Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

``திமுக-வின் அதிநவீன விஞ்ஞான ஊழல்... மின்சாரத்துறையில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு!" - அண்ணாமலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க ஆட்சிக்கு வந்த இரண்டாண்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரத்துறையில், டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதலில் ரூ.397 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக சில ஆவணங்களோடு லஞ்ச ஒழிப்புத்துறையில் அறப்போர் இயக்கம் இன்று புகாரளித்திருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஊழலை வெளிகொண்டுவந்தமைக்காக அறப்போர் இயக்கத்துக்கு நன்றி தெரிவித்து, இதை தி.மு.க-வின் அதிநவீன விஞ்ஞான ஊழல் என்று விமர்சித்ததோடு, இதில் சம்பந்தப்பட்டவர்கள்மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருக்கிறார்.

 

இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ``தமிழ்நாடு மின்சார வாரியத்தில், தி.மு.க ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் டிஸ்ட்ரிபியூஷன் டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதலில், ரூ.397 கோடி அளவிலான மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

 

அரசு அதிகாரிகள் துணையோடு கிட்டத்தட்ட 30 ஒப்பந்தக்காரர்கள், ஒவ்வொரு டெண்டரிலும் ஒரு ரூபாய்கூட மாறாமல் ஒரே தொகையை அனைவரும் ஒப்பந்தப்புள்ளியில் கூறியிருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில், 45,000 டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டிருக்கின்றன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்திலும், அனைத்து ஒப்பந்தக்காரர்களும் ஒரே தொகையைக் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்ததுமே, ஒப்பந்த ஆய்வுக்குழு, இந்த ஒப்பந்தங்களை ரத்துசெய்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல், சந்தை மதிப்பைவிட மிக அதிகத் தொகைக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அண்ணாமலை
 
அண்ணாமலை

ஒவ்வொரு டிரான்ஸ்ஃபார்மருக்கும், சந்தை மதிப்பைவிட சுமார் ரூ.4 லட்சத்துக்கும் மேலாக அதிக விலைக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இப்படி இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் கணக்கில்கொண்டால், சுமார் ரூ.397 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அனைத்து ஒப்பந்தக்காரர்களும் சேர்ந்து மின்துறை அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சருடன் இணைந்து, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

 

இந்த ஊழலில் முக்கிய நபரான காசி என்பவர், மின்சார வாரியத்தில் கொள்முதல் நிதிப் பிரிவில் வேலை செய்பவர் என்றும், ஆனால், அலுவலகத்துக்குச் செல்லாமல், அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் இருந்தபடியே மின்சார வாரிய ஒப்பந்தங்களை முடிவு செய்வார் எனவும் கூறப்படுகிறது. இந்த நபர், 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டவர். பின்னர் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், அவரது பணிநீக்க உத்தரவு ரத்துசெய்யப்பட்டு மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாடு மின்சார வாரியம்
 
தமிழ்நாடு மின்சார வாரியம்

ஊழல் செய்வதற்காகவே, கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்ட ஒருவரை மீண்டும் பணியிலமர்த்தி, அமைச்சர் வீட்டிலிருந்து ஒப்பந்தங்களை முடிவு செய்வது எல்லாம் திறனற்ற தி.மு.க ஆட்சியில் மட்டும்தான் சாத்தியம். அமைச்சருக்கும், மின்சார வாரிய நிர்வாகத்தின் தலைமை அதிகாரி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நேரடித் தொடர்பில்லாமல், ரூ.397 கோடி அளவுக்கான ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை.

செந்தில் பாலாஜி
 
செந்தில் பாலாஜி

உடனடியாக, அமைச்சர், அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள், மற்றும் காசி உட்பட இதில் தொடர்புடைய மின்சார வாரிய பணியாளர்கள் அனைவரின் மீதும் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க சார்பில் வலியுறுத்துகிறேன். இந்த ஊழல் வழக்கு குறித்த தெளிவான தகவல்கள் அனைத்தையும் வெளிக்கொண்டு வந்து, லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்து நடவடிக்கை கோரியிருக்கும் அறப்போர் இயக்கத்துக்கு, தமிழக பா.ஜ.க சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்" கூறப்பட்டிருக்கிறது.

``திமுக-வின் அதிநவீன விஞ்ஞான ஊழல்... மின்சாரத்துறையில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு!" - அண்ணாமலை | BJP leader annamalai critics DMK govt about rs 397 crore scam in TNEB - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

மின்சாரத்துறை மீது ரூ.397 கோடி ஊழல் புகார்: செந்தில் பாலாஜிக்கும் தொடர்பா? அரசு என்ன சொல்கிறது?

செந்தில் பாலாஜி
கட்டுரை தகவல்
  • எழுதியவர், இரா.சிவா
  • பதவி, பிபிசி தமிழ்
  • 8 ஜூலை 2023
    புதுப்பிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 397 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டை எழுப்பி பரபரப்பை கிளப்பி உள்ளது அறப்போர் இயக்கம்.

