியா.

 

13. பதின்மூன்றாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - மரடோனாவுக்கு கடவுளின் கரம் கொடுத்த கோல் : ஆர்ஜன்டீனா 2ஆவது தடவையாக சம்பியனானது

poster_world_cup_1986.jpg

பதின்மூன்றாவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றை கொலம்பியாவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பொருளாதார நெருக்கடி காரணமாக கொலம்பியா பின்வாங்கியது. ஐக்கிய அமெரிக்காவும் கனடாவும் அப் போட்டியை நடத்த விரும்பின. ஆனால், மெக்சிகோ தேர்ந்தெடுக்கப்பட்டது. மெக்சிகோ ஏற்கனவே உலகக் கிண்ணப் போட்டியை நடத்தியிருந்ததால் அந்தத் தீர்மானம் கடும் விமர்சனத்திற்குள்ளானது.

13a_maradona-handball-shilton-xlarge.jpg

உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு 8 மாதங்களுக்கு முன்னர் அங்கு இடம்பெற்ற பூகம்பத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். எனினும் உலகக் கிண்ணப் போட்டியை மெக்சிகோ வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

பதின்மூனறாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போடடி மெக்சிகோவின் 12 நகரங்களில் 1986 மே 31ஆம் திகதியிலிருந்து ஜூன் 29ஆம் திகதிவரை நடத்தப்பட்டது. அதற்கு முன்னோடியாக 121 நாடுகள் தகுதிகாண் சுற்றில் விளையாடின.

அல்ஜீரியா, கனடா, ஈராக், தென் கொரியா ஆகிய நாடுகள் முதல் தடவையாக உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் பங்குபற்றின.

புதிய போட்டி முறைமை

முதலாலம் சுற்று லீக் போட்டிகள் 6 குழுக்களில் தலா 4 அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டது. லீக் சுற்று முடிவில் 6 குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 12 அணிகளும் அதிசிறந்த 3ஆம் இடங்களைப் பெற்ற 4 அணிகளுமாக 16 அணிகள்  2ஆம் சுற்றில் நொக் அவுட் முறையில் போட்டியிட்டன.

13b_1986_argentina_world_champion.jpeg

அதனைத் தொடர்ந்து கால் இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இங்கிலாந்துக்கும் ஆர்ஜன்டீனாவுக்கும் இடையில் நடைபெற்ற கால் இறுதிப் போட்டியின் இரண்டாவது ஆட்டநேர பகுதியில் டியகோ மரடோனா போட்ட இரண்டு கோல்கள் முக்கிய இடத்தைப் பிடித்தன.

போட்டியின் 51ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து கோல்காப்பாளர் பீட்டர் ஷில்டனைவிட உயரே தாவிய மரடோனா தனது இடது முஷ்டியால் பந்தை முட்டி அபார கோல் ஒன்றைப் போட்டார். மரடோனா கையால் அடித்தத்தை மத்தியஸ்தர் கவனிக்கத் தவறியதால் அதனை கோலாக அங்கீகரித்தார்.

13_1986_world_cup_hand_of_god.jpeg

நான்கு நிமிடங்கள் கழித்து மரடோனா போட்ட இரண்டாவது கோல் 20ஆம் நூற்றாண்டின் அதிசிறந்த கோலாக அறிவிக்கப்பட்டது.

தனது எல்லையில் பந்தைப் பெற்றுக்கொண்ட மரடோனா தனி ஒருவராக வேகமாக பந்தை நகர்த்தியவாறு இங்கிலாந்தின் 5 வீரர்களைக் கடந்து சென்று அலாதியான கோல் ஒன்றைப் போட்டார். போட்டி முடிவில் தான் போட்ட முதலாவது கோல் தனது தலையாலும் கடவுளின் கையாலும் போடப்பட்ட கோல் என மரடோனா விபரித்திருந்தார்.

அப் போட்டியில் இங்கிலாந்தை 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஆர்ஜன்டீனா வெற்றிகொண்டது.

மற்றைய 3 கால் இறுதிப் போட்டிகளில் வெற்றி அணிகள் பெனல்டி முறையில் தீர்மானிக்கப்பட்டது.

பிரேஸிலுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான கால் இறுதிப் போட்டி மேலதிக நேர நிறைவில் 1 - 1 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் பெனல்டி முறை அமுல்படுத்தப்பட்டது. அதில் 4 - 3 என பிரான்ஸ் வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

மேற்கு ஜேர்மனிக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையிலான கால் இறுதிப் போட்டி மேலதிக நேர நிறைவில் கோல்கள் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. இதனை அடுத்து அமுல்படுத்தப்பட்ட பெனல்டி முறையில் 4 - 1 என மேற்கு ஜேர்மனி வெற்றிபெற்றது.

ஸ்பெய்னுக்கும் பெல்ஜியத்திற்கும் இடையிலான போட்டி மேலதிக நேர நிறைவில் 1 - 1 என வெற்றதோல்வியின்றி முடிவடைந்தது. பெனல்டி முறையில் 5 - 4 என பெல்ஜியம் வெற்றிபெற்றது.

அரை இறுதிப் போட்டிகளில் பிரான்ஸை மேற்கு ஜேர்மனியும் பெல்ஜியத்தை ஆர்ஜன்டீனாவும் 2 - 0 என்ற ஒரே கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இறுதிப் போட்டியில் மேற்கு ஜேர்மனியை 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்ஜன்டீனா இரண்டாவது தடவையாக உலக சம்பியனானது.

பங்குபற்றிய நாடுகள் 24: அல்ஜீரியா, ஆர்ஜன்டீனா, பெல்ஜியம், பிரேஸில், பல்கேரியா, கனடா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், மேற்கு ஜேர்மனி, ஹங்கேரி, ஈராக், இத்தாலி, தென் கொரியா, மெக்சிகோ, மொரோக்கோ, வட அயர்லாந்து, பரகுவே, போலந்து, போர்த்துக்கல், ஸ்கொட்லாந்து, சோவியத் யூனியன், ஸ்பெய்ன், உருகுவே.

 

14. பதினான்காவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - மேற்கு ஜெர்மனி 3ஆவது தடவையாக உலக சம்பியன்

 

பதினான்காவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி இத்தாலியில் 1990 ஜூன் 8ஆம் திகதியிலிருந்து ஜூலை 8ஆம் திகதிவரை நடைபெற்றது. உலகக் கிண்ணப் போட்டிகள் 12 நகரங்களில் நடத்தப்பட்டன. இதற்கு முன்னோடியாக 5 கண்டங்களில் நடத்தப்பட்ட தகுதிகாண் சுற்றில் 116 நாடுகள் பங்குபற்றின.

poster_world_cup_1990.jpg

உலகக் கிண்ணப் போட்டியை முன்னின்று நடத்திய இத்தாலியும் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் நேரடியாக இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றதுடன் மேலும் 22 நாடுகள்

கொஸ்டா ரிக்கா, அயர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய 3 நாடுகள் முதல் தடவையாக உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றன.

இங்லாந்து, கிரேக்கம், சோவியத் யூனியன் ஆகிய 3 நாடுகளும் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டன.

1990_Argentina_v_cameroon_omam_biyik_hea

1990 உலகக் கிண்ணப் போட்டியில்தான் கோல்காப்பாளரை நோக்கி பந்தை பின்நகர்த்தும் முறைமை (Back pass) இரத்துச் செய்யப்பட்டிருந்தது. அதாவாது ஒரு வீரர் தனது பாதத்தால் பந்தை தனது கோல் காப்பாளருக்க நகர்த்தினால் அதனை கோல் காப்பாளர் கையால் பிடிக்க முடியாது என்ற முறையே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. போட்டியில் வேகத்தையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தும் நோக்கில் இந்த புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

வெற்றிக்கு வழங்கப்பட்டு வந்த 2 புள்ளிகள் 3 புள்ளிகளாக அதிகரிக்கப்பட்டது.

அத்துடன் பந்தை நகர்த்திச் செல்லும் வீரரை பின்னாலிருந்து வீழ்த்துவதை தடுக்கும் வகையில் கடுமையான விதி அறிமுகப்படுத்தப்பட்டது. வீரர் ஒருவரை பின்னால் இருந்து வீழ்த்தும் வீரருக்கு நேரடி சிவப்பு அட்டை காட்டப்படும் விதி 1990 உலகக் கிண்ணப் போட்டியில் அமுலுக்கு வந்தது.

