Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சீன திட்டங்களை தமிழ்த்தேசியகட்சிகள் ஏன் எதிர்க்க வேண்டும்?

–ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை உணர்வை டில்லி புரிந்துகொள்ளாதவரை எந்த ஆலோசனையும் பயனற்றவை. சீன – இந்திய வர்த்தகம் உலகில் முன்னணியாக இருக்கும் நிலையில் இலங்கைத்தீவில் அதுவும் வடக்குக் கிழக்கில் சீனா மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களை மாத்திரம் இந்தியா விரும்பாமல் இருப்பதன் பின்னணி என்ன? எதிர்ப்பை நேரடியாக வெளிக்காட்டாமல் மறைமுகமாக அல்லது வேறு அழுத்தங்கள் மூலம் இந்தியா தனது விருப்பம் இன்மையை உணர்த்தி வருகிறது–

அ.நிக்ஸன்-

ரசிய – சீனக் கூட்டை மையப்படுத்திய பிறிக்ஸ் நாடுகளின்  மொத்த வர்த்தகத்தின் மதிப்பு ஒன்று தசம் பதினான்கு ரில்லியன் அமெரிக்க டொலர் என்று சர்வதேச நாணய நிதியத்தின் சென்ற ஓகஸ்ட் மாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளடங்கலாக பிரேசில், ரசியா, சீனா மற்றும்  தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து  நாடுகளை மையப்படுத்தியே அறிக்கை வெளியாகியுள்ளது. இந்திய வர்த்தக முறைகளும் இந்தியாவின் பங்களிப்பும் பிறிக்ஸ் கூட்டமைப்புக்குள் பிரதானமானது எனவும் சீன, இந்திய வர்த்தகச் செயற்பாடுகள் பிறிக்ஸ் கூட்டமைப்புக்குள் அதிகரித்த நிலையில் இருப்பதாகவும் புள்ளி விபரங்கள் காண்பிக்கின்றன.

இதன் காரணமாக பிறிக்ஸ் நாடுகள் உலகளவில் புறக்கணிக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளதாக சின் ஹவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வர்த்தகப் பங்களிப்பு பற்றியும் இந்தச் செய்தி நிறுவனம் விபரிக்கிறது.

ஆகவே சீன – இந்திய வர்த்தக உறவுக்குப் பிரச்சினை இல்லை என்பது தெளிவாகிறது. இந்திய அரச செய்தி நிறுவனங்களும் சீன இந்திய வர்த்தகச் செயற்பாடுகளைப் பாராட்டியிருக்கின்றன.

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவுடன் சீனாவுக்குப் போட்டியில்லை. பிராந்தியத்துக்குச் சம்பந்தப்படாத அமெரிக்கா மாத்திரமே இப்போது சீனாவின் நேரடிப் போட்டியாளர் என்று சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான குளோபல் ரைம்ஸ் (globaltimes) புவிசார் அரசியல் பொருளாதார விமர்சனங்கள் ஒவ்வொன்றிலும் கருத்துக்களை முன்வைத்து வருகிறது.

இந்தியாவுடன் சீனாவுக்கு இருப்பது எல்லைப் பிரச்சினை மாத்திரமே என்றும் குளோபல்ரைமஸ் வர்ணிக்கிறது.

அதேநேரம் இந்தியாவில் நூற்று ஐம்பது சீன நிறுவனங்கள் இயங்குகின்றன, அவை இந்தியாவில் செய்துள்ள முதலீடு மட்டும் எட்டு பில்லியன் டொலராகும். இதனால் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் இந்திய மக்களுக்குக்  கிடைத்துள்ளதாக டில்லியில் உள்ள சீனத் தூதரகம் தெரிவிக்கிறது.

சீனாவிற்கு இந்தியா செய்யும் ஏற்றுமதி கடந்த ஐந்து ஆண்டுகளில் இருபது சதவிதம் அதிகரித்துள்ளது. சீனாவில் இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் பிரகாரம் சுமார் நாற்பத்து ஐயாயிரம். அதில் இருபதாயிரம் மாணவர்கள். சீன பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா ஏழாவது இடம் வகிக்கிறது.

spacer.png

சீனாவில் இருந்து, அதிகப்படியான உரம், ரசாயனம், எதிர்ப்பு சக்தி மருந்துகளை இந்தியா இறக்குமதி செய்கிறது. அத்துடன் ஏழு இந்திய வங்கிகள் சீனாவில் கிளைகளைத் திறந்துள்ளன.

சீனாவின் கைத்தொழில் வர்த்தக அபிவிருத்தி வங்கி (Industrial and Commercial Bank of China – ICBC) வங்கி மட்டும் மும்பையில் ஒரு வங்கிக் கிளையைத் திறந்துள்ளது.

இந்திய சீன வர்த்தகத்தை மேம்படுத்த, சீனாவில் இருந்து இந்தியா செல்பவர்களுக்கு 2017இல் இருந்து இலத்திரனியல் அடையாள அட்டை (Electronic Business Cards) முறையை இந்தியா அறிமுகம் செய்துள்ளது.