ஏற்கனவே சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கும் சூழலில், அவர் வகித்த துறை மீது எழுந்துள்ள புதிய ஊழல் குற்றச்சாட்டு தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இது தொடர்பாக 288 பக்க ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் அறப்போர் இயக்கம் புகாரும் அளித்துள்ளது.

அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு என்ன?

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 45 ஆயிரம் மின் விநியோக மாற்றிகள் (Distribution transformer) கொள்முதல் செய்வதற்காக ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.

 

இந்த மின்விநியோக மாற்றிகள் 25kva, 63kva, 100kva, 200kva, 250 kva, 500 kva என பல கொள்திறனில் கோரப்பட்டுள்ளன.

இதற்கான பல ஒப்பந்தங்கள் கடந்த 2021 அக்டோபரில் கோரப்பட்டு நவம்பர் மாதம் திறக்கப்பட்டன.

இந்த ஒப்பந்த கோரலில்தான் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாகவும், ஒப்பந்ததாரர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் இணைந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டிருப்பதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டுகிறது.

கூட்டுச்சதியா?

இந்த டெண்டர்களில் பங்கேற்ற அனைத்து நிறுவனங்களும் அந்தந்த டெண்டரில் ஒரே தொகையில் டெண்டர் கோரி இருப்பதை கூட்டுச் சதியாக சந்தேகிக்கிறது அறப்போர் இயக்கம்.

உதாரணமாக, 2022 ஆகஸ்ட் 12ஆம் தேதி திறக்கப்பட்ட 1,000 எண்ணிக்கையிலான 200 கிலோவோல்ட் ஆம்பியர் (200KVA) மின் விநியோக மாற்றிக்கான டெண்டரில் 30 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த 30 நிறுவனங்களுமே ரூ.7,07,823-ஐ ஒப்பந்த தொகையாக கோரியுள்ளன.

2022 ஆகஸ்ட் 11ஆம் தேதி திறக்கப்பட்ட 3,000 எண்ணிக்கையிலான 100 கிலோவோல்ட் ஆம்பியர் (100KVA) மின் விநியோக மாற்றிக்கான டெண்டரில் 31 நிறுவனங்கள் கலந்துகொண்டன. இதில், ஒருவர் ரூ.4,63,858க்கு டெண்டர் கோர, மற்ற 30 பேரும் ஒரே தொகையாக ரூ.4,69,935-க்கு கோரியுள்ளனர்.

இது போல பல்வேறு டெண்டரில் ஒரே தொகையை பலர் கோரியிருப்பதை அறப்போர் இயக்கத்தால் தொகுக்கப்பட்ட கீழ்காணும் ஆவணங்களில் காண முடிகிறது.

அறப்போர் இயக்கம்

பட மூலாதாரம்,ARAPPOR IYAKKAM

அறப்போர் இயக்கம்

பட மூலாதாரம்,ARAPPOR IYAKKAM

டெண்டருக்கு முன்னதாக அனைவரும் இணைந்து கூட்டுச் சதி செய்தால் மட்டுமே இது சாத்தியம் என்கிறது அறப்போர் இயக்கம்.

இது தொடர்பான அரசு தரப்பு விளக்கத்தை அறிய தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான ராஜேஷ் லகானி ஐ.ஏ.எஸ்.ஸை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசுத் தரப்பில் விரிவான விளக்கம் விரைவில் அளிக்கப்படும் என சுருக்கமாக முடித்துக் கொண்டார் ராஜேஷ் லகானி ஐ.ஏ.எஸ்.

இந்த நிலையில், 18 பக்க அரசுத் தரப்பு விளக்கம் தற்போது வெளியாகியுள்ளது.

ஒரே தொகையை பல ஒப்பந்ததாரர்கள் கோரியிருப்பது தொடர்பான குற்றச்சாட்டிற்குப் பதிலளித்துள்ள அரசு, இந்த நடைமுறை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்பட்டுவருவதாகக் கூறுகிறது.

இந்த நிறுவனங்கள் பல ஆண்டுகளாக இயங்கிவருவதால் அவர்களுக்கு மற்ற நிறுவனங்களின் விலைப்புள்ளிகள் தெரிய வாய்ப்புள்ளதாகவும் அரசு கூறுகிறது.

சந்தைவிலையைவிட அதிகம்

ஆனால், அந்தக் குற்றச்சாட்டோடு நில்லாமல் அனைத்து மின்மாற்றிகளும் சந்தை விலையைவிட கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டுகிறது.

உதாரணமாக, 800 எண்ணிக்கையிலான 500 kva மின் விநினியோக மாற்றிக்கான டெண்டர் 12,49,800 ரூபாய்க்கு இறுதி செய்யப்பட்டு 16 ஒப்பந்ததாரர்களுக்கு தலா 50 வீதம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது.