1990_west_germany_world_champs_...jpg

முதலாம் சுற்று லீக் போட்டிகள் 6 குழுக்களில் தலா 4 அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டது. லீக் சுற்று முடிவில் 6 குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 12 அணிகளும் அதிசிறந்த 3ஆம் இடங்களைப் பெற்ற 4 அணிகளுமாக 16 அணிகள்  2ஆம் சுற்றில் நொக் அவுட் முறையில் போட்டியிட்டன.

அதனைத் தொடர்ந்து கால் இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டன.

1990 உலகக் கிண்ண கால்பந்தாட்டம் தலைகீழ் முடிவுடன் ஆரம்பமானது. அப்போதைய நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவை ஆரம்பப் போட்டியில் எதிர்த்தாடிய கெமறூன் 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடையச் செய்தது. கெமறூன் வீரர் ஓமாம் பியிக் போட்டியின் 67ஆவது நிமிடத்தில் உயரே தாவி தலையால் முட்டி போட்ட கோல் ஆர்ஜன்டீனாவை திக்குமக்காட வைத்தது.

இரண்டாம் சுற்றில் கொலம்பியாவை  2 - 1 என வெற்றிகொண்ட கெமறூன் கால் இறுதிப் போட்டியின் மேலதிக நேரத்தில் 2 பெனல்டிகளை இங்கிலாந்துக்கு தாரை வார்த்து 2 - 3 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது.

இதேவேளை, சிறந்த 3ஆம் இடங்களைப் பெற்ற அணிகளில் ஒன்றாக நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஆர்ஜன்டீனா, 2ஆம் சுற்றில் பிரேஸிலை 1 - 0 எனவும் கால் இறுதியில் யூகோஸ்லாவியாவை 3 (0) - 2 (0) என்ற பெனல்டி முறையிலும் அரை இறதியில் இத்தாலியை 4 (1) - 3 (1) என்ற பெனல்டி முறையிலும்  வெற்றிபெற்று   இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மறுபுறத்தில் 2ஆம் சுற்றில் நெதர்லாந்தை 2 - 1 எனவும் கால் இறுதியில் செக்கோஸ்லோவாக்கியாவை 1 - 0 எனவும் அரை இறுதியில் இங்கிலாந்தை 4 (1) - 3 (1) என்ற பெனல்டி முறையிலும் மேற்கு ஜேர்மனி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மிகவும் உக்கிரமமாக மோதிக்கொள்ளப்பட்ட இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனாவின் மாற்று வீரர் பெட்ரோ மொன்ஸன் 65ஆவது நிமிடத்தில் சிவப்பு அட்டைக்கு இலக்காகி களம் விட்டு வேளியேற்றப்பட்டார்.

போட்டியின் 85ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீன பெனல்டி எல்லைக்குள் ரூ வொலர் விதிகளுக்கு புறம்பாக வீழ்த்தப்பட்டதால் ஜேர்மனிக்கு பெனல்டி வழங்கப்பட்டது. அண்ட்றியாஸ் ப்றீம் மிகவும் சாமர்த்தியமாகவும் நிதானமாகவும் பந்தை கோலினுள் புகுத்தி ஜேர்மனியை முன்னிலையில் இட்டார்.

இரண்டு நிமிடங்கள் கழித்து கஸ்டாவோ டிஸோட்டி சிவப்பு அட்டைக்கு இலக்கானதால் ஆர்ஜன்டீனா 9 வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. இது குறித்து மத்தியஸ்தருடன் வாதிட்ட அணித் தலைவர் டியகோ மரடோனாவுக்கும் மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.

இறுதியில் மேற்கு ஜேர்மனி 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 3ஆவது தடவையாக உலக சம்பயினானது.

இதன் மூலம் ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக 3 தடவைகள் உலக் சம்பியனான நாடு என்ற பெருமையை மேற்கு ஜேர்மனி பெற்றுக்கொண்டது.

