Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

குற்றவாளிகளுக்கு மன்னிப்பா? பேராயர் மல்கம் ரஞ்சித்திற்குப் பகிரங்கக் கடிதம்

–வத்திகானில் உள்ள திருத்தந்தையின் ‘கார்தினால்’ என்ற சர்வதேச அந்தஸ்தில் (International Excellence) இருந்து கொண்டு, இலங்கைத்தீவில் உள்ள ஏனைய சமூகங்களை ஓரக் கண்ணால் பார்க்கும் சிறுமைத் தனத்தில் (Smallness)  இருந்து முதலில் தாங்கள் வெளியே வர வேண்டும்–   

அ.நிக்ஸன்

1991 ஆம் ஆண்டு யூன் மாதம் பதினேழாம் திகதி தாங்கள் கொழும்பு துணைப் பேராயராக திருநிலைப்படுத்தப்பட்டுப் பின்னர் 1995 இல் இரத்தனபுரி மறை மாவட்ட ஆயராகவும் 1995 முதல் 2001 வரை இரத்தினபுரி ஆயராகவும் பணிபுரிந்தீர்கள்.

அதன் பின்னர் 2001 ஒக்ரோபர் முதலாம் திகதி உரோமை மறைபரப்பு பேராயத்தின் துணைச் செயலராகவும் நியமனம் பெற்றிருந்தீர்கள். வத்திக்கானில் உள்ள உலகக் கத்தோலிக்கத் திருத்தந்தையின் (Pope) இந்தோனேசிய மற்றும் கிழக்குத்தீமோர் நாடுகளுக்கான தூதுவராக 2004 ஏப்ரல் முதல் 2005 டிசம்பர் வரை பணியாற்றியபோதுதான் தாங்கள் பேராயராகவும் தரமுயர்த்தப்பட்டீர்கள் என்பது உலகம் அறிந்த உண்மை.

இப் பின்புலத்திலேதான் 2009ஆம் ஆண்டு யூன் மாதம் 16ஆம் திகதி திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ற் தங்களை கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் பேராயராக நியமனம் செய்தார். அதே ஆண்டு யூன் 29ஆம் திகதி புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்றின் கரங்களினால் பேராயருக்குரிய சிறப்புச் சின்னமாகிய ‘கம்பளித் தோள்பட்டை’ ((Pallium) தங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

பின்னர் கொழும்பு உயர் மறைமாவட்டப் பொறுப்பை அதே ஆண்டு ஓகஸ்ட் ஒன்பதாம் திகதி ஏற்றீர்கள். உங்கள் சேவை மற்றும் இனமத பேதமற்ற ‘மனிதகுலம்’; என்ற பொது மனப்பாங்கு ஆகியவற்றைக் கணிப்பீடு செய்தே 2010 ஆண்டு ஏப்ரல் மாதம் தங்களுக்குக் ‘கர்தினால் என்ற சர்வதேச தரம்வாய்ந்த அந்தஸ்த்துக் கிடைத்தது. அதாவது எதிர்காலத்தில் திருத்தந்தையாகவதற்குரிய அங்கீகாரம் என்றால் அது மிகப் பொருத்தம்.

உலகக் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் திருத்தந்தை (Pope) வத்திக்கானில் இருக்கிறார். வத்திக்கான் என்பது இத்தாலி நாட்டின் ஒரு நகரமாக இருந்தாலும் வாத்திக்கான் திருத்தந்தையின் இறை அரசசாட்யின் கீழ் தனித்தே இயங்குகின்றது.

ஆகவே இனமத பேதங்களைக் கடந்து உலக மக்கள் நலனுக்காக மாத்திரம் குறிப்பாக புவிசார் அரசியல், புவிசார் பொருளாதார நிலைமைகளைக் கற்றுணர்ந்து அவதானித்து உலக வல்லரசுகளின் தவறுகளைச் சமநிலையில் சுட்டிக்காட்டிச் சீர்திருத்தக்கூடிய உயர்தரமிக்க ‘திருத்தந்தை’ (Pope) ஆவதற்குரிய அங்கிகாரத்துக்கான ‘கர்தினால் என்ற அந்தஸ்தில் தாங்கள் இருப்பது இலங்கைத்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

ஆயராக இருந்து கர்தினால் வரையும் தாங்கள் தரமுயர்ந்தமைக்கு வத்திகானில் உள்ள திருதந்தையின் அவதானிப்புத்தான் காரணம் என்பதைத் தாங்கள் அறியாதவருமல்ல. தரமுயர்வதற்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் அல்லது வேறு உயர்நிலையில் உள்ளவர்களின் செல்வாக்குகள் அவசியமற்றவை.