இந்திய சீன வர்த்தகம் 2000 ஆம் ஆண்டில் இருந்து மூன்று பில்லியன் டொலராக அதிகரித்து 2008 இல் 52 பில்லியன் டொலர்களாகவும் 2011 இல் 73.9 பில்லியன் டொலர்களாகவும் 2018 இல் இருந்து 90 பில்லியன் டொலர்களாவும் உயர்வடைந்துள்ளது.

தற்போது இதன் எண்ணிக்கை இரண்டு மடங்குகளாக அதிகரித்துள்ளதாக டில்லியில் உள்ள சீன தூதரக இணையத்தின் வர்த்தக உறவுகள் தொடர்பான பகுதியில் விபரிக்கப்பட்டுள்ளது.

2014 இல் ஷி ஜிங்பிங் இந்தியா வந்த போது, ரயில்வே, விண்வெளி, மருந்து, தொழில்நுட்ப பூங்கா போன்றவற்றை மேம்படுத்த பதினாறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

2015 இல் நரேந்திர் மோடி சீனா சென்ற போது, இரு நாடுகளுக்கு இடையே இருபத்து நான்கு ஒப்பந்தங்களும், இரு நாட்டு நிறுவனங்களுக்கு இடையே இருபத்து ஆறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

2016-ல் அப்போதைய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி சீனா சென்ற போது உயர்கல்வி தொடர்பாக பத்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

2018 இல் சீனாவின் யூஹானில் பிரதமர் மோடி, ஷி ஜிங்பிங்கை சந்தித்தார். இதன் தொடர்ச்சியாகவே தமிழகம் மாமல்லபுரம் சந்திப்பை அவதானிக்க முடியும். இதன் தொடர்ச்சியாக 2023 இல் பிறிக்ஸ் மாநாட்டோடு வர்த்தக உறவு மேலும் விரிவடைந்துள்ளது.

ஆகவே சீனாவுடன் நல்லுறவுகளைப் பேணிக் கொண்டு இலங்கை, மியன்மார், மாலைதீவு போன்ற நாடுகளில் சீனா மேற்கொண்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா ஏன் ஓரக் கண்ணால் பார்க்கிறது என்ற கேள்வி எழாமலில்லை.

சீனா இலங்கைக்கு வழங்கும் உதிவிகளை இந்தியாவினால் தடுக்கவும் முடியவில்லை.

இலங்கையும் இந்தியாவின் அழுத்தங்களுக்கு மத்தியில் தொடர்ந்தும்  சீனாவிடம் இருந்து தேவையான உதவிகளை பெறுகிறது. இலங்கைத்தீவில் சீனாவுக்குத் தேவையான நிலங்களையும் குத்தகைக்கு வழங்கி வருகிறது.

சீன உதவிகள் என்பது இலங்கையின் உள்ளக விவகாரம் என்று இந்திய இராஜதந்திரிகள் அவ்வப்போது பட்டும் படாமலும் கூறியிமிருந்தனர். இரு நாடுகளுக்கிடையிலான உறவு என்று இப்போதும் அப்படித்தான் கூறி வருகின்றனர்.

இரண்டாயிருத்து முந்நூற்று முப்பது ஹெக்ரேயர் கடல் பரப்பை மூடி 2014 இல் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு போட் சிற்றித் திட்டம் கூட இந்தியாவின் பாதுகாப்புக்கு பிரச்சினை இல்லை என்று இந்தியா அப்போது கூறியிருந்தது.

சீனாவிடம் இருந்து நிதியுதவி பெறுவதையோ இலங்கையில் சீனா மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியோ இந்தியா கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று முன்னாள் பிரதமர் ரட்ண சிறி விக்கிரமரட்ன 2010 இல் நாடாளுமன்றத்தில் தெளிவாக எச்சரித்துமிருந்தார்.

spacer.png

இலங்கையில் சீனத் திட்டங்களுக்கு எதிர்ப்பு வெளியிடுவதைவிட  இந்தியத் திட்டங்களுக்கு மாத்திரமே சிங்கள அமைப்புகளும் பௌத்த குருமாரும் கடும் எதிர்ப்பு வெளியிடுகின்றன. சிங்கள அரசியல் தலைவர்களும் சீனாவுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

இருந்தாலும் சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரித்து வருவதையிட்டு இந்தியா சில வருடங்களாக அதுவும் கடந்த சில மாதங்களாக அதிகளவு கவலையடைந்துள்ளமை பகிரங்கமாகி வருகின்றது.

குறிப்பாக வடக்குக் கிழக்கில் சீனா மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியே இந்தியா அதிகளவு கவலை கொண்டுள்ளது போல் தெரிகிறது.