பங்குபற்றிய நாடுகள் 24: ஆர்ஜன்டீனா, ஒஸ்திரியா, பெல்ஜியம், பிரேஸில், கெமறூன், கொலம்பியா, கொஸ்டா ரிக்கா, செக்கோஸ்லோவாக்கியா, எகிப்து, இங்கிலாந்து, மேற்கு ஜேர்மனி, இத்தாலி, தென் கொரியா, நெதர்லாந்து, அயர்லாந்து, ருமேனியா, ஸ்கொட்லாந்து, சோவியத் யூனியன், ஸ்பெய்ன், சுவீடன், ஐக்கிய அரபு இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, உருகுவே, யூகோஸ்லாவியா.

 

15. 15ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் -  பிரேஸில் 4ஆவது தடவையாக -உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது

 

ஐக்கிய அமெரிக்காவின் 9 நகரங்களில் 15ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்று 1994 ஜூன் 17ஆம் திகதியிலிருந்து ஜூலை 17ஆம் திகதிவரை நடத்தப்பட்டது.

poster_world_cup_1994.png

உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்ததுடன் 1994 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் 147 நாடுகள் பங்குபற்றின.

உலகக் கிண்ணப் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடு என்ற வகையில் ஐக்கிய அமெரிக்காவும் நடப்பு சம்பியன் என்ற வகையில் மேற்கு ஜேர்மனியும் இறுதிச் சுற்றில் விளையாட நெரடித் தகுதியைப் பெற்றுக்கொண்டன. தகுதிகாண் சுற்றின்மூலம் இறுதிச் சுற்றுக்கு தெரிவான 22 நாடுகளில் கிரேக்கம், நைஜீரியா, சவூதி அரேபியா ஆகியன முதல் தடவையாக இடம்பெற்றன.

1994_brazil_world_champions.jpg

முன்னைய உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் போன்றே போட்டி நடைமுறை பின்பற்றப்பட்டிருந்தது.

முதலாலம் சுற்று லீக் போட்டிகள் 6 குழுக்களில் தலா 4 அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டது. லீக் சுற்று முடிவில் 6 குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 12 அணிகளும் அதிசிறந்த 3ஆம் இடங்களைப் பெற்ற 4 அணிகளுமாக 16 அணிகள்  2ஆம் சுற்றில் நொக் அவுட் சுற்றுக்கு முன்னெறின.

சுவீடனும் பல்கேரியாவும் பெரு முன்னெற்றத்தை வெளிப்படுத்தி நொக் அரை இறுதிவரை முன்னேறியிருந்தன.

ஒரு அரை இறுதிப் போட்டியில் சுவீடனை எதிர்கொண்ட பிரேஸில் 1 - 0 என்ற கோல் அடிப்படையிலும் மற்றைய அரை இறுதிப் போட்டியில் பல்கேரியாவை சந்தித்த இத்தாலி 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையிலும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

பிரேஸிலுக்கும் இத்தாலிக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப் போட்டி 90 நிமிட முழு நேரத்தின்போதும் மேலதிக நேர நிறைவின்போதும் கோல் எதுவும் போடப்படமால் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. இதனை அடுத்து அமுல்படுத்தப்பட்ட பெனல்டிகளில் 3 - 2 என்ற அடிப்படையில் வெற்றிபெற்ற பிரேஸில் 4ஆவது தடவையாக உலக சம்பியனானது.

 

கசப்பான இரண்டு சம்பவங்கள்

 

1990 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் நடக்கக்கூடாத இரண்டு கசப்பான சம்பவங்கள் விளையாட்டுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

முதலாவதாக டியகோ மரடோனா தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையில் சிக்கியதால் கால்பந்தாட்ட தடைக்குள்ளானார். தனது எடையைக் குறைத்துக்கொண்டு மீண்டும் ஆர்ஜன்டீனான அணியில் இடம்பெற்ற மரடோனா கிரேக்கத்துடனான போட்டியில் அபரா ஆற்றலை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் மரடோன ஊக்கமருந்து உட்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக எஞ்சிய போட்டிகளில் மரடோனா இல்லாமலேயே ஆர்ஜன்டீனா விளையாட நேரிட்டது.