ஆகவே நன்னடத்தைகள் கல்வித் தகுதிகள் கணிக்கப்பட்டுத் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்தரப் பதவிகளை வைத்துக் கொண்டு திருதந்தையின் உண்மைப் பிரதிநிதியாகச் செயற்பட்டிருக்கலாமே?

தனிப்பட்ட குடும்ப அரசியல், உள்ளூர் கட்சி அரசியல் செயற்பாடுகளுக்கு இடமளியாமல், உலக மக்களின் அரசியல் பொருளாதார மற்றும் வாழ்வியல் உரிமைகளை உறுதிப்படுத்தும் பணிகளிலேயே திருத்தந்தையும் அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் கர்தினால்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

தாங்கள் ஆயராகப் பதவியேற்ற 1991 ஆம் ஆண்டுதான் ஈழப் போர் இரண்டாம் கட்ட நிலையில் உக்கிரமடைந்தது. அப்போது யாழ் ஆயராக இருந்த மறைந்த தியோகுப்பிள்ளை இலங்கைத்தீவு மக்கள் என்ற உணர்வுடனும் வடக்குக் கிழக்கு ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை, ஈழத்தமிழ் மரபு பண்பாடு என்பதிலும் உறுதியர்க இருந்தார்.

அப்போது கொழும்பு உயர்மறை மாவட்ட பேராயராக இருந்த மாக்கஸ் பெர்னாண்டோ ஈழத்தமிழர்கள் சார்ந்து எந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை. மாறாக இலங்கை ‘ஒற்றையாட்சி அரசு’ என்ற கட்டமைப்பைப் பாதுகாக்கும் பேராயராகவே அவரும் செயற்பட்டிருந்தார். இத்தனைக்கும் அவர் சிலாபத்தைச் சேர்ந்த ஒரு தூயதமிழர்.

மாக்கஸ் பெர்ணான்டோ ‘இலங்கைத்தேசியம்’ என்ற வரையறைக்குள் செயற்பட்ட காரணத்தினால் கத்தோலிக்கச் சமயப் பணிகள் பற்றிய விவகாரங்களில்கூட யாழ் ஆயர் தியோகுப்பிள்ளை கொழும்பு உயர் மறை மாவட்டத் திட்டங்களுக்கு கட்டுப்படாமல் வடக்குக் கிழக்கு ஆயர்கள் என்ற சிந்தனையை வரையறுத்துச் செயற்பட வேண்டிய சூழல் உருவாகியிருந்தது.

1992 இல் மன்னார் மறை மாவட்டத்துக்கு ஆயராகத் தெரிவு செய்யப்பட்ட இராஜப்பு ஜோசப், ஆயர் தியோகுப்பிள்ளை செய்த பணியின் தொடர்ச்சியை மேலும் தீவிரப்படுத்தியிருந்தார். ஆனால் இனவாதமற்ற மற்றும் ஒட்டுமொத்த இலங்கைத்தீவு என்ற உயர் நிலையிலும் ஈழத்தமிழர்களின் தனித்துவமான அரசியல் விடுதலையைச் சாத்தியப்படுத்தும் வியூகங்களோடும் செயற்பட்டிருந்தார் என்பது தங்களுக்குத் தெரியாததல்ல.

2009 இறுதி யுத்தத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதுடன் சுமார் ஒரு இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருப்பதாக ஆயர் இராஜப்பு ஜோசப் ஜெனிவாவில் கூறியிருந்தார்.

எண்பது வருட அரசியல் விடுதலைப் போராட்டத்தில் அரசியல் நீதி கிடைக்கவில்லை என்றும் ஆயர் விரிவாகக் கூறியிருந்தார்.