ஆனால், அதே காலகட்டத்தில் அதே தரத்தில் 500 kva மின் விநினியோக மாற்றியை ராஜஸ்தான் அரசு 7,87,311 ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் கூறுகிறது.

அதேபோல, மத்திய அரசின் ஜெம் போர்டலில் இந்த மின்மாற்றி ரூ.8,91,000-க்கே கிடைப்பதாக அறப்போர் இயக்கம் கூறுகிறது.

இவை அனைத்தையும் ஒப்பிடும் அந்த இயக்கம், 500 kva மின் விநியோக மாற்றிக்கான ஒப்பந்தத்தில் மட்டும் ரூ.34 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டுகிறது.

அந்த வகையில், 7 டெண்டர்கள் மூலம் 397 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறும் அறப்போர் இயக்கம், டெண்டர் வாரியாக அதைப் பட்டியலும் இட்டுள்ளது.

அறப்போர் இயக்கம்

பட மூலாதாரம்,ARAPPOR IYAKKAM

இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் அரசு, தமிழ்நாட்டில் காப்பர் மின்சுருள் மின்மாற்றி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் இந்தக் குற்றச்சாட்டில் விலை குறைந்த அலுமினிய மின்சுருள் மின்மாற்றியோடு அதன் விலை ஒப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள மின்மாற்றிகள் 3 ஆண்டுகள் மட்டுமே உத்திரவாதம் கொண்டவை எனவும், தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்துள்ள மின்மாற்றிகள் 5 ஆண்டுகள் உத்திரவாதம் கொண்டவை எனவும் அரசு கூறுகிறது. எனவே கொள்முதல் விலை சற்று கூடுதலாக இருக்கும் என்பது அரசின் வாதம்.

அதோடு, ஜெம் போர்டலில் ஒப்பீடு செய்யப்பட்டுள்ள விலை டெண்டர் கோரப்பட்ட காலத்தில் இருந்த விலை அல்ல என்றும் அரசு கூறுகிறது.

அரசு தரப்பு விளக்கம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம், அரசு அளித்துள்ள விளக்கம் அபத்தமாக உள்ளதாகக் கூறுகிறார்.

''63KVA மற்றும் 100KVA மின்மாற்றி தவிர அனைத்து மின்மாற்றிகளையும் காப்பர் மின்மாற்றி விலையுடன்தான் நாங்கள் ஒப்பிட்டுள்ளோம். காப்பர் மின்மாற்றி விலை அலுமினியை மின்மாற்றியைவிட 3 மடங்கு அதிகம் என்று சொல்வது மிகவும் அபத்தமானது. காப்பர் மின்சுருளின் விலை வேண்டுமானால் அலுமினிய மின்சுருளைவிட 3 மடங்கு அதிகமாக இருக்கலாம். ஒரு மின்மாற்றியில் 25 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் மின்சுருள் இருக்கும். அப்படி இருக்கும் போது மொத்த மின்மாற்றியின் விலையும் 3 மடங்கு அதிகம் என்று எப்படி சொல்ல முடியும்'' எனக் கேள்வி எழுப்புகிறார் ஜெயராம்.

அரசு தரப்பு விளக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஆதாரத்துடன் விரிவான அறிக்கை அறப்போர் இயக்க தரப்பிலிருந்து வெளியிடப்படும் என்றும் ஜெயராம் கூறுகிறார்.

காப்பர் மின்மாற்றி, அலுமினிய மின்மாற்றி என்ன வித்தியாசம்?

காப்பர் மற்றும் அலுமினிய மின்மாற்றிக்கு இடையே என்ன வித்தியாசம் என தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்க தலைவர் எஸ். காந்தியிடம் கேட்டோம்.

''மின் விநியோக மாற்றியில் (Distribution Transformers) உயர் அழுத்தம், தாழ்வு அழுத்தம் என வயர்களாலான இரண்டு சுற்றுகள் இருக்கும். காப்பர் மின்மாற்றியில் இந்த சுற்றுகள் தாமிர வயர்களால் ஆனது; அலுமினிய மின்மாற்றியில் இந்த சுற்றுகள் அலுமினிய வயர்களால் ஆனது.

காப்பர் மின்மாற்றியோடு ஒப்பிடும் போது அலுமினிய மின்மாற்றி விலை குறைவு. ஆனால், அலுமினிய மின்மாற்றி வழியாக மின்சாரம் அனுப்பப்படும் போது கூடுதல் மின்சார இழப்பு ஏற்படும்.'' என்றார் எஸ். காந்தி.

அலுமினிய மின்மாற்றி பராமரிப்பு செலவுமிக்கது என்பதால் பெரும்பாலும் காப்பர் மின்மாற்றியே இன்று அதிகம் பயன்படுத்தப்படுவதாக எஸ்.காந்தி கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/c72l3e7x520o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.