இரண்டாவது சம்பவமோ மிகவும் வேதனைக்குரியது. ஐக்கிய அமெரிக்காவுடனான போட்டியில் துரதிர்ஷ்டவசமாக சொந்த கோல் ஒன்றைப் போட்டுக் கொடுத்த கொலம்பிய பின்கள வீரர் அண்ட்ரெஸ் எஸ்கோபர் நாடு திரும்பியதும் படுகொலை செய்யப்பட்டார். 

இந்த படுகொலை கால்பந்தாட்ட உலகை மட்டுமல்லாமல் முழு உலகையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது.

பங்குபற்றிய நாடுகள் 24: ஆர்ஜன்டீனா, பெல்ஜியம், பொலிவியா, பிரேஸில், பல்கேரியா, கெமறூன், கொலம்பியா, ஜேர்மனி, கிரேக்கம், இத்தாலி, தென் கொரியா, மெக்சிகோ, மொரோக்கோ, நெதர்லாந்து, நைஜீரியா, நோர்வே, அயர்லாந்து, ருமேனியா, ரஷ்யா, சவூதி அரேபியா, ஸ்பெய்ன், சுவீடன், சுவீட்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா.

 

16. பதினாறாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - பிரான்ஸ் முதல் தடவையாக சம்பியனானது

 

16ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி பிரான்ஸில் 1998 இல் நடைபெற்றது. பிரான்ஸில் முதல் தடவையாக நடத்தப்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கை 24 இலிருந்து 32ஆக அதிகரிக்கப்பட்டது. இறுதிச் சுற்றுக்கு முன்னோடியாக ஐந்து கண்டங்களிலும் நடத்தப்பட்ட உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் 174 நாடுகள் பங்குபற்றின.

poster_world_cup_1998.jpg

இன ஒடுக்கல் காரணமாக சர்வதேச விளையாட்டுத்துறையில் 20 வருடங்களுக்கு மேல்  தடைக்குட்பட்டிருந்த தென் ஆபிரிக்கா தடை நீக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றது. போல்கன் யுத்தம் காரணமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் யூகோஸ்லாவியாவுக்கு விதிக்கபட்டிருந்த தடை நீக்கப்பட்டதை அடுத்த அந்த நாடும் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றியது.

1998_france_world_champion...jpg

குரோஏஷியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் அந்த நாடு பங்குபற்றிய முதலாவது உலகக் கிண்ணமாகவும் 1998 உலகக் கிண்ணப் போட்டி அமைந்தது. கரிபியன் தீவுகளில் ஒன்றான ஜெமெய்க்காவும் முதல் தடவையாக உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றது.

 

போட்டி முறை

 

1998 உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் அதற்கு முன்னர் 6 குழுக்களில் நடத்தப்பட்ட உலகக் கிண்ண இறுதிச் சுற்று 1998இலிருந்து 8 குழுக்களில் நடத்தப்பட்டுவருகிறது.

ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும்16 அணிகள் நொக் அவுட் சுற்றில் விளையாட தகதிபெற்றது.

1998 உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றில் தங்க கோல் அறிமுகப்படுத்தப்பட்டது. வெற்றிதோல்வியின்றி முடிவடையும் போட்டிகளில் வழங்கப்படும் மேலதிக நேரத்தில் ஏதேனும் ஒரு அணி முதலாவதாக கோல் போட்டால் அத்துடன் போட்டியை முடிவுக்குக் கொண்டுவருவதே தங்க கோல் முறையாகும். பல்லாண்டுகளுக்கு முன்னர் இந்த முறைமை இருந்தபோதிலும் பின்னர் அது கைவிடப்பட்டு தலா 15 நிமிடங்களைக் கொண்ட மேலதிக நேரம் பூர்த்தி அடையும்வரை போட்டி தொடரப்பட்டது.

அணிகளுக்கு இடையிலான போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கே இந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அந்த முறைமை வெற்றி அளிக்கவில்லை.