ஆனால் தாங்கள் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்தும், சிங்களத் தலைவர்கள் 2009 இற்குப் பின்னர் கடந்த பதினான்கு ஆண்டுகளாக நிரந்தர அரசியல் தீர்வை முன்வைக்கவில்லை என்பது பற்றியும் இதுவரை எதுவுமே பேசவில்லையே!

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணத்தை அடுத்து சர்வதேச விசாரணையைக் கோரியுள்ளீர்கள்.

spacer.png

ஆனால், 2009 போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆயர் இராயப்பு ஜோசப் கோரியபோது ஏன் மௌனமாக இருந்தீர்கள்?

ஜெனிவாவில் சர்வதேச விசாரணை அவசியம் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டபோதும் ஏன் வாய்திறக்கவில்லை?

வடக்கு கிழக்கில் வாழும் கத்தோலிக்கராகிய தமிழர்களின் சமயப் பணிகளில் கூட ஒழுங்கான முறையில் தாங்கள்  கவனம் செலுத்தி வருகிறீர்களா என்பது கேள்வியே.

முப்பது வருடகாலப் போரில் இலங்கை இராணுவத்தால் குறைந்தது ஒன்பது அருட் தந்தையர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் கைதாகி விசாரிக்கப்பட்டனர்.

1982ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் அருட்தந்தை .சிங்கராயர் கைது செய்யப்பட்டதில் இருந்து தமிழ் கத்தோலிக்க தேவாலயங்கள் பல அழிவுகளை எதிர்நோக்கி வருகின்றன.

இது பற்றித் தாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் ஒரு தடவையேனும் பகிரங்கமாக நீதி கேட்டதாகத் தெரியவில்லை.

இப் பின்புலத்தில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்தரதாரிகள் மனம் திருந்திக் குற்றத்தை ஏற்றுக்கொண்டால் மன்னிப்பு வழங்கப்படும் என்று எந்த அடிப்படையில் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டீர்கள்?

மனந்திரும்புதலாகிய செயலின் மூலமாக ஒருவர் பாவமன்னிப்பைப் பெற முடியும் என்று அர்த்தமல்ல.

இதனை விளக்கும் வாசகங்கள் பைபிளில் உண்டு. (கொரிந்தியர் பத்தாம் பதினொரம் அதிகாரங்கள்) இது பற்றி எந்த வாக்குவாதத்திற்கும் இடமில்லை.

ஒன்றின் காரணமாக மற்றொரு காரியம் நிகழ்வதற்கும் (Cause – மூலம்) ஒன்றில்லாமல் இன்னொன்றிருக்க முடியாது என்று சொல்லுவதற்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு.

பைபிளின் படி ஒருவன் நீதிமானாகிறபோது மாத்திரமே அவனுடைய பாவங்களுக்கு மன்னிப்பு கிடைத்து அவன் குற்றவாளி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.

அந்த நீதிமானாகுதலை ஒருவன் விசுவாசத்தின் மூலம் மட்டுமே அடைய முடியும் (Faith Alone). ஆகவே நீதிமான் என்ற தகுதியைப் பாவம் செய்தவனுக்கு வழங்குகின்ற கிருபையின் கருவியாக (Instrumental Means) இருப்பதே விசுவாசம்.

ஆகவே குற்றவாளிகளுக்கு விசுவாசம் எங்கிருந்து யாரை நோக்கி வரும்? உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குற்றம் மாத்திரமா? இல்லையே! போர்க்காலத்தில் நடந்த குற்றங்கள், ஊழல்மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகங்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு அல்லவா?

இவை பற்றியெல்லாம் சுட்டிக்காட்டிப் பேச மறுக்கும் தாங்கள் முதலில் வடக்குக் கிழக்கு உள்ளிட்ட ஒட்டுமொத்த ‘இலங்கைத்தீவு மக்கள்’ என்ற விசுவாசத்தின் மூலம் நீதிமானாக மாற்றமடைய முற்படுங்கள்.

அதன் பின்னர் மற்றைய குற்றவாளிகளுக்கு மன்னிப்புக் கொடுப்பது பற்றி யோசிக்கலாம்.