ஆனால் சீன – இந்திய வர்த்தகம் உலகில் முன்னணியாக இருக்கும் நிலையில் இலங்கைத்தீவில் அதுவும் வடக்குக் கிழக்கில் சீனா மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களை மாத்திரம் இந்தியா விரும்பாமல் இருப்பதன் பின்னணி என்ன? எதிர்ப்பை நேரடியாக வெளிக்காட்டாமல் மறைமுகமாக அல்லது வேறு அழுத்தங்கள் மூலம் இந்தியா தனது விருப்பம் இன்மையை உணர்த்தி வருகிறது.

2009 மே மாதத்திற்கும் பின்னரான சூழலில் கடந்த பதினான்கு வருடங்கள் சென்றுவிட்ட நிலையிலும்கூட ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்துக்கு நிரந்தத் தீர்வு ஏற்படாத ஒரு நிலையில், குறைந்தபட்சம் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தைக் கூட நடைமுறைப்படுத்த முடியாத ஒரு சூழலில் சீன அபிவிருத்திகளை இந்தியா விரும்ப மறுப்பதன் அடிப்படைக் காரண காரியங்கள் என்ன?

கொழும்பு போட் சிற்றி தொடர்பான பேச்சுக்கள் 2011 இல் ஆரம்பித்து 2014 இல் ஒப்பந்தம் கைச்சாத்திட்டபோதுகூட இந்தியத் தேசிய பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தல் இல்லை என்று மார்தட்டிய இந்தியா, தற்போது இந்தியத் தேசிய பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தல் என்ற தொனியில் பேச ஆரம்பித்துள்ளது.

ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்குரிய நிலையான தீர்வை ஏற்படுத்தினால் மாத்திரமே இந்தியாவுக்குப் பாதுகாப்பு என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் 2009 இற்குப் பின்னரான சூழலில் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வருகின்றன. சம்பந்தன் நாடாளுமன்ற உரையில் பகிரங்கமாக விபரித்துமிருக்கிறார்.

ஆனால் அது பற்றி இந்தியா கவனத்தில் எடுக்கவில்லை. போரில் தோல்வி கண்ட தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகளின் கருத்துக்கள் முக்கியமானதல்ல என்ற பார்வையில் செயற்பட்டு சிங்கள ஆட்சியாளர்களை மாத்திரம் நம்பிச் செயற்பட்ட இந்தியா, தற்போது வடக்குக் கிழக்கில் சீனா மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களை ஏன் பின்கதவால் எதிர்க்க வேண்டும்?

வடக்குக் கிழக்கில் தமிழர்களின் பாரம்பரியக் காணிகளை துண்டு துண்டாக்கி நிலத் தொடர்பற்ற தமிழ்சமூக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் 1949 இல் திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா திட்டத்தின் நோக்கங்கள் 2009 இற்குப் பின்னரான சூழலில் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.

வடக்குக் கிழக்கு “தமிழர் தாயகம்” என்ற கோட்பாட்டை உடைக்கவே அபிருத்தி என்ற போர்வையில் சீனாவுக்கு நிலங்கள் கையளிக்கப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் அமெரிக்க – இந்திய அரசுகளுக்கு இலங்கை  கையளித்துள்ள நிலங்கள், இயற்கைத் துறைமுகங்கள்கூட அதன் அடிப்படைதான்.

ஆகவே தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் துண்டாடப்படும் என்ற நோக்கில் சீன அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா விரும்பவில்லையா? அல்லது தமிழர் பிரதேசங்களில் இந்தியாவின் புவிசார் அரசியல் பொருளாதார நோக்கங்களுக்கு அது ஆபத்து என்ற நோக்கிலா?

2009 இற்குப் பின்னரான சூழலில் இருந்து இன்றுவரையும் தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த மயமாக்கல் திட்டங்களை இந்தியா ஏன் எதிர்க்கவில்லை? கண்டிக்கவில்லை?

ஆகவே எந்த எதிரி நாடென்றாலும் தமிழர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முன் வந்தால் நல்லது என்ற “ஒற்றைச் சிந்தனை” மாத்திரம் தற்போது தமிழ் மக்களிடம் உருவாக்கக் கூடிய பரிதாபகரமான நிலைமை உண்டு.

ஏனெனில் 2009 இல் போருக்கு ஒத்துழைத்த அமெரிக்க இந்திய அரசுகளும் சீனாவும் சிங்கள தலைவர்களுடன் மாத்திரம் பேச்சு நடத்தும் நிலையில் கொழும்பின் அனுமதி ஊடக வரும் அபிவிருத்தித் திட்டங்களை தமிழர்கள் எதிர்க்க வேண்டும் என எந்த வல்லரசு நாடுகளும் எதிர்பார்க்கவே முடியாது.

தமிழ் ஈழம் அமைந்தால் அதனை முதலில் எதிர்ப்பது சீனாதான் என்று 1979 இல் கொழும்பில் இருந்த சீனத் தூதுவர், பேராசிரியர் வில்சனிடம் அப்போது கூறியிருந்தார். இது பற்றிய காரண காரியங்களை அரசியல் – இராணுவ ஆய்வாளர் டி சிவராம் 2003 இல் வீரகேசரி ஞாயிறு வார இதழில் விபரித்திருந்தார்.

ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டத்தை இந்தியா ஆதரித்திரிக்கும். ஆனால் “ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை” என்பதை அங்கீகரிக்க முடியாதென அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1983 இல் தன்னிடம் கூறியதாக கவிஞர் புலமைப் பித்தன் 2008 இல் வழங்கிய நேர்கணால் ஒன்றில் தெளிவாக விளக்கியுள்ளார்.

ஆகவே 1979 இல் தமிழ் ஈழம் என்பதற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த சீனா 2009 இற்குப் பின்னரான சூழலில் வடக்குக் கிழக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் தனக்குரிய புவிசார் அரசியல் தேவைகளை நிறைவேற்றுகிறது என்பது பகிரங்கம்.

எனவே ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை உணர்வுகளை அமெரிக்க – இந்திய அரசுகள் புரிந்துகொள்ளும் வரை தமிழ்த் தேசியக் கட்சிகள் சீன அபிவிருத்த்தித்  திட்டங்களை எதிர்க்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் சுயமரியாதையோடு நின்று பிடிக்கக்கூடிய அரசியல் தலைமை ஒன்று உருவாக வேண்டும்.

 

http://www.samakalam.com/சீன-திட்டங்களை-தமிழ்த்த/



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு குறிவைத்து 3ஆவது டெஸ்டை எதிகொள்ளும் இந்தியா - அவுஸ்திரேலியா Published By: VISHNU 13 DEC, 2024 | 11:24 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 5 போடடிகள் கொண்ட போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரின் 3ஆவது போட்டி பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் சனிக்கிழமை (14) ஆரம்பமாகவுள்ளது. பேர்த் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா 295 ஓட்டங்களாலும் அடிலெய்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா 10 விக்கெட்களாலும் வெற்றி பெற்றதை அடுத்து தொடர் 1 - 1 என சம நிலையில் இருக்கிறது. இரண்டு அணிகளும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஒன்றையொன்று வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில், போர்டர் - காவஸ்கர் தொடருக்கும் அப்பால், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற வேண்டும் என்பதை குறிவைத்து இரண்டு அணிகளும் விளையாடும் என்பது உறுதி. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நோக்கிய பயணம் பாதிக்கும் என்பதை இரண்டு அணிகளும் நன்கு அறிந்த நிலையிலேயே இந்த டெஸ்ட் போட்டியை எதிர்கொள்கின்றன. இதன் காரணமாக இந்த டெஸ்ட் போட்டி மற்றொரு பரபரப்பான போட்டியாக அமையும் என்பது நிச்சயம். எவ்வாறாயினும் இரண்டு அணிகளிலும் ஓரிரு துடுப்பாட்ட வீரர்களே பிரகாசித்துள்ளதுடன் சிரேஷ்ட வீரர்கள் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளதைக் கடந்த போட்டிகளில் காணமுடிந்தது. அவுஸ்திரேலிய அணியில் ட்ரவிஸ் ஹெட் மாத்திரமே துடுப்பாட்டத்தில் பிரகாசித்துள்ளதுடன் இந்திய அணியில் நிட்டிஷ் குமார் ரெட்டி, யஷஸ்வி ஜய்ஸ்வால் ஆகிய இருவரும் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். விராத் கோஹ்லி, கே. எல். ராகுல் ஆகியோரும் தொடர்ச்சியாக திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். ரோஹித் ஷார்மா 2ஆவது போட்டியின் மூலம் தொடரில் இணைந்துகொண்ட போதிலும் மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடிய அவரால் கணிசமான ஓட்டங்களைப் பெற முடியாமல் போனது. அவர் மீண்டும் ஆரம்ப வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சைப் பொறுத்த மட்டில் இரண்டு அணிகளிலும் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டுள்ளதை அவர்களது பந்துவீச்சுப் பெறுதிகள் எடுத்துக்காட்டுகின்றன. மிச்செல் ஸ்டார்க் 11 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 10 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர். இந்திய பந்துவீச்சிலும் வேகப்பந்துவீச்சாளர்களான ஜஸ்ப்ரிட் பும்ரா (12), மொஹமத் சிராஜ் (9) ஆகிய இருவரே முன்னிலையில் இருக்கின்றனர். அவுஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், மானுஸ் லபுஷேன் ஆகியோரும் இந்திய