 

பரம வைரிகள் சந்திப்பு

 

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் அரசியலில் பரம வைரிகளான ஐக்கிய அமெரிக்காவும் ஈரானும் ஒரே குழுவில் இடம்பெற்றது   விசேட அம்சமாகும். அமெரிக்காவை ஒரு சாத்தானகவே முழு ஈரானும் பார்த்தது. ஆனால், ஆடுகளத்தில் அமெரிக்க வீரர்களும் ஈரான் வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் மரியாதை செலுத்தி விளையாடியது பெரும் பாராட்டைப் பெற்றது.

 

சொந்த மண்ணில் சம்பியனான பிரான்ஸ்

 

எட்டு குழுக்களில் 32 அணிகள் பங்குபற்றிய முதல் சுற்று நிறைவில் ஒவ்வொரு குழுவிலிருந்தும் தலா 2 அணிகள் வீதம் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

ஒரு அரை இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை எதிர்த்தாடிய பிரேஸில் 4 (1) - 2 (1) என்ற பெனல்டி முறையில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. மற்றைய அரை இறுதிப் போட்டியில் குரோஏஷியாவை சந்தித்த பிரான்ஸ் 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப் போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் 3 - 0 என்ற கோல்கள் கணக்கில் பிரேஸிலை வெற்றிகொண்டு சொந்த நாட்டில் சம்பியன் பட்டத்தை சுவிகரித்தது.

 பங்குபற்றிய நாடுகள் 32: ஆர்ஜன்டீனா, ஒஸ்திரியா, பெல்ஜியம், பிரேஸில், பல்கேரியா, கெமறூன், சிலி, கொலம்பியா, குரோஏஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஈரான், இத்தாலி, ஜெமெய்க்கா, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, மொரோக்கோ, நெதர்லாந்து, நைஜீரியா, நோர்வே, பராகுவே, ருமேனியா, சவூதி அரேபியா, ஸ்கொட்லாந்து, தென் ஆபிரிக்கா, ஸ்பெய்ன், டியூனிசியா, ஐக்கிய அமெரிக்கா, யூகோஸ்லாவியா. (இன்னும் வரும்)