சிங்களக் கத்தோலிக்க மக்கள், பௌத்த சிங்களவர்கள் என்ற உணர்வை மாத்திரம் முன்னிலைப்படுத்தி நீதிமானாகிவிட முடியாது இதனைப் புரிய மறுக்கத் தாங்கள் சிறுபிள்ளை அல்ல.

வத்திகானில் உள்ள திருத்தந்தையின் ‘கார்தினால்’ என்ற சர்வதேச அந்தஸ்தில் (International Excellence) இருந்து கொண்டு, இலங்கைத்தீவில் உள்ள ஏனைய சமூகங்களை ஓரக் கண்ணால் பார்க்கும் சிறுமைத் தனத்தில் (Smallness)  இருந்து முதலில் தாங்கள் வெளியே வர வேண்டும்.

தங்கள் தமிழர்களுக்காகச் செய்த உதவி ஒன்றேயொன்றுதான் 1995 இல் சந்திரிகாவின் அரசாங்கம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபோது சுமார் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து வன்னி பெருநிலப்பரப்பில் உறவினர்களின் வீடுகளிலும் கொட்டகைகளிலும் வாழ்ந்தார்கள்.

அவர்களுக்கு உதவி செய்வதற்காக யாழ் மரியன்னை பேராலய பங்குத் தந்தை ஜெபநேசன் அடிகளார் கொழும்புக்கு வந்து உதவிப் பொருட்களையும் ஐந்து இலட்சம் ரூபா பணத்தையும் பெற்றுக் கொண்டு வன்னிக்குச் சென்றிந்தபோது வவுனியா சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

வத்திகானில் உள்ள திருத்தந்தையின் ‘கார்தினால்’ என்ற சர்வதேச அந்தஸ்தில் (International Excellence) இருந்து கொண்டு, இலங்கைத்தீவில் உள்ள ஏனைய சமூகங்களை ஓரக் கண்ணால் பார்க்கும் சிறுமைத் தனத்தில் (Smallness)  இருந்து முதலில் தாங்கள் வெளியே வர வேண்டும்@@

அப்போது இராணுவ உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அந்தப் பொருட்களும் பணமும் விடுதலைப் புலிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதல்ல, இடம்பெயர்ந்து வாழும் மக்களின் தேவைகளுக்காக என்று அடித்துக் கூறியிருந்தீர்கள். இதுதான் அன்று தாங்கள் நினைத்துச் செய்த ஒரு நல்ல காரியம்.

ஆனாலும் பல மாதங்கள் சிறையில் இருந்த பின்னரே அருட்தந்தை விடுதலை செய்யப்பட்டிருந்தார். சிறையில் நடத்தப்பட்ட பலமான அடி உதையினால் நோய் ஏற்பட்டே ஜெபநேசன் மரணமடைந்தாக மருத்துவர்கள் அன்று கூறியிருந்தனர் என்பதையும் ஞாபகமூட்ட விரும்புகிறோம்.

ஆயர் தியோகுப்பிள்ளை ஒய்வு பெற்றபோது வெள்ளி மற்றும் பொன் வைர விழாக்கள் ஒருமித்து 1992 டிசம்பரில் யாழ்ப்பாணத்தில் நடந்தபோதுதான், கொழும்புப் பேராயராக இருந்த மார்க்கஸ் பெர்ணான்டோ நீண்டகாலத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணத்துக்கு வந்ததுடன், முதன் முதலாக ஆயர் தியோகுப்பிள்ளையுடன் மனம் திறந்து பேசியுமிருந்தார்.

தமிழர்களுக்கு இழைக்கப்படும் அரசியல் அநீதிகள், இராணுவக் கெடுபிடிகள் பற்றியும் அதற்கு எதிராக ஆயர் தியோகுப்பிள்ளை மேற்கொண்டு வரும் சேவைகள் பற்றியும் பாராட்டியிருந்தார்.

அதேபோன்று தமிழ் ஆயர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் விசுவாசத்தை வெளிப்படுத்தித் தாங்கள் மனம் திறந்து பேச வேண்டும். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கொல்லப்பட்ட 269 பேரில் அதிகமானோர் தமிழர்கள்.