அணியில் விராத் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில் ஆகியோரும் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். பிறிஸ்பேன் கபா விளையாடரங்கில் அவுஸ்திரேலியா விளையாடியுள்ள 66 டெஸ்ட் போட்டிகளில் 42இல் வெற்றிபெற்றுள்ளதுடன் 10இல் மாத்திரமே தோல்வி அடைந்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த மைதானத்தில் இந்தியா விளையாடிய 7 போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. எவ்வாறாயினும் இரண்டு அணிகளுக்கும் இடையில் இந்த மைதானத்தில் கடைசியாக 2021இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா 3 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது. அணிகள் இந்தியா: யஷஸ்வி ஜய்ஸ்வால், ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட், கே.எல். ராகுல், நிட்டிஷ் குமார் ரெட்டி, வொஷிங்டன் சுந்தர் அல்லது ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப், மொஹமத் சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ரா. அவுஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, நேதன் மெக்ஸ்வீனி, மானுஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், ட்ரவிஸ் ஹெட், மிச்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பெட் கமின்ஸ் (தலைவர்), மிச்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஜொஷ் ஹேஸ்ல்வூட். https://www.virakesari.lk/article/201224
    • படைய மருத்துவமனை ஒன்றினுள் படைய மருத்துவர்கள்     
    • நாங்கள் டீல் பேசுவதற்கு வரவில்லை; அபிவிருத்தி செய்வதற்கே வந்தோம்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் 14 DEC, 2024 | 09:42 AM (எம்.நியூட்டன்) நாங்கள் டீல் பேசுவதற்கு வரவில்லை ஊழலற்ற ஆட்சி  நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே ஆட்சிக்கு வந்தோம் என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.   யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தலைமை உரை ஆற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.  அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,  “நாங்கள் டீல் பேசுவதற்கு வரவில்லை. ஊழல் அற்ற ஆட்சியில்  நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே ஆட்சிக்கு வந்தோம். இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் என்பது அதிகாரிகளை அச்சுறுத்துவதல்ல. மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதாகும். இதற்கு அனைவரது ஒத்துளைப்புகளும் தேவை.  அரசியல்வாதிகளால் மட்டும் இதனை செய்ய முடியாது. அரச அதிகாரிகளது ஒத்துழைப்பு பங்களிப்பு அவசியம். கடந்த காலங்களில் அரசியல் தலையிடு இருந்தமையால் வினைத்திறனாக செயற்படாதிருந்தமை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இனி அவ்வாறு தலையீடுகள் கிடையாது. சுதந்திரமாக செயல்பட்டு மாவட்டத்தை. நாட்டை முன்னேற்ற வேண்டும்.  தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். இந்த ஆணை என்பது இதுவரை காலமும் இடம்பெற்ற ஊழல் ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றுக்கு எதிராகவே இந்த மாற்றம் ஏற்பட்டது. மேலும் இந்த அரசாங்கம் கிராமங்களை நோக்கியே வேலைத் திட்டங்களை செயல்படவுள்ளது. எனவே கடந்த காலங்களை போல் அல்லாமல்  மக்களுக்கு உண்மையுடனும் விசுவாசத்துடனும்  சேவையாற்ற வேண்டும்“ என்றார். https://www.virakesari.lk/article/201231
    • ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு உடல்நலனை பேண உதவுகிறதா? மருத்துவர்கள் சொல்வது என்ன? பட மூலாதாரம்,OURA படக்குறிப்பு, ஸ்மார்ட் மோதிரங்களில் சென்சார்கள் உள்ளன, அவை அணிபவரின் இதயத் துடிப்பு மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளைக் கண்காணிக்கும் கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ கிளெய்ன்மன் பதவி, தொழில்நுட்ப ஆசிரியர் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் மோதிரம் போன்ற அணியக்கூடிய மின்னணு கருவிகளின் (Wearables) தொழில்நுட்பத்தில் தற்போது ஸ்மார்ட் வாட்ச்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. பல பில்லியன் டாலர்கள் புழங்கக்கூடிய இந்த