Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராமாயணம் உண்மையா?...சில குறிப்புகள்

Featured Replies

இராமாயணத்தைப் பற்றியும், மற்றும் பார்ப்பனர்களின் வேத சாஸ்திர புராணங்களைப் பற்றியும் சரித்திர ஆராய்ச்சியளார்களும், பேரறிஞர்களும் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்துக் கீழே தந்திருக்கிறோம்.

தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதவர்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் இராமாயணக் கதையில் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது

(ரொமேஷ் சந்திர தத்தர் சி.அய்.ஈ., அய்.சி. எஸ்.எழுதிய புராதன இந்தியா- 52 ஆவது பக்கம்)

திராவிடர்கள் தங்கள் மீது படையெடுதது வந்த ஆரியர்களோடு கடும் போர் புரிய வேண்டியிருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன.

(டாக்டர் ரொமேஷ் சந்திர மஜூம்தார் எம்.ஏ. வின் பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும் 22 ஆவது பக்கம்).

இராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவதாகும்.

(பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய, திராவிடரும் ஆரியரும் 24 ஆவது பக்கம்).

இராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை - ஆரியர்களல்லாதவாகளையே குறிப்பதாகும்.

(ரொமேஷ் சந்திர தத்தர் எழுதிய, பண்டைய இந்தியாவின் நாகரிகம் 139-141 ஆவது பக்கம்).

தென் இந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

(சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் - இராமாயணம் என்னும் தலைப்பில் 587-589 ஆவது பக்கம்).

ஆரியன் என்கிற பதம் இந்தியாவின் புராதனக் குடி மக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட பதம்.

தஸ்யூக்கள் என்பது இந்தியப் புராதனக் குடிமக்களுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெயராகும்.

(1922 - ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் பழைய இந்தியாவின் சரித்திரம் என்னும் புத்தகத்தில்).

ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும், தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைக்குக் காரணமாகும்.

(டாக்டர் ராதாகுமுத முக்கர்ஜி எம். ஏ., பிஎச்.டி., எழுதிய இந்து நாகரிகம் என்னும் புத்தகத்தில் 69 ஆவது பக்கம்).

இராமாயணக் கதையின் உட்பொருள் என்னவென்றால் ஆரிய நாகரிகத்திற்கும், ஆரியரல்லாத நாகரிகத்திற்கும் (அவற்றின் தலைவர்களான இராமன், இராவணன் ஆகியவர்களால் ) நடத்தப்பட்ட போராட்டமாகும்.

(டாக்டர் ராதாகுமுத முக்கர்ஜி எம். ஏ., பிஎச்.டி., எழுதிய இந்து நாகரிகம் என்னும் புத்தகத்தின் 141 ஆவது பக்கம்).

தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென்கிழக்கிலும் இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசப்படும் பாஷை

(சர் ஜேம்ஸ்மர்ரே எழுதிய இங்கிலீஷ் அகராதியின் பக்கம் 67 இல் இருக்கிறது.)

ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து, முடியாமல் போனதால், ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக் கொண்டு, அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி வந்தன.

(பண்டர்காரின் கட்டுரைகள் வால்யூம்-3, பக்கம் 10)

தமிழர்கள், ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள். ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்.

(டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார், எம்.ஏ., பிஎச்.டி., அவர்கள் எழுதிய தென்னிந்தியாவும் இந்தியக் கலையும் என்ற புத்தகத்தின் 3 ஆவது பக்கம்)

இராமாயணத்தில் தென்னிந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகம் அடைந்தவர்களாய் இருந்தார்கள்.

(பி.டி.சீனிவாசய்யங்கார் எழுதிய இந்திய சரித்திரம், முதல் பாகம் என்னும் புத்தகத்தின் 10 ஆவது பக்கம்).

திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவு படுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்..

(ஜோஷி சந்தர் டம் எழுதிய இந்தியா அன்றும் இன்றும் என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்).

அசுரர்கள் யார்

ஆரியக் கடவுளாகிய இந்திரனையும் இதரக் கடவுள்களையும் பூசித்தவர்களும் அவர்களைப் பின் பற்றியவர்களும் தேவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப் பகை இருந்து கொண்டே இருந்தது.