ஆகவே ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் அரசியல் அநீதிகளுக்குச் சர்வதேச நீதி அவசியம் என்ற முதன்மைக் காரணத்தைத் துணிவுடன்  தங்களால் முன்மொழிய முடியுமா?

நன்றி
 

http://www.samakalam.com/குற்றவாளிகளுக்கு-மன்னிப/

 

Edited by கிருபன்


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: VISHNU 14 DEC, 2024 | 01:20 AM   அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர்.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது , அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு , அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.  அதன் போது இடையில் குறுக்கிட்டு , கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர்.  அதேவேளை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது ,  அரச அதிகாரிகளை கேலி செய்வது போன்றும் , அவர்களின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள். இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும்.  அது மட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள்  யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் போது , அவர்களை நாங்கள் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் நடைமுறைகளை குழப்பி , அத்துமீறி நுழைய முற்பட்டால்  கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.  https://www.virakesari.lk/article/201226
    • Published By: VISHNU 13 DEC, 2024 | 09:54 PM   இலங்கை தனது சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசெம்பர் 12 ஆம் திகதி முடிவடையவிருந்த இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திர பரிவர்த்தனையின் ஆரம்ப தரவுகளின்படி, சந்தை பங்கேற்பாளர்களின் மிக அதிக பெரும்பான்மையான பங்கேற்பு இருந்தது. இது மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு என்று அவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான நடவடிக்கைகள் 16ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், அதற்கான உடன்படிக்கைகள் 20ஆம் திகதிக்குள் நிறைவடையும். https://www.virakesari.lk/article/201223
    • 14 DEC, 2024 | 09:28 AM (எம்.மனோசித்ரா) சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல மாத்திரமின்றி பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக, மின்சக்தி அமைச்சர் புண்ணியஸ்ரீ குமார ஜயக்கொடி, ஹர்ஷண சூரியப்பெரும, அனில் கயந்த, பிமல் ரத்நாயக்க மற்றும் எரங்க குணசேகர உள்ளிட்டோரது கல்வி தகைமைகள் பட்டங்கள் உண்மையானவையாய என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாம் சி தொலவத்த தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (13) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், முந்தைய பாராளுமன்றத்தில் சாதாரண தரத்தில் கூட சித்தி பெறாதவர்கள் இருந்த போதிலும், அவர்கள் அதனை மறைக்கவில்லை. தமது கல்வி தகைமைகள் தொடர்பில் மக்களிடம் பொய் கூறவில்லை. பாராளுமன்றத்தின் இறையான்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சபாநாயகர் இல்லாத கலாநிதி பட்டத்தை இருப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றியிருக்கின்றார். சபாநாயகர் மாத்திரமின்றி இவ்வாறு மக்களை மேலும் பலர் ஏமாற்றியிருக்கின்றனர். பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி தன்னை விசேட வைத்திய நிபுணர் எனக் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் அவர் சாதாரண வைத்தியரொருவர் மாத்திரமே. அதேபோன்று நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலகவுக்கும் கலாநிதி பட்டம் இல்லை எனக் கூறப்படுகிறது. மின்சக்தி அமைச்சர் புண்ணியஸ்ரீ குமார ஜயக்கொடிக்கும் உயர் கல்வி தகைமை பட்டம் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பொய் கூறிய ஒவ்வொருவரதும் பட்டங்கள் பாராளுமன்ற இணைய தளத்திலிருந்து நீக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஹர்ஷண சூரியப்பெரும, அனில் கயந்த, பிமல் ரத்நாயக்க மற்றும் எரங்க குணசேகர போன்றோரும் இந்த நிலைமையிலா இருக்கின்றனர் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. இங்குள்ளது தனிப்பட்ட நபர்கள் குறித்த பிரச்சினையல்ல. ஆனால் இவர்கள் ஏன் மக்களுக்கு பொய் கூறினார்கள். அமைச்சரவை பேச்சாளரிடம் இது தொடர்பில் கூறிய போது நாம் இதனை பெரிதாக எண்ணவில்லை என்று கூறுகின்றார். மக்கள் நேரடியாக கேள்வியெழுப்பும் இவ்வாறான விடயங்களை அரசாங்கத்தால் உதாசீனப்படுத்த முடியாது. அரசியலில் கல்வி தகைமையை ஒரு பிரச்சினையாகக் காண்பித்த தேசிய மக்கள் சக்தி இதற்கு நிச்சயம் பதிலளித்தே ஆக வேண்டும் என்றார்.  https://www.virakesari.lk/article/201179