தொழில்நுட்பத்துறை, மருத்துவ கண்காணிப்பு குறித்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. பல பிரீமியம் தயாரிப்புகள், உடற்பயிற்சி நடைமுறைகள், உடலின் வெப்பநிலை, இதயத் துடிப்பு, மாதவிடாய் சுழற்சி, தூக்கம் போன்றவற்றை அவை துல்லியமாகக் கண்காணிப்பதாகக் கூறுகின்றன. பிரிட்டனில் உள்ள தேசிய சுகாதார சேவை (NHS) எனப்படும் பொது சுகாதார அமைப்பின் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு அணியக்கூடிய மின்னணு கருவிகளை வழங்குவதற்கான ஒரு திட்டத்தைப் பற்றி சுகாதாரத்துறை செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங் பேசியுள்ளார். புற்றுநோய் சிகிச்சைக்கான எதிர்வினைகள் போன்ற அறிகுறிகளை வீட்டில் இருந்தவாறே கண்காணிக்க இவை உதவும். ஆனால் பல மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், அணியக்கூடிய மின்னணு கருவிகளால் சேகரிக்கப்படும் மருத்துவத் தரவுகளை எச்சரிக்கையுடனே அணுகுகிறார்கள். அணியக்கூடிய மின்னணு கருவிகளின் எச்சரிக்கைகள் நான் தற்போது அல்ட்ராஹியூமன் (Ultrahuman) எனும் நிறுவனத்தின் ஒரு ஸ்மார்ட் மோதிரத்தை அணிந்து வருகிறேன். எனது உடல்நிலை சரியில்லை என்பதை நான் கண்டறிவதற்கு முன்பே அந்த ஸ்மார்ட் மோதிரம் கண்டுபிடித்து விடுதாக நினைக்கிறேன். ஒரு வார இறுதியின்போது, என் உடலின் வெப்பநிலை சற்று அதிகரித்து இருப்பதாகவும், நான் சரியாகத் தூங்குவதில்லை என்றும் அது என்னை எச்சரித்தது. இது என் உடலில் ஏதாவது பிரச்னை ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்றும் அந்த ஸ்மார்ட் மோதிரம் என்னை எச்சரித்தது. பெரிமெனோபாஸ் (Perimenopause) அறிகுறிகளைப் பற்றி படித்த பிறகும் நான் அதைப் புறக்கணித்தேன். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, வயிற்று வலியால் ஓய்வெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். எனக்கு மருத்துவ உதவி தேவைப்படவில்லை, ஆனால் ஒருவேளை தேவைப்பட்டிருந்தால், நான் அணிந்திருந்த ஸ்மார்ட் மோதிரத்தின் தரவுகள், சிகிச்சைக்காக மருத்துவ நிபுணர்களுக்கு உதவியிருக்குமா? இதுபோன்ற பல 'அணியக்கூடிய மின்னணு கருவி' பிராண்டுகள் மருத்துவர்கள் அந்தத் தரவுகளைப் பயன்படுத்துவதைத் தீவிரமாக ஊக்குவிக்கின்றன. உதாரணத்திற்கு, ஓரா ஸ்மார்ட் மோதிரம், நோயாளிகள் தங்கள் உடல்நிலை குறித்த தரவுகளை மருத்துவருடன் பகிர்ந்துகொள்ள உதவும் வகையில், அவற்றை ஓர் அறிக்கை வடிவில் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது. புவிவெப்ப ஆற்றல்: பூமியை ஆழமாக தோண்டி எடுக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் சிறப்பு என்ன?11 டிசம்பர் 2024 நீலகிரியில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி - 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!12 டிசம்பர் 2024 ஆரோக்கியத்தை துல்லியமாக மதிப்பிட உதவுகிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அணியக்கூடிய மின்னணு கருவிகளின் தொழில்நுட்பத் துறையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் ஆதிக்கம் செலுத்துகிறது ஓரா நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கும் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் ஜேக் டாய்ச், அணியக்கூடிய மின்னணு கருவிகளின் தரவுகள் 'ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மிகவும் துல்லியமாக மதிப்பிடுவதற்கு உதவுவதாக' கூறுகிறார். ஆனால் இது எல்லா நேரத்திலும் உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும் என்பதை மருத்துவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வதில்லை. மருத்துவர் ஹெலன் சாலிஸ்பரி ஆக்ஸ்போர்டில் பணிபுரிகிறார். நோயாளிகள் இடையே 'அணியக்கூடிய மின்னணு கருவிகளின்' பயன்பாடு அதிகரித்திருப்பதை அவர் கவனித்துள்ளார். அது குறித்த கவலையையும் அவர் வெளிப்படுத்துகிறார். "இத்தகைய கருவிகள் அனைத்து முக்கியமான நேரங்களிலும் கை கொடுப்பதில்லை. உடல்நலன் குறித்து எப்போதும் கவலைப்படும், உடல்நிலையை அதிகமாகக் கண்காணிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குகிறோம் என்று நான் வருத்தப்படுகிறேன்," என்று அவர் கூறுகிறார். இதயத் துடிப்பு