https://www.virakesari.lk/article/140550

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கங்கை கொண்டதும் கடாரம் வென்றதும் மேடைகளில் பீத்திக் கொள்ளவும் கவிஞரகள் கவிதை  எழுதவும் திரைப்படங்களுக்கு வசனம் எழுதவும் மட்டுமே உதவியது.  உரிய நேரத்தில் புத்திக்கூர்மையான அரசியல் முடிவுகளும் அதையொட்டிய ராஜதந்திரமுமே தமிழ் மக்களை மற்றய இனங்களுக்கு ஈடாக வாழ வைக்கும்  துரதிஷரவசமாகஅதை இதுவரை எவருமே செய்யவில்லை. 
    • ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லை – அம்பிகா சற்குணநாதன் December 23, 2024   ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இந்நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் பிரகாரம் 18 உறுப்பினர்களைக்கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டிருக்கும் செயலணி பல்வேறு விதத்திலும் பிரச்சினைக்குரியதாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் இச்செயலணி அவருக்கு (ஜனாதிபதிக்கு) மாத்திரமே பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், எமக்கு மற்றுமொரு செயலணியோ அல்லது ஆணைக்குழுவோ அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘இச்செயலணிக்கு மிகப்பரந்துபட்ட அளவிலான ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த ஜனாதிபதி செயலணிக்கு சட்டங்களைத் தயாரிப்பதற்கும், அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான கட்டமைப்பினை நிறுவுவதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏனைய அரச கட்டமைப்புக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு இச்செயலணிக்கு அதிகாரம் உண்டு’ என்றும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இந்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாத போதிலும், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். ‘இவ்வாறான செயற்பாடுகளே முன்னைய ஜனாதிபதியினாலும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போதைய ஜனாதிபதி அவற்றிலிருந்து மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை இத்தீர்மானம் ஏற்படுத்தவில்லை. அத்தோடு இப்புதிய செயலணியில் சிறுபான்மையினப் பிரதிநிதித்துவமின்றி, இராணுவ அதிகாரிகள் உள்வாங்கப்பட்டிருப்பதானது பெரும்பான்மைவாத அரசு மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துகிறது: எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.   https://www.ilakku.org/ஜனாதிபதி-மீது-நம்பிக்கைய/
    • அங்குரார்ப்பண 19 இன்கீழ் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா சம்பியனானது Published By: VISHNU   22 DEC, 2024 | 06:41 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றுவந்த 6 நாடுகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.  இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஒரு குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன மந்றைய குழுவிலும் மோதின. முதல் சுற்று முடிவில் ஒரு குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் மற்றைய குழுவில் முதலிரண்டு பெற்ற அணிகளை இரண்டாம் சுற்றில் எதிர்த்தாடின. இரண்டாம் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இரண்டாம் சுற்றில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி அடைந்தது. நேபாளத்துடனான போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் அத்துடன் இலங்கை வெளியேறியது. கோலாலம்பூர் பேயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான  இறுதிப் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. ட்ரிஷா, அணித் தலைவி நிக்கி ப்ரசாத் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கொங்காடி ட்ரிஷா 52 ஓட்டங்களைப் பெற்றார். நிக்கி ப்ரசாத் 12 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் வினோத் மிதிலா 17 ஓட்டங்களையும் ஆயுஷி ஷுக்லா 10 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் முஸ்தபா பர்ஜானா ஈஸ்மின் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நிஷிட்டா அக்தர் நிஷி 23  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 118 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீராங்கனை பஹோமிடா ச்சோயா 18 ஓட்டங்களையும் 4ஆம் இலக்க வீராங்கனை ஜுவாரியா பிர்தௌஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர். மற்றைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர். இந்திய பந்துவீச்சில் ஆயுஷி ஷுக்லா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொணம் யாதவ் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாருணிக்கா சிசோடியா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகி, தொடர் நாயகி ஆகிய இரண்டு விருதுகளையும் கொங்காடி ட்ரிஷா வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/201909
    • மண் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம் December 22, 2024  09:34 pm யாழ்ப்பாணம் - தென்மராட்சி  - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு   இடம்பெற்றுள்ளமையை  கண்டித்து  பிரதேச மக்கள் இன்று(22) போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு  25க்கும் மேற்பட்ட டிப்பர் கனவளவு மண் அகழப்பட்டுள்ளதாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிற போதிலும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197695  
    • சிரியாவை ஆப்கானாக மாற்றப்போவதில்லை – பெண்கள் கல்விகற்கவேண்டும் என விரும்புகின்றேன் - சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர் 22 DEC, 2024 | 11:45 AM   சிரியாவால் அதன் அயல்நாடுகளிற்கோ அல்லது மேற்குலகிற்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் உருவாகாது என சிரியாவின் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் சிரியா மீதான தடைகளை மேற்குலகம் நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தடைகள் முன்னயை அரசாங்கத்தை இலக்காக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் ஒடுக்குமுறையாளனையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே மாதிரி நடத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு வாரங்களிற்கு முன்னர் பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தை கவிழ்த்த தாக்குதல்களிற்கு அஹமட் அல் சரா தலைமை தாங்கியிருந்தார். ஹயட் தஹ்ரிர் அல் சலாம் அமைப்பின் தலைவரான இவர் முன்னர் அபு முகமட் அல் ஜொலானி என அழைக்கப்பட்டார். தனது அமைப்பினை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் தனது அமைப்பு பயங்கரவாத அமைப்பில்லை என தெரிவித்துள்ளார். எச்டிஎஸ் அமைப்பினை ஐநா அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாங்கள் பொதுமக்களின் இலக்குகளை தாக்கவில்லை பொதுமக்களை தாக்கவில்லை மாறாக நாங்கள் அசாத் அரசாங்கத்தின் கொடுமைகளிற்கு பலியானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். தான் சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற முயல்வதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சிரியாவின் பிரதான கிளர்ச்சிக்குழுவின் தலைவர்  எங்கள் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் வித்தியாசங்கள் உள்ளன பாரம்பரியங்கள் வித்தியாசமானவை ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகம் சிரியா வேறுவிதமான மனோநிலையை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் கல்விகற்கவேண்டும் என நான் நம்புகின்றேன் இட்லிப் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டவேளை அங்கு பல்கலைகழகங்கள் இயங்கின அங்கு கல்வி கற்றவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள்  என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201859
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.