    • 13 DEC, 2024 | 09:11 PM பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் இலங்கையில் முன்னெடுக்கும் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து அவதானம் செலுத்தியுள்ளது.  அதன்படி, போஷாக்குத் திட்டம், பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு வழங்கும் வேலைத்திட்டம், விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கால்நடை அபிவிருத்தி வேலைத்திட்டம் என்பவற்றை இலங்கைக்குள் முன்னெடுக்க நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது.  தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவின் தலைமையில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றத்தின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  புதிய அரசாங்கத்தின் முதன்மைத் தேவைகளை அறிந்துகொண்டு அதற்கு தேவையான உதவிகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெற்றுக்கொடுக்க பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் விருப்பம் தெரிவித்துள்ளது.  நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொஷான் கமகே, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றத்தின் தென்கிழக்காசிய கொள்கைகள் மற்றும் அரசாங்க உறவுகளுக்கான வலயப் பிரதிநிதி கலாநிதி ஜமால் கான், (Dr Jamal Khan), டிஜிட்டல் பொதுமக்கள் உட்கட்டமைப்பு வசதிகள் பணிப்பாளர் சஞ்சய் ஜெயின் (Sanjay Jain) உள்ளிட்டவர்கள் இதன்போது கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/201222
    • இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து புகையிரத பொது முகாமையாளர் .S. S. முதலிகே விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். குறித்த அறிக்கை பின்வருமாறு... இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து. குறித்த விடயம் தொடர்பாக. இந்திய அரசு நன்கொடையாக வழங்கிய புகையிரத இன்ஜின்கள் குறித்து பல்வேறு ஊடகங்களில் பல்வேறு தவறான கருத்துகள் வெளியாகி வருவதாகவும், இதனை சரி செய்ய போக்குவரத்து அமைச்சரின் அறிவுறுத்தலின்படி கீழ்கண்ட செய்திக்குறிப்பை வெளியிடுகிறேன்.  எனவே, இது குறித்து ஊடகங்கள் சரியான செய்தியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 1. இந்திய அரசின் நன்கொடையாக 22 புகையிரத இன்ஜின்களை இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு வழங்க இந்தியா ஒப்புக்கொண்டதையடுத்து, அறிக்கை சமர்ப்பிபதற்காக இலங்கை புகையிரத திணைக்களத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ஒன்று இந்தியா சென்று இது குறித்து ஆய்வு செய்துள்ளது, தற்போது அந்த இன்ஜின்கள் ஏற்கனவே 2012/13 இல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட M-10 வகை இன்ஜின்களை ஒத்த அல்லது அதற்கு பிந்தைய இன்ஜின்களாகும். அதிகளவான புகையிரத பெட்டிகளை கொண்டு நீண்ட தூரம் ஓட்டும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2. தற்போது, புகையிரத திணைக்களத்திடம் இதே வகையான புகையிரத என்ஜின்கள் ஒன்பது பயன்பாட்டில் உள்ளதுடன் இவற்றை இயக்க மற்றும் பராமரிக்க எமது ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். 3. அதிக பயணிகள் திறன் கொண்ட நீண்ட தூர ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களுக்கு இந்தப் புதிய புகையிரத என்ஜின்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்த நன்கொடையானது புகையிரத திணைக்களத்திற்கு பத்து கனரக மற்றும் நீண்ட தூர என்ஜின்கள் பற்றாக்குறையாக உள்ள நேரத்தில் மிகவும் பயனுள்ளதாகும், மேலும் இந்த என்ஜின்கள் கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்குத் தெரிவிக்கப்படுகிறது. 4. அதற்கிணங்க, ஊடகங்கள் இதைப் பற்றி பரவிவரும் தவறான கருத்துகளை சரி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். S. S. முதலிகே புகையிரத பொது முகாமையாளர் https://tamil.adaderana.lk/news.php?nid=197260
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.