அதிகரிப்பது போன்ற அசாதாரண தரவுகள் கிடைப்பதற்குப் பின்னால், ஒரு தற்காலிக உடல்நிலை மாற்றமோ அல்லது அந்தக் கருவியில் ஏற்பட்ட பிழை என ஏராளமான காரணங்கள் இருக்கலாம் என்று மருத்துவர் சாலிஸ்பரி கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES "எப்போதுமே தங்கள் உடல்நிலையைக் கண்காணித்துக்கொண்டே இருக்கும் நிலைக்கு நாம் மக்களைத் தள்ளிவிடுவோமோ என்று நான் கவலைப்படுகிறேன். பிறகு தங்களின் உள்ளுணர்வைவிட மின்னணுக் கருவிகளையே சார்ந்திருக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு முறையும் அந்தக் கருவி அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் காட்டும்போது, அவர்கள் மருத்துவர்களைத் தேடி ஓட வேண்டியிருக்கும்" என்கிறார் சாலிஸ்பரி. எதிர்பாராத மருத்துவ நோயறிதலுக்கு எதிரான ஒரு வகை அரணாக, உளவியல் ரீதியில் இந்த மருத்துவத் தரவுகள் பயன்படுவதை அவர் விளக்குகிறார். உதாரணமாக, ஒரு ஸ்மார்ட் வாட்ச் அல்லது செயலி, ஒரு பயங்கரமான, வீரியம் மிக்க புற்றுநோய்க் கட்டியின் வளர்ச்சியை நிச்சயம் கண்டறியும் என உறுதியாகச் சொல்ல முடியாது என்கிறார் அவர். "நல்ல பழக்கங்களை ஊக்குவிப்பது, இத்தகைய அணியக்கூடிய மின்னணுக் கருவிகள் செய்யும் ஒரு நல்ல விஷயம். ஆனால் அவற்றிடம் இருந்து நாம் பெறக்கூடிய சிறந்த ஆலோசனைகள், ஏற்கெனவே பல ஆண்டுகளாக மருத்துவர்கள் வழங்கி வரும் அதே அறிவுரைகள்தான்" என்று கூறுகிறார் சாலிஸ்பரி. மேலும், "அதிகமாக நடப்பது, அதிகளவில் மது அருந்தாமல் இருப்பது, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க முயல்வது போன்றவைதான் நீங்கள் உண்மையில் செய்ய வேண்டியவை. இவையெல்லாம் ஒருபோதும் மாறாது," என்றும் அவர் தெரிவித்தார். தியாகராய நகர்: நூற்றாண்டை கொண்டாடும் சென்னை அங்காடித் தெருவின் கதை9 டிசம்பர் 2024 வரலாற்றாசிரியர்களின் பார்வையில் திப்பு சுல்தான் ஒரு ஹீரோவா அல்லது வில்லனா? - ஓர் ஆய்வு10 டிசம்பர் 2024 இதய கண்காணிப்பு செயல்பாடு பட மூலாதாரம்,HELEN SALISBURY படக்குறிப்பு, இந்தக் கருவிகள் வழங்கும் ஆலோசனைகள், பல ஆண்டுகளாக மருத்துவர்கள் வழங்கி வரும் அதே அறிவுரைகள்தான் என்கிறார் சாலிஸ்பரி. 'ஆப்பிள் வாட்ச்' தான் உலகின் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட் வாட்ச் என்று கூறப்படுகிறது, இருப்பினும் சமீபத்தில் அதன் விற்பனை குறைந்துள்ளது. ஆப்பிள் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் தங்களது ஸ்மார்ட் வாட்சில் உள்ள 'இதய கண்காணிப்பு செயல்பாடு' காரணமாக உயிர் பிழைத்த நபர்களின் அனுபவங்களை விளம்பரத்திற்காகப் பயன்படுத்துகிறது. அவற்றில் ஏராளமானவற்றை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். இருப்பினும், அவற்றில் எத்தனை தருணங்களில் பிழையான தரவுகள், பிழையான எச்சரிக்கைகள் காட்டப்பட்டன என்பது குறித்து நான் கேள்விப்படவில்லை. பல சந்தர்ப்பங்களில், நோயாளிகள் தாங்கள் 'அணியக்கூடிய மின்னணு கருவியின்' மூலம் கிடைத்த தரவை மருத்துவர்களுக்கு வழங்கும்போது, தங்கள் சொந்த உபகரணங்களைப் பயன்படுத்தி அதை மீண்டும் சோதித்துப் பார்க்கவே மருத்துவர்கள் விரும்புகிறார்கள். "இதற்குப் பல காரணங்கள் உள்ளன, அவை நடைமுறைக்கு ஏற்றவையும்கூட" என்று நாட்டிங்ஹாம் ட்ரெண்ட் பல்கலைக்கழகத்தின் 'அணியக்கூடிய மின்னணுக் கருவிகள்' தொழில்நுட்பங்களின் இணை பேராசிரியர் டாக்டர் யாங் வெய் கூறுகிறார். "நீங்கள் மருத்துவமனைக்குச் செல்லும்போது, உங்கள் ஈ.சி.ஜி (எலக்ட்ரோ கார்டியோகிராம், உங்கள் இதயத்தின் செயல்பாட்டைச் சரிபார்க்கும் ஒரு சோதனை) அளவிடும்போது, அந்த இயந்திரம் சுவரில் மாட்டப்பட்டு இருப்பதால் அதன் மின் நுகர்வு பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லை," என்று அவர் கூறுகிறார். "ஆனால் உங்கள் ஸ்மார்ட் வாட்ச்சை பொறுத்தவரை, அது தொடர்ந்து இயங்க சார்ஜ் தேவைப்படுகிறது. சார்ஜ் குறையும் என்பதால் நீங்கள் தொடர்ந்து உங்கள் ஈ.சி.