(ஏ.சி.தாஸ். எம்.ஏ.,பி.எல்., எழுதிய ரிக் வேத காலத்து இந்தியா என்னும் புத்தகத்தில் 151 ஆவது பக்கம்.)

ஆரியர்களால் வெல்லப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை, தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் - தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து, ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.

(சி.எஸ். சீனிவாசாச்சாரி, எம்.ஏ., எம்.எஸ்., ராமசாமி அய்யங்கர், எம்.ஏ., ஆகிய சரித்திரப் போதகர்கள் எழுதிய, இந்திய சரித்திரம் - முதல் பாகம் என்னும் புத்தகத்தில் இந்து இந்தியா என்னும் தலைப்பில் 16, 17 ஆவது பக்கங்கள்).

ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து, வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களை விட முன்னேற்றமாக திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக் கொண்டார்கள்.

(எச்.ஜி. வெல்ஸ் எழுதிய உலகத்தின் சிறு சரித்திரம் என்னும் புத்தகத்தின் 105 ஆவது பக்கம்).

ஜாதிப் பிரிவுகள் நான்கில், அதாவது பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்.

(நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா வால்யூம். 2 (1925) பக்கம் 273)

இராமாயணம், மகாபாரதம் எனும் இரண்டு இதிகாசங்களும் ஆரியர் பரவிய பருவங்களை வெகு தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

மகாபாரதம் கங்கைநதி வெளியில் ஆரியர்கள் பரவியதையும், இராமாயணம் தென்னிந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகின்றன.

(முன்பு கல்வி அமைச்சராக இருந்த கனம் சி.ஜே. வர்க்கி எம்.ஏ., எழுதிய இந்திய சரித்திரப் பாகுபாடு என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்).

சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக்கிக் கொண்டு, அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தித் தங்கள் இஷ்டம் போல், எல்லாம் தங்களுக்கு அநுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்திக் கட்டுக் கதைகளை எழுதி வைத்துக் கொண்டார்கள். இந்த கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப் பட்டவைகளாகும்.

(பிரபல சரித்திர ஆசிரியரான ஹென்றி பெரிட்ஜ் என்பவர் 1865 இல் எழுதிய விரிவான இந்திய சரித்திர முதற் பாகம் என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்.)

விஷ்ணு என்கிற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது.

(இ.பி.ஹரவெல் 1918 இல் எழுதிய இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்என்னும் புத்தகத்தின் 32 ஆவது பக்கம்.)

பாரத இராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டு மிராண்டிகளும், அசுரர்களும், ராட்சதர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிட்டிருப்பதெல்லாம் தென்னிந்தியாவை - திராவிட நாட்டைப் பற்றியே யாகும்.

(ஜி.எச். ராபின்சன், சி.அய்.ஈ. யால் எழுதப்பட்ட இந்தியா என்னும் புத்தகத்தின் 155 ஆவது பக்கம்).

வட இந்தியாவில் இருந்த திராவிடக் கலை, நாகரிகம் முதலியவை யாவும் ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால், தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்க வில்லை.

(தமிழ்ப் பேராசிரியர் கே.எம். சிவராஜ பிள்ளை, பி.ஏ., எழுதிய பண்டை தமிழர்களின் வரலாறு என்னும் புத்தகத்தின் 4 ஆம் பக்கம்.)

பாரதத்தில் இடும்பி என்று ஒரு ஆரியரல்லாத பெண் மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி, தனக்குள்ள ஜாதித் துவேஷத்தால் இராட்சசி என்று எழுதியிருக்கிறான். இராட்சதன் என்கிற பயங்கர புரளி வார்த்தை வைதீகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்.

(நாகேந்திரகோஷ், பி.ஏ.,பி.எல். எழுதிய இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும் என்ற புத்தகத்தின் 194 ஆவது பக்கம்).

இராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது.

(ஹென்றி ஸ்மித் வில்லியம், எல்.எல்.டி., எழுதிய சரித்திரக்காரர்களின் உலக சரித்திரம் வால்யூம் 2 இல், பக்கம் 521).

