Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரைவெளி: The Holiday

Featured Replies

நான் பார்த்த தமிழல்லாத ஏனைய மொழித் திரைப்படங்கள் (குறிப்பாக Hollywood திரைப்படங்கள்) பற்றி ஒவ்வொரு கிழமையும் எழுதலாம் என்று எண்ணியிருக்கிறேன். அந்தத் திரைப்படங்களை நீங்களும் பார்த்திருந்தால் உங்கள் பார்வையையும் எழுதலாம். நான் எழுதுவது திரைப்படம் பற்றிய விமர்சனமாக இருக்காது. மேலோட்டமாக படத்தின் கதைச் சுருக்கம் பற்றியும், படத்தின் சூழல் பற்றியும் எழுதுவேன். அத் திரைப்படத்தைப் பார்த்தவர்கள் அதுபற்றிக் கருத்தாடலாம். அல்லது அதில் நடித்த நடிகர்கள் பற்றிய மேலதிக தகவல்களை இணைக்கலாம். தகவட் பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம்.

The Holiday

(தமிழில்: விடுமுறை)

the-holiday-DVD.jpg

இயக்கம்: Nancy Meyers

தயாரிப்பு: Bruce A. Block, Nancy Meyers

எழுத்து: Nancy Meyers

நடிப்பு: Cameron Diaz, Kate Winslet, Jude Law, Jack Black, Eli Wallach, Edward Burns, Rufus Sewell

இசை: Hans Zimmer

ஒளிப்பதிவு: Dean Cundey

படத்தொகுப்பு: Joe Hutshing

வினியோகம்: USA - Columbia Pictures, Sony Pictures; non-USA - Universal Studios

வெளியீடு: December 8, 2006

நேரம்: 138 நிமிடங்கள்

மொழி: ஆங்கிலம்

இந்தத் திரைப்படம் பற்றி ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால்: "காதலுக்கு விடுமுறை தேவையில்லை" என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

ஒரு கிறிஸ்மஸ் காலத்தில் நடக்கிற கதை. Amanda, Iris என்ற இரண்டு பெண்கள். அவர்களுக்கு காதலில் மகிழ்ச்சியில்லை. குறிப்பாக சொல்வதாயின் காதலர்களால் ஏமாற்றமும், பிரச்சனையும் தான் அவர்களுக்கு ஏற்பட்டது. இது தான் Los Angels இல் இருக்கிற ஊடகத் துறைப் பெண்ணான Amanda வையும், இலண்டனில் இருக்கிற செய்தியாளர் Iris யையும் இணைக்கிற ஒற்றுமை. இவர்கள் இருவரும் ஆண்களில்லாத கிறிஸ்மஸ் விடுமுறையை விரும்புகிறார்கள். அதோட இரண்டுகிழமை ஓய்வையும் விரும்புகினம். இணையத்தளம் ஊடாகச் சந்திச்சு ரண்டுபேரும் தங்கட வதிவிடங்கள மாற்ற முன்வருகினம். அந்தவகைல அட்லாண்டிக்கின் பக்கங்களை, வீடுகளை, வாகனங்களை மாற்றுகிறார்கள். ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையும் மாறுகிறது என்பதுதான் கதை.

Amanda, Los Angels ஐ விட்டு பனி கொட்டும் இங்கிலாந்தில் உள்ள iris இன் அழகான வீட்டுக்கு வருகிறார். அதேபோல Iris ம் வெயில் காலத்தை அனுபவிக்க Los Angels இல் உள்ள Amanda வின் வீட்டுக்கு போகிறார். அங்கு Iris, Amanda வின் நண்பர் Miles ஐ சந்திக்கிறா. அதே போல இங்கிலாந்துக்கு வந்திருக்கும் Amanda, Iris இன் சகோதரர் Graham ஐ சந்திக்கிறார்.

இப்பிடி இடமாற்றமும், இடமாற்றத்தால் ஏற்படுற வாழ்க்கை மாற்றமும் என்பதை அழகாக நகைச்சுவை கலந்த காதல் கதையாக இயக்கியிருக்கிறார் அமெரிக்க பெண் இயக்குனர் Nancy Meyers. இந்தத் திரைப்படத்தின் இயக்குனராகவும், கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் இவர் இருக்கிறார். வயது போன நடிகைகளுக்கான வித்தியாசமான கதாபாத்திரங்களை உருவாக்கியதற்காக Hollywood இன் மிக முக்கியமான பெண் கதாசிரியராக இவர் பலதடவை பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்.

இவர்தான் Nancy Meyers:

nancy-meyers.jpg

Amanda ஆக அமெரிக்க நடிகை Cameron Diaz நடித்திருக்கிறார். இவா 94ஆம் ஆண்டு வெளிவந்த .The Mask மற்றது 2000மாம் ஆண்டு வெளிவந்த Charlie's Angels போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

Iris ஆக பிரித்தானிய நடிகை Kate Winslet நடித்திருக்கிறார். இவர் 97 இல் வெளிவந்த Titanic திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். TITANIC படத்துக்காக சிறந்த கதாநாயகிக்கான ஒஸ்கார் விருதுக்கு முன்மொழியப்பட்டிருக்கிறார

Edited by இளைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.