ஜியை அளவிடப் போவதில்லை" என்கிறார். மலையாக குவிந்த காட்டெருமை மண்டை ஓடுகள்: பூர்வகுடிகளுக்கு எதிரான இருண்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படம்12 டிசம்பர் 2024 'சிறுபூச்சிகளை உண்டன, சொந்த பற்களை கூட விழுங்கின' - டைனோசர்கள் பற்றிய புதிரை அவிழ்க்கும் ஆய்வு முடிவுகள்5 டிசம்பர் 2024 தரவுகளின் துல்லியம் குறைவதற்கான வாய்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஸ்மார்ட் வாட்ச் போன்ற ஒரு கருவி எவ்வளவு சீராக அணியப்படுகிறதோ, அவ்வளவு துல்லியமாக அதன் தரவு இருக்கும் மருத்துவர் வெய் என் விரலில் இருக்கும் மோதிரத்தைச் சுட்டிக் காட்டினார். "இதயத் துடிப்பைப் பொறுத்தவரை, மணிக்கட்டில் இருந்து அல்லது இதயத்தில் இருந்து நேரடியாக அளவிடுவதுதான் சிறந்தது. இதுபோல விரலில் அளந்தால், அந்தத் தரவுகளின் துல்லியம் குறைய வாய்ப்புள்ளது" என்று அவர் கூறுகிறார். இதுபோன்ற தரவு இடைவெளிகளை நிரப்புவது மென்பொருளின் பங்கு. ஆனால் அணியக்கூடிய மின்னணு கருவிகளை இயக்கும் சென்சார்கள், மென்பொருள் அல்லது அதன் தரவு மற்றும் அது எந்த வடிவத்தில் சேகரிக்கப்படுகிறது என்பவை உள்பட, அந்தக் கருவிகளுக்கான சர்வதேச தரநிலை என எதுவும் இல்லை. ஒரு கருவி எவ்வளவு சீராக அணியப்படுகிறதோ, அவ்வளவு துல்லியமாக அதன் தரவு இருக்கும். ஆனால் இதில் எச்சரிக்கையாக அணுக வேண்டிய ஒரு விஷயமும் உள்ளது. பென் வுட் அன்றைய தினம் வெளியே சென்றிருந்தபோது, அவரது மனைவிக்கு, பென்னின் ஆப்பிள் வாட்சிலிருந்து தொடர்ச்சியான எச்சரிக்கை அறிவிப்புகள் வந்தன. பென் வுட், ஒரு கார் விபத்தில் சிக்கியதாக அந்த அறிவிப்புகள் தெரிவித்தன. அவசர சேவைகளுக்கு அழைப்பதற்கு கைப்பேசியைப் பயன்படுத்த வேண்டிய தேவையிருக்கும் என்பதால், நேரடியாக அழைப்பதைவிட கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்புமாறு அந்த அறிவிப்புகள் அறிவுறுத்தின. அந்த எச்சரிக்கை அறிவிப்புகள் உண்மையானவையாக இருந்தன. மேலும் பென் வுட்டின் கைப்பேசியில் அவசரக்கால தொடர்பு எண்ணாக அவரது மனைவியின் எண் இருந்ததால், அவை அனுப்பப்பட்டன. ஆனால் இந்த விஷயத்தில் தேவையற்றதாகவும் அவை இருந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES காரணம் அப்போது பென் ஒரு கார் பந்தய டிராக்கில் சில பந்தய கார்களை வேகமாக ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அத்தகைய கார்களை ஓட்டுவதில் தனக்கு அதிக திறமை இல்லையென்றாலும்கூட, எல்லா நேரங்களிலும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக பென் வுட் கூறுகிறார். "உண்மையில் ஒரு விபத்து நடப்பதற்கும், அதுகுறித்து முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் இடையிலான எல்லைகள் கவனமாக நிர்வகிக்கப்பட வேண்டும். மின்னணு கருவிகளின் உற்பத்தியாளர்கள், அவசர சேவை முகமைகள், அதற்கு முதலில் பதில் அளிப்பவர்கள் மற்றும் தனிநபர்கள் எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பத்தை எவ்வாறு அணுகுவார்கள் என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன்" என்று பென் வுட் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார். 'கிங்ஸ் ஃபண்ட்' அமைப்பின் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பிரிதேஷ் மிஸ்திரி, நோயாளிகள் குறித்த தரவுகளை மருத்துவ அமைப்புகளில் உள்ளிடுவதில் குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளன என்பதை ஒப்புக்கொள்கிறார். எந்தவொரு தெளிவான தீர்மானமும் இல்லாமல் பிரிட்டனில் பல ஆண்டுகளாக இதுகுறித்த விவாதம் நடந்து வருவதாக அவர் கூறுகிறார். மருத்துவமனைகளில் இருந்து சமூக அமைப்புகளை நோக்கி மருத்துவ கவனிப்புகளை நகர்த்துவதற்கான பிரிட்டன் அரசின் முயற்சியில், அணியக்கூடிய மின்னணு கருவிகள் முக்கிய பங்காற்றி இருக்கக்கூடும் என்று மிஸ்திரி நம்புகிறார். "எவ்வாறாயினும், தொழில்நுட்பத்தை ஆதரிக்கக்கூடிய மற்றும் பணியாளர்களுக்குத் தேவையான திறன்கள், அறிவு, ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கையைக் கொண்டிருக்க உதவும் வகையிலான உள்கட்டமைப்பு இல்லாமல் அது கடினமாகவே இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று மிஸ்திரி கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/c0mv940vpzro
    • மரு.பாஸ்கரன்(வலது), மரு.சுஜந்தன் மற்றும் மறைந்த மரு.கெங்காதரன்(இடது) .
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.