இந்தியாவின் தென் பாகத்திலுள்ள நாடுகளை நோக்கிப் பிராமணர்கள் வெற்றியோடு வரும்போது ஆந்திர, சேர, சோழ, பாண்டிய ஆகிய நாடுகள் மிக்க நாகரிகமான நிலையில் இருப்பதைக் கண்டார்கள்.

(வின்சென்ட் ஏ. ஸ்மித் ஆக்ஸ்ஃபோர்டு எழுதிய இந்திய சரித்திரம்

14 ஆவது பக்கம்).

இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறதென்று நிச்சயமாகச் சொல்லலாம்.

(இம்பீரியல் இந்தியன் கெஜட் 1909 ஆம் வருடத்திய பதிப்பு வால்யூம் 1 இல் 405 ஆவது பக்கம்.)

நன்றி - 'விடுதலை'

பதிஞ்சது பங்காளி... at 5:59 PM

http://pangaali.blogspot.com/2007/09/blog-post_19.html

  • தொடங்கியவர்

இராமாயணம்

நடந்த கதையா?

முன்னுரை

இராமயணததைப்பற்றியே ஆராய்ச்சி மிகச் சிக்கலானது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை காலம் முதல் இராமாயணத்தைப்பற்றியே பற்பல ஆராய்ச்சிகள் வெளிவந்துள்ளன. சில சமயங்களில் உண்மை வரலாறுகள் மறைந்துபோகின்றன@ உண்மையல்லாத வரலாறுகள் வழங்குகின்றன. சீதையின் தந்தை எனப்படுகினற் சனகன் பாரத காலத்துக்குப் பின் இருந்தவன். இராமாயண நிகழ்ச்சி பாரத நிகழ்ச்சிக்கு முன் நடந்ததெனச் சொல்லப்படுகின்றது. இக் கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதாயில்லாமையால் எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்காரவர்கள் இராமாயண நிகழ்ச்சி பாரத நிகழ்ச்சிக்குப் பிற்பட்டதெனக் கூறுவாராயினர். இராமாயணம் ஆராய்ச்சியாளருக்கே பெரிய திகைப்பை உண்டாக்ககின்றது. அதுபற்றியே இராமாயணம் நடந்த கதையா என நாம் ஆராய்ந்து முடிவுகட்ட வேண்டியிருக்கிறது.

ந.சி. கந்தையா

இராமாயணம் நடந்த கதையா?

தோற்றுவாய்

இராமாயணம் நடந்த கதையா - என்னும் கேள்வி பலருக்கு வியப்புத் தரலாம். நாம் நெடு நாட்களாக நம்பிவந்த புராணக்கதைகள் பல கற்பனைக் கதைகளே என்று அறிகின்றோம். இராமாயணம் உண்மையில் நிகழ்ந்த கதை எனப் பலர் நம்பிவருகின்றனர். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, பண்டிதர் சவரிராயபிள்ளை, ஆர்.சி. தத்தர் போன்ற ஆராய்ச்சியாளர் இவ்வரலாறு நீண்ட கற்பனைகளுள் மறைந்து கிடக்கும் ஒரு சிறு நிகழ்ச்சியொன்றோ முற்றும் கற்பனை என்றோ கருதினார்கள். ஆராய்ச்சி அறிஞர் தமது நுண்ணிய மதிகொண்டு ஆய்ந்து வெளியிடும் ஆய்வுரைகள் பெரும்பாலும் பொது மக்களுக்கும் பிறருக்கும் கிடைப்பதில்லை. ஆராய்ச்சியாளர் தக்க காரணமின்றி உண்மையைத்திரித்துக் கூறமாட்டார்கள். அவர்கள் கூறியுள்ளவைகளை எல்லாம் இச்சிறிய நூலில் திரட்டித் தருகின்றோம்.

வால்மீகி இராமாயணம்

வால்மீகர் இராமாயணத்தை வடமொழியிற் செய்தார். இன்று வடமொழியிற் காணப்படும் இராமாயணம் வால்மீகியாற் செய்யப்பட்டதன்று என்பது ஆராய்ச்சி அறிஞர் கருத்து. முன் இருந்த இராமாயணம் பல கூட்டல், கழித்தல், திருத்தல்களோடு பதிதாக அமைக்கப்பட்டிருக்கின்றதென்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.